Yarl Forum
ஈழச் செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஈழச் செய்திகள் (/showthread.php?tid=7368)

Pages: 1 2


ஈழச் செய்திகள் - vasisutha - 03-08-2004

மட்டக்களப்பிலுள்ள சமூகநல அமைப்பின் பிரதிநிதிகளும் பல்லின மத மற்றும் அறிவுசார் பிரமுகர்களும் அடங்கிய உயர்மட்ட சமாதான தூதுக்குழுவொன்று, மட்டக்களப்பு ஆயர் கலாநிதி அதிவண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் எஸ்.ரவீந்திரநாத் ஆகியோரின் தலைமையில் இன்று திங்கட்கிழமை வன்னிக்குச் சென்று, விடுதலைப் புலிகளின் தலைவருடன் தற்போதைய நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளனர் என்று தமிழ்நெற் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பின் பிரதான தமிழர் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சமூகநல மற்றும் இன மத அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள், கல்விமான்கள் இணைந்து மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய உரையாடல்களின் இறுதியில், ஒரு சமாதான நல்லிணக்கக் குழுவொன்று வன்னி சென்று வன்னித் தலைமையுடன் பேசி, கருணா விடயத்தில் ஒரு சுமூகமான முடிவு காண எத்தனிப்பதென்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் தற்போதைய நெருக்கடி விரைவில் அமைதியாகத் தீர்ந்துவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர், தேசியத் தலைவர் கருணா விடயத்தில் அவரது முடிவை மீள்பரிசீலனை செய்து, சுமூகமான தீர்வொன்றைக் காண்பார் என்று நாம் நம்புகிறோம் என்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்நெற்றிற்குத் தெரிவித்துள்ளார். எமது தேசியத் தலைவர், தற்போது அங்கு செல்லும் சமாதான நல்லிணக்கக் குழுவின் வருகையை சாதகமான முறையில் பயன்படுத்துவார் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர் திரு.சேனாதிராஐh nஐயானந்தமூர்த்தி கருத்துக் கூறுகையில், கருணா தனது கருத்துவேற்றுமைகளைக் களைந்து, தேசியத் தலைவருடன் ஓர் இணக்கப்பாடு காணவேண்டுமென்றே தாம் விரும்புவதாகவும், தற்போதைய நெருக்கடிகள் தேர்தலில் தமிழர்களின் வெற்றியைப் பாதித்துவிடலாம் என்று தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசியத் தலைமையுடன் ஓர் இணக்கப்பாடு காணப்படுவதை கருணா விரும்புகிறார் என்று பலரும் எண்ணக்கூடிய விதத்தில், பிபிசி ஊடகத்திற்கு கருணா வழங்கியுள்ள பேட்டியில், தேசியத் தலைவருக்கு தான் என்றும் விசுவாசமாக நடந்து கொள்வதையும், அவருக்கெதிராக எப்போதுமே தான் பேசியதில்லை என்றும், அதைவிட, மட்டக்களப்பு-அம்பாறை பகுதியில் தனக்கு விசுவாசமான போராளிகளும் தானும் தமிழினத்தின் தேசியப் போராட்டத்திற்கு எந்த இழுக்கும் வந்துவிடாதிருப்பதில் தொடர்ந்தும் உறுதியாய் இருப்போம் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

நன்றி: தமிழ்நெற்.கொம்


- adipadda_tamilan - 03-08-2004

யாழ் இணையத்தளத்தில் தமிழ் அலை நீக்கம்.

யாழ் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த ~~தமிழ்அலை|| இணையத்தள முகவரி நீக்கப்பட்டுள்ளது. எனவே இணையத்தள வாசகர்கள் நேரடியாக ****** என்ற இணையத்தள முகவரியில் அறிய முடியும். மட்டக்களப்பு நிலவரம் குறித்த செய்திகள் அதிகமாகப் பிரசுரிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

----------------------------------------------------
மோகன்,
உங்களது செய்கையைப் பார்த்தால் கருணா அம்மான் செய்ததை சரிஎன்டு நிரூபிப்பது மாதிரி இருக்கிறதே. அதாவது யாழ் இணையத்தில் மட்டக்களப்பு(தமிழலை)இணையத்திற்கு இடமில்லை என்று தெட்டத்தெழிவாக காட்டியிருக்கிறீர்கள். நீங்களே இப்படி செய்தால்.....

இணைய நண்பர்களே நீங்களே இதற்கு விடையளிக்கவும்.


- yarlmohan - 03-08-2004

தமிழ்த் தேசியத் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெறுவதால் அத்தள முகவரி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


- shanmuhi - 03-08-2004

தனி மாகாணத்துக்கும் கருணவினுடைய பிராச்சாரத்துக்கும் ஒரு இணையம் செயற்படுவதானால் அதை நீக்குவதில் தவறில்லை.
மற்றும் நாம் வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதமிடாமல் ஒன்றுபட்ட தமிழ் ஈழத்தினுடனும் ஒன்றுபட்ட தேசிய தலைமையின் கீழ் செயற்பட முனைவோம்.


- yarl - 03-08-2004

தனி ஒருவருக்காகவேனம் ஒரு இணையம் செயற்பட்டால் அது தவறில்லை.
ஆனால் அந்த இணையம் தமிழ்த்தேசியத்தை பின்னுக்கு தள்ளுமானால் அப்படியான இணையம் தேவையில்லை


- vasisutha - 03-08-2004

நீக்கியது சரியே


- sivajini - 03-08-2004

கருனா புதிய கட்சி செய்தி ஆதாரம் சேது
The East Tamil Liberation Kachchi.


- Mathivathanan - 03-08-2004

Quote:sivajini[/color]
The East Tamil Liberation Kachchi.
திருத்தம் சிவாஜினிச்சேது
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 03-08-2004

உது ETLK (கட்சி இலக்கம் 26)...ஒன்றுமாச் சரி வருகுதில்லை.....உதுகென்ன சிவாஜினி சேதுவே செயலாளர் நாயகம்....! அவர் தலைவர் இவர் செயலாளர்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 03-08-2004

பொருளாளருக்கு என்னைப் போடுங்கோ. இப்ப மில்லியன் கணக்கில காசு இருக்கும்.. கொஞ்சத்தை சுருட்டுவம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 03-08-2004

sivajini Wrote:கருனா புதிய கட்சி செய்தி ஆதாரம் சேது
The East Tamil Liberation Kachchi.
http://www.colombopage.com/archive/March860831RA.html


- கண்ணன் - 03-09-2004

....................


- sOliyAn - 03-09-2004

23 சப்டரா? அதையொருக்கா விளங்கப்படுத்துங்க.. செயஇது பார்ப்போம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கண்ணன் - 03-09-2004

செய்தி உங்களுக்கு இல்லை சோழியன்


- sOliyAn - 03-09-2004

களத்தில போட்டுட்டு செய்தி எனக்கில்லை என்றுறார்.. கலோ இராவணன் சார்.. இவருக்கு ஒரு 'வார்ணிங்' கொடுங்கோ!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கண்ணன் - 03-09-2004

...........................


- nalayiny - 03-09-2004

sOliyAn Wrote:களத்தில போட்டுட்டு செய்தி எனக்கில்லை என்றுறார்.. கலோ இராவணன் சார்.. இவருக்கு ஒரு 'வார்ணிங்' கொடுங்கோ!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அவர் பத்துத் தலையோடை எந்தக்களத்துக்கை தலையணையை போட்டிட்டு படுத்திருக்கிறாரோ தெரியேலை .சாமத்திலை வந்த உந்த கத்துக் கத்தி எழுப்பிறியள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- adipadda_tamilan - 03-09-2004

யாழ்/yarl Wrote:தனி ஒருவருக்காகவேனம் ஒரு இணையம் செயற்பட்டால் அது தவறில்லை.
ஆனால் அந்த இணையம் தமிழ்த்தேசியத்தை பின்னுக்கு தள்ளுமானால் அப்படியான இணையம் தேவையில்லை

முற்றிலும் உண்மை ஏற்றுக்கொள்கிறேன்.


- adipadda_tamilan - 03-09-2004

கண்ணன் Wrote:
adipadda_tamilan Wrote:யாழ் இணையத்தளத்தில் தமிழ் அலை நீக்கம்.

யாழ் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த ~~தமிழ்அலை|| இணையத்தள முகவரி நீக்கப்பட்டுள்ளது. எனவே இணையத்தள வாசகர்கள் நேரடியாக ****** என்ற இணையத்தள முகவரியில் அறிய முடியும். மட்டக்களப்பு நிலவரம் குறித்த செய்திகள் அதிகமாகப் பிரசுரிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

----------------------------------------------------
மோகன்,
உங்களது செய்கையைப் பார்த்தால் கருணா அம்மான் செய்ததை சரிஎன்டு நிரூபிப்பது மாதிரி இருக்கிறதே. அதாவது யாழ் இணையத்தில் மட்டக்களப்பு(தமிழலை)இணையத்திற்கு இடமில்லை என்று தெட்டத்தெழிவாக காட்டியிருக்கிறீர்கள். நீங்களே இப்படி செய்தால்.....

இணைய நண்பர்களே நீங்களே இதற்கு விடையளிக்கவும்.



அதெல்லாம் சரி அந்த இணையமே சரியான பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது.
7 மவுஸ் கிளிக் 23 சப்டர் இது போதும் அலையை ஓயவைக்க . இப்படி நான் அறிந்தேன். உண்மையாய் இருக்குமோ?

======================================================

மோகன்,
தயவு செய்து எனது ஐடி யை இந்த போறத்திலிருந்து அகற்றும்படி தயவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு அன்பகம் என்பவர் நேரடியாகவே மட்டக்களப்புத் தமிழன் பங்குபற்ற முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
நான் நேற்று மோகனிடம் ஏன் மட்டக்களப்பிலிருந்துவரும் இனையத்தளத்தை அகற்றினீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்கு மோகனின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபடியால் நானும் சரி என்று ஏற்றுக்கொன்டேண். அதில் எதுவிதமான மாற்றமும் இல்லை.

ஆனால் இங்கு எழுதியிருக்கும் இருவரின் (கண்ணன், அன்பகம்) பதில்கள் நேரடியாகவே உங்களை அடிப்போம், வெளியேறு என்று சொல்லியிருக்கிறீர்கள்.

நான் உங்களுடன் இங்கு வாதம் பண்ண விரும்பவில்லை அது எனது விருப்பமும் இல்லை.
உங்கள் இருவருக்கும் எனது நண்றிகள்(உங்களது மனனிலையை தெரியவைத்ததற்கு)..

இந்தப் போறத்தில் என்னுடன் பங்குபற்றிய அனைவருக்கும் நண்றிகள் முக்கியமாக கண்ணனுக்கு.........

Mohan please remove my ID from this forum as soon as possible.


- vasisutha - 03-09-2004

அது சரி கண்ணன் என்ன அப்படி சொன்னார் எனக்கு விளங்கவில்லையே?