![]() |
|
சுட்ட கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுட்ட கவிதை (/showthread.php?tid=7322) |
சுட்ட கவிதை - Mathan - 03-15-2004 <b>ரொம்பப் பிடிக்கும்.... !</b> * உருவ வழிபாடு வேண்டாம் என்றுசொன்ன புத்தனின் சிலை எனக்குப் பிடிக்கும்.... சாதி பாவமென்ற பாரதியை ரொம்பப் பிடிக்கும்.. என் சாதியென்பதால்...... அஹிம்சைத் தத்துவம் சொன்ன காந்தியை யாராவது பழித்தால் கொலை கூடச் செய்வேன்.... ! நன்றி - முத்து - sOliyAn - 03-16-2004 இனி சுடாத கவிதை ஒன்று போடுங்க, பார்ப்பம்!!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-16-2004 sOliyAn Wrote:இனி சுடாத கவிதை ஒன்று போடுங்க, பார்ப்பம்!!<!--emo& சுடாத கவிதை என்றால் சொந்தமா எழுதணும். முயற்சி செய்து பார்க்கின்றேன் சரி வந்தால களத்தில் போடலாம். - sOliyAn - 03-16-2004 காதல்கவிதைதான் சுடாது என்று நினைக்கிறேன்..! :wink: - Mathan - 03-16-2004 sOliyAn Wrote:காதல்கவிதைதான் சுடாது என்று நினைக்கிறேன்..! :wink: சுடாது அது கிளுகிளுப்பா தான் இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> , எங்க உங்க காதலிஔயை நினைத்து ஒரு சின்ன கவிதையை சொல்லுங்க - sOliyAn - 03-16-2004 ஆஹா வந்திடுச்சு ஆஹஹா ஓடிவந்தேன் காதல் வந்திடுச்சு ஆசையில் ஓடிவந்தேன் கவிதையைப் போலுந்தன் நடையில பச்சை கிளியினைப் போலுந்தன் இடையில எண்ணங்கள் மயங்கி மயங்கி... அடுத்தது என்ன மறந்துபோச்சு... (நன்றி: 'கல்யாணராமன்' திரைப்படம்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-16-2004 இது சுட்ட கவிதை. எங்க சுடாத கவிதை? - sOliyAn - 03-16-2004 அன்பே உன்னைப் பார்த்தேன் என்னையே மறந்துவிட்டேன் உன் தங்கையைப் பார்த்தேன் உன்னையே மறந்துவிட்டேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-16-2004 நல்லாத்தான் இருக்கு. ஆண்களின் நிலையற்ற மனதை எடுத்து காட்டுது. இது கூட சுட்டது தானே?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- sOliyAn - 03-16-2004 'சுட்ட கவிதை' தலைப்புக்குள்ளை 'சுடாத கவிதை' வந்தா இராவணன் தூக்கிப் போடுவார்..!! :wink: - Eelavan - 03-16-2004 சுடாத கவிதை என்றால் என்ன ஆறின கவிதை ஆறின கவிதை பழங்கவிதை - Mathan - 03-16-2004 Eelavan Wrote:சுடாத கவிதை என்றால் என்ன ஆறின கவிதை ஆறின கவிதை பழங்கவிதை ஐயோ ஈழவன், சுட்டது என்றால் திருடினது என்று பேச்சு வழக்கில் இருக்குதானே. அதனால் சுட்ட கவிதை என்றால் மற்றவர்களுடைய கவிதைகள். சுடாத கவிதை சொந்த கவிதை, - Eelavan - 03-16-2004 ஓ அப்படியா நான் ஏதோ அவ்வைப்பாட்டியும் முருகனும் சுட்ட பழம் சுடாத பழத்துக்கு அடிபட்ட மாதிரி என்று நினைத்தேன் அது சரி சுட்டகவிதையை எப்படி வாசித்தீர்கள் ஊதி,ஊதியா? - Mathan - 03-16-2004 வாசித்து பிடித்திருந்ததைதான் சுட்டேன், வாசித்துவிட்டு சுட்டதான் ஊதவேண்டியிருக்கவில்லை, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-16-2004 அது சரி ஈழவன் உங்களுக்கு கற்பகதேசம் ரொம்ப பிடிக்குமோ? கற்பகதேசம் இணையத்தளம் உங்களுடையதா? - Eelavan - 03-16-2004 உண்மைதான் நண்பரே எனக்கு கற்பகதேசம் பிடிக்கும் என்னதான் சிங்கையில் வசதிகளை அனுபவித்தாலும் அந்தத் தேசத்தின் வாசத்தை அதற்கான ஏக்கத்தை மறக்கமுடியவில்லை கற்பகதேசம் தளம் என்னுடையது அல்ல சிங்கையில் வதியும் நண்பர் ஒருவருடையது அவர் தனது தளத்தில் எனது தளத்திற்கும் இணைப்புக் கொடுத்திருக்கிறார் - Mathan - 03-16-2004 சிங்கை நல்ல இடம் என்று சொன்னார்களே. ஒரு முறை வந்து பார்க்கவேண்டும், உங்கள் நாட்டை பற்றி அன்பகத்தின் தமிழருக்கு சிறந்த வெளிநாடு எது கட்டுரையில் எழுதுங்களேன், - Mathan - 03-21-2004 அன்னையர் தினத்துக்காக . . . . . அம்மா என்பது தமிழ் வார்த்தை படம் - டீச்சரம்மா இசை - எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர் - பி. சுசீலா அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை கவலையில் வருவதும் அம்மா அம்மா கருணையில் வருவதும் அம்மா அம்மா தவறு செய்தாலும் மன்னிப்புக்காக தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை பூமியின் பெயரும் அம்மா அம்மா புண்ணிய நதியும் அம்மா அம்மா தாரணி அழைப்பதும் அம்மா அம்மா அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை - Mathan - 03-21-2004 நன்றி - எழில் நிலா - Mathan - 03-22-2004 சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்.. 1 மீண்டும் பல இரவுகள் கழியும் அதே உரசல் அதே அணைப்பு அதே விரக மூச்சு உடல் கனக்க இறுகும் பிடி விலகி விறைத்து விம்மி எரிச்சலாய் எனக்கான சினங்களுடன் இறக்க வைப்பேன் இன்றும் சில இரவுகளை முடிவில் எனக்கான சில கணங்கள் நிமிடங்கள் நினைவில் வர வார இறுதிக்கான எனது களிப்புகளின் அட்டவணை நீளமாய் ஊசலாட விறைப்பு விலகும் புன்னகை வந்தேறும் உடைகளைத் தகர்த்தி மீண்டும் நான் வேசியாவேன் 2 சமத்துவம் என்பாய் நீ போரின் அடையாளங்கள் எப்போதுமே அங்கு காணப்பட்டதில்லை மெல்லிய விசும்பல்களின் மோதல்கள் சுவரோரங்களில் எதிரொலிக்கும் கன்னங்களில் வடிந்து காய்ந்து போயிந்தது கண்ணீர் இல்லை நிறம்பிய நித்திரைச்சுரப்பிகளின் வெளித்தள்ளல்களே என் சுயத்தை இழந்தாயிற்று கோழை எனலாம் நீ போரின் அடையாளங்கள் அற்ற சுற்றமே சமத்துவம் நான் இழந்தது என் சுயத்ததை உரிமையை சிரிப்பை ஆசையை அதிர்வுகள் அலறல்கள் இரத்தங்கள் இறப்புக்கள் அற்ற சுற்றம் வேண்டி என்னை நான் இழந்தாயிற்று கோழை எனலாம் நீ பிரக்ஞை அற்று சூரியனின் தோற்றமும் மறைவும் நிகழ்ந்த படியே இருக்கும் 3 எனது வீட்டின் ஒரு மூலையிலாவது அதை பொருத்தி வைப்பதற்கு இடம் தேடியலைகின்றேன். எங்கும் ஆக்கிரமிப்பு அதிகமாகவே உள்ளது விட்டுத்தொலை போகட்டும் சனியன் என்று பெற்றோரும் தூக்கிப்போடு யாருக்கு வேணும் என்று கணவரும் அப்பாடா என்று குழந்தைகளும் அலுத்துக்கொண்டாயிற்று கசங்கிப் பிளிந்து நைந்து போனதை எதற்காக நான் கொண்டலைகிறேன் என்று தெரியாமலேயே நானும் அலைகின்றேன் எப்போதாவது அதற்கான ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றி - சுமதி ரூபன் |