![]() |
|
வந்த மகராசிகள் சாதித்து விட்டார்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வந்த மகராசிகள் சாதித்து விட்டார்கள்! (/showthread.php?tid=3803) |
வந்த மகராசிகள் சாதித்து விட்டார்கள்! - SUNDHAL - 07-29-2005 அது ஒரு சாதாரண குடும்பம். யாழ்ப்பாணத்தில் போர்நிகழ்ந்த காலத்தில் தங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி அகதிகளாக இந்தியா சென்றனர். பிள்ளைகள் மூவரும், உறவினர்களின் உதவியுடன் ஐரோப்பிய நாடொன்றுக்குள் எப்படியோ நுழைந்து தங்கியிருந்து உழைக்கத் தொடங்கினர். அங்கிருந்து பெற்றோருக்குக் கிரமமாக பணம் அனுப்பிக்கொண்டிருந்தனர். சிக்கனமாக வாழ்ந்துவந்த தாய், இப்போது ஆடம்பரச் செலவுகளில் நாட்டம் செலுத்தத் தொடங்கினார். பழைய நிலையை மறந்தேபோய்விட்டார். இந்நிலையில் மகன்மார் இருவருக்கு கல்யாணம் நடந்தது. ஆயினும் இவர்கள், இந்தியாவிலுள்ள பெற்றோருக்கு பணம் அனுப்பிக்கொண்டேயிருந்தனர். இருவரின் மனைவியரும் நச்சரிக்கத் தொடங்கினர் "உங்கள் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்தியாவில் இவ்வளவு செலவா? அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கே போகச் சொல்லுங்கள்" என்றனர். இலங்கை திரும்பிய பெற்றோருக்கு வரவர பணம் குறைந்துகொண்டே வந்ததால் தாயின் ஆடம்பரச் செலவுகளும் குறையத் தொடங்கியது. வந்த மகராசிகள் சாதித்து விட்டார்கள்! Thanks:Thinakural - kuruvikal - 07-29-2005 பிள்ளைகளின் கஸ்டம் அறியாது...பெற்றோர் ஆடம்பரமாகச் செலவு செய்தார்கள் என்ற காரணத்தின் பெயரில்...அந்த மகராசிகள் செயற்பட்டிருந்தால் வரவேற்கலாம்...ஆனால்...தங்கள் தேவைக்காக சுயநலத்துக்காக செயற்பட்டிருந்தால்...பாதிக்கப்படுவது என்னவோ பையங்கள் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- inthirajith - 07-29-2005 யாருமே கஸ்ரபடாமல் நல்லா இருக்கமுடியாது அம்மா இக்கு உண்மை சொல்லி இருக்கவேண்டும் கல்யாணம் என்று வந்தால் கஸ்ரம் என்றுவரும் தானே சூèநிலை தெரியாமல் யாரையும் தப்பாக கதைப்பது சரியா? |