Yarl Forum
ஷங்கரின் புதுபடம் - அந்நியன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஷங்கரின் புதுபடம் - அந்நியன் (/showthread.php?tid=7378)



ஷங்கரின் புதுபடம் - அந - Mathan - 03-04-2004

<img src='http://www.tamilcinema.com/cinenews/images/vikram12.jpg' border='0' alt='user posted image'>

ஷங்கரின் புதுபடம் - அந்நியன் பட பூஜை

பாய்ஸ் படத்தின் தோல்வியினால் திக்குமுக்காடி போயிருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஷங்கர். இனிமேல் அவரை நம்பி யார் படம் தருவா? என்றெல்லாம் நாக்கு மேல் பல்லை போட்டு நாக்கு கூசாமல் பேசியது, ஷங்கரை வானாளாவ புகழ்ந்த அதே பொதுஜனம்! வாய் வலிக்க பேசி வம்பளப்பவர்கள் வளர்க்கட்டும். என் கடன் படம் செய்து கிடப்பதே என்று முடிவெடுத்த ஷங்கர் வெயிட்டான தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கதை சொல்லி, விக்ரம் நடிக்க அந்நியன் என்ற படத்திற்கு பூஜை போட்டுவிட்டார். இதுவரைக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் எடுத்த எந்த படத்திற்கும் பிரமாண்டமாக பூஜை போட்டதில்லை. ஆபிஸ் பூஜை என்று சொல்லி, நாலு பேரை நிற்க வைத்து ஸ்டில் எடுத்து அந்த ஸ்டில்லை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முறை நடந்த கதையே வேறு. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமாக பூஜை போட்டார்கள். ஏ.வி.எம் வாயிலில் இருந்தே விக்ரமின் விதவிதமான ஸ்டில்கள், கொடிகள், தோரணங்கள் என்று ஒரே ரகளையாக இருந்தது.

விழா நடந்த ஏ.சி ஹாலில் அறிஞர்கள், தத்துவ மேதைகள், கவிஞர்களின் பொன் மொழிகளை சுவற்றில் எழுதியிருந்தார்கள். வெறுங்கை என்பது மூடத்தனம்: விரல்கள் பத்தும் மூலதனம் -கவிஞர் காசி.ஆனந்தன் என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நம்மை ஈர்த்தது. (உண்மையில் அந்த கவிதையை எழுதியது தாராபாரதி என்ற கவிஞராயிற்றே..)

இதுவரை ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம், வர்ணஜாலம் படங்களை அடுத்து சதாதான் இந்த படத்தின் ஹீரோயின் என்று சொல்கிறார்கள். அநேகமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்படலாம். அந்நியனில் விக்ரமுக்கு மூன்று வேடங்களாம். ஒரு விக்ரமுக்கே ஓ போடும் ரசிகர்கள் பொங்க பொங்க சந்தோஷப்படுங்களேன்...

நன்றி - தமிழ் சினிமா


- Mathan - 03-04-2004

<b>தொடங்கியது அந்நியன் சூட்டிங்</b>

<img src='http://www.thatstamil.com/images20/cinema/vikram-325.jpg' border='0' alt='user posted image'>

ஷங்கர்விக்ரம் கூட்டணியில் உருவாகும் அந்நியன் படத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

பாய்ஸ் படம் வெற்றி பெற்றிருந்தால் பாரதிராஜாவை மிஞ்சிய இயக்குநராக தமிழ் சினிமாவில் சாதனை படைத்திருப்பார் ஷங்கர்.

பாரதிராஜாவும், ஷங்கரும் தொடர்ச்சியாக 5 வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள். பாரதிராஜாவை விட ஒரு படி முன்னேறும் வாய்ப்பு ஷங்கருக்கு இருந்தபோதும், தான் தேர்ந்தெடுத்த கதையில் ஆபாசத்தைப் புகுத்தவே படம் படுதோல்வியடைந்தது.

ஷங்கரையும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும், இலக்கியப் பத்திரிக்கைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே எழுத்தாளரான சுஜாதாவையும் (வசனம் இவரே) பத்திரிக்கைகள் அனைத்தும் விமர்சனங்களால் தாளித்து எடுத்துவிட்டன.

அதையெல்லாம் துடைக்கும் விதமாக அடுத்து ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டிய கட்டாயத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

கமலுக்காக ஷங்கர்சுஜாதா உருவாக்கி வைத்திருந்த விஞ்ஞானக் கதையில் இப்போது நடிப்பவர் விக்ரம்.

'சீயான்' ஆகி சாதித்த பின்னர் விக்ரமே தேடிப் போய் வாய்ப்பு கேட்ட இயக்குநர் ஷங்கர்தான்.

கமல் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர் என்பதால், ஷங்கரும் விக்ரமுக்கு ஓகே சொல்லிவிட்டார். விக்ரமுக்கு ஜோடியாக முதலில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. இப்போது சதா அந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார்.

படத்தில் பிரகாஷ்ராஜ், நெடுமுடி வேணு, கலாபாவன் மணி, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக அவரது சீடர் ஹாரிஸ் ஜெயரஜை புக் செய்துள்ளார்.

ஹாலிவுட் பக்கம் பிஸியாகிவிட்டதால், தன்னை இப்படத்தில் விடுவிக்கும்படி ரஹ்மானே ஷங்கரிடம் பர்ஸனலாகக் கேட்டுக் கொண்டாராம்.

படத் தொடக்கவிழா ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. படத்தை கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கப் போவது தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

படத் துவக்க விழா அழைப்பிதழையே மிக அட்டகாசமாக தயாரித்திருக்கிறார்கள். முன்பக்கத்தில் பழங்கால கல்வெட்டுக்கள் போன்று தமிழ் எழுத்துகள்.

முதல் பக்கத்தில் காளை மாட்டின் ரப்பர் பொம்மை ஒட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் பக்கத்தில் மக்கள் கூட்டத்தில் ஆஜானுபாகு தோற்றத்தில் விக்ரம். மறுபக்கத்தில் வித்தியாசமான கோணங்களில் விக்ரமின் பாக்கெட் டைரி சைஸ் போட்டோக்களும் இடம் பெற்றுள்ளன.

படத் துவக்க விழாவில் ஏவி.எம் சரவணன், இப்ராஹிம் ராவுத்தர், பிரமிட் நடராஜன், பாரதிராஜா, செல்வமணி, எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், தரணி, சேரன், விக்ரம், வைரமுத்து, சுஜாதா, பூஜா, தியா, சுவாதி,சொர்ணமால்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்குப் பின் பாடல் பதிவு தொடங்கியது.

வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தின் தெலுங்குப் பெயர் 'அபாரிசித்துடு'.

விக்ரம், ஷங்கர், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஹாரிஸ் ஜெயராஜ், வைரமுத்து, வி.டி.விஜயன், சுஜாதா, சாபுசிரில், ராஜூ சுந்தரம், பீட்டர் ஹெய்ன் என அந்தந்த துறையின் முன்னணி ஆட்கள் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

நன்றி - தட்ஸ் தமிழ்


ரஹ்மான் வைரமுத்துவை ம - kuruvikal - 03-04-2004

தகவலுக்கு நன்றி...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: ரஹ்மான் வைரமுத்துவை - kuruvikal - 03-04-2004

ஒரே பதிவு இரு தடவை பதியப்பட்டுவிட்டது...!


தவறுக்கு வருந்துகிறோம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-04-2004

மேலும் சில படங்கள்

<img src='http://www.thatstamil.com/images20/cinema/vikram-325a.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images20/cinema/vikram-325c.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 03-04-2004

<img src='http://www.dinakaran.com/daily/2004/Mar/05/cinema/C12_vik.jpg' border='0' alt='user posted image'>

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அந்நியன் படத்தின் தொடக்க விழா நேற்று ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. பட அதிபர் ஸ்ரீதர் கலந்துகொண்டு ஷங்கரிடம் ஸ்கிரிப்ட் பேடை எடுத்துக்கொடுத்து வாழ்த்தினார். அருகில் கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ;, எழுத்தாளர் சுஜாத்தா ஆகியோர் உள்ளனர்.

நன்றி - தினகரன்