Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 663 online users.
» 0 Member(s) | 661 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,438
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,550
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  சரவணபவன் சாம்பார்
Posted by: aathipan - 07-31-2005, 02:50 AM - Forum: சமையல் - Replies (47)

சரவணபவன் சாம்பார்

1 பேணி துவரம்பருப்பு (2 மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும்)
5 கொட்டை புளி
1 தேக்கரண்டி சீனி அல்லது சக்கரை
2 மேசைக்கரண்டி சாம்பார்த்தூள்
1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி மல்லித்தூள்
1/2 தேக்கரண்டி கடுகு
1/2 தேக்கரண்டி சீரகம்
3 செத்தல் மிளகாய்
2 கொப்பு மன்னிக்கவும் கறிவேப்பிலை
4 வெங்காயம்

1 கீறு புூசனிக்காய்(சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளவும்)
4 வெண்டிக்காய் (சிறு துண்டுகளாக்கி பொரித்து வைத்துக்கொள்ளலாம்
1 முருங்கக்காய் (சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளலாம்)
1 உருளைக்கிழங்கு (சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளலாம்)
1 கத்தரிக்காய் (சிறு துண்டுகளாக்கி அவித்து வைத்துக்கொள்ளலாம்)

காய்கறி அவித்த தண்ணீர் 2 அல்லது 3 பேணி

காய்கறியில் எதாவது கிடைப்பதில் மூன்றைப் பயன்படுத்தவும்
இங்கே நாங்கள் புூசனிக்காய்,வெண்டைக்காயை,உருளைக்கிழங்கு பயன்படுத்துவோம்


ஒரு பெரிய தக்காளிப்பழம்
சிறிது கொத்தமல்லி இலை
6 பல்லு உள்ளி
உப்பு சுவைக்கேற்ப
2 மேசைக்கரண்டி நல்லெண்ணை

செய்முறை

ஊறவைத்த துவரம்பருப்பை நன்கு அவியவிடவும் நன்கு அவிந்ததும் பாதி தக்காளியை ஒரு வெங்காயம் துண்டுகளாக நறுக்கி அத்துடன் போடவும். (துவரம் பருப்பு சரியாக அவியாவிட்டால் கடைந்து எடுக்கவும்)

ஒரு வெங்காயம் ,கால்துண்டு தக்காளி ,ஒரு தேக்கரண்டி, சீனி, 6 பல்லு உள்ளி, ஒரு செத்தல் மிளகாய் , ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், கால்தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத்தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். (இதை இலங்கையில் கூட்டு என்றும் இந்தியாவில் விளுது என்றும் சொல்வார்கள்)

மீதி இருக்கும் வெங்காயத்தையும் தக்காளியையும் சிறு சிறு தூண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்


அடுப்பில் இரும்புச்சட்டியை வைத்து எண்ணைவிட்டு சூடுசெய்யவும்
எண்ணை சூடானதும் கடுகு கருவேப்பிலை மீதமுள்ள செத்தல் மிளகாய் சேர்த்து கிளறவும்

கடுகு வெடிக்க வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி போட்டு கிளறவும்

அதன்பின் ஏற்கனவே தயார் செய்து வைத்து புூசனிக்காய் வெண்டைக்காய் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கிளறவும்

அதன்பின் அரைத்துவைத்த கூட்டை சேர்த்து கிளறவும்.

2 மேசைக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்

காய்கறி அவித்த தண்ணீரை தேவைக்கேற்ப இப்போது சேர்க்கவும்
இரண்டு நிமிடம் விட்டு அவித்து வைத்த துவரம்பருப்பை(வெங்காயம் தக்காளி ஏற்கனவே பருப்புடன் சேர்த்துவிட்டோம்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

இப்போது சுவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்

ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். வாசனை தோன்றியதும் இறக்கி கொத்த மல்லி இலையை மேலே தூவி இட்லி தோசை மற்றும் சோறு அகியவற்றுடன் பரிமாறலாம்.

Print this item

  வத்தல் குழம்பு (இந்தியா)
Posted by: aathipan - 07-30-2005, 11:09 PM - Forum: சமையல் - Replies (9)

வத்தல் குழம்பு (இந்தியா)

மல்லி ஒரு மேசைக்கரண்டி
துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
செத்தல் மிளகாய் 8
மிளகு முக்கால் மேசைக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
சின்னவெங்காயம் 10
உள்ளி 10 பல்லு
நல்லெண்ணை கால் பேணி
கடுகு அரை தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
உளுந்து அரைத்தேக்கரண்டி
புளி உருண்டை 30 கிராம்
கறிவேப்பிலை 2 கொப்பு(சும்மா)
உப்பு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப

முதலில் இரும்புச்சட்டியில் நல்லெண்ணை விட்டு சூடு செய்யவும்

எண்ணை சூடாகியதும் மிளகு சீரகம் துவரம் பருப்பு செத்தல் மிளகாய் ஆகியவற்றை இட்டு மிளகு வெடிக்கும் வரை வறுக்கவும்

வறுத்து முடித்ததும் அவற்றுடன் ஏற்கனவே வெட்டி வைத்த வெங்காயத்தில் மற்றும் உள்;ளி பாதி எடுத்து மற்றும் கால் பேணி தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்

மீண்டும் கடாயில் எண்ணையை சூடுபண்ணி கடுகை இட்டு கிளறவும்

கடுகு வெடித்ததும் உளுந்து வெந்தணம் ஒரு செத்தல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்

பின் வெங்காயம் மற்றும் உள்ளி சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை கிளறவும்

அப்படியே புளி மற்றும் எற்கனவே அரைத்த விளுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்

சுவாலையை குறைத்து மேலும் கிளறவும்

எண்ணை பிரிந்து மேலே மிதக்க ஆரம்பித்ததும் வத்தல் குழம்பு தயார் என எடுத்துக்கொள்ளலாம்

சோறு தோசை மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சிறந்தது.

Print this item

  போராளி ஆனார் திருமாவளவன்!
Posted by: vasisutha - 07-30-2005, 07:25 PM - Forum: சினிமா - Replies (18)

,<b>போராளி ஆனார் திருமாவளவன்!</b>


ஜூலை 28...

சென்னை புறநகரான திரிசூலம் மலை குவாரி பகுதியில்...
பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதற, அதிலிருந்து 'டைவ்' அடித்துத் தப்புகிறார் அந்த புதுமுக நடிகர்! மலை அடிவாரத்திலிருந்து கயிறைப் பிடித்தபடியே மலை உச்சிக்கு ஏறுகிறார். கையில் மெஷின் கன். கண்களில் போர் வேட்கை. அடுத்த சிறிது நேரத்தில், தன்னுடன் இருக்கும் போராளிப் படையினருக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்குகிறார் அந்த நடிகர்.

<img src='http://img241.imageshack.us/img241/610/p44a1dv.jpg' border='0' alt='user posted image'>

அசப்பில் ஈழ பிரபாகரனை நினைவூட்டும் தோற்றத்தில் உள்ள புதுமுக நடிகர், ஈழ தமிழர்களுக்காகப் போராடும் தளபதியாகவே அந்தப் படத்தில் முக்கிய தோற்றம் காட்டுகிறாராம்.

''கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகளாக்குவோம்! கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் மத்தியில் அவர் வீர உரை நிகழ்த்த... படத்தின் டைரக்டர் கிருபா சரவணன் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்.

இப்படி உணர்வுபூர்வமாக போராளித் தளபதி பாத்திரத்தில் ஒன்றிப்போய் அந்த நடிகர் நடித்ததில் ஆச்சரியமில்லை... நிஜமாகவே புலிகளின் மீது பெரும் அபிமானம் கொண்ட தொல்.திருமாவளவன்தான் அந்த நடிகர்.

'அன்புத் தோழி' என்பது படத்தின் பெயர். கிட்டதட்ட அறுபது சதவிகிதம் முடிந்துவிட்டது.

எந்த பரபரப்பும் இல்லாமல், ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் அந்த மலை குவாரி பகுதியில் வந்து நடித்துவிட்டுப் போகிறார் திருமாவளவன். தனது இயக்கத் தோழர்களைக்கூட ஷட்டிங் ஸ்பாட் பக்கம் வரவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக ஆலந்தூர் பகுதி அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபடி, ஒரு பக்கா நடிகர் போலவே கால்ஷீட் தவறாமல் ஷ¨ட்டிங் போய் வருகிறார்!

<img src='http://img241.imageshack.us/img241/4195/p442kn.jpg' border='0' alt='user posted image'>

ஷட்டிங் இடையே ஓய்வில் அவரோடு பேசினோம்.

''சின்ன வயதில் நான் மேடை பக்கமே தலைகாட்ட மாட்டேன். அவ்வளவு கூச்சம். ஆனால், இன்றைக்கு நான் மேடைக்கு மேடை பேசியே ஆக வேண்டிய ஒரு பேச்சாளர். திரைப்படங்களை அதிகம் பார்த்தவனல்ல... ஆனால், இப்போது என்னை நடிகனாக நிறுத்தி இருக்கிறார்கள்! முழுக்க முழுக்க நண்பர்களுக்காக, நட்புக்காக, எனக்குப் பிடித்தமான கொள்கை முழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இதில் நடிக்க நான் சம்மதித்தேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மாதிரியே, மொழி மற்றும் இனத்தின் வளர்ச்சிக்காக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழகத்தில் ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தை நடத்த வேண்டும் என்று நான் கனவு கண்டதுண்டு. தற்போதைய அரசியல் வேலைகளுக்கு நடுவே அது முடியவில்லை. அந்த ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், இந்தப் படத்தில் என் பாத்திரம் இருந்தது.

இருந்தாலும் தயங்கினேன். எனது நீண்ட நாள் நண்பரும் வக்கீலுமான மன்னை சிவ.ராஜ சேகரன் தான் பேசிப் பேசியே என்னைக் கரைத்து விட்டார்''
என்று சிரித்தபடியே அருகில் உள்ள சிவ.ராஜசேகரனை திருமாவளவன் பார்க்க...

''சினிமாவிலிருந்து விஜயகாந்த் அரசியலுக்கு வருகிற நேரத்தில், அரசியலில் இருந்து நீங்கள் சினிமாவுக்கு போவதையும் மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்!'' என்று சிரிக்கிறார் அவர்.

<img src='http://img241.imageshack.us/img241/5280/p455xj.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'>படத்தில்


தொடர்ந்து திருமாவளவன்,

''எதிரிகளின் கண்ணில் எளிதில் படாமல் காக்கக்கூடிய இந்த 'காமாஃப்ளாஜ்' சீருடையை நான் மாட்டியபோது, எனக்கு உடலிலும் உள்ளத்திலும் புது மிடுக்கு சேர்ந்தது. தலையில் தொப்பி, கையில் இயந்திரத் துப்பாக்கி என்று என்னைப் புல்லரிக்க வைத்தது இந்தத் தோற்றம்'' என்று சிலிர்த்தது 'சிறுத்தை'!

''படத்தில் திருமணம், ஆடல் என்றெல்லாம் கூடாது என்பதை முதலிலேயே நிபந்தனையாகச் சொல்லிவிட்டேன். இயக்குநரும் தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்த பிறகே படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்'' என்றும் சொன்னார்!

<img src='http://img241.imageshack.us/img241/3197/p45b7tl.jpg' border='0' alt='user posted image'>
படப்பிடிப்பில்


''படத்தின் கதைதான் என்ன?'' என்றோம்.

''அது இப்போதைக்கு மர்மம். நான் ஏதாவது ஒன்றுகிடக்க ஒன்றாகச் சொன்னால் இயக்குநர் சண்டைக்கு வந்துவிடுவார். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் யுத்தம் உண்டு, இலங்கையில் சிலநாள் படப் பிடிப்பு உண்டு'' என்று மட்டும் சொன்னார்.
<img src='http://img241.imageshack.us/img241/3766/p45a0zj.jpg' border='0' alt='user posted image'>
வழக்கறிஞர் சிவ.ராஜசேகரனுடன்


நாம் படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் விடாமல் தோண்டித் துருவினோம்.

கிடைத்த விவரங்கள் விறுவிறு.

படத்தின் புதுமுக கதாநாயகியாக அறிமுகமாகிறார் சௌமியா... இவர் பிரபல டைரக்டர் அகத்தியனின் மகள். இவருடைய ஒருதலைக்காதல் ஆவேசமான 'அன்புத் தோழி' கதைக்கு, அற்புதமான சென்டிமென்ட்டைச் சேர்க்கிறதாம். திருமாவளவன் சம்பந்தப்பட்ட ஒரு க்ளைமாக்ஸ் காட்சி, அவரது விடுதலைச் சிறுத்தை இயக்கத்தினர் அத்தனை பேரையும் கலங்கி விசும்ப வைத்துவிடும் என்கிறார்கள்.

முறுக்கு மீசை 'சிறுத்தை'க்கு திருஷ்டிப் பூசணிக்காய் உடைங்கப்பா!</span>

thanks
vikatan

Print this item

  மறுமணம் செய்யும் சுனாமி விதவைகள்
Posted by: AJeevan - 07-30-2005, 07:08 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (1)

<span style='font-size:25pt;line-height:100%'><b>மறுமணம் செய்யும் சுனாமி ஆண் விதவைகளும்,
ஆண் துணையின்றித் துன்பப்படும் பெண் விதவைகளும்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050730163432tsunami-widows.gif' border='0' alt='user posted image'>

நான்கு குழந்தைகளின் (சுனாமியில் விவையான) தந்தையை மணந்த பெண்
கிழக்கு மாகாணத்தில் சுனாமியின் தாக்கத்திற்கு இலக்காகி மனைவியை இழந்த ஆண்களில் அநேகமானோர் தற்போது மறு மணம் செய்து வருகின்றனர். இப்படியான மறு மணங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் தான் பரவலாக நடை பெற்று வருகின்றன.

இம் மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்ப்பட்ட பிரதேசங்களிலொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை.

இப் பிரதேசத்தில் சுனாமியில் மனைவியை இழந்த அநேகமான ஆண்கள் மறுமணம் செய்துள்ளார்கள். தமது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியே இந்த முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மறுமணம் செய்யும் ஆண்களைப் பொறுத்த வரை கன்னிப் பெண்களையே நாடுவதாகவும், சுனாமி விதவைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதாக இல்லை என சுனாமி விதவைகளின் நலன்களில் அக்கறை கொண்ட பெண்கள் ஆதங்கப்படுகின்றார்கள்

இதனை முழுமையாக ஏற்க முடியாது என மறுமணம் புரிந்துள்ள ஆண்களில் சிலர் கூறுகின்றார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்கனவே கணவனை விட்டு பிரிந்த பெண்களைக் கூட தாம் திருமணம் செய்துள்ளதாக இவர்கள் குறிப்பிடுகின்றார்கள்

தந்தையின் திருணமத்தை பிள்ளைகள் முழு மனதுடன் ஆதரித்தும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு சில ஆண்களைப் பொறுத்த வரை மறுமணத்தை நினைத்துக் கூட பார்க்காதவர்களாக இருக்கின்றார்கள்.

சுனாமி பெண் விதவைகளைப் பொறுத்த வரை இது வரை எந்தவொரு பெண்னும் மறுமணம் செய்யவில்லை. தமது பிள்ளைகளின் எதிர்காலமே தமது இலக்கு என்று கூறும் இவர்கள் மறுமணம் வேண்டாம் என்கின்றார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு செய்தியாளர் இரா.உதயகுமார் வழங்கும் பெட்டக நிகழ்ச்சி இன்றைய http://www.bbc.co.uk/tamil/ நிகழ்ச்சியில் கேட்கலாம்.</span>

Print this item

  யாழில் கள உறுப்பினர் ஒருவர்
Posted by: Mathan - 07-30-2005, 03:27 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (26)

<i>பலரும் யாழ் சென்று வந்த அனுபவங்களை வலைப்பதிவுகளில் எழுதியிருக்கின்றார்கள். அண்மையில் யாழ் கள உறுப்பினர் சயந்தனின் அனுபவங்களை அவரின் வலைப்பதிவில் படித்தேன். அதனை உங்களுக்காக கீழே இணைத்துள்ளேன். படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.</i>

Print this item

  உன்னை நம்பியிருக்கு
Posted by: SUNDHAL - 07-30-2005, 03:23 PM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

ஓ இளைஞனே!
விடியும் வரைக்கும்
விடுமுறை ஒதுக்கு.

உன் வியர்வையால்
விடியல் செதுக்கு.

உனக்குள்ளே
தெம்பிருக்கு-அடடே
உலகம் உன்னை
நம்பியிருக்கு.

Thanks:வேலு பாரதி

Print this item

  வணக்கம் உறவுகளே
Posted by: yarlpaadi - 07-30-2005, 10:27 AM - Forum: அறிமுகம் - Replies (41)

வணக்கம் உறவுகளே
இது யாழில ;இருந்து யாழ்பாடி

Print this item

  சிறுவர்கள் சேர்ப்புக்கள், உள்முரண்பாடுகள், உட்படுகொலைகள்
Posted by: Nellaiyan - 07-30-2005, 09:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (43)

செய்தி:
கடந்த 28/07/05 அன்று யாழ்நகரின் மிகப் பாதுகாப்புமிக்க ஸ்ரான்லி வீதியில் பட்டப்பகலில் கூலிக்கும்பல் ஈ.பி.டி.பியின் நீண்டகால உறுப்பினரும், தினமுரசுப் பத்திரிகை யாழ்நகர விற்பனை முகவருமாகிய 22வயது நிரம்பிய நிக்ஸன் எனும் கூலியொன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.

யார் இந்த நிக்ஸன்:
1995ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின், தீவுப்பகுதிகளில் இருந்து கொலைகள், கொள்ளைகள் என பல அட்டூளியங்களைச் செய்துவந்த ஈ.பி.டி.பி கும்பலானது, யாழ், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளுக்கு இராணுவத்தால் கொண்டுவரப்பட்டு பல பாலகர்கள் பலாத்காரமாகவும், பல பசப்பு வார்த்தைகளைக் காட்டி மயக்கியும், அவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பாவித்தும் இவர்களின் கூலிப்படைகளில் சேர்க்கப்பட்டார்கள். அப்படி 14 வயதுச் சிறுவனாக சேர்க்கப்பட்ட இந்த நிக்ஸன், ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதிகளில் உள்ள இளையர்களின் போராட்டத்தை நோக்கியதான செயற்பாடுகளை மாற்றூவதற்காக, ஈ.பி.டி.பி கும்பலால் பாலியல் சம்பந்தமான வி.டி.யோக்கள் , புத்தகங்கள் , போதைப்பொருட்கள் விற்பனைக்கென பாவிக்கப்பட்ட சிறுவனாவான். பிற்காலங்களில் யாழ்நகரிலிருந்து பல மூத்த உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி கும்பலிலிருந்து தப்பியோட, கூலிகளின் கும்பலின் தினமுரசுப் பத்திரிகை யாழ் முகவராக்கப்பட்டவன் தான் இந்த நிக்ஸன்.

நிக்ஸனின் கொலை - உட்கட்சிக்கொலை:
தினமுரசு முகவரான நிக்ஸன் பல லட்சங்களை அதன் மூலம் சுருட்டியவரென்றும், அதனால் அவருக்கும், ஈ.பி.டி.பியின் யாழ் அமைப்புபாளருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே, அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்கு அருகாமையில் வைத்து ஈ.பி.டி.பியின் கூலிக் கொலையாளியினாலேயே சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்.

ஆனால் இக்கொலையானது, பல பதிலளிக்கமுடியாத கேள்விகளை மாற்றுக்கருத்துக்கள் என்று கூறி அலையும் கூலிகளை நோக்கி விடுக்கப்பட்டுள்ளது.

1) சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கும் இக்கும்பல்கள் நிக்ஸன் 14 வயதில் ஈ.பி.டி.பியில் சேர்க்கப்பட்டதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
2) இன்னும் எத்தனை சிறுவர்கள் இந்தக் கும்பல்களில் இருக்கிறார்கள்? இப்பவும் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்?
3) ஒரு அரச அமைச்சர் சார்ந்த கட்சியென்று கூறும் கும்பலில் சிறுவர்கள் ஆயுததாரிகளாக்கப்படும் போது உலக அமைப்புக்களான ஐ.நாவோ, யுனிசெவ்வோ கண்டு கொள்வதில்லையோ?
4) நிக்ஸன் போன்று இன்னும் எத்தனை சிறுவர்கள், இக்கூலிக்கும்பலினால் படுகொலை செய்யப்படப் போகிறார்கள்?

Print this item

  நாட்டின் தலைவியின் பேரினவாத முகம்
Posted by: Thala - 07-30-2005, 07:59 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

<b>தென்னாபிரிக்காவில் சந்திரிகா என்ன பேசினார்?</b>

(பேராசிரியர் சிவசண்முகம்)

சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா மிகவும் வித்தியாசமான பெண். அவர் உரையாற்றும்போது உண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. முன்கூட்டியே பேச்சுக்களைத் தயாரித்து மேடைக்கு எடுத்துச் செல்வது முக்கிய அரசியல் தலைவர்களின் நடைமுறை. மேடையில் பேசவேண்டியவற்றை எழுதிக் கொடுக்கும் ஆலோசகர்களும் இருக்கிறார்கள். தனது பொதுவான கருத்தை அரசியல் தலைவர்கள் தமது பேச்சை எழுதும் அதிகாரிகளுக்குக் கூறுவார்கள். அதன் அடிப்படையில் மேடைப் பேச்சையோ நோர்காணலையோ தலைவர்கள் நடத்துவார்கள். வாயில் வந்ததைப் பகிரங்கமாகப் பேசும்போது வரும் ஆபத்துக்களையும் உயர்மட்ட முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்காகவே இந்த முன்யோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது.



சிறிலங்காவின் தலைவி சந்திரிகா இந்த நடைமுறைகளை மதித்து நடப்பதில்லை. என்ன பேசப்போகிறோம், நேர்காணல் செய்வோருக்கு என்ன பதில் கூறப்போகிறோம் என்று அவர் முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. என்ன அவர் வாயால் வரப்போகிறது என்பதை அவரே அறியமாட்டார். பேசி முடித்தபின்புதான் அவருக்குத் தெரியவரும். ஏதேனும் இசகுபிசகாகப் பேசி மாட்டிக்கொண்டால் சந்திரிகாவை மீட்பதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற அடியார்கள் இருக்கிறார்கள். சந்திரிகா அப்படி ஒன்றுமே சொல்லவில்லை என்று அவர்கள் அடித்துக் கூறிவிடுவார்கள்.

சொல்வதும் மறுப்பதும் மாறிமாறி வரும் இரு நடைமுறைகள் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். சந்திரிகா மாத்திரமல்ல வேறு சிங்களத் தலைவர்களும் சொல்வதும் மறுப்பதும் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது விபத்தல்ல, நன்கு உருவாக்கப்பட்ட திட்டமென்றும் கொழும்பு அரசியலை அவதானிப்பவர்கள் கூறுவார்கள். தமிழர் பிரச்சனையில் இந்த நடைமுறை சிங்களத் தலைவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

முதல்வரும் வாக்குறுதி வழங்கல், பின்வரும் பின்னடிப்பு. பிரச்சனை மோசம் அடைவதற்கு இவ்வகை ஏமாற்றும் இழுத்தடிப்பும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. சந்திரிகா வாக்குறுதி வழங்குகிறார் என்றால் அதை நம்பக்கூடாது என்பதில் ஈழத் தமிழர்கள் மிகவும் உசாராக இருக்கிறார்கள். அனுபவத்திலும் பார்க்கச் சிறந்த ஆசான் வேறில்லை. அம்மையார் பேசப் பிறிதொருவர் அவர் அப்படிப் பேசவில்லை, இப்படித்தான் பேசினார் என்று விளக்கவுரை வழங்க இப்படியே போகிறது சிறிலங்காவின் கோமாளி அரசியல்.

1998 செம்ரெம்பர் மாதம் தென் ஆபிரிக்காவில் நடந்த அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு சிறிலங்கா தலைவி தனது பரிவாரங்களோடு சென்றது, ஞாபகமிருக்கலாம். அணிசோரா இயக்கம் பனிப்போர் முடிவோடு இறந்துவிட்டது. ஆனால் இப்போதும் ஒன்று கூடல்கள் நடக்கின்றன. இச்சந்திப்பின்போது எடுக்கப்படும் முடிவுகளும், தீர்மானங்களும் பயனற்றதாக இருக்கின்றன. உலக அரசியலில் இவற்றால் ஒரு பயனுமில்லை. பொதுமக்கள் பணம் வீண் விரயமாவதுதான் மிச்சம். ஆனால் சந்திரிகா போன்றோர் தமது மனதிலுள்ள காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.

தென்னாபிரிக்கா தொலைக்காட்சி நிறுவனம் சந்திரிகாவை ஒரு பகிரங்க நேர்காணல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. அம்மணியும் சென்றார். அந்த நேர்காணலில் அவர் ஈழத்தமிழர் பற்றிக் கூறிய ஒரு அப்பட்டமான பொய்யுரை இன்றுவரை பெரும் உணர்வுகளைக் கிளப்புகிறது. ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வினவியபோது சந்திரிகா தனக்கே உரித்தான ஆண்குரலில், "இலங்கையின் ப+ர்வீக குடியினர் அல்லாத ஒரு சிறுபான்மை இனத்தவர், தனிநாடு கோருகின்றனர்" என்று சொன்னார்.

இந்த நோர்காணல் முழுவதும் செப்ரம்பர் 05, 1998ம் ஆண்டு இரவு 10.00 மணிக்கு ரூபவாகினி ஆங்கில சேவையில் வெளியிடப்பட்டது. இதை நாட்டு மக்கள் யாபேரும் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஒருவிதமான மறைப்பும் இல்லை. தென்னாபிரிக்காவில் வழங்கப்பட்ட நேர்காணல் அப்படியே சிறிலங்கா ரூபவாகினியில் மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மாமனிதர் குமார் பொன்னம்பலம் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த ஒளிபரப்பை வீடியோப் பிரதி பண்ணி வைத்திருந்தனர். அத்தோடு தென்னாபிரிக்கத் தெலைக்காட்சியுடன் தொடர்பு கொண்டு நோர்காணலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டனர்.

சரியாக ஒரு மாதம் சென்றபின் சிறிலங்காவின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் எறிக் பெர்னாந்து வெளியுறவு அமைச்சரும் சந்திரிகாவுக்கு நெருக்கமானவருமான லக்ஸ்மன் கதிர்காமரை "ஜனமண்டல" நிகழ்ச்சியில் நோர்காணல் கண்டார். இதன்போது தொலைபேசி மூலம் கதிர்காமரைக் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஜனமண்டல என்பதின் அர்த்தம் அதுதான்.

சிவனேசன் என்று தன்னை அறிமுகம் செய்த ஒரு கொள்ளுப்பிட்டி நேயர், ஈழத்தமிழர்கள் பற்றி தென்னாபிரிக்காவில் சந்திரிகா கூறியது பற்றி வினவினார். இதற்குக் கதிர்காமர், 'மிகவும் சுருக்கமான பதில் என்னவென்றால் சந்திரிகா அப்படி ஒன்றுமே சொல்லவில்லை. மிகவும் அண்மைக் காலத்தவர் என்றும் அவர்கள் இலங்கைக்கு உரியவர்கள் அல்லவென்றும் அவர் அப்படி ஒன்றுமே சொல்லவில்லை". என்று ஆணித்தரமாகப் பதில் கூறினார். இருவரில் யாரை நம்புவது என்று தெரியாமல் தவிக்கவேண்டிய அவசியம் இல்லை.

நன்றி சங்கதி..

Print this item

  அமெரிக்க நீதிமன்றம் ஆதரவு
Posted by: அருவி - 07-30-2005, 06:17 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

அமெரிக்காவில் உள்ள அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அமைதி வழியில் செயற்படும் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்க உரிமை உண்டு என்று அமெரிக்க நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.


இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், துருக்கி நாட்டிலுள்ள குர்டிஸ்தான் அமைப்பின் பகுதிகளிலும் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்கு உதவி வழங்குவதில் இருந்த தடைகளுக்கு எதிராக "சட்டபூர்வ உரிமைகளுக்கான மையத்தினால்" தொடரப்பட்ட வழக்கொன்றிற்கு ஆதரவாகவே லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு கிழக்கு கரையோரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளின் முக்கியத்துவத்தினையும் இந்த வழக்கு முன்னிறுத்தி வாதாடியதையும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் நடைபெற்று வரும் சமரசப் பேச்சுக்களில் சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்குவதற்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் ஆதரவு வழங்க விரும்புவதாகவும், இந்த மையம் தனது வழக்கில் மேலும் குறிப்பிட்டிருந்தது.

சட்டத்தரணியும் ஜோர்ஜ் ரவுன் பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியருமான டேவிட் கோல்லே இந்த மையத்தின் சார்பாக வாதாடியது இங்கு குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்ட்ட பட்டியலில் இந்த அமைப்புக்கள் இருப்பினும், அவற்றின் அமைதி வழி நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வமாக ஆதரவளிக்க உரிமை உண்டு என்பதனை நீதிமன்றம் ஏற்றிருப்பதனை பாராட்டுவதாக டேவிட் கோல் இந்த தீர்ப்பு தொடர்பாக தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைப்புகளை தடை செய்வதற்காக பயன்படுத்தப்படும் அமெரிக்க தேசாபிமான சட்டத்தின் சில சட்ட பிரிவுகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் போதியளவு விளக்கமளிக்க முயற்சிக்கவில்லை என அமெரிக்க நீதவான் ஓட்ரி கொலின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த சட்டம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் வகையில் இயற்றப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



நன்றி புதினம்

Print this item