Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 663 online users.
» 0 Member(s) | 661 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,438
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு
Posted by: kirubans - 07-29-2005, 10:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

ஊர் அரசியல் நடப்புக்களைப் பற்றி நகைச்சுவைக் கட்டுரைகளைப் படிக்கவேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருபவர் கனடாவில் இருந்து ஆங்கிலத்தில் அரசியல் கட்டுரைகள் (கதைகள்) எழுதும் டி.பி.எஸ் ஜெயராஜ்தான். இவர்தான் போன வருடம் கருணா புலிகளோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்து தனது கிளர்ச்சியைக் கைவிட்டார் என்று சொன்னவர். இவ்வருட ஆரம்பத்தில் கருணா மீண்டும் மட்டக்களப்பை தனது சதிமுயற்சி முடிவுக்கு வந்த ஓராண்டு நிறைவுக்குள் பிடிப்பாரென்று கதையளந்தார். ஏப்பிரலும் போய்விட்டது, டி.பி.எஸ் சொன்னது எதுவும் நடக்கவில்லை. என்றாலும் மனுஷன் சலிக்காமல் கருணா குழுவின் தாக்குதல்களால் புலிகள் கிழக்கை இழந்துவிட்டார்கள் என்று போனவாரம் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அவரின் பார்வையில் மட்டக்களப்பில் தற்போது தமிழ் அலை மீண்டும் விற்பனையாகின்றது, ஈழநாதம் இணையப் பத்திரிகையாகத்தான் வருகின்றது.

சண்டே ரைம்சில் எழுதும் இக்பால் அத்தாஸ் (இவர் எழுதுவதை வாசித்தால், அவர் கூடவே இருந்து பார்த்தமாதிரி எழுதுவார். ஏன் துப்புக் கொடுக்காமல் எல்லாம் நடந்து முடிந்தபின் எழுதுகிறார் என்று தெரியவில்லை) மட்டக்களப்பில் நடப்பதை ஓரளவு உண்மையாக எழுதியுள்ளார். அவரின் பார்வையில் கிழக்கில் புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதால், சகல புலனாய்வாளர்களும் முகாம்களுக்குள் இருக்குமாறு பணிக்கப்பட்டுளனர்களாம். கருணா குழுவை வழிநடாத்தும் கபில ஹெந்தவிதாரணவுக்கே ஆபத்து என்று அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும் கிழக்கில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் ஜே.வி.பியினருக்கு ஆதரவளிக்கும் கீழ்மட்ட இராணுவத்தின் (மற்றும் அதிரடிப்படையின்) வேலையென்று சந்திரிக்காவே சந்தேகப்படுகின்றாவாம். இது கனடாவில் இருந்து பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் டி.பி.எஸ் இன் கருத்துக்கு முரணாக உள்ளது.

Print this item

  பிரியமானவனே!!
Posted by: Rasikai - 07-29-2005, 09:28 PM - Forum: கவிதை/பாடல் - Replies (41)

என்னவனே!!
என் இதயச் சுவர்களில் எல்லாம்
உன் பெயரையே
எழுதி வைத்துள்ளேன்
நான் சிந்திக்கும் எந்த
வேளையிலும் உன்னையும்
சந்திக்கிறேன்!
பிரியமானவனே!!
பெருமைகள் நிறைந்த
இவ்வுலகத்தில் நாம் இருவரும்
ஏற்ரிய நட்பு சுடர்
அழியாமல் எரிந்திட வேண்டும்!
நண்பனே!
எத்தனை தடவை
ஜென்மம் எடுத்தாலும் நாம்
பிரியாத வரம் வேண்டும்!!!

Print this item

  வந்த மகராசிகள் சாதித்து விட்டார்கள்!
Posted by: SUNDHAL - 07-29-2005, 04:51 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

அது ஒரு சாதாரண குடும்பம். யாழ்ப்பாணத்தில் போர்நிகழ்ந்த காலத்தில் தங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி அகதிகளாக இந்தியா சென்றனர்.

பிள்ளைகள் மூவரும், உறவினர்களின் உதவியுடன் ஐரோப்பிய நாடொன்றுக்குள் எப்படியோ நுழைந்து தங்கியிருந்து உழைக்கத் தொடங்கினர்.

அங்கிருந்து பெற்றோருக்குக் கிரமமாக பணம் அனுப்பிக்கொண்டிருந்தனர். சிக்கனமாக வாழ்ந்துவந்த தாய், இப்போது ஆடம்பரச் செலவுகளில் நாட்டம் செலுத்தத் தொடங்கினார். பழைய நிலையை மறந்தேபோய்விட்டார்.

இந்நிலையில் மகன்மார் இருவருக்கு கல்யாணம் நடந்தது. ஆயினும் இவர்கள், இந்தியாவிலுள்ள பெற்றோருக்கு பணம் அனுப்பிக்கொண்டேயிருந்தனர்.

இருவரின் மனைவியரும் நச்சரிக்கத் தொடங்கினர் "உங்கள் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்தியாவில் இவ்வளவு செலவா? அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கே போகச் சொல்லுங்கள்" என்றனர்.

இலங்கை திரும்பிய பெற்றோருக்கு வரவர பணம் குறைந்துகொண்டே வந்ததால் தாயின் ஆடம்பரச் செலவுகளும் குறையத் தொடங்கியது.

வந்த மகராசிகள் சாதித்து விட்டார்கள்!

Thanks:Thinakural

Print this item

  அச்சுவேலியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
Posted by: தமிழரசன் - 07-29-2005, 04:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் குடும்பஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் அச்சுவேலி சந்திக்கு சமீபமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அச்சுவேலி சங்கானை வீதியைச் சேர்ந்த பிலிப்பையா பேர்னாட் ஜெயராஜா (வயது 56) என்பவரே கொல்லப்பட்டவராவார்.

குறிப்பிட்ட நபரின் சடலம் அச்சுவேலி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
PUTHINAM

Print this item

  அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு
Posted by: vasisutha - 07-29-2005, 03:47 PM - Forum: விளையாட்டு - Replies (25)

<b>அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு</b>


இலங்கையில் வரும் 30ம் தேதி முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளதால் மூன்று அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர். காரணம் மேற்கு இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களான லாரா உட்பட பலர் இடம் பெறவில்லை. இலங்கையை பொறுத்த வரையில் அந்த அணி முரளிதரனின் மாயாஜால பந்து வீச்சை தான் நம்பியுள்ளது.

<img src='http://img56.imageshack.us/img56/4366/27srilanka9hm.jpg' border='0' alt='user posted image'>

இந்த அணிகளுடன் இந்திய அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று சிறந்த அணியாக காட்சியளித்தாலும், கடந்த ஒராண்டு காலத்தில் இந்திய அணி எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இடம் பிடித்து இருக்கும் வீரர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றாலும் அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கள் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை. 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி, இலங்கையை பெரும் அளவில் பதம் பார்த்தது.

இந்திய ஆட்டக்காரர்களில் டிராவிட் மட்டுமே இலங்கைக்கு எதிராக 15 போட்டிகளில் 400 ரன்கள் மேல் எடுத்துள்ளார். மற்ற ஆட்டக்காரர்களான ஷேவாக், யுவராஜ், கைப், ஆகியோர் சொல்லி கொள்ளும் அளவுக்கு இலங்கைக்கு எதிராக சாதிக்கவில்லை.


<b>நடந்து முடிந்த இலங்கை, மேற்கு இந்திய தீவுகளுக்கான டெஸ்டில் முரளிதரனின் ஆதிக்கம் பிரமிக்க வைக்கிறது. இவர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி தரக்கூடும். தோள்பட்டை காயம் காரணமாக 11 மாத இடைவெளிக்கு பின்னர் களம் திரும்பி சிறந்த முறையில் பந்து வீசுவதால் அது மற்ற வீரர்களுக்கு சற்று மனவலிமையை கண்டிப்பாக கொடுக்கும். ஆட்டத்தை பொறுத்தவரை மனவலிமை மிக அவசியமான ஒன்று</b>.

மற்ற பந்து வீச்சாளர்களான வாஸ், ஜொய்சா, ஃபெர்னான்டோ ஆகியோர் சிறந்த முறையில் பந்து வீசி வருகின்றனர். அந்த அணியின் பேட்ஸ்மேன்களான ஜெயசூரியா பற்றி சொல்லவே வேண்டாம். ஃபார்மில் இல்லை என்றாலும் இந்திய அணிக்கு எதிராக சதம் அடிக்கும் அளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர். அவரது பந்து வீச்சும் அந்த அணிக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். மற்ற வீரர்கள் சங்ககாரா, மர்வன் அதப்பட்டு, அர்னால்ட் ஆகியோர் பக்க பலமாக இருக்கிறார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை டிராவிட் மட்டுமே தற்போது ஃபார்மை வெளிப்படுத்தி வந்தாலும், கேப்டன் பொறுப்பு அவருக்கு கூடுதல் சுமையாகவே அமையும் என்பதும் உண்மை. ஷேவாகை பொறுத்த வரையில், களத்தில் இருந்தால்தான் ரன்கள் நிச்சயம். லஷ்மன் சிறப்பான ஆட்டத்தை காண்பது அரிது. இடைநிலை ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங், கைப் ஆகியோர் சிறப்பாக இணைந்து ஆடி ஓராண்டு கடந்து விட்டது.

மற்ற வீரர்களான மகேந்திர சிங் தோனி, பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். புதிய வீரர்களான வேணுகோபால் ராவ், சுரேஷ் ரெய்னா, ஜெய் பி. யாதவ் ஆகியோர் இனிமேல் தான் தங்களது ஆட்டத்திறனை வெளிக்காட்ட வேண்டும்.

பந்து வீச்சில் மட்டுமே இந்திய அணி சிறந்து விளங்குகிறது. இர்பான் பதான், ஜாகிர் கான், நேஹ்ரா, பாலாஜி ஆகியோர் தற்போது இந்திய அணிக்கு நம்பிக்கை பந்து வீச்சாளராக உருவாகி இருக்கிறார்கள். சூழல் பந்து மன்னர்கள் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரும் சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார்கள் என்பது நமக்கு ஊக்கமளிக்கும் செய்தி.

மேற்கு இந்திய தீவு அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் ஒருநாள் போட்டி பொறுத்தவரையில் அந்த அணி தனது முத்திரையை பதித்து வருகிறது. அந்த அணியில் சந்தர்பால், ரிக்கார்டோ போவல், ஜெர்மி, ராம்டென் ஆகியோர் துடிப்புள்ள வீரர்களாக இருக்கிறார்கள்.

பந்து வீச்சில் லாசன், பெஸ்ட் இருவரை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது.

ஆக மொத்தத்தில் இந்த தொடரில் மேற்கு இந்திய தீவு அணிகளை விட இலங்கை அணி சற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கை வீரர் முரளிதரனின் பந்து வீச்சை மட்டும் சமாளித்து ஆடினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் போட்டியை பொறுத்த வரையில் இந்திய அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். அப்படி செயல்பட்டால் முரளிதரனாக இருந்தாலும் சரி, மற்ற எந்த வீரர்களாக இருந்தாலும் சரி இந்திய அணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி

vikatan

Print this item

  மும்பையில் சுனாமி வதந்தி:18 பேர் பலி
Posted by: vasisutha - 07-29-2005, 03:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>மும்பையில் சுனாமி வதந்தி: நெரிசலில் சிக்கி 18 பேர் பலி</b>

மும்பை நேரு நகரில் சுனாமி பீதி ஏற்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த பலத்த மழைக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று மும்பை நேரு நகர் கடற்கரை பகுதியில் சுனாமி வருவதாக வதந்தி கிளப்பப்பட்டது. இந்த சுனாமி வதந்தியால் மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு ஓட ஆரம்பித்தனர். இந்த சுனாமி பரபரப்பினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் முட்டிமோதி ஓடத்தொடங்கியதால் பலர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். இதில் 18 பேர் மிதிபட்டும், மூச்சுத் திணறியும் இறந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் சுனாமி உருவாகவில்லை என்று அறிவிப்பு செய்ததால் மக்கள் நீண்ட நேரத்துக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினர்.

Print this item

  Thiruvasagam by Music Maestro Ilaiyaraaja.
Posted by: விது - 07-29-2005, 01:27 PM - Forum: பொழுதுபோக்கு - No Replies

Thiruvasagam by Music Maestro Ilaiyaraaja.
[img<img src='http://img228.imageshack.us/img228/1847/thiru2tb8dh.png' border='0' alt='user posted image'>]

http://tamilnapster.servemp3.com/RM/Thiruv...rSenniMannan.rm
http://tamilnapster.servemp3.com/RM/Thiruv...ollaaVinayen.rm
http://tamilnapster.servemp3.com/RM/Thiruv...urantharunam.rm
http://tamilnapster.servemp3.com/RM/Thiruv...rkatkarasaey.rm
http://tamilnapster.servemp3.com/RM/Thiruv...aAravumAngen.rm
¿ýÈ¢ tamilnapster.com[/b]

Print this item

  மாஜி சிபிஐ அதிகாரியின் வீடியோ
Posted by: Vaanampaadi - 07-29-2005, 10:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

ராஜீவ் கொலை: மாஜி சிபிஐ அதிகாரியின் வீடியோ

ஜூலை 29, 2005

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை குறித்த வீடியோ படத்தை மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார்.


ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் ராஜீவ் காந்தி கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டது, தணு மற்றும் சிவராசன் ஆகியோர் இலங்கையில் பயிற்சி பெறுவது மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பேட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தணு என்ற பெண் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியது.

ராஜீவ் காந்தி கொலை குறித்து பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி குற்றப்பத்திரிகை என்ற படத்தை தயாரித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு இதுவரை சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.

இந் நிலையில் சிபிஐயின் முன்னாள் எஸ்.பி. ரகோத்தமன், ராஜீவ் காந்தி கொலை குறித்து ஒரு வீடியோ படத்தை தயாரித்துள்ளார். இதற்கு மத்திய சென்சார் போர்டும், சிபிஐயும் அனுமதி வழங்கியுள்ளது.

சிபிஐயில் எஸ்பியாக இருந்த ரகோத்தமன் கடந்த மார்ச் மாதம் தான் ஓய்வு பெற்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவரும் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தார்.

இந்த வீடியோ படம் சென்னையில் வெளியிடப்பட்டது.விசிடியாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் 60 நிமிடம் ஓடுகிறது. இதில் பெண் மனித வெடிகுண்டு தணு, இலங்கையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவது,

பெங்களூரில் சிவராசன் தற்கொலை செய்து கொண்டது, பிபிசி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ராஜீவ் கொலை குறித்து பேட்டியளித்தது, ராஜீவ் காந்தி கடைசியாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தது, போரூரில் நடந்த கூட்டத்தில் ராஜீவ் பேசுவது, ஸ்ரீபெரும்புதூருக்கு வருவது மற்றும் குண்டு வெடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ரகோத்தமன் கூறுகையில், நான் சிபிஐயில் 36 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். ராஜீவ் கொலை வழக்குக்காகவே 10 வருடங்கள் செலவழித்துள்ளேன். 4 மாதங்களாக மிகவும் கஷ்டப்பட்டு சுமார் ரூ. 4 லட்சம் செலவழித்து இந்த டாக்குமெண்டரி படத்தை தயாரித்துள்ளேன்.

எனக்கு முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் உட்பட எனது மூத்த பல அதிகாரிகள் இந்தப் படத்தை தயாரிக்க மிகவும் உறுதுணையாக இருந்தனர் என்றார்.

Thatstamil

Print this item

  நீ.................
Posted by: mayooran - 07-29-2005, 09:48 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

தண்டவாளத்தில்
தலை சாய்திருக்கும்
ஒற்றை ரோஜாவாய்
எனது காதல்
நீ.........
ரயிலாக வருவாயா?
இல்லை
தனியாக வருவாயா?

Print this item

  தமிழீழத் தேசிய தொலைக்காட்சி
Posted by: Thala - 07-29-2005, 09:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (20)

<b>தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது </b>

<img src='http://www.nitharsanam.com/public/gallery/eelam/20050728161014mahinda2.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது.இவ் ஒளிபரப்பு தற்காலிகமாக பரீட்சார்த்த ஒளிபரப்பே செய்யவுள்ளது. தற்பொழுது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் நல்ல வரவேற்பைப் பெற்று தனது சேவையை 1 மணி நேரம் செய்து வருகின்றது

(நிதர்சனம்)

Print this item