| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 185 online users. » 0 Member(s) | 183 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,287
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| புஷ்ஷை எதிர்த்து ஜோன் கெர்ரீ |
|
Posted by: Mathan - 03-04-2004, 02:00 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>ஜனநாயக கட்சி தேர்தல் வேட்பாளர் எட்வர்ட்
பிரசார நடவடிக்கைகளிலிருந்து விலகல்</b>
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தெரிவு போட்டி சூடுபிடித்துள்ள தருணத்தில் ஜோன் எட்வேர்ட் பிரசார போட்டி நடவடிக்கையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி புஷ்ஷை எதிர்த்து போட்டியிடக்கூடிய ஜனநாயக் கட்சி வேட்பாளர் தெரிவு செய்யும் தேர்தல் போட்டியே தற்போது அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் நடைபெற்ற மாநில ரீதியிலான போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணியில் இருக்கும் வேட்பாளராக ஜோன் கெர்ரீயே உள்ளார். இதனிடையே அவரை எதிர்த்து தேர்தல் பிரசார விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான ஜோன் எட்வர்ட்,கெர்ரீக்கு வாழ்த்துக் கூறி, கைகுலுக்கிவிட்டு பிரசார நடவடிக்கையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
இறுதியாக எட்வர்ட் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் ""எதிர்வரும் நவம்பரில் புஷ் இருக்கமாட்டார். புஷ்ஷை வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற்றுவதே எமது முடிவு. எனவே எனது நண்பர் கொரீயிடம் அந்தப் பணியை ஒப்படைக்கிறேன்'' என்று கூறி கெர்ரீயுடன் விடை பெற்றுச் சென்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான புஷ்ஷை எதிர்த்து போட்டியிடும் தகுதியை ஜோன் கெர்ரீ பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி - வீரகேசரி
|
|
|
| டிஜிட்டல் காமெரா புரட்சி |
|
Posted by: Mathan - 03-04-2004, 01:15 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (24)
|
 |
டிஜிட்டல் காமெரா புரட்சி
நான் பல நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கருவி சந்தைக்கு வரவிருக்கிறது. ·போவியன் என்ற துவக்கநிலை நிறுவனத்தின் கண்டுபிடிப்பான புதிய படச்சில்லு டிஜிட்டல் படத் தொழில்நுட்பத்தைப் புதிய நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
வழமையான படலங்கள் வேதிமாற்றத்தின் மூலம் புகைப்படங்கள் பதிவு செய்யப்படும். இந்தப் படலங்களில் மூன்றுவித வெவ்வேறு வேதிக்கலவைகள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்காகப் பூசப்பட்டிருக்கும். இந்தப் பூச்சுகள் முறையே சிவப்பு, பச்சை, ஊதா இவற்றில் ஒன்றின் ஒளியளவுக்குத் தக்கபடி வேதிமாற்றத்திற்கு உள்ளாக ஒட்டுமொத்தமாக பலவண்ணத்தில் படம் சேமிக்கப்படும்.
·பிலிம்களை விட்டுவிட்டு டிஜிட்டலுக்கு படக்கலை மாறத்தொடங்கியதில் இதுவரை இருந்துவந்த முக்கிய குறைபாடு இதுதான். பதிவு செய்யும் சிசிடி சில்லுகளில் ஒவ்வொரு புள்ளியிலும் மூன்று வண்ணங்களில் ஏதாவது ஒன்றைத்தான் பதிவு செய்யமுடியும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் நாம் படத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் அது பதிவு செய்யும் வண்ணம் தவிர்த்த பிற வண்ணங்களை இழக்கிறோம். (ஆனாலும், இந்தப் புள்ளிகள் நெருக்கமாக இருப்பதால் நம் கண்ணுக்கு அந்த வித்தியாசம் தெரிவதில்லை).
இதைத் தவிர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்த உருவான டிஜிட்டல் கருவிகளில் உள்வரும் ஒளி மூன்றாகப் பகுக்கப்பட்டு மூன்று வேறு சில்லுக்களுக்குச் செலுத்தப்படும், பின்னர் இவற்றின் கலவை வீதத்தைக் கணக்கிட்டு ஒட்டுமொத்தமாகப் படம் பதிவு செய்யப்படும். இந்த முறையில் ஒவ்வொரு புள்ளியிலும் மூன்று வண்ணங்களின் அளவும் துல்லியமாக மின்னோட்டமாக மாற்றப்பட்டு ஒருங்கிணைவதால் படத்தின் துல்லியம் இழந்துபோகாமல் தவிர்க்க முடிகிறது. ஆனால், மூன்று வேறு சில்லுக்கள், அவற்றுக்காக உள்வரும் ஒளியைப் பிரித்துத் தரப் பட்டகங்கள் எனக் கூடுதல் பாகங்கள் தேவைப்படுவதால் இதுபோன்ற கருவிகள் அளவில் பெரிதாக இருக்கும். விலையும் மிக அதிகம். ஆறு மெகாபிக்ஸெல் சாதாரண காமெராவின் விலை $1000 என்றால் இந்த மூன்று சில்லு காமெராவின் விலை $14,000 ஆக இருக்கும்.
·பேவியன் என்ற துவக்கநிலை நிறுவனம் சென்ற வருடம் புரட்சிகரமான கண்டுபிடிப்பை அறிவித்தது. அதன் அடிப்படையில் மூன்றடுக்கு சிசிடி சில்லுகள் இருக்கும். ஒவ்வொரு அடுக்கும் மூவண்னத்தில் ஒன்றைப் பதிவு செய்துகொண்டு மற்ற வண்ணங்களைத் தடுக்காமல் அடுத்த அடுக்கிற்கு அனுப்பும். இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இதன் மூலம் படக்கருவியின் அளவு சாதாரண காமெராக்களைப் போலவே சிறிதாக இருக்கும். கூடவே படத்தின் துல்லியமும் அதிகம்.
இந்தச் சில்லை சென்ற நவம்பவரில் ஒரு திட்டத்தில் பயன்படுத்த என்னால் சோதிக்க முடிந்தது. அப்பொழுது அதன் விலை $3000 (4 மெகா பிக்ஸெல்). விலை அதிகம் என்ற ஒரே காரணத்தால் நாங்கள் இதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. இன்றைக்குப் போலராய்ட் நிறுவனம் ·போவியன் சில்லுக்களின் அடிப்படையில் அமைந்த புதிய காமெராவை அறிவித்துள்ளது. இதன் விலை $400 டாலர்கள். இதுதான் தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சி. சென்ற வருடம் ·போவியன் அதிகமான சில்லுக்களைத் தயாரிக்கவில்லை, எனவே விலை அதிகம். இப்பொழுது நுகர்வோர் சந்தைக்கு வந்திருப்பதால் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைத்திருக்கிறார்கள்.
பொதுவில் டிஜிட்டல் காமெரா சந்தை இப்பொழுது மிகவும் போட்டி நிறைந்தது. ·போவியன் நிக்கான், கேனன், சோனி, போன்ற ஜப்பானிய நிறுவனங்களை எதிர்கொண்டாக வேண்டும். இந்தச் சந்தையில் இடத்தைப் பிடிப்பது மிகவும் கஷ்டம். அப்படி ·போவியன் நிற்காமல் போனாலும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு நிக்கானும் சோனியும் பதில் சொல்லியாக வேண்டும்.
என்னுடைய கருத்தில் டிஜிட்டல் பட உலகம் ·போவியனால் மாற்றி எழுதப்படவிருக்கிறது.
நன்றி - வெங்கட்
|
|
|
| Three fastest growing languages were Bengali, Tamil and Mala |
|
Posted by: AJeevan - 03-04-2004, 12:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b><span style='color:brown'>Three fastest growing languages were Bengali, Tamil and Malay.
[size=15]Will Urdu become the new English?
By SUZY AUSTIN
ENGLISH is losing its dominant position in the league table of world languages, it was claimed yesterday.
By 2050, it will be overtaken by Arabic and the closely related Indian tongues of Hindi and Urdu, according to experts.
Nine years ago, about 372 million people spoke English as their first language - putting it second only to Chinese which was spoken by 1.1 billion people.</span>
But, in 50 year's time, the picture will change dramatically. Among 15 to 24-year-olds, the number of English speakers will fall to 65 million. Chinese will still dominate, with 166 million younger speakers.
Writing in the journal Science, researcher David Graddol said the three fastest growing languages were [b]Bengali, Tamil and Malay</b>.
"The world population rose rapidly during the 20th century, but the major increase took place in less developing countries," he added.
"This trend is transforming the global league table of languages."
He said the 19th century notion that English would become a world language was 'past its sell-by-date'. Employers in Asia were already looking beyond English.
"In the next decade, the new must-learn language is likely to be Mandarin," he said, adding that of the 6,000 languages in existence, 90 percent could disappear in 100 years.
Multilingualism would become commonplace, he said. This trend could be seen in the growth of Spanish in the US, and the large number of Europeans who spoke English.
----------------------------------------------------
Friday, February 27, 2004 METRO
|
|
|
| வீரப்பனும்...இஸ்ரேலிய இராணுவ நிபுணத்துவமும்....! |
|
Posted by: kuruvikal - 03-03-2004, 10:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<b>வீரப்பனை பிடிக்க இஸ்ரேல் அறிக்கை!</b>
தமிழ்நாட்டில் சந்தன மரக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையை இஸ்ரேல் தயாரித்துள்ளது!
இஸ்ரேல் ராணுவத் தொழில் துறையைச் சேர்ந்த குழு ஒன்றும், ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனமும் இணைந்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளன.
வீரப்பனின் செயல்பாடுகள், தாக்குதல், அவனுக்கு கிடைக்கும் உதவிகள், அவன் மறைந்துள்ள காட்டின் தன்மை ஆகியவற்றை கடந்த ஜனவரி மாதம் கர்நாடகத்திற்கு வந்த அந்த அமைப்பின் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
அதனை அடிப்படையாக வைத்து, சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அந்த அமைப்பு அறிக்கை தயார் செய்துள்ளது.
webulagam.com
வீரப்பனைப் பிடிக்காட்டி இஸ்ரேலின் நிபுணத்துவத்தின் கதி....அதோ கதிதான்....????!(- our view) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| காதல் என்றால் என்ன அர்த்தம்...????! |
|
Posted by: kuruvikal - 03-03-2004, 10:34 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
<b>மரணப்படுக்கையில் காதலி கழுத்தில் தாலி கட்டிய காதலர்!</b>
ஆஸ்ட்ரேலியாவில் இருந்து சென்னை வந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பிய காதலர்கள் விபத்தில் சிக்கியதால், காதலி மரணம் அடையும் முன் அவர் கழுத்தில் தாலி கட்டினார் காதலர்.
டெர்ரி மேரி (வயது <b>36</b>), ஸ்டீவர்ட் ஜேம்ஸ் (<b>50</b>) என்ற இருவரும் இந்து முறைப்படி வேதங்கள் முழங்க திருமணம் செய்து கொள்ள விரும்பி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்துள்ளனர். மகாபலிபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் சென்னை சென்டிரல் ரயில்நிலையத்திற்கு எதிரே விபத்தில் சிக்கியது. இதில் டெர்ரியும், ஜேம்சும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் டெர்ரியின் உடல்நிலை கவலைக்கிடமானது.
இதையடுத்து ஸ்டீவர்ட் ஜேம்ஸ் தனது காதலியை மணம் முடிப்பது என்று முடிவு செய்து மரணப் படுக்கையிலேயே அவர் கழுத்தில் தாலி கட்டினார். தாலி கட்டிய சில நிமிட நேரத்தில் டெர்ரி மரணம் அடைந்தார். ஜேம்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
webulagam.com
|
|
|
| சமகால யாழ்ப்பாணம்....! |
|
Posted by: kuruvikal - 03-03-2004, 10:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
சமகால யாழ்ப்பாண நிலைமைகளின் கீழ் அங்கு வன்முறைகள் அதிகரித்திருப்பதாக மனித நேய அமைப்புக்கள் கூறி உள்ளதுடன்...கீழ் வரும், 2003க்குகான குற்றச்செயல்கள் தொடர்பிலான புள்ளிவிபரத்தையும் வெளியிட்டுள்ளன....!
Murders and robberies-கொலைகளும் கொள்ளைகளும் - 191
Cases involving the sale of illegal liquor-சட்டவிரோத மதுபான விற்பனை - 808
Petty crimes-சிறு வன்முறைகள் - 323
Road accidents-வீதி விபத்துக்கள் - 1164
Divorce -விவாகரத்துக்கள் - 62
Land disputes -காணித் தகராறுகள்- 16
Thanks..tamilnet.com
1990 இல் இந்தியப் படைகள் வெளியேறிய பின் 1995 சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு வரை அங்கு நிலவிய சூழலுடன் ஒப்பிடும்போது தற்போது குற்றச் செயல்களின் அளவு அதிகம் என்பது தெளிவு....!(-our view)
|
|
|
| பெண்களுக்காக......... |
|
Posted by: Chandravathanaa - 03-03-2004, 06:26 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (3)
|
 |
<b>பெண்களுக்காக ஒரு தளம்
இன்றைக்கு வேகவேகமாக முன்னேறும் உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
தங்கள் கடமைகளை செவ்வனே செய்யும் அதே பொழுது, தத்தம் சுயமுன்னேற்றம்,
தாகம், விருப்பு வெறுப்புகளையும் கண்டுகொள்ளாமல் விடுவதில்லை.
இணையத்திலும் அப்படியே!
[b]அந்தப் புதுமைப்பெண்கள், தங்களுக்குள் கலந்துரையாட, தத்தம் படைப்புகளையும் தம்மைக்கவர்ந்த பிற படைப்புகளையும் பகிர்ந்துகொள்ள, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓரிடம் வேண்டும் என்று தோன்றியது.</b>
<b>இந்த இடம் உங்களுக்கானது. </b>
இங்கே நீங்கள் சுதந்திரமாக உங்கள் கருத்துகளையும், விருப்பு வெறுப்புகளையும் கூறுங்கள். படைப்புகளை இட்டு, உங்கள் திறமையை கூர் தீட்டிக்கொள்ளுங்கள்.
<b>வாருங்கள்!</b>
மதி கந்தசாமி & சந்திரவதனா
[b]<span style='font-size:30pt;line-height:100%'>http://womankind.weblogs.us/</span>
|
|
|
| அன்பளிப்புகள் |
|
Posted by: ganesh - 03-02-2004, 09:24 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
திருமணம் பூப்புனிதநீராட்டுவிழா பிறந்தநாள்
போன்ற நன்மையான காரியங்களுக்கு நம்மவர்கள் போட்டீபோட்டுக்கொண்டு அன்பளிப்புக்களை வழங்குகிறார்கள் அன்பளிப்புகொடுத்தவர்கள் வீட்டில் ஏதாவது
நன்மையான காரியம் நடக்கும்பொழுது அன்பளிப்பைவாங்கியவர்கள் இரண்டுமடங்காக அன்பளிப்பை திருப்பிகொடுக்கவேண்டிய
தாக நமது கலாச்சாரம் வளர்ந்துவிட்டது இதனால் அன்பளிப்பைபெற்றுவர்கள் பல இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் வெள்ளைக்காரர்கள் அன்பளிப்பு கொடுக்கும்
போது அது அவர்களுக்கு உபயோகமானதாஈ
என்று முதலில் ஆராய்வர்கள் உபயோகமில்லாதபொருட்களை அநேகம் கொடுக்கமாட்டார்கள் எழுதுங்கள் உங்கள்
கருத்துக்களை
|
|
|
| விஜயின் முன்மாதிரி....! |
|
Posted by: kuruvikal - 03-02-2004, 04:01 PM - Forum: சினிமா
- Replies (10)
|
 |
<img src='http://www.thatstamil.com/images20/cinema/vijay-350.jpg' border='0' alt='user posted image'>
மாணவர்களுக்கு உதவிய விஜய்
தேர்வுக்கட்டணத்தை கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 18 மாணவர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை கட்ட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தனர்.
இதையறிந்த நடிகர் விஜய், அந்த மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை கட்ட முன்வந்தார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனை அந்தப் பள்ளிக்கு அனுப்பி தேர்வுக் கட்டணத்தை தலைமையாசிரியரிடம் கொடுக்கச் செய்தார். பின்னர் மாணவர்களிடம் பேசிய சந்திரசேகரன்,
விஜய் பிறந்த நேரத்தில் பால் வாங்கக்கூட காசில்லாமல் கஷ்டப்பட்டோம். வறுமையின் கொடுமை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறோம் என்றார்.
Thatstamil.com
|
|
|
|