![]() |
|
கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு (/showthread.php?tid=7223) |
கருணா அம்மானின் வாழ்க - AJANTH - 04-08-2004 வணக்கம்! கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் இங்கே எழுதுங்கள். 8) - sOliyAn - 04-08-2004 முதல்லை காக்கை வன்னியன் வரலாறு படிச்சிட்டீங்களா? Re: கருணா அம்மானின் வாழ் - Mathan - 04-08-2004 [quote=AJANTH]வணக்கம்! கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் இங்கே எழுதுங்கள். அஜன்ந் இந்த கருத்தை வரவேற்பு பகுதியில் எழுத அனுமதிக்க மாட்டார்கள். இதை நீங்கள் தமிழ்களம் > தமிழீழம் பகுதிக்கு மாற்றலாம் என்று நினைக்கின்றேன். - sOliyAn - 04-08-2004 அவரால் மா(ற்)ற முடியாதென்று நினைக்கிறேன்.. மொடரேற்றர்கள்தான் கவனிக்கணும்! - Mathan - 04-08-2004 ஏற்கனவே இராவணன் அதை மாற்றி இப்போது சரியான பகுதியின் கீழ்தான் இருக்கின்றது சோழியான். - sOliyAn - 04-08-2004 இராவணனுக்கு கதை கேட்க ஆசையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஏனெனில் கதைக்கு தமிழீழப்பகுதியும் பொருத்தமில்லை என நினைக்கிறேன்.. தமிழீழம் என்று சொன்னா சம்பந்தப்பட்டவர் கோபிக்கலாம் அல்லவா? :wink:
- Mathan - 04-10-2004 எந்த பகுதி பொருத்தம் என்று நினைக்கின்றீர்கள்? - Eelavan - 04-10-2004 BBC Wrote:எந்த பகுதி பொருத்தம் என்று நினைக்கின்றீர்கள்? புலம்? - Paranee - 04-10-2004 ம் கூம் மோகன் அண்ணா புதிதாக தொடங்கப்போறாராம் - Eelavan - 04-10-2004 களத்தின் பெயர்: ஐந்தாம் படை விவரணம்: உங்களுக்குத் தெரிந்த துரோகிகள்,காட்டிக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள்,நீங்கள் காட்டிக் கொடுத்த சம்பவங்கள் போன்றவற்றை இங்கே எழுதுங்கள் களப் பொறுப்பாளர்கள்: எட்டப்பன், விபீஷணன்(மன்னிக்கவும் சுத்த வீரன் இராவணன் உள் நுழைய அனுமதி இல்லை) - Mathan - 04-10-2004 விபீஷணனும் துரோகியா? - Eelavan - 04-10-2004 அண்ணன் இராவணை ஆபத்தில் கைவிட்டு விட்டு அந்நியர் பக்கம் சேர்ந்ததினாலேயே அவரும் துரோகிதான் விபீஷண வேலை என்று நாட்டு வழக்கில் கூடச் சொல்வார்கள் நீங்கள் கேட்ட கேள்வி துரோகிகள் பற்றிக் கேள்விகள் கேட்பவர்களுக்கு நல்லதொரு பதில் கட்டப்பொம்மன் நாட்டில் எட்டப்பன் துரோகி என்றால் இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி - Mathan - 04-10-2004 Eelavan Wrote:அண்ணன் <b>இராவணை ஆபத்தில் கைவிட்டு விட்டு அந்நியர் பக்கம் சேர்ந்ததினாலேயே அவரும் துரோகிதான்</b> விபீஷண வேலை என்று நாட்டு வழக்கில் கூடச் சொல்வார்கள் அண்ணை செய்வது தவறு என்று தெரிந்தாலும் ஆதரிக்க வேண்டும் என்று சொல்கின்றீர்களா? அப்படியானால் ...... - Eelavan - 04-10-2004 நான் சொன்னது இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி அண்ணன் செய்த தவறும் தம்பி செய்த துரோகமும் அவர்கள் சொல்லிய கதைகளில் இருந்துதான் எமக்குத் தெரியும் ஏன் கும்பகர்ணன் வழி விபீஷணனுக்குத் தோன்றவில்லை - Mathan - 04-10-2004 Eelavan Wrote:நான் சொன்னது இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி இதை நான் நியாயப்ப்டுத்துவதற்காக சொல்லவில்லை. உங்கள் விவாதப்படி பார்த்தான் கருணாவுக்கு அவரை விட்டு சென்றவர்கள் துரோகியாக தோற்றமளிக்கலாம் தானே (அதாவது கருணாவின் இடத்தில்). ஏன் தன்னுடன் நிற்பவர்களின் வழி (கும்பகர்ணன் வழி) சென்றவர்களுக்கு (விபீஷணனுக்குத் ) தோன்றவில்லை ? கதையை வைத்து பார்க்கும்போது விபீஷணனை துரோகி என்று சொல்லமுடியாது என்றே நான் நினைக்கின்றேன். - Eelavan - 04-10-2004 இருக்கலாம் அது அவரவர் நியாயத்தைப் பொறுத்து இதனையே கருணா தரப்பு நியாய்யப்படி பார்த்தீர்களாயினும் வன்னிக்கு சென்றவர்கள் யாருமே கருணாவாலோ அல்லது அவரை நம்பியோ போராட வரவில்லை அவர்களை வளர்த்தது புலிகள் இயக்கமே அன்றி கருணா அல்ல எனவே அவர்கள் செஞ்சோற்றுக்கடன் கழிப்பினும் அதை செய்யவேண்டியது புலிகள் இயக்கத்துக்கோ அல்லது தலைமைக்கோ அன்றி கருணாவுக்கு அல்ல அவர்கள் தன்னை விட்டுச் சென்றதால் துரோகிகள் என்று பட்டம் சூட்டுவது காக்கை வன்னியன் கூட்டத்தில் பண்டாரவன்னியன் எப்படித் துரோகியோ அப்படியிருக்கிறது விபீஷணன் பற்றிய தகவல் எனது சொந்தக் கருத்து அல்ல நான் வாசித்தறிந்தவையும் கம்பராமாயணத்தில் கும்பகர்ணனுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு விபீஷணனுக்குக் கொடுக்கப்படாமைக்கான காரணம் பற்றிய தமிழறிஞர்களுடைய ஆய்வும் - Mathan - 04-11-2004 கருணா விடய்ம் பற்றி சில காரணங்களுக்காக நான் மேலும் எழுத விரும்பவில்லை. விபீஷணனை துரோகி என்றதால் அதை நடைமுறை நிலைமைகளுடன் தொடர்பு படுத்துவதற்காகவே கருணாவின் பெயரை குறிப்பிட்டேன். எது எப்படியே விபீஷணன் துரோகி அல்ல என்பதுவே எனது கருத்து. - Mathan - 04-11-2004 கருநாகம் கருணாவின் மறுபக்கம். <i>'கருணாவின் மர்மங்கள்..... போராளி துரோகியான கதை... போராளி மாவீரரான கதை....மர்ம முடிச்சுக்களின் அவிழ்தலுடன் அதிர்ச்சி தரும் கருணாவின் துரோகங்கள்....." (பட்டிருப்பான் எழுதும் உண்மைகளின் தொகுப்பு) </i> <b>அங்கம் 1.</b> 'மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரத்திலுள்ள ஒரு காட்டில் செளித்து வளர்ந்து நிற்கும் மருத மரமொன்றின் கீழிருந்து முத்தமிழ் விழாவிற்கான இந்தச் செய்தியை எழுதுகிறேன். இந்தப்போர்ச்சு10ழலில் இத்தகையதொரு தமிழ்விழா நடைபெறுவது சாதாரண விடயமல்ல. இது எமது மக்களின் மன உறுதியையும் , தாய்மொழிமீது அவர்கள் கொண்ட பற்றையும் தேசப்பற்றையும் வெளிக்காட்டும் ஒற்றுமை உணர்வினையும் பறைசாற்றுவதாக உள்ளது. இத்தகையதொரு தமிழ்விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது என்ற செய்தியை அறிந்த எனது சகபோராளிகள் ஒரு புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். உழைப்பாளி மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் கிராமியக் கலைகளில் எங்களுடைய பிராந்தியம் செளிப்புற்றிருப்பதை நினைத்து நான் பெருமிதமடைகின்றேன். முத்தமிழை வளர்க்கவும் மெருகூட்டவும் இப்பகுதிக் கலைஞர்கள் ஆற்றிய பங்குகள் அளப்பரியது. அதற்காகவே எதிரியால் அழிக்கப்பட்டுமுள்ளனர். இந்தப் போர்ச்சூழல் காரணமாக மட்டக்களப்புக் கலைஞர்கள் இந்த முத்தமிழ் விழாவில் பங்கேற்க முடியாதுள்ளது. ஆனாலும் படுவான்கரைக் காடுகளில் மறைந்து வாழும் மக்களினதும் , பரபரப்புடன் வாவியில் துடுப்பு வலிப்பவர்கள்களினதும் உணர்வுகள் முத்தமிழைப்பாடும்" இது 1991ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் , யாழ்ப்பாணத்தில் நடத்திய முத்தமிழ் விழா மலருக்கு கருணா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியின் ஒருபகுதி. ஆனால் 13வருடங்களுக்கு முன்னால் இதனை அவர் எழுதும் போதே பிரதேசவாதம் என்னும் நச்சுக்கருத்து அவர் மனதில் முளைவிட்டிருக்க வேண்டும் போல உள்ளது. தன்தவறுகளை மறைப்பதற்காக அவர் கொள்கையில்லாத முழுநேர அரசியல்வாதிகள் செய்யும் அத்தனை திருகுதாளங்களையும் செய்யத் தொடங்கிவிட்டார். நம்பிக்கையும் , விசுவாசமும் , மக்கள் பற்றும் கடமை தவறாத பாங்கும் கொண்ட ஒரு விடுதலை அமைப்பின் பிராந்தியத் தலைவராக இருந்த அவரின் செயற்பாடுகள் எந்தளவு து}ரம் அவரால் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு வந்துள்ளன என்பதனை அவரது தற்போதைய செயற்பாடுகள் மூலமே அறியக்கூடியதாகவுள்ளது. இன்று அவரால் குற்றஞ்சாட்டப்படும் புலனாய்வுத்துறையை அவர் எப்படிக் கையாண்டார் என்பது கவனிக்கத்தக்கது. காரணம் புலனாய்வுத்துறையும் அதன் போராளிகளும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் கீழ் இருந்தாலும் மாவட்டத்தளபதியின் கீழே அவர்கள் செயற்படுவது வழக்கம். கிட்டத்தட்ட 75சதவிகிதமான செயற்பாடுகள் எல்லா மாவட்டங்களையும் போல கருணாவாலே மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் காலத்துக்குக்காலம் நியமிக்கப்பட்ட 'உருத்திரா மாஸ்டர் , நிக்ஸன் , காந்தி , றெஜினோல்ட் , கீர்த்தி" போன்ற பொறுப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தையே சார்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிர்வாகக்கட்டமைப்பு ஏற்பாடு இருந்தும் கருணா மாவட்டப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களின் செயற்பாடுகளை ஒழுங்காகச் செயற்படவிடாமல் புலனாய்வுத்துறைக்கும் அவர்களுக்குமான தொடர்பினை விரும்பாத ஒரு நபராய் செயற்பட்டு வந்தமைக்கு இப்போது நடந்து முடிந்த சம்பவங்களே சாட்சியாக அமைகின்றன. ஒவ்வொரு தடவையும் மட்டக்களப்பு மாவட்டப்பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் அவர்கள் மட்டக்களப்பு போராளிகளாக இருந்த போதும் கருணாவினால் பல்வேறு காரணங்களைக்காட்டி புறந்தள்ளப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டே வந்துள்ளார்கள். 1992இல் மட்டக்களப்பு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக பொட்டு அம்மானால் நியமிக்கப்பட்டார் உருத்திரா. அவரின் கீழ்பணியாற்றிய பட்டாபி என்ற மட்டக்களப்பு போராளியை தலைமை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தது. பட்டாபிக்கு மட்டக்களப்பில் பணியாற்ற முடியாமல் இருந்தது. கருணாவின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கான இயக்கக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒரு பிழையான தலைமையின் கீழ் முறையற்ற செயற்பாடுகளைச் செய்ய பட்டாபி விரும்பவில்லை. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறி தலைமையிடம் திரும்பிவிடத் தீர்மானித்து அதற்கான அனுமதியும் பெற்றிருந்தார். பட்டாபி தொடர்பாக ஏற்கனவே திருப்திப்படாத கருணா பட்டாபியை திருப்பி அனுப்பினால் தன்னுடைய மோசடிகள் , திருகுதாளங்கள் வெளிவந்துவிடும் என்பதை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டதன் விளைவு சிறீலங்கா காவலரண்களுக்கு அண்மையாகவுள்ள முனைத்தீவிலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். வீடு சென்ற பட்டாபி அம்மாவின் கையால் சோறுவாங்கிச்சாப்பிட்டிருந்த வேளையில் கருணா குழுவில் தற்போதும் அங்கம் வகிக்கும் கெங்கா , சுதா என்போரல் வீட்டில் வைத்து தாயின் முன்னாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டதற்கும் துரோகியாக்கப்பட்டமைக்கும் பின்வருமாறு காரணங்கள் சொல்லப்பட்டது. 'தப்பியோடி இராணுவத்திடம் சரணடைய பட்டாபி திட்டம்தீட்டியிருந்தார்" என்பதே அது. இச்சம்பவம் காலம்சென்று தெரியவந்த போது அப்போது இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. தலைமை சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டது. கருணாவின் மர்மங்கள் நாளை இன்னும் வளரும்.... - தமிழ்வெப்றேடியோவுக்காக பட்டிருப்பான் - (தகவல் மூலம் தந்தவர்கள் நியூசிலாந்து திலீப் , சுவிஸ் கல்லாறு நிலவன் , மட்டக்களப்பு கொற்றவன் , டென்மார்க் றோய்) நன்றி - தமிழ் வெப் ரேடியோ - Eelavan - 04-11-2004 விபீஷணனை துரோகி என்பது எனது கருத்தும் அல்ல வேண்டுமானால் செய்நன்றி கொன்றவன் என்று கூறலாம் ஆயினும் விபீஷணன் செய்தது(கதையின் படி)தவறே என்பது என் கருத்து - Mathan - 04-11-2004 ம் எனது பார்வையில் செய்நன்றிக்காக ஒருவர் அநியாயங்களுக்கு துணைபோக வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன். |