Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 288 online users.
» 0 Member(s) | 285 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,286
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  சினிமா சினிமா
Posted by: Mathan - 02-29-2004, 11:32 PM - Forum: சினிமா - Replies (82)

<span style='font-size:25pt;line-height:100%'>ஆட்டோகிராப் - திரை விமர்சனம்</span>

<img src='http://www.tamilcinema.com/cinenews/review/2004/auto1.jpg' border='0' alt='user posted image'>

இளமையில் கல்! இது சாத்தியமோ, இல்லையோ, இளமையில் காதல்... -இது சத்தியம்! இப்படி ஒவ்வொருத்தன் வாழ்க்கையிலும் தொலைந்து போன காதல் சொர்க்கத்தை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் சேரன். மனசின் அடியில் மூழ்கிக்கிடக்கும் காதல் கல் வெட்டுகளை தன் மாயக்கரங்களால் தடவி தடவி படித்திருக்கிறார்! அடேயப்பா... சிலிர்த்துக் கொள்கிறது ஒவ்வொரு மயிற்கால்களும்!

பட்டிணத்தில் வேலை பார்க்கும் சேரனுக்கு திருமணம். தன் வாழ்க்கையில் கடந்து போன முக்கியமான மனிதர்களுக்கு பத்திரிகை கொடுக்க புறப்படுகிறார். அந்த முக்கியமானவர்களில் மனசை கிள்ளிய மல்லிகாவையும், கோபிகாவையும், சந்திக்கிறார். சந்திப்பு நிகழும் அந்த நிமிடமும், அதற்கு முந்தைய பிளாஷ்பேக்குகள் இரண்டும் கிழட்டு இதயங்களையும், இன்னொரு முறை
காதல் பதியம் போட வைக்கும்! நதியாய் நடந்து, தென்றலாய் தழுவி, கனலாய் கொதித்து, கவிதையாய் இனித்திருக்கிறார் சேரன். ஹீரோவும் அவரே! இயக்குனரும் அவரே! இந்த வெவ்வேறு தளங்களில் சேரனின் பங்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

அந்த ஸ்கூல் லவ் எல்லாருக்கும் வாய்த்திருக்க கூடிய இனிய அனுபவம்தான். மல்லிகாவுடனான விடலை காதலில் சொக்கிப்போய், ''ஹேப்பி வயசுக்கு வந்த டே'' என்று சொல்லி மல்லிகாவுக்கு பூங்கொத்து வழங்கும் குட்டி சேரனின் குறும்பை ரொம்பவே ரசிக்கலாம். மல்லிகாவின் நினைவாக அவளின் கூந்தல் குஞ்சத்தை வெட்டி எடுத்து பாதுகாக்கிறாரே... அது, காதலிக்கிற சிறுசுகளின் கண்ணியத்திற்குரிய மியூசியம்.

மல்லிகா, தமிழுக்கு கிடைத்த தங்க பொக்கிஷம். என்னவொரு தேர்ந்த நடிப்பு! தனக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வரும் சேரனை அடையாளம் தெரியாமல் நெற்றிச்சுருக்கும் அந்த கணமும், பிறகு தெரிந்தவுடன் ''வா செந்திலு...'' என்று வாய்நிறைய மகிழ்வதும் சில்லிப்பு.... சிலிர்ப்பு! மணமேடையில் மனசுக்குள் பொத்தி வைத்த காதலின் வேகத்தில் திரும்பி பார்த்துவிட்டு போகிறாரே...விசில் பறக்கிறது தியேட்டரில்!

இதுதான் இப்படி என்றால் கேரள கரையோரம் மனசை தொலைத்துவிட்டு சேரன் சுமந்த பாரம் இருக்கிறதே, நத்தையின் முதுகில் இமயம்! டவுண் பஸ் கணக்காக படகில் சவாரி செய்யும் மாணவர் கூட்டத்தில் தமிழனை இழிவு படுத்தியவர்களை தண்ணிக்குள்ளேயே புரட்டியெடுக்கும் காட்சி, சேரனின் இனப்பற்றுக்கு சாட்சி!

அங்கே கோபிகாவுடன் காதல்! முந்தைய காதலைவிட, சற்றே மெச்சுரிடியான காதல் இது. வீணை கற்றுக் கொள்ளும் சேரனின் விருப்பத்திற்கு கோபிகா வளைந்து கொடுக்க, சேரனின் தமிழும் சேர்ந்து வளைந்து கொடுத்து மலையாளத்திற்கு மாறுவது அழகு. வீட்டில் நாலைந்து யானைகளை வளர்க்கிற அளவிற்கு கம்பீரமான கோபிகாவின் வீடு காலமாற்றத்தில், நான்கைந்து கன்றுக்குட்டிகள் மட்டுமே வளர்க்கும் நிலைக்கு போயிருப்பதையும், உள்ளே கோபிகாவின் நிலையும் அதுதான் என்பதையும் அழகாக முடிச்சு போட்டிருக்கிறார் சேரன். சேரனுக்கு மூக்குத்தி பிடிக்கும் என்பதற்காக தானே மூக்கை பஞ்சராக்கிக் கொள்ளும் கோபிகாவின் காதல் பித்து, சேரனுக்கு மட்டுமல்ல, ரசிகனுக்கும் வலியேற்படுத்தும். கோபிகா கொடுக்கிற ஆப்பிளை வாங்கி கடித்து, கற்பனையில் இருவரும் ஆதாம், ஏவாளாக மாறிவிடும் காதல் காட்சியில் ரசனை அதிகம்!

சேரனின் வாழ்க்கையில் வரும் அந்த மூன்றாவது பெண்ணான சினேகாவின் பகுதி மட்டும் விக்ரமன் படம் போல் இருக்கிறது. இருவரின் நட்பையும் கொச்சைப்படுத்தாமல் காட்டியிருப்பது ஆரோக்கியம்! பார்வையற்றவர்களின் இசை நிகழ்ச்சியில் சினேகா பாடும் அந்த பாடல், குளுக்கோஸ்!

சில காட்சிகளே வந்தாலும் கனிஹாவும் நெஞ்சையள்ளிக் கொண்டு போகிறார். கடைசியில், சேரனுக்கு விதிக்கப்பட்டவர் இவரே! சேரனின் காதல்கள் ஏதும் தெரியாத அப்பாவி!

மனசில் பச்சை குத்திய இந்த நான்கு பெண்களையும் சேரனையும் விடுங்கள்... கிராமத்து வாத்தியார் இளவரசுவின் அத்தனை அசைவையும் மூக்கை பிடித்துக் கொண்டு ரசிக்கலாம்! ஆனாலும் சேரன்...இது ரொம்ப அநியாயம்!

எஸ்.ரவிவர்மன், விஜய்மில்டன், துவாரகநாத், ஷங்கிமகேந்திரா! -சேரனின் காதல்களை சேதாரமில்லாமல் சேகரித்த ஒளிப்பதிவாளர்கள் இவர்கள்தான். அந்தந்த காலத்திற்கே நம்மை அழைத்துப்போன கால யந்திரங்கள்! இந்த பிரம்மாக்கள் வரிசையில் ஆர்ட் டைரக்டர் மணிராஜுக்கும் அசைக்க முடியாத இடம் உண்டு.

கதையின் வேகத்தில் பிற்பாதி திணறினாலும், இந்த ஆட்டோகிராப், சேரனின் கிராஃபை தாறுமாறாக உயர்த்தப்போவது மட்டும் நிச்சயம்!

நன்றி - தமிழ் சினிமா

Print this item

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Posted by: nalayiny - 02-29-2004, 11:28 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (1)

கள உறுப்பினராம் எமது குறிஞ்சிக்கு (யாரோ?) எமது பிறந்த நாள் வாழ்த்தக்கள்.

இன்றய தினத்தில் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் யாழ் களத்தினூடாக எமது வாழ்த்துக்கள்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


<img src='http://www.yarl.com/ecards/images/pic_2003-12-18_112845.jpg' border='0' alt='user posted image'>

[size=18]யார் இந்த மடல் செய்தார்கள் உண்மையில் அழகாக இருக்கிறது பாராட்டுக்கள்.

Print this item

  கேடிஸ்தான்
Posted by: Mathivathanan - 02-29-2004, 08:46 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (31)

ஒரு வருடமாக பதில் இல்லாத கேள்வி மீண்டும் வருகின்றது.. கேடிஸ்தான் உருவாகுமா..? உருவாக்கப்படுமா..?
அமெரிக்காவுக்கு கேடிஸ் மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பலன் கிடைக்குமா..?
:?: :?: :?:

Print this item

  கள உறவுகளுக்கு ஒரு அன்பார்ந்த அறிவிப்பு...!
Posted by: kuruvikal - 02-29-2004, 08:15 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (16)

kuruvikal@........இப்படி ஆரம்பிக்கும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி அநாகரிக மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது....! இவற்றிற்கும் எமக்கும் எந்தவித தொடர்ப்பும் இல்லை என்பதும் நாம் எவருடனும் இவ்வகையான மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்டு செய்திப்பரிமாற்றங்களை இதுவரை செய்ததும் இல்லை எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.......!

ஆனால் இங்கு வெளிக்காட்டப்படும் மின்னஞ்சல் முகவரியை மாதிரியாக வைத்து சிலர் குருவிகள் தொடர்பில் தவறான எண்ணங்கள ஏற்படுத்த விளைகின்றனர்....! இவர்களின் செயற்பாடுகளைப் பற்றி நாம் ஒன்றும் பொருட்படுத்தவில்லை....ஆனால் எமது புனை பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் எமக்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று சிலர் எண்ணக்கூடும்...இந்தக் களங்கங்கள் போல் பலவற்றை நாம் ஏற்கனவே தரிசித்துவிட்டோம்....!

இருந்தாலும் கள உறவுகள் குருவிகளின் பெயரால் இப்படியான அசெளகரிகங்களை சந்திக்க நேரிட்டால் அதற்காக எமது வருத்தங்களுடன் அவை எமது கட்டுப்பாட்டு எல்லையை மீறியவை என்றும் அறியத்தர விரும்புகிறோம்....!

என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!: :evil:

Print this item

  கபடத்தனம்
Posted by: Mathivathanan - 02-29-2004, 07:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பாரதத்துடன் புதிய உறவுக்கு புலிகள் மீண்டும் அழைப்பு
சிங்கள அரசியல்வாதிகளின் கபடதனத்துக்கு இந்தியா வசப்படக்கூடாது தமிழ்ச்செல்வன்.
நன்றி வீரகேசரி.

புரியவேயில்லை.. இவ்வளவு காலமும் இந்திய கபடநாடகம்பற்றி எமக்குப் போதித்த நம்மவர் இந்தியாவுக்கு சிங்கள கபட நாடகம்பற்றி எடுத்துரைப்பதேனோ..?
:!: :?: Arrow

Print this item

  மக்கள் என்ன ஏமாளிகளா?
Posted by: Rajan - 02-29-2004, 03:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

மீண்டும் ஈ. ****
மக்கள் என்ன ******color]

[color=red]**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Print this item

  ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்......... நன்றி கி.பி
Posted by: nalayiny - 02-29-2004, 01:17 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (9)

ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
கம்பவாரிதி அருளும் உபதேசம்

ஈழத்தின் இலக்கிய சஞ்சிகைகளில் ஒன்றான மல்லிகையில்தான் இந்தக் கம்பவாரிதி nஐயராஐ; என்பவரின் வாராதே! வுரவல்லாய்;.. என்ற புலம்பெயர்ந்தோருக்கான அறிவுரைக் கட்டுரை முதலில் வெளிவந்திருக்கின்றது. (மல்லிகை ஐPவா கம்பவாரிதியுடன் இணையும் இந்தப்புள்ளி ஆச்சரியம் தருகின்றது. தற்போதைய சந்திரிகா-வீரவன்ச கூட்டுப்போல்) பின்னர் 2004ஐன.04-10 என திகதியிடப்பட்ட சுடர் ஒளி என்னும் வார இதழ் அதனை மறுபிரசுரம் செய்துள்ளது. மறு பிரசுரத்தின் நோக்கம் எதுவானாலும் அனுமானின் வால்போல் இரண்டு பக்கம் வரையில் நீண்டு செல்லும் இக்கட்டுரை தாயகத்திற்கு வெளியே 1980களின் பின் வாழத்தலைப்பட்ட ஈழத்தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் கோலங்களை இகழ்ந்து பேச முற்பட்டுள்ளது என்பது மட்டும் அதில் துலக்கமாகத் தெரிகின்றது. (சத்தியமாய் சொல்கிறேன் உங்களை இழிவுபடுத்த நான் இக்கட்டுரையைத் எழுதவில்லை என்ற வாக்குமூலத்தையும் மறக்காமல் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளமை அவரது உள்நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றது)
தன்னை ஆத்மீகவாதி என்றும், இலண்டன் கனடாவுக்கு சென்றுவந்தவரென்றும், (இந்த நாடுகளுக்குச் சென்றுமீள உதவியவர்களுக்கு தேசம்கடந்தும் நேசங்கடவா நெஞ்சங்கள் என்ற தொப்பியும் அவரால் வழங்கப்பட்டுள்ளது) ஆன்றவிந்தடங்கிய கொள்கைப் பெரியோன் என்றும் தன்னிலை விளக்கம் கூறி, புலம்பெயர்ந்து வாழும் அற்பர்களுக்கான அறிவுரைகளை மன்னிக்க வேண்டும் அருள்வாக்குகளை கட்டுரை முழுவதும் அருளியுள்ளார் கம்பவாரிதி nஐயராஐ;. கம்பவாரிதி என்பது கம்பராமாயணம் என்னும் இலக்கியத் தடாகத்தில் மூழ்கித் திளைத்தவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். மேலும் அதனைச் சுருக்கமாக, கம்பவாரிசு என்றும் எடுத்துக் கொள்ளலாம். (இதனால் அவரது மனம் மகிழ்ந்தால் அடியேன் பாக்கியசாலிதான். சாது ஒருவரைத் திருப்திப்படுத்திய, சாந்தப்படுத்திய பேறு எனக்குக் கிட்டட்டும்) இந்தக் கம்பவாரிசு என்ற முன்னொட்டுத்தான் அவருக்குப் பொருத்தம் என்பது என் தாழ்மையான கருத்து. ஏன் என்பதைப் பின்னர் கூ,றுவேன். (உண்மையில் சங்க இலக்கியம் தொட்டு நிற்கும் தமிழிலக்கியப் பரப்பை பெருங்கடலெனெக் கொண்டால் இராமாயணம் ஒரு குளம் குட்டை அளவே இருக்கக் கூடும். அதற்காக, கம்பராமாயணத்தை மட்டுமே உருப்போடும் கம்பவாரிதியை ஓரு குட்டையில் ஊறிய மட்டை எனக் கூறுவது அபச்சாரமாகும்)
வுடமொழியில் வான்மீகியால் எழுதப்பட்டதான இராமகாதையைத் தழுவி தமிழில் கம்பனால் எழுதப்பட்டதுதான் கம்பராமாயாணம் என்பதை நாம் அறிவோம். ஏறத்தாழ பத்தாம் நு}ற்றாண்டின் பின்னால் தமிழில் எழுதப்பட்டதான இக்காப்பியம் இலங்கை மன்னனான வெற்றியை உடைய இராவணனை வெற்றி கொண்ட திருமாலாகிய இராமனது வீரத்தை விளக்கிச் சொல்கின்றது என்பதைப் படித்தவர்கள் அறிவர். ஆனால் இந்த இராமாயணம் தமிழ் மக்களை அரக்கரென இழிவுபடுத்துகிறது அவமானப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் விளக்கமும் அறிஞர்களால், சமூக சிந்தனையாளர்களால் முன்வைக்கபடுவதையும் நாம் மறந்துவிடுதல் கூடாது. அதனால் இதற்கு மறுப்பாக, புலவர் குழந்தை அவர்களால் இராவணகாவியம் எழுதப்பட்டதும் சமூக விரோத இலக்கியமாக அடையாளம் காணப்பட்ட இராமாயணம் தீயிட்டு கொளுத்தப்படவேண்டுமமென்ற முழக்கங்கள் முன்வைக்கப்ட்டதும் ஒரு அரை நு}ற்றாண்டுக்கு உட்பட்ட நிகழ்வுகளாகும். இராமாயணத்தின் உள்ளடக்கம் தமிழர் விரோதம் அல்லது சமூக விரோதம் கொண்டதாக இருக்கும் அதேவேளையில் இராமாயணத்தைத் தழுவி, தமிழில் கம்பனால் எழுதப்பட்டதான கம்பராமாயணம் காமரசம் ததும்பியது பாலியல் கிளர்ச்சி ஊட்டுவது என்ற குற்றச்சாட்டும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதிலும் தனது காவிய நாயகியான சீதையின் உறுப்புகளான அல்குல்(பெண்குறி), கொங்கை, தொடை பற்றியெல்லாம் காமரசம் சொட்டச் சொட்ட கம்பன் வர்ணனை செய்துள்ளான். இதனால் கம்பன் ஒரு வம்பன் என்ற வழக்காறும் தமிழில் புழக்கத்தில் உள்ளதை நாம் நினைவில் கொள்ளலாம். காவிய நாயகியான சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்த வண்ணம் துயருற்று அழுத கண்ணீர் எவ்வகையாக வடிந்து செல்கின்றது என்பதைக் கம்பன் வர்ணிப்பதிலும், காட்டுக்கு அனுப்பப்பட்ட இராமனும் குழுவினரும் குகனின் உதவியுடன் படகில் ஆற்றைக் கடக்கையில் தண்ணீhத் திவலைகளால் ஆடை நனைந்த பெண்களை வர்ணிப்பதிலும், சீதையின் அல்குலின் அளவை பாம்பின் படத்துடன் ஒப்பிடுகையிலும் (இன்னும் பல கட்டங்களைச் சுட்டிக்காட்டலாம்) கம்பன் ஒரு வம்பன் என்பது நிரூபணமாகும். இப்படிக் கம்பன் ஒரு வம்பன் என்னும்போது கம்பவாரிதி வம்பவாரியாவதும் அல்லது கம்பவாரிசு வம்பவாரிசாவதும் ஆச்சரியமில்லை. அதிலும் கட்டுக்குடும்பியும் காவியும் தரித்த nஐயராஐ; வாராதே வரவல்லாய் கட்டுரையில் தன்னை வம்பவாரிசு என நிறுவிக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.
தான் எழுதும் கட்டுரையைப் படிப்பதற்கான ஆர்வத்தை து}ண்டுகின்றேன் என்று ஒருவகை கண்ணாம்புூச்சி ஆட்டத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கும் nஐயராஐ; முதலில் புலம்பெயர்ந்தோர் தமது தமிழ்மொழியை மறந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டை 'தமிழ் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றதா?" எனக்கேட்டு இளக்காரமாக முன்வைக்க முயல்கின்றார். அதற்கு உதாரணமாக அவர்கூறியுள்ள கதையை கேளுங்கள்.
'அண்மையில் சுவிஸிலிருந்து வந்திருந்த என் அக்காவின் பேரன் தன் மாமனைப் பார்த்து கேட்டானே ஒரு கேள்வி. ஊரே சிரித்துவிட்டது போங்கள். தன் அன்புப் பேரனுக்கு என் அக்கா ஆசையாசையாய் ஆனை வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க அவன் அதைத் தின்னும் அவதியில், குளிக்கத் தயாராய் துண்டோடு கிணற்றடியில் நின்ற தன் மாமனிடம் கொண்டோடிப்போய் பிளீஸ் அங்கிள் வாழைப்பழத்தை ஒருக்கா கழட்டித்தாங்கோ என்று கேட்க எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மாமன் அக்கேள்வியால் பதறியடித்து இடுப்பில் இருந்து துண்டை இறுகப் பொத்திய காட்சி கண்டு எங்கள் ஊரே சிரித்தது. வாழைப்பழத்தை உரித்து தாருங்கள் என்பதற்கு பதிலாக கழட்டித்தாருங்கள் என்கிறது ஈழத்தமிழினத்தின் பொறின் வாரிசு"
குழந்தையின் மழலைக் கூற்றிலும் வம்பு எண்ணந்தான் மேலெழுகின்றது கம்பவாரிசுக்கு. தனது மனவக்கிரத்தை மற்றவர்களிலும் தொற்ற வைக்கின்றார் ஆத்மீகவாதியான வம்பவாரிசு. அவர் கூறிய உதாரணத்திற்கும் புலம்பெயர்ந்த சமுகக் குழந்தையின் தமிழ் அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. புhவம் அவர் மழலை மொழியை கேட்டதில்லைப்போலும். அந்தப் பேரக்குழந்தைக்கு கழட்டித்தாருங்கள் என்ற ஓரு தமிழ் வினைச்சொல் தெரிந்திருக்கின்றது. சிரிக்கவும் சுவைக்கவும் கூடியதான குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் ஏராளம் உண்டு. பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் குழந்தைகளின் மழலைபற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதெல்லாம் கட்டுரையாளர் அறிந்திருக்க மாட்டார். ஆகக் குறைந்தது வள்ளுவனின் குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்ற குறளைத் தன்னும் அவர் அறிந்திருந்தால் இப்படி எழுதியிருக்கார். அதனைவிட உலக அறிவிலும் கிணற்றுத் தவளைதான் (இராமாயணம் குட்டை என்பதால் குட்டைத் தவளை என்பதும் அவருக்கு பொருந்தலாம்) என்பதை கட்டுரை முழுவதிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இக் கட்டுரையைத் தொடந்து படிக்கையில் அதனைப் புரிந்து கொள்வீர்கள். அதற்கு முன் மழலைமொழி புரியாமல் nஐயராஐ; கூறிய கதையில் சுவிசில் இருந்து வந்த அந்தக் குழந்தை பிளீஸ் அங்கிள் என்று ஆங்கிலம் பேசியதாம். சுவிசில் வழக்கில் உள்ள மூன்று மொழிகளில் ஆங்கிலம் உட்படவில்லை என்பதுடன் அக்குழந்தை சுவிசின் எந்தப் பகுதியில் வாழ்ந்ததோ அந்த மொழிச்சொற்களைத்தான் தமிழுடன் கலந்திருக்கும் அதுதான் இயல்பாக இருந்திருக்கும் என்பதோ அவருக்கு புரிந்திருக்காது. அந்தக் குழந்தையும் கதையும் கம்பவாரிதியினால் வம்புத்தனத்திற்காக காமரசத்திற்காக இட்டுக்கட்டியது என்றே துணிந்து கூறலாம்.
இவருடைய வம்புத்தனத்திற்கு மேலும் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டலாம். அவரின் கூற்றுக்களைப் படியுங்கள்.
'கூலி வேலை செய்யும் இடத்தில் வெள்ளைக்கார எஐமான்களிடம் நல்ல பெயர் வாங்க தலைமயிரை மட்டுமன்றி கால்மயிரையும் மழித்துக் கொள்கின்றனர் நம்காரிகையர்"
'பதின்மூன்று வயதான பருவ எல்லையில் நிற்கும் உங்கள் பாலகியின் பட்டராலும் சீசாலும் கொழுத்துக் கிடக்கும் தொடையின் முக்கால் பாகம் தெரியும் காற்சட்டை போட்டாகிவிட்டதா?"
கம்பவாரிதியின் காமப்பார்வை மன்னிக்க வேண்டும் அருள்பார்வை எவ்விடங்களைத் துழாவுகின்றது, மேய்கின்றது என்று தெரிகின்றதல்லவா? இப்போது nஐயராiஐ நான் ஏன் வம்பவாரிசு என விளிக்க முனைந்தேன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
nஐயராஐpன் கட்டுரையில் எள்ளல் மொழியில் இகழப்படும் விடயங்கள் என்னவென்றால் புலம்பெயாந்த தமிழர் மொழியை, பண்பாட்டை, மரபை மறந்து செல்கின்றனர் என்பதும், அவர்கள் போலியான பணப்பகட்டு காட்டுகிறார்கள் என்பதும்தான். 'சும்மா சொல்லக் கூடாதையா, அங்கிருந்து நீங்கள் ஆடின ஆட்டத்தில் இங்க எங்கட ஆணிவேரே ஆடிப்போனது உண்மையிலும் உண்மை" என்னும் அவருடைய கண்ணோட்டத்தில் நியாயம் இருக்கக்கூடும். ஆனால் அவரது சொல்லல் முறையும், பயன்படுத்திய மொழியும், தகவல் தரவுகளும், அவருடைய ஆலோசனைகளும் மிகவும் நயவஞ்ககமானது நஞ்சுூட்டப்பட்டது. புலம்பெயர்ந்த சமூகம் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் சமூக ஆர்வலர்களால் ஆய்வாளர்களால் தொடர்ந்தும் இங்கே ஊடகங்களில் ஆரோக்கியமான முறையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. நோய்க்கு வைத்தியம் செய்ய மருத்துவ படிப்பு வேண்டும். அனுபவப் பயிற்சி வேண்டும். அதேபோல்தான் சமூக நோய்க்கு ஆலோசனை சொல்ல சமூகப் அக்கறை வேண்டும் அனுபவப் பயிற்சி வேண்டும். நோய்க்கூறு கொண்ட நோயாளியை மருத்துவர் இகழ்ச்சியுடன் அருவருப்புடன் அணுகமுடியாது. இது தொழில்சார் விழுமியம் சார்ந்தது. அறம் சார்ந்தது. கட்டுரையாளர் கம்பவாரிதிக்கு சமூகம், சமூகவியல் பற்றியோ வரலாறு பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. அறமும் அவரிடமில்லை (இத்தனைககும் அவர் ஆத்மீகவாதியாம்?). அதனால்தான் தனது இராமாயணக் குட்டையின் எல்லைதாண்டி, வரம்புமீறி வம்பும் வக்கணையுமாக சொற்களை உதிர்க்க முடிந்திருக்கின்றது. சமூகத்தை எள்ளி நகையாட முடிந்திருக்கின்றது.
இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு கடந்த ஒரு நு}ற்றாண்டுக்கும் முற்;பட்டது. பத்தொன்பதாம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மலேசிய புலப்பெயர்வுதான் யாழ்ப்பாணத்தின் (கம்பவாரிதியின் மொழியில் செம்பாட்டு மண்ணில் பிறந்து..) கடல்தாண்டி வாழத் தலைப்பட்ட முதல் நிகழ்வாகும். (செம்பாட்டுமண் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மூன்றிலொரு பங்கும் இல்லாதது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்) அதற்கடுத்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் படிப்பிற்காகக் சென்று இலண்டன் கனவை உருவாக்கிய பயணமாகும். இதற்குப்பின் 1960களின் பிற்பகுதியில் எண்ணெய் வளநாடுகள் நோக்கிய செல்வம் தேடும் பயணமும் புலப்பெயர்வும் நிகழ்கின்றது. அதற்கும் பின்னர்தான் மிகப்பெரிய அளவினதாக 1980களில் நிகழ்ந்த தற்போதைய (ஐரோப்பா,கனடா, அவுஸ்திரேலியா) புலப்பெயர்வு தொடங்கியது. இப்புலப்பெயர்வுக்குப் போரும் பொருளாதாரமும் முக்கிய காரணங்கள் என்பது மறுக்க முடியாதது. முன்னைய புலப்பெயர்வுகள் (மலேசியா, இங்கிலாந்து, மத்தியகிழக்கு) தனியே பொருளாதாரக் காரணியை கொண்டவை. பின்னையதான புலப்பெயர்வுதான் கம்பவாரிதி nஐயராஐpக்கு உறுத்தலாக இருக்கின்றது. ஏனெனில் இந்தப் புலப்பெயர்வில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சாதாரணர்கள், சாமானியர்கள், பாமரர்கள் ஆம் சுூத்திரர்கள். (கட்டுரையாளரின் மொழியில் பிளேன் hP க்கும் வழியற்றவர்கள் உ-ம்: 'பிளேள் hPக்கும் வழியில்லாமல் காய்ந்து திரிந்த உங்கள் தோற்றத்தில் கோர்ட்டாலும், சுூட்டாலும், ரையாலும் ராஐகளையே வந்துவிட்டது")
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பொருளாதாரத்தை முன்னரே மணியோடர் பொருளாதாரமென கம்யுூனிஸ்ட் கட்சியினர் (மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஐPவா உட்பட) அரசியல் நையாண்டி செய்வதுண்டு. இதற்குக் காரணம் கடல் கடந்தவர்களும், குடாநாட்டுக்கு வெளியே அரச உத்தியோகங்களுக்குச் சென்றவர்களும் அனுப்புகின்ற பணவரத்தால்தான் யாழ்பாணம் உயிர் வாழ்கின்றது என்பதையும், அதற்கு வேறெந்த அடிப்படைப் பொருளாதார வளமும் இல்லை என்பதையும் சுட்டடிக்காட்டத்தான். இதில் உண்மையும் இருக்கக் கூடும். எனது பிரச்சனை அதுவல்ல. அவ்வேளையில் குடாநாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்கள் மணியோடர் அனுப்பியதுடன் மட்டுமல்லாது ஊர்வருகையில் காட்டிய பணப்பவிசுசையும் போலிப் பெருமையையும் கலாச்சாரச் சீரழிவையும் கம்பவாரிதிக்கு சுட்டிக்காட்டத்தான். அறுபதுகளில் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்த சுந்தரின் புகழ்பெற்ற கேலிச்சிந்திரங்களான சவாரித்தம்பர், மைனர் மச்சான், மிஸ்;டர் அன்ட மிஸிஸ் டாமோடரன் போன்றதான தொடர்களை பார்த்திருந்தால் - படித்திருந்தால் கம்பவாரிதி கருதும் மொழி, பண்பாட்டு சீரழிவுகள் எப்போது தொடங்கியது யாரால் தொடங்கப்பட்டது என்பது தெரியவந்திருக்கும். அத்துடன் அக்காலத்தில் நித்திகனகரெத்தினத்தினால் பாடப்பட்ட துள்ளலிசைப் (பொப்பிசை) பாடல்களைத்தன்னும் கம்பவாரிதி கேட்டிருப்பாரானால் இன்றைய புலம்பெயர்வையும் புலம்பெயாந்தோரையும் பற்றி இவ்வகை அழுக்கான கட்டுரையை அவர் எழுதியிருக்க மாட்டார். கடந்த கால்நு}ற்றாண்டுக் காலத்துக்குள் புலம்பெயர்ந்தோரின் தமிழ்மொழிப் பரிச்சயம் பற்றிக் கவலைகொண்டவருக்கு கொழும்பு ரமிலர் பற்றியோ கறுவாக்காட்டு ரமிலர் பற்றியோ அறியாமல் போனதும் ஆச்சரியம்தான் (அதற்குள் அவர் சங்கமித்து விட்டது காரணமாகலாம்). 1977ம் ஆண்டு இனக்கலவரத்தில் அடிபட்டு கொழும்பில் இருந்து லங்காராணி கப்பலில் பார்மேனியன் நாய்களுடன் வந்திறங்கிய கொழும்புவாழ் பெருங்குடி ரமிலர்களின் ரமில் கேட்டு ரமில் ராய் வடித்த கண்ணீர் கம்பவாரிதி கண்டதில்லைப் போலும்.
மலேசியப் புலப்பெயர்வினால் யாழ்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் சாட்சியத்தை காரைபெயர்ந்து கிடக்கும் நாற்சார் வீடுகளில் இன்றைக்கும் காணலாம். தெல்லிப்பளை, மல்லாகம், உடுவில், மானிப்பாய், வட்டுக்கோட்டை, உரும்பியராய் பகுதிகளில் அப்போது பணப்பவிசுடன் கட்டிய உருக்குலைந்து கிடக்கும் வீடுகள் அந்தக்கதையைச் சொல்லும். இலண்டன் சீமைக்குச் சென்றவர்கள் இலண்டன் மாப்பிளை தேடி விரதமிருந்த குமர்களை கைப்பிடித்து செல்வதற்கு வந்துசென்ற வேளைகளில் அவர்கள் காட்டிய பவிசுகள் கொஞ்சமா?. அவர்கள் வீட்டுக் கொண்டாட்டங்கள், அவர்கள் அணிந்து காட்டிய கையில்லாத பிளவுசுகள், தொப்புள் காட்ட கட்டிய சேலைகள், அலங்காரங்கள் கொஞ்சமா? அன்றைக்கு அந்தச் சாதாரணர்கள் வாய்பிளந்து, இந்த பணக்கொழுப்புகளின் ஆட்டங்களைக் கண்டு முகஞ்சுழித்து நின்றதெல்லாம் அவர் அறிந்ததில்லைப் போலும். அவ்வேளைகளில் கம்பவாரிதி கம்பனடிப்பொடி கணேசனின் செருப்பைத் தலையில் சுமந்து திரிவதில் சுகம் கண்டிருப்பார் (இராமனின் பாதரட்சையை பரதன் சுமந்தானல்லவா அந்த நினைப்பு). சிலவேளை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் காலில் சாஸ்டாங்கமாய் விழுந்து கம்பராமாயண கலாச்சாரத்தை அல்லது கந்தபுராணக் கலாச்சாரத்தைக் கற்றுக் கொண்டிருந்திருப்பார்.(1981ம் ஆண்டில் nஐயராஐ; மதுரையில் ஒரு அரசியல்வாதியின் காலில் விழுந்த அசிங்கம் பற்றி அப்போதைய தினபதி ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தின் கட்டுரையை படித்தவர்கள் ஞாபகம் வைத்திருக்கலாம்).
வாடிய பயிர் கண்டு வாடினேன் என்ற வள்ளலாரையும் விஞ்சிவிடும் தனது நோக்கத்தையும் வம்பவாரிசு கச்சிதமாகக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். 'எற்புத்துளைதொறும் லண்டன் குளிரில் பரமசிவனுக்கு பச்சைத்தண்ணீரில் அபிஷேகம் நடக்கிறது" என்ற கவலையையும், 'வெறும்மேலை, பனிக்குளிரும், பச்சைத்தண்ணீர்க் குளிரும் சேர்ந்து தாக்க நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார் பரமன்" என்;ற பச்சாதாபத்தையும் வெளியிட்டு குணம்குறியற்ற பரமனுக்கு குணம் வழங்கிய பாங்கில் சும்மா சொல்லக்கூடாது வள்ளலாரை ஓரங்கட்டி விட்டார் கம்பவாரிதி அடிகளார். சிறியோனாகிய எனது கருத்து என்னவெனில் கடையெழு வள்ளகளில் ஒருவராகிய பேகனையும் மிஞ்சக்கூடிய வாய்ப்பைக் கம்பவாரிதி தவறவிட்டுவிட்டார் என்பதே. பேகன் குளிரில் நடுங்கிய மயிலுக்குத் தன்போர்வையை வழங்கி இலக்கியத்தில் இடம் பெற்றான். கம்பவாரிதி குளிரில் நடுங்கிய பரமனைக் கல்லில் கண்டதும் தனது குளிராடையை வழங்கியிருப்பாரென்றால் இன்று தமிழ்கூறு நல்லுலகமும் பக்தகோடி உலகமும் கையேத்தித் தொழுதிருக்கும் தவறவிட்டுவிட்டார்.(கம்பவாரிதியும் குளிரின் குணத்தை அறிந்திருப்பார்) இதைவிட இன்னுமொரு பெருங்கவலையும் அவருக்கிருக்கின்றது. அதாவது இந்த புலம்பெயார்ந்த அற்பர்கள் அல்லது சுூத்திரர்கள் 'வேதம் வழங்காத நாடுகளுக்கு வரமாட்டேன் என்றிருந்த அவரையும் கட்டாயம் அங்கு கொண்டுபோய் படுத்தும் பாடு.. பாவம் சிவனார்! அவரைப்பார்க்க அழுகையாய் வந்ததது" என்று அங்கலாய்த்துள்ளார்(கம்பவாரிதிக்கு கோயில் கட்டி வழிபட வேண்டிய நிலையில் இருக்கின்றார் என்பதை இத்தால் அறிவிக்கின்றேன். ஏனெனில் கல்லில் பரமனை அதுவும் குளிரில் நடுங்கும் பரமனை கண்டவரென்றால் சும்மாவா). இதற்கு முன்னர் அதாவது சில நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் எந்தக் கம்பவாரிதியின் அனுமதிபெற்று இந்தோசீனா, தாய்லாந்து, வியட்னாம், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், மார்ட்னிக், ரியுூனியோன், குதலோப் போன்றதான நாடுகளுக்கு பரமன் சென்றாரோ தெரியவில்லை. அதெல்லாம் வேதம் வழங்கும் நாடுகள். 1980களுக்கு பின் புலம்பெயர்ந்து வதியும் நாடுகள்தான் வேதம் வழங்காநாடுகளா? கம்பவாரிதியாருக்குத்தான் வெளிச்சம். வம்பவாரிசின் அறிவுக்கொழுந்து எப்படியெல்லாம் ஒளிர்கின்றது பாருங்கள். ஒரு சமூகம் புலம்பெயர்ந்தால் அது புூமிப்பந்தின் எந்த முனையாக இருந்தாலும் கூடவே கடவுள், கல்லு, கத்தரிக்காய் எல்லாம்தான் புலம்பெயரும். இது மானிட இயல்பு. இலண்டனுக்கு ஆனைமுகத்தோனும், வள்ளிமணாளனும் புலம்பெயர்ந்ததும் கோயில் கொண்டெழுந்ததும் 1960களில் என இலண்டன் தலபுராணங்கள் கூறுகின்றன. புலம்பெயர்ந்த பக்த கோடிகளே உங்கள் கவனத்திற்கு: 'தங்கள் குளிர்தீர கோர்ட்டோடும் சுூட்டோடும் நின்று கொண்டு பக்கதர்கள் அபிஷேகம் செய்விக்கிறார்கள்" என்கிறார் nஐயராஐ;. இதனை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். அவருக்கான அபஷேகத்தை வழங்குங்கள்.
இவ்வளவு நேரமும் அவர் வழங்கிய ஒருகுடம் பாலில் கலந்திருந்த செறிவற்ற நஞ்சுத் துளிகளையே பிரித்துக்காட்டினேன். தற்போது உருகி உருகி அவர் சொல்ல விரும்பிய, பாலெனக் காட்ட முயற்சித்த செறிவு மிக்க நஞ்சுத்துளி எதுவென்றால் 'வரமுடிந்தாலும் இனி இங்கு வராதீர்கள்" என்பதுதான். அவர் கம்பவாரிசல்லவா அதனால் கம்பனில் கவிக்கருத்தில் 'வாரதே!வரவல்லாய்" என்னும் சொற்தொடருக்கு அவர் நஞ்சு தடவியுள்ளார். இங்கேதான் அவருடைய கபடம், கள்ளத்தனம், போலி ஆன்மீகம் எல்லாம் வெளிப்படுகின்றன. ஏனெனில் இவருடை இந்த உபதேசம் அரசியல் சார்ந்தது, ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டது.
1980களில் இலங்கைத் தீவைவிட்டு தமிழர்கள் பெருமளவில் வெளியேறத் தலைப்பட்டபோது இலங்கையின் குடியகல்வுத் திணைக்களம் இறுக்கங்களை தளர்த்தியிருந்தது. கண்டும் காணாமல் விட்டது. இது சிறிலங்கா பேரினவாத அரசின் தந்திர மிக்க அழிப்புத் திட்டத்தைச் சார்ந்தது. Nஐஆர் என்னும் குள்ளநரியின் அரசியல் திட்டமது. தமிழர்களின் வெளியேற்றம் தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் என அவர் நம்பினார். ஆனால் விளைவு எதிராகவே அமைந்தது. அது தமிழ்தேசியத்தை வீறுகொள்ளச் செய்தது பலமுறச் செய்தது. இது சிறிலங்கா பேரினவாதம் எதிர்பாராதது. இப்போது அவர்கள் நேரடியாகத் திரும்பி வருவது சிறிலங்கா பேரினவாதிகளுக்கும் பிடிக்கவில்லை. தென்கிழக்காசியாவின் சுூத்திரதாரியாக மாறவிரும்பும் இந்தியாவுக்கும் பிடிக்கவில்லை. ஈழத்தமிழர்களை அழிக்கும் நோக்குடன் சந்திரிகாவுக்கும்-வீரவன்சவுக்கும் கூட்டினை ஏற்படுத்திய சுூத்திரதாரி யார் என்பதை அரசியல் அரிச்சுவடி அறியாதவர்கூட கூறுவர்.
புலம்பெயாந்த ஒருவரால் அண்ணளவாக தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பத்துப்பேரை தன் தோள்களில் சுமக்க முடிந்தது. இது தாயகத்தின் போர் நெருக்கடியைப் பொருளாதார நெருக்கடியைத் தாங்கித்தரிக்க, முகங்கொள்ளச் செய்தது. புலம்பெயர்தோர் பெரும்பாலானோர் பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குக் குறையாமல் குளிரில் முள்ளெலும்பு தேய உழைத்தனர். தம் தேவைகளை குறைத்து வாயைவயிற்றைக் கட்டி பணத்தை சேமித்தனர். இவற்றால் புலம்பெயர் நாடுகளில் நம் சமூத்தினரிடையே நிகழும் இளவயது மரணங்களின் விழுக்காடு வம்பவாரிசுகள் அறியாதது. ஈழத்தமிழர்களுக்கான தனித்துவம் மிக்க ஊடகங்களை (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி), புதிய தொழில்சார் துறைகளை அவர்களால் நிறுவமுடிந்திருக்கின்றது.
இருமொழி மும்மொழி மட்டுமே தெரிந்திருந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு தற்போது ஆகக்குறைந்தது பத்து மொழிகள் தெரிந்திருக்கின்றது. சர்வதேச தரமிக்க அறிவுத்துறைகளில் எல்லாம் கால்பதிக்க முடிந்திருக்கின்றது. இந்தியாவின் தென்கோடியிலும் இலங்கை மலேசியாவிலும் முடங்கிக்கிடந்த தமிழ் சர்வதேச மொழியாக மாறி நிற்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழ்ப் பரப்பிற்கு சர்வதேச முகவரியைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இன்னும் இன்னும் நான் அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் தென்கிழக்காசியாவின் சுூத்திரதாரிகளுக்கும் சிறிலங்கா பேரினவாதிகளுக்கும் மட்டுந்தான் சங்கடத்தையும் சிக்கலையும் தோற்றுவிப்பது. இங்கேதான் கம்பவாரிதியின் அரசியல் அம்பலமாகின்றது. சுூத்திரதாரியினதும், பேரினவாதியினதும் அரசியல் ஆதங்கத்தையே கம்பவாரிதியும் வெளிப்படுத்தியுள்ளார். அயோத்தியில் இராமர் கோயில் கட்டவும், இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், அகண்ட பாரதத்தை அமைக்கவும் கூடியதான காவிமயமான அரசிற்கு சேவை செய்வது வம்பவாரிதி போன்றோரின் விருப்பதிற்குரியதாய் இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை.
கம்பவாரிதி எள்ளி நகையாடும் புலம்பெயர்ந்தோரின் சிறுமைத்தனங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டும் உரியவையல்ல. இவை உலகளாவியவை, சமூக உளவியல் சார்ந்தவை. முன்னைய உயர்குடியினர் ஆடிய ஆட்டங்களை வாய்பிளக்க பார்த்த சாதாரணர் தங்கள் வசதியின் போது ஒருதடவை அப்படிப் பாவனை செய்யத்தான் முயற்சிப்பார்கள். இப்பிரச்சனைகளை நேசத்துடன்தான் அணுகமுடியும், ஆலோசனை கூறமுடியும். அதைவிட தாயகத்தாருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையேயான முறுகல்கள், மனக்குமுறல்கள் தாய்பிள்ளைகளுக்கு இடையேயான கோபதாபங்கள் போன்றதே. நமது மொழியில் சொல்வார்கள் கோழி மிதித்து குஞ்சுகள் சாவதில்லை. அரசியல் மொழியில் கூறுவதானால் இவை அகமுரண்பாடே தவிர பகைமுரண்பாடல்ல. (கம்பவாரிதிக்கு இதுபற்றிய விளக்கம் குறைவாக இருக்கும். மேலதிக விளக்கத்திற்கு மல்லிகை ஐPவாவை அணுகலாம்)
புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், வேறுநாடுகளில் குடியேறியோர் தாயகம் திரும்புதல் அவர்களது ஆதார உரிமை சார்ந்தது. மனித உரிமை சார்ந்தது. இதனை மறுத்துக் கருத்துக் கூற ஆலோசனை வழங்க கம்பவாரிதி முயற்சித்திருப்பது நச்சுத்தனமானது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பாவத்திற்கு இணையானது.
இந்தப் பாவத்தில் இருந்து அவர் மீள வேண்டுமானால் என்னால் வழங்கக் கூடியதான ஆலோசனை இதுதான். தமிழில் முறைசார் கல்;வியையோ முறைசாராக் கல்வியையோ மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழையாயினும் (உங்களிடம் தமிழ் அறிவு இருக்குமாயின் ஏனெனில் தமிழ் மொழி என்பது கம்பராமாயணத்திற்கும் அப்பாற்பட்டது) கற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அதனைவிட போர்ச் சுூழலால் மனப்பிறழ்வுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்போருக்கு ஆன்மீக வழியில் நம்பிக்கை அளிக்க முடியுமா என யோசியுங்கள்;. அதையும் விட ஆகக்குறைந்தது முகாம்களில் தங்கியுள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு நேர உணவாவது வழங்க முடியுமாயின் வழங்குங்கள். உங்களுக்குப் போகுமிடத்தில் புண்ணிமாவது மிஞ்சும்.
'வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா" - கம்பன்

கி.பி.அரவிந்தன் - பிரான்ஸ்
நெறியாளர் அப்பால் தமிழ்
மipயைn@hழவஅயடை.உழஅ

(இக்கட்டுரை மல்லிகை, மற்றும் சுடர்ஒளி ஆகிய இதழ்களுக்கு அனுப்பப்படுகின்றது.
தேவை கருதி புலம்பெயர்ந்தோர் ஊடகங்களுக்கும் அனுப்படுகின்றது.)

Print this item

  தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க.
Posted by: tamilan - 02-28-2004, 05:28 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (11)

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்

http://www.geocities.com/tamiltribune/03/a101.html

Here is an excerpt

அன்பர்களே, தமிழ் நெஞ்சங்களே, உங்கள் பணிகளின் ஒரு சிறு பகுதியை தமிழ்நாட்டு விடுதலைக்காகப் பயன்படுத்துங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக விடுதலை குறித்த கருத்துக்களை உற்றார், சுற்றாருக்குத் தெரிவியுங்கள். "நான் தமிழ்நாட்டு விடுதலையை விரும்புகிறேன்" என்று கூட சொல்ல வேண்டியதில்லை. "ஒரு கட்டுரையில் தமிழ்நாட்டு விடுதலை வேண்டுமென்றும், அதற்கான காரணங்கள் இவையென்றும் படித்தேன். இது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாலே போதும். மேலும், உங்களுக்கு முடிந்த அளவில் தமிழக விடுதலைக்காக உழைக்கும் ஆட்களுக்கும், இயக்கங்களுக்கும் பொருளளவிலோ, செயலளவிலோ உதவி செய்யுங்கள். முடிந்தால் அவ்வியக்கங்களின் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். எப்படியாவது நாம் தமிழ்நாட்டு விடுதலை பெற்றேயாகவேண்டும். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

முயற்சி திருவினையாக்கும்!

தமிழக விடுதலை பெற்றே தீருவோம்!

Print this item

  செய்திகள்..
Posted by: Mathivathanan - 02-28-2004, 12:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

http://www.eezhanaadu.com/achieves/2702200...ews1.html#news4

http://www.dailymirror.lk/2004/02/27/news/3.asp

http://www.theacademic.org/#10778970580

இரண்டு செய்திகள்.. இதில் எது சரி..?

:?: :?: :?:

Print this item

  தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ?
Posted by: anpagam - 02-28-2004, 12:18 AM - Forum: புலம் - Replies (56)

<b>புலம்பெயர் தமிழருக்கு ஏற்ற வெளிநாடு எது ?</b>
20வது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன தமிழர் புலம் பெயர ஆனால்
அதில் சிலர் நாடு தெரிவு செய்து...
விசா கிடைத்தால் போதும் என்று..
சிலர் இவை கிடைத்த பின்னும் நாடுமாறினார்கள், மாறுகிறார்கள்.
சிலர் குடியுரிமை பெற்றபின்னும் பிள்ளைகளுக்காக
அல்லது எதிர்காலத்தை சிந்தித்து இப்போ அத்திவாரம் போடுகிறார்கள்...
ஆகவே...
புலம்பெயர் தமிழருக்கு ஏற்ற வெளிநாடு எது ?
வளர்சிக்கும் எமது உளைப்புக்கும்....
இப்ப மட்டும் அல்ல...
எமது வருங்காலங்களுக்கும்....
எமது அடுத்த சந்ததியினருக்கும்...
:?: Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item