Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 288 online users.
» 0 Member(s) | 285 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,286
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  Breaking News
Posted by: Mathan - 02-27-2004, 11:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2191)

<span style='color:#ff0000'>புதிய சர்ச்சை உருவாகிறது \"வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்


[size=14]இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு முற்படுவதை தங்களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
22.2.2004 திகதியிட்ட மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழரசுக் கட்சியின்

யாப்பு விதிகளுக்கு முரணாக செயலாளரான மாவை சேனாதிராசா நடந்திருப்பது குறித்து நீதிமன்றம் செல்லவுள்ளேன். எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வீட்டு சின்னத்தை பாவிக்க அனுமதிக்க வேண்டாம்.

திருமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரையின் மறைவையடுத்த கட்சியின் பொருளாளராக இருந்த நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். மாவை சேனாதிராசா செயலாளராக தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி தங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் எஸ்.சின்னத்துரை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியை போல இலங்கை தமிழரசுக் கட்சி விவகாரமும் நீதிமன்றம் செல்லுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இது குறித்து இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை. சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில் ஆவரங்கால் சின்னத்துரை லண்டனில் நீண்டகாலம் தங்கியிருப்பதால் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகிறார். அவரின் கலந்தாலோசனைப்படி நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய சக்தியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழர் ஒற்றுமையை விரும்பாத குலைக்க விரும்பும் சக்திகள் வீ.ஆனந்தசங்கரிக்கு நெருக்கமான ஆவரங்கால் சின்னத்துரையை பயன்படுத்தி இலங்கை தமிழரசுக்கு கட்சிக்கு சட்டச் சிக்கல்களை கொடுக்கலாமென்றே கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த பின்னர் ஆட்சேப நேரத்தில் ஈழமக்கள் ஜனநாயக்கக்கட்சி யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் க.சின்னத்துரை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து தமது ஆட்சேபத்தை தெரிவித்தது. 1981ஆம் ஆண்டில் முதலாம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தெரிவத்தாட்சி அலுவலர்கள் சமர்ப்பிக்கப்படும் நியமனப் பத்திரங்களை ஏற்பதற்கு உரியவிதி முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றதென்று கூறி ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன் நீதிமன்றம் சென்று இடைக்கால தடையுத்தரவு வழங்குமாறு விண்ணப்பிக்கப்படுமா? அல்லது தேர்தல் முடிந்த பின்னர் இயங்குவதற்கு தலையிடி கொடுக்க முற்படுவார்களா என்பதே அரசியல் அரங்கில் தற்போது எழுந்துள்ள வினாவாகும்.

தமிழர்களின் ஒற்றுமைகருதி விவகாரத்தை இத்தோடு விடாமல் இலங்கை தமிழரசுக்கட்சியும் நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டால் தமிழ் மக்கள் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாமென தமிழர் விடுதலைக்கூட்டணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தமிழ் அரசியலிலும் வக்கிரத்தன்மை வளருமானால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே என்றும் அவர் தெரிவித்தார்.</span>

நன்றி - வீரகேசரி

Print this item

  சொற்சிலம்பம்
Posted by: வழுதி - 02-27-2004, 10:59 PM - Forum: தமிழும் நயமும் - Replies (16)

[size=18]சொற்சிலம்பம்

படித்துச் சுவைத்தது

"பேரவாவொடு மாசுணம் பேரவே
பேரவாவொடு மாசுணம் பேரவே
ஆரவாரத்தினோடு மருவியே
ஆரவாரத்தினோடு மருவியே "

இது ஒரு சங்ககாலப் பாடல். இங்கே முதலிரண்டு வரிகளும் ஒரே சொற்றொடராய் அமைந்துள்ளன. ஆனால் இரு வேறுபட்ட கருத்துக்களைத் தருவன. (அதாவது சிலேடை).
அவ்வாறே பின்னிரண்டு வரிகளும்....

கருத்துக்களை சற்று அலசுவோமா???

வழுதி/-

Print this item

  முடிந்தால் சொல்லுங்கள்.
Posted by: tamilini - 02-27-2004, 09:17 PM - Forum: நகைச்சுவை - Replies (53)

வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?

வீர பாண்டிய கட்டப்பெம்மன் பேசியவீரவசனத்தை சென்னை தமிழில் சற்று கூறமுடியுமா நீண்ட நாள் ஆசை.

Print this item

  உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் இந்தியர்கள்....!
Posted by: kuruvikal - 02-27-2004, 06:25 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

உலக பணக்காரர் பட்டியலில் 'விப்ரோ' பிரேம்ஜி உள்பட 9 இந்தியர்கள்


போர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர் பட்டியிலில் விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்ட 9 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வருடந்தோறும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு உலகின் 587 உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், வழக்கம்போல் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 46.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்தியர்களான அஸிம் பிரேம்ஜி 58வது இடத்தையும் (6.7 பில்லியன் டாலர்கள்), இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்டீல் ஆலைகள் அதிபர் லட்சுமி மிட்டல் 62வது இடத்தையும் (6.2 பில்லியன் டாலர்கள்), ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி சகோதரர்கள் 65வது இடத்தையும் (6 பில்லியன் டாலர்கள்), பிர்லா நிறுவன அதிபர் குமாரமங்கலம் பிர்லா 147வது இடத்தையும் (3.2 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.

சுனில் மிட்டல் 186வது இடத்தையும் (2.7 பில்லியன் டாலர்கள்), டாடா நிறுவனத்தின் பெரும் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பலோன்ஜி மிஸ்ட்ரி 231வது இடத்தையும் (2.3 பில்லியன் டாலர்கள்), கோத்ரெஜ் குடும்பத்தினர் 277வது இடத்தையும் (2 பில்லியன் டாலர்கள்),

எச்.சி.எல். சாப்ட்வேர் நிறுவன அதிபரும் தமிழருமான ஷிவ் நாடார் 310வது இடத்தையும் (1.8 பில்லியன் டாலர்கள்), அனில் அகர்வால் 552வது இடத்தையும் (1 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு 64 பேர் உலக பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.

இவர்களில் ஜே.கே.ரோலிங்கும் ஒருவராவார். ஹாரிபாட்டர் நாவல்களினால் உலகமெல்லாம் சிறுவர்களின் இதயங்களில் இடம் பிடித்த இவர், அந்த நாவல்கள் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தின் மூலம் உலக பணக்காரர் வரிசையிலும் இடம் பிடித்து விட்டார். இவருக்கு 552வது இடம்.


Thatstamil.com.....!

Print this item

  சுவை
Posted by: sivajini - 02-27-2004, 02:52 PM - Forum: அறிமுகம் - Replies (4)

உன்னை எண்ணி உள்ளத்தால் உருகுகின்றேன்
உன் இன்ப வார்தைகள் என்னை வாட்டுகின்றதே
எப்போது நான் வேண்டுமோ? அப்போது
பூங்காற்றை து}துவிடு என்று கூறி விட்டாய்
தென்றலை து}து விட்டேன் தெவிட்டாத

என்னவனை என்னிடம் அழைத்துவர
து}து வந்ததென்றலை புயல் தீண்டி விட்டதா?
அந்தி மாலை நேரத்தில் மஞ்சல் வெய்யிலில்
மனதுகள் மகிழ நான் மட்டும்
உன் நினைவில் வாடுகின்றேன்
என் மனம் உன்னை நாடுவது
;
உனக்கு புரியவில்லையா?
என் எண்ணங்களை எல்லாம்
கவிவடித்துவிட விரைந்துவந்துவிடு.
நான் முக்குளித்து எடுத்த முத்தல்ல நீ
என்கண்களில் கனிந்து வளர்த முத்தல்லவா நீ
ஏணோ வாழப்பிறந்தவள் அல்ல நான்
உன்னுடன் வழப்பிறந்தவள் நான்.
ஊருக்காக ஏற்காதே என்னை
உள்ளத்தில் ஏற்ருக்கொள்
என் வாழ்வில் ஏற்றாமல் எரிந்துகொண்டிருக்கும்
ßரகாச தீபம் நீ அல்லவா என்னவனே.....................

Print this item

  தமிழரின் அடையாளத்துவம்
Posted by: வழுதி - 02-27-2004, 07:55 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (38)

<span style='font-size:25pt;line-height:100%'>தமிழரின் அடையாளத்துவம் (Identity)</span>

எந்தவொரு சமூகத்திற்கும் தனித்துவம் அல்லது அடையாளத்துவம் அவசியமானதொன்று. இன்று புலம்பெயர் வாழ்வியலில் எமது தனித்துவம் எது என்பது பல்வேறுபட்ட வாதங்களுக்கு உட்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து கலாச்சாரம், மூலைக்கொரு கோவில் என்று சிலர் தங்களின் படாடோபங்களை பிறர்க்கு வெளிக்காட்டுவதாய் அமைகின்ற திருவிழாக்கள், ஆங்காங்கே "ஒன்றுகூடல்" என்ற போர்வையில் நிகழ்த்தப்படுகின்ற மேலைத்தேய பாணியிலான களியாட்ட விழாக்கள்..... இப்படி இன்னும் பல உண்டு. ( இன்னும் எழுதினால் அவை மேலும் சர்ச்சைகளுக்கே வித்திட்டுவிடும் என்பதில் ஐயமில்லை) இவையெல்லாம் இந்த தனித்துவத்தில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதுவும் ஒரு கேள்விக்குறியே!

ஆகவே எது நமது தனித்துவம்? அது பற்றிய வரையறை என்ன? என்பவை அலசி ஆராயப்பட வேண்டிய விடயமேயாம். எனவே தங்களின் ஆக்கபூர்வ கருத்துக்களை முன்வையுங்கள்......

நன்றி.

வழுதி/-

Print this item

  லண்டனில் 26.02.2004ல்
Posted by: Rajan - 02-27-2004, 03:55 AM - Forum: புலம் - Replies (5)

லண்டனில் 26.02.2004ல் Confusedhock: இருந்து பிரயா உரிமை பெறுவோர் லண்டன் சட்டற்கள் தெரிந்துயி;ருக்க வேண்டும் சத்தியபிரமாணம் எடுக்கவேண்டும் Confusedhock: :roll: :oops: :evil: :? :twisted: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  இலங்கையின் மாபெரும் வர்த்தக மையம்
Posted by: vasisutha - 02-27-2004, 02:16 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

இலங்கையின் மாபெரும் வர்த்தக மையம் ; சென்னை ஸ்பென்சரில் துவக்கம்
சென்னை: இந்தியாவில் தனது நாட்டு தயாரிப்புகளை அதிக அளவில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், முதன் முதலாக சென்னை நகரில் பிரபலமான "ஸ்பென்சர் பிளாசா' வணிக வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாபெரும் "வர்த்தக மையத்தை' இலங்கை அரசு நேற்று துவக்கியது. இந்த வர்த்தக மையத்தில் இலங்கை நாட்டின் 13 முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வர்த்தக மையத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் "இலங்கை வர்த்தக மையத்தை' நிறுவுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாஇலங்கை இடையே கடந்த 98ம் ஆண்டு எளிதான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவுகள் படிப்படியாக வலுவடைந்து வருகின்றன. இரு நாடுகளும் ஏற்றுமதியை அதிகரித்து வருகின்றன. இரு நாட்டு நல்லுறவுகளுக்கு அடையாளமாக ஏற்கெனவே இலங்கையில் இந்திய நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இலங்கை நிறுவனங்களின் நேரடி வர்த்தக நடவடிக்கைகள் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் முதன் முதலாக சென்னை நகரில் மாபெரும் "இலங்கை வர்த்தக மையத்தை' நிறுவ அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி சென்னை நகரில் பிரபலமான "ஸ்பென்சர் பிளாசா' வணிக வளாகத்தின் மூன்றாவது பிரிவு கட்டடத்தில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் "இலங்கை வர்த்தக மையம்' அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. தமிழக கல்வித்துறை அமைச்சர் எஸ். செம்மலை, இலங்கை வர்த்தக மையத்தை திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் செம்மலை பேசுகையில், "இந்த வர்த்தக மையம் துவக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுப்படும். வர்த்தக நடவடிக்கைகளும் மேம்படும்,' என்று குறிப்பிட்டார்.

இலங்கை அரசின் ஏற்றுமதி விரிவாக்க அமைப்பின் தலைவர் ஆர்.சிவரத்னம் வரவேற்று பேசியதாவது:

இந்தியாஇலங்கை இடையே எளிதான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவுகள் வலுவடைந்துள்ளன. இந்தியாவிற்கான இலங்கை ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 99ம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 3.32 பில்லியனாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு 23.28 பில்லியனாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் இலங்கையின் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இலங்கை ஏர்லைன்ஸ் வர்த்தக பிரிவு உயர் அதிகாரி ஜெயசீலன் பேசுகையில், "சென்னைகொழும்பு இடையே 15 விமானங்களை நாங்கள் இயக்கி வருகிறோம். வாரம் முழுவதும் சென்னைகொழும்பு இடையே விமான போக்குவரத்து வசதி இருக்கிறது,' என்று குறிப்பிட்டார். விழாவில் இலங்கைக்கான இந்தியத் துõதர் மங்கள மூன்சிங்கே, தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துõதர் சுமித் நகந்தலா, இலங்கை தொழில்துறை செயலாளர் ரஞ்சித் பெர்னான்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர். இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை வர்த்தக மையத்தில் கிடைக்கும் பொருட்கள்!

முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் அந்நாட்டின் 13 முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. வர்த்தக மையத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து கடைகளையும் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வெளியேறலாம். அனைத்துக் கடைகளும் பிரம்மாண்டமாக வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அமைந்துள்ளன.

"டீத்துõள், பிஸ்கெட், பொம்மைகள், பரிசுப் பொருட்கள், அலங்கார நகைகள், உடல் அழகு அலங்கார பொருட்கள், ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள், ரொட்டி வகைகள், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுப் பொருட்கள், கல்விக்கு பயன்படும் உப பொருட்கள், மரப்பொருட்கள், காலணிகள், தரையில் பதிக்கும் டைல்ஸ் வகைகள், பாய்கள், பற்பசை, மருந்து தைலம் போன்ற பொருட்கள் இங்கு கிடைக்கும். இந்த பொருட்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனைக்கு கிடைக்கும். நேற்று துவக்க நாள் என்பதால் விற்பனை உடனடியாக துவங்கவில்லை. இன்று முதல் விற்பனை நடைபெறும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

விலையை பொறுத்தவரை இலங்கையில் உள்ள விலையை விட இங்கு குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இன்னும் விலையை நிர்ணயம் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

வியக்க வைத்த இலங்கை கலைஞர்கள்!

* விழாவையொட்டி இலங்கை கலைஞர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா சிறப்பு அழைப்பாளர்கள் வணிக வளாகத்திற்குள் வரும்போது, வாயிலில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு வரும் வரை நாட்டியம் ஆடியபடி வரவேற்று அழைத்து வந்தனர்.

* விழா ஆரம்பித்ததும் ஆறு இளம்பெண்கள் கையில் அகல் விளக்குகளை ஏந்தியபடி நளினமான நடையுடன் மேடைக்கு வந்தனர். பின்னர் ஆறுபேரும் கையில் அகல் விளக்குகளை ஏந்தியவாறே நடனம் ஆடினர். இதேபோல் மேலும் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

* விருந்தினர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

dinakaran.com

Print this item

  எப்படி வாழ வேண்டும்?
Posted by: vasisutha - 02-26-2004, 11:26 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (3)

மனிதர்கள் பிறக்கின்றனர்; வாழ்கின்றனர்; கடைசியில் இறந்து போகின்றனர். இந்த நியதி மனிதர்களுக்கு மட்டுமல்ல; எல்லா ஜீவன்களுக்கும் பொது. ஆனால், மனிதனைப் பற்றிதான் எல்லாரும் பேசுவர். மனிதன் வாழ வேண்டியது தான். அவனவன் விதிப்படி வாழ்ந்து மரணமடைய வேண்டியது தான். ஆனால், எப்படி வாழ வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
ஒருவன் உயிரோடு இருக்கும்போது அவரை பலர் கொண்டாடுவதுண்டு. ஏதாவது லாபம் கிடைத்தாலும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவரை கொண்டாடி புகழ்பாடுவதுண்டு. ஓ! அவரா? அவர் சிறந்த பரோபகாரியாச்சே என்பார் பலன் பெற்றவர். ஓ! அவனா! மகா கஞ்சனாச்சே! காலணா தர்மம் செய்ய மாட்டானே! என்பார் பலன் பெறாதவர்.

ஒரு தாசி இருந்தாள். அவள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் ஒரு சாமியார்.


தாசி வீட்டு வழியாக ஒரு பிணத்தை தூக்கிச் சென்றதை பார்த்தாள் அந்த தாசி. உடனே, வேலைக்காரியைக் கூப்பிட்டு, அதோ ஒரு பிணம் போகிறது. அதன் பின்னாலேயே போய், இறந்தவன் சொர்க்கத்துக்கு போகிறவனா, நகரத்துக்குப் போகிறவனா என்று பார்த்து விட்டு வா என்றாள்.

திண்ணையில் உட்கார்ந்திருந்த சாமியாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் தாசியைக் கூப்பிட்டு, ஏம்மா! ஒருவன் இறந்து விட்டால், அவன் சொர்க்கத்துக்குப் போவா னா, நரகத்துக்குப் போவானா என்று எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? என்று கேட்டார். அதற்கு ஏதாவது மிஷின் அல்லது மீட்டர் வைத்திருக்கிறாயா என் றார்.

என்னாசாமி! இது கூட உனக்குத் தெரியாதா? பிணத்தின் பின்னால் போகிறவர்கள், மனு ஷன் ரொம்ப நல்லவன். எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறான். அநியாயமாகப் போய் விட்டானே என்று பரிதாபப்பட்டால், இறந்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என்று பொருள்.

அப்படி இல்லாமல், படுபாவி, தொலைந்தான். இவன் எவ்வளவு அக்ரமங்கள் செய்திருக்கிறான். எவ்வளவு குடும்பங்களை மோசம் செய்திருக்கிறான் என்று பேசிக் கொண்டு போனால், இறந்த வன் நரகத்துக்குப் போவான் என்று சொல்லலாம். இதுகூட தெரியாதா சாமி உங்க ளுக்கு என்றாள் அவள்.

சாமியாராக இருந்தும்கூட அந்த தாசிக்கு உள்ள அறிவு நமக்கில்லையே என்று வருத்தப்பட்டார் சாமியார். அதாவது மனிதன் இறந்தபிறகு அவனைப்பற்றி மற்றவர்கள் உயர்வாகப் பேச வேண்டும். அப்படி வாழ வேண் டும். சுயநலம் பிடித்து தனக்காகவே வாழக்கூடாது!

thaks
dinakaran varamalar

Print this item

  என்னலா பேசுறீங்க?
Posted by: Mathan - 02-26-2004, 10:45 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (17)

நான் ஜெர்மனிக்கு வந்த புதிதில் இந்திய தமிழர்களைச் சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்க அவர்கள் தவறியதில்லை. "மலேசியத் தமிழர்கள் பேசும் போது இறுதில் 'லா' சேர்த்துக் கொள்வார்களாமே. அது ஏன்?" என்பது தான் அது.
இப்படிப்பட்ட இக்கட்டான மொழி சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் விளக்கமளிப்பது கடமையாகிவிடுகின்றது. ஆனாலும் என்னோடு பேசுபவர்கள் நான் இந்த சிறப்பு இணைப்பை பயன்படுத்துவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பர். அதற்குக் காரணம் இருக்கின்றது.

மலாய் மொழியில் 'லா' என்ற சொல்லின் பயன்பாடு மிக முக்கியமானது. வாக்கியம் முடியும் போது இது பயன்படுத்தப்படுகின்றது. கூறுகின்ற ஒரு வாக்கியத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காகவும் பேசுகின்றவர்களுக்கிடையே அன்னியோன்னியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த இணைப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஒரு மலாய் மொழி சொல் ஒன்று:


'Cepatlah' - cepat என்பது விரைவாக என்று பொருள்படும் . அதோடு lah சேரும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டு உணர்வுகளும் சேர்ந்து வெளிப்படுவதாக அமைந்து விடுகின்றது.

மலேசியத் தமிழர்களின் உரையாடல்களில் இந்த சேர்க்கை சுவாரசியமான ஒன்று. சாதாரணமாகப் பேசும் போது எப்படி இந்த சொல் தமிழில் சேர்ந்து கொள்கின்றது என்று பாருங்கள்.


உதாரணம்:
1. என்னலா செய்றீங்க?
2. வாங்கலா.. போகலாம்!
3. சரிலா.. நானே முடிச்சிடறேன்.

இப்படி சர்வ சாதாரணமாக 'லா' வாக்கியங்களில் சேர்ந்து கொள்வதுதான் நடைமுறை உண்மை.

நான் தமிழ் மொழியை கல்லூரியில் தனி ஒரு பாடமாக எடுத்துப் பயின்றதால் மிகக் கவனமாக 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடுவேன். (ஆனாலும் அவ்வப்போது பிற மொழி கலப்பு சேர்ந்து விடுவதை முழுதாகத் தவிர்க்க முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்) இப்போதெல்லாம் மலேசியா திரும்பும் போது புதிதாக சந்திக்கும் தமிழ் நண்பர்களிடம் பேசும் போது என் பேச்சுத் தமிழை வைத்து நான் தமிழகத்திலேயிருந்து வந்திருக்கின்றேனா அல்லது இலங்கைத் தமிழரா என்று என்னைக் கேட்ட சம்பவங்கள் பல உண்டு.
என்னைப்போல 'மிகக் கவனமாக' பேசுகின்ற தமிழர்கள் பலர் மலேசியாவில் இருக்கின்றனர். ஆக, கொஞ்சம் கவனம் வைத்து பேச ஆரம்பித்தால் 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் தனித் தன்மையோடு வருகின்ற 'லா' சேர்ந்த தமிழுக்கும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது!.

நன்றி சுபா

Print this item