Yarl Forum
அமெரிக்க நீதிமன்றம் ஆதரவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அமெரிக்க நீதிமன்றம் ஆதரவு (/showthread.php?tid=3800)



அமெரிக்க நீதிமன்றம் ஆதரவு - அருவி - 07-30-2005

அமெரிக்காவில் உள்ள அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அமைதி வழியில் செயற்படும் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்க உரிமை உண்டு என்று அமெரிக்க நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.


இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், துருக்கி நாட்டிலுள்ள குர்டிஸ்தான் அமைப்பின் பகுதிகளிலும் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்கு உதவி வழங்குவதில் இருந்த தடைகளுக்கு எதிராக "சட்டபூர்வ உரிமைகளுக்கான மையத்தினால்" தொடரப்பட்ட வழக்கொன்றிற்கு ஆதரவாகவே லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு கிழக்கு கரையோரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளின் முக்கியத்துவத்தினையும் இந்த வழக்கு முன்னிறுத்தி வாதாடியதையும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் நடைபெற்று வரும் சமரசப் பேச்சுக்களில் சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்குவதற்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் ஆதரவு வழங்க விரும்புவதாகவும், இந்த மையம் தனது வழக்கில் மேலும் குறிப்பிட்டிருந்தது.

சட்டத்தரணியும் ஜோர்ஜ் ரவுன் பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியருமான டேவிட் கோல்லே இந்த மையத்தின் சார்பாக வாதாடியது இங்கு குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்ட்ட பட்டியலில் இந்த அமைப்புக்கள் இருப்பினும், அவற்றின் அமைதி வழி நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வமாக ஆதரவளிக்க உரிமை உண்டு என்பதனை நீதிமன்றம் ஏற்றிருப்பதனை பாராட்டுவதாக டேவிட் கோல் இந்த தீர்ப்பு தொடர்பாக தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைப்புகளை தடை செய்வதற்காக பயன்படுத்தப்படும் அமெரிக்க தேசாபிமான சட்டத்தின் சில சட்ட பிரிவுகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் போதியளவு விளக்கமளிக்க முயற்சிக்கவில்லை என அமெரிக்க நீதவான் ஓட்ரி கொலின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த சட்டம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் வகையில் இயற்றப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



நன்றி புதினம்


- Thala - 07-30-2005

அமெரிக்காவின் மனிதனேய தன்னார்வ நிறுவனங்கள்களில் அனெகமானவை.. CIA யினால் இயக்கப்படுபவை எனபதுதான் உண்மை. யாரைக் கவுப்பதற்கு வளக்குப் போட்டார்கள், சிறீலங்காவையா?.... அல்லது தமிழர்களையா?
(காலம் பதில் சொல்லும்)

நன்றிகள் அருவி..