![]() |
|
கிறுக்கல் 4 - குற்றமில்லைதான்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கிறுக்கல் 4 - குற்றமில்லைதான்... (/showthread.php?tid=7266) |
கிறுக்கல் 4 - குற்றமில - Eezhaven - 03-29-2004 குற்றமில்லைதான்... மொழி உரைத்தவளை விழி வாசிக்கும் முன்னரே வழி தேடிச் சென்ற என் இதயம் குற்றமில்லைதான்... வாய் மொழி பேசியவள் விழி மொழி பேசியது கண்டு என் மொழி மறந்ததும் குற்றமில்லைதான்... நீள் முடி கண்டதும் நிலை தடுமாறிய என்னுள்ளம் குற்றமில்லைதான்... கன்னக் குழியிலும் காலம் கடத்தலாம் என கள்ளம் கொண்ட என் காதலும் குற்றமில்லைதான்... முகவரி தெரியாதவளை மூச்சு படு துாரம் கண்டதும் முத்தமிட உதடு முனைந்ததும் குற்றமில்லைதான்... ஒருவரி கேட்டபின் பலவரிகள் தொலைத்த என் கவிதைகளும் குற்றமில்லைதான்... பிரிவோமெனத் தெரிந்தும் பரிபாசை புரியும் நம் நேசமும்... - Eelavan - 03-30-2004 நண்பரே கிறுக்கல்கள் அருமை தாள்களில் அன்றி நெஞ்சில் கிறுக்கிய வரிகள் என நினைக்கிறேன் தொடரட்டும் வாழ்த்துக்கள் - phozhil - 03-30-2004 பொன்னைப் பொன்னே வாழ்த்துகிறது. நானும் சேர்ந்துக்கொள்கிறேன். --------------------- ஈழம்=பொன். --------------------- |