Yarl Forum
மட்டக்களப்பு மண்ணில்...!? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டக்களப்பு மண்ணில்...!? (/showthread.php?tid=7324)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

மட்டக்களப்பு மண்ணில்.. - anpagam - 03-15-2004

<b>கருணாவுக்கு ஒரு கடிதம் </b>
டி.சிவராம் (தராக்கி)

அன்பின் கருணாவுக்கு, வணக்கம்!

அரியத்திடம் நீங்கள் கூறிய தகவல் கிடைத்தது. என்மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி.

நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்கப்போவதாக 'அஸோஸியேட்டட் பிரஸ்" என்ற அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அறிவித்ததைக் கேள்வியுற்று மட்டக்கள்ப்புக்கு விரைந்துவந்தேன். அந்தச்; செய்தி பொய்யாக இருக்கும். பிரச்;சினைகள் ஏதாவது இருந்தால் அது எமது விடுதலைப்போராட்டத்தைப் பாதிக்காதவகையில் சுமுகமாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையில் கொக்கட்டிச்;சோலைக்கு வந்தேன். அங்கே ஒரு பகல் பொழுதை உங்களோடு தொடர்புகொள்ளும் முயற்சியில் செலவழித்தேன். முயற்சி பயனளிக்கவில்லை.
போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலத்தில் மட்டகளப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பல அச்;சுறுத்தல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் நின்று செயல்பட்ட ஊடகவியலாளர் பற்றி நீங்கள் அடிக்கடி பெருமையுடன் பேசியிருக்கிறீர்க்ள். நீங்கள் போராளிகளிடம் என்னுடய கட்டுரைகளை கட்டாயம் படிக்கும்படி கூறுவதை அறிந்து நான் பலதடவை பெருமைப்பட்டிருக்கிறேன்.

எமது மாவட்டத்தின் நன்மை கருதி அதன் முன்னேற்றம், சுபீட்சம் என்பவற்றை பற்றி மட்டக்களப்பின் ஊடகவியலாளர்களோடு நீங்கள் பல்வேறு முறை உரையாடியிருக்கிறீர்கள். நாங்களும் பலமுறை உரிமையோடு உங்களை அணுகி எமது மண்ணின் அரசியல், சமூகப் பிரச்;சினைகளைப் பற்றி மனம்விட்டுப் பேசியிருக்கின்றோம். ஆனால், நீங்கள் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிவதாக எடுத்த பாரது}ரமான முடிவைப்பற்றி எங்களிடம் ஒருவார்த்தை கூட இதுவரை பேசவில்லை. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் நலன்கருதியே நீங்கள் தனித்து இயங்கமுடிவு எடுத்ததாகக் கூறிவருகின்றீர்கள். அந்த மக்களின் ஒரு இன்றியமையாத அங்கமாகவே ஊடகவியலாளரான நாம் உள்ளோம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டதாலேயே எம்மோடு நெருங்கிப் பழகினீர்கள். ஆனால் எமது மட்டு-அம்பாறை மாவட்ட மண்ணையும் அதன் மக்களையும் மிகப் பாரது}ரமாகப் பாதிக்கின்ற முடிவை எடுத்தபோது நாங்கள் ஏன் உங்கள் கண்களில் படவில்லை? ஏன் அமெரிக்கச்; செய்தி நிறுவனமான 'அஸோஸியேட்டட் பிரஸ்"ஸிற்கு மட்டும் உங்களுடைய முடிவுகளை பிரத்தியேகமாக அறிவித்துக்கொண்டிருந்தீர்கள்? மட்டக்களப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிடும் சிமாலி சேனாநாயக்க மட்டுமே உங்கள் கருத்தை வெளிக்கொணர தகுதிவாய்ந்தவராக ஏன் தெரிந்தெடுக்கப்பட்டார்?

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மண் மீது உங்களுக்குப் பற்றும் பாசமும் இருக்கிறது - அதனால் தான் தனித்து இயங்கப்போகின்றேன் என கூறும் நீங்கள் சிங்கள இராணுவத்தின் கோரப்பிடியில் எமது மக்கள் சிக்கி மரண ஓலம் எழுப்பிய காலங்களிலே எமது வேதனை கண்டு எள்ளி நகையாடிய சிங்கள பேரினவாத ஊடகவியலாளர்களை எப்படி இப்போது உங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆக்கிகொண்டிர்கள்? எமது மண்ணையும் மக்களையும் உங்களுடைய ஆணையின் கீழ் தமிழீழம் என்ற இலட்சியத்தோடு விடுதலைக்கு வித்தாகிப்போன எமது போராளிகளையும் இழிவுபடுத்தும் கொச்;சைப்படுத்தும் உங்களிடம் அவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு பேட்டியையும் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? தெரியாவிட்டால் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள ஆங்கில பத்திரிகைகளை து}க்கிபாருங்கள்.

'இன்னும் ஒரு தமிழ் எட்டப்பன் கிடைத்துவிட்டான்" என அவை கொக்கரிப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களையும் தலைவரையும் கொச்;சைபடுத்தி இழிவுபடுத்தி முன்பக்கத்தில் வரைகின்ற கேலிச்;சித்திரங்களை கண்டால் எந்தவொரு தன்மானமுள்ள மட்டக்களப்பானும் கூனிக்குறுகிப்போவான்.

கருணா ஈவிரக்கமற்ற கொலைகாரன், பிள்ளைபிடிகாரன் என்றெல்லாம் கொழும்புப் பத்திரிக்கைகள் மிககேவலமாக உங்களைப்பற்றி எழுதிய காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் குறிப்பாக மட்டக்களப்பு செய்தியாளர்கள் எவ்வாறெல்லாம் பொதுநன்மை கருதி உங்களுக்கு உறுதுணையாக நின்றோம் என்பதையெல்லாம் கணப்பொழுதில் மறந்து சிங்கள பேரினவாத ஊடகங்களையும் எமது மண்ணோடு எந்த சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு செய்தி நிறுவனங்களையும் இப்போது நீங்கள் தலையில் வைத்துக்கொண்டாடுவதன் மர்மம் என்ன?

இனி விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு நீங்கள் கூறும் காரணத்தைப் பார்ப்போம். மட்டு-அம்பாறை மாவட்டப் போராளிகள் வடக்கில் சென்று போராடி மடிவதை நீங்கள் விரும்பவில்லை எனவும் அவர்கள் தென் தமிழீழத்தை காப்பதற்கே கடமைப்பட்டவர்கள். ஆகவே வன்னிக்கு நீங்கள் போராளிகளை அனுப்ப மறுத்து தனித்து இயங்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளீர்கள். 'nஐயசிக்குறு" என்ற மாபெரும் படையெடுப்பை முறியடிக்க தலைவர் பிரபாகரனின் வலதுகரமாக நின்று வன்னியிலிருந்து அனைத்து தளபதிகளுக்கும் தலைமைத் தளபதியாக செயல்பட்ட நீங்கள் இப்படிக் கூறியிருப்பது எனக்கு மகா வியப்பை தருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போரியல் மூலோபாயம் எது? அதன் தன்மை என்ன? என்பதை அறியாத சிறுபிள்ளை அல்ல நீங்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போரியல் மூலோபாயம் என்பது நீங்கள் 10 வயதுப் பாலகனாக இருந்த காலத்தில் கிழக்குப் பிராந்தியத்தின் இராணுவ புவியியல் அம்சங்களைக் கவனமாக கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதாகும். இது நீங்கள் பள்ளி செல்லும் பாலகனாக இருந்த காலத்தில் மட்டு-அம்பாறை மண்ணில் இருந்து விடுதலைக்கென புறப்பட்ட எமது போரட்ட முன்னோடிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைப் போரியல் மூலோபாயமாகும்.

உலக விடுதலைப்போரியல் நுணுக்கங்களைக் கவனமாகக் கற்றதன் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலையின் இராணுவ மூலோபாயம் வகுக்கப்பட்டது என்பது நீங்கள் நன்றாக அறிந்தவிடயமாகும். ஒரு தேசிய விடுதலைப்போர் ஏகாதிபத்திய தரவுடன் இயங்கும் ஓர் அடக்குமுறை அரசின் படைகளுக்கு எதிராக போராடுவதனால் அதற்கு விடுக்கப்பட்ட தக்கவைக்கப்படக்கூடிய தளப்பிரதேசம் இன்றியமையாதது. வியட்னாம் விடுதலைப்போருக்கு யுனான் மாநிலமும், கியூபாவின் விடுதலைப்போர், கிழக்கு திமோரின் விடுதலைப்போர் ஆகியவற்றுக்கு அவற்றின் மத்திய மலைப்பிராந்தியங்களும் எரித்திரிய விடுதலைப்போருக்கு அதன் போராளிகளால் தக்கவைக்கப்பட்ட தளப்பிரதேசமும் அந்த நாடுகளின் சுதந்திர போராட்ட வெற்றிக்கு எவ்வாறு வழிவகுத்தன என்பதை உலக போரியல் வரலாறு பதிந்துவைத்துள்ளது. இவ்விடுதலை வரலாறுகளையும் அவை தந்த போரியல் பாடங்களையும் கற்றறிந்த கிழக்கு மாகாண விடுதலை போர் முன்னோடிகள் முன்வைத்த கோட்பாட்டையே அறியாதவர் போல் நீங்கள் பேசுவது எனக்கு வேதனையளிக்கின்றது.

ஓர் ஒடுக்குமுறை அரசின் - அதுவும் குறிப்பாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் துணையோடு செயற்படுகின்ற ஒரு அரசின் படைகளை முறியடித்து தேசிய விடுதலையை ஒரு இனம் முன்னெடுக்க வேண்டுமானால் அது எக்காலத்திலும் சிறிய கெரில்லா போர்முறையில் மட்டும் தங்கியிருக்க முடியாது. பலமான பின்னணியுடன் இயங்கும் எதிரியை முறியடிக்க அல்லது வலுவிழக்க செய்வதனால் விடுதலைப்போராட்ட அணிகளை சிறந்த பயிற்சிகளும் தொழில்நுட்பங்களும் மருத்துவ வசதிகளும் கொண்ட மரபுவழி இராணுவமாக மாற்றியமைப்பது கட்டாயமாகும். பெரிய அணிகளை பயிற்றுவிக்கக்கூடிய ஆயுதங்களை பெருமளவில் களஞ்சியப்படுத்தக்கூடிய காயப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளையும் பேணக்கூடிய தங்குதடைகள் இன்றி களமுனைக்கு சகலவிதமான வழங்கல்களையும் செய்திடக்கூடிய தளம் இதற்கு அவசியம். அதைவிட இப்படியான ஒரு தளப்பிராந்தியம் பாதுகாப்பானதாக இருப்பது இன்னும் அவசியமாகும். இவ்வாறான ஒரு தளத்தை வெற்றிகரமாகத் தக்க வைப்பதில்லேயே விடுதலைப்போரின் வெற்றி தங்கியுள்ளது என்பது போரியல் தரம் அடிப்படை பாடம்.

கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்;சாறு, தரவை, வாகரை, சம்புூர், சேனையூர் பகுதி திருமலை வடக்கில் பேராரு, திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்கா படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்றவகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்புறங்களில் ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி கிழக்கின் தளப்பிராந்தியங்களாக கருதப்படக்கூடிய பிரதேசங்கள் காடுகளும் பற்றைக்காடுகளும் வாவிகளும், களப்புகளும், திறந்தவெளிகளும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவை கடலுக்கும் சிங்கள எல்லைக்கும் இடையில் ஆகக்கூடிய து}ரம் 40 கிலோ மீற்றராகவும் ஆகக்குறைந்த து}ரம் 15 கிலோ மீற்றராகவும் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விடுவிக்கப்பட்ட தளப் பிராந்தியங்களாக ஒரு கெரில்லா இயக்கம் எடுத்த எடுப்பில் தக்கவைப்பது சாத்தியமற்றது என்பது தெளிவு.

ஆனால், முல்லைத்தீவு மாவட்டமானது இலங்கைத்தீவிலேயே காடுகளின் அடர்த்திகூடிய மாவட்டமாகும். அதுமட்டுமன்றி கிழக்கைப்போலல்லாது காடுகளுக்கும் கடற்கரைக்கும் தொடர்ச்;சியுள்ள ஒரு பிராந்தியமாக அது காணப்படுகின்றது. கடலிலிருந்தோ சிங்கள எல்லையிலிருந்தோ பெறப்படக்கூடிய எறிகணை வீச்;சு எல்லைக்கு அப்பாற்பட்ட பல உட்பிராந்தியங்களைக் கொண்ட இடமாகவும் அது காணப்படுகின்றது.
இவற்றையெல்லாம் ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே கிழக்கு வன்னிப் பிராந்தியம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தளமாக அமையவேண்டுமென ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில்தான் பிரதேச வேறுபாடின்றி அனைவரும் எமது விடுதலைத் தளப்பிராந்தியத்தை பலப்படுத்த நீண்டகாலமாகச்; செயற்பட்டு வந்துள்ளோம். அந்தத் தளப்பிராந்தியம் இல்லாதிருந்தால் நீங்கள் இன்று உங்களை வளர்த்துவிட்ட தாய்வீட்டிற்கே சவால் விடுவதற்கு உங்களுக்கு பின்பலமாக இருக்கின்ற எந்த ஒரு கனரக ஆயுதமும் எமக்குக் கிடைத்திருக்க முடியாது. அந்தத் தளப்பிராந்தியம் இல்லாதிருந்தால் நீங்களொரு மரபுவழி இராணுவத் தளபதியாக பெயரெடுத்திருக்க முடியாது. அதுமட்டுமா? இன்று சிங்களப் பத்திரிகையாளர்களுக்கும் எமது இனம் பிளவுபட்டுக் கிடப்பதை வேடிக்கை பார்க்கவரும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் நீங்கள் பெருமையுடன் அழைத்துச்; சென்று காட்டுகின்றீர்களே அந்த மீனகம் இராணுவத்தளம்: அதை அமைத்திருக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விடுவிக்கப்பட்ட தளப்பிரந்தியம் வன்னியிலிருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்;சியை எப்படியாவது தடுத்திடவேண்டும் என்ற பயங்கரத்தில் சிறிலங்கா இராணுவம் தனது படைபலத்தின் பெரும்பகுதியை விடுவிக்கப்பட்ட எமது வன்னித் தளப்பிராந்தியத்தைச்; சுற்றி குவித்ததாலேயே நீங்கள் மட்டக்களப்பில் முடிசூடா சிற்றரசனாக பயமின்றிச்; செயல்படக்கூடியதாயிற்று. மட்டக்களப்பில் படுவான்கரைப் பகுதியிலிருந்து எதிரி 44 இற்கும் மேற்பட்ட சிறு முகாம்களையும் தளங்களையும் மூடி வடக்கிற்குக் கொண்டு சென்றதால்தான் நீங்கள் அங்கு தனிக்காட்டு மன்னனாக கோலோச்சக்கூடியதாக இருக்கிறது.

மாறாக எமது மாவட்டத்தின் தளப்பகுதிகளை எதிரியுடன் போரிட்டு விடுவிக்கும் முயற்சியில் நாம் இறங்கியிருந்தால் வன்னியில் இழந்ததைவிட கூடுதலான எமது மாவட்டப் போராளிகளை நீங்கள் இழக்கவேண்டி வந்திருக்கும் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. 1995ம் ஆண்டு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம்மீது நீங்கள் மேற்கொண்ட தாக்குதலிலும், வவுணதீவு முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும் இறந்த எமது மாவட்டப் போராளிகளின் கணக்கை வைத்துக்கொண்டு பார்த்தால் வன்னியில் நாம் இழந்ததை விட கூடுதலான போராளிகளை மட்டுமல்ல எமது மக்களையும் இழக்கவேண்டி வந்திருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வன்னியும் யாழ்ப்பாணமும் பேரழிவுகளையும், பொருளாதாரத் தடைகளையும் சந்தித்த வேளையில் மட்டக்களப்பு கல்வியிலும் பல்வேறுதுறைகளிலும் ஒப்பீட்டளவில் முன்னேறியது என்பதை நாம் மறுக்கமுடியாது. மட்டக்களப்பில் 1995 இன் பின்னர் நாம் வடக்கைப்போல் பேரழிவுகளைச்; சந்திக்காமல் இருந்ததற்கு வன்னியில் உங்கள் ஆணையின் கீழ் தம் இன்னுயிரை ஈந்த அனைத்து மாவட்ட போராளிகளும் காரணமாக இருந்துள்ளனர்.

இதையெல்லாம் மறைத்து நீங்கள் போரியல் அரிவரி தெரியாத கற்றுக்குட்டியாக பிரதேசவாதம் பேசுவது ஏன்? உங்களுடைய நிலைப்பாடு மேற்படி விடயங்களை ஆராயும்போது தர்க்கரீதியாகவும் நியாயபுூர்வமாகவும் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இதை நான் மட்டக்களப்பு மண்ணில் நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளானாக் கூறவில்லை. அந்த மண்ணோடு பல நு}ற்றாண்டுகளாக பின்னிப்பிணைந்த பரம்பரையைச்; சேர்ந்தவன் என்ற வகையில் எடுத்துரைக்கிறேன். விடுதலைப்போரை மீண்டும் உரமூட்டிட வருக என உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.

வணக்கம்
த.சிவராம்

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (14.03.04) & தமிழ்நாதம்.

- Mathan - 03-15-2004

நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. நிறைய கேள்விகளுக்கு பதில் எழுதியிருக்கின்றார். சிந்திக்கவேண்டிய ஒரு மடல்.

நன்றி அன்பகம்

- Shan - 03-15-2004

இதை தானட ஒரு உண்மையான பத்திரிகைளானிடமிருந்து எதிர் பார்க்க முடியும். இது அவரின் கேள்வி மட்டுமல்ல அனைத்து தமிழ் மக்களினதும் கேள்வி, விடை சொல்ல வேண்டியது கருணா....????

- kuruvikal - 03-15-2004

நன்றி அன்பகம்...நாம் இதை இங்கு கொண்டுவர நினைத்திருக்கும் வேளையில் தனித் தலைப்பில் போட்டு அக்கருத்தை வெளிப்படுத்திவிட்டுள்ளீர்கள்....சிந்திக்கவும் ஆராயவும் நிறைய விடயங்கள் அங்கு சொல்லப்பட்டுள்ளது....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

Re: மட்டக்களப்பு மண்ணில - adipadda_tamilan - 03-16-2004

anpagam Wrote:<b>கருணாவுக்கு ஒரு கடிதம் </b>

====================================================

ஆம்!!!!!!!!!!!!!!!!!!! நிறைய விடயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளதாகத் தெரிகிறது.

- anpagam - 03-18-2004

<img src='http://www.tamilnaatham.com/articles/articles/kaasi/kaasi1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnaatham.com/articles/articles/kaasi/kaasi2.jpg' border='0' alt='user posted image'>

- anpagam - 03-19-2004

[b]பிரதேசவாத 'நச்சுத்தனத்துக்கு" எதிராக குரல் கொடுப்பது கிழக்கு புத்திஜீவிகள், மக்களின் கடமை.

இலங்கையில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் அமிர்தலிங்கம் வரை சாத்வீக முறையில் முன் வைக்கப்பட்ட தமிழர்களுக்கு கூடிய அளவு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்கிற நியாயமான கோரிக்கைகள், சிங்கள சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக உலகம் காணாத வகையில் தமிழர்கள் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டுவரை இனக்கலவரங்கள், இனப் படுகொலைகள் தமிழர் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தமிழருக்கெதிரான பாரபட்சங்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டனர். தமிழ் இளைஞர்கள் இவ்விதமான கொடூரங்களை இனிமேலும் பொறுக்க முடியாதென்ற காரணத்தினால், ஆயுதம் ஏந்தி விடுதலை பெற வேண்டுமென்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த விடுதலை இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமை தாங்கினார்.

1983 முதலே அரச படைகளுக்கு எதிராகச் செயல்பட்டாலும், 1983 இலிருந்து 2001 வரை ஆரம்பகட்டத்தில் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு பின்பு மரபுவழி யுத்தத்தில் பாரிய வெற்றிகளைப் பெற்றனர். இதன் பயனாக இன்று வடகீழ் பிராந்தியத்தில் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் 63மூ வீதம் நிலப்பரப்பு இருக்கின்றது. பிரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறும் நிர்வாகத்தை பயங்கரவாத ஆட்சியென்று ஆரம்பத்தில் சொன்னாலும் இன்று சர்வதேச மட்டத்தில் சகல ராஜதந்திரிகளும் கிளிநொச்சிக்கு சென்று வருகிறார்கள். இந்தக் கட்டுப்பாட்டுப்பகுதியில் மத வேறுபாடுகளுக்கு இடமில்லை. எல்லா மதங்களையும் ஒரே தராசில் தான் வைத்து மதிக்கின்றனர். உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதி என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரதேசவாதம் அல்லது பிரிவினை வாதம் போன்றவைக்கு இடமில்லை. புலிகளின் நிர்வாகத் துறையில் தகுதி ஒன்று தான் அளவு கோலாகக் கணிக்கப்படுகின்றது.

இந்தக் கொள்கைகள் மிகவும் போற்றத்தக்க கொள்கைகள். மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா என்பவர் இந்த புலிகள் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து பிரபாகரனுடைய மதிப்பையும் பெற்றுவிட்டார். அவர் தமது திறமையை வெளிப்படுத்திய காரணத்தினால், பிரபாகரன் அவரில் நம்பிக்கையை வைத்திருந்தார். காலப்போக்கில் கருணா தனது திறமைகளைக் காட்டி பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கைக்கு படுமோசடி செய்துவிட்டார்.

கருணாவினுடைய ராஜத்துரோக செயல்பாடுகளையும், அதனுடைய சர்வதேச தாக்கங்களையும், விளைவுகளையும் அநேக கோணங்களிலிருந்து அலசுவது அவசியம். அவர் செய்த ராஜதுரோகத்தை சொல்வதென்றால் குர்;லிங் அல்லது காக்கை வன்னியன் அல்லது எட்டப்பன் அல்லது கதிர்காமர் முதலியவர்களுடைய செயல்பாடுகளை விட ஆயிரம் மடங்கு நச்சுத்தன்மையும் துரோகத்தன்மையும் கொண்டதாகும்.

இராணுவ ரீதியாகவும், இராணுவ கோணங்களிலிருந்தும் கருணாவின் துரோகத்தை அலசுவது அதிமுக்கியம். விடுதலைப்புலிகளின் அமைப்பு ஒரு இறுக்கமான இராணுவ அமைப்பு. இந்த அமைப்பில் இணைந்தவர்கள் சத்தியப் பிரமாணங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. இதன் பிரகாரம் விடுதலைப்புலிகளின் தலைவருடைய கட்டளையை எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தச் சூ ழ்நிலையிலும் செயல்படுத்துவேனென்று சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இராணுவ விதிகள், இராணுவக் கட்டுப்பாடுகள், இராணுவக் கோட்பாடுகள் எல்லாம் தெளிவாக இருக்கின்றன.

கருணா சகல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கோட்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவை தன்னை வந்து காணும்படி உத்தரவு கொடுத்தும், கருணா அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இந்த ஒரு குற்றத்துக்கே இராணுவ விதிகளின் படி, அவரை பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்திருக்க முடியும். கருணா பிரபாகரனை தனது தெய்வமாகக் கருதுகிறேனென்று கடிதம் எழுதினாலும் அதே தினத்தில் அவருடைய கையாட்கள் மட்டக்களப்பில் பிரபாகரனுடைய படத்தை எரித்தார்கள். இந்த விடயம் அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது.

தமிழ்த் தேசியத் தலைவனாகிய பிரபாகரனுடைய படத்தை சிங்கள சமூகமோ, அல்லது முஸ்லிம் சமூகமோ இதுவரை எரிக்கவில்லை. ஆனால், மட்டக்களப்பில் அவருடைய படம் எரிக்கப்பட்டது. அது அவருடைய படத்தை மட்டுமல்ல தமிழ்த் தேசிய படத்தை எரித்ததற்கு ஒப்பானது. இந்தப் படத்தை எரித்த விர்மிகள் கருணாவினுடைய கையாட்கள்.

கருணாவின் துரோக நாடகத்திலிருந்து சில உண்மைகள் நன்கு வெளிப்பட்டுவிட்டன. அவர் மூ ன்று முக்கிய துறைகளுடைய தலைவர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார். அவையாதெனில், நிதித்துறைப் பொறுப்பாளர், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், காவல்துறைப் பொறுப்பாளர். கரிகாலன் கொடுத்த பேட்டியிலிருந்து இதற்கான சகல விடயங்களும் வெளிவந்துவிட்டன.

கருணா, நீதியான, நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சிங்கள இராணுவத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு புறம்பான அந்தஸ்து வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இதிலிருந்து சிங்கள இராணுவத்தின் மீது தான் இவருக்கு அதிக பாசம் உள்ளதென்பது வெளிப்பட்டுவிட்டது. இவர் பத்திரிகைகளுக்கு கொடுத்த அறிக்கைகளிலிருந்து தனக்கு சுதந்திர தமிழ் ஈழத்தில் நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மாகாணமாகத் தான் கருதவில்லையென்றும் சொல்லிவிட்டார்.

கருணாவின் துரோகத்தன்மைக்கு சிங்கள ஆங்கில நாளேடுகள் நல்ல ஆதரவு கொடுக்கின்றன. இதனுடைய மர்மம் என்ன என்பது தான் முக்கிய கேள்வி?

சிங்கள ஆங்கில நாளேடுகளை விட தமிழ்நாட்டு பிராமணித்துவ ஊடகப்பத்திரிகைகள் மகிழ்ச்சிகரமாக கருணாவுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனில் பிரபாகரனை வீழத்துவதில் தெற்கு இலங்கை இனவாத சக்திகளும் தமிழ்நாட்டு பிராமணித்துவ ஊடகங்களும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. ஆகவே, மிகவும் கடும் போக்கான சிங்கள கட்சிகள் கருணாவுக்கு ஆதரவு கொடுக்கின்றன. யுத்தமொன்று வெடித்தால் கருணாவும் அவர்களுடைய கையாட்களும் சிங்கள இராணுவத்துடன் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்பதற்கு ஒருவித ஐயமுமில்லை.

கருணாவுக்கு இனிமேல் சிங்கள அரசியல் கட்சிகளும், சிங்கள இராணுவமும் மறைமுக உதவி செய்யக் கூடும், விடுதலைப்புலிகளுக்கெதிரானதமிழ் குழுக்களுக்கு எவ்விதம் சிங்கள அரசாங்கங்கள் உதவி செய்கின்றனவோ அவற்றை விட அதிகபட்சமாக கருணாவுக்கு சகல விதமான உதவிகளும் செய்யக் கூடும். இராணுவ உதவியும் செய்வதற்கு வாய்ப்பு உண்டு. வெளிநாட்டுச் சக்திகளைப் பொறுத்தவரை இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதில் ஈடுபட வாய்ப்புக்கள் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, பிராமணித்துவ ஊடகத்துறை நிலைப்பாடு தெட்டத்தெளிவாக இருக்கின்றது. இந்த ஊடகத்துறையினர் விடுதலைப்புலிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் அழிக்கப்படவேண்டுமென்று பகிரங்கமாகச் சொல்லுகிறார்கள். இவர்களுடைய நிலைப்பாட்டுக்கு மத்திய அரசின் புலனாய்வுத்துறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்களென்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.

புலனாய்வுத் துறையினர் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சகலவிதமான ஆதரவுகளையும் வழங்குகின்றார்கள் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இதன் பயனாக கிழக்கு மாகாணத்தில் புலிகளுடைய ஆதிக்கத்தை குறைத்து விடலாமென்று எண்னுகின்றார்கள்.

இந்திய மத்திய அரசு இலங்கையில் ஏப்ரல் 2 ஆம் திகதி நிகழப்போகும் பொதுத் தேர்தலை விரும்பவில்லை என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில், வடகிழக்கில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினைந்திலிருந்து இருபத்திரண்டு ஆசனங்கள்வரை பெற்றுவிடுமென்ற பீதி, இதன் விளைவாக புலிகளுடைய சர்வதேச அந்தஸ்து இன்னும் உயர்ந்துவிடும் என்ற ஒரு அச்சம். புலிகள் தான் தமிழருடைய ஏகப்பிரதிநிதிகள் என்பதும் ஒரு காரணமாக இருக்கும். ஆகவே இந்தத் தேர்தலை குழப்பி அடிப்பதற்கு கருணாவுக்கு ஆதரவு கொடுத்தால் புலிகளுடைய இராணுவ ஆதிக்கமும் அரசியல் ஆதிக்கமும் சர்வதேச மதிப்பும் நன்கு குறைந்து விடும் என்று இந்திய புலனாய்வுத்துறையினர் பகற்கனவு காண்கின்றார்கள்.

கருணாவினுடைய நிலைப்பாடு வெற்றிபெற்றால் மட்டக்களப்பு மண்ணும் அம்பாறை மண்ணும் சிங்கள ஆதிக்கத்துக்குள் அகப்பட்டுவிடும். ஆகவே இதை தவிர்ப்பதற்கு அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் கருணாவினுடைய பிரதேசவாத நச்சுத்தன்மைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

இது மட்டக்களப்பு, அம்பாறை புத்திஜீவிகளின் முக்கிய கடமை. இவ்விதம் புத்திஜீவிகள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தாவிடில் மட்டக்களப்பு அம்பாறை சிங்கள பிரதேசமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நன்றி : தினக்குரல்.

- Mathivathanan - 03-19-2004

ஏதோ இரண்டாம் நாளுடன் பிசுபிசுத்துவிட்டது எண்டு குதிரை வாயாலை வந்திச்சுது.. ஆனால் 5 ஆம் நாளாகத் தொடர்ந்து நடைபெறுவதாக அங்கத்தைய ரிவியில் காட்டினாங்களே..
இண்டைக்கு இன்னும் பெரிசாம்.. என்னவெண்டு பார்ப்பமன்..

அது சரி வன்னி பிரபா விடுதலைப்புலிகள்.. மட்டக்களப்பு கருனா விடுதலைப்புலிகள் பகுதிக்கு போவதற்கு SLMM ஊடாக இராணுவ பாதுகாப்பை கோரியதாக ஒரு செய்தி வந்திருக்கிறதே.. இது எந்த அளவு உண்மை..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-19-2004

அடையாள உண்ணாவிரதமாக ஆரம்பிக்கப்பட்டது அடையாளமாகவே முடிந்துவிட்டது என்பது உண்மை காட்டுவதெல்லாவற்றையும் பார்த்தால் கழுத்துச் சுழுக்காமல் என்ன செய்யும்
மற்றது இன்று நடைபெறுவது அன்னை பூபதி நினைவுதினப் பேரணி பிரபா,கருணா வேறுபாடு இன்றி தமிழீழ மக்களெல்லோரும் தமக்காக உயிர் நீத்த அன்னைக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அதற்கு கூட்டம் திரளாமல் என்ன செய்யும் அதை ஆதரவுக் கூட்டம் என்று சொன்னால் என்ன சொல்வது

எது எப்படியிருப்பினும் எமக்காக உயிர் நீத்த அந்தத் தியாகச் செம்மலுக்கு எமது அஞ்சலிகள்

- Mathivathanan - 03-19-2004

தவறான தகவலும், ஏளனச் சொற்களும் அமைந்திருந்ததால் நீக்கப்படுகின்றது - மோகன்

- Mathivathanan - 03-19-2004

[quote=Mathivathanan]தவறான தகவலும், ஏளனச் சொற்களும் அமைந்திருந்ததால் நீக்கப்படுகின்றது - மோகன்தவறான தகவல்..
மட்டக்களப்புக்கான புதிய சிறப்புத் தளபதி சொல்லியதை மறுதலித்து ரிவியில் படம் காட்டுகிறார்கள்.. அதைப்பற்றி எழுதினால் பிழையான தகவல்.. ஏற்கெனவே வானொலியில் செய்தியாகப் போனதைப்பற்றி உண்மையா என கேட்டு எழுதினால் பதில் இல்லை..
கேட்ட கேள்விக்கு பதில் .. அதுவும் ஈழவனிடத்திலிருந்து வரவில்லை.. மற்றக் கருத்துக்களுக்கு பதில் வந்திருக்கிறதென்றால் சொய்தி உண்மை.. இப்படி உண்ணாவிரதமிருக்க நீங்கள் உண்ணாவிரமே இல்லையென்றால் என்னசெய்வது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அது சரி ஹெலி வந்து போகுது.. என பலரும் அதற்கு பெரிய முக்கித்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறார்கள்.. இந்தப் பிளவு ஏற்படுமுன்னம் தினமும் பல ஹெலிகள் அங்கு போய் வந்ததுபற்றி பெருமையாக் செய்திகள் வெளியிட்டவர்கள் தற்போது கூச்சலிடுவது ஏனோ..?
:?: :?: :?:

- Eelavan - 03-19-2004

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் இருக்கிறது அது என்ன கருணா விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக்காக உருவான அமைப்பு என்றால்
கருணா விடுதலைப் புலிகள் கருணாவை நீங்கள் சொல்லும் அந்த மாபெரும் சக்தியிடம் இருந்து விடுவிப்பதற்க்காகவா?
தாத்தா கட்டாயத்தினால் செய்தாலும்.நோக்கம் சரி பிழை சரி எதாக இருந்தாலும் உண்ணாவிரதமிருப்பது எமது மக்கள்,எங்கள் உறவுகள் அவர்களையோ அவர்களது போராட்டத்தையோ கொச்சைப்படுத்த விரும்பவில்லை நான் கேட்டதெல்லாம் தனது பலத்தைக் காட்ட அல்லது தான் தப்பித்துக் கொள்ள கருணா எதற்காக மக்களைப் பலியிடுகிறார் என்பதே

செய்தியின் உண்மைத் தன்மை தெரியவில்லை தெரியவந்ததும் நிச்சயம் தருகிறேன்

- Mathivathanan - 03-19-2004

Eelavan Wrote:எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் இருக்கிறது அது என்ன கருணா விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக்காக உருவான அமைப்பு என்றால்
கருணா விடுதலைப் புலிகள் கருணாவை நீங்கள் சொல்லும் அந்த மாபெரும் சக்தியிடம் இருந்து விடுவிப்பதற்க்காகவா?
தாத்தா கட்டாயத்தினால் செய்தாலும்.நோக்கம் சரி பிழை சரி எதாக இருந்தாலும் உண்ணாவிரதமிருப்பது எமது மக்கள்,எங்கள் உறவுகள் அவர்களையோ அவர்களது போராட்டத்தையோ கொச்சைப்படுத்த விரும்பவில்லை நான் கேட்டதெல்லாம் தனது பலத்தைக் காட்ட அல்லது தான் தப்பித்துக் கொள்ள கருணா எதற்காக மக்களைப் பலியிடுகிறார் என்பதே

செய்தியின் உண்மைத் தன்மை தெரியவில்லை தெரியவந்ததும் நிச்சயம் தருகிறேன்
ஈழவன்..
கருணா பகுதிகூட அதே கொடியுடன் செயற்படுகிறார்கள்.. அதே மட்டக்களப்பு மக்கள்தான் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடாத்துகின்றனர்.. அப்படியிருக்க நீங்கள் அங்கு எதுவும் நடைபெறவில்லை என பூச்சாண்டிகாட்டுவது எந்தவகையில் நியாயம்..

பல நேர்காணல்களை சக்தி ரிவிமூலம் பார்த்தேன்.. எவரும் வற்புறுத்தலின்பேரில் செய்வதுபொலத் தெரியவில்லை.. அதுசரி பதுமன் ஹெலியில் திருக்கணாமலை போய் சேர்ந்துவிட்டாரா..?
:?: :?: :?:

பயப்படாதீர்கள் ஹெலியில் இராணுவம் போனாலும் ஒருபொழுதும் ஆயுதம் கொடுக்காது.. பிரேமதாசா காலத்தில் அவர்கள் படித்த பாடம் மறந்திருக்கமாட்டார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-19-2004

தாத்தா உண்மையிலேயே சிரிப்புத் தான் வருகிறது சக்தி தொலைக்காட்சியை அழைத்துப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியவர்களுக்கு தமக்குச் சார்பானவர்களை மட்டும் அப்படிப் பேச வைக்கத் தெரியாதா தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இப்படி ஒரு திட்டமிடப்பட்ட ஊர்வலத்தையோ பேட்டிகளையோ நடத்த கருணாவுக்குத் தெரியாதா என்ன

மற்றையது மட்டக் களப்புக்குள் தமது தளபதிகள் அடங்கிய குழு செல்வதற்கு(இராணுவக் கட்டுப்பாட்டு பகுத்திக்கூடாக)இலங்கை அரசின் சமாதானப் பிரிவுச் செயலகம் மூலம் இராணுவத்திடம் அனுமதி கேட்டுள்ளார்கள்
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இயங்காத நிலையில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படக் கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக முறையாக இலங்கை இராணுவத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது இராணுவத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது

- yarl - 03-19-2004

ஆக பரிசுகேடு சந்திரிக்கா அம்மையார் கருணா தன்னோடை கதைக்க பல தரப்பாலும் தூது விட்டதாகவும் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் சொன்னது..

தேவையா..

- Mathivathanan - 03-19-2004

Eelavan Wrote:தாத்தா உண்மையிலேயே சிரிப்புத் தான் வருகிறது சக்தி தொலைக்காட்சியை அழைத்துப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியவர்களுக்கு தமக்குச் சார்பானவர்களை மட்டும் அப்படிப் பேச வைக்கத் தெரியாதா தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இப்படி ஒரு திட்டமிடப்பட்ட ஊர்வலத்தையோ பேட்டிகளையோ நடத்த கருணாவுக்குத் தெரியாதா என்ன

மற்றையது மட்டக் களப்புக்குள் தமது தளபதிகள் அடங்கிய குழு செல்வதற்கு(இராணுவக் கட்டுப்பாட்டு பகுத்திக்கூடாக)இலங்கை அரசின் சமாதானப் பிரிவுச் செயலகம் மூலம் இராணுவத்திடம் அனுமதி கேட்டுள்ளார்கள்
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இயங்காத நிலையில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படக் கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக முறையாக இலங்கை இராணுவத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது இராணுவத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது
Mathivathanan Wrote:ஈழவன்..
கருணா பகுதிகூட அதே கொடியுடன் செயற்படுகிறார்கள்.. அதே மட்டக்களப்பு மக்கள்தான் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடாத்துகின்றனர்.. அப்படியிருக்க நீங்கள் அங்கு எதுவும் நடைபெறவில்லை என பூச்சாண்டிகாட்டுவது எந்தவகையில் நியாயம்..

பல நேர்காணல்களை சக்தி ரிவிமூலம் பார்த்தேன்.. எவரும் வற்புறுத்தலின்பேரில் செய்வதுபொலத் தெரியவில்லை.. அதுசரி பதுமன் ஹெலியில் திருக்கணாமலை போய் சேர்ந்துவிட்டாரா..?
:?: :?: :?:
சக்தி தொலைக்காட்சி எப்போதும் மட்டக்களப்பு செய்திகளை தந்துகொண்டுதான் வந்திருக்கிறதே தவிர தற்போது மாத்திரம் போய் செய்தி எடுத்து ஒளிபரப்பவில்லை..
மேலும் பல ஊடகங்கள் போய் செய்தி சேகரித்து வெளியிடுகின்றன.. அப்படியிருக்க அங்கு போகாமலே யாரோ அனுப்பியதாகவும் மக்கள கூறுகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டினால் சரியான செய்தியல்ல..
மேலும் திட்டமிட்டு செய்கிறார்கள் என இப்போது கத்துபவர்கள் பழைய சம்பவங்களை ஞாபகப்படுத்திப்பார்க்வேண்டும்..

அதாவது இவர்கள் திட்டமிட்டு செய்தால் அது உரிமைப்போராட்டம்.. அவர்கள் செய்தால் சதி அப்படித்தானே ஈழவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அது என்ன அசம்பாவிதங்கள்.. மட்டக்களப்பில் முழு ஆதரவு என்று நீங்கள் கூறியது அத்தனையும் பொய் என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்..
இந்தப்பெரிய அமைப்ப இராணுவத்தை நாடியது வெட்கமாயில்லை..
:?: :?: :?:

- Eelavan - 03-19-2004

இந்தப் பெரிய அமைப்புத் தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கூடாக போக்குவரத்து வைப்பதற்கு இராணுவத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்று ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறது அதனை மதித்து நடக்கத் தான் வேண்டும் இல்லாவிட்டால் தான் ஏதாவது சொறிந்துவிட்டு பழியை இவர்கள் மேல் போட்டுவிடுவார்களே

ஏன் ஒரு நாட்டின் சர்வ வல்லமை மிக்க இராணுவம் வெட்கமில்லாமல் தானே அவர்களின் கட்டுப்பாட்டு பகுதிகள் ஊடாக யாழ்ப்பாணம் சென்று வர நோர்வே மூலம் அனுமதி கேட்டது

அதே சக்தி தொலைக்காட்சியில் தமக்கு எதிராக ஒரு செய்தி வந்தது என்று கூக்குரலிட்டார்களே இப்போது எப்படி சமாதானமானார்களாம் சக்தி இன்னும் அந்த மின்னலே நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவிக்கவில்லையே

சரி உங்களுக்குத் தான் போராட்டமே பிடிக்காதே பிறகுமேன்????

- Eelavan - 03-19-2004

இவர்கள் செய்தால் அர்த்தமற்ற போராட்டம்,மனித உரிமை மீறல் அவர்கள் செய்தால் உரிமைப் போராட்டம் அப்படித்தானே தாத்தா

- Mathivathanan - 03-19-2004

Eelavan Wrote:இவர்கள் செய்தால் அர்த்தமற்ற போராட்டம்,மனித உரிமை மீறல் அவர்கள் செய்தால் உரிமைப் போராட்டம் அப்படித்தானே தாத்தா
நீங்கள்தான் சொல்லவேண்டும்.. எது உரிமைப்போராட்டம் எது அடக்குமுறைப் போராட்டமென்று ஈழவன்..

சக்தி தொலைக்காட்சி அங்கு முன்னமும் செய்திகள் சமாச்சாரங்கள் சொல்லியதென்று ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. நன்றி

சக்தி ரிவி மின்னலே தொடர்பாக சரியாகச் செயற்பட்டிருக்கவேண்டும்.. எதுவாயினும் கூக்குரலிட்டது எல்லோரும்தானே.. அப்படியிருக்க அவர்களை மட்டும் குறைகூறி என்ன பயன்..

தற்போதுகூட இராணுவம் போய் வருவதற்கு அனுமதி கேட்பதில்லை அவர்களுக்கு பலாலிபாதை திறந்திருக்கிறது எப்போதும்போல.. அது தவிர விடுதலைப்புலிகள்தான் ஒவ்வொரு முறையும் போய்வருவதற்கு அனுமதி கேட்கிறார்களேயன்றி இராணுவம் அல்ல..
அதைவிட நான் கேட்டது வேறு.. பாதுகப்பு வழங்கும்படி இராணுவத்தை கோரியது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-20-2004

எது மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களால்,மக்களுக்காக நடத்தப் படுகின்றதோ அது உரிமைப் போராட்டம் எது தனிப்பட்டவரின் நலனுக்காக மக்களை மிரட்டி நடத்தப்படுகிறதோ அது அடக்குமுறைப் போராட்டம்

அதுசரி தாத்தா கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலே எப்போது பலாலிப் பாதை திறந்தார்கள்
விடுமுறையில் தெற்கு செல்லும் இராணுவத்தினரை விமான மார்க்கமாக கொண்டு செல்வது செலவும் சிரமமும் கூடியதால் தரை மார்க்கமாக கொண்டு செல்ல விடுதலைப் புலிகளிடம் அனுமதி வேண்டப்பட்டதும் ஆயுதங்களுடன் பயணம் செல்வதைத் தவிர்த்தால் அனுமதிக்கலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்ததும் பாதுகாப்பு இல்லை என்று இராணுவம் கைவிட்டதும் செய்திகளாக வந்தனவே பார்க்கவில்லையா

மற்றது மட்டக்களப்பு மாவட்டத்தினதும் திருகோணமலை மாவட்டத்தினதும் எல்லைப் பகுதி இன்னமும் புலிகளிடம் தான் உள்ளது
உள்ளே போவதற்கு இராணுவப் பாதுகாப்பு என்பது தேவையா?