Yarl Forum
சொற்சிலம்பம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: சொற்சிலம்பம் (/showthread.php?tid=7413)



சொற்சிலம்பம் - வழுதி - 02-27-2004

[size=18]சொற்சிலம்பம்

படித்துச் சுவைத்தது

"பேரவாவொடு மாசுணம் பேரவே
பேரவாவொடு மாசுணம் பேரவே
ஆரவாரத்தினோடு மருவியே
ஆரவாரத்தினோடு மருவியே "

இது ஒரு சங்ககாலப் பாடல். இங்கே முதலிரண்டு வரிகளும் ஒரே சொற்றொடராய் அமைந்துள்ளன. ஆனால் இரு வேறுபட்ட கருத்துக்களைத் தருவன. (அதாவது சிலேடை).
அவ்வாறே பின்னிரண்டு வரிகளும்....

கருத்துக்களை சற்று அலசுவோமா???

வழுதி/-


- Mathan - 02-28-2004

வழுதி,

இந்த கருத்துக்கு பதில் சொல்லுற அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு இல்லை.

உங்களுக்கு நேரம் கிடைச்சுதுன்னா "தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலையா?" அப்பிடிங்கிற தலைப்புல ஒரு கருத்து இருக்கு அதை படிச்சு பாருங்க.

அதை பாக்கிறதுக்கு இந்த லிங்கில கிளிக் பண்ணுங்க.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1000

அந்த கட்டுரையில இருந்து சில வரி ...

<b>இதற்கெல்லாம் நடுவில் தமிழ் படிக்க விரும்புகிறேன் என்று சொல்லி யாரோ ஒரு இண்டாலஜிஸ்ட் ஆஸ்திரியாவிலிருந்து கேட்டிருப்பார். அதற்கு பதில் சொல்லவே ஆளிருக்காது. ஆனால், வடக்கத்தியான் முட்டாள், தெற்கத்தியான் புத்திசாலி, பெங்காலிகள் சூப்பர் ரேஸாக்கும் என்பது போன்ற தலைப்புகளில் தீவிர விவாதங்கள் நடக்கும். </b>


- vasisutha - 02-29-2004

இதோடா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-29-2004

உண்மை தானே வசி?


Re: சொற்சிலம்பம் - vasisutha - 02-29-2004

வழுதி Wrote:[size=18]சொற்சிலம்பம்

படித்துச் சுவைத்தது

"பேரவாவொடு மாசுணம் பேரவே
பேரவாவொடு மாசுணம் பேரவே
ஆரவாரத்தினோடு மருவியே
ஆரவாரத்தினோடு மருவியே "

இது ஒரு சங்ககாலப் பாடல். இங்கே முதலிரண்டு வரிகளும் ஒரே சொற்றொடராய் அமைந்துள்ளன. ஆனால் இரு வேறுபட்ட கருத்துக்களைத் தருவன. (அதாவது சிலேடை).
அவ்வாறே பின்னிரண்டு வரிகளும்....

கருத்துக்களை சற்று அலசுவோமா???

வழுதி/-
முடியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள் வழுதி. ஆவலாய் காத்திருக்கிறேன்.


- வழுதி - 02-29-2004

மன்னிக்கவேண்டும் BBC உங்களின் பதிலில் தொனிக்கின்ற கருத்தின்படி இதை நான் எழுதவில்லை. எப்போதும் சமூகம், சமுதாயப் பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருக்காமல் சற்றேனும் தமிழறிவு கொண்டவர்களோடு கருத்தாடலாம் என்ற நோக்கத்திலே தான் இக்கருத்தை முன்வைத்தேன். யாராவது தமிழறிஞர்களும் இந்த யாழ் களத்தில் இருக்காலாம் என்பது என் ஊகம்.

இன்று நான் இப்பாடலுக்கான கருத்தைச் சொல்லலாம் என வந்தேன். உங்கள் குறிப்பை பார்த்த பின்னர் அதற்கு அவசியம் இல்லை என்று தெரிகின்றது.
நன்றி.


- Mathan - 02-29-2004

வழுதி Wrote:மன்னிக்கவேண்டும் BBC உங்களின் பதிலில் தொனிக்கின்ற கருத்தின்படி இதை நான் எழுதவில்லை. எப்போதும் சமூகம், சமுதாயப் பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருக்காமல் சற்றேனும் தமிழறிவு கொண்டவர்களோடு கருத்தாடலாம் என்ற நோக்கத்திலே தான் இக்கருத்தை முன்வைத்தேன். யாராவது தமிழறிஞர்களும் இந்த யாழ் களத்தில் இருக்காலாம் என்பது என் ஊகம்.

இன்று நான் இப்பாடலுக்கான கருத்தைச் சொல்லலாம் என வந்தேன். உங்கள் குறிப்பை பார்த்த பின்னர் அதற்கு அவசியம் இல்லை என்று தெரிகின்றது.
நன்றி.

நீங்க எப்படி புரிந்துகொண்டீர்கள் அப்பிடின்னு எனக்கு தெரியலை. நான் சொல்லவந்தது பொதுவா தமிழறிவு மாதிரியான கருத்துக்கு யாரும் பதில் சொல்லுவதில்லை என்றுதான். எனக்கு தெரியந்தா நான் எந்த கேள்விக்கும் பதில் (என் கருத்தை) கூற தயங்கிறதில்லை. இந்த களத்தில நிறைய தமிழறிஞர்கள் இருக்காங்க. நீங்க தொடர்ந்து எழுதுங்க. என் கருத்து சொந்த கருத்து தான். களத்தோட கருத்து இல்லை. நீங்க பாட்டுக்கு கருத்தை எழுதினா எல்லாரும் தெரிஞ்சுப்போம்.

மனம் தளராதீங்க. பொதுவா இதுமாதிரியான கருத்துக்கு ஆதரவு குறையவுங்கிறதுதான் என்னோட வருத்தமும்.

அன்பகம் கூட ஒரு கருத்து புலம் பகுதில எழுதினாசு. அதற்கு பதில் கருத்து ரொம்ப குறைவு. என்ன செய்ய?


- வழுதி - 02-29-2004

Quote:முடியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள் வழுதி. ஆவலாய் காத்திருக்கிறேன்.

பேரவாவொடு மாசுணம் பேர (பெயர), வே பேர,
ஆவொடு, மா சுணம் பேரவே

ஆர (ம்) ஆரத்தினோடு மருவியே
ஆரவாரத்தின் ஓடும் அருவியே.

பேரவாவொடு(பெயர) -அசைய,
(அவற்றை உண்ணும் நோக்கில்), ஆவொடு - அசைந்து செல்லும்படியாகவும்,

ஆர (ம்) ஆரத்தினோடு மருவியே - முத்தானது முத்தோடு உரசுவதனால் ஒலிக்கின்ற,
ஆரவாரத்தின்- அருவியானது ஓடிக்கொண்டிருக்கின்றது.

பாம்புகள் மிகவும் விருப்பத்துடன் அசைந்து ஊர்ந்து திரிகின்ற மூங்கில்கள் ஆற்றிலே மிதந்து செல்ல அதனை உண்ணும் நோக்கிலே பசுக்கள் ஆற்றங்கரையூடே ஓடிச் செல்ல அதனால் எழுந்த பெரும்புழுதிக் கூட்டமும் தொடர்ந்து செல்லும்படியான ஆரவாரத்துடனும் முத்துக்கள் ஒன்றோடொன்று மோதுவதான ஒலியுடனும் அந்த ஆறானது ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதுதான் அப்பாடலின் கருத்து.

நண்பர் BBC மன்னித்தருள்க..

நன்றி.

வழுதி/-


- vasisutha - 02-29-2004

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 02-29-2004

நான் மன்னிப்பதற்கு நீங்க ஒரு தவறும் செய்யலை.

பாட்டோட கருத்துக்கு நன்றி வழுதி. தமிழ் இலக்கியத்தில காதல் ரசம் இருக்கிற பாட்டு ஏதும் விளக்கத்தோட சொல்லமுடியுமா?


- nalayiny - 02-29-2004

இதில் உள்ள மரபுக்கவிதைகளை ரசித்து மகிழுங்களன். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

http://koodal.com/poem/poem_search.asp?id=9&cat=3


- Mathan - 03-01-2004

நன்றி நளாயினி


- Eelavan - 03-01-2004

அன்பின் வழுதியாரே
நானும் அகராதியைப் புரட்டியது தான் மிச்சம் பாதி தவறு பாதி சரியாகத்தான் ஊகிக்க முடிந்தது தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்

மனம் தளர்ந்து போகாமல் தொடருங்கள் இப்படியான சிலம்ப விளையாட்டுக்களை முடியாவிட்டாலும் முயன்றுதான் பார்ப்போமே


- phozhil - 03-03-2004

களம் கண்டு நெடுநாளாயிற்று...மீண்டும் நோக்குகையில் வழுதியாரின் சொற்சிலம்ப கருத்தாடல் கண்ணுற்று கரையிலா களிப்பு..
ஐயன்மீர் தொடரட்டும் உமது தீந்தமிழ் பணி. ஐயை தன் கிளவிகளில் இன்னும் எத்தனை கோடி இன்பங்களை இடுக்கியிருக்கிறாளோ? பேறுபெற அள்ளி அருள்வீர் அங்கையில் அருவியாய்...


- vasisutha - 03-04-2004

[quote=phozhil]களம் கண்டு நெடுநாளாயிற்று...மீண்டும் நோக்குகையில் வழுதியாரின் சொற்சிலம்ப கருத்தாடல் கண்ணுற்று கரையிலா களிப்பு..
ஐயன்மீர் தொடரட்டும் உமது தீந்தமிழ் பணி. ஐயை தன் கிளவிகளில் இன்னும் எத்தனை கோடி இன்பங்களை இடுக்கியிருக்கிறாளோ? பேறுபெற அள்ளி அருள்வீர் அங்கையில் அருவியாய்...

ஐயா குறிப்பிட்ட பகுதியை எனக்குப் புரியும் படி சொல்வீர்களா? :?


- phozhil - 03-04-2004

vasisutha Wrote:[quote=phozhil]களம் கண்டு நெடுநாளாயிற்று...மீண்டும் நோக்குகையில் வழுதியாரின் சொற்சிலம்ப கருத்தாடல் கண்ணுற்று கரையிலா களிப்பு..
ஐயன்மீர் தொடரட்டும் உமது தீந்தமிழ் பணி. ஐயை தன் கிளவிகளில் இன்னும் எத்தனை கோடி இன்பங்களை இடுக்கியிருக்கிறாளோ? பேறுபெற அள்ளி அருள்வீர் அங்கையில் அருவியாய்...

ஐயா குறிப்பிட்ட பகுதியை எனக்குப் புரியும் படி சொல்வீர்களா? :?
------------------------------------------------
ஐயை - அன்னை (தமிழன்னை),
கிளவி - சொல்,
அங்கை -உள்ளங்கை.
தமிழ் செய்யுள்களில் உள்ள அளப்பறிய சிலம்பச்சித்துகளை எனது சிந்தை குளிரவேண்டி அருவியாய் உங்கள் கையால் என் கையில் தாரும் என்பதே அவ்விண்ணப்பம்.


- phozhil - 03-04-2004

nalayiny Wrote:இதில் உள்ள மரபுக்கவிதைகளை ரசித்து மகிழுங்களன். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
http://koodal.com/poem/poem_search.asp?id=9&cat=3
நளாயினி அவர்களே!
கூடல் -தளம் கண்டேன்,மிக்க மகிழ்வு,தகவலுக்கு நன்றி.