Yarl Forum
சினிமா கனாக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: சினிமா கனாக்கள் (/showthread.php?tid=7228)

Pages: 1 2 3


சினிமா கனாக்கள் - AJeevan - 04-08-2004

[Image: gc]<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>

<b>1</b>

<span style='color:brown'>அதைப்பற்றி எழுதுமுன் சுவிசில் என் முதல் அனுபவத்தை முகவுரையாக எழுதுவது அடுத்ததற்கு மனதை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்குமென நம்புகிறேன்.

நான் சுவிசுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில் (1990), ஒரு சிலர் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு தயாராவதாக அறிந்தேன். எனக்கும் பெருமகிழ்ச்சி. நானும் அப்படியா என்று வாயைப் பிளந்தேன். ஓரு சிலர் சொன்ன கதைகளைக் கேட்டால் ஐரோப்பாவெல்லாம் தூள் கிளப்பும் என்றார்கள். இக் கதை என் காதுகளுக்கு எட்டும் காலத்தில் நான் அகதி முகாமிலிருந்தேன்.

அக்காலத்தில் இருக்கும் முகாமிலிருந்து நகருக்கு வர மாத்திரமே எனக்குத் தெரியும். மொழியும் புரியாது இடமும் பெரிதாக பரிச்சயமில்லை.

என்னோடு முகாமிலிருந்த ஒருவர் ஊடாக, எனக்கு சினிமாவில் பரிச்சயமிருப்பது அறிந்து , ஒருநாள் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். நானும் பயபக்தியுடனே அங்கு சென்றேன்.

அவர்களது வீட்டுக்குள் நுழைந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி. அறையெல்லாம் பியர் டின்கள் நிறைந்து கிடந்தது. அறையிலிருந்த இருவரும் கொஞ்சம் போதையுடன் இருந்தார்கள். நானும் சுததாகரித்துக் கொண்டு இருக்கச் சொன்ன இடத்தில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரம் வழமையான அறிமுகபடலம், குசல விசாரிப்புகள்.

பின்னர் கதை சொல்லும் படலம் ஆரம்பமாகியது. இருவரும் மாறி மாறி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவர் சொல்வதில் உள்ள தவறை சரி செய்து, அடுத்தவர் கதை சொல்லத் தொடங்குவார். அவர் விடும் தவறிலிருந்து முன்னையவர் கதையை தொடருவார். இதற்குள் நல்ல நல்ல வார்த்தைகள் தலைகாட்டி மறையும். இப்படியே 2 மணித்தியாலங்கள் சென்றது. எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.கதையும் புரியவில்லை.

எனது முக்கிய பிரச்சனையானது யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிகர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாக திணறிப் போனதேயாகும்.

ஓரு சந்தர்ப்பம் வந்த போது, மெதுவாக நான் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவர்கள் தந்த பதில் அவரவர் பகுதிகளை அவரவரே இயக்கி நடிப்பதாகச் சொன்னார்கள்.நான் வாயே திறக்கவில்லை.

\"கமரா நீர் எடுத்தால் போதும்..........\" என்றார்கள்.

எனக்கு முச்சு நின்றது போலாகியது. நான் பேசவில்லை.

அடுத்த கேள்வி \"என்ன மாதிரி கமரா வாங்கினால் படம் நல்லா வரும்?\"

நான் கடையில் பார்த்து விட்டு சொல்வதாக கூறிவிட்டு, அழைத்துச் சென்றவரோடு வெளியேறினேன்.

அழைத்துச் சென்றவர் என்னிடம் \"நான் என்ன பாத்திரத்தில் நடித்தால் நல்லாயிருக்கும்\" என்று கேட்டார்.

கதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாக வருகிறதே அந்த பாத்திரத்திதை தந்து பாலத்திலிருந்து ஓடும் ரயிலில் குதிக்கச் சொல்லி , உன்னைக் கொன்று போட வேண்டுமென்றேன்.

அதன் பிறகு நான் அந்தப்பக்கமே போகவில்லை. கண்டால் , கடன் கொடுத்தவனைக் கண்டவன் போல நான் மறைந்து விடுவேன்.

அவர்கள் கடைசி வரை படம் எடுக்கவேயில்லை, ஆனால் படம் எடுக்க தேர்ந்தெடுத்த இரு பெண்களையும் (அக்கா-தங்கை) திருமணம் செய்து சுவிசை விட்டுச் சென்று குழந்தை குட்டிகளோடு தற்போது இரு நண்பர்களும் ஹொலண்டில் வாழ்கிறார்கள்.

தொலைக்காட்சியில் எனது பேட்டியை பார்த்து விட்டு ,என்னோடு தொடர்பு கொண்டார்கள்.

இன்னும் படமெடுக்கும் [Image: snake.gif]ஆசையோடே வாழ்வதாக சொன்னார்கள்........................

AJeevan

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


[Image: gc] <b>[size=24]சினிமா கனாக்கள்..............</b></span>



<b>2</b>

<span style='font-size:22pt;line-height:100%'>சில வருடங்களுக்கு முன் என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து \"நாங்கள் செய்த குறும்படங்களுக்கு விருதுகள் கிடத்திருக்கு. இதுவே நமக்கு அடுத்த அடி எடுத்து வைக்கிறது சரியான நேரம். ஓரு முழு நீளப் படத்தை செய்வோம்\" என்றார்கள்.

நானும் சரியென்று சொல்லி வானோலி ,தொலைக்காட்சியிலெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நல்லதொரு திருப்பம்.

எல்லா இடத்தில இருந்தும் டெலிபோன் கோள்கள். வானோலி பேட்டி வேற தூள் பறக்கிற மாதிரிதான். . . . .

தெரியும்தானே, ஒரு விழிப்புணர்வு நம்ம உறவுகள் மத்தியில. . . சந்தோசமாக இருந்தது.

எல்லோருடய விலாசங்கள், தகவல்களை எல்லாம் வாங்கி அழைப்பிதழ் அனுப்பி, அழைப்பிதழிலேயே, என்ன எமது திட்டம் என்று எல்லாம் கொள்கை விளக்கம் கொடுத்து . . . அவங்களுடைய கருத்துகளையும் எழுதுங்கள். . . என்று சொன்னோம்.

இப்படி வாரவங்க பலருக்கு எழுத நேரமிருக்காது . . . .
சிலருக்கு எழுதத் தெரியாது. . . . . .
இவங்கள் போன்ல சொன்னதை நான் குறித்துக் கொண்டேன்.

முதல் கடிதம் குறைந்தது 100 பேருக்கு அனுப்பினோம்.

கொள்கை விளக்கமெல்லாம் ,படித்து தெளிவானதாலேயோ என்னவோ பிறகு கூட்டம் ஒரு 100 பேர்களாக இருந்தவர்கள், 35 பேர்களாக குறைந்தது.

அதற்கு பிறகு நான் அதிகமாக யோசிக்கத் தொடங்கினேன். . . .

ஏன் திடீரென்று 100,35 ஆகியது. ஓரே குழப்பம்.

ராடார் வேலை செய்ய மறுத்தது.

எங்கேயோ பிழை விட்டுட்டோமே?

அது என்னவா இருக்கும்?

தலையை பிச்சுக் கொண்டேன். . . . .ஊகும். . . . ஒரு கிழமையா பிடிபடவேயில்லை.

அதுக்கு பிறகு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

விடை ஒரு மாதிரி வெளிச்சது.

நான் எடுக்கிற படங்கள் யதார்த்தமானவையா இருக்கும். எனது படங்களில கதாநாயகன் கதாநாயகி வில்லன் என்று இருக்காது. அவனவன் வாழ்கையில அவனவன் தன்னை கதாநாயகனாத்தான் நினைக்கிறான். ஓவ்வொரு மனிதனக்குள்ளயும், தெய்வமுமிருக்கு மிருகமுமிருக்கு. அதனால கதாநாயகனா நினைக்கிற ஒவ்வொரு மனிதனும் எங்கோ ஒரு இடத்தில தப்பு பண்ணுகிறான். அப்போது அவன் வில்லனாகிறான். அதே மனிதனுக்கு ஏதோ ஒரு இடத்தில சிரிக்கிறதுக்கோ இல்ல இன்னொருவரை சிரிக்க வைக்கிறதுக்கோ ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அப்போ நாங்க கொமடியனாகிறோம். இப்படித்தான் என் படம் இருக்கும் என்று, மேதாவித்தனமா அடுத்தவங்களுக்கு அறிவை கொடுக்கிறதுக்கு நான் எழுதிய விளக்கத்தால் வந்த வினை அது என்று பிறகுதான் புரிந்தது.

நான், அதன்பிறகு, அப்படியான விளக்கங்களை தவிர்த்தே அடுத்த பதில் கடிதம் எழுதினேன்.

முதல் சந்திப்புக்கு நாள் குறித்து ஹோட்டல் ஒன்றில் எனது சுவிஸ் திரைப்பட சம்மேளனத்தின் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு பணம் கட்டி மாலை 2.00 மணிக்கு கலைஞர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தால் மாலை 3.00 மணி வரை 5பேர்தான் வந்திருந்தார்கள்.

கொஞ்சம் நேரம் கழித்து அதாவது மாலை 4.30 மணிக்கு பிறகு ஒருவாறு 16பேர் அளவு வந்தார்கள்.

கூட்டத்தை ஆரம்பித்தோம்.

முன்ன விட்ட தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று மிக அவதானமாக பேசினேன். கதையை அவர்கள் ரசிக்கும் படி சொல்ல மிகவும் சிரமப்பட்டேன்.

கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்களை ரேயின் ரேன்ஜூக்கு கொண்டு வாரதெண்டால் பின்லாடனை பிடிக்கிறதை விட கடினம். இருந்தாலும் எல்லாரும் சந்தோசத்தில் சிரித்தார்கள்.

எல்லோருக்கும் சந்தோசம்.......

அவர்களையும் கொஞ்சம் பேச விட்டேன். இது நான் செய்த அடுத்த தவறு.

அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கதையிருக்கும் என்று சொல்லி பேசச் சொன்னேன்.. மனசிலிருந்தவற்றை ஒரு சிலர் மடை திறந்தது போல சொன்னார்கள்.

ஒரு சில கதைகள் நல்லாயிருந்தது.

இப்போ கதைக்கு பஞ்சமில்ல. ஆனா முதல்ல ஒரு கதையை தேர்வு செய்து செய்வோம், அடுத்ததா தொடரலாம் என்று சொல்லி ஒரு சின்ன இடைவேளை கொடுத்தேன்.

இடைவெளிக்கு எல்லோரும் வெளியே போனார்கள்.

இடைவேளை முடிந்த பிறகு மறுபடி கூடினால், 6-7 பேரைக் காணவில்லை.

தேடிப் போனால், அவர்கள் ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டே கதை விவாதத்தில் முழுதாக ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

எனக்கு சந்தோசம்.

நல்ல கலைஞர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று.

சரி டீயை குடித்து விட்டு கெதியா வாருங்கள் என்று சொல்லி விட்டு அறைக்கு திரும்பி வந்து, உள்ளே இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் டீ குடித்து விவாதித்துக் கொண்டிருந்தவர்களில், ஒருவர் மட்டும் எமது பகுதிக்கு வந்தார்.

நான் மற்றவர்கள் வருகிறார்களா? என்று கேட்டேன்.

இல்லை என்றார்.

நான் அவரது முகத்தைப் பார்த்தேன்.

அவரது முகம் இறுகிப் போயிருந்தது.

அமைதியாய் இருந்துவிட்டுச் சொன்னார் \"அவர்கள் விவாதித்த கதையை தாங்களே படமாக்க போறதா சொல்லிட்டு போயிட்டாங்கள்\" .

என்னோடு அப்பாவித்தனமான மீதியாகி இருந்த 8-9 பேருடைய முகங்களும் இறுகிப் போனது.

ஒருவர் மட்டும் கொடுக்கால் வாயை திருப்பி \"உங்க புண்ணியத்தில, அவங்களுக்கு படம் எடுக்க வாச்சிருக்கு\" என்று சொல்லி விட்டு பக்கத்திலிருந்தவரைப் பார்த்து \"கெக்கே\" என்று கோழிச் சிரிப்பொன்றை சிரித்தார்.

அடுத்த அடி எடுத்து வைக்கிறதுக்கு சரியான நேரம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

எடுத்து வைக்கிறது இல்ல, அடி சறுக்கிறதுக்கு................</span>
[Image: falldown.jpg]
AJeevan

Note:அவர்களாவது படம் செய்தார்களா? அதுவும் இல்லை............


Re: சினிமா கனாக்கள் - AJeevan - 04-08-2004

கண்ணன் Wrote:அஜீவன் உங்கள் படபிடிப்பு அனுபவங்களையும் கூறுங்கள்.
எப்படி எல்லோரையும் சமாளிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Eelavan Wrote:ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

shanmuhi Wrote:அழியாத கவிதை படபிடிப்பு அனுபவங்களை அறிய மிக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

மேலும் தங்களின் முழுநீளபடமும் வெற்றியுடன் முடிவடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

shanmuhi Wrote:ஆரம்பமே சுவாரசியமாக இருக்கின்றது.

தொடருங்கள்.....

Aalavanthan Wrote:தொடருங்கள் அஜுவன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பேப்பர் காறரும் அதற்கு எழுதுபவர்களும் பியர் ரின்னுடன்தான் இருந்த எழுதுகின்றார்கள் போலிருக்கின்றது. எழுத்துக்கள் அப்படி இருக்கின்து என்பதால் இந்தச் சந்தேகம்.

sOliyAn Wrote:ஏற்கெனவே ஒரு தொடர் ஒரு அத்தியாயத்தோட நிற்குதென நினைக்கிறேன்.. இதுவாவது முழுமையாக வருமா? வாழ்த்துக்கள்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கண்ணன் Wrote:அந்த ஹொலண்ட் நண்பர்கள் பற்றி நீங்கள் இன்று வரை என்னிடம் வாய்திறக்கவில்லை.

அவர்கள் பற்றிய விபரத்தை கொஞ்சம் தாருங்களேன்.

எனக்கு வேண்டியது ஆர்வமுள்ளவர்களே
திறமை இருக்கோ இல்லையோ பிரச்சினை இல்லை

Eelavan Wrote:நல்லதொரு முயற்சி அஜீவன் அண்ணா ஒளிப்பதிவு பற்றித் தெரியாதவர்கள் கூட உங்கள் கட்டுரையைப் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து ஆனால் இந்தக் கட்டுரை மூலம் ஒரு கலைஞனின் அனுபவங்கள் எமக்கும் கிடைக்கும் என்றால் அது உண்மை

BBC Wrote:அஜீவன், கட்டுரை நல்ல சுவாரசியமாக இருக்கின்றது. நீங்கள் நிறைய சுவாரசிமான மனிதர்களை சம்பவங்களை சந்தித்து இருப்பீர்கள் போல தெரிகின்றது. உண்மையில் இதுபோன்ற வாழ்க்கை அனுபவங்களை நிறையப்பேர் ஆங்கிலத்தில் எழுதி ஓரே இரவில் புகழும் பணமும் பெற்று விடுகின்றார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு வரவேற்பில்லை என்பது கவலைக்குரிய விடயம். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இந்த கள நண்பர்கள்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. எழுதும் அஜீவனுக்கும் எழுத வைத்த இளங்கோவுக்கும் எனது நன்றிகள்

நன்றிகள்..............

AJeevan


Re: சினிமா கனாக்கள் - AJeevan - 04-08-2004

[Image: gc] <b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>

<b>3</b>

அண்மையில் லண்டனிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.

எடுத்தவர் எனக்குத் தெரிந்த நண்பர்தான்.

<span style='color:brown'>\"அண்ண என்ட நண்பனுக்கு ஒரு படம் செய்ய விருப்பம்.\"

\"நல்ல விசயம் செய்யுங்கள்\" என்றேன்.

\"நானும் அதில நடிக்க வேணுமெண்டு சொல்லுறார். உங்களைப் பத்தி அவரிடம் சொன்னன்.\"

\"சரி\"

\"ஓரு ரெண்டு மூண்டு கட்டுக்கு கதை எழுதி வச்சிருக்கிறார். சுப்பர் கதைகளாம்.\"

\"இப்ப எடுக்கப் போற படத்திட கதை என்னவாம்?\"

\"அதை அவர் சொல்லயில்ல.\"

சரி நான் உங்களுக்கு என்ன செய்யவேணும்?

\"அதுதான்,......... கதை வசனம் டைரக்சன் மெயின் ரோலும் அவர் பண்ண இருக்கிறாராம். கமராவுக்கு ஒருத்தர் வேணுமென்றார்.\"


\"அவர் ஏதாவது படம் பண்ணியிருக்கிறாரே?"

\"இல்லயண்ண.\"

\"அப்ப எப்படியப்பா?\"

\"அவரட கதைய ஆராலேயும் செய்யேலாதாம். அது அவருக்கு மட்டும்தான் முடியுமாம்?...........எனக்காக ஏலாதெண்டு மட்டும் சொல்லாதேங்கோ...........\"

\"சரி பிரச்சனையில்ல. அவரே எல்லாம் செய்யட்டும். கதையை ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ தம்பி. முடிஞ்சா என்னோட பேசச் சொல்லுங்கோ.\"

என்று சொல்லி விட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துக் கொண்டோம்.


[align=center:f77af074c3][Image: worm.jpg][/align:f77af074c3]

அடுத்த நாள் அதே நண்பர் தொடர்பு கொண்டார்.

\"கதையை கேட்டீங்களா தம்பி?\" என்றேன்

<b>\"யாருக்கும் அவர் கதை சொல்ல மாட்டாராம்.
நீங்கள் கமரா செய்தாலும் காட்சி எடுக்கும் போதுதான் சொல்வாராம்.\" என்றார்.

\"உங்கட ரோலையாவது கேட்டீங்களா தம்பி?\" என்றேன்.

மறு முனையில் அமைதி தாண்டவமாடியது...........</span>
[align=center:f77af074c3][Image: 1565926811.03.TZZZZZZZ.jpg][/align:f77af074c3]

[b]Lates News:-</b>

[size=15]ஒளிப்பதிவை வேறொவர் இலவசமாக செய்து தரவிருப்பதாகவும் கொப்பியை (அர்த்தம்: முடிந்த படத்தின் திரைக்கான வடிவம் என நினைக்கிறேன்) ஒரு மாதத்துக்குள் தர முடியும் என்று கூறியதாகவும். நாட்டை விட்டு போவோர் பேரில் அல்லது திருட்டு மட்டை மூலம் ஒளிப்பதிவுக் கருவிகளை வாங்கலாம் என்று அந்த வீடியோ நண்பர் அறிவுரை வழங்கியதாகவும் கடைசியாக (இன்று) தெரியவருகிறது.

வாங்கும் கருவிகளே ஒளிப்பதிவாளருக்கான ஊதியமாம்.

இதே நல்ல கதைதானே?.....................

AJeevan


- sOliyAn - 04-08-2004

அஜீவன்.. இது ஆகவும்தான் குறும்பு!! தொடருங்கள்!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Eelavan - 04-08-2004

நல்ல முன்னெச்சரிக்கையான தயாரிப்பாளர்+ இயக்குனர்

ஒளிப்பதிவையும் தானே செய்திருப்பார்
தானே நடித்து தானே படம்பிடிக்கமுடியாது என்று அரிய உண்மையை உணர்ந்து கொண்டதால் உங்களைக் கூப்பிடிருப்பார்


- AJeevan - 04-08-2004

Eelavan Wrote:நல்ல முன்னெச்சரிக்கையான தயாரிப்பாளர்+ இயக்குனர்

ஒளிப்பதிவையும் தானே செய்திருப்பார்
தானே நடித்து தானே படம்பிடிக்கமுடியாது என்று அரிய உண்மையை உணர்ந்து கொண்டதால் உங்களைக் கூப்பிடிருப்பார்

[size=15]ஒளிப்பதிவை வேறொவர் இலவசமாக செய்து தரவிருப்பதாகவும் கொப்பியை (அர்த்தம்: முடிந்த படத்தின் திரைக்கான வடிவம் என நினைக்கிறேன்) ஒரு மாதத்துக்குள் தர முடியும் என்று கூறியதாகவும். நாட்டை விட்டு போவோர் பேரில் அல்லது திருட்டு மட்டை மூலம் ஒளிப்பதிவுக் கருவிகளை வாங்கலாம் என்று அந்த வீடியோ நண்பர் அறிவுரை வழங்கியதாகவும் கடைசியாக (இன்று) தெரியவருகிறது.

வாங்கும் கருவிகளே ஒளிப்பதிவாளருக்கான ஊதியமாம்.

இதே நல்ல கதைதானே?.....................



AJeevan


- sOliyAn - 04-08-2004

படம் பாக்கிறவங்களும் கள்ள நோட்டு கொடுக்கலாமோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- AJeevan - 04-24-2004

<img src='http://www.kumudam.com/eelam/010404/pg1t.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:brown'><b>இலங்கை இனப் பிரச்னையில் பாரபட்சமற்ற பார்வையைக் கொண்டிருக்கும் வெகுசில சிங்கள முற்போக்கு இயக்குநர்களில் சோமரத்னே திசயனாயக்கேயும் ஒருவர். பெரோஸ் போன்ற சென்ற தலைமுறை இயக்குநர்கள், உள்ளூரில் எதுவுமே நடக்காததுபோல் தம்போக்கில் படமெடுத்துக்கொண்டிருக்க அசோகா ஹண்டகாமா, பிரசன்னா விதானாகே, திசயனாயக்கே போன்ற சிலர்தான் பிரச்னையை தமக்கே உரிய தனித்துவமான பார்வையுடனும் சமூக அக்கறையுடனும் கையாண்டுள்ளனர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தன், 'லிட்டில் ஏஞ்சல்' படத்தோடு வந்திருந்தார் திசயனாயக்கே. 'லிட்டில் ஏஞ்ச'லுக்காகவும் சர்வதேச அளவில் ஒன்பது விருதுகளைப் பெற்றுள்ள அவரது முந்தைய படமான, 'சரோஜா'வுக்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உரையாடலைத் தொடங்கினோம்.</b>

வசந்தகுமார்: பெரோஸ் போன்றவர்களைப் போல் இல்லாமல் இலங்கை தேசிய இனப் பிரச்னையைச் சார்ந்த சினிமாவைத் தேர்வு செய்தது ஏன்? அல்லது இதில் நாட்டம் ஏற்பட என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

திசயனாயக்கே: <b>தன்னைச் சுற்றி நிகழ்பவைகள்பால் ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருப்பதும், அதைத் தன் படைப்புகளில் பிரதிபலிப்பதும் ஒரு கலைஞனின் கடமை என்று நினைக்கிறேன்.</b> அந்த வகையில் ஒரு கலைஞனாக இலங்கை தேசிய இனப் பிரச்னையை என்னால் எளிதில் புறக்கணிக்க முடியாது. சிங்களர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்; மனிதர்கள்தான். நம்மால் இலங்கையில் சமாதானத்தோடும் அமைதியோடும் வாழ முடியும் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பினேன். அப்படித்தான் என்னுடைய முதல் படமான 'சரோஜா' உருவானது.

வசந்தகுமார்: உங்களது இரண்டு படங்களுமே குழந்தைகளின் உலகைப் பற்றியவை. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

திசயனாயக்கே: குழந்தைகள்தான் பெரியவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள். அவர்களால் ஒன்றாகச் சேர்ந்து நட்புடன் வாழ முடியும்போது, ஏன் பெரியவர்களால் முடியாது? எனவே, என் இரண்டு படங்களிலும் தமிழ், சிங்கள குழந்தைகளின் நட்பைப் பயன்படுத்தினேன்.

வசந்தகுமார்: 'லிட்டில் ஏஞ்சலில்' பெரைரா என்கிற சிங்கள எஸ்டேட் அதிபர் கதாபாத்திரம் தொடக்கத்தில் தமிழின விரோதத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இறுதியில் அவரிடம் வேலை பார்க்கும் தமிழரான வேலு, கலவரத்தில் சிக்கிக்கொள்கிற போது, பெரைரா அவரைக் காப்பாற்ற முயல்கிறார். இது நம்பும்படியாக இல்லையே?

திசயனாயக்கே: பெரைரா கதாபாத்திரம் இனவாதத் தன்மை கொண்டதே. ஆனால், வேலுவின் மகள் மூலம்தான் அவரது மகன் பேசத் தொடங்கினான், சாதாரண நிலைக்குத் திரும்பினான் என்பது தெரியவரும்போது, அவர் தன் நிலையை மாற்றிக் கொள்கிறார். அவர் அந்த தமிழ்ச் சிறுமியை நேசிக்கத் தொடங்கியதும் நாட்டின் நிலைமையே மாறிவிடுகிறது. சுயநலம் பொருட்டுதான் அவர் மனம் மாறுகிறார் என்றாலும், அவரும் ஒரு சாதாரண மனிதன்தான்.

வசந்தகுமார்: 'லிட்டில் ஏஞ்சலை' நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இலங்கையில் சுமுகமான சூழல் நிலவ தமிழர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதுதானே உங்கள் நிலைப்பாடு?

திசயனாயக்கே: மிகவும் சரி. அரசியல்வாதிகள் சுயநலமிகள். அவர்களது நலனுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். மக்களின் இரக்கத்தை ஈன்று பெற்று அரசியல் நலனைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் அவர்கள். இலங்கையில் என்ன நடக்கிறதோ அதைத்தான் நான் படத்தில் பிரதி பலித்தேன்.

ஆனால் பெரைரா, அவரது மகன், சிறுமி இவர்கள் மூவரையும் முழுமையாக சிங்கள, தமிழ் சமூகத்தைப்பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு இனத்தினராக இருந்தாலும், அவர்களுக்கு இடையேயான நட்புக்கு அது ஒரு தடையாக இல்லை. சிறுவனின் வீட்டில் ஆடம்பர, விலையுயர்ந்த விளையாட்டுச் சாதனங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவனுக்கு அது போதுமானதாக இல்லை. அதையெல்லாம் கடந்த அன்பும் நேசிப்பும் அவனுக்குத் தேவை. அது அந்தச் சிறுமியிடம் ஏராளமாக இருக்கிறது. அன்புக்கும் நட்புக்கும் இனப்பாகுபாடு கிடையாது என்பதுதான் நான் சொல்ல விரும்பியது.

வசந்தகுமார்: இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983_இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?

திசயனாயக்கே: இலங்கையில்கூட சிலர் இதனையே கேட்டனர். ஆனால் நான், இப்படம் பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருக்கும் என்றுதான் கருதுகிறேன். இனப் பிரச்னை எவ்வளவு அசிங்கமானது, தேவையற்றது என்பதை இப்படம் மக்களுக்கு உணர வைக்கும். பதின்மூன்று பேரின் கொலைக்குப் பழிவாங்க பல்லாயிரக்கணக்கான தமிழர்களைச் சிங்களர்கள் கொன்று குவித்தனர். இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.

பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதே! அதுவே நல்ல விஷயம்தான். ஜனாதிபதி தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், பிரதம மந்திரி தனக்குத்தான் அதிக அதிகாரம் என்று சொன்னாலும் தமிழ், சிங்கள பொதுமக்களைப் பொறுத்தவரைக்கும் சமாதானம் தேவைப்படுகிறது என்பது நிதர்சனம். எனவே ஒரு சில மாதங்களில் பேச்சுவார்த்தை நல்ல ஒரு முடிவை அடையும் என்றே எதிர்பார்க்கிறேன். அவர்களால் பின்னோக்கிப் போருக்குச் செல்லமுடியாது. மீறி அவர்கள் போர்க்களத்துக்குச் சென்றால் அனைவரும் அவர்களை வெறுப்பர்.

வசந்தகுமார்: 'சரோஜா,' 'லிட்டில் ஏஞ்சல்' இரண்டுக்கும் மக்கள் மத்தியில் எந்த விதமான எதிர்வினை இருந்தது?

திசயனாயக்கே: இரண்டுமே பொது மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. ஆனால் இரண்டு தரப்பிலும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் வந்தன.

வசந்தகுமார்: 'சரோஜா'வில் இறுதிக்காட்சியில் தமிழ்ப் போராளிகள் மனம் திருந்தி சிங்களவர்களுடன் இணைந்துகொள்ளும்போது, சிங்களர்கள் அவர்களை சுவீகரித்துக் கொள்வதாகவும், ஆனால் தமிழ்ப் போராளிகளால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் காண்பித்திருக்கிறீர்களே?

திசயனாயக்கே: அப்படி நிகழ்ந்தது. அதைத்தான் காண்பித்தேன். எதிர்த் தரப்பினரோடு சென்று கலந்துவிடுவதை தமிழ்ப் போராளிகள் விரும்பமாட்டார்கள். நான் சிங்களவனாக இருந்தாலும் சிங்களர்கள் செய்யும் எல்லாவற்றையும் சரி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். அதைப்போல் தமிழ்ப் போராளிகள் செய்பவற்றையும் நூறு சதவீதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர்கள் போராட்டத்துக்கு நியாயமான சில பிரச்னைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவை தீர்க்கப்பட வேண்டும். அந்த விஷயத்தில் இலங்கை அரசு அதை அணுகியவிதம் தவறானது.

வசந்தகுமார்: இந்த இரண்டு படங்களுக்கும் இலங்கை அரசின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் தடங்கல் இருந்ததா?

திசயனாயக்கே: 'சரோஜா'வில் சில பகுதிகளை நீக்கச் சொல்லி என்னைக் கேட்டனர். அதற்கு தகுந்த பதில்களைக் கூறி, அவர்களுடன் விவாதித்து, அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டேன். 'லிட்டில் ஏஞ்சலி'ல் 1983 கலவரத்தை லேசாக செதுக்கச் சொன்னார்கள். நான் அவர்கள் சொன்னபடியே செய்தேன். ஆனால் இனி வருங்காலத்தில் அவர்கள் என்ன தலையீடு செய்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

வசந்தகுமார்: இரண்டு படங்களுக்குண்டான முதலீட்டுக்கு என்ன செய்தீர்கள்?

திசயனாயக்கே: ஆஸ்திரேலியாவில் குடியிருக்க எனக்கு ஒரு வீடு இருந்தது. அதை விற்று, அதோடு என்னிடமிருந்த கொஞ்சம் பணத்தையும் சேர்த்து, எண்பது லட்ச ரூபாய் முதலீட்டில் 'சரோஜா'வைத் தயாரித்தேன். அது வணிகரீதியாக வெற்றி பெற்றது. அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, விற்ற வீட்டை வாங்குவதற்குப் பதிலாக, 'லிட்டில் ஏஞ்ச'லுக்கு முதலீடு செய்தேன். இதிலிருந்து கிடைத்த பணத்தை, எனது சமீபத்து படமான 'ஃபைவ் ஃபைட்டரி'ல் முதலீடு செய்துவிட்டேன். இது இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வசந்தகுமார்: இந்தியத் திரைப்படங்கள் குறித்த தங்கள் கருத்து என்ன?

திசயனாயக்கே: இந்தியத் திரைப்படங்களுக்கு என்று ஒரு தெளிவான பாதை இருக்கிறது. அது 'கமர்ஷியல்' பாதை. திரைப்படத் தொழில் உயிர்ப்புடன் இருக்க இதுபோன்ற படங்கள் தேவைப்படுகின்றன. ஆனாலும் கமர்ஷியல் படங்களோடு என்னால் ஒத்துப் போகமுடியாது. இந்தியாவில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜிகரூன் போன்ற வெகு சிலரைத் தவிர பெரும்பாலோர் மும்பை ரகப் படங்களைத்தான் செய்கிறார்கள். இதில் கலைத்துவ, 'கமர்ஷியல்' விஷயங்களைக் கலந்த மணிரத்னம் போன்றவர்களின் படங்களை நான் வரவேற்கிறேன். </span>

நன்றி: யாழ்மணம்

[quote][size=13]குறிப்பு: நமது படைப்பாளிகளுக்கு இக் கட்டுரை வழி எதையாவது பெறலாம் என்ற நோக்கில் இப்பகுதியில் இடம்பெறச் செய்கிறேன்.

அனைத்து படைப்பாளிகளும் வேதனை தரும் அனுபவங்களைப் பெற்ற பின்தான் நிலைக்கிறார்கள். வெற்றி பெற்ற எந்த ஒரு மனிதனும் இதிலிருந்து நிச்சயம் விலக்குப் பெற முடியாது.

உருப்படியான படைப்புகளைத் தரும் ஒருவர் உருவானால் முன்னயவர் பின் தள்ளப்படுவதையும் எவராலும் தடுக்க முடியாது.

ajeevan


- AJeevan - 04-26-2004

[align=center:5c1d153f30]<b><span style='font-size:30pt;line-height:100%'>குட்டி </b></span>
<img src='http://www.thatstamil.com/images/kutty/kutty200.jpg' border='0' alt='user posted image'>
திரை விமர்சனம்[/align:5c1d153f30]

[size=14]மும்தாஜ் டான்ஸ் இல்லை, அனல் பறக்கும் சண்டைகள் இல்லை, வெளிநாட்டு லொகேஷன் இல்லை, கிராபிக்ஸ் இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும். கதை பிரபல பெண் எழுத்தாளர் சிவசங்கரியின் கைவண்ணத்தில் உருவானதாகும்.

சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பிரச்சினையை மென்மையாக அதே சமயம் முகத்தில் அடித்தாற் போல சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் குட்டி படத்தில்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை எத்தனையோ படங்களில், பலவிதங்களில் கூறி விட்டார்கள். ஆனால் இதில் அப்பட்டமாய் முகத்தில் அடித்த மாதிரி சொல்கிறார்கள்.

படத்தில் முடிவு என்ற ஒன்றைக் கூறாமல், அந்த முடிவை நம்மையே யோசிக்க வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இதயம் கனத்துவிடுகிறது.

சின்னக் கிராமத்தில் பானைகள், பொம்மைகள் செய்து வரும் ஒரு குயவர் குடும்பம். 2 வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அந்தக் குடும்பத்தின் சுட்டிப் பெண் கண்ணம்மா.

அப்பாவின் செல்ல மகள். தனது மகளைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற தீராத ஆசை அப்பாவுக்கு. ஆனால் பள்ளி ரொம்ப தூரத்தில் இருப்பதால் ஒரு சைக்கிள் வாங்கி அவளை கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் சைக்கிள் வாங்குவது பணமின்மையால் தள்ளிப் போகிறது திட்டம்.

இந்த நேரத்தில் சந்தைக்குப் போன அப்பா ஊர் திரும்பும் வழியில் லாரிமோதி இறக்கிறார். தலைவனை இழந்து அந்தக் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது.

இந் நேரத்தில் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்பதால் கண்ணம்மாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கண்ணம்மாவின் அம்மாவிடம் கேட்கிறார்.

நிறைய யோசனைகளுக்குப் பிறகு கண்ணம்மாவை அனுப்பி வைக்கிறார் அம்மா.

பட்டணத்திற்கு வருகிறாள் கண்ணம்மா. கண்களில் ஆச்சரியமும் பயமும் தாண்டவமாட அவள் பார்க்கும், சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் அவளை பரவசப்படுத்துவதற்குப் பதில் அச்சமூட்டுகின்றன.

கண்ணம்மா வேலைக்கு சேர்ந்த வீட்டின் முதலாளியும், அவரது மனைவியும் கண்ணம்மாவை தங்களது குழந்தைகளுக்கு சமமாக பார்க்கிறார்கள். ஆனால் இது முதலாளியின் தாய்க்குப் பிடிக்கவில்லை. வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டுகிறார்.

குழந்தையைப் பார்க்கும் வேலை என்று முதலில் சொல்லப்பட்டாலும் கூட, பல வேலைகளையும் செய்யும் நிலைக்கு ஆளாகிறாள் கண்ணம்மா. அவளது உணர்வுகள் அங்கு மறுக்கப்படுகின்றன. அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

ஒரு கட்டத்தில் கண்ணம்மாவின் நிலையைப் பார்த்து அந்த முதலாளியும் அவரது மனைவியும் கூட வருத்தப்பட ஆரம்பிக்கின்றனர். தங்களது வசதிக்காக, ஒரு குட்டிப் பெண்ணின் உணர்வுகளையும், உரிமைகளையும், கல்வியையும் தாங்கள் பறித்து விட்டதாக அவர்கள் உணர்ந்து வருத்தப்படுகிறார்கள்.

கண்ணம்மாவுக்கு தனது கிராமத்து சுதந்திரம் ஞாபகம் வருகிறது. தனிமையில் அழுகிறாள். பெட்டிக்கடைக்கார நாடாரிடம் தன்னை எப்படியாவது தனது கிராமத்துக்கு அனுப்பி வைக்குமாறு கதறுகிறாள். நாடாரின் கண்களில் ரத்தம் கசிகிறது.

அவளை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைத்துவிட முடிவு செய்கிறார். ஆனால் அதற்குள் கண்ணம்மாவின் தலையெழுத்து எப்படி மாறுகிறது என்று கூறும்போது நம்மை பதற வைத்திருக்கிறார்கள்.

சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைதான் கதையின் கரு என்றாலும் கூட டாகுமெண்டரி போல அதைக் கூறாமல் இதுதான் நிஜம், பாருங்கள், பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள், தீர்வு என்ன என்பதை யோசியுங்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஒன்று கண்ணம்மாவாக வரும் பேபி ஸ்வேதா. வெகு இயல்பான நடிப்பு. கண்களில் அத்தனை உணர்ச்சிகளையும் அவள் காட்டும்போது கண்கள் கலங்காமல் இருப்பது இயலாத காரியம்.

துடிப்புடன் நடித்திருக்கிறாள் ஸ்வேதா. பக்கத்து வீட்டில் வேலைக்காரப் பெண்ணிடம் அந்த வீட்டுக்காரரின் மகன் செய்யும் பாலியல் பலாத்காரத்தைப் பார்க்கும்போது கண்களில் மிரட்சியைக் காட்டுகிறாள்.

விவேக்கிடம் அழுதுகொண்டே தனது வீட்டு முகவரியை அப்பாவித்தனமாக, எங்க கிராமத்துல மலை இருக்கும், சுற்றிலும் மரம் இருக்கும் என்று கூறும்போது விவேக் மட்டுமல்லாது நாமும்தான் கலங்கிப் போகிறோம்.

அடுத்த ஹீரோ இசைஞானி இளையராஜா. இசை சரியாக இல்லாவிட்டால் வெறும் டாகுமெண்டரியாகிப் போய் விடும் என்பதால் முழு அக்கறை எடுத்து படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையை கேட்ட உடனேயே இசையமைக்க காசு வேண்டாம் என்று கூறிவிட்டு இலவசமாகவே இசை அமைத்துத் தந்திருக்கிறார் இசைஞானி. தங்கர் பச்சான் தன்பங்குக்கு கேமராவில் ஓவியம் வரைந்திருக்கிறார்.

கிராமத்துக் கண்ணம்மாவின் அப்பாவாக நாசர், அம்மாவாக ஈஸ்வரி ராவ். அசல் கிராமத்துக் காரர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

பெண்ணை இப்படி விளையாட்டுப் பிள்ளையாக வளர்க்கிறாரே கணவர் என்று ஆதங்கப்படும்போதெல்லாம் அப்ளாஸ் வாங்குகிறார் ஈஸ்வரி ராவ். பெண்ணைப் படிக்க வைக்க வேண்டுமே என்று கவலைப்படும்போதெல்லாம் நம்மையும் கலங்க வைக்கிறார் நாசர். பண்பட்ட நடிப்பில் இருவரும் அசத்துகிறார்கள்.

பட்டணத்து முதலாளியாக ரமேஷ் அரவிந்த், அவரது கல்லூரி ஆசிரியை மனைவியாக கௌசல்யா. நிறைவான ரோல்கள். கண்ணம்மாவை கஷ்டப்படுத்துகிறோமோ என்று கவலைப்பட்டு அவர்கள் பேசும்போது நிஜத்தில் இப்படி அத்தனை பேரும் இருந்து விட்டால் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாமல் போய் விடுவார்களே என்ற நப்பாசை வருகிறது. அருமையான நடிப்பு.

வில்லியாக எம்.என்.ராஜம். ரமேஷ் அரவிந்தின் அம்மாவாக வரும் அவர் கண்ணம்மாவை குட்டி என்று பெயரிட்டு கிண்டல் செய்கிறார்.

எல்லோரையும் விட நம்மை அசத்துபவர் விவேக். வழக்கமான கேலி, கிண்டல் எதுவும் இல்லாமல் மளிகைக் கடை நாடாராக வந்து கலக்கியிருக்கிறார் விவேக்.

புறக்கணிக்கப்படும் அல்லது கவனிக்காமல் விடப்படும் ஒவ்வொரு சிறுமியும் எப்படி சீரழிந்து போகிறாள் என்பதை இதை விட 'நச்' என்று கூற முடியாது.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களின் கண்களில் கண்ணீர். குட்டி ஜெயித்துவிட்டாள்.
<img src='http://www.thatstamil.com/images/kutty/kutty-nasar200.jpg' border='0' alt='user posted image'>

நன்றி: thatstamil.com

எப்படியான படங்கள் சமூகத்திலுள்ள பிரச்சனைகளை வெளிக் கொணர முடியும் என்பதற்கான தென்னிந்திய தமிழ் சினிமா வரலாற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் குட்டியும் ஒன்று..................

AJeevan


- vasisutha - 04-27-2004

இந்தப் படம் பார்த்து 1 வருசத்துக்கு மேல இருக்கும். இப்ப விமர்சனம் வருது. :?:
இருந்தாலும் இந்த விமர்சனத்தில் உள்ளபடி அருமையான படமே குட்டி.


- AJeevan - 04-30-2004

நன்றி...................
வசிசுதா எழுதியது உண்மையே.
நல்ல படைப்புகள் உருவாகவும், அதை நல்ல பார்வையாளர்கள் முன் கொண்டு செல்லவும், நவீன ரசனை பற்றிய கட்டுரைகளை நாம் முன்வைப்பதால் (அது சிறிது காலத்துக்கு முன் எழுதப்பட்டிருப்பினும்) நம்மோடு நம் பார்வையாளர்களையும் வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையோடு இங்கே இடம் பெற வைத்தேன்.

AJeevan


- AJeevan - 04-30-2004

[align=center:2f9ab7cc0c]<img src='http://www.kumudam.com/theeranadhi/010404/pg4t.jpg' border='0' alt='user posted image'>[/align:2f9ab7cc0c]

<span style='font-size:21pt;line-height:100%'>புதிய ஈரானிய சினிமாவின் செயல்பாடுகளை சரிவர புரிந்துகொள்ள, ஈரானிய சரித்திரத்தில் நடந்த மாற்றங்களின் பின்னணியில், அதன் வளர்ச்சியை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அதனுடைய அயராத முயற்சியையும் அதனால் உருவாகும் கதாபாத்திரங்களின் உன்னதமான பயணங்களையும் ஜனநாயகமான சந்திப்புகளையும் நாம் முழுமையாக உணரமுடியும்.

நவீனமயமாக்குதலின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட ஈரானில், 1906ல் வறுமையினால் மக்கள் கலவரங்கள் பல தோன்ற, மொசாபர் ஒதின் ஷா என்ற மன்னன், தன் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைத்து மக்களவை உருவாக வழி வகுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1908ல் மஸ்ஜித் சுலைமான் என்ற இடத்தில் எண்ணெய் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டதால், ஈரான் உலக மூலதன பொருளாதாரத்தின் வசம் இழுக்கப்பட, காலனிய சக்திகள் ஆங்கிலேய உருவிலும் ருஷ்ய உருவிலும், தெற்கிலும் வடக்கிலும் ஆதிக்கம் செய்யத் துவங்கின. அதே சமயம், ஈரானின் பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேற, உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்த, 1921ல் 'தூதே' என்ற ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஈரானில் சினிமா தியேட்டர்கள் தோன்றின. 1910களில் மௌன படங்கள், பெரும்பாலாக இந்தியாவில் அமைந்தது போலவே, அமெரிக்காவிலிருந்தும் பாரீஸிலிருந்தும்தான் அதிகமாக ஈரானுக்கு வந்தன.

ரேசா ஷாவின் ஆட்சி:

முதல் ரேசா, ஷா, 1926ல் முடிசூடி ஆட்சியில் அமர்ந்தார். அவரால் கல்வி அமைப்பிலும் சட்டத்திலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, மதத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டது. பெண்கள் முகத்திரை அணிவதிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சாதகமாக விவாகரத்து சட்டம் சீர்திருத்தப்பட்டது. வெளி தேசங்களின் குறுக்கீடுகளிலிருந்தும் நாடு விடுவிக்கப்பட்டது. ஆனால், இச்செயல்களுக்கு மாறாக 1931ல் அவர் 'தூதே' கட்சியைத் தடை செய்து பலரை சிறைச்சாலையில் அடைத்தார். பெரும் கொடூரத்திற்கும் பயங்கரத்திற்கும் அவரது சிறைச்சாலைகள் பெயர் பெற்றன. பொது இடங்களில் கதை சொல்லும் 'தாஜியே' என்ற வடிவத்தையும் தடை செய்தார். இதனால் சினிமாவிற்கு வாய்ப்பு கூடியது.

1939ல் பரூக் யஜ்தீ என்ற கவிஞர் சிறைச்சாலையில் பயங்கர கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு தூக்கிலிடப்பட்டார். இந்த காலகட்டத்தில் ஒரு சுய உணர்வுடைய நவீன முதலாளி வர்க்கம் அங்கு உருவாகவில்லை என்பதால், ஓரளவுக்கு வளர்ந்திருந்த நவீன முதலாளி வர்க்கம், பிரபுத்துவ அமைப்புகளையே ஆதரித்து வந்தன. அதே சமயத்தில் 19_ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் உருவான கீழ்திசை வாதத்தினாலும் இனவாதத்தினாலும் ஈரான் பாதிக்கப்பட்டதால் ஈரானிய சமூகத்தினரிடையே, தாங்கள் உயரின ஆரியர்கள் என்றும் சிறுபான்மை மதங்களையும், இனங்களையும் சேர்ந்த மற்றவர்கள், கீழின மக்கள் என்றும் ஒரு கண்ணோட்டம் வளர்ந்தது. அதன் முக்கியப் பிரதிநிதியாக மன்னரே செயல்பட்டார். இதனால் அவர் இட்லருடன் உறவு ஏற்படுத்திக்கொண்டார். தெற்கில் ஆங்கிலேய ஆதிக்கத்தையும் வடக்கில் ருஷ்யாவின் ஆதிக்கத்தையும் எதிர்க்கவும் அந்த உறவு பலப்படுத்தப்பட்டது.

ஈரானிய திரைப்படம் _ முதல் கட்டம்:

இப்ராஹிம் மொராதி என்பவர் காஸ்பிய கடலோரம், 1929ல் முதல் சினிமா ஸ்டுடியோவை கட்ட இந்த காலகட்டத்தில் சிறுபான்மை மதங்களையும் இனங்களையும் சார்ந்த, ஆர்மேனியர்களும், யூதர்களும், ஜோராஸ்டியர்களும்தான் முதலில் ஈரானிய திரைப்படங்களை எடுக்கின்றனர். ஈரான் உயர்தர பர்ஷியன் மினியேச்சர் ஓவியங்களுக்கும், கலை வேலைபாடுகள் மிகுந்த கம்பளங்களுக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தாலும் இஸ்லாமிய மதத்தில் பிம்ப படைப்புகளுக்கு ஒரு தடை இருப்பது இதற்கு ஒரு காரணம். இருப்பினும், நவீனமயமாக்குதலால் சினிமா தியேட்டர்கள் உருவாக, திரைப்படங்களுக்கு நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வந்தது.

1930ல் ஈரானின் முதல் மௌனப்படமான, 'அபி அண்ட் ராபி' என்ற திரைப்படத்தை அவானஸ் ஓகாணியன் என்ற ஆர்மேனியர் உருவாக்கினார். இரண்டு மனிதர்களின் அனுபவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த நகைச்சுவை படத்தில், ஒருவர் உயரமானவர் மற்றவர் குள்ளமானவர். 1932ல் எடுக்கப்பட்ட, 'ஆஜீ அகா' என்ற அடுத்த நகைச்சுவை படம், சினிமாவை தீவிரமாக வெறுக்கும் ஒரு மத பற்றுடையவர், இறுதியில் ஒரு சினிமா நடிகராக மாறுவதைச் சொல்கிறது. பாரசீக மொழியில் முதல் பேசும் செய்திப் படமும் அதே வருடத்தில் திரைக்கு வந்தது.

இதற்குப் பிறகு, சேபாந்தா என்ற ஈரானிய எழுத்தாளரின் திரைக்கதையைத் தழுவி, இந்தி மொழியில் 1931ல் 'ஆலாம் ஆரா' என்ற முதல் பேசும் படத்தையும், 1932ல் தமிழில் 'காளிதாஸ்' என்ற முதல் பேசும் படத்தையும் உருவாக்கிய அர்தேஷிர் ஈரானி, தனது இம்பீரியல் ஃபிலிம் கம்பேனியின் கீழ், 'லோர் கர்ல்' என்ற பெயரில் முதல் ஈரானிய பேசும்படத்தை 1933ல் உருவாக்கினார். இந்த பேசும் பாடும் படம் அங்கு பெரிய வெற்றியை அடைந்தது. பிறகு சேபாந்தா சிறிது காலம் இந்தியாவிலேயே தங்க, 1934ல் 'ஷிரின் அண்ட் பராத்', 1936ல் 'தி டார்க் அய்ஸ்', 1937ல் 'லைலா மஜ்னு' போன்ற திரைப்படம் எல்லாமே பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோ தயாரிக்கப்பட்டன.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ முதல் கட்டம்:

ஈரானுக்கு 1941ல் வந்த ஜெர்மானிய இராணுவத்தை வெளியேற்ற, முதல் ரேசா ஷா தயங்கியதால், ஒரு பக்கம் அமெரிக்க இராணுவம் ஈரானில் குவிய, மறுபக்கம் ருஷ்ய இராணுவம் குவிந்தது. இதனால் அவர் சிம்மாசனத்தைத் துறந்து தென்ஆப்ரிக்காவிற்கு ஓடிவிட, அவருடைய மகன் ரேசா ஷா முடிசூடினார். 1942ல் அமெரிக்கப் பிரச்சார ஆவண படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்ள, ருஷ்யா ஈரானின் 'தூதே' கட்சியை ஆதரித்தது.

1945ல் ருஷ்யா, குர்திஸ்தான், அசர்பைஜான் பகுதிகளிலுள்ள எதிர் சக்திகளை ஆதரிக்க, ஈரான் துண்டு துண்டாக சிதறும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மதஅடிப்படைவாதம் வளர்ந்து வந்தது, 1946ல் அகமது காஸ்ரவி என்ற சமூக சீர்திருத்தாளர் அந்த அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். அதே சமயம், அமெரிக்கா மற்றும் ருஷ்யாவின் செயல்பாடுகளால் உலக அரசியல் மீது ஈரான் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையும் அதிகரித்தது.

இந்தச் சூழலில் உருவான பல வாய்ப்புகளை ஈரானிய அறிவு பிரதிநிதிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். தூதே கட்சி ஈரானிய அரசியல் கலாச்சாரத்தை அடியோடு மாற்றியமைத்து, ஒரு புரட்சிகர முன்னணி தொழிலாளர்களை வழிநடத்திச் செல்லுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. மக்கள் அவையிலும் ஒரு புதிய வேகம் பிறந்தது. ஈரானின் நவீன முதலாளி வர்க்கம் பிரபுத்துவ அமைப்பை ஆதரித்து வந்தாலும், அதன் சுயஉணர்வு வளரத் துவங்கியது.

1949ல் முகமது ரேசா ஷாவை கொலை செய்ய நடந்த முயற்சியின் விளைவாக, இந்தப் புதுமையான அரசியல் முயற்சிகள் நிறுத்தப்பட்டன. 'தூதே' கட்சி தடை செய்யப்பட்டு தலைமறைவாக இயங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஈரானிய திரைப்படம் _ இரண்டாவது கட்டம்:

ஈரானிய தியேட்டர்களை 1942லிருந்து அமெரிக்க பிரச்சார ஆவணப் படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன், ஈரானியர்களுக்கு சினிமா தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க, தேவையான உறவுகளை ஈரானிய அரசு ஏற்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், 1948ல் 'வாழ்க்கையின் புயல்' என்ற பாரசீக பேசும் படம் முழுமையாக, ஈரானிலேயே முதல் முதலாக இஸ்மாயில் குஷான் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1949ல் 'இளவரசின் கைதி' என்ற படத்தையும், 1951ல் 'மயக்கத்தை அளிக்கும் காதல்' என்ற இரு ஆண்கள் ஒரே பெண்ணை காதலிக்கும் முக்கோணக் காதல் கதையையும், 1952ல் தந்தையும் மகனும் ஒரே பெண்ணைக் காதலிக்கும் 'வெள்ளை கை உரை' என்ற படத்தையும் இஸ்மாயில் குஷான் உருவாக்கினார். ஆனால் அமித் தபாஷி தனது நூலில் குறிப்பிடுவது போல், கல்வி அறிவு பெற்ற ஈரானிய நடுத்தர வர்க்க வாழ்க்கையை வெளிப்படுத்துவது அந்தக் கட்டத்திலுள்ள ஈரானிய சினிமாவிற்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருந்தது. அதை சாமர்த்தியமாக, 1960களின் இறுதியிலிருந்துதான் பஹராம் பேசாயாலும் தாரியூஷ் மெஹ்ருஜீயினாலும் கடக்க முடிகிறது.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ இரண்டாவது கட்டம்:

மத அடிப்படைவாதிகளால், 1951ல் பிரதம மந்திரி ராஜ்மாரா கொல்லப்பட, அந்தப் பதவிக்கு வந்த மோசாதிக் பல முற்போக்கான சீர்திருத்தங்களைச் செய்தார். எண்ணெய்க் கிணறுகளையும் ஆலைகளையும் தேசிய உடைமைபடுத்தினார். 1953இல் ஷாவின் அதிகாரம் மக்களவையின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்று அவர் அடித்துக் கூற, ஷா மன்னன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிறகு சி.ஐ.ஏ.வின் சூழ்ச்சியால் மோசாத்திக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. 'தூதே' கட்சி அவரை இந்தச் சமயத்தில் ஆதரிக்காமல் இருந்தது ஒரு பெரிய கொடுமை. நாடு திரும்பிய ஷா மன்னனால், அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஒரு பயங்கரமான அராஜக ஆட்சிக்கு வழிவகுக்க முடிந்தது. 1958ல் ஷாவின் 'சவாக்' என்ற ரகசிய போலீஸ் படை தோன்றி, தனது அராஜகத்தை மக்கள் மீது செலுத்தி பல கொடூரங்களை நடைமுறையாக்கியது. இது போதாதென்று 1960ல், பல எதிர்ப்புகளை ஒதுக்கி, பக்கத்திலுள்ள அரபிய நாடுகளின் வெறுப்பை அதிகரிக்கும் வண்ணம், ஷா அரசு இஸ்ரேலை அங்கீகரித்தது.

1961ல் அயத்துள்ளா புரௌஜர்தி காலமாக அடுத்த ஷீயைத் மத தலைவர் யார்? என்ற பிரச்சனை பெரிதாக வெடித்தது. இதற்குத் தீர்வுகாண மத குருக்களின் மாபெரும் கூட்டம் தெஹரானில் நடக்கிறது. அதேசமயம், மதச் சார்பற்ற ஈரானிய அறிவுப் பிரதிநிதிகளை, பயங்கரமாகத் தாக்கி எழுதப்பட்ட ஜலால் ஆலேவின் 'வெஸ்டாக்சிகேஷன்' (மேற்கு விஷ பரவல்) புத்தகம் ஒரு அதீத வரவேற்பைப் பெறுகிறது. இப்படி வேகமாக வளர்ந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க, 1962ல் விவசாயத்திலும் தொழில்துறையிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த, ஷா அரசு வெண்மைப் புரட்சி என்ற திட்டத்தை அறிவிக்கிறது. ஆனால், கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், 1963ல் இதற்கு எதிராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷீயைத் மதத் தலைவர் அயத்துள்ளா கொமினி ஒரு பெரும் போராட்டத்தில் இறங்கினார். அது ஒடுக்கப்பட்டு, கொமினி முதலில் துர்க்கிக்கும் பிறகு ஈராக்குக்கும் நாடு கடத்தப்படுகிறார். இப்படி, ஜனநாயகத்திற்கு எதிராக ஷா செய்த பல அட்டுழீயங்கள் அவருக்கு குழிவெட்டி வருகின்றன என்பதை அறியாமலே அவர் தன் செயல்களைத் திருத்திக் கொள்ளாமல், தன் இஷ்டப்படி நாட்டை ஆண்டு வந்தார்.

ஈரானிய திரைப்படம் _ மூன்றாவது கட்டம்:

<img src='http://www.kumudam.com/theeranadhi/010404/pg4.jpg' border='0' alt='user posted image'>
ஈரானில் தேசியத்தை மையப்படுத்தி 1953லிருந்து படங்கள் உருவாகத் துவங்கின. இதில் லெப்டினன்ட் முகமது தெராம்பகேஷின் திரைக்கதையைத் தழுவி, குலாம் ஹ§சைன் நக்ஷின்னே என்பவரால் இயக்கப்பட்ட, 'The Nationalist'(தேசியவாதி) என்ற படமும், 1957ல் 'Ya ques Layth Saffari' (யாக்ஸ் லேத் சபாரி) என்ற படமும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், தேசியத்தை மிக மோசமான தந்தை ஆதிக்க கருத்துகளுடனும் (Patriarchal Ideals) ஜஹேலி என்ற ஒரு புதிய சினிமா வகையுடனும் சேர்த்து வெளியிட்ட பெருமை இஸ்மாயில் குஷானுக்கே சேரும். இஸ்மாயில் குஷானின், 'மக்மலி'(Makhmali, 1962) மற்றும் 'பாரீஸில் ஏப்ராம்' (Ebram in Paris, 1964) என்ற திரைப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் படங்கள் பிற்போக்கான சக்திகளையும் கொடூரமான ஆட்சியையும் நியாயப்படுத்தின.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ மூன்றாவது கட்டம்:

ஷா மன்னன், 1967ல் குடும்பப் பாதுகாப்பு சட்டத்தை நிறுவி, ஓர் ஆண், பல பெண்களை திருமணம் செய்யும் மரபை தடைசெய்தார். விவாகரத்திலும் பல முட்டுக்கட்டைகளை உருவாக்கும் திருத்தங்களைச் செய்தது, ஷீயத் அமைப்பை மேலும் உசுப்பியது. அதை எதிர்கொள்ள, 1968ல் பெண்களை வேலைக்கு அமர்த்தி, ஷாவின் அறிவொளி இயக்கம் பெருமளவில் கிராமங்களுக்குச் சென்று, அங்கு எழுத படிக்கச் சொல்லித் தரும் வகையில், அவருடைய அரசின் பெருமையைப் பறைசாற்ற பயன்படுத்தபட்டது. இதற்கிடையில் மதச் சார்பற்ற சக்திகளை ஒன்றுசேர்க்கும் முயற்சியின் முதல் கட்டமாக, எல்லா எழுத்தாளர்களையும் ஒன்றுபடுத்தும் எழுத்தாளர் கழகம் உருவாகியது. அது அவர்களுடைய ஜனநாயக அரசியல் தாக்கத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. அதே சமயம், உலக மூலதன பொருளாதாரம் வளர்ந்து வரும் நுகர் பொருள் சந்தையை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நுகர்பொருள் சித்தாந்தத்தை நிலைநாட்டி வருகிறது. மதச் சார்ப்பற்ற அறிவாளிகளோ அதிகமாக படித்த வர்க்கங்களிலும் நகரங்களிலும் குறிப்பாக, தெஹரானில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதால், ஈரானின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

ஆனால், 1971ல் சியாங்கால் கெரில்லா இயக்கம், ஷாவின் இராணுவத்தால் ஒடுக்கப்பட, அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. குறிப்பாக, தெஹரான் பல்கலைகழகத்தில் போலீஸ§க்கும், துணிச்சாலான மாணவர்களுக்கும் அடிக்கடி போராட்டங்கள் நிகழ்கின்றன. இந்தச் சூழலில் பிரசுரங்களும் கட்டுரைகளும் அதிகமாகப் புழங்க ஆரம்பிக்கின்றன.

புதிய ஈரானிய சினிமா _ முதல் கட்டம் :

<img src='http://www.kumudam.com/theeranadhi/010404/pg4a.jpg' border='0' alt='user posted image'>
1960களின் துவக்கத்திலிருந்தே மாற்று கருத்துகள் ஈரானிய சினிமாவைப் பாதிக்கத் துவங்கின. இதற்கு ஒரு காரணம், 1960களின் இறுதிக்குள் உலக சினிமாவின் பல அரிய படைப்புகள் ஈரானில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. 1962ல் தொழுநோயின் விளைவுகளை கவிநயத்துடன் வெளிப்படுத்திய ஃபரோ ஃபரூக் அஜாதின், 'The House is Black' (இருண்ட வீடு) என்ற படத்தின் அமைப்பு, 1980களிலும் 1990களிலும் படைக்கப்பட்ட புதிய ஈரானிய சினிமாவின் படைப்புகளை எதிர்பார்க்கிறது. 1964ல் இப்ராகிம் குலஸ்தானினால் உருவாக்கப்பட்ட 'செங்கல்லும் கண்ணாடியும்' (The Brick and the Mirror) 1967ல் ஃப்ரேயுதன் ரஹனேமா உருவாக்கிய 'ஃபர்ஸ்ஸிபோலிஸில் செயவாஷ்' (Seyavash in Persipolis) என்ற படங்கள் இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்தின.

ஆனால் இந்தியாவில் 1956லேயே சத்தியஜித் ரே 'பதேர் பாஞ்சாலி'யை எடுத்திருந்தும் 1969ல் மிருனாள் சென் எடுத்த 'புவன் ஷோம்' என்ற படத்துடன் புதிய இந்திய சினிமா துவங்குவதாகக் கருதப்படுவது போல், அங்கும் 1969ல் தாரியூஷ் மெஹ்ருஜூயி என்பவரின் 'பசு' (The Cow) என்ற படத்திலிருந்துதான் புதிய ஈரானிய சினிமா துவங்குவதாகக் கருதப்படுகின்றது. ஏனென்றால் இங்கு எப்படி மிருணாள் சென்னின் படத்திற்குப் பிறகு அம்மாதிரியான படங்கள் பெருகியதோ, அதே மாதிரி அங்கும் தாரியூஷின் முயற்சிக்குப் பிறகுதான் புதிய ஈரானிய படைப்புகள் பெருகத் துவங்கின. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்ற இவரின் படத்தில், ஒரு குடியானவன் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வரும் பசு இறந்து விட, அதிலிருந்து அதன் ஆத்மாவை உள்வாங்கியது போல் அவன் செயல்படத் துவங்குகிறான். இப்படி உருவக ரீதியில், அன்றாட கிராம வாழ்க்கையின் அவலங்களை ஒரு சமூக யதார்த்த பாணியில் பதிவுசெய்து ஈரானிய சமூகத்தின் நிலைமையை தாரியூஷ் நுணுக்கமாக விமர்சிக்கிறார். எழுத்தாளர் குலாம் உசைன் சையத்தின் திரைக்கதையில் உருவான இந்தப் படத்திற்கு முதலில் ஈரானின் கலாச்சார மந்திரி அலுவலக அனுமதி வழங்கியதுடன், தயாரிப்பிற்குத் தேவையான தொகையையும் வழங்கியது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அதை தடைசெய்துவிட்டது. இருப்பினும் சர்வதேச திரைப்பட விழாக்களில் அது மிகுந்த வரவேற்பைப் பெற்று, பரிசுகளை வென்றவுடன் தடை நீக்கப்பட்டது. ஏனென்றால், வெளிநாடுகளில் படித்து வரும் ஈரானிய மாணவர்கள் ஈரானிய அரசை கடுமையாக விமர்ச்சித்த Êசூழலை எதிர்கொள்ள, ஈரானில் படைப்பாளிகள் எவ்வளவு சுதந்திரத்துடன் இயங்க முடிகிறது என்பதை ஈரானிய அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி பறைசாற்ற விரும்பியது.

அடுத்ததாக அதே 1969ல், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் திரைப்படத் தொழில் நுட்பங்களையும் கலை நுட்பங்களையும் பயின்று நாடு திரும்பிய பஹமான் ஃபர்னமாரா, ஹோஷாங் கோல்ஷிரியின் நாவலைத் தழுவி எடுத்த 'இளவரசன் ஏதேஜாப்' (Prince Ethezab) ஷாவின் ஆட்சியை உருவக ரீதியில் விமர்ச்சித்தது. இதனால் அவருடைய அடுத்த முயற்சிகளுக்குப் பல தடைகள் உருவாகின. நாவலை தடை செய்யாவிட்டாலும், இயக்குனர் திரைக்கதையை, கலாச்சார மந்திரி அலுவலகத்தின் அனுமதியைப் பெற சமர்ப்பித்த போது, கோல்ஷிரியின் பெயரைக் கண்டவுடன் அதற்கு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, ஃபர்னமாரா கோல்ஷிரியின் பெயரை அகற்றிவிட்டு, தன் மனைவியின் பெயரில் வேண்டுமென்றே மறுபடியும் அதே திரைக்கதையை சமர்ப்பித்தார். ஆனால், அதை மிகவும் பாராட்டி அனுமதியை உடனடியாக வழங்கியது அரசு. ஈரானிய தேசிய தொலைக்காட்சியின் கீழ் இயங்கும் நிறுவனமான டெல் ஃபிலிம் என்ற அமைப்பு, படத்தைத் தாயரிக்க முன் வந்தது. அந்தப் படைப்பு கான்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய பரிசான 'க்ரான்ட் ப்ரியை' வென்றது. ஈரானிய அரசியல் சூழலுக்கு எதிரான கருத்துகளும், மதத்திற்கு எதிரான கருத்துகளும், நிர்வாணக் காட்சியும் படத்தில் இருந்ததால் படத்தை ஈரானில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1970ல் குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சிக்காக ஈரானிய திரைப்படத்துறையில் ஒரு மையம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஈரானிய சினிமாவை குழந்தைகளின் பக்கம் திருப்பி, ஒரு எளிமையான வடிவத்தை உருவாக்கிய பெருமை அப்பாஸ் கியரோஸ்தமியின் 'எராட்டியும் தெருவும்' (Bread and Alley) என்ற படத்தைத்தான் சேரும்.

முகமது ரேசா ஷாவின் ஆட்சி _ இறுதி கட்டம் :

எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டு சேர்க்கை அறிவிப்பால், 1973ல் எண்ணெய் விலை உயர, ஈரானின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது. ஈரானை மத்தியகிழக்கு ஜப்பானாக உருவாக்கப் போவதாக, ஷா பறைசாற்றுகிறார். ஆனால், அதேசமயம், குலாம் உசைன் என்ற எழுத்தாளரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகிறார். இது போதாது என்று, 1976ல் தனது பல்ஹவி அரச வம்சாவழியை முதன்மைப் படுத்தும் காலண்டரை ஷா அறிமுகம் செய்து, அதன் 2500வது ஆண்டு விழாவை ஏகபோகமாகக் கொண்டாட, எல்லா தேச தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி வரவேற்கிறார். அந்த மாபெரும் கூட்டத்தில், சைரஸ் மன்னனின் கல்லறையை நோக்கி 'நீ நிம்மதியாக உறங்கு, நாங்கள் விழித்துக் கொண்டிருக்கிறோம்' என்று அறைகூவல் விடுக்கிறார். இந்தச் செயல்களைப் பார்த்து மக்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர் என்பது அவரது புலனுக்கு எட்டவில்லை.

1977ல் முற்போக்கு ஈரானிய படைப்பாளி அலி ஷரியாத்தி, லண்டனில் காலமானபோது, அதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஈரானிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் தெஹரானில் உள்ள கொய்வதே இன்ஸ்டிட்யூட்டில் ஒன்று கூடி பத்து நாட்கள் கவிதை வாசிக்கின்றனர். இந்தக் கவிதை வாசிப்பு ஒரு துணிச்சலான எதிர்ப்பைப் பதிவு செய்தது. 1978ல் ஷா மன்னனின் Êஆட்சிக்கு எதிர்ப்புகளும் கலவரங்களும் அதிகரிக்க அவற்றை வெளியிலிருந்த படியே தலைமையேற்று கொமினி வழி நடத்துகிறார். 1979ல் கலவரங்கள் உச்சகட்டத்தை அடைய, ஷா மன்னன் நாட்டை விட்டு வெளியேற, கொமினி நாடு திரும்புகிறார். மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தின் கட்டிடத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் அமெரிக்கர்களை சிறை வைக்கின்றனர். 444 நாட்கள் நீடித்த இந்த முற்றுகை, அமெரிக்காவில் கார்ட்டரின் ஆட்சி முடிந்து ரேகனின் அராஜக ஆட்சி துவங்க வழி வகுத்தது. நிகழ்வுகளின் இத்தோற்றத்திற்கு முரணாக, சி.ஐ.ஏ. கொமினியை ஆதரித்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. குறிப்பாக, ஈரானை ஆறாவது உலக சக்தியாக மாற்ற, ஷா முடிவெடுத்து, இருபது பில்லியன் டாலர்கள் செலவில் பல ஆயுதங்களையும் இராணுவ தொழில் நுட்பங்களையும் வாங்கியது, மத்திய கிழக்கில் இஸ்ரேலை விட பலமான சக்தி வளர வழி வகுத்துவிடும் என்பதால், அமெரிக்க அரசு கொமினிக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கியது. ஷாவின் ருஷ்ய பயணமும் அதன் கோபத்தை ஏற்கெனவே தூண்டியிருந்தது.

புதிய ஈரானிய சினிமாவின் வளர்ச்சி:

1969ல் துவங்கிய புதிய ஈரானிய சினிமா 1970களில் வேகமாக வளர துவங்கியது. 1974ல் ஈரானிய பராம்பரிய கலை நுணுக்கங்களையும், பிராண அதிர்வுகளையும், அவற்றின் நனவிலி ஆழ்மனது தாக்கங்களையும் ஆய்வு ரீதியாக நன்கறிந்து புராண மையங்களை ஒரு புதிய நிலைக்குத் திருப்புவதை பஹராம் பேசாய் தனது 'அந்நியனும் மூடுபனியும்' (The Stranger and the Fog) என்ற படைப்பின் மூலம் செய்கிறார்.

1975_ல் சோராப் சாஹித் உருவாக்கிய 'ஸ்டில் லைஃப்' (Still Life) மெய்மையை அடக்கத்துடனும் அமைதியுடனும் ஆவணப்படுத்தி, கியரோஸ்தமி 'ரொட்டியும் தெருவும்' படத்தில் பயன்படுத்திய யூக்தியை மேலும் செழுமைப்படுத்தியது. இப்படி புதிய ஈரானிய சினிமாவின் முதல் தலைமுறை 1969களில் தோன்றி 1970களின் இறுதியில் தாரியூஷ் மெஜ்ருஜீயீ, பஹமான் பர்மனாரா, அமித் நதேரி, அப்பாஸ் கியரோஸ்தமி, பஹராம் பேசாய் போன்றவர்களின் படைப்புகள் மூலம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது.

1973_ல் தெஹரானில் திரைப்பட விழா ஒன்றை ஷாவின் அரசு ஏற்பாடு செய்தது. பஹமான் ஃபர்மனாராவின், 'இளவரசன் ஏதேஜாப்' படத்தின் மீதான தடை திரைப்பட விழாவை ஒட்டி நீக்கப்பட்டது. கிட்டத்தட்ட அதில் ஒன்பது நிமிடங்கள் துண்டிக்கப்பட்டன. ஆனால், அதில் இருந்த நிர்வாணக் காட்சியும், ஒருவன் சுயமைதுனம் செய்யும்போது மாறி மாறி வரும் மத சடங்கு காட்சிகளும் அகற்றப்படவில்லை. மதச்சார்புடைய சக்திகள் இன்னும் ஒரு பெரிய பலத்தை பெறாதலால் ஃபர்மனாராவை அந்தச் சக்திகளால் அப்போது எதிர்க்க முடியவில்லை. ஆனால், 1979_ல் இஸ்லாமிய குடியரசு வரப்போகிறது என்றறிந்தவுடன், ஃபர்மனாரா குடும்பத்தோடு கனாடாவுக்கு புலம் பெயர்ந்துவிட்டார்.

இஸ்லாமிய குடியரசு :

1979_ல் கொமினி நாடு திரும்பியதும், ஈரான் இஸ்லாமிய குடியரசாக மாற்றப்பட்டது. அதை நியாயப்படுத்தும் அரசியல் சாசன திருத்தங்கள் வேகமாக அமலுக்கு வந்தன. இதனாலும் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் நடந்த முற்றுகையினாலும், ஈரானுக்கும் அமெரிக்காவும் உள்ள தூதரக உறவுகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. 1980_ல் ஈரானுக்கும் ஈராக்குக்கும் போரை உருவாக்கி, இரு பக்கங்களிலும் 1988 வரை நடந்த கொடூரங்களை முதலில் ரேகன் அரசும், பிறகு ஜார்ஜ் புஷ்ஷின் அரசும் வேடிக்கை பார்த்தது. போரைக் காரணமாகச் சுட்டிக்காட்டி, ஈரானின் இஸ்லாமிய குடியரசு பல புதிய ஒடுக்குமுறைகளை ஏவியது. பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. பேராசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவர்களின் சீட்டு கிழக்கப்பட்டது. செய்தித் தாள்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. தெருவில் நடத்தப்படும் ஜனநாயகமான அமைதியான ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

1981_ல் மதச் சார்பற்ற சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க சையது சுல்தான்புரை இஸ்லாமிய குடியரசு தூக்கி விடுகிறது. 1982_ல் பாரீஸ் நகரத்திற்குத் தப்பிச் சென்ற குலாம் உசைன் சையத், மூன்று வருடங்கள் கழித்து அங்கு மரணமடைகிறார். 1983_ல் 'சொரைய்யா இன் கோமா' (Sorayya in Coma) என்ற இஸ்மாயில் ஃபஸ்ஜியின் நாவல், நாட்டுக்கு வெளியே வேகமாக வளர்ந்துவரும் மதச் சார்பற்ற அறிவாளிகளின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எழுதப்படுகிறது. 1989_ல் அயத்துள்ளா கொமினியின் மரணம் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கினாலும் மாற்றங்கள் ஏற்படுவது அரிதாகிறது.

புதிய ஈரானிய சினிமாவின் இருண்ட காலம்:

1979_ல் ஏற்பட்ட கலவரங்களிலும் புரட்சியிலும் அதிகமாகத் தாக்கப்பட்ட கட்டிடங்கள் சினிமா தியேட்டர்கள்தான். அபதானிலுள்ள ரெக்ஸ் தியேட்டர் தீக்கிரையானபோது, 400 பார்வையாளர்கள் கொடூரமாக எரிந்து சாம்பலானார்கள். மொத்தத்தில் நாடு முழுவதும் 180 தியேட்டர்கள் தரைமட்டமாகின. ஈரானில் அதுவரை எடுக்கப்பட்ட 2208 படங்கள் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 1956 படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பல திரைப்பட இயக்குனர்களும் கதை ஆசிரியர்களும் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது . இந்த ஒடுக்குமுறையினால் வெளியிலிருந்த இயக்குனர்கள் குழம்பிப் போக, ஈரானிய சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் காணாமல் போயின. ஆனால், தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள இஸ்லாமிய குடியரசு பல மில்லியன் டாலர்களைச் செலவிட்டு திரைப்படங்களை உருவாக்கியது. இந்தப் படங்களில், ஓரிரு முயற்சிகளைத் தவிர, மற்றவைகளுக்கு ஒரு பரவலான வரவேற்பு இருக்கவில்லை. தரைமட்டமாகிய தியேட்டர்களும் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் ஈரானிய சினிமாவின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால், வெளிநாட்டு படங்களின் வருகையும் தடை செய்யப்பட்டிருந்ததால், வேகமாகப் பெருகிவரும் நடுத்தர வர்க்க மக்களிடம் தரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்புகள் வளரத் துவங்கின.

புதிய ஈரானிய சினிமாவின் மறுபிறவி:

சினிமாவின் மீது செலுத்தி வரும் ஒடுக்குமுறைகளை ஓரளவுக்கு தளர்ச்சி, தொழில்நுட்பம் பெருக, ஒரு புதிய திட்டத்தை 1982_ல் இஸ்லாமிய குடியரசு உருவாக்கி பல சலுகைகளை அளிக்க, புதிய ஈரானிய சினிமா மறுபிறவி எடுத்தது. அமிர் தபாஷி, குறிப்படுவது போல், 'எரிந்து தணிந்த சாம்பலின் கீழ் உருவான தணல்கள் இன்னும் அணைக்கப்படவில்லை' என்பதால் இந்தப் புதிய வாய்ப்பினால், பிரசித்திப் பெற்ற படைப்பாளிகளான பஹராம் பேய்சாய், தாரியூஷ் மெஹ்ருஜூயி, பஹமான் ஃபர்மனாரா, அப்பாஸ் கியரோஸ்தமி, அமித் நதேரி இவர்கள் தங்களது அடுத்தக் கட்ட படைப்புகளை உருவாக்கினர். புதிய ஈரானிய சினிமாவின் இரண்டாவது தலைமுறையினரான மக்மல்பஃப், மஜீத் மஜுதி, ரக்ஷ்ன் பானி_ஏதேமதின் இவர்கள் படைப்புகள் 1980களின் இறுதியில் புதிய ஈரானிய சினிமாவின் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்த, 1990களில் பெருமளவில் உலகப்புகழ் பெற்ற இந்த சினிமாவை மேலும் வழி நடத்திச் செல்ல, மூன்றாவது தலைமுறையின் பிரதிநிதியாக, சமீரா மக்மல் பஃப் என்ற 19 வயது பெண் இயக்குனரின் படைப்புகள் ஒரு திடமான அடிக்கல்களை நாட்டியுள்ளன.

புதிய ஈரானிய சினிமாவிற்கு இவ்வளவு வரவேற்பு இருந்தாலும், நான்கு கட்ட தணிக்கையை சந்தித்த பிறகுதான் இந்தப் படங்கள் வெளிவரமுடியும். முதலில் கதை சுருக்கத்திற்கு கலாச்சார மந்திரி அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும். இரண்டாவது முழு திரைக்கதைக்கு அனுமதி பெற வேண்டும். மூன்றாவதாக, படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும், அதன் தொழில் நுட்ப கலைஞர்களும் அதில் வேலை செய்ய அனுமதி வாங்க வேண்டும். இறுதியாக, படத்தை முடித்தபிறகு அதை வெளியிட தணிக்கை சான்று பெறவேண்டும். இத்தனை முட்டுகட்டைகளையும் தாண்டி தங்கள் வெளிப்பாடுகளைப் பதிவுசெய்து கொள்ள புதிய ஈரானிய சினிமா, பல நுணுக்கங்களை உருவாக்கியுள்ளது. அவை என்னவென்று நாம் அடுத்தபடியாக விவாதிக்கலாம்.</span>

[size=14] 'எரிந்து தணிந்த சாம்பலின் கீழ் உருவான தணல்கள் இன்னும் அணைக்கப்படவில்லை'
- அமிர் தபாஷி,

நன்றி: தீராநதி


- AJeevan - 05-03-2004

[align=center:3b478ea4ad]<img src='http://www.yarl.com/forum/files/sandle.1.jpeg' border='0' alt='user posted image'>[/align:3b478ea4ad]


[align=center:3b478ea4ad] <span style='color:red'><b>செருப்பு குறும்படம் பற்றி சில நிமிடம்</b>
செல்வி தர்மினி பத்மநாதன்,
யாழ் பல்கலைக்கழகம்
நன்றி வீரகேசரி வாரவெளியீடு[/align:3b478ea4ad]
சமாதானச்சுருள் திரைப்பட வெளியீடு அண்மையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது பெரும் எண்ணிக்கையில் இரகசிர்கள் அங்கு திரண்டிருந்தனர். 7 குறும்படங்கள் அங்கு திரையிடப்பட்டன. அவற்றில் என் மனதை பாதித்த படைப்புக்கள் \"செருப்பு\" \" போருக்குப்பின் \"என்பனவாகும்

தென்னிந்திய திரைப்படத்தையும், தொடர் நாடகங்களையும் பார்த்து அந்த கற்பனையில் நாம் வாழ கற்றுக்கொள்கின்றோம். எமது தாயகத்தின் பிரதிபலிப்புக்களை ஏனேதா தானோ என்று விட்டுவிடுகின்றோம் போலிருக்கின்றது. ஆனால் நாம் ஒரு முறை எம்மை திரும்பி பார்க்க வேண்டும். எமக்குள் ஆழப்புதைந்த வடுக்களை உரணவேண்டும். இவைதான் காலத்தால் அழியாதவை. அந்த உணர்வுகள் ஒரு முறை எமது தேசத்தை மீட்டுப்பார்க்க உதவும்

\"கடலோரக்காற்று\" \"உப்பில் உறைந்த உதிரங்கள்\" ஆகியவை பல்கலையில் திரையிட்டபோது நிறைந்து வழிந்த ரசிகர்களை \"அம்மா நலமா ? \" திரையிட்டபோது காணமுடியவில்லை.

இருப்பினும் : \"செருப்பு\" குறும்படத்தில் ஆரம்பத்தில் உயிர் பெறுகின்ற களம் வன்னிநிலப்பரப்பு என்பதை உணர்த்துகின்றது. பாழடைந்த கட்டிடம். ஏழ்மை நிறைந்த குடும்பம். அவர்களை பிண்ணனியாக கொண்டு கதை நகர்த்தப்படுகின்றது பொருளாதார வசதியின்மையால் செருப்பு வாங்குவதற்கு சிறுமி உண்டியல் சேர்க்கிறாள். உண்டியல் சேர்த்த பணத்தில் செருப்பு வாங்கியும் அவள் ஆசைக்கு அதை அணியவில்லை என்பதே குழந்தை மனத்தின் சோகம். வெளிப்பார்வை என்பதைவிட அவள் அடிமனதின் ஆழத்தை அவளது ஏக்கத்தை ரசிகர்கள் மீது நேரடியாக உடைக்காமல் மெல்ல மெல்ல நுழைக்கிறார் தயாரிப்பாளர் கௌதம்.

சிறுமி பெண் என்ற ரீதியில் மிக அமைதியாகவே தன் ஏக்கத்தை மனதில் அடக்கி வைத்திருக்கின்றார். தன் நண்பியிடம் ஆசைக்கு ஓரு தடைவ செருப்பை போட்டுப்பார்க் கவிரும்பி கேட்கின்றாள். பாடசாலை போகும்போது வெறுங்காலுடன் வெயிலில் நடந்து போவதும் காலில் கொப்பளங்கள் வருவதும் மனதை உருக்குகின்றுது. அதில் அவளுக்கு ஏற்படும் கவலைகள் . . ?

தொடர்ந்து அவளது தங்கை செருப்பு வாங்கி வந்தததைக்கண்டதும் அந்த ஆசையில் தான் நின்ற பிரதேசத்தையும் கவனிக்காமல் ஓடியபோது அவலம் வந்து சேர்கின்றது. பாதத்தை இழந்த சிறுமி தனக்கு வாங்கி வந்த செருப்பில் ஓன்றை போட்டுப்பார்ப்பதும் \"நான் செருப்பபு வாங்கிட்டன் வாடி \" என்று வெளியில் நின்ற நண்பியை வீட்டிற்குள் கூப்பிடுவதும் அந்த சிறுமியின் உள்ளார்ந்த வேதனையின் வெளிப்பாட்டை காணலாம். இங்கு சிறுமிக்கு செருப்பு முக்கியமில்லை. அவளின் பாதம்தான் முக்கிய கருவாகின்றது. இனி எத்தனை செருப்பு வாங்கியும் என்ன பயன் ?

இளம் தயாரிப்பாளார் கௌதம் மிதிவெடி வெடிப்பதுடனேயே படத்தை முடித்திருக்கலாம் போலும். வாசகர்களின் சிந்தனைக்கு படத்தை தூரப்படுத்தி விட்டிருக்கலாம்.

[align=center:3b478ea4ad]விளைநிலம் எம் நிலம்
செந்நிலம் -வெடிக்கும்
விதைகளை விதைத்தது
அரக்க கூட்டம் . .
(யாழ்வாணன் கவிதைகள் )[/align:3b478ea4ad]

வன்னி நிலத்தில் இன்று எம் உறவுகளை முடக்கி விடும் விதைகள் எத்தனை ? அந்த வகையில் ' செருப்பு' யுத்தமேகம் சூழ்ந்த எமது தாயகத்தின் ஓரு துளியினை ஆவணமாகத்தந்துள்ளது. பிரதேச ஆக்கிரமிப்புமு; அவற்றின் விளைவுகளுமே எண்ணிலடங்காதன. அவற்றின் ஓரு துளியே கௌதமின் ' செருப்பு '

இளம் வயதிலேயே பலரும் பேசக்கூடிய வகையில் எடுத்துக்கொண்ட முயற்சி வாழ்த்துவதற்குரியது. இங்கு ஏதோ ஓர் வகை 'தொற்றல்' இந்த கலைஞனை பீடித்திருக்கின்றுது போலும். குறிப்பாக பேசும் கலை இசை காலம் இடம் சூழல் என்பன அவரின் திறனுக்கெட்டியவரை நகர்ந்து செல்கின்றது.

எமது தேசியமும் அதன் வரலாறுகளும் ஆவணமாக வேண்டிய சூலில் நகர்ந்து கொண்டிருப்பது சிறப்பானது. தேசிய உண்மைகள் பேணப்பட குறும்படமும் ஓர் உத்தியாக இருக்கின்றது. அந்த வகையில் தொடர்ந்தும் இக்கலைஞன் ஈழவரலாற்றை பேணும் தேடலில் வாழும் போது அவனது அர்ப்பணிப்பு, அவன் வரலாறு பேசும்.</span>

[align=center:3b478ea4ad]நன்றி:
]http://www.paranee.yarl.net/[/align:3b478ea4ad]

[align=center:3b478ea4ad] <b>குறிப்பு:</b> விமர்சகர், இயக்குனரை, தயாரிப்பாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நல்லதொரு விமர்சனம் முன் வைக்கப்படும் போது இப்படியான தவறுகள் நேராமல் இருந்தால் நல்லது.

AJeevan[/align:3b478ea4ad]


- Mathan - 05-04-2004

அஜீவன், உங்களுடைய சினிமா கனாக்கள் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.


- sOliyAn - 05-04-2004

அப்பிடி கேளுங்க!


- AJeevan - 05-04-2004

[Image: gc]<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>


தமிழ் நாட்டு சினிமா ஒன்றில் நடித்த ஒருவருக்கு ஐரோப்பிய குறும்படமொன்றில் நடிக்க வேண்டுமென்று ஆசை. என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

"நான் செய்யும் குறும்படத்தில் ஒரு சிறு பாத்திரம் செய்ய முடியுமா?" என்று கேட்டேன்.

"நீங்கள் சொன்னால் எப்படியான பாத்திரமானாலும் நடிப்பேன்" என்றார்.

சரியென்று சொல்லி குறும்பட ஒளிப்பதிவுக்காக ஆயத்தமாகி, அவரைத் தொடர்பு கொண்டேன். அவரும் உடனே சம்மதித்து, சரியான நேரத்துக்கு வந்தார்.

நடிக்கத் தொடங்கு முன் நான் அவர் என்ன செய்ய வேண்டுமென்பதை விளக்கினேன். இவரோ இன்னுமொரு நடிகரின் சாயலிலேயே நான் சொன்னவற்றைச் செய்யத் தொடங்கினார்.நான் பல முறை சொல்லிப் பார்த்தேன். அவரால் அந்த வட்டத்தை விட்டு மீண்டு வரவே முடியவில்லை.

என்னால் அவரைத் திட்டவும் முடியாது.காரணம் அந்த அளவுக்கு என்னோடு தொடர்பில் பேசுபவர். அவர் மனதைப் புண்படுத்தவும் முடியவில்லை. நாள் முழுவதும் முயன்றும் முடியாத போது இறுதியாக அவருக்குத் தெரியாமலே சில வசனங்களை பயிற்சி செய்யும்படி சொன்னேன். அவர் முன்பு போல் அலட்டிக் கொள்ளாமல் வசனத்தை பயிற்சி செய்வதாக எண்ணிக் கொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டு இயல்பாக இருந்தார்.

நல்ல காலம் அவருக்கு எனது ஒளிப்பதிவுக் கருவி இயக்கப்படுவது தெரியாமலே இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் சொதப்பி இருப்பார்.எனக்குத் தேவையானவற்றை அவருக்குத் தெரியாமலே சுட்டுக் கொண்டேன்.

இன்னும் மீதமுள்ளது சிறிதுதான்.அதை ஒளிப்பதிவு செய்ய வேறு ஒரு இடத்துக்கு போக வேண்டியிருந்தது. நாங்கள் (இருந்தவர்கள்) ஆளுக்கு முடிந்த பொருட்களை தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன்.

நடிகர் மட்டும் வெறும் கையோடு துரை போல் நடந்து வருவதும், அடுத்தவர்கள் பொருட்களைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிந்தது.

நான் உதவி ஒளிப்பதிவு செய்பவரிடம் கேட்டேன்

"ஏன் அவருக்கும் எதையாவது தூக்கி வரக் கொடுத்திருக்கலாமே?"

அதற்கு என் உதவி ஒளிப்பதிவாளர் சொன்னது தூக்கி வாரிப் போட்டது.

"நடிகர் என்றால் சாமான் தூக்கிற வேலை செய்யக் கூடாது. அதெல்லாம் டெக்னிசினின் வேலையென்று சொல்லி ஆட்டிக் கொண்டு வாரார் என்றார்."

நான் நடப்பதை நிறுத்தினேன். யாரிடம் பாரமான பொருள் இருக்கிறது என்று பார்த்தேன்.மறுபடி என்ன?

இங்க எல்லாரும் ஒண்டுதான்.இது கூட்டு முயற்சியில உருவாகிற படைப்பு.

அண்ண இதை தூக்கிக் கொண்டு வாங்க. என்று சில பொருட்களை ஒப்படைத்தேன்.

ஆட்டின கை, காவிக் கொண்டு நடந்தது.

"ஒளிப்பதிவாளர் இயக்குனர் கூட நடிகர் மாதிரிதான். ஆனால் என் யுனிட்டில எல்லாரும் ஒரேமாதிரிதான்." என்றேன்.

அதன்பிறகு யாரும் சொல்லாமலே அவர் சாமான்களை தூக்கினார்.

அத்தோடு படத்தைப் பார்த்து விட்டு அவர் சிரமப்பட்டு நடித்தவை படத்தில் இல்லாமல் இருக்க மிகவும் வேதனைப்பட்டார்.

"நான் அந்த நடிகர் மாதிரி நடிக்க எவ்வளவு கஸ்டப்பட்டன் தெரியுமா ஒரு கட்டத்தையாவது விட்டு வைக்காமல் வெட்டிட்டீங்களே" என்று வேதனைப்பட்டார்.

"என் படங்கள்ள நடிக்க வேண்டாம். சொன்னதைச் செய்தா போதும். அதுக்கு மேல எது இருந்தாலும் வெட்ட என் கை தயங்காது" என்றேன்.

படத்தை பார்த்தவர்கள் அவர் நடிப்பை வெகுவாகப் பாராட்டியிருந்தார்கள்.

அவர் அவர்களுக்கு சொன்னது,

<span style='color:darkred'>\"என்னால இப்படியும் முடியும்.\"

அவரை மாற்றிக் காட்டியதில் எனக்கு மகிழ்ச்சி.

Arrow இன்று நடிக்காமல் இருக்க முடிந்தால் அதுதான் நடிப்பு.
AJeevan</span>


- sOliyAn - 05-05-2004

அவ்வளவுதானா?! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 05-05-2004

இன்று யார் தான் சுயமாக நடிக்கிறார்கள் அவர் பாணி இவர் பாணி என்று மிமிக்ரி தான் செய்கிறார்கள் தங்களுக்கென்று தனி வழியில் செய்பவர்கள் மிகக் குறைவு

குறும்படங்கள் இயல்பான நடிப்பிற்காய்ப் பேசப்படுபவை அவற்றையும் பாணி நடிப்புக்களால்
நாறடிக்காவிட்டால் சரி

என்ன அஜீவன் அண்ணா யாராவது கேட்டுக் கொண்டால் மட்டும்தான் எழுதுவீர்களா? நானும் கேட்போம் என நினைத்தேன் பின்னர் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என நினைத்து விட்டுவிட்டேன்

தொடருங்கள்


- Eelavan - 05-05-2004

இன்று யார் தான் சுயமாக நடிக்கிறார்கள் அவர் பாணி இவர் பாணி என்று மிமிக்ரி தான் செய்கிறார்கள் தங்களுக்கென்று தனி வழியில் செய்பவர்கள் மிகக் குறைவு

குறும்படங்கள் இயல்பான நடிப்பிற்காய்ப் பேசப்படுபவை அவற்றையும் பாணி நடிப்புக்களால்
நாறடிக்காவிட்டால் சரி

என்ன அஜீவன் அண்ணா யாராவது கேட்டுக் கொண்டால் மட்டும்தான் எழுதுவீர்களா? நானும் கேட்போம் என நினைத்தேன் பின்னர் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என நினைத்து விட்டுவிட்டேன்

தொடருங்கள்


- AJeevan - 05-05-2004

[size=14]இல்லை ஈழவன்

நான் தொடர்ந்து எழுதவே விரும்புகிறேன்.இது கூட எவரையும் குறை கூறும் நோக்கிலல்ல.

நமது படைப்புகள் ஏன் வளரவில்லை என்பது குறித்து பலருக்குத் தெரிய வேண்டும். அதையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில்தான் எழுதத் தலைப்பட்டேன்.

நமது குறைகள் நமக்குத் தெரிந்தால்தான் நாம் முன்னேற முடியும்.

சில சமயங்களில், சின்ன விடயங்களைக் கூட பெரிது படுத்தக் கூடியவர்கள் இன்னும் எம்மிடமிருக்கிறார்கள்.அதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும். அண்மையில் ஒரு நண்பர் படம் எடுப்பவர்களின் வாழ்கையையே படம் எடுக்க வேண்டுமென்ற கருத்தை முன் வைத்திருந்தார்.

இவற்றால் நான் பெற்ற லாபம் என்ன என்பது என் நண்பர்களுக்குத் தெரியும். அவர்கள் எனக்குச் சொல்லும் உபதேசம் இதுதான்:-

"கையில கிடைச்சதை கரியாக்கிற வேலையை எப்ப நிறுத்திறியோ அண்டைக்குத்தான் உருப்படுவாய்."

இதுதான் நான் பெற்ற புகழாரம்.

எமது பணத்தையும் நேரத்தையும் கரியாக்கி குழம்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை.

இதுவேதான் இலங்கை தமிழ் சினிமாக்காரர்களுக்கும் நடந்தது. இவை பலருக்குத் தெரியாது. நான் எனது 13வயதில் சினிமாவுக்குள் போன காரணத்தாலும் ,இலங்கையில் பல இயக்குனர்கள் குடும்ப நண்பர்களாக இருந்ததாலும், அவர்கள் இவை பற்றி என் தந்தையுடன் பேசுவதைக் கேட்டதாலும் ,எனக்கு பல விடயங்கள் தெரியும்.

அதுவே இன்னும் தொடர்வது வேதனையாக இருக்கிறது.

சிங்கள சினிமாவின் பார்வையாளர்களிடமோ, மக்களிடமோ இந்த நிலையில்லாததால் அவர்களது படைப்புகள் (யதார்த்த சினிமா) சர்வதேச தரத்தில் பேசப்படுகின்றன.

அதிகமான இந்திய சினிமாக்கள் பொழுது போக்கு சினிமாவே. அவற்றை வெளி நாட்டவர்கள் மசாலா என்றே அழைக்கிறார்கள். இப்படியான கருத்துள்ளோருக்கு எனது சினிமாவோ ஆதங்கமோ தேவைப்படாது. அவர்களை உருவாக்க எனக்கு நேரமில்லை.

நாம் வாழப் போவது கொஞ்ச காலம்தான். அதற்குள் எதையாவது செய்ய வேண்டும்.

அதை யோசித்த பின்னர்தான் எனது பாதையை மாற்றினேன். மீண்டும் சுவிசின் சினிமாவில் முழு நேரமாக இறங்க முடிவு செய்தேன். இறங்கியும் விட்டேன்.

முடியும் போது எழுதுவேன். இருப்பினும், உலக சினிமாவிலிருந்து எதையாவது வாசிக்கக் கிடைத்தால் அவற்றை இங்கு இணைத்தால் யாராவது பயனடைவார்கள் என்று இணைத்தேன்.

[Image: cinema.jpg]
எவரும் வென்றால்தான் அவன் சாதனையாளன். தோற்றால் அவனுக்கு நாமங்கள் வேறு..........................

Idea Ready..............Rolling....................Take.1

எது சரி?
AJeevan