![]() |
|
கிறுக்கல் 3 - நிலைக்குமா மனிதம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கிறுக்கல் 3 - நிலைக்குமா மனிதம்! (/showthread.php?tid=7267) |
கிறுக்கல் 3 - நிலைக்கு - Eezhaven - 03-29-2004 ஓ.. இளைஞனே வா... இறந்து போன காலம் பற்றி இருந்து யோசனை செய்ய இது காலம் அல்லவே! இந்தக்கால இளசுகள் என்ன....? என்ற - அந்தக்கால பழசுகளின் இழி சொல் இனி உனக்கு வேண்டாமே! வா... புதுசாய்ப் பிறப்போம் பூமிக்கு புதிய வடிவம் கொடுப்போம் வளைந்து போன வானவில்லின் முதுகினை நிமிர்த்துவோம் வானம் அள்ளிப் போடும் மழைத்துளிகளை ஓர் இடம் சேர்த்து உலகுக்கே நீர் வழங்குவோம் என்னடா....?! இது சாத்தியமா...?! என்று சாய்ந்து விடாதே சாத்தியமில்லை என்றிருந்தால் சந்திரனில் காலடி வைத்திருக்க முடியாது சாட்டிலைட்டுகள் வந்திருக்காது நாளுக்கு நாள் போர்கள் நாம் தொலைத்துப் போகும் நிம்மதி வேர்கள் சமாதானப் புறாவினைக் கூட சமைத்துச் சாப்பிடும் சண்டியர்கள் காலமடா! ஒ.... இளைஞனே! உலகை இப்போது நீ மாற்ற மறந்தால் நாளை மனிதம் என்பது டைனசர் பற்றி நாம் படிப்பது போலாகிவிடும்... - sOliyAn - 03-29-2004 இந்தக்கால இளசுகள் என்ன....? என்ற - அந்தக்கால பழசுகளின் இழி சொல் இனி உனக்கு வேண்டாமே சமாதானப் புறாவினைக் கூட சமைத்துச் சாப்பிடும் சண்டியர்கள் காலமடா! ம்....!!!!!!!!!! யதார்த்தமான கவிதையாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|