Yarl Forum
உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் இந்தியர்கள்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் இந்தியர்கள்....! (/showthread.php?tid=7415)



உலகின் பெரும் பணக்கார - kuruvikal - 02-27-2004

உலக பணக்காரர் பட்டியலில் 'விப்ரோ' பிரேம்ஜி உள்பட 9 இந்தியர்கள்


போர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர் பட்டியிலில் விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்ட 9 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வருடந்தோறும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு உலகின் 587 உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், வழக்கம்போல் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 46.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்தியர்களான அஸிம் பிரேம்ஜி 58வது இடத்தையும் (6.7 பில்லியன் டாலர்கள்), இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்டீல் ஆலைகள் அதிபர் லட்சுமி மிட்டல் 62வது இடத்தையும் (6.2 பில்லியன் டாலர்கள்), ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி சகோதரர்கள் 65வது இடத்தையும் (6 பில்லியன் டாலர்கள்), பிர்லா நிறுவன அதிபர் குமாரமங்கலம் பிர்லா 147வது இடத்தையும் (3.2 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.

சுனில் மிட்டல் 186வது இடத்தையும் (2.7 பில்லியன் டாலர்கள்), டாடா நிறுவனத்தின் பெரும் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பலோன்ஜி மிஸ்ட்ரி 231வது இடத்தையும் (2.3 பில்லியன் டாலர்கள்), கோத்ரெஜ் குடும்பத்தினர் 277வது இடத்தையும் (2 பில்லியன் டாலர்கள்),

எச்.சி.எல். சாப்ட்வேர் நிறுவன அதிபரும் தமிழருமான ஷிவ் நாடார் 310வது இடத்தையும் (1.8 பில்லியன் டாலர்கள்), அனில் அகர்வால் 552வது இடத்தையும் (1 பில்லியன் டாலர்கள்) பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு 64 பேர் உலக பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.

இவர்களில் ஜே.கே.ரோலிங்கும் ஒருவராவார். ஹாரிபாட்டர் நாவல்களினால் உலகமெல்லாம் சிறுவர்களின் இதயங்களில் இடம் பிடித்த இவர், அந்த நாவல்கள் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தின் மூலம் உலக பணக்காரர் வரிசையிலும் இடம் பிடித்து விட்டார். இவருக்கு 552வது இடம்.


Thatstamil.com.....!