Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 638 online users.
» 0 Member(s) | 637 Guest(s)
Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,552
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  விருது விழாவை பகிஷ்கரித்த சிங்கள இயக்குனர்
Posted by: AJeevan - 07-28-2005, 07:54 PM - Forum: சினிமா - Replies (7)

<b>வெலிக்கடை படுகொலையைக் கண்டித்து விருது விழாவை பகிஷ்கரித்த சிங்கள இயக்குனர்</b>

<img src='http://www.geocities.com/thisismymoon/Comments/MiddlePicture4.gif' border='0' alt='user posted image'><img src='http://www.geocities.com/thisismymoon/Director/Directoersphothgraph.gif' border='0' alt='user posted image'>
<b>THIS IS MY MOON</b>
<span style='color:brown'>வெலிக்கடை படுகொலையைக் கண்டித்து நேற்று முன்தினம் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழாவை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனர் அசோகா ஹந்தகம பகிஷ்கரித்துள்ளார்.

அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் மூலமே தனது பகிஷ்கரிப்பு அறிவித்தலை தெரியப்படுத்தியிருந்தார். இக்கடிதம் மேற்படி விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

இந்த விழாவில் எனக்கு வழங்கப்படும் விருது பணமான 150,000 ரூபாவை 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட யாழ். நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்குகின்றேன். குட்டி மணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 தமிழ் இளைஞர்கள் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.

அன்று நடந்த இந்த அநீதியைக் கண்டித்து ஜூலை 27 ஆம் திகதி நடைபெறும் இவ்விருது வழங்கும் விழாவை பகிஷ்கரிக்கின்றேன். தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகவே அவர்கள் அன்று கொலை செய்யப்பட்டனர். அவர்கள் செய்த தவறு தமிழர்களாகப் பிறந்ததுதான்.இந்த அநீதியான சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இன்று சுனாமி கட்டமைப்பை உறுதியாக நின்று கைச்சாத்திட்ட ஜனாதிபதியைப் பாராட்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\"\"திஸ் இஸ் மை மூன்'' எனும் அவருடைய திரைப்படம் ஐந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[quote]
<img src='http://www.geocities.com/thisismymoon/Comments/MiddlePicture10.gif' border='0' alt='user posted image'>
Asoka Handagama's latest film is the one, which would take the Sinhala Cinema into the New Millennium. This is a daring film, which has the honesty, and the courage to face a controversial issue straight in the face with a cool clinical objectivity laced however with a deep humanism. THIS IS MY MOON is a cruel yet beautiful film. Handagama, apart from handling a most sensitive subject with a maturity rare among the younger film makers of this country, has successfully broken away from the straightjacket of classical cinema without losing clarity and intelligibility, a price most other film makers had to pay in attempting the same. Here is a film that deserves to be given maximum exposure in the international art cinema circuit.

Tissa Abeysekara

Chairman

National Film Corporation

more about film:
http://www.geocities.com/thisismymoon/Comm...untitled17.html </span>

Print this item

  வணக்கம் கள உறவுகளே..
Posted by: kadalai - 07-28-2005, 10:10 AM - Forum: அறிமுகம் - Replies (35)

யாழ் களத்துக்கு நான் புதியவன் ! என்னை வரவேற்க வேண்டுகிறேன்..

பி.கு = எழுதுப்பிழை இருந்தால் மன்னிகவும் அத்துடன் திருதவும்.

Print this item

  வவுனியா தீர்மானம் தேசியத் தலைவரிடம் கையளிப்பு
Posted by: தமிழரசன் - 07-28-2005, 10:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும், அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் எடுத்துக் கூறும் வவுனியா தீhமானங்கள் இன்று தமிழீத் தேசியத் தலைவர் அவர்களிடம் வழங்கப்படுவதற்காக கிளிநொச்சியில் கையளிக்கப்பட்டுள்ளது.


வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட 14 தீர்மானங்களை, சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்தும் செய்யும் பிரதிநிதிகள் இன்று நண்பகல் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் கையளித்தனர்.

தமிழ் மக்கள் சார்பில் திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் ச.விக்கினேஸ்வரன் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கனிடம் அதனைக் கையளித்தார்.
<img src='http://www.battieezhanatham.com/news/07/28b.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.battieezhanatham.com/news/07/28a.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  அரும்பும் விழியோடு அடைகிறேன் சரண்.....!
Posted by: kuruvikal - 07-28-2005, 03:24 AM - Forum: கவிதை/பாடல் - Replies (31)

<img src='http://img288.imageshack.us/img288/9410/dream2wn.jpg' border='0' alt='user posted image'>

<b>அநாதையாய்
அலைந்த என்னை
அன்னையாய் அரவணைத்தாய்
அன்பு கொண்டு ஆதரித்தாய்
அடைக்கலமும் தந்தாய்
அடுத்த நிலையில்..
அடிக்கவும் செய்கிறாய்
அணைக்கவும் செய்கிறாய்
அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....!

அற்பன் இவன் அரிகண்டம்
அறியாமல் அரும்ப வைக்கும்
அன்புக்குரியவள் கருவிழியில் நீர்..!
அது கண்டு அழும் அவன் இதயம்
அன்புக் கரம் நீட்டும்
அழுவிழி அணைத்திட..!
அகத்தால் உனை வருத்தும்
அயோக்கியனாய் என்னிலை
அகத்திருந்து வந்ததில்லை..!
அநியாயமாய் கலங்கடித்து
அகம் மகிழ்ந்ததில்லை
அதற்காய்
அன்பு வைக்கவும் இல்லை..!
அழ வைக்கும்
அறியாத் தவறுக்காய்
அடைகிறேன் உன்னிடம் சரண்
அன்புச் சபையில் தீர்ப்பென்னவோ
அன்பே தந்துவிடு...!</b>

Print this item

  தாயகத்திலிருந்து சிங்களப்படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் -
Posted by: Sriramanan - 07-27-2005, 06:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

எமது தாயக நிலத்தையும் கடலையும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவம் எமது மண்ணை, கடலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும், அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளனர் என்றும் வவுனியாவில் இன்று இடம்பெற்று நிறைவடைந்துள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எழுச்சிப் பிரகடனத்தில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையையும் சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பிரகடனத்தின் முழு விபரமும் வருமாறு:-

தென்னிலங்கையில் இன்று பயங்கரமான சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இது தமிழ்பேசும் மக்களின் சனநாயக வழியில் அமைந்த எந்தவொரு தீர்வுக்குமான கதவுகளையும் முற்றாக மூடியுள்ளது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களாகிய நாம் இன்று அடைந்துள்ள அவலமானதும் ஆபத்தானதுமான நிலையை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தையும் அங்கீகாரத்தையும் கோருகின்றோம்.

தமிழ்பேசும் மக்களாகிய நாம் இலங்கைத்தீவினை ஐரோப்பியர் ஆக்கிரமிக்க முன்னர் தனியரசாக இருந்து வந்துள்ளோம். 1833ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையில் ஒற்றையாட்சி முறையைப் புகுத்தியபோது தமிழர் தாயகம் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டது. அப்பொழுது அது தன் இறைமையை இழந்ததையும், அதன்பின் 1948இல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர் வெளியேறியபோது தமிழ் பேசும் மக்களின் இறைமையை எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவரிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வாறு சிங்களச் சமூகம் முறையற்ற வகையில் பெற்றுக்கொண்ட இறைமையின் மூலம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மிக அநாகரிகமான முறையில் தமிழ்பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். குடியுரிமை சட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தனிச்சிங்கள சட்டத்தின் மூலம் மொழியுரிமையும், வேலைவாய்ப்பு உரிமையும் பறிக்கப்பட்டது. கல்வித் தரப்படுத்தல் சட்டம் மூலம் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன மூலம் முழு மனித உரிமையும் மறுக்கப்பட்டது. எமது பாரம்பரிய வாழ்விடங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக நிலச் சூறையாடலுக்குட்பட்டு எமது குடித்தொகைப் பரம்பல் முற்றாகச் சிதைக்கப் பட்டது. இவ்வாறாகத் தமிழ்பேசும் மக்களாகிய எமது வாழ்வுரிமை பறிக்கப்பட்டது.

சட்டங்கள் மட்டுமன்றி இலங்கைத்தீவின் அரசியல் யாப்புக்களுமே இனவாத ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. சோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட 29ஆவது பிரிவு பின்னர் 72ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசு யாப்பின் மூலம் நீக்கப்பட்டது. இந்த யாப்பில் பௌத்தமதம் அரசாங்க மதமாக்கப்பட்டு இன ஒடுக்குமுறைக்கான யாப்பு வடிவமாக்கப்பட்டது. 78ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பிலும் இது மேலும் தீவிரமாக்கப்பட்டது. எனவே நீதி வழங்கப்பட வேண்டிய அரசியல் யாப்பு அநீதியின் உறைவிடமானது.

இத்தகைய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை அங்கீகரிக்கப்பட்ட நாகாPகமான அரசியல் வழிமுறைகளையும் மென்முறைப் போராட்ட வடிவங்களையும் கைக்கொண்டது. அவற்றினைத் தணிவிக்கும் முகமாகச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒப்பந்தங்கள் செய்வதையும் பின் அவற்றினைக் கிழித்தெறிவதையும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தையும் 1965ஆம் ஆண்டு டட்லி - செல்வா உடன்படிக்கையையும் இதற்குச் சான்றாக வைக்கின்றோம். இவ்வாறாக மென்முறைப் போராட்ட வடிவங்களைக் கைக்கொண்ட பொழுது எம்மக்கள் மீது மிக மோசமாக வன்முறைகள், இனப்படுகொலைகள், பாலியல் கொடூரங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் 70களின் முற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ் மக்களின் தற்காப்புக்கும் விடுதலைக்குமான போராட்டத்துக்கு தமிழர் தரப்பு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

எனவே, அமைதிவழியில் அரசியல் தீர்வுகளை எட்டுவது இயலாது என்பதை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், 1976ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர். பின்னர் அரசியல் அரங்கில் அதற்கான மக்கள் ஆணையை 1977ஆம் அண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டனர்.

ஆயுதம் தாங்கி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் தமிழ் மண்ணையும் தமிழ் பேசும் மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஆற்றல் மிகுந்த சிறந்த ஒரு தேசியத் தலைவரையும் ஒரு மரபுவழிப் போரை நடத்தவல்ல படையணிகளையும் கண்டு நிமிர்ந்தெழுந்தோம். இதன்மூலம் இலங்கைத்தீவில் ஒரு தனித்தேசிய இனமாகத் தமிழ்மக்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்னும் உண்மையை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தோம். இப்போராட்ட காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பும் இன அழிப்பும் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டன. கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுக்கள், ஆகியன பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அடிக்கடி நடத்தப்பட்டு எமது மக்கள் பச்சிளம் பாலகர் முதல் முதியோர்வரை கோரமாகப் பலியெடுக்கப்பட்டனர்.

பலவிதமான இராணுவ நடவடிக்கைகளாலும் சொந்த மண்ணிலிருந்து தமிழ்மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு, ஏதிலிகளாக அலைக்கப்பட்டனர், இத்தகைய அரச பயங்கரவாதக் கொடூரங் களையெல்லாம் ‘அரசு| என்ற முகத்திரை கொண்டு சர்வதேச சமூகத்திற்கு முன் சிங்கள பௌத்த பேரினவாதம் மூடி மறைத்தது. ஆயினும், எமது விடுதலைப் போராட்டம் ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றிகளைக் குவித்தது. இந்த வெற்றிகளின் பின்னால் தமிழ்மக்கள் அனைவரும் பொங்கு தமிழர்களாய் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப்போருக்குத் தோள்கொடுத்தனர்.

இந்த வரலாற்றுப் போக்கில் தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு என்றொரு நடைமுறை அரசுக்கான கட்டுமானங்கள் நேர்த்தியான முறையில் கட்டியெழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தினால் வெல்லமுடியாது என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்து கொண்டது. சமகாலத்தில் சர்வதேச சமூகம் இவ் இன முரண்பாட்டை அமைதிவழியில் தீர்ப்பதற்கான வாய்ப்பை எமது தேசியத் தலைமையிடம் கோரியது. எமது தேசியத் தலைமை தாமாக முன்வந்து யுத்தநிறுத்தம் செய்துகொண்டது.

வேறு வழியின்றியும் சர்வதேச அழுத்தம் காரணமாகவும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்த உடன்பாடு செய்ய முன்வந்தது. அதன்படி 22.02.2002ஆம் நாளில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்காவின் பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களும் கையொப்பமிட்டு ஒரு யுத்தநிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆறுசுற்றுப் பேச்சுக்கள் நடாத்தப்பட்டன. இப்பேச்சுக்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களைச் சிங்கள அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. இதனால் நேரடிப் பேச்சுக்கள் நின்றுபோக இடைக்கால யோசனையாக இடைக் காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு முன் வைக்கப்பட்டது. இதுபற்றியும்; தொடர்ந்து பேச சிறிலங்கா அரசு முன்வராததால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வ தற்கான சாத்தியங்கள் முற்றாக அருகிப்போயின.

இவ்வாறாக கடந்த மூன்றரை ஆண்டுகளாய் தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கான எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப் போய்விட்டன. சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் வளம்நிறைந்த எமது சொந்த நிலங்களும் செல்வம் கொழிக்கும் எமது கடல் வளமும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ளது.

இறுதியாக உலகை உலுக்கிய சுனாமிப் பேரழிவுக்குப் பின்னரும் சிங்கள மேலாதிக்கப் போக்கு மாறவில்லை என்பதை சுனாமி அனர்த்த நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு நேர்ந்த விபத்து நிரூபித்தது. மனிதப் பேரழிவு அவலங்களால்கூட சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்குள் இறுகிப்போயிருக்கும் நெஞ்சுகளை மாற்றமுடியாது என்பதனை உலகம் கண்டு கொண்டுள்ளது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பதவிக்கான போட்டியில் சிங்கள அதிகாரவர்க்கம் முற்றாகச் சிக்கியுள்ளது. மீண்டும் ஒரு யுத்தத்தின் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதற்கான படைக்கலப் பெருக்க நடவடிக்கைகளையும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் அவர்கள் செய்து வருகின்றார்கள். இவை யாவும் சமாதான நடைமுறைக்கான சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு இலங்கைத் தீவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கின்றோம். இந்த உண்மைகளை சர்வதேச சமூகமும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கால நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொண்டிருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

இந்த உண்மை நிலையின் காரணத்தினால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். எனவே எமது தாயக நிலத்தையும் கடலையும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவம் எமது மண்ணை, கடலை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்றும்,

எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும்,

அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் இவ் எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும் அதேவேளை,

தமிழ் பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும் சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு எமது மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும் எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம்.

நன்றி: ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு

Print this item

  இராணுவத்தினரின் வெறிச்செயல்:வவுனியாவில் குண்டு வெடிப்புகள்!
Posted by: தமிழரசன் - 07-27-2005, 05:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழர் விடுதலைப் பிரகடன மாநாடு நடைபெறும் வவுனியாவில் சிங்கள இராணுவத்தினரால் மேலும் இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியுள்ளனர்.இன்று பிற்பகல் வவுனியா பிரகடன மாநாட்டு அண்மித்த பகுதியில் முதல் குண்டு வெடித்தது.
மாலை 5.45 மணிக்கு கிளைமோர் ரகக் குண்டு அதே இடம் அருகே வெடித்தது.மீண்டும் மாலை 6.15 க்கு வவுனியா குருமன்காடு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் அருகே மூன்றாவது குண்டுவெடித்தது.

மூன்று குண்டுவெடிப்புகளிலும் காயமடைந்தோர் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

தமிழர் மாநாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சிங்கள இராணுவம் நடாத்தி வரும் இந்த தாக்குதல் குண்டுவெடிப்புகள் குறித்து மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரதேச தமிழினப் பிரதிநிதிகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
puthinam

Print this item

  வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு
Posted by: vijitha - 07-27-2005, 03:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு பேரெழுச்சியோடு தொடங்கியுள்ளது</b>

தமிழீழத் தாயகத்தின் விடுதலைப் பிரகடனத்துக்கு கட்டியம் கூறுகிற 2 ஆவது வட்டுக்கோட்டை மாநாடு என்றழைக்கப்படுகிற வவுனியா பிரகடன மாநாடு இன்று பேரெழுச்சியோடு வவுனியாவில் தொடங்கியுள்ளது.

http://www.eelampage.com/?cn=18911

Print this item

  யாருக்கு யாரோ..
Posted by: SUNDHAL - 07-27-2005, 03:35 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

கோவையில் உள்ள ஆதரவற்ற பெண்ணை கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் திருமணம் செய்தார்.

கைத்தட்டினால் கைகூப்பி வாpசையாக நிற்கும் வேலையாட்கள், கண் அசைத்தால் கலர் கலரான கார்கள், நேரத்துக்கு ஒரு டிரெஸ். இதுபோன்ற சொகுசு வாழ்க்கைக்கு ஏங்காத பெண்கள் இந்த உலகில் இல்லை. ஆனால் இந்த சொகுசு வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு அன்பை தேடி அலைந்த 9வயது சிறுமிக்கு அடைக்கலம் தந்தது கோவையை அடுத்த போத்தனு}hpல் உள்ள குழந்தைகள்; குடும்பம்.

செடியாக வந்த அந்த சிறுமி 15ஆண்டுக்கு பின்னர் இன்று வளர்ந்து ஆளாகி பூத்து குலுங்கும் பூமரமாகி நிற்கிறhர். அவரது பெயர் திஷhசி;ங் ஹhனியா. தற்போது 24வயதாகும் இவர் தங்க பதுமைபோல் காட்சி தருகிறhர். இவரை குழந்தைகள் குடும்பத்தினர் செல்லமாக …ரோசலின்† என்றே அழைக்கிறhர்கள். இவரது பெயரே இவர் வடஇந்தியாவை சேர்ந்தவர் என்பதை உறுதிப் படுத்தும். ஆம், இவரது சொந்த ஊர் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்.

இவரது பெற்றேhர் பாபுலால் சிங் ஹhனியா-கவுசம் சிங்ஹh னியா. இவர்கள் ஷில்லாங்கில் பொpய தொழில் அதிபர்களாக விளங்குகிறhர்கள். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் கடைசிபெண்தான் ரோசலின். நாம் ஆரம்பத்தில் வர்ணித்தது போன்று இருந்தது ரோசலின் வீட்டின் நிலைமை.

ஆனால் ஆடம்பரம் கிடைத்த அவரது வீட்டில் அன்பு கிடைக்க வில்லை. பிசினஸ் பிசினஸ் என்று தந்தை கம்பெனியே கதி என்று கிடக்க, தாயோ லேடிஸ் கிளப் அந்த கிளப் இந்த கிளப் என்று கிளம்பி விடுவார். ரோசலினை பாலு}ட்டி, சீராட்ட அவர்களுக்கு நேரம் இல்லை. எல்லாமே ஆயா தான். ஆயாவிடம் எல்லாம் அன்பை எதிர்பார்க்க முடியாது என்பது அந்த சின்ன வயதிலேயே ரோசலினுக்கு தொpய வந்தது. இதையடுத்து தனது 9வயதில் யாhpடம் சொல்லாமல் கொள்ளாமல் கூண்டைவிட்டு பறந்து செல் லும் சுதந்திர பறவையைப் போல் பறந்தார். விதியின் சதியால் அவர் கோவை வந்தார். ஆனால் அன்புக்கு ஏங்கிய ரோசலினுக்கு கடவுளின் அனுக்கிரகம் இருந்ததால் கயவர்கள் கையில் சிக்கிவிடாமல் புத்தம் புதிய பூவாக போத்தனு}ர் குழந்தைகள் குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இதற்கிடையே தங்களது மகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றேhர் போலீசில் புகார் செய்து நாடுமுழு வதும் தேடினார்கள். கடைசியில் காவல் துறையினாpன் உதவியால் ரோசலின் போத்தனு}ர் குழந்தைகள் குடும்பத்தில் இருப்பது தொpய வந்தது. இதையடுத்து அவர்கள் இங்கு வந்தனர். அவர்கள் ரோசலினிடம் தங்களுடன் வருமாறும், இனி மேல் உன்னை பாசமாக பார்த்துக் கொள்கிறேhம் என்றும் கூறினார்கள். ஆனால் ரோசலின் அவர்களின் பேச்சை நம்ப தயாராக இல்லை. குழந்தைகள் குடும்பத்தில் இருந்த நு}ற்றுக்கணக்கான குழந்தைகள் அவாpடம் காட்டிய அன்பால் அவர்களையே தனது உடன்பிறந்த சகோதாpகளாகவும், காப்பக நிர்வாகிகளை தனது பெற் றேhராகவும் நினைக்க தொடங்கினார். பெற்றேhர் எவ்வளவோ கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் பார்த்தனர். ஆனால் ரோசலின் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி பெற்றேhர் ரோசலினை இங்கேயே விட்டு விட்டு ஷில்லாங் சென்று விட்டனர். குழந்தைகள் குடும்பத்தில் இருந்த ரோசலின் படிப்பில் சுட்டியாக விளங்கினார். பி.காம். மற்றும் கம்ப்யூட்டர் கல்வியில் பட்டம் பெற்ற அவர் பியூட்டிசியன் தொழிலிலும் சிறந்து விளங்கினார்.

யாருக்கு யாரோ, அவர் எங்கே பிறந்து இருக்கிறhரோ.. என்பதை போல் ரோசலினை வாழ்க்கை துணையாக ஏற்க முன்வந்தார் கனடா நாட்டை சேர்ந்த லு}க் கேமண்டி. 29வயதான இவர் அங்குள்ள க்யூபெக் மாகாணாத்தில் பொக்கான்ஸ் பீண்டு என்ற இடத்தில் உள்ள மிகப்பொpய ஆடை தயாhpப்பு நிறுவனத்தின் உhpமையாளர் மகன் இவர். இவரது பெற்றேhர் பரான்க்-டினா.

இந்திய கலாச்சாரத்தை பற்றி நம்மவர்களுக்கு தொpகிறதோ இல்லையோ மேலைநாட்டவர்க ளுக்கு நன்றhக தொpந்து இருக்கிறது. லு}க்கேமண்டி இந்திய கலாச்சாரத்தின் மீது பற்றுகொண்டவர். தனக்கு வாழ்க்கை துணையாக வருகிற பெண் இந்திய கலாச்சாரத்தை முழுமையாக கடை பிடிப்பவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். அவரது எண்ணத்தின் வடிவாக இருந்தார் ரோசலின்.

ரோசலினை பற்றி முழுமையாக விசாhpத்த லு}க் கேமண்டி மணந்தால் இவரைத்தான் மணப்பேண் என்று உறுதியாக கூறிவிட்டார். ரோசலினுக்கும் இவரை பிடித்து விட்டது. இதுதொடர்பாக ரோசலினின் பெற்றேhருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் இந்த திருமணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதித்தனர். இதையடுத்து இந்து முறைப்படி இவர்களது திருமணம் கடந்த 22-ந்தேதி மாலை 6 மணிக்கு குழந்தைகள் குடும்பத்தில் நடந்தது. இந்த திருமண விழாவில் பெற்றேhர்கள், நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் குடும்பத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் என்று 500-க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த திரும ணத்தால் குழந்தைகள் குடும்பமே விழாக்கோலம் பூண்டது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்காpக்கப்பட்டது. முகப்பு வாயிலில் தோரணங்கள், வாழைகள் கட்டப்பட்டு இருந்தது. விருந்து உபசாரத் துக்கு பின்னர் தனது புதுமனைவியை அழைத்து கொண்டு கனடா செல்ல இருக்கிறhர் லு}க் கேமண்டி.. இதுகுறித்து அவர் கூறுகையில்,

கனடா போன்றமேலை நாடுகளில் கலாச்சாரம், அன்பு- பாசம் எல்லாம் தேடி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். கலாச்சாரம், அன்பு, பாசம், குறிப்பாக குடும்ப பாச உறவுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதால் எனக்கு வாழ்க்கை துணையை தமிழ்நாட்டில்தான் தேர்வு செய்வேன் என்று முடிவுசெய்தேன். அதன்படி எனது வாழ்க்கை துணையை தேடிகொண்டு உள் ளேன். இதற்கு எனது பெற்றேhரும் முழு சம்மதம் தொpவித்தனர் என்றhர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை கள் குடும்ப பொறுப்பாளர் சம்பீம் விஸ்வநாதன் செய்து இருந்தார்.

Print this item

  வாழ்க்கை
Posted by: SUNDHAL - 07-27-2005, 03:06 PM - Forum: கவிதை/பாடல் - Replies (29)

வாழ்க்கை என்பது வரலாறு

அதில் என்ன உனக்கு தகராறு.

வாழ்க்கை என்பது வட்டம்

அதில் என்ன உன் திட்டம்.

வாழ்க்கை என்பது மின்சாரம்

அதில் எங்கே என் அம்சம்.

வாழ்க்கை என்பது நினைவு

அதில் என்ன உன் கனவு.

வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம்.

அப்போது நிறைவேறும் உன் லட்சியம்.

Thnaks: ம.சிவகங்கை

Print this item

  பாசத்துக்கு முன் பணம் எம்மாத்திரம்!
Posted by: SUNDHAL - 07-27-2005, 02:33 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

<b>பணம் என்ன பணம்! பாசத்துக்கு முன் பணம் எம்மாத்திரம்!</b>

முதுமையடைந்த தாய், நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இவரின் மகள்மார் வெளிநாடுகளில் நல்ல வசதியாக வாழ்கிறார்கள்.

தாய் நோயுற்றதைக் கேள்விப்பட்ட மகள்மார் ஒவ்வொருவரும் இங்குள்ள உறவினர் ஒருவருக்குப் பணம் அனுப்பி, தாய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கும் படியும் அவரை நன்கு கவனிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.

பணம் வந்துகொண்டிருந்ததால் அந்த மூதாட்டிக்கு சிகிச்சையுடன் நல்ல கவனிப்பும் கிடைத்தது. ஆனாலும் அவருக்கு மனநிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை.

மகள்மாரைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பார்.

இச்செய்தி மகள்மாருக்கு எட்டினாலும், அவர்கள் பணம் அனுப்பினார்களே தவிர, வந்து பார்க்கவில்லை. இந்த நிறைவேறாத அவாவுடன் அந்த மூதாட்டி இவ்வுலகத்தை விட்டே போய் விட்டார்.

பணம் என்ன பணம்! பாசத்துக்கு முன் பணம் எம்மாத்திரம்!

Thanks:Thinakural

Print this item