Yarl Forum
என்னலா பேசுறீங்க? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: என்னலா பேசுறீங்க? (/showthread.php?tid=7421)



என்னலா பேசுறீங்க? - Mathan - 02-26-2004

நான் ஜெர்மனிக்கு வந்த புதிதில் இந்திய தமிழர்களைச் சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்க அவர்கள் தவறியதில்லை. "மலேசியத் தமிழர்கள் பேசும் போது இறுதில் 'லா' சேர்த்துக் கொள்வார்களாமே. அது ஏன்?" என்பது தான் அது.
இப்படிப்பட்ட இக்கட்டான மொழி சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் விளக்கமளிப்பது கடமையாகிவிடுகின்றது. ஆனாலும் என்னோடு பேசுபவர்கள் நான் இந்த சிறப்பு இணைப்பை பயன்படுத்துவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பர். அதற்குக் காரணம் இருக்கின்றது.

மலாய் மொழியில் 'லா' என்ற சொல்லின் பயன்பாடு மிக முக்கியமானது. வாக்கியம் முடியும் போது இது பயன்படுத்தப்படுகின்றது. கூறுகின்ற ஒரு வாக்கியத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காகவும் பேசுகின்றவர்களுக்கிடையே அன்னியோன்னியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த இணைப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாக ஒரு மலாய் மொழி சொல் ஒன்று:


'Cepatlah' - cepat என்பது விரைவாக என்று பொருள்படும் . அதோடு lah சேரும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டு உணர்வுகளும் சேர்ந்து வெளிப்படுவதாக அமைந்து விடுகின்றது.

மலேசியத் தமிழர்களின் உரையாடல்களில் இந்த சேர்க்கை சுவாரசியமான ஒன்று. சாதாரணமாகப் பேசும் போது எப்படி இந்த சொல் தமிழில் சேர்ந்து கொள்கின்றது என்று பாருங்கள்.


உதாரணம்:
1. என்னலா செய்றீங்க?
2. வாங்கலா.. போகலாம்!
3. சரிலா.. நானே முடிச்சிடறேன்.

இப்படி சர்வ சாதாரணமாக 'லா' வாக்கியங்களில் சேர்ந்து கொள்வதுதான் நடைமுறை உண்மை.

நான் தமிழ் மொழியை கல்லூரியில் தனி ஒரு பாடமாக எடுத்துப் பயின்றதால் மிகக் கவனமாக 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடுவேன். (ஆனாலும் அவ்வப்போது பிற மொழி கலப்பு சேர்ந்து விடுவதை முழுதாகத் தவிர்க்க முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்) இப்போதெல்லாம் மலேசியா திரும்பும் போது புதிதாக சந்திக்கும் தமிழ் நண்பர்களிடம் பேசும் போது என் பேச்சுத் தமிழை வைத்து நான் தமிழகத்திலேயிருந்து வந்திருக்கின்றேனா அல்லது இலங்கைத் தமிழரா என்று என்னைக் கேட்ட சம்பவங்கள் பல உண்டு.
என்னைப்போல 'மிகக் கவனமாக' பேசுகின்ற தமிழர்கள் பலர் மலேசியாவில் இருக்கின்றனர். ஆக, கொஞ்சம் கவனம் வைத்து பேச ஆரம்பித்தால் 'லா' சேர்ப்பதை தவிர்த்து விடலாம்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் தனித் தன்மையோடு வருகின்ற 'லா' சேர்ந்த தமிழுக்கும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது!.

நன்றி சுபா


- vasisutha - 02-26-2004

நான் குட்லக் (good luck) படத்தில் அப்படி "லா' சேர்த்து பேசுவதை கேட்டிருக்கிறேன். அழகாய்த் தான் இருக்கிறது.


- Eelavan - 02-27-2004

மலேசியாவில் மட்டுமல்ல சிங்கப்பூரிலும் பேசும் போது அதிகமாக "லா" என்பதை சேர்ப்பார்கள் இது சுபா அவர்கள் சொல்வதைப் போன்று பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான அன்னியோன்னியத்தைச் சுட்டுகின்றது

நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் "லா" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே உண்மை


- Kanakkayanaar - 02-27-2004

ஈழவன் இயம்பியது:

[quote]நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் "லா" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே<span style='font-size:25pt;line-height:100%'> உண்மை</span>


சுபாவுடனும் ஈழவனுடனும் இதில் நான் ஒத்துக்கொள்கிறேன். 8)


- adipadda_tamilan - 02-27-2004

[quote=Kanakkayanaar]ஈழவன் இயம்பியது:

[quote]நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் \"லா\" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே<span style='font-size:25pt;line-height:100%'> உண்மை</span>


சுபாவுடனும் ஈழவனுடனும் இதில் நான் ஒத்துக்கொள்கிறேன். 8)[/quote]

"லா" போட்டுப் பேசினால் அழகாய் இருப்பதென்ப்து உண்மையல்ல. இதனால் தமிழின் அழகு குறைகின்றதேயன்றி ஓங்கவில்லை. நானும் சிங்கப்பூரர்களுடன் கதைத்திருக்கிறேன். சில நேரங்களில் "லா" பொட்டு அவர்கள் பேசும்போது கேட்பதற்கு அரியண்டமாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை "லா" என்பது அன்னியோன்யத்தை கூட்டுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சில நேரம் இவர்கள் இந்த "லா" போட்டுக் கதைப்பதால் புதியவர்களுக்கு நிச்சயமாக நிறைய குழப்பங்கள் வரும் - அதாவது என்னடா இவர்கள் என்ன கதைக்கிறர்கள் என்று. Confusedhock:


- Eelavan - 02-27-2004

அதைத்தானே நானும் சொன்னென் அது மொழியின் அழகைக் குறைப்பதாக
இப்படியே நாம் நான்கு பேர் நிற்கும் இடத்தில் எமது நண்பனைப் பார்த்து வாடா மச்சான் போவோம் என்றால் மற்றவர்கள் முகத்தைச்சுழிப்பார்கள் என்ன ஒரு மரியாதை இல்லாமல் என்று
இவை அந்தந்த இடங்களில் ஊருடன் ஒத்துவரவேண்டியவை
இங்கும் இலங்கைத்தமிழர் "லா" பயன் படுத்துவது குறைவு இந்தியர்கள் அதுவும் சிங்கப்பூர் குடிமக்கள் தான் அனேகம்
மலாய் மொழியின் பாதிப்புத் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்தும் கூட


- கெளஷிகன் - 02-27-2004

ஈழவன் அண்ணா கூறியது சரியே
இங்கு சிங்கப்பூரிலும் "லா" சேர்த்து பேசுவது வ்ழக்கம்.ஆனால் அனெகமாக சிங்கப்பூரர்கள் மட்டுமே இவ்வாறு லா சேர்த்து பேசுவார்கள்.ஆயினும் சிங்கப்பூரில் வ்ழக்கிலிருக்கும் singlish எனப்படும் கலப்பு ஆங்கிலத்திலேயே இந்த லா அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.சிங்கப்பூரருடன் பேசும் போது அது தமிழராயினும் சீனனாயினும் மலேக்காரனாயினும் அவனது ஆங்கிலத்தில் அனேகமாக ஒவ்வொரு சொல் முடிவிலும் லா சேர்ந்து வரும்.மலே மொழியிலிருந்து கலந்த பல சொற்கள்,ஒலி வடிவங்களில் இதுவும் ஒன்று.singlishல் கலந்த இந்த லா வை பின்னர் சிங்கப்பூர் இந்தியர்கள் பேச்சு வழக்கில் தமிழிலும் கலந்து விட்டார்கள்.மொழி ஒன்ராயினும் இடத்துக்கிடம் பேச்சுவழக்கு மாறியிருப்பது இயல்பே .அதனால் மொழியின் அழகு குறைக்கப்படுவதாக கூறி விட முடியாது.அப்படிப் பார்கப்போனால் மொழியின் அழகு ஏற்கனவே குறைந்து விட்டது.

ஆயினும் இந்த மொழி நடை பழக்கப்படாதோர் கண்டபடி லா சேர்த்து கதைக்க முற்படும்போது உன்மையிலேயே மொழியின் அழகு குறைவது மட்டுமல்ல குன்றவும் செய்கிறது


- Mathan - 02-27-2004

Eelavan Wrote:மலேசியாவில் மட்டுமல்ல சிங்கப்பூரிலும் பேசும் போது அதிகமாக "லா" என்பதை சேர்ப்பார்கள் இது சுபா அவர்கள் சொல்வதைப் போன்று பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான அன்னியோன்னியத்தைச் சுட்டுகின்றது

நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் "லா" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே உண்மை

அது அவங்க இருக்கிற இடத்தோட தனிதன்மையை காட்டுது. அது அழகை கெடுக்குதுன்னு சொல்ல முடியாது


- Mathan - 02-27-2004

[quote=Kanakkayanaar]ஈழவன் இயம்பியது:

[quote]நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் \"லா\" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே<span style='font-size:25pt;line-height:100%'> உண்மை</span>


சுபாவுடனும் ஈழவனுடனும் இதில் நான் ஒத்துக்கொள்கிறேன். 8)[/quote]

சுபா அழகாயிருக்குதுன்னு சொல்லுறார். ஈழவன் அழகை கெடுக்குது அப்பிடின்னு சொல்லுறார். நீங்க இரண்டு பேர் கூடவும் ஒத்துபோக முடியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-27-2004

adipadda_tamilan Wrote:[quote=Kanakkayanaar]ஈழவன் இயம்பியது:

Quote:நாம் பேசும் போது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் வாடா போடா என்போம் அவர்கள் \"லா\" சேர்ப்பது சிறிது நாகரீகமாக தெரிந்தாலும் தமிழ் மொழியின் அழகைக் கெடுக்கிறது என்பதே<span style='font-size:25pt;line-height:100%'> உண்மை</span>


சுபாவுடனும் ஈழவனுடனும் இதில் நான் ஒத்துக்கொள்கிறேன். 8)

"லா" போட்டுப் பேசினால் அழகாய் இருப்பதென்ப்து உண்மையல்ல. இதனால் தமிழின் அழகு குறைகின்றதேயன்றி ஓங்கவில்லை. நானும் சிங்கப்பூரர்களுடன் கதைத்திருக்கிறேன். சில நேரங்களில் "லா" பொட்டு அவர்கள் பேசும்போது கேட்பதற்கு அரியண்டமாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை "லா" என்பது அன்னியோன்யத்தை கூட்டுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சில நேரம் இவர்கள் இந்த "லா" போட்டுக் கதைப்பதால் புதியவர்களுக்கு நிச்சயமாக நிறைய குழப்பங்கள் வரும் - அதாவது என்னடா இவர்கள் என்ன கதைக்கிறர்கள் என்று. Confusedhock:

"லா" போட்டுப் பேசினால் தான் அழகுன்னு சொல்லலை. அது அந்த இடத்தோட தனிதன்மைய காட்டுறதால அழகாயிருக்கு. நீங்க அதை அரியண்டம் அப்பிடின்னு சொல்ல முடியாது.

நீங்க சொல்லுற அரியண்டம், கதைக்கிறது இது கூட அவங்களுக்கு புரியாது. இது இலங்கை தமிழோட தனித்தன்மை. இதை அவ்ங்க என்ன இவங்க தமிழ் அருவெறுப்பா இருக்குன்னு சொல்லமுடிமா முடியாது தானே. அதனால அவங்க மண்ணோட தனிதன்மையான பேச்சு தமிழ மதிக்கணும்.


- Mathan - 02-27-2004

[quote=கெளஷிகன்]ஈழவன் அண்ணா கூறியது சரியே
இங்கு சிங்கப்பூரிலும் "லா" சேர்த்து பேசுவது வ்ழக்கம்.ஆனால் அனெகமாக சிங்கப்பூரர்கள் மட்டுமே இவ்வாறு லா சேர்த்து பேசுவார்கள்.ஆயினும் சிங்கப்பூரில் வ்ழக்கிலிருக்கும் singlish எனப்படும் கலப்பு ஆங்கிலத்திலேயே இந்த லா அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.சிங்கப்பூரருடன் பேசும் போது அது தமிழராயினும் சீனனாயினும் மலேக்காரனாயினும் அவனது ஆங்கிலத்தில் அனேகமாக ஒவ்வொரு சொல் முடிவிலும் லா சேர்ந்து வரும்.மலே மொழியிலிருந்து கலந்த பல சொற்கள்,ஒலி வடிவங்களில் இதுவும் ஒன்று.singlishல் கலந்த இந்த லா வை பின்னர் சிங்கப்பூர் இந்தியர்கள் <b>பேச்சு வழக்கில் தமிழிலும் கலந்து விட்டார்கள்.மொழி ஒன்ராயினும் இடத்துக்கிடம் பேச்சுவழக்கு மாறியிருப்பது இயல்பே .அதனால் மொழியின் அழகு குறைக்கப்படுவதாக கூறி விட முடியாது.</b>அப்படிப் பார்கப்போனால் மொழியின் அழகு ஏற்கனவே குறைந்து விட்டது.

<b>ஆயினும் இந்த மொழி நடை பழக்கப்படாதோர் கண்டபடி லா சேர்த்து கதைக்க முற்படும்போது உன்மையிலேயே மொழியின் அழகு குறைவது மட்டுமல்ல குன்றவும் செய்கிறது</b>

உண்மை. அத்தோட தமிழ்ல மட்டும் இல்லை சீனத்திலயும் கலந்து இருக்குது.


- Eelavan - 02-28-2004

நீங்கள் சொல்வது போன்று லா சேர்த்துப் பேசுவது இனிமையாக இருக்கலாமே ஒழிய அழகு என்று சொல்லமுடியாது ஏனெனில் தமிழ் மொழியின் இனிமைக்குக் காரணமே "ழ"கர,"ல"கர இடையினச்சொற்கள் தான் எனவே அவற்றைக்கலந்து ஒலிக்கும் போது மொழியின் பேச்சு வடிவம் இனிமை பெறுவது இயல்பே
அத்துடன் இது தமிழ் மொழியின் பேச்சு வழக்கில் ஒன்று அதனை அரியண்டம் என்று ஒதுக்கி விடமுடியாது அது நியாயமும் இல்லை நாம் பேசுவது அவர்களுக்கு குழப்பமாக இருக்கும் அவர்கள் பேசுவது எமக்கு அப்படித் தோன்றும்
தமிழாயினும் சீனமாயினும் சிங்கபூர்,மலேசிய மக்களின் பேச்சு வழக்குக்கு அடிப்படை மலாய் மொழி அதன் செல்வாக்கே பிறமொழிகளில் "லா" சேர்ந்ததற்கு காரணம்


- AJeevan - 02-29-2004

மஞ்சுலா என்ற பதம் அவர்களது வார்த்தைகளுக்குள் பிரவேசித்ததாக ஒரு மலேசியர் ஒரு முறை சிங்கை தொலைக்காட்சியில் விளக்கமளித்தது நினைவுக்கு வருகிறது.

மஞ்சுலா என்பது வாழ்க என்பதாகும்.

ஒவ்வொரு முக்கிய வார்த்தைகளுக்குள் இந்த வாழ்க என்ற லாவை உபயோகிப்பது ஒரு தனிக் கலை.

[b]வார்த்தைகளை மட்டுமல்ல முன்னால் நிற்கும் மனிதரையும் வாழ்த்துவதற்கு மலாயர்கள் உபயோகிக்கும் நடை முறை வழக்கே வார்த்தைகளில் லாவை

தமிழர்களிடேயும் இது போன்ற மரபு பல இடங்களில் இருக்கின்றன.

மலேசிய-சிங்கையர் தவிர் மக்கள் இந்த லாவை பயன்படுத்தும் விதத்திலிருந்தே அவர்கள் இந்த நாட்டவர் அல்ல என்பதை புரிந்து கொள்வார்கள்.


(இலங்கையர், இந்திய தமிழையும் , இந்திய தமிழர் , இலங்கை தமிழையும் பேசி சமாளிக்க முற்பட்டாலும் ஏதோ ஒரு இடத்தில் இவர்கள் தடம் புரண்டு மாட்டிக் கொள்வது கேலி போல் இருக்கும்.)

[size=16]அது போலவே மலேசி-சிங்கையர்கள் இவர்களை வேற்றவர் என்று புரிந்து கொண்டாலும், மரியாதை நிமித்தம் அவர்களை ஏளனம் செய்வதில்லை. பதிலாக அவர்கள் எம்மோடு இணைந்து கொள்ள விழைகிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள்.

ஐரோப்பாவில் வாழும் எத்தனையோ பேர் அவர்களது பேச்சு வழக்கில் சாவ் , ஆத்தியே ,............... இப்படி எத்தனையோ வார்த்தைகள், இவர்களை அறியாமலே வார்த்தைகளாய் வருவதுண்டு.

இதுவும் ஒரு வித நாகரீக மாற்றமாகவே கருதலாம்.

இலக்கண எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையே (அனைத்து உலக மொழிகளிலும்) வித்தியாசங்கள் இருக்கின்றன.

அதற்காக எழுத்து மொழியில்தான் பேச வேண்டுமா?

வா
வாங்க
வாங்கோ
வாருங்கோ

வாப்பா
வாண்ணா
வாவண்
வாவேன்
வாடி
வாவெண்டீ

வாயேன்
வாடா
வர்ரேளா
வர்ரேளோ
இந்தாண்டா

வாங்கலா
..............................................இப்படி தொடர்வது

வா விலிருந்துதானே?

புலம் பெயரும் தமிழர்கள் மற்றும் வெளி நாட்டினர் முதலில் சந்திக்கும் போது ஏற்படும் அங்க அசைவே ஒரு பெரிய பிரச்சனை.

நாமெல்லாம் ஆம் என்று தலையாட்டும் விதமும் வெளிநாட்டவர் ஆம் என்று தலையாட்டும் விதமும் வித்தியாசமானவை. இதுவே ஆரம்ப பிச்சனை..............இவற்றை மாற்றிக் கொள்ளவில்லையா?

இதுவே நினைத்தாலே இனிக்கும் திரைப்படததில் நகைச்சுவையாகவும், காதலர் தமது காதலை ஆம் என்கிறாரா இல்லை என்கிறாரா என்று புரிய முடியாத நிலையை உருவாக்கும் பிரச்சனைக்குரிய காட்சியாக வந்தது.
(இத்திரைப்படம் மலேசிய-சிங்கையில் படமாக்கப் பட்டது.)


- Mathan - 02-29-2004

சிங்கப்பூர் பகுதில வாழந்த உங்களோட கருத்துக்கு ரொம்ப நன்றி அஜீவன்.

அவங்கவங்களோட பேச்சு மொழில ஒரு தனிதன்மை இருக்கத்தான் செய்யுது.

என்னலா ஓக்கேவா?


- Eelavan - 03-01-2004

உண்மைதான் அஜீவன் அண்ணா
majjula என்ற மலாய் சொல்லில் இருந்து தான் தமிழிற்கும் "லா" வந்திருக்க வேண்டும் majjula
என்றால் வாழ்க என்று அர்த்தம் அப்படித்தான் majjulaa singapura என்று சொல்வார்கள்


- AJeevan - 03-01-2004

BBC Wrote:சிங்கப்பூர் பகுதில வாழந்த உங்களோட கருத்துக்கு ரொம்ப நன்றி அஜீவன்.

அவங்கவங்களோட பேச்சு மொழில ஒரு தனிதன்மை இருக்கத்தான் செய்யுது.

என்னலா ஓக்கேவா?

Eelavan Wrote:உண்மைதான் அஜீவன் அண்ணா
majjula என்ற மலாய் சொல்லில் இருந்து தான் தமிழிற்கும் "லா" வந்திருக்க வேண்டும் majjula
என்றால் வாழ்க என்று அர்த்தம் அப்படித்தான் majjulaa singapura என்று சொல்வார்கள்

ஆம் சிங்கை தேசிய கீதத்தில் மஞ்சுலா சிங்கபுரா என்ற பதம் வாழ்க சிங்கப்புூர் என வருகிறது.

அங்கு பல் வேறு இனத்தவர்கள் வாழும் நாடாக இருப்பினும் அவர்கள் நாட்டையே முதன்மை படுத்துகின்றனர்.

நீங்கள் யார்? என்று அவர்களிடம் கேட்டால் முதலில் வரும் வார்த்தை
நாங்கள் சிங்கப்புூரர் என்பதாகும்.

பின்னர்தான்
நான் சீன வம்சாவளியிலானவன்.
நான் இந்திய வம்சாவளியிலானவன்.
நான் இந்திய தமிழ் - இலங்கை தமிழ் வம்சாவளியிலானவன்.
நான் மலாய் வம்சாவளியிலானவன்.
நான் யுரேசிய ( ஐரோப்பிய ஆசிய)வம்சாவளியிலானவன்.............................
இப்படித் தொடர்கிறது.

அங்கே தமிழ் 1 பாடமாக மட்டுமல்ல, தமிழர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தரும் நாடாக திகழ்கிறது.

ஒரு காலத்தில் சிங்கப்புூர் கலாச்சார-வெளி விவகார அமைச்சர் தனபாலன் என்ற தமிழர்.
வேலை வாய்ப்பு துறை அமைச்சர் கலாநிதீ nஐயகுமார் என்ற தமிழர். சிங்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையை வகுத்தவர் சிங்கை தளபதி லீகுவான்யுவின் பால்ய நண்பன் ராசரத்தினம் என்ற இலங்கை தமிழன்.

அங்கே தமிழ் வளர எவ்வளவோ நடக்கிறது. பேச்சிலல்ல நடை முறையில்........................

மஞ்சுலா சிங்கப்புூரர.......................

தமிழன் வாழட்டும்,தமிழ் தானாக வாழும்.

OK La.


- Mathan - 03-01-2004

Ya la. சிங்கைப்பூர் ஜனாதிபதி S.R.நாதன் கூட தமிழர்தானே அஜீவன்?


- AJeevan - 03-01-2004

BBC Wrote:Ya la. சிங்கைப்பூர் ஜனாதிபதி S.R.நாதன் கூட தமிழர்தானே அஜீவன்?


ஆமாலா..............BBC, குறிப்பிட்டதற்கு (Thanksla) நன்றிவாழ்..................

(முதலியார்வாழ்.......... பெரியார்வாழ்.............. கணக்கப்பிள்ளைவாழ்..........பிள்ளைவாழ்........... இப்படியான பதங்கள் தமிழில் பாவிக்கப்பட்டது போல் பீபீசிவாழ்....... என்பதில் தப்பில்லையே BBCவாழ்..................? )