Yarl Forum
மருத்துவக் குறிப்புகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: மருத்துவக் குறிப்புகள் (/showthread.php?tid=7270)

Pages: 1 2

மருத்துவக் குறிப்புக - sWEEtmICHe - 03-29-2004

[size=22][b]மருத்துவக் குறிப்புகள்

[size=14]நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து
நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து
தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று
வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து
உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க
வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள்
கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை
நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த
வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த
கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை
தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக
உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து
வர தேமல் குணமாகும்.

மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து ச
ாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர
தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால்,
சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 03-29-2004

சுவிற்மிச்...உங்கள் குறிப்புக்கள் எங்கள் துணைவிக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லச் சொன்னார்...! :wink:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 03-29-2004

அப்படிய!! நன்றி என்று சொல்லிவிடூங்க <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- shanmuhi - 03-29-2004

sWEEtmICHe நல்ல பிரயோசனமான தகவல்கள்.

- sWEEtmICHe - 03-29-2004

கேட்க இனிபாக இருக்கிறது...
மிக நன்றி ஷன்முகி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-30-2004

sWEEtmICHe Wrote:அப்படிய!! நன்றி என்று சொல்லிவிடூங்க <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எங்கள் துணைவியார் சார்பில் உங்கள் நன்றிக்கு உங்களுக்கு நன்றிகள்...! :wink:

தொடர்ந்தும் குறிப்புக்கள் கொண்டு வரவும் சொல்லச் சொன்னார்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 03-31-2004

செரி செய்கிரேன் மிக நன்றி உங்களுக்கும்
உங்கள் துணைவியாருக்கும் .... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vallai - 03-31-2004

கருவாட்டு இரத்தமும் கறிவேப்பிலைச்சாறும் கலந்து பருகிவர மனநோய் குணமாகுமாம் யாராவது இந்தத்தகவல் உண்மையா என்று கேட்டுச் சொல்லுங்கள்

- kuruvikal - 03-31-2004

vallai Wrote:கருவாட்டு இரத்தமும் கறிவேப்பிலைச்சாறும் கலந்து பருகிவர மனநோய் குணமாகுமாம் யாராவது இந்தத்தகவல் உண்மையா என்று கேட்டுச் சொல்லுங்கள்

எப்படிப்பட்ட மனநோய் எண்டும் ஒருக்கா தெளிவாச் சொல்லுங்கோவன்....!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 03-31-2004

நாங்கள் ஒண்டு கேள்விப்பட்டனாங்கள் கூழாங்கல்லில கூழ் செய்து குடிச்சா புத்தி கூடுமாம் எண்டு...அதுவும் உண்மையோ எண்டும் கேட்டுச் சொல்லுங்கோ...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vallai - 03-31-2004

kuruvikal Wrote:நாங்கள் ஒண்டு கேள்விப்பட்டனாங்கள் கூழாங்கல்லில கூழ் செய்து குடிச்சா புத்தி கூடுமாம் எண்டு...அதுவும் உண்மையோ எண்டும் கேட்டுச் சொல்லுங்கோ...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புத்தி கூடிப்போய்த்தானே தட்டிறது அதாவது மனநோய் வாறது அப்பியெண்டால் கூழ் குடிக்காமல் விட்டால் மனநோய் குறையும் தானே

- kuruvikal - 03-31-2004

உங்களுக்கு என்ன புத்தி பேதலிச்சே போச்சு...அப்படி எண்டாத்தான் மனநோய் வரும் உங்களுக்கு...புத்தி கூடினா வருமே ...அப்ப PhD படிக்கிறவங்கள 'Permanent head damage' எண்டுறது உண்மையே...அப்ப எனி ஒருத்தரும் பள்ளிக் கூடம் போகக் கூடாதெண்டு சட்டம் கொண்டு வருவியள் போல....! அப்ப கொண்டாட்டம் தான்...ஒரே லீவு....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vallai - 03-31-2004

kuruvikal Wrote:உங்களுக்கு என்ன புத்தி பேதலிச்சே போச்சு...அப்படி எண்டாத்தான் மனநோய் வரும் உங்களுக்கு...புத்தி கூடினா வருமே ...அப்ப PhD படிக்கிறவங்கள 'Permanent head damage' எண்டுறது உண்மையே...அப்ப எனி ஒருத்தரும் பள்ளிக் கூடம் போகக் கூடாதெண்டு சட்டம் கொண்டு வருவியள் போல....! அப்ப கொண்டாட்டம் தான்...ஒரே லீவு....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப உந்த Phd மாரெல்லாம் கூழாங்கல்லிலை கூழ் காய்ச்சிக் குடிச்சே உப்பிடி வந்தவங்கள் பிறகேன் பள்ளிக்கூடத்தை
பள்ளிக்கூடம் போய் புத்தி கூடும் எண்டா வாத்திமாரெல்லாம் ஏன் அப்பிடியே Bsc இலையே இருக்கிறாங்கள்

- kuruvikal - 03-31-2004

அது அவங்களுக்கு BSc ஓடவே தட்டிட்டுது...இவங்களுக்கு கூழாங்கல்லைக் கூழாக்கிக் குடிக்கக் குடிக்க புத்தி கூடி...ஒவர் ஆயிட்டுது போல.....! எதுகும் ஓவர் ஆனாலும் பிசகும் எண்டுறவை...! பாருங்கோ கிரிகெட்டில ஒவர் எண்ட உடனே கொஞ்ச நேரத்துக்கு மச் பிசகிடும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-31-2004

தட்டின கேசுகள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vallai - 03-31-2004

உதைத்தான் நான் முதல்லையே சொன்னான் புத்தி கூடினா தட்டும் எண்டு
கேட்கமாட்டன் எண்டிட்டியள்
புத்தி ஓவராகினா தட்டும் மருந்து கருவாட்டு ரத்தமும் கறிவேப்பிலைச்சாறும் ஒரு மண்டலம் சாப்பிட சரிவரும்

- kuruvikal - 03-31-2004

ஐயோ நீங்கள் ஒண்டு...அது ஓவரானாத்தான் வரும்...புத்தி குறை எண்டாலும் வரும்...அது வேற வகை இது வேற வகையாம்...நீங்கள் ஆம்பிள வைத்துக் குத்துக்கும் பொம்பிள வைத்துக் குத்துக்கும் ஒண்டாவே வைத்தியம் சொல்லுவியள்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vallai - 03-31-2004

ஐயோ உந்த விளையாட்டுக்கு நான் வரேலை நான் ஏதாவது இசகு பிசகா கதைக்கப்போய் எல்லாப் பெண்ணியங்களும் என்னை ஆராச்சி பண்ணத்தொடங்கிடுவாங்கள் வல்லைமுனி ஆணா பெண்ணா எண்டு
உதுக்காகத்தான் ப்ரொபைல்லையே என்ரை பால் பகுதியை unknown எண்டு விட்டு வைச்சிருக்கிறன்

அதுசரி ஆம்பிளை வயித்துக் குத்துக்கும் பொம்பிளை வயித்துக்குத்துக்கும் காரணம் ஆம்பிளைதானே?

- kuruvikal - 03-31-2004

அப்படி Unknown எண்டு விடாதெங்கோ...பிறகு பால் பிழைச்ச கேசெண்டு சனம் நினைச்சிடும்...!

வைத்துக்குத்தில ஆம்பிள பெம்பிள இருக்கெண்டது தெரியும்...காரணம் காரியம் தெரியாது...அனுபவம் பத்தாது....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vallai - 03-31-2004

நாம் நடுனிலைமை வாதியெண்டு சொன்னாப் போதுமோ செயல்ல காட்ட வேண்டாமோ அதுதான் அப்பிடி விட்டனான்

ஆம்பிளை வயித்துக் குத்துக்கும் பெம்பிளை வயித்துக் குத்துக்கும் வயிறுதான் காரணம் உது தெரியாமல்......