![]() |
|
நாளை உலகம் இல்லையென்றால். . . - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நாளை உலகம் இல்லையென்றால். . . (/showthread.php?tid=7331) |
நாளை உலகம் இல்லையென்ற - Paranee - 03-13-2004 நாளை உலகம் இல்லையென்றால். . . <img src='http://www.well.com/user/kaijohn/tor.world.gif' border='0' alt='user posted image'> இன்றைய இரவே இறுதி இரவெனில் நாளைய விடியல் எமக்கில்லையென்றால் உறக்கத்தை உதறியெறிவேன் நீண்ட உறக்கம் எம்மை நெருந்கி அழைக்கும்போது இந்த உறக்கத்தை யார் கவனிப்பார் சிந்திவிழும் செக்கன்களையும் சேர்த்துக்கொண்டே அலைகளின் மீது அமிழ்ந்து எழுவேன் நிலவின் கிரணத்தில் நீந்திக்கொள்வேன் மலர்களின் மடியில் ஒருநொடியெனினும் மரிக்கமுதல் மண்டியிட்டமர்வேன் புல்லின் மென்மையில் அசையும் கொடிகளின் இடையில் நிலவின் பரிதியில் காற்றின் அசைவில் கடலின் அமைதியில் மலர்களின் மலர்ச்சியில் ஒவ்வொரு செக்கன்களையும் சிக்கனமின்றி செலவழித்த வைப்பேன் பிஞ்சு கரங்களில் ஓய்ந்த உரமேறிய தோள்களில் மடிவற்றிய மாந்தர்களின் மனம் வற்றாத கால்களில் ஓடிந்த உள்ளங்களில் இன்னும் சில செக்கன்களை செலவழித்து வைப்பேன் பந்தங்களோடும் பாசங்களோடும் இதுவரை என்னை ஏறெடுத்துப் பாராத அழகிய இளம் நங்கைகளிடமும் ஒரு நொடி பேசிவிட்டு வருவேன் வாழ்வில் நான் வெற்றிகொள்ள போட்டியாய் எனக்கு வந்த ஏதிரியை அன்பாய் அழைத்து ஓரிரு வார்த்தைகள் பாசத்தடன் பேசிவைப்பேன் கல்லெறிவேண்டி காலுடைந்த ஊர் நாயிடமும் பிடித்து பிடித்து அடைத்துவைத்து திறந்துவிட்ட தெருப்புூனையிடமும் கண்ணீரால் ஒரு மொழி பரிமாறிக்கொள்வேன் வளர்த்த பசு அணைத்த பசுங்கிளி கவிதைகள் பல தந்த என்வீட்டு மீன்தொட்டி எல்லாவற்றையும் சுதந்திரமாய் வாழ்வை ரசிக்க அனுப்பிவைப்பேன் ஊருடன் ஓன்றாகி ஓர் இடம் தெரிந்து அங்கேயே இறுதிவரை இருந்திடுவேன் தாய் மடிதேடி தலையினைவைத்து அரைநொடி அங்கு அழுதுவைப்பேன் நண்பர்கள் கூடி ஒன்றாய் அமர்ந்து ஒரு கணம் எம்மை உணர்ந்துகொள்வோம் புதியதோர் புூமியில் எனக்கும் ஓர் இடம் இன்றைய உறவுடன் இன்றைய நட்புடன் இன்றைய உலகுடன் படைத்திடவேண்டுமென்று இறைவனிடம் இறுதி மனு ஓன்று இட்டுவைப்பேன் நாளை உலகம் இல்லையென்றால் நினைக்கவே நெஞ்சு வதைக்கின்றதே அன்பே உன்மடிதேடி என்தலைசாய்ந்து உனக்காய் ஓர் முத்தம் இறுதியாய் இட்டுவைப்பேன் இதழ்களை இறுக்கி கரங்களை பிணைத்து உன்னுடன் நானும் இணைந்திருப்பேன் இறப்பிலாவது நாம் இணைபிரியாது ஓன்றாவோம் என்ற ஆசையில். . . ந.பரணீதரன் - shanmuhi - 03-13-2004 கவிதை அருமை. <b>புல்லின் மென்மையில் அசையும் கொடிகளின் இடையில் நிலவின் பரிதியில் காற்றின் அசைவில் கடலின் அமைதியில் மலர்களின் மலர்ச்சியில் ஒவ்வொரு செக்கன்களையும் சிக்கனமின்றி செலவழித்த வைப்பேன் </b> நாளை உலகம் இல்லையேன்றா... ஒவ்வொரு செக்கன்களையும் சிக்கனமாய் செலவிழித்து..... புல்லின், நிலவின், காற்றின், கடலின், மலர்களின் அழகை ரசிக்கத் தவறவிட்டிர்களோ..? - sWEEtmICHe - 03-13-2004 கவிதை அருமை... பரணீ அவர்களை <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_30.gif' border='0' alt='user posted image'> - sWEEtmICHe - 03-13-2004 காத்தி௫க்கிறேன் விடியலுக்காக ஏட்டில் மட்டுமல்ல வாழ்விலும் வசந்தம் வரட்டும் என்பதற்காக!!!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 03-13-2004 கவிதை மிக அருமை பரணி அண்ணா நாளை என்பது நிச்சயமற்ற உலகிலே இப்படியான கற்பனை எழுந்ததில் ஆச்சரியமில்லை இனிய தமிழ் வார்த்தைகள் இடையே வரும் செக்கன்களைத் தவிர்த்திருக்கலாமே - sWEEtmICHe - 03-13-2004 Eelavan Wrote:இனிய தமிழ் வார்த்தைகள் இடையே வரும் செக்கன்களைத் தவிர்த்திருக்கலாமேஓ! அதுவும் இருகிறதா வார்தைகளில்....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 03-14-2004 [size=16] கவிதை அருமை பரணி. |