![]() |
|
வாழைப்பழத்தின் மகிமை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: வாழைப்பழத்தின் மகிமை (/showthread.php?tid=7264) |
வாழைப்பழத்தின் மகிமை - Mathan - 03-30-2004 வாழைப்பழத்தின் மகிமை நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழம் பக்கவாதத்தைத் தடுக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிடுவது மூலம் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை ஒரு சிலரால் தவிர்க்க முடியும் என்று வாழைப்பழம் பற்றி நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பொட்டாசியச் சத்து நிறைய உள்ள பழம் வாழை. 65 வயதுக்கு மேற்பட்ட 5.600 பேரிடம் ஹாவாயித் தீவில் நடத்தப்பட்ட ஆய்வில், உடம்பில் குறைந்த அளவு பொட்டாசியம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சிறுநீர் கழிக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. பொட்டாசியத்தை உடல் ஜீரணிப்பதை அத்தகைய மாத்திரைகள் தடுப்பதாகக் கூறப்படுகிறது. டையயுரிட்டிக்ஸ் எனும் மாத்திரைகள் முதியவர்களால் உட்கொள்ளப்படுகின்றன. இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தவும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் அவை முதியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதய நோயுள்ளவர்களுக்கும் அந்த மாத்திரை கொடுக்கப்படுகிறது. இதயம், நுரையீரல் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க அவை உதவுகின்றன. டையயுரிட்டிக்ஸ் மாத்திரை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியச் சத்து இருந்தால் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும். டையயுரிட்டிக்ஸ் மாத்திரை சாப்பிடுபவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பொட்டாசியம் கிடைத்தால் அவர்களுக்குப் பெரிதும் உதவும் என்கிறார் இந்த ஆய்வை நடத்திய ஹொனாலுலு மருத்துவர் டாக்டர் டேபரா கிரீன் கூறுகிறார். வாழைப்பழம் சாப்பிடுங்க என்கிறார் வேறு ஒன்றுமில்லை. நன்றி - பழனி - Eelavan - 03-30-2004 வாழைப்பழம் என்றாலே இப்போதெல்லாம் கம்பவாரிதி ஞாபகம் தான் வருகிறது - shanthy - 05-04-2004 <!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->வாழைப்பழம் என்றாலே இப்போதெல்லாம் கம்பவாரிதி ஞாபகம் தான் வருகிறது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஈழவன் வாரிதியின்ரை வருத்தத்துக்கு வாழைப்பழம் மருந்தோ ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 05-04-2004 <!--QuoteBegin-shanthy+-->QUOTE(shanthy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Eelavan+--><div class='quotetop'>QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->வாழைப்பழம் என்றாலே இப்போதெல்லாம் கம்பவாரிதி ஞாபகம் தான் வருகிறது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஈழவன் வாரிதியின்ரை வருத்தத்துக்கு வாழைப்பழம் மருந்தோ ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஈழவன் வாரிதி சொன்ன வாழைப்பழத்தை கழற்றி தரும் விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன், |