![]() |
|
பெண்களுக்காக......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களுக்காக......... (/showthread.php?tid=7389) |
பெண்களுக்காக......... - Chandravathanaa - 03-03-2004 <b>பெண்களுக்காக ஒரு தளம் இன்றைக்கு வேகவேகமாக முன்னேறும் உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். தங்கள் கடமைகளை செவ்வனே செய்யும் அதே பொழுது, தத்தம் சுயமுன்னேற்றம், தாகம், விருப்பு வெறுப்புகளையும் கண்டுகொள்ளாமல் விடுவதில்லை. இணையத்திலும் அப்படியே! [b]அந்தப் புதுமைப்பெண்கள், தங்களுக்குள் கலந்துரையாட, தத்தம் படைப்புகளையும் தம்மைக்கவர்ந்த பிற படைப்புகளையும் பகிர்ந்துகொள்ள, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓரிடம் வேண்டும் என்று தோன்றியது.</b> <b>இந்த இடம் உங்களுக்கானது. </b> இங்கே நீங்கள் சுதந்திரமாக உங்கள் கருத்துகளையும், விருப்பு வெறுப்புகளையும் கூறுங்கள். படைப்புகளை இட்டு, உங்கள் திறமையை கூர் தீட்டிக்கொள்ளுங்கள். <b>வாருங்கள்!</b> மதி கந்தசாமி & சந்திரவதனா [b]<span style='font-size:30pt;line-height:100%'>http://womankind.weblogs.us/</span> - nalayiny - 03-03-2004 அருமை. பாராட்டுக்கள்.
- Mathan - 03-03-2004 பெண்கள் தினத்தை முன்னிட்டு திசைகள் மார்ச் இதழ் பெண் படைப்பாளிகளின் சிறப்பிதழாக வெளி வந்துள்ளது. http://www.thisaigal.com/MARCH04/anbudanU.html - Alai - 03-06-2004 விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான். பட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல்போத்தல் சாப்பாடு டயப்பர் வீணீர் துடைக்கும் துண்டு சூப்பி மாற்றுடுப்பு கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை........................... மிகுதியை வாசிக்க |