Yarl Forum
அனிமேஷன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: அனிமேஷன் (/showthread.php?tid=7321)



அனிமேஷன் - Mathan - 03-15-2004

ஐந்து நிமிடத்தில் அனிமேஷன் கற்றுக்கொள்ளுங்கள் .. !

அனிமேட்டிங் படங்கள் உங்களின் இணையப்பக்கத்துக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களைவிட மனிதனின் கவனத்தைக் கவரும் என்று உளவியல் கூறுகிறது.. அத்தகைய அனிமேட்டிங் படங்கள் செய்வது பற்றி மிகச்சுருக்கமாகப் பார்க்கலாம் ...

1.அனிமேட்டிங் செய்ய முதலில் நமக்குத் தேவை தனித்தனிச் சட்டங்கள்(frames).. அதாவது படங்கள்.. உங்களுக்குத் தேவையான படங்களை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.. அல்லது www.google.com - ல் image search பயன்படுத்தித் தேவையான படங்களை எடுத்து அல்லது "paint" போன்ற ஏதாவது ஒரு மென்பொருளில் வரைந்து,வெட்டி, ஒட்டி...... உருவாக்கிக் கொள்ளுங்கள்... படங்கள் எந்த வரிசையில் இயங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரிசையில் முதலில் பெயர் கொடுத்துக்கொண்டீர்களானால் வசதியாக இருக்கும் .. எடுத்துக்காட்டாக .. 1.jpg , 2.jpg , 3.jpg .....

2.சரி.. இப்போது தனித்தனிப் படங்களைத் தயாராக வைத்துக்கொண்டுவிட்டோம்..அடுத்ததாக அந்தப் படங்கள் அனைத்தையும் ஒரே பைலாக விரும்பிய வரிசையில் தைக்க வேண்டும்.

3.பின்னர் ஒரே படமாகத் தைத்த பைலை இயங்குகின்ற gif பைலாக மாற்றவேண்டும்..
அவ்வளவுதான் இப்போது நீங்கள் இயங்கும் gif படம் செய்துவிட்டீர்கள்.....

இப்போது நம் அனைவருக்கும் வருகின்ற சந்தேகம்... பல படங்களை எப்படி ஒரே படமாகத் தைப்பது? .. அதனை எப்படி இயங்கும் gif பைலாக மாற்றுவது? என்பதுதான்... இதைப்பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப் படவேண்டாம்.. இந்த வேலையை செய்ய உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன.. அதில் எளிமையான ஒரு மென்பொருளை நீங்கள் இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்... இதற்காக நிறைய மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது... அவற்றில் ஒன்று "அனிமேட்டர்9" என்பது. இது இந்த இணைப்பில் இலவசமாய்க் கிடைக்கிறது..

http://www.vvcool.com/animator9/download/animator.exe

அந்தக் கோப்பை இறக்கி உங்களின் கணினியில் சேமித்துப் பின்னர் அதன்மேல் இருமுறை கிளிக் செய்தீர்களானால் எந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்கும்.. இடத்தைத்தேர்வுசெய்து நிறுவிக்கொள்ளுங்கள்.. இந்த பைலின் அளவு 500 KB க்கும் குறைவுதான்...

இந்த "animator9" மென்பொருளைப் பயன்படுத்துவது மிகவும் எளிது... இதிலுள்ள "stitch" என்ற பட்டனைத் தட்டி உங்களின் படங்களைத் தேவையான வரிசையில் தேர்வு செய்து "done" என்ற பட்டனைத் தட்டி அனைத்தையும் ஒரே படமாகத் தைத்துக் கொள்ளலாம்.... பின்னர் "play" என்ற பட்டனை அழுத்தினால் படம் எவ்வாறு இயங்கும் என்று நமக்குத் தெரியும்.. படங்கள் இயங்கும் வேகத்தை "control" என்ற option - ஐ பயன்படுத்திக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.. அதன் பின்னர் "make" என்ற பட்டன் அழுத்தினால் உங்களின் அழகான இயங்கும் படம் தயார்... அப்புறமென்ன .... உங்கள் படம் இயங்குவதைப் பார்த்து ரசிக்கவேண்டியதுதான்..


அனிமேட்டர்9 போன்ற எளிதான மென்பொருள்களும் பல உள்ளன.. அவற்றில் ஒன்று .. மேஜிக் மார்ப் என்பதாகும் ... அதனை இங்கேயிருந்து இறக்கிக்கொள்ளலாம் ( http://www.effectmatrix.com/ ) .. இந்த மென்பொருளைப் பயன்படுத்து பல படங்களைத் தயாரிக்கலாம் ..


என்ன .. நண்பர்களே .. ! இப்போதே நீங்களும் இயங்கும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

நன்றி - முத்து


- sOliyAn - 03-16-2004

தயாரிக்க வேணும்.. நேரம்தான்...?!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- anpagam - 03-27-2004

அருமை.... ஆனால் பிளாஸ் கற்றால் எல்லா அனிமேட்டிங் படங்கள் உண்மையான உயிர்ஒவியங்களாக்கலாம் ஆனால்.... ஆர் இங்கு கற்றுதரபோறார்... அது வேற சிதம்பரசக்கரம் மாதிரி இருக்கு... :roll: :?
முடிந்தால் நான் பின் விபரிக்கிறேன்..... :roll:
தெரிந்தவர் முயற்சிக்கலாமே...
பெரிய பெரிய ஆசை...
Flash mx & studio mx...
& tnx muththu & bbc <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- Paranee - 03-27-2004

FLSH கற்பது இலகு நண்பரே
அதன் உதவி பகுதியில் நீங்கள் கிளிக் செய்து கற்றுக்கொள்ளலாம்.
இப்படியான மென்பொருள்களிற்கு ஆசிரியர்களும் நாமே மாணவர்களும் நாமே


வணக்கம் - TMR - 03-27-2004

வணக்கம் இனியவர்களே Flash கற்ப்பது மிகவும் இலகு அதிலும் நான் தரும் இந்த தளத்தில் இருந்து பெறும் மென்பொருளில் செய்வது மிகவும் இலகு

எங்கே செய்யுங்கள் பாப்போம் அப்படி ஏதும் உதவி தேவைப்படின் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

http://www.swishzone.com

இத்தளத்துக்கு போய் swish2 என்ற மென்பொருளை
இறக்கவும்

இதை சோழியன் அண்ணா ஓருமுறை செய்தவர்
மிகவும் இலகுவானது

TMR......
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- TMR - 03-27-2004

http://www.swishzone.com/index.php?area=pr...ucts&product=v2


- anpagam - 03-27-2004

swish2 குறிப்பிட் அளவுகளுக்கு மேல் நாம் செய்ய இயலாத இலகுவான ஒரு flash இல் செய்யப்பட்ட பகுதி மட்டுமெ..


- sOliyAn - 03-27-2004

ஆமாம் TMR. உங்க உதவியுடன் ஓரளவு செய்தேன்.. உந்த பட்டன் விசயம்தான் சிக்கலாயிருக்கு.. முடியுமானால் விபரமாக ஒரு விளக்கம் தாங்களேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- TMR - 03-27-2004

அந்த சிவப்பு பட்டன் தானே
file அனுப்பிறன் தேவைக்கு ஏற்ப்ப மாற்றுங்கள்
சரியா!!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 03-27-2004

நிச்சயமாக.. காத்திருக்கிறேன்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->