Yarl Forum
மட்டக்களப்பு நிலைமைகள் !!? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டக்களப்பு நிலைமைகள் !!? (/showthread.php?tid=7245)



மட்டக்களப்பு நிலைமைக - anpagam - 04-01-2004

<b>மட்டு நிலைமைகள் தொடர்பாக நான்கு அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை </b>

(ஐ.பி.சி தமிழ் வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 4:37 ஈழம் )

மட்டக்களப்பு நிலைமைகள் தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், குழந்தைகள் நலனுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், உலக உணவுத் திட்டம் ஆகிய நான்கு அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றன.

இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் வாழவும், சொத்துக்களைக் கொண்டிருக்கவும் இலங்கை மக்களுக்கு உரிமையுள்ளது எனத் தெரிவித்திருக்கும் இவ்வறிக்கை, உலக மனித உரிமைப் பிரகடனம் இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்துகிறது எனவும் தெரிவித்திருக்கிறது.

மக்களின்; உயிருக்கும் உடமைக்கும் அச்சமூட்டுகின்ற அல்லது பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கையை எவரும் மேற்கொள்ளமலிருக்க வேண்டுமாறு அனைத்துத் தரப்பிரையும் ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு அமைப்புகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே இடம் பெயர்ந்த 3 இலட்சத்து 56 ஆயிரம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்; சூழ்நிலையில், மட்டக்களப்பில் வாழும் யாழ்ப்பான மக்கள் இடம் பெயருமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து இவ்வமைப்புக்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

அத்துடன், சகல தரப்பினரும் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை சம்பந்தப்பட்ட சகலரையும் வலியுறுத்தியுள்ளது.

நன்றி: புதினம்.கொம்

நிலமையை பார்தீர்களா வெளிநாடுவந்து எம்மவருக்கு புத்தி சொல்லவேண்டி உள்ளது யதார்தம் தெரியாத நம்ம துரோகிகளும், எதிரிகளும் நாம என்ன சொன்னாலும் கேக்காங்கள் இப்ப....... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 04-01-2004

நம்மாங்களுக்கு "பின்" புத்தி....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- anpagam - 04-01-2004

பழைய கதைகளை இழுத்தால் நிலைமைகளுக்கேற்ப பதில்கள் தரப்படும். (விரும்பியோர் யதார்ததோடு சேர்ந்த நிகழ்கால கருத்துக்கேற்ப கருத்தாடவும் நன்றி)
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea


- kuruvikal - 04-01-2004

சும்மா கிடக்கிற சங்கை ஊதி.....என்னாவுறது....! ஆண்டியாகிறதுதான்....நம்மாக்கள் சில பேர் இப்ப செய்யுறது...! திருந்திடுவாங்கள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 04-02-2004

அன்பகம்
கருணா தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்த பொழுது அவர் கேட்பதில் என்ன தவறு யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பானை அடக்கித்தானே வைத்திருக்கிறான் என்று யாதார்த்தம் பேசியவர்கள் யாராவது இதற்கு கண்டனம் அல்லது கருணா செய்வது பிழை என்றோ குரல் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா

அவர்களுக்குத் தேவை தமிழ்த் தேசியம் அடிபட்டுப் போய்விடவேண்டும் அதற்குக் கருணா முயன்றால் என்ன கருணாவின் அண்ணன் முயன்றால் என்ன இவர்களின் தார்மீக ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு
இதற்காக இவர்கள் போட்டுக்கொள்ளும் முகமூடிதான் மக்கள் அல்லது மனித உரிமைவாதிகள் என்ற உருமறைப்பு உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தால் புலிகளின் நடவடிக்கைகளுக்கு மனித உரிமை காரணம் கற்பிக்கும் இவர்கள் அதே வேளையில் மற்றவர்களின் செயற்பாட்டையும் விமர்சிக்கவேண்டும் அதற்காக தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றில்லை சாதாரண மனிதநேயம் இருந்தால் போதும்

இன்று மட்டக்களப்பு மண்ணில் நடக்கும் அவலத்துக்கு யாழிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படதை உதாரணம் காட்டி நியாயம் கற்பிக்க முயல்கின்றனர் அந்த சம்பவததை வரலாற்றின் வடுவாகவோ அல்லது துன்பியல் சம்பவமாகவோ சமாதானம் கூறிவிட நாம் விரும்பவில்லை அது நிச்சய்மாக ஒரு தவறான் முடிவு அந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு முஸ்லிம்கள், பலரின் காட்டிக் கொடுப்புகள் காரணமாகக் கூறப்பட்டபோதும் எம்மால் இயன்றவரை இதற்கு எதிராக குரல் கொடுத்தோம்

பல்வேறு தரப்புகளினதும் அழுத்தம் காரணமாக விடுதலைப் புலிகள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதுடன் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதற்கும் ஆவன செய்துள்ளன்ர் இன்று உள்ள நிர்வாகப் பிரச்சனைகள் கரணமாக இடம்பெயர்ந்தவர் அத்தனை பேரையும் உடனடியாக யாழ் மண்ணில் குடியேற்ற முடியவில்லை ஆனாலும் விரைவில் அந்தக் குறை தீர்க்கப்படும்

ஆனால் சந்தர்ப்பவாதங்களுக்கு விலைபோனவர்களால் இன்று நிகழ்த்தப்படும் பழிவாங்கல் சம்பவங்களுக்கு வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் மன்னிப்பு என்ற பெயரில் இது மறக்கடிக்கப்படலாம் ஆனாலும் இதனால் ஏற்பட்ட காயமும் இனி ஏற்படப்போகும் பிரச்சனைகளும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்கள் உணர்வார்களா?

இதில் வெறுமனே யாழ் வர்த்தகர்களோ அல்லது யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்டமக்கள் மட்டுமோ சம்பந்தப்படவில்லை முழுத் தமிழ்த்தேசியமுமே சமபந்தப்பட்டுள்ளது மட்டக்காளப்பு யாழ் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவு மாத்திரமின்றி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவும் பாதிக்கப்படப் போகின்றது

யாழ் வர்த்தகர்களை வெளியேற்றி அவர்களது வர்த்தகத்தை முஸ்லிம்கள் கைப்பற்ற வழிசமைப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான பகைமைக்கு தூபம் போடப்படுகின்றது

புலி எதிர்ப்பு என்ற பெயரில் முழுத் தமிழ்த்தேசியத்துக்குமே எதிராகச் செயற்படுபவர்கள் விரும்பியது இதனையே இதனை அறிந்தோ அறியாமலோ நடக்கும் சம்பவங்களைப் பெரிதாக்கியோ அல்லது பாதிக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுப்பு என்ற பெயரில் குழப்பம் விளைவிப்பதிலோ பலர் முன்னிக்கின்றனர் அதிலும் அநேகம் பேர் தமிழ் மக்கள் என்பது வேதனைக்குரிய விடயம் புலிகளுடனான தமது தனிப்பட்ட விரோதத்தை ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பதன் மூலமோ அல்லது அதற்கு சேறு பூசுவதன் மூலமோ தீர்க்க முனைகின்றனர்
எமது வேண்டுகோள் இந்த வீணர்கள் தமது செயல்களைக் கைவிடவேண்டும் என்பதல்ல இதற்கு மற்றவர்களும் செவிசாய்க்கக்கூடது என்பதே

இன்று யாழ் களத்தில் கூட மாற்றுக்கருத்துகள் என்ற பெயரில் தமிழ்த்தேசியத்துக்கெதிரானதும் குழப்பம் விளைவிப்பதுமான கருத்துகள் பரவலாக எழுதப்படுகின்றன இதனை எழுதும் 5 ,6 பேரைவிட அதனை வாசிக்கும் பலநூற்றுக்கணக்கன மக்களுக்கு கொடுக்கப்படும் செய்தி என்ன என்பதிலேயே இதன் முக்கியத்துவம் உள்ளது
முன்புமொருமுறை இந்த மாற்றுக்கருத்துகளும்களத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்பவர்களைப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டேன் உங்கள் கருத்துகளில் நியாயமிருக்கும் பட்சத்தில் அவற்றைத் தெளிவாக எழுதுங்கள் அவற்றைப் பற்றி ஒரு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வழிகோலுவதன் மூலம் அக்கருத்துகள் அனைவரையும் சென்றடைய வழிவகுக்கலாம்

அதனை விடுத்து புலிவாலைப் பிடித்தவர்கள் மாதிரி பிடிக்கவும் விருப்பமின்றி விடவும் முடியாமல் புலியையும் பழித்துக்கொண்டிருப்பது வீண்வேலை

எனது கருத்து வெறுமனே இருட்டைப் பழித்துக் கொண்டிருப்பதை விட அதனை நீக்குவதற்கு ஒரு மெழுகுவர்த்தியைத் தன்னும் ஏற்றுவது சிறந்தது என்பது

இதனை ஏற்றுக்கொண்டு கருத்தெழுத யாராவது முன்வருவார்களா என்பதே எனது கேள்வி


- Shan - 04-02-2004

கருணாவின் சதி நாளை தெரியவரும். ஆம் தமிழ் தேசியத்திற்கு கிழக்கில் விழும் வாக்குகள் நன்கே குறைந்து விட்டது. அங்குள்ள முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் அங்கை பெரும்பான்மையாக போகிறது. கருணாவும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆனால் நiளை முதல் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டு அம்பறை பாரிய மாற்றங்களை எதிர்கொள்ளும்.!!!


- Eelavan - 04-02-2004

நிச்சயமாக
இப்போதே முஸ்லிம் கவுன்சில் கிழக்கு வடக்குடன் சேர்ந்திருக்கவேண்டுமா என்பதை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறது

ஜனநாயக இலங்கையில் ஜனநாயக ரீதியில் ஜனநாயகத்தின் காவலர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தலில் நம்பிக்கை இல்லை என்ற கருத்துப்படவல்லவா அவர்கள் கோரிக்கை இருக்கிறது

மட்டக்க்களப்பு மற்றும் அம்பாறையில் தமிழர் பிரநிதித்துவம் இழக்கப்படுவது உறுதியாகிவிட்டது
நகரபிதா கருணாவும் மாமனிதன் சத்தியமூர்த்தியும் நினைத்ததில் கொஞ்சத்தையாவது சாதித்துவிட்டார்கள்


- Shan - 04-02-2004

100க்கு நு}று உண்மை!