Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனித படியாக்கம்
#1
மனித படியாக்கம்

கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலையில் ஸ்கோட்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஐயன் வில்முட், உலகின் ஒட்டு மொத்த கவனத்தை தன் பக்கம் திருப்பினார். உயிரனு விஞ்ஞானியான அவர், "டோ லி" எனும் ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியை படியாக்கம் மூலம் உருவாக்கி,
இப்படியும் நடக்குமா என உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்தினார்.

அவருடைய இந்த கண்டுபிடிப்புக்குப் பின், எத்தனையோ விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு மனித படியாக்கம் செய்ய விருப்பதாகவும், செய்து விட்டதாகவும் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர்.

ஆகக் கடைசியாக அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தாம் மனித படியாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் படியாக்கம் செய்யப்பட்ட மனிதனை உலகுக்கு அறிமுகப்படுத்த விருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

படியாக்கம் பற்றி கேள்வி பட்டிருந்தாலும், அது பற்றிய மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

<b>படியாக்க வரலாறு</b>

படியாக்கம் என்பது கடந்த 1970களிலேயே தொடங்கி விட்டது. தவலைகளையும் தலைப்பிரட்டைகளையும் அப்போதைய ஆய்வுகளில் பயன்படுத்தி வந்தனர். தாவர படியாக்கம் நல்ல பலனை தந்ததோடு அதன் தேவையின் காரணமாக உலக அளவில் நல்ல வரவேற்பும்
இருந்தது. நம் மலேசிய நாட்டிலும் கூட தாவர படியாக்கம் விரிவாக நடைபெற்று வருகிறது.

ஆனால் மனித படியாக்கம் பற்றி கடந்த 1996 வரை யாருமே யோசித்திருக்க வில்லை. "டோ லி" என்ற செம்மறி ஆடு படியாக்கம் செய்யப்பட்டதுதான் உலகின் முதல் பாலூட்டி வகைப் படியாக்கம் ஆகும். அதனைத் தொடர்ந்தே மனித படியாக்கம் பற்றி உலக விஞ்ஞானிகள்
சிந்திக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகளும் மனித படியாக்தில் ஆதரித்தும், எதிர்த்தும் குரல் கொடுக்கத் தொடங்கினர். சிலர் படியாக்க மனிதனை உருவாக்கி விட்டதாகவே கூறியிருந்தாலும் அது பற்றி நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் இதுவரையில் இல்லை.

<b>டோலி படியாக்கமும், மனித படியாக்கத்திற்கான அனுகூலமும்</b>

டோலி படியாக்தின் போது, ஒரு செம்மறி ஆட்டின் முழு வளர்ச்சியடைந்த உயிரனுவை (cell) எடுத்து அதிலிருந்து அதன் மரபனு தனியே பிரித்தெடுக்கப்பட்டது. பின்னர் அதே ஆட்டின் கருமுட்டையை எடுத்து அதிலிருக்கும் மரபனுக்கள்(DNA) தனியே பிரித்தெடுக்கப்பட்டன. அடுத்து
வளர்ந்த அனுவிலிருந்து எடுக்கப்பட்ட மரபனுக்கள் கருமுட்டையில் மரபனுவுக்கு பதிலாக உட்செலுத்தப்பட்டது. இறுதியாக அந்த கருமுட்டை ஆட்டின் வயிற்றில் செலுத்தி கரு வளரத் தொடங்கியது.


மேற்கண்ட முறை 277ஆவது தடவையாகத்தான் வெற்றியைத்தந்தது. டோ லி ஒரு ஆரோக்கியமான குட்டியாக ஜூலை 5 1996ல் பிறந்தது. டோலி படியாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட இம்முறை மனித படியாக்கத்திற்கு பொருந்தாது. காரணம் மனித படியாக்கம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இம்முறையை உபயோகித்தால், பலவீனமான அல்லது முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதன் உருவாகக் கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சினர். ஆரோக்கியமாக பிறந்த டோ லி ஆடு இரண்டே ஆண்டுளில் மாண்டது என்பது குறிப்பிடத்தக்கது.



<b>மனித படியாக்கத்தின் விளைவுகள்</b>


வளர்ச்சி அடைந்த உயிரனுக்கள் இருந்து எடுக்கப்படும் மரபனுக்கள் வளர்ச்சி அடையும் தன்மையை இழந்திருக்க கூடும். குறிப்பாக வளர்ந்த மனிதனின் உயரம், பருமன், உடலமைப்பு போன்ற அம்சங்கள்னொரு குறிப்பிட்ட வயதில் நின்று போவதால், சம்பந்தப்பட்ட மரபனுக்களும்
தங்கள் பணியை நிறுத்தியிருக்கக் கூடும். எனவே அந்த மரபனுக்களை மீண்டும் செயல்பட வைப்பது இயலாதது.

படியாக்க மனிதன் உருவாக்கப்பட்டாலும், படியாக்க மனிதனும், மரபனுவுக்கு சொந்தக்காரனான அசல் மனிதனும் அசல் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். படியாக்க மனிதன், அசல் மனிதனின் இள வயது நகல் போலத்தான் தோற்றமளிப்பான். ஒட்டிப் பிறந்த இரட்டையருக்கு
கைரேகைகள் வெவ்வேறாக இருப்பது போல் அசல் மற்றும் நகல் மனிதனுக்கும் வெவ்வேறான கைரேகைகளே இருக்கும் சாத்தியம் உண்டு.

<b>மனித படியாக்கத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறப்படும் கருத்துக்கள்</b>

மனித படியாக்கம் பல வகை மனித நோய்களை குறிப்பாக பரம்பரை நோய்களைப் பற்றிய ஆய்வுகளை நடத்த உதவியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. புற்று நோய், வயோதிகத்தன்மை, மரபியல் நோயக்கள் போன்றவற்றின் ஆராய்ச்சிக்கும் இது தேவையானது என ஒரு சாரார் கருதுகின்றனர்.

<b>மனித படியாக்கத்தால் ஏற்படக் கூடும் தீய விளைவுகள்</b>

டோ லி படியாக்கதில் வெற்றி கண்ட வில்முட் இது பற்றி கூறுகையில், மனித படியாக்கம் தவறான பாதைக்கு இட்டு செல்லக் கூடும். படியாக்க குழந்தைகள் இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அதே வேளையில் மாறுபட்ட மனிதர்கள் பிறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்
இருக்கின்றன என்கிறார்.

மனித படியாக்கம் சம்பந்தமான ஆய்வுகள் அதிகரித்தால், வளர்ச்சி அடைந்த கருவின் தேவை அதிகரிக்கக் கூடும். இதனால் வளர்ச்சியடைந்த கருவைப் பெற தவறான அணுகுமுறையும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

படியாக்கம் வெற்றி பெற்றால், படியாக்கம் செய்யப்பட்ட குழந்தை வயதுக்கு மீறிய வளர்ச்சியை கொண்டிருக்கக் கூடுமென ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். படியாக்கம் செய்யப்பட்ட குழந்தை வளர்ச்சியடைந்த மனிதனின் மரபனுக்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டிருந்தால்,
அக்குழந்தை வளர்ச்சியடைந்த மனிதனைப் போன்று வயதான தோற்றத்தில் இருப்பாதோடு, விரைவில் முதுமையடைந்து, முதுமை சார்ந்த நோயுக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு.

மனித படியாக்கம் என்பது மிக கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மனித நெறிகளுக்கு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் வாயுப்பு கொண்டிருக்கிறது. சில அனுகூலமான விஷயங்கள் அதில் இருந்தாலும், உலகலாவிய நிலையில் அதனை கட்டுபடுத்த வேண்டியது மிக
அவசியமாகிறது. மேலும் தற்போதைய அறிவியல் வளர்ச்சி மனித படியாக்கத்திற்கான போதுமான சாத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்றே சொல்லலாம். சில தவறானவர்களால் தவறான முறையில் உபயோகிக்கப்பட்டுள்ள டைனமைட், அனு சக்தி, உயிரியல் மற்றும் இராசாயன
ஆயுதங்கள் போன்று அறிய அறிவியல் பொக்கிஷங்கள் போன்று படியாக்கமுறையும் ஆகாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பாடுபாட வேண்டும்.

நன்றி - VM
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)