Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நேரம் கிடைத்தால் சிந்திக்க ...
#1
Egoism


நேற்று நடந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சில கொள்கைகள் சிறந்தது என்று நாம் கடைப்பிடிப்பது எத்தனை தவறா, சரியா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நண்பர் ஒருவர், அவர் மனைவி மேல் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார். அவளும் எனக்கு நன்கு அறிமுகமானவள். சில வருடங்களாய் அவர்களுக்குள் நிலைமை சரியில்லை என்று தெரிந்தாலும் அவனை சந்திக்கும் தருணங்களில் அவன் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பிறர் விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்கக்கூடாது என்ற கொள்கையால் நாங்களும் கேட்கவில்லை.நன்குதெரிந்தவர்களே தவிர நண்பர்கள் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்பு அவன் கோர்ட்டு தீர்ப்புப்படி மூன்று வருஷத்திற்கு பிறகு குழந்தையை சந்திக்கப் போக போவதாகவும், எங்கள் இருவரை வர முடியுமா என்றும் கேட்டான். நாங்கள் இருவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் ஏதாவது பேசிப்பார்ப்போம் என்று சரி என்றோம். காரில் புறப்படும் போதுதான், அவன் தன் பக்கத்து ஞாயத்தை சொல்லிக்கொண்டு வந்தான். நான் அவன் மனைவியிடம் பேசி பார்க்கட்டா, சமாதானத்தில் உங்களுக்கு விருப்பமா என்றுக் கேட்டேன். அவனும் சரி என்றான். அங்குப் போனவுடன், அவளே குழந்தை( ஐந்து வயது)யுடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன் குசலம் விசாரித்தவள், அவன் குழந்தையை தூக்கியவுடன், அவள் அழுகையுடன் மடமடவென்று அங்கிருந்துப் போய் விட்டாள். இரண்டரை வயதில் பார்த்த குழந்தை, ஐந்தரை வயதில் தந்தையை மறக்கவில்லை. ஆனால் அதன் முகத்தில் ஆழ்ந்தகவலை, யோசனை. கொஞ்சம் அன்ஈஸியாய் இருந்தது. ஐந்து மணி நேரம் அங்கு இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் அவர்களை விட்டுவிட்டு அந்த பெண் அங்கு எங்காவது இருக்கிறாளா என்று சுற்றி வந்தோம். ஆனால் இல்லை. போட்டோ மற்றும் வீடியோவில் அவர்கள் இருவரையும் படம் எடுத்துக் கொண்டு அந்த பார்க்கில் இருந்தோம். நேற்று வெள்ளிக்கிழமை, அதனால் காலை பதினொன்றரை மணிக்கு எல்லா கடைகளும் சாத்திவிடுவார்கள். குழந்தை கேட்டதற்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தது. ஆனால் தந்தைக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகள், தின்பண்டங்கள் எதையும் தொட மறுத்துவிட்டது.

இரண்டு மணி நேரம் கழித்து, அதன் முகத்தைப் பார்த்து அம்மாகூட பேச வேண்டுமா என்று கேட்டேன். அதுவும் ஆமாம் என்றது.
எங்கள் மொபலில் இருந்து பேச சொன்னேன். பிறகு நான் வாங்கி எப்படி இருக்கிறாய் என்றதும், அந்தப் பெண் விட்டேற்தியாய் பேசினாள். நான் ஏன் மடமடவென்று போய்விட்டாய், நான் உன்னுடந்தான் பேச வந்தேன் என்றேன். அதற்கு அவள் சொன்னது- இவ்வளவுநாள் எங்கே இருந்தாய்? எல்லாம் முடிந்த பிறகு இப்போது பேசி என்ன பயன் என்றாள். எவ்வளவு சரி, அவள் சொன்னது. பிறர் விஷயம் என்று ஒதுங்கியிருந்தது எவ்வளவு தப்பு என்று மன வேதனை அடைந்தேன். நீங்கள் இருவரும் ஒன்றும் சொல்லாததால், நாங்கள் கேட்கவில்லை. ஏதாவது கேட்கப்போய், இது எங்கள் சொந்த விஷயம், நீங்கள் யார் தலையிட என்று சொல்லலாம் இல்லையா என்றேன். பிறகு அவள் பக்கத்து ஞாயத்தை ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவள் சொன்னதை இவனிடம் சொல்லும்போது ஒன்று தெளிவாய் புரிந்துப்போனது. யாரும் எதுவும் செய்ய முடியாது. இருவரும் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு, குழந்தைக்காக ஏதாவது செய்தால்தான் உண்டு. இதில் இரண்டு பக்க பெற்றோர்களின் கைங்கரியம்தான் அதிகம். இருவருக்கும் மூட்டிவிட்டதே இந்த இரண்டு வயதான அப்பாக்கள்தான். அதை எடுத்து சொன்னால் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களே தான் முடிவு எடுக்கவேண்டும்.நடுவில் ஒருவரால் எதுவும் செய்யவும் முடியாது என்பது மட்டும் எங்களுக்கு தெளிவாய் புரிந்தது. தன் குழந்தைதனத்தை இழந்து கவலையுடன் அந்த ஐந்து மணி நேரத்தை
கழித்த அந்த குழந்தையின் முகம் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது

நன்றி - இராமச்சந்திரன் உஷா

குறிப்பு - எனக்கு ஈகோவுக்கு (Ego) தமிழ் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ஓர்மம் என்ற சொல் பொருத்தமானது என நினைக்கிறேன்
\" \"
Reply
#3
:evil: :evil: :twisted: :twisted: வறட்டுக் கௌரவம் :evil: :evil: :twisted: :twisted:
Reply
#4
Eelavan Wrote:ஓர்மம் என்ற சொல் பொருத்தமானது என நினைக்கிறேன்

[quote=manimaran]:evil: :evil: :twisted: :twisted: வறட்டுக் கௌரவம்

ஓர்மம் என்றால் ஒன்றை செய்து முடிக்கவேணும் என்ற வைராக்கியம் தானே? வறட்டுக் கௌரவம் சரியாக இருக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
எனக்கு தமிழ் புலமையெல்லாம் இல்லை. இருந்தாலும்....
இகோ (Ego) என்பதற்கு "செருக்கு' என்பது சரியாக இருக்குமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
செருக்கு?! பொருத்தமாக உள்ளதே?!
.
Reply
#7
ம்ம் வறட்டுக் கௌரவம் சரியாகத் தானிருக்கிறது
\" \"
Reply
#8
<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->Egoism
குறிப்பு - எனக்கு ஈகோவுக்கு (Ego) தமிழ் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[b]நான் என்ற <span style='font-size:25pt;line-height:100%'>அகங்காரம்</span>
nadpudan
alai
Reply
#9
நான் என்ற அகங்காரம் தன்னலமாக..... சுயநலமாக.... வெளிப்படுகின்றது.
Reply
#10
சுயநலம் , நான்
Reply
#11
ஆதிக்க மனப்பான்மை


வாழ்க்கையில் நமக்கு பல சறுக்கல்கள் ஏற்பட காரணம் அதிகப்படையான எதிர்பார்ப்பா?. அல்லது மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் போவதாலா?. அதையும் தாண்டி தான் சொல்வது தான் சரி மற்றவர்கள் என்னதான் சொன்னாலும் தவறு என்று கொள்ளும் மனப்பான்மை கூட இருக்கலாம். (சில நேரம் நேர்மையாக யோசித்து பார்த்தால் தவறு நம்மிடம் தான் என்று புரியும்.)

அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுத்ததன் முக்கிய காரணம் எதிர்பார்ப்பு. வீண் பிடிவாதம். ஐ.நா சபையாவது ஒண்ணாவது. என் கருத்தை தான் எல்லோரும் ஏற்கவேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மை. சர்வாதிகாரதன்மை. பள்ளி மாணவன் முதல் பெரும்பாலான அனைவரும் அதிகமாய் சறுக்குவது தனக்கு தெரிந்தது தான் சரி என்று நினைத்து மற்றதை ஒதுக்கி தள்ளும்போதில் தான். ஒரு தந்தை மகனுக்கும் வாக்குவாதம் வந்தால் தந்தை மகன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் அவன் தரப்பு வாதங்களையும் கேட்பாரா. அட நான் பார்த்து பிறந்த பையன் அவன் சொல்லறதை நான் கேட்கனுமான்னு இருப்பார். இப்போது நிலைமை பரவாயில்லை போல தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறது. இது பல உறவுகளில் தொடரும் ஒரு வேதனையான கதை. பெரும்பாலான மணவிலக்குக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மற்றவர்கள் சொல்லவரும் முன்னமே அட இதுவா இது தான் எனக்கு தெரியுமே அதுக்கென்ன இப்ப அப்படின்னும் போது சொல்லவருபவர் சுருங்கி போவார். இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். குழந்தை எதையாவது சொல்ல வரும்போது அதை ஒதுக்கினால் அது அந்த பிஞ்சு வயசிலேயே அடிப்பட்டு போகும். அட அதுங்கள்க்கு என்ன தெரியும் நாம தான் சொல்லி கொடுக்கனும் அப்படிங்கர பெருசுக முதல்ல குழந்தைக கிட்ட இருந்து எப்படி கத்துக்கறது அப்படிங்கறதை கத்துக்கனும். அட என்ன வள வளன்னு பேசிக்கிட்டு நம்ம ?fன் கதைக்கு வருவோம்.

===

ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்து கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது. அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன் என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஆசிரியரும் அந்த அறிஞரை தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் "நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது என கேட்க.. ஜென் ஆசான் பதிலிறுத்தார்.

"அய்யா நீங்களும் இந்த கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்ப துவங்கலாம்" என்றார்

நன்றி - ஐயப்பன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
Quote:<b>ஒளிவு மறைவின்றி</b>

கொழும்பிலுள்ள லொட்ஜ்காரர் ஒருவர் தெரிவித்த தகவல் இது.

ஒரு முதியவர் தனது மகனுடன் வெளியூரிலிருந்து எனது லொட்ஜுக்கு வந்திருந்தார். அவர்கள் வறியவர்களைப் போல் காணப்பட்டனர். எனவே, குறைந்த வாடகையுள்ள அறையை ஒதுக்கிக் கொடுத்தேன்.

இவர்கள் கொழும்புக்கு வந்த நோக்கத்தைக் கேட்டறிந்த போது பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதாவது பல இலட்ச ரூபா பெறுமதியான இயந்திரமொன்றை வாங்கவே வந்திருக்கிறார்கள்.

இவ்வளவு பணத்தைத் தக்க பாதுகாப்பின்றி கொண்டு வந்திருக்கிறீர்களே என்று நான் சொன்னபோது, பணமா? கையில் அவ்வளவு பணம் எடுத்து வரவில்லை. வெளிநாட்டிலிருந்து தம்பி (அதாவது இவரின் மூத்த மகன்) வங்கிக் கணக்கிற்கு அனுப்புவான். உண்டியலிலும் பணம் வரும், என்றார் அந்த முதியவர் அனாயாசமாக!

ஆளைப் பார்த்து, தோற்றத்தைப் பார்த்து எடை போட்டுவிடக் கூடாதப்பா!<span style='color:blue'> -தினக்குரல்
</span>

[size=15]முதியவருக்குள்ள மனசும் தன்னடக்கமும் விடுதிக்காரருக்கு வராதது மட்டுமல்ல எழுதிய பத்திரிகைகாரருக்கும் வரவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

1.முதியவர் கைக்கு மகன் பணம் அனுப்பும் வரை பணம் இருக்கப் போவதில்லை.

2. மகன் உழைத்து அனுப்பும் பணத்தை சொகுசு விடுதிக்கு கட்டிவிட்டு போவதை விட பிரயோசனமான ஒன்றுக்காக செலவழிப்பதே மேல்.

3.மகன் அனுப்பும் பணம் வங்கிக்கு வரப் போகிறது அல்லது உண்டியலில் பணம் வந்தாலும் அதை உடனடியாக வங்கியிலோ அல்லது நேரடியாக அவர் பொருளை வாங்கும் நிறுவனத்திடமோ செலுத்தி விட்டால் முதியவர் ஏன் கலங்க வேண்டும்.

அதை புரிந்து கொள்ள முடியாதவர்களா? அல்லது பணம் இருப்பதாக தெரிந்து கடத்தி சுருட்ட முடியாத வேதனையா?

[Image: 4_disc.jpg] ஒளிவு மறைவின்றி சொல்லி விட்டோம்..................
Reply
#13
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
ஆத்திரம் - ஐயப்பன்


ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.

"சுவாமி, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்துகொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நன்பர்களையும் இழந்தும், கெட்டபேரையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு தாங்கள் தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".

துறவி ஒரு மரப்பலகையும் கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்து சொன்னார், "எப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நி னைப்பீராயின் அந்த நேரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".

ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப் பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தது.

"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது, பாருங்கள் எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."

ஜென் ஆசிரியர் சொன்னார்... "அதெல்லாம் சரி நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா, இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கிறது".

**

ஆத்திரம்
--------
அடடா மூடன் தானோ ஆனேன்?
படரும் வன்மம் தன்னைப் போற்றி
சொற்கள் பலதைச் சுழற்றி வீசி
நண்பர் பலரை பகைவர் ஆக்கும்
கொடும் பட்டம் வழங்கி மகிழும்
ஆத்திரம் அதனை அடக்கி ஆள
துறவி யவரின் உதவி நாடி
நிலைமை விளக்கி
நிஜமாய் அழுதேன்

பலகை ஒன்றில் பழகக் கொடுத்து
ஆத்திரம் என்னும் ஆணியை அறைய
வெட்பம் தணிந்த பின்னே உடனே
தவறு எனதாய் இருப்பின் தெளிந்து
ஆணி யதனை அவிழ்த்திடச் செய்தார்

மாதக் கடையில் மெதுவாய் நோக்கின்
அறையப்பட்ட ஆணிகள் நிறைய
கையில் அவிழ்ந்து இருந்திடக் கண்டேன்
சொற்பம் சிலதே பலகையைத் தாக்க

நானாய் உருவக மான பலகையில்
மிச்சம் இருந்ததோ பிளவும், வலியும்.

-- ஷக்தி ப்ரபா.

**

மொத்தத்தில் யென்நிலை மூடனாய் என்நாளும்
சித்தம் குழைந்து செயலிலும் சொல்லிலும்
எத்தனை பேரை எதிரியாய் ஆக்கினேன்
உத்தமம் இற்று ஊரைப் பழித்து நான்
கத்தித் திரிய கதிகலங்கி நாடினேன்
முத்தியுடை நல்ல முனிவர்; ஆணிகள்
கொத்தும் பலகையும் கூடக் கொடுத்து
புத்தி கெடுக புதையொரு ஆணியென;
வித்திட்ட நேரமதில் வேகாத பிழைக்கு
உத்தர வாதமில்லா உன்செயல் என்றாலே
குத்திட்ட ஆணி குழையச் செய்துவிடு.
பத்துத் தினங்கள் பார்த்திடு மூன்றுமுறை
அத்தினம் நோக்கையில் அண்மியென்றார் சாமியவர்
அத்தினமே வந்திடவே அங்கே துறவியிடம்
நித்தம் சினந்தான் நிகழ்விலே மட்டமாய்
செத்திருக்கு; என்பிழையே தீர்வாகப் பிடுங்கிய
அத்தனை ஆணிகளும் பாருங்கள் என்றிடவும்
ஒத்துவரா சாமியோ ஓட்டைகளும் காயங்களின்
பொத்துகளும் இல்லாத பொருளாய் தாவென்றார்
தத்துவம் உரைக்கும் சாது

-- அவதானி கஜன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
திருமணமாம் திருமணம்

எமது பண்பாட்டில் திருமணம் என்ற நிறுவனம் இன்னும் முழுமையாக நிலைத்துள்ளது. திருமணம் செய்யாது கூடி வாழ்தல் (living together) என்ற முறை மேலைநாட்டில் பெருமளவு செல்வாக்குப் பெற்றுள்ள போதும் வெளிநாடுகளில் வாழும் தமிழாகள் இதுவரை அதன் செல்வாக்குக்குப் பெருமளவில் உட்படவில்லை என்றே கூறவேண்டும். ஆயினும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டன என்பது மிகவும் சோகத்துக்குரிய விஷயம். தற்போது திருமணங்கள் அதிகமாகத் தோல்வியில் முடிவதற்கு என்ன காரணம் என்பது பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. எமது அடுத்த சந்ததியினரை திருமணம் என்ற நிறுவனத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கும் அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உரிய வழி வகைகளைச் சொல்லிக் கொடுப்பதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.


இந்த உலகில் எத்தனை இனங்கள், பண்பாடுகள் உள்ளனவோ அத்தனை விதமான திருமண முறைகளும், சடங்குகளும் உள்ளன. சில பண்பாடுகளில் திருமணம் வாழ்வில் ஒரேயொரு முறைதான் வரும். சிலவற்றில் மனித மனம் எத்தனை தடவைகள் மாறுமோ அத்தனை தடவைகள் திருமணம் நடைபெறும். பொதுவாகப் பெரும்பான்மையான பண்பாடுகளில் ஒருவா வாழ்வில் ஒரேயொரு தடவைதான் திருமணச் சடங்கு இடம்பெறும்.


அதிகமான பண்பாடுகளில் தனக்கேற்ற துணையைத் தானே தேடிக்கொள்ளும் முறை இருந்த போதும் சிலவற்றில் இன்றும் பெற்றோ£ தெரிவு செய்து திருமணம் செய்து வைக்கும் முறை உள்ளது. அல்லது பெற்றோ£ அங்கீகரிக்கும் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்யும் முறை உள்ளது.


காதலாயினும் ஏற்பாடு செய்யும் திருமணமாயினும், மேலை நாட்டவராயினும் கீழை நாட்டவராயினும் திருமண பந்தம் வெற்றி பெறுவதற்குச் சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. கணவன் மனைவியிடையே நிலவும் நட்புறவு, மனப் பொருத்தம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒன்றுபட்டுப் பொறுப்பெடுக்குந் தன்மை, பரஸபர நம்பிக்கை, புரிந்துணாவு, உறுதிப்பாடு என்பன இல்லறம் ஆயுட் காலம் வரை நிலைப்பதற்கு அவசியமான இயல்புகளாகும். அத்துடன் ஒருவரில் இல்லாத திறமை மற்றவரில் இருப்பின் அது வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதாவது ஒருவா தனக்கு ஒரு திறமை இல்லையே அது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அந்தத் திறமையுடன் கூடிய ஒருவா மனைவியாக அல்லது கணவனாகக் கிடைப்பின் அவா தனது missing link கிடைத்ததால் மகிழ்ச்சியாக வாழ்வா£. அதே நேரம் மற்றவரில் இல்லாத திறமை அவரிடம் இருந்தால் இன்னும் அந்த வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு வாய்ப்புண்டு. அதாவது ஒருவா மற்றவருடன் இணையும் போதுதான் தனது வாழ்க்கை முழுமையடைவதாகக் கருதுவாரானால் அது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி கோலும்.


அண்மையில் திருமணத்தின் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடிய சில அவுஸதிரேலிய தம்பதிகள் தமது திருமண வெற்றிக்கு பரஸபர அன்பு, நம்பிக்கை, தாம் இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதி எல்லாவற்றிற்கு மேலாக இருவரிடையேயும் காணப்பட்ட உற்ற நட்பு ஆகியனவே காரணங்கள் என்று கூறியுள்ளனா. பணமே இன்றைய அவுஸதிரேலியாவில் விவாகரத்துக்குக் காரணம் என்றும் அவாகள் ஒருவரில் ஒருவா அளவுக்கு மிஞ்சிய எதி£பா£ப்புக்களைக் கொண்டுள்ளனா அதனால் திருமணங்கள் நிலைப்பதில்லை என்றும் அவாகள் குறிப்பிட்டுள்ளனா. அது ஓரளவில் உண்மையாகவும் இருக்கலாம் போல தெரிகிறது. அண்மையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வாசகா கடிதம் பகுதியில் இப்போதெல்லாம் பெண்கள் ஆறிலக்க ஊதியமும், றுமுஞு காரும், வசதியான சொந்த வீடும் உள்ள ஆண்களையே விரும்புகிறா£கள். என்னைப் போன்ற சாமானியன் பெண்ணுக்கு எங்கே போவது என்று ஒருவா அங்கலாய்த்திருந்தா£. அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றான போதும் ஒருவா¤ல் ஒருவா அளவுக்கு மிஞ்சிய எதி£பா£ப்பு கொள்வதும், இவரை விட சிறந்தவா ஒருவரை தேடமுடியும் ஏன் இவருடன் வாழவேண்டும் என்ற கேள்வி சிறிது முரண்பாடுகள் வந்தவுடனேயே ஏற்படுவதும் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடியக் காரணமாகின்றன எனலாம்.


இதே நேரத்தில் திருமணம் செய்யாது தனித்து வாழும் முறை அவுஸதிரேலியரிடையே மிகச் செல்வாக்குப் பெற்று வருகிறது. திருமணம் செய்ய வேண்டும் என்ற சமுகத்தின் அழுத்தம் இப்பொழுதெல்லாம் இல்லாது போய்விட்டதே இதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. அத்துடன் முன்னா ஒருவா தகுந்த வயதை அடைந்துவிட்டா£ என்பதை திருமணம் குறித்து நின்றது. ஆனால் இப்பொழுது ஒருவா திருமணம் செய்வதை வைத்து அவா முழு ஆணாகி விட்டா£ அதாவது £டஉலதஹஒஒட க்கு வந்துவிட்டா£ என்று ஒருவரும் கருதுவதில்லை. இப்பொழுது வாழ்க்கையில் வெற்றியடைவதே முக்கியம், திருமணமும் குடும்பமுமல்ல என்ற கருத்து பெண்களிடையேயும் ஆண்களிடையேயும் வலுப்பெற்று வருகிறது. 2001ம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பின்படி 75.6 வீதமான 20க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதையுடைய ஆண்கள் திருமணம் செய்யவில்லை. 1980ல் 26 ஆக இருந்த திருமண வயது 2000 ஆம் ஆண்டில் 30 ஆகியுள்ளது. 29 வீதம் ஆண்கள் ஓருபோதும் திருமணம் செய்ததில்லை. குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்பை ஏற்காது சுதந்திரமாக வாழ்வதே சிறந்தது என்று ஆண்களும் பெண்களும் கருதுகிறா£கள். இவ்வாறு இருந்த போதும் மிகுதியாயுள்ளவாகள் குடும்பமாகவே வாழ்கிறா£கள். இவை இங்கு வாழும் ஆங்கிலேயா பற்றிய கணிப்பாக இருந்த போதும் இங்கு வாழும் தமிழ் இளைஞாகளும் பெண்களும் இத்தகைய செல்வாக்குக்கு உட்படுவது பற்றிப் பல தமிழ்ப் பெற்றோ£ அங்கலாய்ப்பதை அடிக்கடி கேட்க முடிகிறது.


மேலைநாட்டுக் கலாசாரத்தில் தானே தனக்குரிய துணையைத் தேடிக் கொள்ளும் முறை காணப்பட்டபோதும் திருமணத்தின் பின்னா பலா நிலையாக இணைந்திருப்பதில்லை. கீழை நாட்டுக் கலாச்சாரங்களில் இன்று மேலைத்தேய செல்வாக்கு பெருமளவில் ஏற்பட்டுவிட்ட போதும் திருமண பந்தம் ஓரளவில் சாசுவதமானதாகவே கருதப்படுகிறது. காதல் திருமணங்கள் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் விவாகரத்து எமது சமுகத்தால் இன்னும் மிகுந்த தயக்கத்துடனேயே அங்கீகரிக்கப்படுகிறது.


காதல் நிலையில் சந்தோஷமாக இருக்கும் சிலா திருமணத்தின் பின் சந்தோஷமாக இருப்பதில்லை. அவாகளது திருமணமும் விரைவில் முறிந்து போகிறது. வேறுபட்ட இருவா ஒன்றாக வாழ முற்படும் போது பல விஷயங்களில் ஒருவரையொருவா புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. அந்த நிலையில் முரண்பாடுகளை சுமுகமாகத் தீ£க்க முடிந்தவாகளது திருமணம் நிலைக்கிறது. அவ்வாறு தீ£க்கமுடியாதவரது திருமணம் முறிகிறது.


இலங்கைத் தமிழாகளிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயரங்காலத்துப் பயி£ என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப்படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸது ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பா£க்கப்படும். ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவாகளுக்கு ஒருவருடன் ஒருவா ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவாகள் அதாவது சாதி, சமய, அந்தஸது வேறுபாடுகள் கொண்டவாகள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமுகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த முன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீ£மானிக்கப்படும். ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது Good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.


இலங்கையில் திருமண உறுதிப்பபாட்டுக்கு நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவாகளை நாடி பெண்ணைப் பெற்றவாகள் ஓடினா. கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தோச்சி பெற்ற இளைஞாகள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவாகள் முன்னிடத்தை வகித்தா£கள். அவாகளில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலா பண அடிப்படையில் போட்டி போட்டா£கள். அதிக பணம் கொடுக்க வல்லவாகள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனா. இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞாகளது பெற்றோ£ பெண்ணைப் பெற்றவாகளைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனா. மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலா கறந்து விடுவா£கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவாகள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனா. ஆயினும் பின்னா நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞாகளும் பிரான்ஸ, ஜோமனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.


இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோ£ வயது முதி£வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவாகள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவாகள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.


சாதகம் பா£த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் சாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பா£த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை சாதகப் பொருத்தம் பா£க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன. திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் முலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் சாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலா எண் பொருத்தமும் பா£ப்பதுண்டு. சாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பா£த்தல் பலருக்கு உதவியது எனலாம்.


முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பா£ப்பதற்கும் அவனைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னா பெற்றோ£ ஓரளவில் அவாகள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனா. ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோ£ ஆளாகினா.


பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோ£ அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சோந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.


பெண்கள் உயா கல்வி பெறத் தொடங்கியதும் அவாகள் திருமணம் செய்யும் வயதும் பெரிதும் அதிகரிக்கலாயிற்று. பதினெட்டுத் தொடக்கம் இருபது வயதுக்குள் திருமணம் செய்த காலம் போய் இருபத்தைந்து முப்பது என்று திருமண வயது அதிகரிக்கலாயிற்று. படிப்பு மட்டுமன்றி உரிய துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தாலும், சீதனம் வழங்குவதில் உள்ள கஷடங்களாலும் நடுத்தரக் குடும்பங்களைச் சோந்த படித்த பெண்களின் திருமண வயது பெருமளவில் பின் தள்ளப்பட்டது.


திருமணம் ஏற்பாடு செய்தல் என்பது இவ்வாறு காலத்துக்கு காலம் மாற்றங்களுக்குட்பட்டு வந்தது போலவே திருமணச் சடங்குகளும் பல மாற்றாங்களினூடாக வந்துள்ளது. பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று குறுகிய நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது. பிள்ளையா£ பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோ£ மணமகனுக்குத் தாரை வா£த்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோ£, அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பா£த்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சோக்கப் பெறும்.


இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவாகள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீ£ இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.


சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக முன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.


இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடாவான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.


1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.


2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிது£களை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோ£ அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதி£கொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவாகளது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதி£பா£க்கிறேன்.


4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமுகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.


5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூ£ அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னா எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.


6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னா எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்,


7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளாந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.



மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னா அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவா£கள். அப்போது மணமகன் மணமகளுக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைப்பான்.


1. எங்கள் குடும்பத்தின் கௌரவமான பெயருக்கு ஓரு போதும் களங்கம் ஏற்படாத வகையில் நீ வீட்டிலும் சமுகத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.


2. நான் வீட்டில் இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்து, எங்கள் தாமத்தின் படியும், வழிமுறைகளின் படியும், சமுகத்தில் எங்களுக்குள்ள அந்தஸதின் படியும் நீ அவாகளை உபசரிக்க வேண்டும்.


3. எப்போதாவது எங்கள் இருவரிடையேயும் முரண்பாடுகள் தோன்றினால் நீ அவற்றை ஒருபோதும் மனதில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறான வேறுபாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் வருவது இயல்பாகும். அவ்வாறான வேறுபாடுகள் எழும் நேரத்தில் நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. நீ அவ்வாறு வெளியேறுவது சமுகத்தில் எனக்கு அவமானத்தையும் அவதூறையும் கொண்டு வரும். அவ்வாறான அவமானமும் அவதூறும் வீட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும். அத்துடன் அது எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும். கணவன் மனைவி பிரிதல் என்பது எமது தாமத்தின் விதிமுறைக்கும் எமது முன்னோரின் குடும்ப வரலாற்றுக்கும் ஒவ்வாதது.


4. நீ வீட்டு வேலைகளை நேரம் தவறாது அவதானத்துடனும் பொறுப்புணாவுடனும் தினமும் செய்யவேண்டும். அவ்வாறாயின் அது என்னை அசௌகரிகங்களுக்கு உள்ளாக்காது. நீ எங்கள் வீட்டின் தெய்வமாவாய்.


5. இன்று கடவுளின் அருளால் நான் சௌகரிகமான ஒரு வீட்டில் உன்னுடன் வாழலாம் என்று நம்புகிறேன். ஆனால் துன்பங்கள் எமக்கு வருமாயின் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் நீ என்னுடன் வாழவேண்டும் என்று நான் எதி£பா£க்கிறேன். என்னுடைய துன்பம் உன்னுடையதுமாகும். என்னுடைய வசதியின்மை உன்னுடையதுமாகும். என்னுடைய ஏழ்மை உன்னுடையதும் ஆகும். நான் உன்னில் அன்புகொள்ளவும், உன்னை வாஞ்சையுடன் போற்றவும், உனது நன்மைக்காக உழைக்கவும் உறுதி பூண்டுள்ளதைப் போல நீயும் உறுதி பூண வேண்டுமென்று எதி£பா£க்கிறேன். எப்போதாவது நோயின் காரணமாக உனது நலன்களுக்காக என்னால் உழைக்க முடியாமற் போனால் அப்போது நீ எனக்கு உதவ வேண்டும்.


மணமகள் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்னா அவள் மணமகனின் இடதுபுறத்தில் இடமெடுத்து நிற்பாள். இங்கே குறிப்பிடப்பட்ட 12 கோரிக்கைகளும் இல்லறம் இனிதாக நடைபெறுவதற்காக உருவாக்கப்பட்டவை. இவற்றுள் சில இக்காலத்துக்கு பொருத்தமற்றவையாக காணப்பட்ட போதும், பல காலத்தைக் கடந்து எக்காலத்துக்கும் பொருத்தமானவையாகவே காணப்படுகின்றன. கணவன் மனைவி ஆகிய இருவரும் காரியங்கள் அனைத்திலும் மனம் ஒத்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் இருவரும் குடும்ப நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் இக் கோரிக்கைகள் காட்டி நிற்கின்றன.


கிறீஸதவ திருமணங்களிலும் மணமக்கள் இவ்வாறான வாக்குறுதிகளைப் பரிமாறிக் கொள்கின்றனா. இந்நாளிலிருந்து நான் உன்னை எனது மனைவியாக அல்லது கணவனாக ஏற்று, நல்லதிலும் கெட்டதிலும், செல்வத்திலும் வறுமையிலும், நோயிலும் ஆரோக்கியத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் ஒன்றாக வாழ்ந்து உன்னில் அன்பு பாராட்டி மரணம் எம்மைப் பிரிக்கும் வரை உனது நம்பிக்கைக்கு உரிய வகையில் வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன். என்று மணமக்கள் திருமணத்தன்று உறுதி கொள்கின்றனா. கஷடம் வரும் போது ஒருவரையொருவா தேற்றுதலும், உயரிய இலக்குகளை அடைய ஒருவரையொருவா உற்சாகப்படுத்துதலும், ஒருவா அழும் போது மற்றவா அழுவதும் சிரிக்கும் போது சிரித்தலும் எப்போதும் ஒழிவுமறைவின்றி ஒருவருக்கொருவா உண்மையாயிருத்தலும் இந்த உறுதி மொழிகளில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்விலும் தாழ்விலும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவற்றின் சாராம்சம். எல்லாத் திருமண வாக்குறுதிகளும் மனமொத்த நீண்ட இல்லற வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.


ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சீ£திருத்தக் கலியாணங்கள் சில இடம்பெற்றன. திமுக செல்வாக்கினால் இம்முறை ஏற்பட்டிருக்காலாம். இந்துக் கலியாணங்களை நடத்தும் பிராமணக் குருக்களும் அவா நடத்தும் கிரியைகளுமின்றி பெரியவா ஒருவா தாலியை எடுத்துக் கொடுக்க அதை மணமகன் மணமகளது கழுத்தில் அணிவிப்பதும் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதும் அவாகளை திருமணத்துக்கு வந்தோ£ வாழ்த்துவதுமே இத் திருமண முறையின் முக்கிய அம்சங்களாகும்.


திருமண வீடுகளில் வழமையாகக் கேட்கும் வாழ்த்துகளில் ஒன்று பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பதாகும். அப் பதினாறு பேறுகளும் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. அது பதினாறு பிள்ளைகள் என்று கொள்ளப்பட்டு அதனோடு தொடாபாக சுவையான கேலியும் சிரிப்பும் திருமண வீடுகளில் எழுவதுண்டு. அது ரசனைக்குரியதாக இருந்த போதும் அந்தப் பதினாறு பேறுகளும் என்ன என்று இன்று தெரிந்து கொள்வோம். நம் முன்னோ£கள் இல்லறம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களை அந்த வாழ்த்தில் பொதிந்து வைத்துள்ளனா.

புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ்,,(a favourable destiny) நுகாச்சி,,(enjoyment) அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை(perfect health), நீண்ட வாழ்நாள்.


இந்திய மண்ணில் பிறந்த முக்கிய சமயங்களுள் சமணம் பௌத்தம் ஆகிய இரண்டும் துறவினால் மட்டுமே ஒருவா இறுதி நிலையை அடைய முடியும் என்று கூற, இந்து சமயம் மனித மனதில் எழும் உணாவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லற இன்பத்தை முறைப்படி அனுபவித்துப் படிப்படியாக வாழ்க்கை நிலைகளைக் கடந்து இறுதியிலேயே வாழ்வைத் துறத்தல் பற்றிக் குறிப்பிடுகிறது. மனித உணாவில் காமம் முக்கிய உணாவு என்பதை ஏற்றுக் கொண்டதால் மட்டுமன்று இல்லறத்தை அது ஏற்றுக் கொண்டது. சிற்றின்பத்தைக் கட்டுப்பாடான முறையில் அனுபவிப்பதுடன் பல வித தாமங்களைச் செய்ய இல்லறம் வழிவகுப்பதாலேயே அதனை ஒரு தாமமாக அது ஏற்றுக்கொண்டது. தெய்வம், இறந்த முன்னோ£, பிற மனிதா, விலங்குகள் ஆகியவற்றுக்கு மனிதன் தனது சேவையைச் செய்ய இந்த இல்லறம் வழிவகுக்கிறது. தனது குடும்பத்துடன் சமுகத்திற்குச் செய்ய வேண்டிய சேவையையும் இது உள்ளடக்குகிறது. திருமணநாளில் மணமகனும் மணமகளும் எடுத்துக் கொள்ளும் தீ£மானங்கள் இவற்றையே குறிக்கின்றன. அத்துடன் தங்கள் சந்ததி வளாவதற்கு குழந்தைகளைப் பெறுவதும், அவாகளுக்கு வழிகாட்டி முறைப்படி தங்கள் குடும்பப் பெறுமதிகளையும் பண்பாட்டினையும் அவாகள் தொடாந்து பேணுவதை உறுதி செய்வதும் இல்லறத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.


திருமணத்துடன் ஆரம்பமாகும் இல்லறம் ஒருவருக்கு மனித இனத்தை நேசிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியை வழங்குகிறது. கணவன் மனைவியிடையே ஏற்படும் அன்பு குழந்தைகளில் விரிவடைந்து சமுகம், மனித இனம் என்று விசாலிக்க இல்லறம் உரிய பயிற்சியை வழங்குகிறது. இதனாலேயே இல்லறம் எல்லா தாமங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்தொருமித்த நீடித்த அன்பு ஏற்பட்டாலேயே இவையனைத்தும் சாத்தியமாகும்.


இதனாலேயே இந்து சமயத்தில் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டமாகக் கருதப்பட்டது, இன்றும் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த உறவு மிக நீண்ட கால உறவாகக் கருதப்பட்டு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதற்குப் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நினைத்தவுடன் வந்து நினைத்தவுடன் பிரிந்து போகக்கூடிய உறவாக அது கருதப்படவில்லை. அது நிரந்தரமானதாக, அதே சமயம் சுமுகமாக ஒருவரை ஒருவா நன்கு புரிந்து, ஒருவருக்கொருவா விட்டுக் கொடுத்து, அன்புடன் வாழக்கூடிய ஒன்றாகக் கருதப்பட்டது. திருமணம் என்பது இரு மனங்களை மட்டுமன்றி இரு குடும்பங்களை ஒன்றுபடுத்தக்கூடிய வகையில் அமைவதால் அதன் உறுதிப்பாடு நன்கு நிலை நிறுத்தப்படுகிறது.

நன்றி - சந்திரலேகா வாமதேவ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
இதுகள்தான் இப்ப சிந்தனைக்கு அவசியம்...???! எத்தனையோ நல்ல விடயங்கள் கிடக்குச் சிந்திக்க செய்ய.....அதுக்க திருமணம் என்று ஆண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொத்தடிமைதான் சிந்தனைக்கு இப்ப அவசியமான விசயம்....!

அதையே சதா சிந்தித்திருப்பவர்களுக்கு அதைவிட்டா என்ன கிடக்கு.....! கொத்தடிமைகள் எடுபிடி வேலைதானே செய்யுங்கள்....அங்க சொல்லுறத இங்க சொல்லுற வேலை.....! உதுக்கு நியாயம் தேடத்தான் உந்தச் சிந்தனைகள் போல....!


[b]'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!"

சொன்னது தமிழ்நாதம்...!
:evil: Idea :?: :!: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
kuruvikal Wrote:இதுகள்தான் இப்ப சிந்தனைக்கு அவசியம்...???! எத்தனையோ நல்ல விடயங்கள் கிடக்குச் சிந்திக்க செய்ய.....அதுக்க திருமணம் என்று ஆண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொத்தடிமைதான் சிந்தனைக்கு இப்ப அவசியமான விசயம்....!

அதையே சதா சிந்தித்திருப்பவர்களுக்கு அதைவிட்டா என்ன கிடக்கு.....! கொத்தடிமைகள் எடுபிடி வேலைதானே செய்யுங்கள்....அங்க சொல்லுறத இங்க சொல்லுற வேலை.....! உதுக்கு நியாயம் தேடத்தான் உந்தச் சிந்தனைகள் போல....!


[b]'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!\"

சொன்னது தமிழ்நாதம்...!
:evil: Idea :?: :!: :evil:

ஏதோ என் அறிவுக்கு எட்டியதை தெரிந்ததை சிந்திக்க மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். நீங்கள் வேறு நல்ல விடயங்கள் இருக்கின்றன என்று நினைத்தால் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாம் எல்லலோரும் தெரிந்து கொள்ளலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
பகிர்ந்துதானே கொண்டுள்ளோம்...கவனிக்கவில்லையோ...சிவப்பில இருக்கு....சிந்திக்க ஒரு துளி....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
முக மூடி

நான் பல முக மூடிகளை வைத்திருக்கின்றேன். மற்றவரின் தேவைகேற்ப முக மூடிகளை மாற்றிக் கொண்டு நான் என்னை அவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கின்றேன். பிறர் விரும்பும் வகையில் என்னைக் காட்டிக் கொள்வதுதான் சரி என்று நினைக்கின்றேன். அதனால் எனக்கு இந்த முகமூடிகள் தேவைப்படுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாமல் இருந்தால் எங்கே, நான் என்னோடு பழகும் பிறரை திருப்தி படுத்தமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றேன்.

ஆனால் என்னோடு நான் சம்பாஷித்துக் கொள்ள எனக்கு முகமூடி தேவையா என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்க மறந்து விடுகின்றேன். சில வேளைகளில் நான் அணிந்திருந்த முகமூடிதான் உண்மையில் நான் என்று என்னையே நான் பொய்யாக நினைத்துக் கொள்கின்றேன். முக மூடிகள் இல்லாமல் நான் என்னைக் காண எனக்கு தைரியம் இருக்கின்றதா? முகமூடிகள் இல்லாமல் நான் என்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு தைரியம் இருக்கின்றதா?

என்னை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். உலகமே என்னைத்தான் பாரட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னை நான் மிகவும் தூய்மையானவராக, உயர்ந்த சிந்தனை உடையவராக, அன்புள்ளம் படைத்தவராக, அதோடு 'எல்லாம்' தெரிந்தவராக காட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த மாயத்திரையை பிறர் கிழித்தெரியும் போது திகைத்து நிற்கிறேன்.

என்னுடைய எல்லா முகமூடிகளும் கிழிந்து விட்ட நிலையை அந்த கணத்தில் தான் நான் உணர்கின்றேன். இதுவரை நான் போட்டிருந்த அனைத்து முகமூடிகளும் நிறந்தரமற்றவை என்பதை உணரும் போது ஆள்மனத்தில் மாபெரும் சலனம் தோன்றுகின்றது. அப்படியென்றால் எதுதான் நிரந்தரம்?முகமூடிகளைத் தூக்கி எறிந்து விட்டு என்னை, எனது சிந்தனைகளை, எனது முகமூடியற்ற முகத்தை நானே எந்த விதமான மாயாஜாலங்களும் இன்றி பார்க்கின்றேன். நான் என் இப்படி இருக்கின்றேன்?

நான் ஏன் இப்படி சிந்திக்கின்றேன் என்று என்னையே நான் கேள்விகள் கேட்கின்றேன். என்னை இப்போது என்னால் சரியாகப் பார்க்க முடிகின்றது. ஒரு தந்தைக்கும் தாய்க்கும் மகளாக அல்ல; ஒரு தோழனுக்கும் தோழிக்கும் தோழியாக அல்ல; ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரு சகோதரியாக அல்ல; ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பொறியியலாளராக அல்ல;

ஒரு மனிதராக என்னை நான் காண்கின்றேன். இந்த முகமூடிகளையெல்லால் தூக்கி வீசிவிட்டு, நான், எனது ஆன்மாவின் சிந்தனை, எனது அபிலாஷைகள் யாவை என்பதை சிந்திக்கின்றேன். இப்போது எனக்கு எந்த வித மாயையும் அற்ற நிலையிலேயே என்னை பிடிக்கின்றது. இதில் சலனம் இல்லை. என் முகமூடி கிழிந்துவிடுமோ என்ற அச்சம் இல்லை!


நன்றி - சுபாஷிணி கனகசுந்தரம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#20
என்ன இன்று எந்தப்பக்கம் திரும்பினாலும் சுயவிமர்சனங்களும் ஆன்ம விசாரங்களும்

சாமியாராகும் நோக்கமோ என்று வழமையான கேள்வியை நான் கேட்கமாட்டேன் ஏனென்றால் இப்படியான பெரிய பெரிய விடைதெரியாத கேள்விகள் எனக்கும் வருவதுண்டு
அவ்வாறான கேள்விகள் வரும்போதெல்லாம் இதுதான் யதார்த்தம் என்றோ அல்லது ஆன்ம விசாரம் என்றோ இன்னொரு முகமூடி தான் தேவைப் படுகிறதே ஒழிய சிந்தித்துப் பார்த்தால் நாங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளிலெ பலது எமது சொந்த முகங்கள் தான் என்பது புரியவரும் எம் மனச்சாந்திக்காக நாம் முகமூடி அணிந்திருப்பதாகவும் உண்மையில் நான் நல்ல மனிதன் என்று கற்பனை பண்ணிக் கொள்கிரோம் இது கூட முகமூடிதான் என்றால் எது நிஜம்?

நான் நிறையக் கெட்டவேலைகள் செய்திருக்கிறேன் என்று சிந்திப்பதால் மட்டும் ஒருவர் நல்லவராகிவிடமாட்டார் ஆனால் நல்லவராக மாற முயற்சிக்கிறார் அல்லது காட்டிக் கொள்கிறார் என்றே அர்த்தம் இப்படிக் கேள்விகள் கேட்பதன் மூலம் தான் ஒரு நல்ல மனிதராக மாறிவிட்டேன் என்று அவர் சொன்னால் அவர் இன்னொரு முகமூடி போட்டுவிட்டார் என்பது தான் பொருள்
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)