![]() |
|
உலகவல்லரசுளுக்கு எச்சரிக்கை !? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: உலகவல்லரசுளுக்கு எச்சரிக்கை !? (/showthread.php?tid=7295) |
உலகவல்லரசுளுக்கு எச் - anpagam - 03-25-2004 <b>எஞ்சப்போவது நரமாமிச உலகு?.</b> மத்திய கிழக்கின் காசா நகரில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்னால் பாலஸ்தீனத் தீவிரவாத இயக்கமான ஹமாஸின் ஆன்மீகத் தலைவர் Nர்ய்க் அஹமட் யாசீன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாலஸ்தீன மக்கள் கொந்தளித்த வண்ணமிருக்கின்றார்கள். சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை ஓட்டிý வந்த பார்வைக்குறைபாடுமுடைய அந்த 67 வயதான ஆன்மீகத் தலைவர் மீது ஹெலிகொப்டர்களில் இருந்து ராக்கெட் தாக்குதலை நடத்தி இஸ்ரேலிய இராணுவம் அதன் 'படை வலிமையை" பறைசாற்றியிருக்கிறது. இழந்த தங்கள் தாயகத்தை மீட்பதற்காக அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இரத்தம் சிந்திப் போராட்டம் நடத்திவரும் பாலஸ்தீன மக்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய Nர்ய்க் அஹமட் யாசீன் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலின் மறுகணம் அப்பகுதிக்கு விரைந்தோடிýச் சென்றவர்களினால் காணக் கூýடிýயதாக இருந்ததெல்லாம், ஆன்மீகத் தலைவரின் இரத்தம் தோய்ந்த சக்கரநாற்காலியின் பாகங்களையே. இக்கொலைக்கான பொறுப்பை உடனடிýயாகவே உரிமை கோரிக்கொண்ட இஸ்ரேலிய இராணுவம், பிரதமர் ஏரியல் ர்ரோனே நேரடிýயாக Nர்ய்க் அஹமட் யாசீனைக் கொலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்ததாகவும் உலகுக்குக் கூýறியது. மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிýக்கைகளின் ஒரு அங்கமே ஆன்மீகத் தலைவரின் கொலை என்று இஸ்ரேலிய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வாய் கூýசாமல் பிரகடனம் செய்தார். இஸ்ரேலின் இந்தச் செயலை ஏறக்குறைய முழு உலகமுமே கடுமையாகக் கண்டனம் செய்து கொண்டிýருக்கின்ற அதேவேளை, சியோனிஸவாதிகளோ, பாலஸ்தீனத்தின் சகல தீவிரவாதத் தலைவர்களுமே கொலை செய்யப்படுவதற்காக குறி வைக்கப்பட்டிýருக்கிறார்கள் என்று திமிர்த்தனத்துடன் அதே உலகத்துக்குச் சொல்லிக் கொண்டிýருக்கிறார்கள். தங்கள் ஆன்மீகத் தலைவரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்குவதற்கு பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கொந்தளித்துக் கொண்டிýருக்கின்ற வேளையில், உலகத்துக்கே தலைமை தாங்கும் தகுதியைத் தனக்குத்தானே பொருத்திக் கொண்ட அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புர்; 'பயங்கரவாதத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது. அதை இஸ்ரேல் செய்து கொண்டிýருக்கிறது" என்று கூýறியிருக்கிறார். பாலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை ஒடுக்குவதில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளுக்குப் பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து, 2001 செப்டெம்பர் 11 நியூயோர்க்கிலும் வார்pங்டனிலும் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு 'தான் பயங்கரவாதமென்று நினைப்பதற்கு" எதிராக முழு உலகையும் அணி திரட்டுவதற்கு கங்கணம் கட்டிýக் கொண்டு செயற்பட்டு, உலக மக்களின் எந்தவொரு நியாயமான வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க மறுத்து அடாவடிýத்தனத்தை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து இதைத் தவிர வேறு எந்த வார்த்தையை எதிர்பார்க்க முடிýயும்?. ஆனால், நியாயமானதும் சட்டபூர்வமானதுமென்று உலக சமூýகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை 'மேலும் மாசுபடுத்துவதற்கு" 2001 செப்டெம்பர் 11 இன் பின்னரான நிலைமைகளை முற்று முழுதாகப் பயன்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு துணிச்சலைக் கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கடைப்பிடிýக்கும் அணுகுமுறையை சகித்துக் கொள்வதனால் ஏற்படக் கூýடிýய விபரீதத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொண்டும் ஏனோதானோவென்று எதுவும் பேசாமல் இருப்பது பெரும் விசனத்தை ஏற்படுத்துகிறது. நியாயபூர்வமானவை என்று உலக சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட விபரீதத்தின் காரணமாக அவற்றின் நியாயத் தன்மைகளையோ அல்லது இலட்சியக் கூýறுகளையோ இழந்து விட்டதாக கருதமுடிýயாது. அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னர் 'பயங்கரவாதத்துக்கு எதிராக" உலகளாவிய போரைத் தொடுப்பதில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கையாளத் தலைப்பட்ட அணுகுமுறையை அவதானித்த கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த கருத்தொன்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும். 'அமெரிக்காவும் மேற்குலகும் உலக வரைபடத்தில் இருந்து ஒரேயொரு வேறுபாட்டை ஒழித்து விடுவதற்கு கங்கணம் கட்டிý நிற்கின்றன. அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாடே அது" என்று காஸ்ட்ரோ கூýறியிருந்தார். இரு தசாப்தங்களுக்கும் கூýடுதலான காலமாக உள்நாட்டுப் போரில் சிக்கி அவலப்பட்டுக் கொண்டிýருந்த இலங்கையர்களாகிய எமக்கு அந்த உள்நாட்டுப் போரை மூýளவைத்த அடிýப்படைக் காரணிகளை நிதர்சனமாகக் காணக்கூýடிýயவர்களான எமக்கு அமெரிக்காவும் மேற்குலகும் துடைத்தெறிய விரும்பும் அந்த 'வேறுபாட்டிýன்" கனதி விளங்காமல் இருக்க எந்த நியாயமும் இல்லை. அமெரிக்காவும் அதன் பின்னால் அணிதிரண்டு நிற்கும் நேசநாடுகளும் வகுப்பது தான் உலக ஒழுங்கு என்றும் உலக நியதி என்றும் ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர வேறுமார்க்கமேயில்லை என்று போதிப்பதற்கு பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள். அந்த 'உலக ஒழுங்கையும் நியதியையும்" இணங்கிச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டதன் விபரீதத்தையே இன்று சர்வதேச சமூýகம் ஈராக் விவகாரத்தில் அனுபவித்துக் கொண்டிýருக்கிறது. பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாகக் கூýறி தங்களது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்த ஜோர்ஜ் டபிள்யூ.புர்;ர்{க்கும் பிரிட்டிýர்; பிரதமர் ரொனி பிளயருக்கும் அவர்களது நாடுகளிலேயே எதிர்ப்பு அதிகரித்து 'பொய்யர்கள்" என்று நாமகரணம் சூýட்டப்படுகின்ற போதிலும் உலக நாடுகளின் தலைவர்கள் எனப்படுவோர் பேசாமடந்தைகளாகவே இருக்கிறார்கள். எனவே, மத்திய கிழக்கில் பாலஸ்தீனர்கள் மத்தியில் ஏற்பட்டிýருக்கும் கொந்தளிப்பை 'பயங்கரவாதம்" என்று கூýறி 'நியாயத்தை" மறைப்பதற்கு தொடர்ந்தும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் அவர்களின் அமெரிக்க-மேற்குலக ஆசான்களும் மேற்கொள்ளப் போகும் முயற்சிகள் பெரும் அனர்த்தத்தையே கொண்டுவரும் என்பது நிச்சயம். நியாயபூர்வமான போராட்டத்தின் 'யதார்த்தபூர்வமான மெய்மைகளை" பயங்கரவாதத்திற்குள் புதைத்துவிடத் துடிýக்கும் சக்திகளுக்கு உலக சமுதாயம் துணை போகாதிருப்பது அவசியம். அவ்வாறு தொடர்ந்தும் துணை போனால் எந்தக் கொலையையும் எவரும் நியாயப்படுத்தி விடக்கூýடிýய நரமாமிச உலக்கு தான் மிஞ்சும். நன்றி : தினக்குரல். - kuruvikal - 03-25-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39955000/jpg/_39955245_yassin203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39955000/jpg/_39955279_rantis203.jpg' border='0' alt='user posted image'> Sheikh Ahmed Yassin. இவர்தான் பலஸ்தீன கமாஸ் இயக்கத்தின் இஸ்ரேலுக்கு எதிரான தற்கொலைத் தாக்குதல்களை திட்டமிடும் சூத்திரதாரி என்று சொல்லி இஸ்ரேலிய படையினரால் உலங்கு வானூர்தி மூலம் ரொக்கற் ஏவப்பட்டுக் கொல்லப்பட்ட கமாஸ் இயக்க ஸ்தாபகர்....! படம் bbc.com (மேலே அன்பகம் தந்த செய்திக்கு வலுச்சேர்க்க இப்படமும் குறிப்பும் தரப்படுகிறது...!) - Mathan - 03-25-2004 இந்த தாக்குதல் கண்டிக்கதக்கது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை இதைபற்றி மெளனம் சாதிப்பது கவலைக்குரியது. - anpagam - 03-25-2004 நன்றி குருவி...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->என்ன சொல்லுறீங்க பிபிசி லொள்ளாக்கும்.... அல்லது கீ கொடுக்கிறீங்களா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->எது என்னவோ இக்கட்டுரையில் ஆயிரம் கருத்துக்கள் ஆளமாக உள்ளது(தெரிந்தாலும் தெரியாதமாதிரி).... அதை விளக்கமுடியாது...எல்லாவிசயங்களும் எல்லா இடத்திலும் கதைக்க முடியாது... இயற்கை.... மனிதவாழ்க்கையின் மர்மத்தை பார்த்தீர்களா.... யாழுக்குமட்டும் விழங்கிற்று.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
- Mathan - 03-26-2004 anpagam Wrote:நன்றி குருவி...<!--emo& இல்லை அன்பகம். உண்மையாகவே சொல்கின்றேன். இது கட்டாயம் கண்டிக்கப்படவேண்டிய தாக்குதல். தனது நட்பு நாடு என்பதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் மெளனம் சாதிப்பது கவலைக்குரியது. - anpagam - 03-26-2004 இதெல்லாம் நடக்கிறகாரியமாடாப்பா... உமக்கு வடிவாக விளங்கல்ல கட்டுரையே திருப்பி படி... அரசியலில இதெல்லாம் சாதரணமப்பா.... ஆனால் யதார்த்தம் வேறு - Mathan - 03-26-2004 அன்பகம், அமெரிக்காவின் அரசியல் பொருளாதார நலங்களும் அதற்கு ஏற்றவாறே எந்த ஒரு பிரைச்சனையும் அணுகும் எனப்து நிதர்சனம் தான். இலங்கை பிரைச்சனையும் அந்த விதத்திலேயே அமெரிக்கா அணுகுகின்றது. அமெரிக்கா மட்டும் அல்ல இந்தியாகூட தனது நலங்களின் அடிப்படையிலேயே இலங்கை பிரைச்சனையை பார்க்கின்றது. இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு தன்னாட்சி வழங்குவதிலோ அல்லது அவர்கள் முக்கிய அரசியல் சக்தியாக மாறுவதிலோ விருப்பம் இல்லை. அதே நேரம் இலங்கை அரசு புலிகளை முற்றாக அழித்து முழு அதிகாரத்தையும் கையில் எடுப்பதிலும் இஷ்டம் இல்லை. அவர்களுக்கு பிரைச்சனை இப்படியே இழுபடவேண்டும் அதன் மூலமாக இலங்கையில் செல்வாக்கை செலுத்து தமது அரசியல், பொருளாதார நலங்களை காக்க வேண்டும். அவ்வளவுதான். - anpagam - 03-26-2004 திரும்ப சொல்லுறேன் ஆதலால்தான்....... அரசியலில இதெல்லாம் சாதரணமப்பா.... ஆனால் யதார்த்தம் வேறு.... (கட்டுரையில் உள்ளது அந்த யதார்த்தம்)
- Mathan - 03-26-2004 இஸ்ரேலைக் கண்டித்து ஐ.நா. வில் தீர்மானம் அமெரிக்கா வீட்டோவை பிரயோகிக்குமா? இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்தும் ஹமாஸ் தலைவர் ஷேக் யாஸீனின் படுகொலையைக் கண்டித்தும் பலஸ்தீனம் ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளது. இஸ்ரேலுக்கு எல்லையற்ற ஆதரவை வழங்கி வருகின்ற அமெரிக்கா இந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தலைவர் ஷேக் அஹமத் யாஸீனை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. இதனை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அல்ஜீரியா பலஸ்தீனம் சமர்ப்பித்த தீர்மானத்தை பந்தோபஸ்து சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய நாடுகளிடம் சுற்றுக்கு அனுப்பியுள்ளது. பலஸ்தீனம் சமர்ப்பித்த இந்த தீர்மானம் ஒரு தலைப்பட்சமாக இருப்பதாலும் பயங்கரவாதத்திற்கு மறைமுக ஆதரவை வழங்குவதாகவும் கூறி அமெரிக்க இந்தத் தீர்மானத்தை ஆரம்பத்திலே நிராகரித்தது. ஆனால் இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று பலஸ்தீனம் கேட்டுக் கொண்டது. யாஸீன் எனும் தீவிரவாதியொருவரை கொன்றமைக்காக ஆதரவு கோரி விவாதிக்க அவசியமில்லை என்று அமெரிக்க தூதுவர் ஜொன் நெக்ரோ சயைபில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பலஸ்தீன தூதர் நாசர்அல்கித்வா, பயங்கரவாதத்தை விட்டுவிட்டு சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறும் விதத்தையும், பலஸ்தீன பூமியில் ஆக்கிரமித்ததையும் பற்றி விவாதிப்போம் என்றார். தீவிரவாதத்திற்கு ஆதரிப்பதில்லை என்ற போதிலும் தீவிரவாதத்தின் தந்தைக்காகவே சபை கூடுகிறது என்றார் இஸ்ரேலிய தூதர் டான்கில்லார் மேன். ஆனால் இதற்கு பதிலளித்த கித்வா, பலஸ்தீனத்தின் எந்த தீவிரவாதத்தின் குழுவின் பெயரையும் தீர்மானத்தின் மொழியக்கூடாது என்றும் தெரிவித்தார். விவாதம் தொடர்ந்தும் நடைபெறும் என தெரிகிறது. நன்றி - வீரகேசரி - anpagam - 05-05-2004 <b>கார்த்திகைப்புூ உணர்த்திய உண்மைகள்</b> -யாழிலிருந்து குரு- ஆம், தமிழரின் தேசிய மலர் தொடர்பாக சென்ற ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இது தொடர்பாக தமிழ்நெற்றில் 14-04-2004 (1:10 சர்வதேச நேரம்) விசேட கட்டுரை வந்தவுடன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி ரைம்ஸ் ஒப் இன்டியா 15 ஆம் திகதியும் (உள்ளுர் நேரப்படி 7:12 பிற்பகல்), அதனைத்தொடர்ந்து பி.பி.சி உலக சேவை 16 ஆம் திகதியும் (10:44 சர்வதேச நேரம்) அதனைத்தொடர்ந்து 16 ஆம் திகதியே வாஷிங்ரன் ரைம்ஸ் பத்திரிகையும் கார்த்திகைப்புூ தொடர்பாக செய்;தியும,; அது தொடர்பான விமர்சனங்களையும் வெளியிட்டன. தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மீது சேற்றை வாரி இறைத்தே இந்த மூன்று செய்தி நிறுவனங்களும் தங்களுடைய வாசகர்களுக்கு கருத்தினை தெரிவித்து இருக்கின்றன. விடுதலைப் புலிகள் சென்ற வருடமே கார்த்திகைப்புூவை தேசிய மலராக அறிவித்ததும், அது தொடர்பாக உள்ளுர் பத்திரிகையில் கட்டுரைகள் வந்ததும், கார்த்திகைப்புூ தமிழர்களுக்கு ஒன்றும் புதிய புூ இல்லை என்பதும், தமிழர் வாழ்வில் நன்கு அறியப்பட்ட பூ என்பதையும், கார்த்திகைப்புூ தேசிய மலராக அறிவிக்கப்பட்ட பின்பு தான் இலங்கை அரசியலில் தேர்தல் வந்தது, அதில் தமிழ் மக்களின் 90 வீத வாக்குகளைப்பெற்று விடுதலைப் புலிகளை தலைமையாக ஏற்ற தமிழரசுக்கட்சி 22 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றம் சென்றதையும் இச் செய்தி நிறுவனங்கள் மறந்துவிட்டார்கள். ஆக, இந்த செய்தி மூலம் தமிழர்களுக்கு எந்தக்கருத்தையும் இந்த செய்தி நிறுவனங்களோ அல்லது அதனோடு சார்ந்தவர்களோ தெரிவிக்கவில்லை. இவ்வாறு இருக்க ஏன் இந்த செய்தியை பிரசுரித்தார்கள் என்று சாதாரணமாக எல்லோர் மனதிலும் எழும் கேள்வியாகும். ஈராக் நோக்கி அமெரிக்கா யுத்தத்தை ஆரம்பிக்க முன்பு போட்ட நாடகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அதாவது இரசாயன ஆயுதம், அது, இது என்று சொல்லி சும்மா இருந்த சதாமையும் துரத்தி துரத்தி அடித்து ஈராக்கிய மக்களின் வாழ்வை நாசமாக்கியவர்கள், நாசமாக்கி கொண்டிருப்பவர்கள் அதுமட்டுமல்ல இவர்கள் கை போடாத அரசாங்கங்கள்; உலகில் இல்லை எனலாம். ஆனால், இவற்றில் உள்ள புதிய விடயம் என்னவெனில் இந்த முறை இந்தியாவையும் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் போருக்காக பயன்படுத்தும் பணம் அவர்கள் பரம்பரையாகச் சேர்த்துவைத்த பணமல்ல. அந்தந்த நாட்டு மக்கள் வேர்வை சிந்தி உழைக்கும் போது அறவிடப்படும் வரிப்பணமே. ஆகவே, தமது நாட்டு மக்களுக்கு கணக்கு சொல்லியே ஆகவேண்டும். அதாவது தாங்கள் செய்யப்போகும் ஒரு செயலுக்காக இப்போதிருந்தே தமது மக்களை தயார்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. இதனால் தான் தாங்கள் செய்யும் யுத்தம் எல்லாவற்றையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று பிரகடனப்படுத்தி, தமது மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதாக கூறிக்கொள்கிறார்கள். நாளுக்கு நாள் இவர்களே பயங்கரவாதிகளை உருவாக்கியும் அதன் பயங்கரத்தால் நிம்மதி இழந்தும் தவிக்கிறார்கள் என்ற உண்மை இவர்களுக்கு புரியவா போகின்றது ? அப்படியானால் உண்மையாகவே இந்த இந்திய, பிரித்தானிய, அமெரிக்க கூட்டுப்படை தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை செய்யப் போகின்றனவா? இந்தியா ஏற்கனவே சூடு கண்ட புூனை. ஆகவே, இந்தியா நேரடியாக தலையிடாமல் விடலாம், ஆனால் பல ஆண்டுகளாக தமிழருக்கு எதிராக இயங்கியதையை மறைக்க முடியாது. அவற்றில் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 மூத்த புலிகளை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைக்க முனைந்த போது அவர்கள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டமையும், பிரதித்தலைவர் மாத்தையாவை தலைமைத்துவத்திற்கு எதிராக மாற்றியமையும், கேணல் கிட்டுவை கப்பலோடு கைது செய்ய முயற்சித்த போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும், சமாதான காலத்தில் புலிகளின் இரண்டு சரக்கு கப்பலையும் அதிலிருந்த வீரர்கள் மூழ்கடிக்க உதவியமையும், கருணா விடயத்தில் அதிக ஆர்வம் காட்டி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு குது}கலித்தவர்கள் தான் இந்திய அரசும் அதனோடு சேர்ந்த புலனாய்வுப் பிரிவினரான றோ அமைப்பும் என்பதை தமிழருக்கு நினைவில் இல்லாமல் இல்லை. அது மட்டுமல்ல கண்ணிவெடி அகற்றுவதற்காக இந்திய இராணுவத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் வவுனியாவில் வந்து நிலைகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியா இதுவரை பெரியளவில் முயற்சிகள் எதுவும் செய்ததாக இல்லை. இருப்பினும், இவர்கள் அமெரிக்காவின் மூதாதையர் என்பது உலகறிந்த உண்மை. அப்படியானால் அமெரிக்கா முயற்சி செய்ததா? இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் முன்னைய காலங்களில் இலங்கை இராணுவத்திற்காக களத்தில் நின்று கூட வேலை செய்தவர்கள், கோடி கோடியாக பொருள் உதவி செய்தவர்கள், சமாதான காலத்திலும் கூட பல பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தவர்கள், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ததைக்கு புலிகள் வரவேண்டும் என்று மிரட்டியவர்கள், பேச்சுக்கு வந்திருந்தால், வட-கிழக்குக்கு அதிக தொகையைத் தந்திருப்போம் என்று ஆசை காட்டியவர்கள், கருணாவுக்காக வக்காலத்து வாங்கியவர்கள் என்பதோடு கருணாவின் எண்ணத்திற்கு வித்திட்டவர்கள் என்று சொல்லப்பட்டது. (இதனை மறுத்து இலங்கைக்கான அமெரிக்க து}தர் அறிக்கை வெளியிட்டிருந்தார்) இவை எல்லாம் நேரடியாக செய்ததாக எல்லோரும் அறிந்திருந்தாலும் மறைமுகமாக நம்மவர்களைக்கொண்டு செய்த பல காரியங்கள் உண்டு அவற்றையும் விரைவில் புரிந்து கொள்வீர்கள். ஆக மொத்தம் இதுவரை பல கருமங்கள் செய்தாகிவிட்டது. அவற்றை இப்போது சிலவற்றை நேரடியாக பார்க்க கூடியதாகவும் உள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு 20 இராணுவ வைத்தியர்களும் 10 உதவியாளருமாக 30 பேர் இரண்டு கிழமை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து 200 நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய உறுதி அளித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல அங்கிருந்து கொண்டுவந்த அனைத்து பொருட்களையும் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்கள். (திரும்பிப்போகும் போது தான் சென்று பார்க்க வேண்டும் போதனா வைத்தியசாலையிலா அல்லது இராணுவ வைத்தியசாலையிலா விட்டுச்சென்றார்கள் என்று) இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சுகாதார அமைச்சால் நியமிக்கப்படும் புதிதாக வெளியேறிய யாழ். மருத்துவர்கள் 39 பேருக்குரிய வெற்றிடம் யாழ்ப்பாணத்தில் இருந்தும் 18 பேருக்கு மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதற்கு கூறப்பட்ட காரணம் தெற்கில் வைத்தியர் போதைமை என்பதாகும். இந்த இராணுவ வைத்தியர்களின் வருகை தொடர்பாக ஏற்கனவே வருகை தந்த அமெரிக்க து}துவரால்; மாசி மாதத்திலேயே வைத்தியசாலை வட்டாரங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ வைத்தியர்கள் திட்டமிட்டபடி யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அப்படியானால் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்காவின் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. ஆக அமெரிக்காவையும், தமிழர்களைப் பொறுத்தவரையும் இலங்கையின் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒரே கொள்கையே கொண்டிருந்தன என்பதும் வெளிப்படையாகின்றது. அப்படியானால் புதிதாக செல்வாக்கு செலுத்துகின்ற Nஐ.வி.பிக்கு இந்த விடயம் தெரியுமா? ஆம் என்றே சொல்லவேண்டும் ஏனெனில் அம்மையார் நோர்வேயை மீண்டும் பேச்சுக்கு அழைக்கும் போது இதுவரை காலமும் நோர்வேக்கு எதிராக துள்ளிக் குதித்தவர்கள் அடக்கமாக நின்று வரவேற்கும் போதே விளங்குகின்றது. அவர்களுக்கும் இந்த சம்பவங்கள் தெரியும் என்பது. இந்திய, பிரித்தானிய, அமெரிக்க கூட்டு, தமிழர் பிரச்சனையை ஈராக்கைப்போல் கையாளுமா? அல்லது இஸ்ரேலுடன் நின்று பலஸ்தீனத்திற்கு எதிராக செயற்படுவது போல் இயங்குமா ? இல்லை எல்லாவற்றையும் விட புதிய முறை ஒன்றைக்கையாளுமா? எல்லாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த இடத்தில் ஈசாப் கதைகளில் ஒன்றான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற கதை நினைவுக்கு வருகின்றது. நீரோடை ஒன்றின் மேற்பகுதியில் நின்று ஒரு ஓநாய் நீர் குடித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து நீர் ஓடிவரும் கீழ்ப்பகுதியில் ஆட்டுக்குட்டி ஒன்று நீர் அருந்த வந்தது. ஆட்டுக்குட்டியைப் பார்த்தவுடன், அதை அடித்துச்சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஓநாய்க்குத் தோன்றியது. ஆட்டுக்குட்டியைக் கொல்வதற்கு ஏதோ ஒரு காரணம் வேண்டுமே என்று ஓநாய் யோசித்தது. ஆட்டுக்குட்டியைப் பார்த்து 'தண்ணீரைக் கலக்கி; சேறாக்குகிறாயே, நான் எப்படி தண்ணீர் குடிப்பது?" என்று ஓநாய் கூச்சலிட்டது. 'நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் நிற்கின்ற பகுதியிலிருந்துதான் என்னை நோக்கி தண்ணீர் வருகின்றது. அப்படி இருக்கும்போது, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரை நான் எப்படி சேறாக்க முடியும்?" என்று பணிவுடன் கேட்டது ஆட்டுக்குட்டி. அதற்கு ஓநாய் 'பல வருடங்களாக நான் உன்னைப் பார்த்துக் கொண்டே வருகின்றேன். நீ இப்படித்தான் என் விஷயத்தில் தலையிட்டுக் கொண்டிருக்கின்றாய்" என்றது. ஆட்டுக்குட்டி பணிவான குரலில் சொன்னது 'நான் பிறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. நீங்கள் சொல்கிறபடி பல வருடங்கள் உங்கள் வி;ஷயத்தில் நான் எப்படித் தலையிட்டிருக்க முடியும்?" 'நீ இல்லாவிட்டால் உன்னுடைய அப்பா அப்படிச் செய்திருப்பார். அதனால், அந்தக் குற்றத்திலி;ருந்து நீ தப்பிக்கமுடியாது. உன்னோடு வாதம் செய்து பயன் இல்லை" என்று கூறிக்கொண்டே ஓநாய் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து..... என்ன வாசகர்களே ஈசாப் கதை உங்களுக்குப் ஒன்றைப் புரிய வைத்திருக்கும், ஆனால் இப்போது ஆற்றில் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பது ஆடு அல்ல என்பது நரிக்கு புரிந்திருக்காது. நன்றி: ஈழநாதம் - anpagam - 01-06-2005 [b]ஆயிரம் போதனைகள் திருத்தாத எம்மை அரைமணி நேர அதிர்ச்சியாவது திருத்துமா? " எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது?" என்று புரியாது மனமுடைந்து கேட்கும் ஒரு நிலைக்கு நாங்கள் யாவரும் தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையின் சீற்றம் இலங்கைக்கும் இன்னும் பல நாடுகளுக்கும் இதயத்தைப் பிழிய வைக்கும் விதத்தில் இன்னல்களை விளைவித்துள்ளது. இன்னார் என்று பார்க்காமல் இன மத வயது பிராந்திய வேறுபாடின்றி எல்லோரையும் பாதித்துள்ளது. இதுகாறும் தம்முள் பகைத்துக் கொண்ட பலரையும் பட்சபாதம் காட்டாது வாட்டி எடுத்துள்ளது இயற்கை. அப்படி இருந்தும் இன்னல்களை எதிர்கொள்ளும் போது தற்போது கூட இந்தப் பகை உணர்ச்சியும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இது மனவருத்தத்திற்குரியது. பொறுமைக்குப் பெயர் போனவள் பூமாதேவி. அவளின் ஒரு சிறிய சிலிர்ப்புக் கூட எங்களை இவ்வளவு வாட்டி எடுத்துள்ளது. இயற்கைக்கு மாறாக எங்கள் நடத்தைகள்ää சிந்தனைகள் நிலைவரங்கள் அமையும் போது எங்களை வழிப்படுத்தவே அன்னையான அவள் தனது பொறுமை நிலையில் இருந்து சற்றுத் தளர்ந்து தண்டிக்கிறாள் என்று கொள்ள வேண்டும். பிறந்த தன் மக்களைத் திருத்தவே அன்னை தன் கருணா நிலையில் இருந்து சற்றுத் தளர்ந்துள்ளாள். குழந்தைகள் நாம் இதைப் புரிந்து கொண்டு வாழப் பழக வேண்டும். இஸ்லாத்தின் சகோதரத்துவமும்ää கிறிஸ்தவத்தின் பிறர் நலன் கருதுங் கொடையுணர்ச்சியும் பௌத்தத்தின் ஜீவகாருண்ய மனோநிலையும் இந்து மதத்தின் தன்னலங்கருதா கடமையுணர்வும் இனியாவது எங்களுள் உறைந்து நின்று உருமாற்ற வேண்டும். நாங்கள் இதுகாறும் எமக்கென்றே வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். பிறருக்கென வாழ்வதே மதம் என்றால்ää மதங்கள் கூட தனிப்பட்ட நலன்களை வலியுறுத்தியே போதிக்கப்பட்டு வந்துள்ளன. நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம் என்று கருதாமல்ää வாழ்ந்த எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஆயிரம் போதனைகளால் அறிவுறுத்த முடியாதவற்றை அரைமணி நேரத்தில் அறிய வைத்துவிட்டாள் அன்னை. இனியாவது அன்பைப் பாராட்டி வாழ வழி அமைத்துத் தந்துள்ளாள். ஆனால் அதற்கிடையில் எத்தனை கொடூரங்கள்ää அவலங்கள் பறிகொடுப்புகள்! அன்னையின் சீற்றம் குல நடுங்க வைத்துள்ளது. மேலும் அனர்த்தங்கள் நடைபெறாது என்று உத்தரவாதம் கொடுக்கும் நிலையில் யாரும் இல்லை. வரவிருக்கும் நோய்கள் இன்னும் எத்தனை பேர்களைப் பலியெடுப்பன என்று ஆருடம் கூற யாரும் இல்லை. எம்மால் முடிந்ததைச் செய்வதே இந்நேரக் கட்டாயம். இறைவன் இருக்கின்றானா என்று பலர் கேட்கும் கட்டத்தில் இருக்கின்றார்கள் அவர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்? சிவனையே தன் இசையால் மயக்கிய இராவணன் கூட "இன்று போய் நாளை வா" என்றதைக் கேட்டதுந்தான் தனக்கு என்ன நடந்தது ஏன் நடந்தது என்று எண்ணத் தலைப்படுகிறான். கேட்டதை எல்லாம் அள்ளிக் கொடுத்த இறைவன் தான் இராவணனின் இறுமாப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறான் இராமசந்திர மூர்த்தியூடாக. இன்பத்தையும் துன்பத்தையும் தருபவன் இறைவன் தான். அதே நேரத்தில் எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்வதைத் தடுக்க முடியாது. அழுதாலும் தொழுதாலும் ஓரணுவும் மாறுமோ தெரியாது. ஆனால்ää விதிவேறு இறைவன் வினைவேறல்ல. இன்றைய நாளை மட்டுந் தான் நாங்கள் பார்க்கிறோம். நேற்றைய எங்கள் வாழ்க்கையையும் நாளைய இனிவரும் வாழ்க்கையையும் பார்த்துத்தான் இறைவன் தன் தீர்ப்பை எழுதி வைத்துள்ளான். அழிவுகளையும் அல்லல்களையும் நோக்கியபின் அகம்பாவம் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. நேற்றைய நடத்தைகளும் நாளைய விளைவுகளும் மனத் திரையில் ஊசலாடுகின்றன. எங்கள் நோக்குகளைச் சீர்படுத்திக் கொள்ள இப்பேர்ப்பட்ட இன்னல்கள் தேவையாக அமைகின்றன. எங்களை விட்டு வைத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். பிராயச் சித்தம் செய்வதெனில் இன்றைய காலகட்டத்தில் அல்லற்படும் அகதிகளுக்கு அயலவர்களுக்கு எம்மால் ஆன உதவிகளைச் செய்வதில்தான் எங்கள் கடமை உறைந்து கிடக்கின்றது. மதங்களும் எங்கள் பாரம்பரிய இலக்கியங்களும் இதைத்தான் எம்மிடம் எதிர்பார்க்கின்றன. அறிவால் அலசப்படும் அத்தனை இலக்கியங்களும் நடைமுறைக்குப் பயன்படுத்துவதாகில் அவை எங்கள் அன்பை மேலோங்கச் செய்ய வேண்டும். அன்பு ஆதரவான வார்த்தைகளால் கூட வெளிவரலாம். பகை களைதலே அன்பைப் பரப்ப உதவி செய்யும். அழிவிலிருந்து ஆக்கத்தை ஏற்படுத்துவதும் அன்பை மேலோங்கச் செய்வதுமே எங்கள் இனிவரும் பணியாக மலர வேண்டும். இன்னல் உற்றவர்களின் நலன் கருதி இதய சுத்தியுடன் இடர் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுவதே எங்கள் சமயப் பயிற்சியின் சான்றாக அமையும். அறிவு இலக்கியங்களின் அதி முக்கிய சாரமாய் விளங்கும். எந்த வேற்றுமையும் பாராட்டாதுää மக்களின் இடர் அகற்றும் பணிகளில் எங்களை இக்கால கட்டத்தில் அர்ப்பணிப்போமாக! ஒன்றுபடுதல் மானுட பண்பு. மனித இயலின் பரந்த நோக்கும் அதுவே. ஆகவேää பகைமையை வளர்க்க வழிகோலாது இன வேற்றுமைää சிந்தனைகளுக்குப் பலிக்கடாக்கள் ஆகாது மனித நேயத்திற்கு வித்திடுவோமாக! இன்னல்களின் இடர்பாடுகளில் இருந்து இதய சுத்தியுடைய ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க இந்நாட்டின் சகலரும் பாடுபடுவோமாக! இனியாவதுää இயற்கையை ஒன்றி வாழப்பழகுவோமாக! வேற்றுமையை வேரறுத்து ஒற்றுமையைப் பேணுவதே இயற்கை நிலை. இயற்கை அன்னையும் பிரிந்து கிடக்கும் தன் பிள்ளைகள் சேர்ந்து வாழ வேண்டும் என்றே எதிர்பார்க்கிறாள். இறைவா! எங்கள் பணிகளை நீயே முன்னின்று நடத்துவாயாக! அன்பினில் எங்கள் அனைவரையும் சங்கமப்படுத்துவாயாக! நன்றி:நிதர்சனம் |