| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 190 online users. » 0 Member(s) | 187 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,295
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,049
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,472
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| 'கோசல்யா கதைகள் கவிதைகள்' |
|
Posted by: sOliyAn - 04-08-2004, 12:57 PM - Forum: நிகழ்வுகள்
- No Replies
|
 |
வானதி வாணி நர்த்தனாலய அதிபர் 'கலாநிதி' வானதி தேசிங்குராஜா தலைமையில், திருமதி கோசல்யா சொர்ணலிங்கத்தின் 'கோசல்யா கதைகள் கவிதைகள்' மூன்றாவது நூல் 11.04.2004 பிற்பகல் 15.00 மணிக்கு, Aktien Str 23 - 53, 45473 Mullheim Ruhr, Germany, மேஜர் பாரதி அரங்கில் அறிமுகமாகிறது.
இவ் விழாவில் மங்களச்சுடர் ஏற்றல், அகவணக்கம், திருமதி ஜிக்கி சோதிலிங்கத்தின் தமிழ்த்தாய் வணக்கம், செல்வி மயூரி சந்திரபாலனின் வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர் உரை (திரு சிவநேசன் - சர்வதேச ஊடகவியலாளர், தமிழீழம்: தேவிகா கங்காதரன் (மொழி மாற்றீடாளர்), கவிதாமணி திருமதி விக்னா பாக்கியநாதனின் முதன்மை உரை, திரு இரா நாகலிங்கம் (கல்விப்பணி பொறுப்பாளர், தமிழ்க் கல்விக் கழகம்) வாழ்த்துரை, பெண்ணியநோக்கு (கவிதாயினி சாந்தி ரமேஷ் வவுனியன்), ஏலையா ஆசிரியர் திரு கா முருகதாசனின் படைப்பிலக்கியநோக்கு, நவாஜோதி அவர்களின் சமநோக்கு, - கலாசிதி சு.சிவகுமாரன், தமிழருவி நயினை விஜயன், நா. கதிர்காமநாதன், ஐ. ரகுநாதன், லோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.
Kosalya Sornalingam, Oxforder Str 8, 45470 Mullheim Ruhr, Germany. Tel: 0208- 384729
நூல் அறிமுகவிழா சிறப்பற அமைய வாழ்த்துகிறேன்.
|
|
|
| கந்தரின் புல(ப)ம்பல் மடம் |
|
Posted by: Kanthar - 04-08-2004, 12:48 AM - Forum: புலம்
- Replies (245)
|
 |
புலத்தில இருந்து எழுதுறதை புலம்பல் எண்டு சொல்லுறவையும் உண்டு.
எனக்கெண்டால் பம்பலா எழுதினம் போலத்தான் கிடக்கு.
எப்பிடியோ மடத்தடியில இருந்து கதைக்குமாப்போல வராது...........
யாழ் களத்தில இதை ஒரு வேச்சுவல் மடமாய் நினைச்சுக்கொண்டு............
எழுதுவம்...................
புலம்பலோ...... பம்பலோ........
|
|
|
| சினிமா கனாக்கள் |
|
Posted by: AJeevan - 04-08-2004, 12:34 AM - Forum: குறும்படங்கள்
- Replies (47)
|
 |
<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>
<b>1</b>
<span style='color:brown'>அதைப்பற்றி எழுதுமுன் சுவிசில் என் முதல் அனுபவத்தை முகவுரையாக எழுதுவது அடுத்ததற்கு மனதை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்குமென நம்புகிறேன்.
நான் சுவிசுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில் (1990), ஒரு சிலர் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு தயாராவதாக அறிந்தேன். எனக்கும் பெருமகிழ்ச்சி. நானும் அப்படியா என்று வாயைப் பிளந்தேன். ஓரு சிலர் சொன்ன கதைகளைக் கேட்டால் ஐரோப்பாவெல்லாம் தூள் கிளப்பும் என்றார்கள். இக் கதை என் காதுகளுக்கு எட்டும் காலத்தில் நான் அகதி முகாமிலிருந்தேன்.
அக்காலத்தில் இருக்கும் முகாமிலிருந்து நகருக்கு வர மாத்திரமே எனக்குத் தெரியும். மொழியும் புரியாது இடமும் பெரிதாக பரிச்சயமில்லை.
என்னோடு முகாமிலிருந்த ஒருவர் ஊடாக, எனக்கு சினிமாவில் பரிச்சயமிருப்பது அறிந்து , ஒருநாள் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். நானும் பயபக்தியுடனே அங்கு சென்றேன்.
அவர்களது வீட்டுக்குள் நுழைந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி. அறையெல்லாம் பியர் டின்கள் நிறைந்து கிடந்தது. அறையிலிருந்த இருவரும் கொஞ்சம் போதையுடன் இருந்தார்கள். நானும் சுததாகரித்துக் கொண்டு இருக்கச் சொன்ன இடத்தில் அமர்ந்தேன்.
கொஞ்ச நேரம் வழமையான அறிமுகபடலம், குசல விசாரிப்புகள்.
பின்னர் கதை சொல்லும் படலம் ஆரம்பமாகியது. இருவரும் மாறி மாறி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவர் சொல்வதில் உள்ள தவறை சரி செய்து, அடுத்தவர் கதை சொல்லத் தொடங்குவார். அவர் விடும் தவறிலிருந்து முன்னையவர் கதையை தொடருவார். இதற்குள் நல்ல நல்ல வார்த்தைகள் தலைகாட்டி மறையும். இப்படியே 2 மணித்தியாலங்கள் சென்றது. எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.கதையும் புரியவில்லை.
எனது முக்கிய பிரச்சனையானது யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிகர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாக திணறிப் போனதேயாகும்.
ஓரு சந்தர்ப்பம் வந்த போது, மெதுவாக நான் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவர்கள் தந்த பதில் அவரவர் பகுதிகளை அவரவரே இயக்கி நடிப்பதாகச் சொன்னார்கள்.நான் வாயே திறக்கவில்லை.
\"கமரா நீர் எடுத்தால் போதும்..........\" என்றார்கள்.
எனக்கு முச்சு நின்றது போலாகியது. நான் பேசவில்லை.
அடுத்த கேள்வி \"என்ன மாதிரி கமரா வாங்கினால் படம் நல்லா வரும்?\"
நான் கடையில் பார்த்து விட்டு சொல்வதாக கூறிவிட்டு, அழைத்துச் சென்றவரோடு வெளியேறினேன்.
அழைத்துச் சென்றவர் என்னிடம் \"நான் என்ன பாத்திரத்தில் நடித்தால் நல்லாயிருக்கும்\" என்று கேட்டார்.
கதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாக வருகிறதே அந்த பாத்திரத்திதை தந்து பாலத்திலிருந்து ஓடும் ரயிலில் குதிக்கச் சொல்லி , உன்னைக் கொன்று போட வேண்டுமென்றேன்.
அதன் பிறகு நான் அந்தப்பக்கமே போகவில்லை. கண்டால் , கடன் கொடுத்தவனைக் கண்டவன் போல நான் மறைந்து விடுவேன்.
அவர்கள் கடைசி வரை படம் எடுக்கவேயில்லை, ஆனால் படம் எடுக்க தேர்ந்தெடுத்த இரு பெண்களையும் (அக்கா-தங்கை) திருமணம் செய்து சுவிசை விட்டுச் சென்று குழந்தை குட்டிகளோடு தற்போது இரு நண்பர்களும் ஹொலண்டில் வாழ்கிறார்கள்.
தொலைக்காட்சியில் எனது பேட்டியை பார்த்து விட்டு ,என்னோடு தொடர்பு கொண்டார்கள்.
இன்னும் படமெடுக்கும் ஆசையோடே வாழ்வதாக சொன்னார்கள்........................
AJeevan
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
<b>[size=24]சினிமா கனாக்கள்..............</b></span>
<b>2</b>
<span style='font-size:22pt;line-height:100%'>சில வருடங்களுக்கு முன் என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து \"நாங்கள் செய்த குறும்படங்களுக்கு விருதுகள் கிடத்திருக்கு. இதுவே நமக்கு அடுத்த அடி எடுத்து வைக்கிறது சரியான நேரம். ஓரு முழு நீளப் படத்தை செய்வோம்\" என்றார்கள்.
நானும் சரியென்று சொல்லி வானோலி ,தொலைக்காட்சியிலெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நல்லதொரு திருப்பம்.
எல்லா இடத்தில இருந்தும் டெலிபோன் கோள்கள். வானோலி பேட்டி வேற தூள் பறக்கிற மாதிரிதான். . . . .
தெரியும்தானே, ஒரு விழிப்புணர்வு நம்ம உறவுகள் மத்தியில. . . சந்தோசமாக இருந்தது.
எல்லோருடய விலாசங்கள், தகவல்களை எல்லாம் வாங்கி அழைப்பிதழ் அனுப்பி, அழைப்பிதழிலேயே, என்ன எமது திட்டம் என்று எல்லாம் கொள்கை விளக்கம் கொடுத்து . . . அவங்களுடைய கருத்துகளையும் எழுதுங்கள். . . என்று சொன்னோம்.
இப்படி வாரவங்க பலருக்கு எழுத நேரமிருக்காது . . . .
சிலருக்கு எழுதத் தெரியாது. . . . . .
இவங்கள் போன்ல சொன்னதை நான் குறித்துக் கொண்டேன்.
முதல் கடிதம் குறைந்தது 100 பேருக்கு அனுப்பினோம்.
கொள்கை விளக்கமெல்லாம் ,படித்து தெளிவானதாலேயோ என்னவோ பிறகு கூட்டம் ஒரு 100 பேர்களாக இருந்தவர்கள், 35 பேர்களாக குறைந்தது.
அதற்கு பிறகு நான் அதிகமாக யோசிக்கத் தொடங்கினேன். . . .
ஏன் திடீரென்று 100,35 ஆகியது. ஓரே குழப்பம்.
ராடார் வேலை செய்ய மறுத்தது.
எங்கேயோ பிழை விட்டுட்டோமே?
அது என்னவா இருக்கும்?
தலையை பிச்சுக் கொண்டேன். . . . .ஊகும். . . . ஒரு கிழமையா பிடிபடவேயில்லை.
அதுக்கு பிறகு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
விடை ஒரு மாதிரி வெளிச்சது.
நான் எடுக்கிற படங்கள் யதார்த்தமானவையா இருக்கும். எனது படங்களில கதாநாயகன் கதாநாயகி வில்லன் என்று இருக்காது. அவனவன் வாழ்கையில அவனவன் தன்னை கதாநாயகனாத்தான் நினைக்கிறான். ஓவ்வொரு மனிதனக்குள்ளயும், தெய்வமுமிருக்கு மிருகமுமிருக்கு. அதனால கதாநாயகனா நினைக்கிற ஒவ்வொரு மனிதனும் எங்கோ ஒரு இடத்தில தப்பு பண்ணுகிறான். அப்போது அவன் வில்லனாகிறான். அதே மனிதனுக்கு ஏதோ ஒரு இடத்தில சிரிக்கிறதுக்கோ இல்ல இன்னொருவரை சிரிக்க வைக்கிறதுக்கோ ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அப்போ நாங்க கொமடியனாகிறோம். இப்படித்தான் என் படம் இருக்கும் என்று, மேதாவித்தனமா அடுத்தவங்களுக்கு அறிவை கொடுக்கிறதுக்கு நான் எழுதிய விளக்கத்தால் வந்த வினை அது என்று பிறகுதான் புரிந்தது.
நான், அதன்பிறகு, அப்படியான விளக்கங்களை தவிர்த்தே அடுத்த பதில் கடிதம் எழுதினேன்.
முதல் சந்திப்புக்கு நாள் குறித்து ஹோட்டல் ஒன்றில் எனது சுவிஸ் திரைப்பட சம்மேளனத்தின் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு பணம் கட்டி மாலை 2.00 மணிக்கு கலைஞர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தால் மாலை 3.00 மணி வரை 5பேர்தான் வந்திருந்தார்கள்.
கொஞ்சம் நேரம் கழித்து அதாவது மாலை 4.30 மணிக்கு பிறகு ஒருவாறு 16பேர் அளவு வந்தார்கள்.
கூட்டத்தை ஆரம்பித்தோம்.
முன்ன விட்ட தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று மிக அவதானமாக பேசினேன். கதையை அவர்கள் ரசிக்கும் படி சொல்ல மிகவும் சிரமப்பட்டேன்.
கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்களை ரேயின் ரேன்ஜூக்கு கொண்டு வாரதெண்டால் பின்லாடனை பிடிக்கிறதை விட கடினம். இருந்தாலும் எல்லாரும் சந்தோசத்தில் சிரித்தார்கள்.
எல்லோருக்கும் சந்தோசம்.......
அவர்களையும் கொஞ்சம் பேச விட்டேன். இது நான் செய்த அடுத்த தவறு.
அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கதையிருக்கும் என்று சொல்லி பேசச் சொன்னேன்.. மனசிலிருந்தவற்றை ஒரு சிலர் மடை திறந்தது போல சொன்னார்கள்.
ஒரு சில கதைகள் நல்லாயிருந்தது.
இப்போ கதைக்கு பஞ்சமில்ல. ஆனா முதல்ல ஒரு கதையை தேர்வு செய்து செய்வோம், அடுத்ததா தொடரலாம் என்று சொல்லி ஒரு சின்ன இடைவேளை கொடுத்தேன்.
இடைவெளிக்கு எல்லோரும் வெளியே போனார்கள்.
இடைவேளை முடிந்த பிறகு மறுபடி கூடினால், 6-7 பேரைக் காணவில்லை.
தேடிப் போனால், அவர்கள் ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டே கதை விவாதத்தில் முழுதாக ஈடுபட்டிருந்தது தெரிந்தது.
எனக்கு சந்தோசம்.
நல்ல கலைஞர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று.
சரி டீயை குடித்து விட்டு கெதியா வாருங்கள் என்று சொல்லி விட்டு அறைக்கு திரும்பி வந்து, உள்ளே இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் டீ குடித்து விவாதித்துக் கொண்டிருந்தவர்களில், ஒருவர் மட்டும் எமது பகுதிக்கு வந்தார்.
நான் மற்றவர்கள் வருகிறார்களா? என்று கேட்டேன்.
இல்லை என்றார்.
நான் அவரது முகத்தைப் பார்த்தேன்.
அவரது முகம் இறுகிப் போயிருந்தது.
அமைதியாய் இருந்துவிட்டுச் சொன்னார் \"அவர்கள் விவாதித்த கதையை தாங்களே படமாக்க போறதா சொல்லிட்டு போயிட்டாங்கள்\" .
என்னோடு அப்பாவித்தனமான மீதியாகி இருந்த 8-9 பேருடைய முகங்களும் இறுகிப் போனது.
ஒருவர் மட்டும் கொடுக்கால் வாயை திருப்பி \"உங்க புண்ணியத்தில, அவங்களுக்கு படம் எடுக்க வாச்சிருக்கு\" என்று சொல்லி விட்டு பக்கத்திலிருந்தவரைப் பார்த்து \"கெக்கே\" என்று கோழிச் சிரிப்பொன்றை சிரித்தார்.
அடுத்த அடி எடுத்து வைக்கிறதுக்கு சரியான நேரம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
எடுத்து வைக்கிறது இல்ல, அடி சறுக்கிறதுக்கு................</span>
![[Image: falldown.jpg]](http://images.google.ch/images?q=tbn:gMCnFORBJlsJ:iccsports.com/article/images/falldown.jpg)
AJeevan
Note:அவர்களாவது படம் செய்தார்களா? அதுவும் இல்லை............
|
|
|
| படித்ததில் பிடித்தது |
|
Posted by: Paranee - 04-06-2004, 01:23 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (3)
|
 |
உதடு தேய்வதைவிடவும் உள்ளங்காய் தேயலாம்
அடுத்தவரை வேலைசெய்யச்சொல்லி ஏவிக்கொண்டிருந்து உதடு தேய்வதை விடவும் தானே ஒடியாடி வேலைசெய்து உள்ளங்காய் தேய்வது சிறந்தது
ம் மிகமிக யதார்த்தமான வார்த்தை
நாமே ஒரு வேலையை செய்து முடிப்பதால் அதில் திருப்தியும் ஏற்படும் அதனால் மனது ஆனந்தமடையும். மற்றவரைக்கொண்டு செய்துகொள்வதால் பற்றற்ற தன்மை ஏற்படும்
நன்றி ஆனந்தவிகடன்.கொம்
|
|
|
|