![]() |
|
காதல் என்றால் என்ன அர்த்தம்...????! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் என்றால் என்ன அர்த்தம்...????! (/showthread.php?tid=7387) |
காதல் என்றால் என்ன அர் - kuruvikal - 03-03-2004 <b>மரணப்படுக்கையில் காதலி கழுத்தில் தாலி கட்டிய காதலர்!</b> ஆஸ்ட்ரேலியாவில் இருந்து சென்னை வந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பிய காதலர்கள் விபத்தில் சிக்கியதால், காதலி மரணம் அடையும் முன் அவர் கழுத்தில் தாலி கட்டினார் காதலர். டெர்ரி மேரி (வயது <b>36</b>), ஸ்டீவர்ட் ஜேம்ஸ் (<b>50</b>) என்ற இருவரும் இந்து முறைப்படி வேதங்கள் முழங்க திருமணம் செய்து கொள்ள விரும்பி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்துள்ளனர். மகாபலிபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் சென்னை சென்டிரல் ரயில்நிலையத்திற்கு எதிரே விபத்தில் சிக்கியது. இதில் டெர்ரியும், ஜேம்சும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் டெர்ரியின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து ஸ்டீவர்ட் ஜேம்ஸ் தனது காதலியை மணம் முடிப்பது என்று முடிவு செய்து மரணப் படுக்கையிலேயே அவர் கழுத்தில் தாலி கட்டினார். தாலி கட்டிய சில நிமிட நேரத்தில் டெர்ரி மரணம் அடைந்தார். ஜேம்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. webulagam.com |