Yarl Forum
புஷ்ஷை எதிர்த்து ஜோன் கெர்ரீ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: புஷ்ஷை எதிர்த்து ஜோன் கெர்ரீ (/showthread.php?tid=7382)



புஷ்ஷை எதிர்த்து ஜோன் - Mathan - 03-04-2004

<b>ஜனநாயக கட்சி தேர்தல் வேட்பாளர் எட்வர்ட்
பிரசார நடவடிக்கைகளிலிருந்து விலகல்</b>

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தெரிவு போட்டி சூடுபிடித்துள்ள தருணத்தில் ஜோன் எட்வேர்ட் பிரசார போட்டி நடவடிக்கையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி புஷ்ஷை எதிர்த்து போட்டியிடக்கூடிய ஜனநாயக் கட்சி வேட்பாளர் தெரிவு செய்யும் தேர்தல் போட்டியே தற்போது அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவில் நடைபெற்ற மாநில ரீதியிலான போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணியில் இருக்கும் வேட்பாளராக ஜோன் கெர்ரீயே உள்ளார். இதனிடையே அவரை எதிர்த்து தேர்தல் பிரசார விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான ஜோன் எட்வர்ட்,கெர்ரீக்கு வாழ்த்துக் கூறி, கைகுலுக்கிவிட்டு பிரசார நடவடிக்கையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

இறுதியாக எட்வர்ட் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் ""எதிர்வரும் நவம்பரில் புஷ் இருக்கமாட்டார். புஷ்ஷை வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற்றுவதே எமது முடிவு. எனவே எனது நண்பர் கொரீயிடம் அந்தப் பணியை ஒப்படைக்கிறேன்'' என்று கூறி கெர்ரீயுடன் விடை பெற்றுச் சென்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான புஷ்ஷை எதிர்த்து போட்டியிடும் தகுதியை ஜோன் கெர்ரீ பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - வீரகேசரி