![]() |
|
இலங்கையின் மாபெரும் வர்த்தக மையம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கையின் மாபெரும் வர்த்தக மையம் (/showthread.php?tid=7419) |
இலங்கையின் மாபெரும் வ - vasisutha - 02-27-2004 இலங்கையின் மாபெரும் வர்த்தக மையம் ; சென்னை ஸ்பென்சரில் துவக்கம் சென்னை: இந்தியாவில் தனது நாட்டு தயாரிப்புகளை அதிக அளவில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், முதன் முதலாக சென்னை நகரில் பிரபலமான "ஸ்பென்சர் பிளாசா' வணிக வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாபெரும் "வர்த்தக மையத்தை' இலங்கை அரசு நேற்று துவக்கியது. இந்த வர்த்தக மையத்தில் இலங்கை நாட்டின் 13 முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வர்த்தக மையத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் "இலங்கை வர்த்தக மையத்தை' நிறுவுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாஇலங்கை இடையே கடந்த 98ம் ஆண்டு எளிதான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவுகள் படிப்படியாக வலுவடைந்து வருகின்றன. இரு நாடுகளும் ஏற்றுமதியை அதிகரித்து வருகின்றன. இரு நாட்டு நல்லுறவுகளுக்கு அடையாளமாக ஏற்கெனவே இலங்கையில் இந்திய நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இலங்கை நிறுவனங்களின் நேரடி வர்த்தக நடவடிக்கைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவில் முதன் முதலாக சென்னை நகரில் மாபெரும் "இலங்கை வர்த்தக மையத்தை' நிறுவ அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி சென்னை நகரில் பிரபலமான "ஸ்பென்சர் பிளாசா' வணிக வளாகத்தின் மூன்றாவது பிரிவு கட்டடத்தில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் "இலங்கை வர்த்தக மையம்' அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. தமிழக கல்வித்துறை அமைச்சர் எஸ். செம்மலை, இலங்கை வர்த்தக மையத்தை திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் செம்மலை பேசுகையில், "இந்த வர்த்தக மையம் துவக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுப்படும். வர்த்தக நடவடிக்கைகளும் மேம்படும்,' என்று குறிப்பிட்டார். இலங்கை அரசின் ஏற்றுமதி விரிவாக்க அமைப்பின் தலைவர் ஆர்.சிவரத்னம் வரவேற்று பேசியதாவது: இந்தியாஇலங்கை இடையே எளிதான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவுகள் வலுவடைந்துள்ளன. இந்தியாவிற்கான இலங்கை ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 99ம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 3.32 பில்லியனாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு 23.28 பில்லியனாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் இலங்கையின் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இலங்கை ஏர்லைன்ஸ் வர்த்தக பிரிவு உயர் அதிகாரி ஜெயசீலன் பேசுகையில், "சென்னைகொழும்பு இடையே 15 விமானங்களை நாங்கள் இயக்கி வருகிறோம். வாரம் முழுவதும் சென்னைகொழும்பு இடையே விமான போக்குவரத்து வசதி இருக்கிறது,' என்று குறிப்பிட்டார். விழாவில் இலங்கைக்கான இந்தியத் துõதர் மங்கள மூன்சிங்கே, தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துõதர் சுமித் நகந்தலா, இலங்கை தொழில்துறை செயலாளர் ரஞ்சித் பெர்னான்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர். இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இலங்கை வர்த்தக மையத்தில் கிடைக்கும் பொருட்கள்! முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் அந்நாட்டின் 13 முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. வர்த்தக மையத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து கடைகளையும் ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வெளியேறலாம். அனைத்துக் கடைகளும் பிரம்மாண்டமாக வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அமைந்துள்ளன. "டீத்துõள், பிஸ்கெட், பொம்மைகள், பரிசுப் பொருட்கள், அலங்கார நகைகள், உடல் அழகு அலங்கார பொருட்கள், ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள், ரொட்டி வகைகள், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுப் பொருட்கள், கல்விக்கு பயன்படும் உப பொருட்கள், மரப்பொருட்கள், காலணிகள், தரையில் பதிக்கும் டைல்ஸ் வகைகள், பாய்கள், பற்பசை, மருந்து தைலம் போன்ற பொருட்கள் இங்கு கிடைக்கும். இந்த பொருட்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனைக்கு கிடைக்கும். நேற்று துவக்க நாள் என்பதால் விற்பனை உடனடியாக துவங்கவில்லை. இன்று முதல் விற்பனை நடைபெறும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். விலையை பொறுத்தவரை இலங்கையில் உள்ள விலையை விட இங்கு குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இன்னும் விலையை நிர்ணயம் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். வியக்க வைத்த இலங்கை கலைஞர்கள்! * விழாவையொட்டி இலங்கை கலைஞர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா சிறப்பு அழைப்பாளர்கள் வணிக வளாகத்திற்குள் வரும்போது, வாயிலில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு வரும் வரை நாட்டியம் ஆடியபடி வரவேற்று அழைத்து வந்தனர். * விழா ஆரம்பித்ததும் ஆறு இளம்பெண்கள் கையில் அகல் விளக்குகளை ஏந்தியபடி நளினமான நடையுடன் மேடைக்கு வந்தனர். பின்னர் ஆறுபேரும் கையில் அகல் விளக்குகளை ஏந்தியவாறே நடனம் ஆடினர். இதேபோல் மேலும் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. * விருந்தினர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. dinakaran.com |