Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 409 online users.
» 0 Member(s) | 406 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  சுட்ட கவிதை
Posted by: Mathan - 03-15-2004, 08:45 PM - Forum: கவிதை/பாடல் - Replies (394)

<b>ரொம்பப் பிடிக்கும்.... !</b>
*

உருவ வழிபாடு வேண்டாம்

என்றுசொன்ன புத்தனின்

சிலை எனக்குப் பிடிக்கும்....


சாதி பாவமென்ற பாரதியை

ரொம்பப் பிடிக்கும்..

என் சாதியென்பதால்......


அஹிம்சைத் தத்துவம் சொன்ன

காந்தியை யாராவது பழித்தால்

கொலை கூடச் செய்வேன்.... !

நன்றி - முத்து

Print this item

  சூரியக் குடும்பத்தில் பத்தாவது கோள் கண்டுபிடிப்பு...?!
Posted by: kuruvikal - 03-15-2004, 05:46 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39891000/gif/_39891622_sedna_info_416.gif' border='0' alt='user posted image'>

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20040315/sedna_planet_graphic.gif' border='0' alt='user posted image'>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39890000/jpg/_39890536_sedna_nasa_203.jpg' border='0' alt='user posted image'>

சூரியத் தொகுதிக்குரிய புதிய விண்பொருள் செட்னா பற்றிய படங்களும் சில இதர தகவல்களும்...!


எமது சூரியக் குடும்பத்தில் புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சனி யுரானஸ் நெப்ரியூன் புளூட்டோ போன்ற கோள்களுடன் புதிய கோள் என்று எதிர்காலத்தில் கருதத்தக்க மிகவும் குளிரானதும் கறுப்பானதும் உறுதியானதும் புளூட்டோவின் விட்டத்துடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3/4 விட்டமுடையதுமான விண் பொருள் ஒன்றை விண்ணியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

1930 இல் புளுட்டோ கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் சூரியத் தொகுதியில் கண்டுபிடிக்கபட்ட பெரிய விண் பொருளான இது சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 8 பில்லியன் மைல்களுக்கு அப்பால் இருப்பதுடன் இதன் மேற்பரப்பு வெப்பநிலை - 400 பாகை பரனைட் (0F) என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்...!

அப்புதிய சூரியக் குடும்ப உறுப்பினருக்கு <b>செட்னா (Sedna) என்றும் பெயர் சூட்டி உள்ளனர்...! இது சூரியக் குடும்பத்தின் 10 வது கோளாகுமா....??! ஆகலாம்...!

இக்கண்டுபிடிப்புக்கான முதலாவது அவதானத்தை அமெரிக்க கலிபோர்னிய விண்ணியல் ஆய்வு தொலைக்காட்டி மூலமே அவதானித்துள்ளனர்...!

[shadow=red:f13c627849][b]மேலதிக தகவல் -1 இங்கே....!</b>[/shadow:f13c627849]

[shadow=red:f13c627849]<b>மேலதிக தகவல் -2 இங்கே....!</b>[/shadow:f13c627849]


--------------------------------
Our Thanks Yahoo.com Reuters, AP and BBC.com
தமிழாக்கம் குருவிகள் வலைப்பூ...!

Print this item

  மட்டக்களப்பு மண்ணில்...!?
Posted by: anpagam - 03-15-2004, 03:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (226)

<b>கருணாவுக்கு ஒரு கடிதம் </b>
டி.சிவராம் (தராக்கி)


அன்பின் கருணாவுக்கு, வணக்கம்!

அரியத்திடம் நீங்கள் கூறிய தகவல் கிடைத்தது. என்மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி.

நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்கப்போவதாக 'அஸோஸியேட்டட் பிரஸ்" என்ற அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அறிவித்ததைக் கேள்வியுற்று மட்டக்கள்ப்புக்கு விரைந்துவந்தேன். அந்தச்; செய்தி பொய்யாக இருக்கும். பிரச்;சினைகள் ஏதாவது இருந்தால் அது எமது விடுதலைப்போராட்டத்தைப் பாதிக்காதவகையில் சுமுகமாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையில் கொக்கட்டிச்;சோலைக்கு வந்தேன். அங்கே ஒரு பகல் பொழுதை உங்களோடு தொடர்புகொள்ளும் முயற்சியில் செலவழித்தேன். முயற்சி பயனளிக்கவில்லை.
போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் மட்டகளப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பல அச்;சுறுத்தல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் நின்று செயல்பட்ட ஊடகவியலாளர் பற்றி நீங்கள் அடிக்கடி பெருமையுடன் பேசியிருக்கிறீர்க்ள். நீங்கள் போராளிகளிடம் என்னுடய கட்டுரைகளை கட்டாயம் படிக்கும்படி கூறுவதை அறிந்து நான் பலதடவை பெருமைப்பட்டிருக்கிறேன்.

எமது மாவட்டத்தின் நன்மை கருதி அதன் முன்னேற்றம், சுபீட்சம் என்பவற்றை பற்றி மட்டக்களப்பின் ஊடகவியலாளர்களோடு நீங்கள் பல்வேறு முறை உரையாடியிருக்கிறீர்கள். நாங்களும் பலமுறை உரிமையோடு உங்களை அணுகி எமது மண்ணின் அரசியல், சமூகப் பிரச்;சினைகளைப் பற்றி மனம்விட்டுப் பேசியிருக்கின்றோம். ஆனால், நீங்கள் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிவதாக எடுத்த பாரது}ரமான முடிவைப்பற்றி எங்களிடம் ஒருவார்த்தை கூட இதுவரை பேசவில்லை. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் நலன்கருதியே நீங்கள் தனித்து இயங்கமுடிவு எடுத்ததாகக் கூறிவருகின்றீர்கள். அந்த மக்களின் ஒரு இன்றியமையாத அங்கமாகவே ஊடகவியலாளரான நாம் உள்ளோம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டதாலேயே எம்மோடு நெருங்கிப் பழகினீர்கள். ஆனால் எமது மட்டு-அம்பாறை மாவட்ட மண்ணையும் அதன் மக்களையும் மிகப் பாரது}ரமாகப் பாதிக்கின்ற முடிவை எடுத்தபோது நாங்கள் ஏன் உங்கள் கண்களில் படவில்லை? ஏன் அமெரிக்கச்; செய்தி நிறுவனமான 'அஸோஸியேட்டட் பிரஸ்"ஸிற்கு மட்டும் உங்களுடைய முடிவுகளை பிரத்தியேகமாக அறிவித்துக்கொண்டிருந்தீர்கள்? மட்டக்களப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிடும் சிமாலி சேனாநாயக்க மட்டுமே உங்கள் கருத்தை வெளிக்கொணர தகுதிவாய்ந்தவராக ஏன் தெரிந்தெடுக்கப்பட்டார்?

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மண் மீது உங்களுக்குப் பற்றும் பாசமும் இருக்கிறது - அதனால் தான் தனித்து இயங்கப்போகின்றேன் என கூறும் நீங்கள் சிங்கள இராணுவத்தின் கோரப்பிடியில் எமது மக்கள் சிக்கி மரண ஓலம் எழுப்பிய காலங்களிலே எமது வேதனை கண்டு எள்ளி நகையாடிய சிங்கள பேரினவாத ஊடகவியலாளர்களை எப்படி இப்போது உங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆக்கிகொண்டிர்கள்? எமது மண்ணையும் மக்களையும் உங்களுடைய ஆணையின் கீழ் தமிழீழம் என்ற இலட்சியத்தோடு விடுதலைக்கு வித்தாகிப்போன எமது போராளிகளையும் இழிவுபடுத்தும் கொச்;சைப்படுத்தும் உங்களிடம் அவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு பேட்டியையும் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? தெரியாவிட்டால் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள ஆங்கில பத்திரிகைகளை து}க்கிபாருங்கள்.

'இன்னும் ஒரு தமிழ் எட்டப்பன் கிடைத்துவிட்டான்" என அவை கொக்கரிப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களையும் தலைவரையும் கொச்;சைபடுத்தி இழிவுபடுத்தி முன்பக்கத்தில் வரைகின்ற கேலிச்;சித்திரங்களை கண்டால் எந்தவொரு தன்மானமுள்ள மட்டக்களப்பானும் கூனிக்குறுகிப்போவான்.

கருணா ஈவிரக்கமற்ற கொலைகாரன், பிள்ளைபிடிகாரன் என்றெல்லாம் கொழும்புப் பத்திரிக்கைகள் மிககேவலமாக உங்களைப்பற்றி எழுதிய காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் குறிப்பாக மட்டக்களப்பு செய்தியாளர்கள் எவ்வாறெல்லாம் பொதுநன்மை கருதி உங்களுக்கு உறுதுணையாக நின்றோம் என்பதையெல்லாம் கணப்பொழுதில் மறந்து சிங்கள பேரினவாத ஊடகங்களையும் எமது மண்ணோடு எந்த சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு செய்தி நிறுவனங்களையும் இப்போது நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடுவதன் மர்மம் என்ன?

இனி விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு நீங்கள் கூறும் காரணத்தைப் பார்ப்போம். மட்டு-அம்பாறை மாவட்டப் போராளிகள் வடக்கில் சென்று போராடி மடிவதை நீங்கள் விரும்பவில்லை எனவும் அவர்கள் தென் தமிழீழத்தை காப்பதற்கே கடமைப்பட்டவர்கள். ஆகவே வன்னிக்கு நீங்கள் போராளிகளை அனுப்ப மறுத்து தனித்து இயங்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளீர்கள். 'nஐயசிக்குறு" என்ற மாபெரும் படையெடுப்பை முறியடிக்க தலைவர் பிரபாகரனின் வலதுகரமாக நின்று வன்னியிலிருந்து அனைத்து தளபதிகளுக்கும் தலைமைத் தளபதியாக செயல்பட்ட நீங்கள் இப்படிக் கூறியிருப்பது எனக்கு மகா வியப்பை தருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போரியல் மூலோபாயம் எது? அதன் தன்மை என்ன? என்பதை அறியாத சிறுபிள்ளை அல்ல நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போரியல் மூலோபாயம் என்பது நீங்கள் 10 வயதுப் பாலகனாக இருந்த காலத்தில் கிழக்குப் பிராந்தியத்தின் இராணுவ புவியியல் அம்சங்களைக் கவனமாக கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதாகும். இது நீங்கள் பள்ளி செல்லும் பாலகனாக இருந்த காலத்தில் மட்டு-அம்பாறை மண்ணில் இருந்து விடுதலைக்கென புறப்பட்ட எமது போரட்ட முன்னோடிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைப் போரியல் மூலோபாயமாகும்.

உலக விடுதலைப்போரியல் நுணுக்கங்களைக் கவனமாகக் கற்றதன் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலையின் இராணுவ மூலோபாயம் வகுக்கப்பட்டது என்பது நீங்கள் நன்றாக அறிந்தவிடயமாகும். ஒரு தேசிய விடுதலைப்போர் ஏகாதிபத்திய தரவுடன் இயங்கும் ஓர் அடக்குமுறை அரசின் படைகளுக்கு எதிராக போராடுவதனால் அதற்கு விடுக்கப்பட்ட தக்கவைக்கப்படக்கூடிய தளப்பிரதேசம் இன்றியமையாதது. வியட்னாம் விடுதலைப்போருக்கு யுனான் மாநிலமும், கியூபாவின் விடுதலைப்போர், கிழக்கு திமோரின் விடுதலைப்போர் ஆகியவற்றுக்கு அவற்றின் மத்திய மலைப்பிராந்தியங்களும் எரித்திரிய விடுதலைப்போருக்கு அதன் போராளிகளால் தக்கவைக்கப்பட்ட தளப்பிரதேசமும் அந்த நாடுகளின் சுதந்திர போராட்ட வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை உலக போரியல் வரலாறு பதிந்துவைத்துள்ளது. இவ்விடுதலை வரலாறுகளையும் அவை தந்த போரியல் பாடங்களையும் கற்றறிந்த கிழக்கு மாகாண விடுதலை போர் முன்னோடிகள் முன்வைத்த கோட்பாட்டையே அறியாதவர் போல் நீங்கள் பேசுவது எனக்கு வேதனையளிக்கின்றது.

ஓர் ஒடுக்குமுறை அரசின் - அதுவும் குறிப்பாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் துணையோடு செயற்படுகின்ற ஒரு அரசின் படைகளை முறியடித்து தேசிய விடுதலையை ஒரு இனம் முன்னெடுக்க வேண்டுமானால் அது எக்காலத்திலும் சிறிய கெரில்லா போர்முறையில் மட்டும் தங்கியிருக்க முடியாது. பலமான பின்னணியுடன் இயங்கும் எதிரியை முறியடிக்க அல்லது வலுவிழக்க செய்வதனால் விடுதலைப்போராட்ட அணிகளை சிறந்த பயிற்சிகளும் தொழில்நுட்பங்களும் மருத்துவ வசதிகளும் கொண்ட மரபுவழி இராணுவமாக மாற்றியமைப்பது கட்டாயமாகும். பெரிய அணிகளை பயிற்றுவிக்கக்கூடிய ஆயுதங்களை பெருமளவில் களஞ்சியப்படுத்தக்கூடிய காயப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளையும் பேணக்கூடிய தங்குதடைகள் இன்றி களமுனைக்கு சகலவிதமான வழங்கல்களையும் செய்திடக்கூடிய தளம் இதற்கு அவசியம். அதைவிட இப்படியான ஒரு தளப்பிராந்தியம் பாதுகாப்பானதாக இருப்பது இன்னும் அவசியமாகும். இவ்வாறான ஒரு தளத்தை வெற்றிகரமாகத் தக்க வைப்பதில்லேயே விடுதலைப்போரின் வெற்றி தங்கியுள்ளது என்பது போரியல் தரம் அடிப்படை பாடம்.

கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்;சாறு, தரவை, வாகரை, சம்புூர், சேனையூர் பகுதி திருமலை வடக்கில் பேராரு, திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்கா படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்றவகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்புறங்களில் ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி கிழக்கின் தளப்பிராந்தியங்களாக கருதப்படக்கூடிய பிரதேசங்கள் காடுகளும் பற்றைக்காடுகளும் வாவிகளும், களப்புகளும், திறந்தவெளிகளும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவை கடலுக்கும் சிங்கள எல்லைக்கும் இடையில் ஆகக்கூடிய து}ரம் 40 கிலோ மீற்றராகவும் ஆகக்குறைந்த து}ரம் 15 கிலோ மீற்றராகவும் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விடுவிக்கப்பட்ட தளப் பிராந்தியங்களாக ஒரு கெரில்லா இயக்கம் எடுத்த எடுப்பில் தக்கவைப்பது சாத்தியமற்றது என்பது தெளிவு.

ஆனால், முல்லைத்தீவு மாவட்டமானது இலங்கைத்தீவிலேயே காடுகளின் அடர்த்திகூடிய மாவட்டமாகும். அதுமட்டுமன்றி கிழக்கைப்போலல்லாது காடுகளுக்கும் கடற்கரைக்கும் தொடர்ச்;சியுள்ள ஒரு பிராந்தியமாக அது காணப்படுகின்றது. கடலிலிருந்தோ சிங்கள எல்லையிலிருந்தோ பெறப்படக்கூடிய எறிகணை வீச்;சு எல்லைக்கு அப்பாற்பட்ட பல உட்பிராந்தியங்களைக் கொண்ட இடமாகவும் அது காணப்படுகின்றது.
இவற்றையெல்லாம் ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே கிழக்கு வன்னிப் பிராந்தியம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தளமாக அமையவேண்டுமென ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில்தான் பிரதேச வேறுபாடின்றி அனைவரும் எமது விடுதலைத் தளப்பிராந்தியத்தை பலப்படுத்த நீண்டகாலமாகச்; செயற்பட்டு வந்துள்ளோம். அந்தத் தளப்பிராந்தியம் இல்லாதிருந்தால் நீங்கள் இன்று உங்களை வளர்த்துவிட்ட தாய்வீட்டிற்கே சவால் விடுவதற்கு உங்களுக்கு பின்பலமாக இருக்கின்ற எந்த ஒரு கனரக ஆயுதமும் எமக்குக் கிடைத்திருக்க முடியாது. அந்தத் தளப்பிராந்தியம் இல்லாதிருந்தால் நீங்களொரு மரபுவழி இராணுவத் தளபதியாக பெயரெடுத்திருக்க முடியாது. அதுமட்டுமா? இன்று சிங்களப் பத்திரிகையாளர்களுக்கும் எமது இனம் பிளவுபட்டுக் கிடப்பதை வேடிக்கை பார்க்கவரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் நீங்கள் பெருமையுடன் அழைத்துச்; சென்று காட்டுகின்றீர்களே அந்த மீனகம் இராணுவத்தளம்: அதை அமைத்திருக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விடுவிக்கப்பட்ட தளப்பிரந்தியம் வன்னியிலிருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்;சியை எப்படியாவது தடுத்திடவேண்டும் என்ற பயங்கரத்தில் சிறிலங்கா இராணுவம் தனது படைபலத்தின் பெரும்பகுதியை விடுவிக்கப்பட்ட எமது வன்னித் தளப்பிராந்தியத்தைச்; சுற்றி குவித்ததாலேயே நீங்கள் மட்டக்களப்பில் முடிசூடா சிற்றரசனாக பயமின்றிச்; செயல்படக்கூடியதாயிற்று. மட்டக்களப்பில் படுவான்கரைப் பகுதியிலிருந்து எதிரி 44 இற்கும் மேற்பட்ட சிறு முகாம்களையும் தளங்களையும் மூடி வடக்கிற்குக் கொண்டு சென்றதால்தான் நீங்கள் அங்கு தனிக்காட்டு மன்னனாக கோலோச்சக்கூடியதாக இருக்கிறது.

மாறாக எமது மாவட்டத்தின் தளப்பகுதிகளை எதிரியுடன் போரிட்டு விடுவிக்கும் முயற்சியில் நாம் இறங்கியிருந்தால் வன்னியில் இழந்ததைவிட கூடுதலான எமது மாவட்டப் போராளிகளை நீங்கள் இழக்கவேண்டி வந்திருக்கும் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. 1995ம் ஆண்டு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம்மீது நீங்கள் மேற்கொண்ட தாக்குதலிலும், வவுணதீவு முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும் இறந்த எமது மாவட்டப் போராளிகளின் கணக்கை வைத்துக்கொண்டு பார்த்தால் வன்னியில் நாம் இழந்ததை விட கூடுதலான போராளிகளை மட்டுமல்ல எமது மக்களையும் இழக்கவேண்டி வந்திருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வன்னியும் யாழ்ப்பாணமும் பேரழிவுகளையும், பொருளாதாரத் தடைகளையும் சந்தித்த வேளையில் மட்டக்களப்பு கல்வியிலும் பல்வேறுதுறைகளிலும் ஒப்பீட்டளவில் முன்னேறியது என்பதை நாம் மறுக்கமுடியாது. மட்டக்களப்பில் 1995 இன் பின்னர் நாம் வடக்கைப்போல் பேரழிவுகளைச்; சந்திக்காமல் இருந்ததற்கு வன்னியில் உங்கள் ஆணையின் கீழ் தம் இன்னுயிரை ஈந்த அனைத்து மாவட்ட போராளிகளும் காரணமாக இருந்துள்ளனர்.

இதையெல்லாம் மறைத்து நீங்கள் போரியல் அரிவரி தெரியாத கற்றுக்குட்டியாக பிரதேசவாதம் பேசுவது ஏன்? உங்களுடைய நிலைப்பாடு மேற்படி விடயங்களை ஆராயும்போது தர்க்கரீதியாகவும் நியாயபுூர்வமாகவும் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இதை நான் மட்டக்களப்பு மண்ணில் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாக் கூறவில்லை. அந்த மண்ணோடு பல நு}ற்றாண்டுகளாக பின்னிப்பிணைந்த பரம்பரையைச்; சேர்ந்தவன் என்ற வகையில் எடுத்துரைக்கிறேன். விடுதலைப்போரை மீண்டும் உரமூட்டிட வருக என உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.


வணக்கம்
த.சிவராம்


நன்றி: வீரகேசரி வார வெளியீடு (14.03.04) & தமிழ்நாதம்.

Print this item

  வரும் தேர்தலில் தமிழீழ மக்களின் கடமை....!
Posted by: kuruvikal - 03-15-2004, 02:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[b]<span style='color:red'>வரும் தேர்தலில் தமிழீழ மக்களின் கடமை....!

<img src='http://www.tamilnet.com/img/publish/2004/03/Home_Symbol_23482_140.JPG' border='0' alt='user posted image'>

[b][size=16] வட-கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் கருணா என்கின்ற முரளிதரனின் நடவடிக்கையானது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இன்று பரவலாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்றாகவுள்ளது. அதாவது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? அவர்கள் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இவ்விவகாரம் முதன்மைபெறக் காரணமாகும்.

கருணா என்கின்ற முரளிதரனின் நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பிரதேசவாதத்திற்கு தூண்டுகோளாக இருக்கையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடுதல் என்பது எத்தனை து}ரம் சாத்தியமானது என்பதே இது குறித்த கேள்விக்கும், நெருக்கடிக்கும் காரணமாகும்.

ஏனெனில், இத்தேர்தலைத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளத் தயாரானபோது கூறப்பட்டது போன்று தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவம் என்பனவற்றை வலியுறுத்துவதற்கான செயற்பாட்டிற்கு கருணாவின் நடவடிக்கைகள் குந்தகமாகியுள்ளது.

கருணாவின் தற்போதைய நடவடிக்கையானது எதிரிக்குச் சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது மூக்கை அறுத்துக் கொண்டது போன்றதாகும். அதாவது தனது தனிப்பட்ட அபிலாசைகளுக்காக மட்டு-அம்பாறை மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எனலாம்.

இதன்காரணமாக இன்று மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகள் ஒருவகை குழப்பத்திற்குள்ளாகியுள்ளதெனலாம். அதாவது தமிழர் தாயகம், தேசியம் என்பனவற்றையும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகளே என்பனவற்றையும் வலியுறுத்தித் தேர்தலில் களமிறங்கத் தயாரான மட்டு-அம்பாறை மாவட்ட கூட்டமைப்பினர் இன்று கருணாவின் செயற்பாட்டால் குழப்பத்திற்கும், குறுகிய சிந்தனைக்கும் உட்பட வேண்டியவர்களாகியுள்ளனர்.

இந்நிலையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தேர்தலானது தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கு சில பின்னடைவுகளைச் சிலவேளைகளில் ஏற்படுத்தக்கூடும். இதனால் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் சிலவும் மகிழ்ச்சியும் அடையக்கூடும்.

அதாவது, தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவை வலுவிழந்து போவதாக அவர்கள் கற்பனை செய்து கொள்ளக்கூடும். ஆனால் இவை தற்காலிகமானவை மட்டுமே. கருணாவின் துரோகச் செயலினால் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவை சிதைக்கப்படவோ பலவீனப்பட்டுவிடவோ போவதில்லை. தற்போதைய சூழ்நிலையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் தேர்தலில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பினும் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பன சிதைவுறப் போவதில்லை.
சில தீய சக்திகளின் தூண்டுதலினால் ஒரு சில தனி நபர்களின் நடவடிக்கையினால் தமிழ் மக்களின் உறவையும், உணர்வையும் பிரித்துவிட முடியாது. அத்தோடு, யாழ். மாவட்டத்திலும், வன்னிப்பெரு நிலப்பரப்பிலும், கிழக்கில் திருமலையிலும்; தமிழ் மக்கள் ஏகோபித்த ரீதியில் இவற்றை வலியுறுத்தி முற்பட்டு நிற்பதன்மூலம் கருணாவின் துரோகத்திற்கு பதிலடிகொடுக்க முடியும்.

கருணாவின் செயற்பாடானது மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பிரதேசவாதத்திற்கு வித்திடுவதாக இருப்பினும் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் கருணாவின் செயற்பாட்டினால் ஓர் இக்கட்டிற்குள் தள்ளப்பட்டிருப்பினும் அதன் வேட்பாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் என்பதையும் தாயகம் பிளவுபடுவதையும் ஆதரிப்பதாக இல்லை. இதனை தேசியக் கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் ஜோசப் பரராஐசிங்கம் அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, யாழ், வன்னி, திருமலை தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழர் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதும் வலியுறுத்தப்படுவதாக இருக்கும். மேலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும் வலுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

ஆகையினால், கருணாவின் துரோகச் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் செயற்படும் சக்திகளுக்கும், கருணாவின் துரோகச் செயலினால் பெரும் மகிழ்விற்குள்ளாகியிருக்கும் பேரினவாத சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சர்வதேசத்திற்கு முன் வெளிப்படுத்தும் முகமாகவும் இத் தேர்தலைத் தமிழ் மக்கள் கையாள வேண்டும். அதற்காக தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து மக்கள் வாக்களிப்பது அவர்களின் கடப்பாடாகிறது.</span>

கருத்துப் பகிர்வது ஈழநாதமும் தமிழ்நாதமும்...!

Print this item

  புகலிடத் தமிழர்
Posted by: Mathan - 03-14-2004, 07:54 PM - Forum: புலம் - Replies (116)

போராட்டத்தில் வெளிநாட்டு தமிழரின் பங்கு எந்த அளவிற்கு இருக்கின்றது? உங்க கருத்து என்ன?

Print this item

  முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள்
Posted by: Kanthar - 03-14-2004, 01:08 PM - Forum: அறிமுகம் - Replies (43)

முகமனுக்கு...கந்தரின் வணக்கங்கள்

இங்கை வணக்கம் சொல்லித்தான் வரவேணும்......வணக்கம்
உன்னான எனக்கிது நல்லாப்பிடிச்சுபோச்சு.......
கொஞ்ச காலம் அப்பி இப்பி விசிற் அடிச்சு பாத்தன்...
நல்லாத்தான் கிடக்கு......
அதாலை கந்தர் என்ட பேரோட இப்பத்தான் பதிஞ்சு கையோட முகமனுக்கு வணக்கமும் சொல்லிப்போட்டு போறன்.

அப்பப்ப வாறன் ஆரோடையும் வலியக் கொழுவ.?? !!! ????

Print this item

  பெயர் மாற்றங்கள்.
Posted by: yarlmohan - 03-14-2004, 10:46 AM - Forum: களம் பற்றி - Replies (70)

karavai paranee - paranee என்றும் ragi swiss - TMR என்றும் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Print this item

  தமிழால் எலலாம் முடியும்
Posted by: AJeevan - 03-14-2004, 12:36 AM - Forum: தமிழும் நயமும் - Replies (36)

<img src='http://www.kumudam.com/theeranadhi/march2004/pg1t.jpg' border='0' alt='user posted image'>

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்கிற எதிர்கால நோக்குடன் பணியாற்றும் வெகுசிலருள் ஒருவர் மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார். தற்போது தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியராக இருக்கும் மணவை முஸ்தபா, யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்ட காலம் தொடங்கி சமீபத்தில் அது நின்று போனது வரை, அதன் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார். அறிவியல் தமிழ், யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்புப்பணி, தமிழை செம்மொழி ஆக்குவது இவை தொடர்பாக நீண்டநேரம் பேசினார் மணவை முஸ்தபா. இனி நேர்காணல்.

தீராநதி: விரைவில் அழிந்துவிட சாத்தியமுள்ள மொழிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை, சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றும் அதில் தமிழ் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. யுனெஸ்கோவில் பணியாற்றியவர் என்கிற முறையில், எதனடிப்படையில் இந்த ஆய்வறிக்கை செய்யப்பட்டுள்ளது என்று சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

மணவை முஸ்தபா: முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். யுனெஸ்கோ அறிக்கையில் தற்கால தேவைகளுக்கும் அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கும் ஈடுகொடுக்காத மொழிகள் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. மற்றபடி தமிழ் அழிந்துவிடும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இங்கே சிலர் அந்த அறிக்கை பற்றி முழுமையாக அறியாமல் தமிழ் அழிந்து விடும் என்கிற பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். இது தவறு.

இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஒரு வகையில் யுனெஸ்கோவின் இந்த அறிக்கைக்கு அஸ்திவாரம் போட்டவன் நான்தான். யுனெஸ்கோ கூரியர் 1998, பாரிஸ் மாநாட்டில் நான் ஒரு கருத்தை முன் வைத்தேன். பல நாடுகள் காலனி நாடுகளாக இருந்து விடுதலையடைந்துள்ளன. ஆனால் விடுதலையடைந்த அந்நாடுகளில் ஆட்சி அதிகாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதே தவிர, மொழி ஆதிக்கம் அகலவில்லை. இதனால் பல மொழிகள் நசிந்து _ இல்லையென்று ஆகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அம்மொழிகள் வாழ்வதற்கு அல்லது தங்களை வலுப்படுத்திக்கொள்ள உள்ள சாத்தியங்கள் பற்றி ஆய்வு பூர்வமாக ஒரு தனிச் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்று சொன்னேன். இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்புறம் ஆய்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் மொத்தம் ஆறாயிரம் மொழிகள் உள்ளன. இவற்றில் தமிழ், சமஸ்கிருதம், லத்தீன்,கிரேக்கம், ஹீப்ரு, சீனம் ஆகிய ஆறு மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஆறாயிரம் மொழிகளில் இன்று எழுத்து, இலக்கியப் படைப்புகள் இருக்கக் கூடியவை மூவாயிரம் மொழிகள். இந்த மூவாயிரம் மொழிகளில் கணினி போன்ற அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் காலத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து முன்னேறும் மொழிகள் வாழும்; மற்றவை அனைத்தும் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது என்பது யுனெஸ்கோ ஆய்வின் முடிவு. இதன்படி சிறந்த மொழிகள் என்று அது ஐம்பது மொழிகளை வரிசைப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் தமிழ் ஒன்று. மற்றபடி தமிழ் அழிந்துவிடும் என்று யுனெஸ்கோ சொல்லவில்லை. கணினியின் தேவைக்கு ஒரு மொழி ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது நிதர்சனம். இது யுனெஸ்கோ சொல்லித்தான் நாம் தெரிய வேண்டும் என்பதில்லை.

ஆனால், கம்ப்யூட்டருக்கு ஈடுகொடுக்கக் கூடிய தன்மை மற்ற எந்த இந்திய மொழிகளையும்விட தமிழுக்கு அதிகம் உள்ளது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இந்த வகையில் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் நிறைய முயற்சிகளை செய்து வருகிறார்கள். எனவே, தமிழ் அழிந்துவிடும் என்கிற வாதத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை. அதற்கென்று நாம் சும்மா இருந்துவிட முடியாது. காலத்தினுடைய தேவையையும் போக்கையும் அனுசரித்து தமிழ் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

தீராநதி: அவ்வகையில் இப்போது உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் என்று எதனைச் சொல்வீர்கள்?

மணவை முஸ்தபா: தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் உடனடியாக கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஏனெனில், 247 எழுத்துக்களில் பெரியார் எழுத்துச் சீர்மைக்குப் பிறகும் 131 எழுத்துக்கள் என்பது, குழந்தைகளுக்கு மொழி மீது ஒரு வெறுப்பை உருவாக்க காரணமாக உள்ளதோ என எண்ண வேண்டியுள்ளது. மேலும் எழுத்துகளைக் குறைக்கும் போதுதான் அதனை சுலபமாகக் கணினியிலும் கையாள முடியும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் உள்ளன. அதில் மூன்று வகையான வடிவங்கள் இருந்தன. இன்று அதனை தேவையில்லாத ஒரு சுமை என்று கருதி எடுத்துவிட்டார்கள். கேப்பிட்டல் லெட்டரைதான் வாக்கியத்தின் முதல் எழுத்தாக பயன்படுத்த வேண்டும் என்ற மன நிலையும் மாறிவிட்டது. சீன மொழியை மேலிருந்து கீழாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கணினியில் சீனத்தைப் பயன்படுத்த இது தடையாக உள்ளது என்பதால் அதை மாற்றி நேர்க் கோட்டில் எழுதத் தொடங்கி விட்டார்கள். இதுபோல் தமிழில் சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் தமிழை சிறப்புடையதாக்க முடியும். குறிப்பாக ஒலியை மாற்றாமல் வரி வடிவங்களில் மட்டும் மாற்றங்களைச் செய்யலாம். 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு 247 ஒலியும் வரும்படி தமிழைப் பயன்படுத்த முடியும்.

இரண்டாவது, இலக்கணம் மாற வேண்டும். தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூல். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, இலக்கியப் படைப்புகளை மையமாகக் கொண்டு நன்னூல் என்னும் இலக்கண நூல் உருவாக்கப்பட்டது. நன்னூலுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்றுவரை மாற்றியமைக்கப்பட்ட ஒரு இலக்கண நூல் வரவில்லை. மொழியியல் அறிஞர்கள் குழு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி இது. மூன்றாவதாக அறிவியல் தொழில் நுட்பத்துக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். இந்த மூன்றும் மிக முக்கியமான பணிகள் என்று நான் கருதுகிறேன்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியர் பத்திரிகையின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர் நீங்கள். யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு வெளிவர காரணமாக இருந்தவர் யார் என்று சொல்ல முடியுமா?

மணவை முஸ்தபா: யுனெஸ்கோ கூரியர் உலக அளவில் ஆறு மொழிகளில் மட்டும்தான் முதலில் வெளியாகி வந்தது. கன்னிமாரா நூலகத்திற்கு ஆங்கில பதிப்பு வரும். அங்கே யுனெஸ்கோ கூரியருக்கு அண்ணா வாசகர். யுனெஸ்கோ கூரியர் படிப்பதற்காக மட்டுமே கன்னிமாரா நூலகத்துக்கு அவர் சென்ற தினங்களும் உண்டு. 1967ல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, யுனெஸ்கோ பேரமைப்பின் துணை இயக்குநராக இருந்த ஆதிசேஷையா அதில் கலந்து கொண்டார். அப்போது அண்ணா அவரிடம் கூரியர் தமிழில் வெளியாக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கான முயற்சிகளில் ஆதிசேஷையா ஈடுபட்டபோது இந்திய அரசாங்கத்திடமிருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. இந்தியில்தான் யுனெஸ்கோ கூரியரை கொண்டுவர வேண்டுமென்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இந்தி இந்தியாவில் மட்டும்தான் ஆட்சி மொழி. ஆனால் தமிழ் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் ஆட்சிமொழியாக உள்ளது. மலேசியாவில் பாராளுமன்ற மொழியாக உள்ளது. எனவே தமிழை சர்வதேச மொழியாக எடுத்துக் கொண்டு தமிழில் கொண்டுவர வேண்டும். இரண்டு வருடம் சென்று இந்தியில் கொண்டு வரலாம் என்றார் ஆதிசேஷையா. இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மொரார்ஜி தேசாய் கூரியர் தமிழ் பதிப்பை 1967ல் தொடங்கி வைத்தார். ஆதிசேஷையா 1975ல் சென்னை வந்து துணைவேந்தர் பொறுப்பை ஏற்றபோது என்னை கூரியரின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் நியமித்தார்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியர் தமிழ் படிக்க சிரமமானது என்கிற விமர்சனத்தை ஏற்றுக் கொள்வீர்களா?

மணவை முஸ்தபா: யுனெஸ்கோ கூரியர் மொத்தம் 78 மொழிகளில் முயற்சி செய்யப்பட்டது. அதில் முப்பது மொழிகளில் மட்டும்தான் தொடர்ந்து வெளியானது. இந்த முப்பது மொழிகளில் வெற்றிகரமாக வெளிவந்தது தமிழ் என்று சொல்லலாம். மூலத்தில் இருப்பதுபோலும், அதே நேரத்தில் மொழிபெயர்ப்பு என்ற எண்ணத்தை தராமல் தாய்மொழியிலேயே படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பதிப்புகள் எவை எவை என்று யுனெஸ்கோ செய்த ஆராய்ச்சியின் முடிவில் தமிழ் நான்காவது இடத்தில் வந்தது. ஒவ்வொரு மொழியிலும் உலகெங்குமுள்ள அம்மொழி சார்ந்த அறிஞர்களுக்கு கூரியர் இதழ்கள் அனுப்பப்பட்டு அவர்கள் தந்த பதில்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே கூரியர் தமிழ் படிக்க சிரமமானது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூரியர் வாசகர்களின் விருப்பத்துக்கு தீனி போடும் பத்திரிகையல்ல. வாசகர்களுக்கு புதிய விஷயங்களை அறிமுகம் செய்து அவர்களை மேம்படுத்தும் பத்திரிகை. புதிய விஷயங்கள், குறிப்பாக அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள்தான் கூரியரில் அதிகம் வெளியானது. அறிவியல் பற்றி எழுதும் போது புதிய கலைச் சொற்கள் காரணமாக ஒரு கடினத்தன்மை இருக்கும். ஏமம் என்றால் பாதுகாப்பு என்று பொருள். நோய் எதிர்ப்பு சக்திகள் ஒவ்வொன்றாக குறைந்து வருவதுதான் எய்ட்ஸ். எனவே இதனடிப்படையில் எய்ட்ஸ் என்பதற்கு ஏமக்குறைவு நோய் என்று நாங்கள் பயன்படுத்தினோம். இது சாதாரண வாசகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

தீராநதி: ஆனால் எய்ட்ஸ் போன்ற மக்கள் புழக்கத்துக்கு வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தலாம்; அதற்கு ஒரு புதிய சொல்லை உருவாக்கி பயன்படுத்துதல் தேவையில்லாதது என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மணவை முஸ்தபா: எய்ட்ஸ் என்று சொல்வதில் ஒரு தவறுமில்லை. ஆனால், நம் மொழியில் அதற்கு ஒரு கலைச்சொல்லை உருவாக்குவது காலத்தின் தேவை. டி.வி. என்றால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் தொலைக்காட்சி என்று நாம் ஒரு சொல்லை உருவாக்கியுள்ளோம். இப்படி நிறைய கலைச் சொற்களை உருவாக்கும் போதுதான் அம் மொழி அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும். இப்படி ஒவ்வொன்றாக நாம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினால் அப்புறம் தமிழ் மொழியில் தமிழ் சொற்களை விட பிறமொழி சொற்கள்தான் அதிகமிருக்கும்.

தீராநதி: நெட்வொர்க் (network) என்பதற்கு வலைப் பின்னல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் பிணையம் என்று குறிப்பிடுகிறீர்கள். இது ஏன்?

மணவை முஸ்தபா: நெட்வொர்க்க்கு வலைப்பின்னல் என்று சொல்வது சொல்லுக்குச் சொல் (வெர்பல்) மொழிபெயர்ப்பு. கணினிகள் ஒன்றையன்று பிணைத்துக் கொண்டிருப்பதால் பிணையம் என்பதுதான் சரியான தமிழ்ச் சொல்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியரில் பணியாற்றிய அனுபவம், அதன் முக்கியத்துவம் குறித்து கூற முடியுமா?

மணவை முஸ்தபா: புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் அறிவியல் தொழில்நுட்பச் செய்திகள் அனைத்தும் உடனுடனே யுனெஸ்கோ கூரியரில் வெளியாகும். அறிவியல், கலை, கல்வி, பண்பாடு சார்ந்த விஷயங்களைப் பொறுத்த வரைக்கும் சமீப வளர்ச்சியைப் பற்றியதாகத்தான் பத்திரிகை முழுக்க இருந்தது. அவற்றை பத்து நாட்களுக்குள் மொழிபெயர்த்து இதழைக் கொண்டு வரவேண்டும். தேவை ஏற்படுகின்ற போது ஏற்படும் வேகம், அதனால் நிறைய சொற்களை உருவாக்கி பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கு கூரியர் மூலமாக கிடைத்தது. உலகத் தமிழ் மாநாடுகளுக்கு செலவழிக்கப்பட்ட சக்தி, பணம், காலம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மாநாட்டால் விளைந்த பலன்கள் மிகக் குறைவுதான். இதனுடன் ஒப்பிடும்போது கூரியர் தமிழ் பதிப்பு செய்துள்ள பணிகள் மேலானவை என்றுதான் கருதுகிறேன்.

1984ல் தமிழர்களின் வாழும் பண்பாடு (Living Culture of Tamils) என்று ஒரு சிறப்பிதழ் கூரியரிலிருந்து வெளிவந்தது. ஆப்பிரிக்கா, ஜப்பான், சீனா, நாடுகளின் பிரபல பத்திரிகைகள் அதிலிருந்த தமிழ் கலை _ பண்பாடு பற்றிய கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து வெளியிட்டன. இதனால் உலகம் முழுக்க உள்ள அறிஞர்களுக்கு தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்தது. அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தை அது ஏற்படுத்தியது. இதனை யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பு செய்த முக்கியமான ஒரு பணி என்று கருதுகிறேன்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியர் ஏன் நிறுத்தப்பட்டது?

மணவை முஸ்தபா: யுனெஸ்கோ தன்னுடைய பொருளாதார தேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்தது. அமெரிக்கா யுனெஸ்கோவிலிருந்து விலகியதும் இந்த வருமானம் நின்று போகவே பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு திட்டங்களாக நிறுத்தி செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை யுனெஸ்கோவுக்கு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக யுனெஸ்கோ கூரியர் பதிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனால் இந்த நிறுத்தம் தற்காலிகமானதுதான். அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் சேர்ந்து அதன் நிதி நிலைமைகள் சீரடையும் பட்சத்தில் மீண்டும் கூரியர் தமிழில் வெளியாகலாம்.

தீராநதி: தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்தவர் நீங்கள். தொடர்ந்து இன்றுவரை அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

மணவை முஸ்தபா: தமிழ் மிகவும் பழமையான ஆறு மொழிகளில் ஒன்று என்பதால் உலகம் முழுக்க பல்கலைக் கழகங்களில் அதற்குத் தனியாக ஒரு துறை இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாரிஸில் சபோன் பல்கலைக் கழகத்துக்குப் போயிருந்த போது கீழ்த்திசை மொழிகள் பிரிவில் சமஸ்கிருதத் துறையின் ஒரு பகுதியாகதான் தமிழ் இருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்த தமிழறிஞர் ஜீன்யிலியோஸா, இங்கு மட்டுமல்ல உலகெங்கும், தமிழ் கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. சமஸ்கிருதத்துக்கு இருப்பது போல் தனித்துறை அமைய தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறவேண்டும் என்றார். எனவே 1981ல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழி ஆக்க வேண்டிய அவசியம், அதன் தகுதிகள், செம்மொழி ஆக்குவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பேசினேன். அதைக் கேட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். "இதனை ஒரு கோரிக்கையாக எழுதித் தாருங்கள். கட்டாயம் செய்ய வேண்டிய பணி இது" என்று சொன்னார்.

ஒரு மொழி செம்மொழி ஆக்கப்பட வேண்டுமென்றால் பதினோரு அம்சங்களில் அது தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு, கலை, பட்டறிவு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, மொழியியல் கோட்பாடுகள் இவைதான் தகுதிகள். செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மொழிகளுமே இந்த பதினோரு அம்சங்களிலும் தகுதியுடையவை என்று சொல்ல முடியாது. குறிப்பாக சமஸ்கிருதம் ஏழு அம்சங்களில்தான் பொருந்துகிறது. ஆனால் பதினொரு அம்சங்களிலும் தகுதியுடைய மொழியாக தமிழ் இருக்கிறது என்பதை எம்.ஜி.ஆருக்கு விரிவாக எழுதினேன். அதை அவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளருக்கு அனுப்பினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கலைஞர் 1989_ல் ஆட்சிக்கு வந்த பிறகு அவரது விருப்பத்திற்கிணங்க அன்றைய கல்வியமைச்சர் அன்பழகன், "தமிழுக்கு என்ன என்ன செய்ய வேண்டும்" என்று என்னைக் கேட்டார். செம்மொழி ஆக்கும் திட்டத்தை சொன்னேன். அதற்கான முயற்சிகளை கலைஞர் அரசு எடுத்தது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வரும்போது ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. 1995ல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் ஜெயலலிதா அவர்கட்கு செம்மொழி பற்றி எழுதினேன். உடனே அவர்கள் அதற்கு ஒரு கமிட்டி நியமித்து, கமிட்டியின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினார்கள். அத்தோடு சரி. மீண்டும் தி.மு.க. அரசு அமைத்தபோது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக மத்திய அரசு மைசூரில் இருக்கும் மொழியியல் ஆய்வு மையத்துக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்பியது. அவர்கள் ஆய்வுகள் செய்து செம்மொழி ஆக்கத் தகுதியுடைய மொழிதான் தமிழ் என்று மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

தீராநதி: அப்புறமும் ஏன் இன்றுவரை தமிழை செம்மொழி ஆக்குவதில் தடங்கல்கள் உள்ளன?

மணவை முஸ்தபா: இந்தியா என்றால் இந்து மதம்தான்; இந்தியர்கள் என்றால் இந்துக்கள்தான்; இந்தியாவின் ஒரே பழம்பெரும் மொழி சமஸ்கிருதம்தான் என்ற மனநிலை உலகம் முழுக்க ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், தமிழ் செம்மொழி ஆக்கப்படுவது அதற்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதுகிறார்கள். எனவே அதனைத் தடுக்கிறார்கள்; அல்லது தட்டிக் கழிக்கிறார்கள். தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் சமஸ்கிருதமும் தமிழும் ஒப்பிட்டாய்வு செய்யப்படும். அப்போது தமிழின் முக்கியத்துவம் உலகுக்குத் தெரியவரும்.

தீராநதி: தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் மூலம் என்ன நன்மைகள் விளையும்?

மணவை முஸ்தபா: முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும். இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன. அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும். மேலும் இக்காலக்கட்டத்துக்கு ஏற்றபடி தமிழ்மொழியை அறிவியல் பூர்வமாக வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகளுக்கும் நிதியுதவிகள் அதிகம் கிடைக்கும்.

தீராநதி: தமிழில் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும் பணியை ஒரு தீவிரத்துடன் செய்து வருகிறீர்கள். இந்த ஆர்வம் எப்படி உருவானது என்று சொல்ல முடியுமா?

மணவை முஸ்தபா: படிக்கும் காலத்தில் தமிழுக்கு நிறைய செய்ய வேண்டும் என்கிற வெறித்தனமான ஆசை என்னிடம் இருந்தது. ஆனால், என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பது குறித்து எந்த திட்டமும் இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், சேலம் அரசினர் கலைக்கல்லூரி ஆசிரியர் பணிக்காக எனக்கு ஆணை வந்தது. அதனை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் எனது குருநாதர் தொ.பொ. மீ. அவர்களிடமும் காண்பித்து ஆசி பெற்று வருவதற்காக பல்கலைக்கழகம் போனேன். அப்போது அங்கே, பயிற்றுமொழி ஆங்கிலமா? தமிழா? என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழால் முடியாது; கலைச் சொற்கள் இல்லை; அறிவியலை தமிழில் சொல்லிக் கொடுக்கும் மனநிலை ஆசிரியர்களிடம் இல்லை; படிக்கும் மனநிலை மாணவர்களிடமும் இல்லை; படித்தால் வேலை கிடைக்காது... இந்தவிதமாகவே அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் ஒருவர், "தமிழை பயிற்றுமொழியாக்குவது எதிர்கால சந்ததியினரை குழிதோண்டிப் புதைக்கிற முயற்சி" என்று சொன்னார். என்னால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடலே எரிந்து விடும்போல் இருந்தது. நிதானமிழந்துவிட்ட நிலையில் எழுந்து நின்றுவிட்டேன். பேராசிரியர் இதனைப் பார்த்து பேச்சை நிறுத்திவிட்டார். நான் மேடைக்கு சென்றேன். எத்தகைய அறிய அறிவியல், தொழில் நுட்பச் செய்திகளையும் தமிழால் தரமுடியும். எப்படி என்று கேட்பவர்களுக்கு வாய்ச்சொல்லால் விளக்கம் தராமல் செயல்மூலம் நிறுவுவதையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு, எனக்கு கிடைத்துள்ள கல்லூரி ஆசிரியர் பணியை இப்போதே விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையிலேயே பணிக்கான ஆணையை கிழித்துப் போட்டேன். அன்று தொடங்கி அறிவியல் சார்ந்த செய்திகளை தமிழில் கொண்டு வருவதுதான் என் கடமை என்று முடிவு செய்து பணியைத் தொடங்கினேன்.

தீராநதி : தெ.பொ.மீ. மகாவித்துவான், ச.தண்டபாணி தேசிகர், தேவநேயப் பாவாணர் இவர்கள் மூன்று பேருடனும் நெருக்கமாக இருந்தவர் நீங்கள். இவர்களுடனான நெருக்கம் உங்கள் ஆளுமையை உருவாக்குவதில் எந்த அளவுக்கு பங்களித்துள்ளது என்று சொல்லமுடியுமா?

மணவை முஸ்தபா : அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தண்டபாணி தேசிகர், தேவநேயப் பாவாணர் இவர்கள் மூன்று பேர்களும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்தது நான் பெற்ற பெரும் பேறு. மூன்று பேர்களுமே எனக்கு மிக நெருக்கமான மனஉணர்வுள்ளவர்கள். இந்த மூன்று பேராசிரியர்களும் வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகள் கொண்டவர்கள். ஆனால், மொழியியலைப் பொறுத்தவரைக்கும் இந்திய அளவில் தமிழுக்கு தெ.பொ.மீ.யை விட்டால் வேறு ஆளில்லை என்று தண்டபாணி தேசிகருக்கும் வேர் சொல்லை கண்டுபிடிப்பதில் பாவாணரின் மேதமை மீது தெ.பொ.மீக்கும் உள்ளூற மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. மூன்று பேர்களுக்கும் செல்லப்பிள்ளை என்பதால் மூவருக்கும் இடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்த நான் முயன்றேன். அதற்கு நல்ல பலன் இருந்தது. தேவநேயப் பாவாணர் ஒரு கருத்து வேற்றுமைக் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியபோது, தெ.பொ.மீ. என்னிடம், பாவாணர் உனக்கு மிகவும் பிடித்தவராயிற்றே, நீ என்ன சொன்னாலும் கேட்பாரே. அவரை போக வேண்டாம்; தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தணும் என்று கெஞ்சுகின்ற வகையில் கேட்டார்.

இந்த மூன்று பேர்கள் இருந்த சூழல் எனது மொழி வளர்ச்சிக்கு மிகவும் பயன்பட்டது. எப்படி ஒரு வேர்ச்சொல்லை எடுப்பது, அதிலிருந்து புதிய ஒரு சொல்வடிவத்தை எப்படிக்கொண்டு வருவது, எப்படி பழைய தமிழ்ச் சொல்லைப் புதிய வடிவாக்குவது ஆகியவை தொடர்பான பயிற்சி எனக்கு இவர்களிடம் இருந்துதான் கிடைத்தது.

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: செந்தில்நாதன்

நன்றி: தீராநதி

Print this item

  தமிழ்ச் சினிமா வேண்டுமா
Posted by: AJeevan - 03-14-2004, 12:04 AM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.kumudam.com/theeranadhi/march2004/pg4t.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:22pt;line-height:100%'>தமிழில் திரைப்படம் என்பது கலை, பண்பாடு மற்றும் சமூகவியல் வடிவம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரிய உண்மை. எழுபதுகளில் உண்மையிலேயே திரை மொழியும் நுட்பமும் கொண்ட இரு படைப்பாளிகள் தமிழ்த்திரைச் சந்தைக்கு வந்தார்கள். மகேந்திரன், பாரதிராஜா என்ற இருவரும் உருவாக்கிய படங்கள் மிகவும் முக்கியத்துவம் உடையவை. அக்காலகட்டத்தில் அவற்றை உருவாக்குவது தமிழ்நாட்டில் சிரமமான செயலே. மனித உறவுகளைத் தனிமைப்படுத்தி பொய்யான உணர்வுச் சிக்கல்களைக் கையாளுவதை விடுத்து சமூகம், சாதியமைப்பு, குடும்பம், மரபுகள் என்ற கட்டமைப்புக்குள் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சி இவர்கள் இருவருடைய திரைப்படங்களிலும் உண்டு.

காதல் என்பதை ஒரு சமூகச் செயல்பாட்டு வடிவமாக்கி பிரச்சினைப்படுத்திய வகையில் பாரதிராஜாவின் திரைப்படங்கள், தமிழ்ச் சமூகக்கூறு சார்ந்த ஆவணப்படத் தன்மையை உடையவை. ஆனால் அவரே கற்பனை செய்துகொண்ட ஓர் உணர்தளம், அவரது படங்களின் தீவிரத் தன்மையைக் குறைத்து சிறுமைப்படுத்தி இருப்பதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். குடும்பம், சாதி அமைப்பு, கிராமிய விதிமரபுகள் பற்றிய ஒரு தொடர் விசாரிப்பு பாரதிராஜாவின் படங்களில் இருந்து வருகிறது. அது ஒரு குறிப்பிட்ட சாதியின் வெளிக்குள் இருந்து நிகழ்வது. உண்மையில் அதன் நம்பகத் தன்மைக்கு உதவி புரியக் கூடியதாகவே இருந்துவருகிறது. கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, ஈரநிலம் போன்ற படங்களில் இருந்து அரை மணிநேர படக் காட்சிகளை நீக்கிவிட்டு கோர்வைப்படுத்தினால் சில ஆப்பிரிக்க, தென்கொரிய படங்களுக்கு இணையான உள்ளடக்கமும் சித்திரிப்பும் கொண்டவையாக அப்படங்கள் அமையும். தமிழ்நிலம் மற்றும் பண்பாட்டு முரணின் பல கூறுகள் பாரதிராஜாவினால் நுணுக்கமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் வரலாற்று, சமூகவியல் பின்புலம் பற்றியும் அசல் உணர்ச்சிக்கும் அசட்டு உணர்ச்சிக்கும் இடையில் உள்ள கலைப்பூர்வமான வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவில்லாததால் மிகச் சிறப்பான, மிகத்திறமான தமிழ்த் திரைப்படங்களை அவரால் முழுமையாகத் தரமுடியாமல் போகிறது.

தமிழில் சில திறமான படங்களுக்கான அடையாளத்தை கமல்ஹாசன் அவ்வப்பொழுது காட்டுவதுண்டு. மகாநதியும், குணாவும் அந்த வகையில் சற்று தரமான முயற்சிகள். பொதுக் களத்தின் கவனத்தினூடாகப் பல முக்கிய சிக்கல்கள் அப்படங்கள் வழி பேசப்பட்டுள்ளன. ஹேராம் திரைப்படச் சித்திரிப்பு உத்தியின் மூலம் குறிப்பிடத்தகுந்த முதிர்ச்சி உடையது. ஆனால் தத்துவார்த்தமான சிக்கலை கையாள முடியாமல் தான் முன்வைக்க நினைத்த மதிப்பீட்டிற்கே எதிரான பல தளங்களை உருவாக்கிவிட்டது. தற்போது விருமாண்டி. இப்படத்தைப் பார்த்து முடித்தவுடன் கொஞ்ச நேர அமைதி. ஒரு நுட்பமான திரைப்படம் அந்தத் திரைப்படத்திற்குள்ளேயே சிதைக்கப்பட்டுவிட்டதே என்ற வருத்தம்.

மனித வன்முறையின் பல முகங்கள் இத்திரைப்படத்தின் அடிப்படை பிரச்சினைக்களம். மரண தண்டனை பற்றிய கேள்வியுடன் தொடங்கப்பட்டு சிறைச்சாலையின் சுவர்களுக்குள் காட்சி நகர்கிறது. பாத்திரங்கள் எதிரும் புதிருமாக வைக்கப்படுகின்றன. ஏஞ்சலா காத்தமுத்து என்ற கீழ்வெண்மணியைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக அக்கறை உடைய ஒரு வழக்குரைஞரின் பார்வை வழியே காட்சிக்கதை முன் வைக்கப்படுகிறது. அவருடைய பார்வை, தனது மதிப்பீடு மற்றும் கோட்பாட்டுக்கான ஆதாரங்களைத் தேடும் பார்வை. படம் அந்தப் பெண்ணின் பேச்சுடன் தொடங்கி அவருடைய பேச்சுடனேயே முடிகிறது. பார்வையாளர்களுடன் நேரடியாகப் பேசி ஒரு கருத்தியல் உரையாடலை முன் நகர்த்தும் பேச்சினூடாக கதைக்காட்சி விரிகிறது. காமிராவின் நகர்வும் பேச்சின் நகர்வும் பார்வையாளர்களின் நகர்வாக நீண்டு செல்கிறது. ழான் லுய்க் கோதாரின் conscious observer என்ற உத்தியும் narrative justaposition என்ற உத்தியும் இப்படத்தின் திரைக்கதை அடிப்படைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. குரோசோவா படைப்பான, ரோஷாமான் அமைப்பு இருப்பது வெளிப்படை. இவை இணைக்கப்பட்டுள்ளது நன்றே. பாதகமில்லை. ஆனால் நோக்குதல் கோணம் என்று வருகிற பொழுது ஏஞ்சலா என்ற பெண், ஆயுள் தண்டனை பெற்ற கொத்தாளத் தேவர், மரணதண்டனை பெற்ற விருமா என்கிற விருமாண்டி ஆகிய மூன்று பார்வைகள் மட்டும்தான் சாத்தியம். இவை மூன்றும் இணைந்து காட்சி மற்றும் கதையாடல் பின்னல் ஒன்றை ஏற்படுத்த முடியும். இந்தப் பின்னல் இங்கு உருவாக்கப்பட்டே உள்ளது. அதே சமயம் காட்சிக்குப் பின்னிருந்து கதை சொல்லும் குரல்கள் கேட்டபடி இருக்கின்றன. ஒரே காட்சி ஒரே நிகழ்வு இருவித அர்த்தப்படுத்தலுக்கு மொழி மூலம் உள்ளாக்கப்படுகிறது. இந்த அர்த்தப்படுத்தலுக்கும் பார்வையாளர்களின் அர்த்தப்படுத்தலுக்கும் இடையே முரண்பாடு தோன்றும் என்றால் இங்கு பலவித திறந்த கேள்விகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. பார்ப்பதற்கும் நம்புதலுக்கும் நிகழ்வுக்கும் அதன் நிஜநிலைக்கும் இடையே உள்ள முரண்பாடும் சிக்கலும் இந்தக் கேமராக் கோண நகர்வின் மூலமும் கதை சொல்லும் குரல் மூலமும் ஓரளவு புலப்படுத்தப்பட்டே உள்ளது. இது தமிழ்த்திரைப்படப் புலனுக்கு புதிய ஒரு அணுகுமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வன்முறை என்பது பிரச்சினைப்படுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படும் இப்படத்தில், தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை வன்முறை பற்றிய கேள்வி, மேல் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தனக்காக ஒருவகை வரலாற்றை உடைய சாதிச் சமூகம் ஒன்றின் வன்முறை பற்றியதாக அக்கேள்வி இருந்தாலும் தமிழ் நிலத்தின் எல்லா சாதிகளுக்கு முன்னும் வைக்கப்படக்கூடியதே. ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் இடையிலான வெறுப்பும் வன்முறையும் ஒரு தளத்திலும், ஒரு சாதிக்குள்ளாகவே, இரு குடும்பத்திற்குள்ளாகவே உள்ள வன்முறையும் என இந்த வன்முறைத் தொடர்செயலாக உள்ளது. அதற்குள்ளும் பெண் மற்றும் பெண்மை மீதான வன்முறையும் பொருட்படுத்தாத தன்மையும் தீராத வலியாக உறைந்து கிடக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதலின் உருவகங்களாகவும் பதிலிகளாகவும் நிகழும் சடங்குகளும் சமூக ஊடாட்டங்களும் அடுத்த வன்முறைக்கு ஆரம்பமாகவும் அந்த நேர வன்முறைக்கு மறைப்பாகவும் செயல்பட்டபடி உள்ளன. இவை அனைத்தும் இப்படத்தில் தேவைக்கதிகமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சல்லிக்கட்டாக இருந்தாலும், வீட்டில் நடக்கும் விருந்தாக இருந்தாலும், ஊர்ப்பஞ்சாயத்தாக இருந்தாலும் இந்த வன்முறையின் நெருப்பு தொடர்ந்து கனன்றபடியே இருக்கிறது.

இப்படத்தில் சித்திரிக்கப்படும் அன்னலட்சுமி தொடங்கி எல்லா பெண்களும் ஓயாத ஒப்பாரியாலும் ஓலத்திலும் பயத்திலும் அழுந்திக்கிடக்கிறவர்களாகவே உள்ளனர். அன்னலட்சுமி என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு இக்கதையைப் புரிந்துகொண்டால் மண்ணுக்காகவும் ஆக்கிரமிப்புக்காகவும் பலியிடப்படும் ஒரு பெண்ணை, தமிழ் வரலாற்றின் பின்னணியில் அடையாளம் காணமுடியும். மண்ணும் பெண்ணும் இவர்களின் வன்முறைக்குக் காரணமாக இருந்தாலும் இரண்டுமே புரிந்து கொள்ளப்படாதவைகளாகவும் சீரழிக்கப்படுகின்றவைகளாகவுமே உள்ளன. இந்த ஒரு வளைக்கோட்டைத் தொடர்ந்து கதை நகர்ந்து இருந்தாலும் அது வேறு சில கதைக்கோடுகளால் கலைக்கப்பட்டுவிடுகிறது. தீமை தனது நாசத்தை விளைக்க தயார் நிலையில் உள்ளது. சமூக மனிதர்களின் வன்முறையைச் சட்டம், காவல் அமைப்பு, நீதித்துறை போன்றவை கூர்மைப்படுத்தித் தருவதுடன் இதைக் குறைப்பதான பாவனையைப் பெருக்கிக்கொண்டே இருப்பதை இப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் புலப்படுத்திக்கொண்டே இருக்கிறது. பேய்க்காமன் என்ற காவல்துறை அதிகாரி இரண்டு பக்க சதித் திட்டங்களிலும் முக்கியப் பங்காளியாக இருப்பதும் நடக்கும் கொலைகளுக்கு காரணமாக இருந்தும் சட்டத்தால் பாதுகாப்பு பெற்றவராக இருக்கிறார். இந்தியச் சமூகங்களில் குற்றவியல் பற்றிய சிக்கலான சித்திரிப்பு இது. இப்படியாக பலவித முக்கியப் பதிவுகளைக் கொண்டிருக்கும் இப்படம், வேறு சில வகையிலும் முக்கியத்துவம் உடையது.

இதில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரத்தின் சாதியும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கிடையில் உள்ள உறவும் பரம்பரை பகையும் சொல்லப்படுகிறது. ஒரு சாதி மற்ற சாதி மீது கொண்டுள்ள எதிர்மறைச் சொல்லாடல் பதிவு செய்யப்படுகிறது. காட்சியில் இடம்பெறும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சமூகச் செயலைச் செய்பவராகவே இருக்கிறார். இவர்கள் வெறும் கும்பல் இல்லை. குழந்தைகள், சிறுவர்கள், இளம்பெண்கள், பாட்டிகள் அனைவரும் உணர்ச்சியும் பதற்றமும், கோபமும் அழுகையும் அலைக்கழிப்பும் உடையவர்களாகவே காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இவை தமிழ்த் திரைப்படத்திற்குத் தேவையான பதிவுகள்.

துணிவு மற்றும் வன்மத்திற்கு இடையில் உள்ள உறவு தொடர்ந்து நாடகப்படுத்தப்படும் இப்படத்தில், வீச்சரிவாள் ஒரு கருவியாக மீண்டும் மீண்டும் தோன்றி அச்சுறுத்திக்கொண்டே உள்ளது. இந்த அச்சத்திற்கு நடுவே மன்னிப்பு என்பது பற்றிய கேள்வி மையப்படுத்தப்படுகிறது. மன்னித்தல் ஙீ மன்னிப்புக் கேட்டல், குற்றம் புரிதல் ஙீ குற்ற உணர்வில் தளர்தல் என்ற எதிரிடைகளில் வரலாறு பற்றியும் தமிழ்ச் சமூகம் பற்றியுமான பரிசீலனை இப்படத்தில் ஓரளவு முன்வைக்கப்பட்டுள்ளன. இவை பற்றியெல்லாம் சிந்திப்பதற்கான முகாந்திரமோ, அக்கறையோ இல்லாத தமிழ்த்திரைப்பட கயமைக்கு நடுவே இதுபோன்ற படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.

ஆனால், இத்திரைப்படம் ஏன் முழுத்திறமான படைப்பாக, பண்பாட்டு மதிப்பீட்டு பரிசீலனை ஆவணமாக மாறாமல் தன்னைத் தானே ஊனப்படுத்திக்கொண்டது என்பதுதான் முக்கியமான கேள்வி.

முதலில் இத்திரைப்படம் மரணதண்டனை நீக்கம் பற்றி பேசுகிறதா இல்லை வன்முறை என்பதைப் பற்றிப் பேசுகிறதா என்பதில் தெளிவு இல்லை. வன்முறை பற்றிய பதற்றத்தை, பயத்தை, அறம் சார்ந்த எதிர்ப்பைக் கொண்டிருந்தால் இப்படத்தில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையென வெட்டும் கொலையும் ரத்தமும் காட்சிப்படுத்தப்படுவது இயலக்கூடியதுதானா? எதார்த்தத்தை, நிகழ்வை அப்படியே சித்திரிப்பதாகச் சமாதானம் சொல்வது திரைமொழி தெரியாதவர்களின் வேலை. வன்முறையின் கொடுமை அவலம் வலி போன்றவற்றைக் காட்சிப்படுத்தாமலேயே குலைபதறும் அளவுக்குப் பதிவு செய்ய முடியும். உண்மையான கலைஞர்கள் இதைச் செய்துகாட்டி இருக்கிறார்கள். வன்முறையைக் காட்சிப்படுத்துதல் அமெரிக்கத் திரைப்படங்களின் கேவலமான உத்தி. அது வன்முறைக்கெதிராக அன்றி வன்முறையைச் சுகிக்கும் நரம்பு மண்டலத்தையே உருவாக்குபவை. வன்முறை மீதான மரத்துப்போன தன்மையை உருவாக்குபவை. மனித உடல் பற்றிய மிகப் பொய்யான தகவல்களையே இவை தருகின்றன. மனித உடலின் நொய்மை, பூஞ்சைத் தனம், பாதுகாப்பற்ற தன்மை விளக்கப்படுவதே இல்லை. இப்படத்திலும் மனித உடல் பற்றிய அறிவியலுக்கும் அறவியலுக்கும் எதிரான, புறம்பான சித்திரிப்புகளே அதிகம் இடம் பெறுகின்றன.

சிறைச்சாலையைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட சம்பவங்கள் அனைத்தும், சில்வஸ்டர் ஸ்டோலன் படத்தைப் போன்ற அபத்தமான சித்திரிப்புகள். அவை இந்தப்படத்திற்குத் தேவையே இல்லை. வீடியோவில் சப்ஜெயிலரின் சதி பதிவாவதும் கேசட்டுக்காக எல்லோரும் அந்த டாக்குமெண்டரி இயக்குநரையும் வீடியோகிராபரையும் துரத்துவதும் அதற்குள் நடக்கும் கொலைகள், தாக்குதல்கள், கைதிகளின் கொலைவெறி ஓட்டங்கள் இவைகள் எந்த வகையிலும் மரண தண்டனை நீக்கம், வன்முறை மறுப்பு என்பவற்றிற்குப் பின்புல உணர்வு நிலைகளைத் தோற்றுவிக்கவே இல்லை. ஒரு திறமான மனித அக்கறை உடைய காட்சிக்கதை அதற்குள்ளாகவே நசிந்து, அழிக்கப்பட்டு விடுகிறது.

கதாநாயகன் என்றாலே வானத்திலிருந்து குதித்துத்தான் வரவேண்டும் என்ற திரைப்பட விதிமுறை இந்தப் படத்திலும் தவறாமல் பின்பற்றப்படுவதுடன், கதாநாயகன் எத்தனைமுறை கத்திக்குத்து வாங்கினாலும் மனம் தளராத அசுர பலத்துடன் இருப்பது எந்தத் திரைப்பட மொழி இலக்கணத்திலும் இல்லாதது. மனித உடல் எப்படிப்பட்டது? அந்த மரணதண்டனை பெற்ற தலைமையாசிரியர் சொல்வதுபோல சொன்னத கேக்கலைங்க, சும்மா தட்டினேன் பொட்டுன்னு போயிடுதுங்க என்பது போன்றதுதான். இதைப் புரிந்துகொள்ளாமலும் புரியவைக்காமலும் எப்படி வன்முறைக்கும் மரணதண்டனைக்கும் எதிராக ஒரு படத்தை உருவாக்க முடியும்?

இந்தப் படத்தில் எல்லோருமே சிரத்தையாக நடித்திருக்கிறார்கள்; முடிந்த அளவு ஒவ்வொரு அசைவும் திட்டமிடப்பட்டு சிரத்தையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கொத்தாளத் தேவராக வரும் பசுபதி, பேய்க்காமனாகப் பாத்திரம் செய்யும் சண்முகராஜன் இவர்களின் நடிப்பில் உள்ள நுட்பமான சித்திரிப்பு ஏன் விருமாண்டியாகப் பாத்திரம் ஏற்றிருக்கும் கமல்ஹாசனுக்கு வாய்க்கவில்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தானே. கொத்தாளத் தேவராக கமல்ஹாசனும் விருமாண்டி மாப்பிள்ளையாகப் பசுபதியும் நடித்திருந்தால் இது நடந்திருக்கலாம். நல்ல திரைக் கலைஞர்கள் அப்படித்தான் செய்வார்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட படங்கள் வன்முறையின் அவலம், மரணதண்டனை நீக்கம், மனித உறவுகளின் மேன்மை பற்றியெல்லாம் பேசுவதற்கான கலைத் தகுதியைப் பெறும். ஷியாம் பெனகலின் மம்மோ திரைப்படத்தை ஒருமுறை பாருங்கள்; இந்தியா _ பாகிஸ்தான் பகைமை என்ற அவலம் நிறைந்த வன்முறை எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். நெஞ்சில் ஒரு வலி பந்தாக அடைத்துக்கொள்ளும்.

இந்தத் திரைப்படத்தில் விருமாண்டி, விருமாண்டி என Êஏதோ மந்திர கோஷம் போல் ஒலிக்கும் கோரஸ் எதைச் சொல்ல முயற்சிக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் மௌனமாக உணர்த்திவிடுகிறது; உலக அரங்கில் அக்கறையோடு வழங்கப்படுவதற்கு ஏற்ற ஒரு திரைப்படம் அந்தத் திரைப்படத்திற்குள்ளாகவே அபத்தப்படுத்தப்பட்டுவிட்டது. இதுபோல் இன்னும் எத்தனைமுறை கமல்ஹாசனுக்கு நடைபெறுமோ தெரியவில்லை. நாம் செய்ய ஒன்றும் இல்லை இதில். இளம் கலைஞர்கள் ஒரு டிஜிடல் வீடியோ காமை எடுத்துக்கொண்டு அக்கறையுடைய சில நண்பர்களுடன் மூன்று மாதங்கள் உழைத்தால் உலக அரங்கில் தமிழிலிருந்து ஒரு படம் இடம் பெற்றுவிடும். மக்கள் பார்ப்பார்களா? பார்க்காமல்! ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு ஊர்ப் பொதுத்திடலில் திரையிட வேண்டியதுதான். அடுத்த திரைப்படத்திற்கு பிச்சையா எடுக்கமுடியும்? தேவையே இல்லை; கிடைக்கும் இரண்டு, மூன்று விருதுகள் இந்திய ரூபாயில் கோடியைத் தாண்டும் தெரியுமா? வேண்டியதெல்லாம் திரைப்படத்தைக் கலையாகவும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மனம் மட்டும்தான். ஆவணங்கள் கூட கலையாக முடியும்.

இப்படத்தில் மரண தண்டனை நீக்கம் முன்னிலைப்படுத்தப்படுகிறதா? குற்றமிழைக்காதவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பது முன்னிலைப்படுத்தப்படுகிறதா? விருமாண்டிக்கு தூக்குதண்டனை கூடாது என்பதை பார்வையாளர்கள் அனைவருமே ஒப்புக் கொள்வார்கள்தானே? உண்மையில் கொத்தாளத் தேவருக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டு, அந்நிலையில் தூக்கு தண்டனை நீக்கம் வலியுறுத்தப்படுமென்றால் மட்டுமே அது மரணதண்டனை நீக்கம் பற்றிய கேள்விக்கு முக்கியத்துவம் தருவதாகப் பொருள்படுமல்லவா?

அன்னலட்சுமிகளைத் தூக்கில் தொங்க வைக்கும் குடும்ப விதிகளுக்கும் விருமாண்டிகளுக்குத் தூக்கு விதிக்கும் சட்ட விதிகளுக்கும் இடையில் உள்ள உறவு என்ன? தூக்குக் கயிறுகள் வீட்டின் உட்புறத்தே தயாரிக்கப்படுகின்றன என்பது உண்மையா?

இந்தப் படத்தில் சித்திரிக்கப்படும் ஒரு சாதி குறித்து தமிழ்த்திரைப்படங்கள் நிறையவே பேசி இருக்கின்றன. துணிவு, வீரம், அஞ்சா நெஞ்சம் என்ற வகையிலும் வன்முறை, கொடூரம், இரக்கமின்மை என்ற வகையிலும் பலவிதமாக இவை பொருள்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் வீச்சரிவாளை எடுப்பதற்கும் கொலையே அனைத்துக்கும் தீர்வு என்பதற்கும் வீரம் துணிவு என்பன அடிப்படையா என்பது முக்கியக் கேள்வி. இதைக் கொண்டிருப்பவர்கள் இந்திய அளவில் இதைப்போன்ற சில சாதிகள் மட்டும்தானா! அரிவாளைப் பார்த்திராத பல சாதிகள் இந்தியச் சமூகத்தின் பலவித கொடூரங்களுக்கு மூல சக்தியாக இருந்து வருவது வரலாற்று உண்மை. கிண்டல் செய்தால்கூட வெட்டிப்புடுவாங்கியா என்று சொல்லும் அளவுக்கு இந்த சாதியின் மீது படிந்துள்ள படிமத்திற்கு (அது உண்மையா என்பதை பாதிக்கப்பட்டவர்கள்தான் கூறவேண்டும்) எவையெல்லாம் காரணங்கள்? கும்பலும் கூட்டமும் யாரையும் கொலைகாரர்களாக்கும் தன்மை உடையது. வன்முறையும் கொலையும் பயத்தின் அடிப்படையில் உருவாவது என்றால் இந்தச் சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பயம் எத்தகையது? தமிழ்த் திரைப்படங்கள் இந்த வன்முறையை பலவிதமாகப் புகழ்ந்து துதிபாடி காட்சிப்படுத்தி கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழ்த் திரைப்படங்கள் பெண் உடல்மீதும் மனம் மீதும் செலுத்தப்படும் வன்முறைக்கு இவை காதல் என்று பெயர் வைத்திருக்கின்றன. மற்ற உடல்மீது செலுத்தப்படும் அளவுக்கதிகமான வன்முறைக்கு இவை வீரம் என்று பெயர் வைத்திருக்கின்றன. பார்வையாளர்களின் மனம்மீது இவை செலுத்தும் வன்முறைக்கு பொழுதுபோக்கு என்று பெயர் வைத்திருக்கின்றன. இந்த நிலையில் இப்படம் செய்ய விரும்புவது என்ன? இப்படமும் அவற்றில் ஒன்றுதானா அல்லது வேறுபட்டதா? மாப்பிள வெட்டு வெட்டு. விடாத அப்பன வெட்டு என்ற அந்தக் குட்டிப் பையனின் கத்தல் தமிழ்ச் சினிமாவின் கத்தலா? தமிழ்ச் சினிமாவை நோக்கிய கத்தலா?

பின்குறிப்பு: பெண் நிலையிலிருந்தும், தலித் கருத்தியலிலிருந்தும் இப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள இரு சாதிகளின் மன நிலையிலிருந்தும் பார்க்கும்போது என்ன வகை வாசிப்புகள் உருவாகமுடியும் என்பதை மனம் கொள்ளமுடிந்தாலும் அவை இங்கு பதிவு செய்யப்படவில்லை. எல்லா அடையாளங்களையும் எல்லோரும் ஆவணப்படுத்திவிட முடியாதுதானே?

தன் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு பித்துப்பிடித்து புலம்பிக் கொண்டிருக்கும் பெண்ணின் குரல் இப்படத்தில் மட்டுமல்ல; தமிழக வரலாறு முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று இந்தத் தாய்கள் தங்கள் பிள்ளைகளையும் பெண்களையும் தமிழ்ச் சினிமாவிடம்தான் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள்; ஆனால் எந்தப் புலம்பலும் இல்லாமலும் வரலாறு சற்றே கொடூரமாகத் தனக்குள் சிரித்துக்கொண்டு நகர்கிறது.

தமிழ்ச் சினிமா வேண்டுமா? தமிழ்ச் சமூகத்தின் சினிமா வேண்டுமா? எனக் கேள்வி கேட்டால்; தமிழ்ச் சமூகத்தின் சினிமாவாக இது தன்னளவில் மிகச் சிரமத்தோடு வெளிவந்துள்ளது.</span>
<img src='http://www.kumudam.com/theeranadhi/march2004/pg4a.jpg' border='0' alt='user posted image'>

நன்றி: <b>தீராநதி</b>

Print this item

  நாளை உலகம் இல்லையென்றால். . .
Posted by: Paranee - 03-13-2004, 03:24 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

நாளை உலகம் இல்லையென்றால். . .

<img src='http://www.well.com/user/kaijohn/tor.world.gif' border='0' alt='user posted image'>
இன்றைய இரவே
இறுதி இரவெனில்
நாளைய விடியல் எமக்கில்லையென்றால்

உறக்கத்தை உதறியெறிவேன்
நீண்ட உறக்கம் எம்மை
நெருந்கி அழைக்கும்போது
இந்த உறக்கத்தை யார் கவனிப்பார்

சிந்திவிழும் செக்கன்களையும் சேர்த்துக்கொண்டே
அலைகளின் மீது அமிழ்ந்து எழுவேன்
நிலவின் கிரணத்தில் நீந்திக்கொள்வேன்
மலர்களின் மடியில் ஒருநொடியெனினும்
மரிக்கமுதல் மண்டியிட்டமர்வேன்

புல்லின் மென்மையில்
அசையும் கொடிகளின் இடையில்
நிலவின் பரிதியில்
காற்றின் அசைவில்
கடலின் அமைதியில்
மலர்களின் மலர்ச்சியில்
ஒவ்வொரு செக்கன்களையும்
சிக்கனமின்றி செலவழித்த வைப்பேன்

பிஞ்சு கரங்களில்
ஓய்ந்த உரமேறிய தோள்களில்
மடிவற்றிய மாந்தர்களின்
மனம் வற்றாத கால்களில்
ஓடிந்த உள்ளங்களில்
இன்னும் சில செக்கன்களை
செலவழித்து வைப்பேன்

பந்தங்களோடும் பாசங்களோடும்
இதுவரை என்னை ஏறெடுத்துப் பாராத
அழகிய இளம் நங்கைகளிடமும்
ஒரு நொடி பேசிவிட்டு வருவேன்
வாழ்வில் நான் வெற்றிகொள்ள
போட்டியாய் எனக்கு வந்த
ஏதிரியை அன்பாய் அழைத்து
ஓரிரு வார்த்தைகள்
பாசத்தடன் பேசிவைப்பேன்

கல்லெறிவேண்டி காலுடைந்த
ஊர் நாயிடமும் பிடித்து பிடித்து
அடைத்துவைத்து திறந்துவிட்ட
தெருப்புூனையிடமும் கண்ணீரால்
ஒரு மொழி பரிமாறிக்கொள்வேன்

வளர்த்த பசு
அணைத்த பசுங்கிளி
கவிதைகள் பல தந்த
என்வீட்டு மீன்தொட்டி
எல்லாவற்றையும் சுதந்திரமாய்
வாழ்வை ரசிக்க அனுப்பிவைப்பேன்

ஊருடன் ஓன்றாகி
ஓர் இடம் தெரிந்து
அங்கேயே இறுதிவரை இருந்திடுவேன்
தாய் மடிதேடி தலையினைவைத்து
அரைநொடி அங்கு அழுதுவைப்பேன்
நண்பர்கள் கூடி ஒன்றாய் அமர்ந்து
ஒரு கணம் எம்மை உணர்ந்துகொள்வோம்

புதியதோர் புூமியில்
எனக்கும் ஓர் இடம்
இன்றைய உறவுடன்
இன்றைய நட்புடன்
இன்றைய உலகுடன்
படைத்திடவேண்டுமென்று
இறைவனிடம் இறுதி மனு
ஓன்று இட்டுவைப்பேன்

நாளை உலகம் இல்லையென்றால்
நினைக்கவே நெஞ்சு வதைக்கின்றதே
அன்பே உன்மடிதேடி என்தலைசாய்ந்து
உனக்காய் ஓர் முத்தம்
இறுதியாய் இட்டுவைப்பேன்
இதழ்களை இறுக்கி
கரங்களை பிணைத்து
உன்னுடன் நானும்
இணைந்திருப்பேன்
இறப்பிலாவது நாம் இணைபிரியாது
ஓன்றாவோம் என்ற ஆசையில். . .

ந.பரணீதரன்

Print this item