![]() |
|
Google மின்னஞ்சல் சேவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: Google மின்னஞ்சல் சேவை (/showthread.php?tid=7248) |
Google மின்னஞ்சல் சேவை - yarlmohan - 04-01-2004 தேடற்பொறியில் முன்னணியில் இருக்கும் Google மின்னஞ்சல் சேவையினையும் தொடங்கவுள்ளது. விபரங்கள்: http://gmail.google.com - yarlmohan - 04-01-2004 இன்னொரு செய்தி நிறுவனம் இது ஒரு April Fool என வர்ணித்துள்ளது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 04-01-2004 அட நீங்களுமா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: Google மின்னஞ்சல் சேவை - nalayiny - 04-01-2004 http://www.greetsomeone.com/cgi-bin/disp_c...3:ffffff:apfool :wink: :wink: :wink: :wink: - Mathan - 04-15-2004 கூகிள் (Google.com) தேடற்பொறியில் இருந்து மின்னஞ்சல் வர்த்தகத்திற்கு ! இணையத்தளத்தின் தேடல் (Search) தொழில்நுட்பத்தின் முடி சூடாத ஜாம்பவானாக திகழும் கூகிள் (Google.com) தனது வியாபாரத்தை மின்னஞ்சல் வர்த்தகத்திற்கு விரிவுபடுத்துவதற்கான ஆரம்ப அறிவிப்புகளை கடந்த வாரம் வெளியிட்டது. இது நேரடியாக யாகூ (Yahoo.com) காட்மெயில் (Hotmail.com) போன்ற மின்னஞ்சல் வர்த்தக முடிசூட மன்னர்களின் பிரதான வர்த்தகத்திற்கான நேரடி எச்சரிக்கை. கூகிள் ஆல் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த புதிய இலவச மின்னஞ்சல் ஜீமெயில் (www.Gmail.com) என பெயரிடப்பட்டுள்ளது. யாகூ, மைக்ரோ சொப்ட் போன்ற பலம் பொருத்திய நிறுவனங்களை சவால் விடக் கூடியதாக இவர்கள் எடுத்துள்ள வணிககோட்பாடுகள் மிகவும் சிறப்பானது. <b>1. மிக அதிகமான சேமிப்பு வசதி</b> - தற்போது உள்ள இலவச மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்கும் சேமிப்பு வசதி அண்ணளவாக 10-20 MB . ஜீமெயில் 1000 MB (= 1GB) சேமிப்பு வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் அண்ணளவாக 500,000 கடிதங்களை சேமித்து கொள்ளலாம். <b>2. சிறப்பான தேடல் வசதி</b> - தற்போது உள்ள சேவைகள் தேடலில் பின்தங்கியே உள்ளது. கூகிள் தனது 'தேடற் பொறியில்' உள்ள சிறப்புத் தேர்ச்சியை இங்கு விஸ்தரித்துள்ளது. இதன்படி பாவனையாளர்கள் மிக விரைவாக கடிதங்களை தேடி அணுகக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. <b>3. அஞ்சல் இணைப்புக்கள் (Attachments)</b> - மின்னஞ்சல் உடன் இணைத்து அனுப்பக் கூடிய கோப்புக்களின் அளவு தற்போது ( 1MB - 2MB ) வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் பல்லூடக கோப்புக்களின் (Multimedia Files) பாவனை அதிகரித்திருப்பதை தொடர்ந்து இந்த அஞ்சல் இணைப்புகட்டு உரிய வரையறையை 10MB வரை Google உயர்த்தி உள்ளது. மேற்கூறப்பட்ட சிறப்பான அம்சங்கள் பாவனையாளர்களை நிச்சயம் கவரும் என்பதால் ஏறத்தாழ 170 மில்லியன் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களை உடைய MSN/MicroSoftன் நிலைப்பாடு சற்று அச்சமடைந்ததாகவே காணப்படுகின்றது. இந்த Gmail எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என Google இன் நிறுவனர் லரி பேஜ் (Larry Page) பின்வருமாறு விபரிக்கிறார். 'எமது தேடற் பொறியை பாவிக்கும் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து தான் இந்த சேவை வடிவம் பெற்றது. அவர் தனது மின்னஞ்சல் சேவை பற்றி மிகவும் வெறுப்படைந்திருந்தார். அதில் உள்ள கடிதங்களை தேடுவதில் உள்ள சிரமம், சேமிப்பக கோட்டா முடிவடைந்தால் மின்னஞ்சல்கள் அனுப்பியவருக்கே திரும்பும் அவலம், சேமிப்பக கோட்டாவை பேண முக்கிய மின்னஞ்சல்களை அழிக்க வேண்டிய நிலை... அவர் எங்களிடம் கேட்டார் நீங்கள் செய்ய முடியாதா என்று?....." மேற்கூறிப்பிட்ட எல்லாவற்றையும் வாசித்த பின்னர் நீங்கள் நினைத்திருப்பீர்கள் Google உம் Lary Page உம் தம் வாடிக்கையாளர்களில் மிகவும் அன்பு கொண்டவர்கள் எனவே தான் இத்தனை மேம்படுத்தப்பட்ட Gmail மின்னஞ்சல் சேவையை இலவசமாக தருகின்றார்கள் என்று. அது தான் இல்லை ! அவர்கள் குறி வைப்பது உங்களின் பிரத்தியேகத் தன்மை ( Privacy ) அல்லது இரகசியத் தன்மை ( Confidentiality ) . உங்களுக்குரிய கடிதத்தை உடைத்துப் பார்த்து - அதில் உள்ள விடயத்திற்கு ஏற்றதாக விளம்பரத்தை உள்ளே வைத்து விட்டு - ஒன்றும் நடவாதது போல உங்களுக்கு கடிதம் வரும். விளம்பரம் பிரசுரிப்போரிடம் இருந்து பணம் Google இற்கு போகும் இது தான் இதன் சூட்சுமம். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் Canada இல் உள்ள அண்ணாவிற்கு பின்வருமாறு கடிதம் எழுதுகின்றீர்கள். உங்கள் அண்ணா Gmail பாவிக்கிறார். Dear Anna, I got selected to Sri Lanka Institute of Information Technology and probably I have to buy a Personal Computer ......' Google இன் சிறப்பான தேடல் பொறி இக் கடிதத்தில் உள்ள வணிக முக்கியத்துவம் வாய்ந்த "buy a Personal Computer", 'Canada' போன்ற சொற்பதங்களை எடுத்துக் கொள்ளும். இச் சொற்பதங்களை தனது விளம்பரதாரர்களின் விபரங்களுடன் ஒப்பிடும். Canadaல் கணனி விற்பனையாளர் ஒருவர் இருந்தால் அவர்களின் விளம்பரம் உங்கள் கடிதத்துடன் இணைக்கப்பட்டு அண்ணாவிற்கு சேர்ப்பிக்கப்படும். உங்களின் பிரத்தியேகத்தன்மை அதோ கதிதான்.! Gmail.com - இது சும்மா தோடு ( Email and Web Storage ) தருகிறோம் என்று கூறிவிட்டு, தோட்டுடன் காதை ( Privacy ) இழந்த கதை போல இருக்கின்றதா.....? நன்றி - உலகப்பிரகாசம் ஜெயதீபன் gmail..... - ragupathyragavan - 05-28-2004 Gmail வந்தால் அனைவருக்கும் அது மகிழ்ச்சியான செய்தி... - kuruvikal - 05-28-2004 வந்துட்டுதே...நீங்கள் ஒரு செயற்திறன் உள்ள குடில் ஒன்றை blogspot.com இல் வைத்திருந்தால் Gmail வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்... என்றாலும் இன்னும் எல்லோருக்கும் எப்போதும் என்று அதன் சேவை வழங்கப்படவில்லைத்தான்...! - Mathan - 05-28-2004 அனைத்து blogspot குடில் உரிமையாளர்களுக்கும் கொடுக்கின்றார்களா? - ragupathyragavan - 07-06-2004 i got gmail account - kuruvikal - 07-06-2004 I see... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- தமிழன் - 07-16-2004 BBC அவர்கள் சொன்ன கருத்துக்களை நான் இங்கு படிக்காவிட்டால் நானும் அந்த கோடியில் ஒரு ஏமாளியா ஏமாந்து இருப்பேன். நல்ல பயனடைந்தேன் நன்றிகள் உங்களுக்கே! என்றும் தமிழன் |