![]() |
|
போராளி ஆனார் திருமாவளவன்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: போராளி ஆனார் திருமாவளவன்! (/showthread.php?tid=3793) |
போராளி ஆனார் திருமாவளவன்! - vasisutha - 07-30-2005 ,<b>போராளி ஆனார் திருமாவளவன்!</b> ஜூலை 28... சென்னை புறநகரான திரிசூலம் மலை குவாரி பகுதியில்... பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதற, அதிலிருந்து 'டைவ்' அடித்துத் தப்புகிறார் அந்த புதுமுக நடிகர்! மலை அடிவாரத்திலிருந்து கயிறைப் பிடித்தபடியே மலை உச்சிக்கு ஏறுகிறார். கையில் மெஷின் கன். கண்களில் போர் வேட்கை. அடுத்த சிறிது நேரத்தில், தன்னுடன் இருக்கும் போராளிப் படையினருக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்குகிறார் அந்த நடிகர். <img src='http://img241.imageshack.us/img241/610/p44a1dv.jpg' border='0' alt='user posted image'> அசப்பில் ஈழ பிரபாகரனை நினைவூட்டும் தோற்றத்தில் உள்ள புதுமுக நடிகர், ஈழ தமிழர்களுக்காகப் போராடும் தளபதியாகவே அந்தப் படத்தில் முக்கிய தோற்றம் காட்டுகிறாராம். ''கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகளாக்குவோம்! கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் மத்தியில் அவர் வீர உரை நிகழ்த்த... படத்தின் டைரக்டர் கிருபா சரவணன் கைதட்டி ஆரவாரம் செய்கிறார். இப்படி உணர்வுபூர்வமாக போராளித் தளபதி பாத்திரத்தில் ஒன்றிப்போய் அந்த நடிகர் நடித்ததில் ஆச்சரியமில்லை... நிஜமாகவே புலிகளின் மீது பெரும் அபிமானம் கொண்ட தொல்.திருமாவளவன்தான் அந்த நடிகர். 'அன்புத் தோழி' என்பது படத்தின் பெயர். கிட்டதட்ட அறுபது சதவிகிதம் முடிந்துவிட்டது. எந்த பரபரப்பும் இல்லாமல், ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் அந்த மலை குவாரி பகுதியில் வந்து நடித்துவிட்டுப் போகிறார் திருமாவளவன். தனது இயக்கத் தோழர்களைக்கூட ஷட்டிங் ஸ்பாட் பக்கம் வரவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக ஆலந்தூர் பகுதி அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபடி, ஒரு பக்கா நடிகர் போலவே கால்ஷீட் தவறாமல் ஷ¨ட்டிங் போய் வருகிறார்! <img src='http://img241.imageshack.us/img241/4195/p442kn.jpg' border='0' alt='user posted image'> ஷட்டிங் இடையே ஓய்வில் அவரோடு பேசினோம். ''சின்ன வயதில் நான் மேடை பக்கமே தலைகாட்ட மாட்டேன். அவ்வளவு கூச்சம். ஆனால், இன்றைக்கு நான் மேடைக்கு மேடை பேசியே ஆக வேண்டிய ஒரு பேச்சாளர். திரைப்படங்களை அதிகம் பார்த்தவனல்ல... ஆனால், இப்போது என்னை நடிகனாக நிறுத்தி இருக்கிறார்கள்! முழுக்க முழுக்க நண்பர்களுக்காக, நட்புக்காக, எனக்குப் பிடித்தமான கொள்கை முழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இதில் நடிக்க நான் சம்மதித்தேன். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மாதிரியே, மொழி மற்றும் இனத்தின் வளர்ச்சிக்காக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழகத்தில் ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தை நடத்த வேண்டும் என்று நான் கனவு கண்டதுண்டு. தற்போதைய அரசியல் வேலைகளுக்கு நடுவே அது முடியவில்லை. அந்த ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், இந்தப் படத்தில் என் பாத்திரம் இருந்தது. இருந்தாலும் தயங்கினேன். எனது நீண்ட நாள் நண்பரும் வக்கீலுமான மன்னை சிவ.ராஜ சேகரன் தான் பேசிப் பேசியே என்னைக் கரைத்து விட்டார்'' என்று சிரித்தபடியே அருகில் உள்ள சிவ.ராஜசேகரனை திருமாவளவன் பார்க்க... ''சினிமாவிலிருந்து விஜயகாந்த் அரசியலுக்கு வருகிற நேரத்தில், அரசியலில் இருந்து நீங்கள் சினிமாவுக்கு போவதையும் மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்!'' என்று சிரிக்கிறார் அவர். <img src='http://img241.imageshack.us/img241/5280/p455xj.jpg' border='0' alt='user posted image'> <span style='color:blue'>படத்தில் தொடர்ந்து திருமாவளவன், ''எதிரிகளின் கண்ணில் எளிதில் படாமல் காக்கக்கூடிய இந்த 'காமாஃப்ளாஜ்' சீருடையை நான் மாட்டியபோது, எனக்கு உடலிலும் உள்ளத்திலும் புது மிடுக்கு சேர்ந்தது. தலையில் தொப்பி, கையில் இயந்திரத் துப்பாக்கி என்று என்னைப் புல்லரிக்க வைத்தது இந்தத் தோற்றம்'' என்று சிலிர்த்தது 'சிறுத்தை'! ''படத்தில் திருமணம், ஆடல் என்றெல்லாம் கூடாது என்பதை முதலிலேயே நிபந்தனையாகச் சொல்லிவிட்டேன். இயக்குநரும் தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்த பிறகே படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்'' என்றும் சொன்னார்! <img src='http://img241.imageshack.us/img241/3197/p45b7tl.jpg' border='0' alt='user posted image'> படப்பிடிப்பில் ''படத்தின் கதைதான் என்ன?'' என்றோம். ''அது இப்போதைக்கு மர்மம். நான் ஏதாவது ஒன்றுகிடக்க ஒன்றாகச் சொன்னால் இயக்குநர் சண்டைக்கு வந்துவிடுவார். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் யுத்தம் உண்டு, இலங்கையில் சிலநாள் படப் பிடிப்பு உண்டு'' என்று மட்டும் சொன்னார். <img src='http://img241.imageshack.us/img241/3766/p45a0zj.jpg' border='0' alt='user posted image'> வழக்கறிஞர் சிவ.ராஜசேகரனுடன் நாம் படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் விடாமல் தோண்டித் துருவினோம். கிடைத்த விவரங்கள் விறுவிறு. படத்தின் புதுமுக கதாநாயகியாக அறிமுகமாகிறார் சௌமியா... இவர் பிரபல டைரக்டர் அகத்தியனின் மகள். இவருடைய ஒருதலைக்காதல் ஆவேசமான 'அன்புத் தோழி' கதைக்கு, அற்புதமான சென்டிமென்ட்டைச் சேர்க்கிறதாம். திருமாவளவன் சம்பந்தப்பட்ட ஒரு க்ளைமாக்ஸ் காட்சி, அவரது விடுதலைச் சிறுத்தை இயக்கத்தினர் அத்தனை பேரையும் கலங்கி விசும்ப வைத்துவிடும் என்கிறார்கள். முறுக்கு மீசை 'சிறுத்தை'க்கு திருஷ்டிப் பூசணிக்காய் உடைங்கப்பா!</span> thanks vikatan - Thala - 07-30-2005 ஈழத்தமிழ் அபிமானி நடிக்கும் படம் கதை எதைச்சொன்னாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள், திருமாவளவனுக்கு (தென்னாலித்தமிழ் கதைக்காமல் இருந்தால் சரி) நன்றி வசி.. - Rasikai - 07-30-2005 Thala Wrote:ஈழத்தமிழ் அபிமானி நடிக்கும் படம் கதை எதைச்சொன்னாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள், திருமாவளவனுக்கு ஆமாம் தல சொன்னது போல யாழ்ப்பாணதமிழ் பேசிவதாக சொல்லி தமிழை கொச்சை படுத்தாமல் இருந்தால் சரி தான். anyway வாழ்த்துக்கள் - narathar - 07-30-2005 Rasikai Wrote:Thala Wrote:ஈழத்தமிழ் அபிமானி நடிக்கும் படம் கதை எதைச்சொன்னாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள், திருமாவளவனுக்கு ஆமாம் தல சொன்னது போல யாழ்ப்பாணதமிழ் பேசிவதாக சொல்லி தமிழை கொச்சை படுத்தாமல் இருந்தால் சரி தான். anyway வாழ்த்துக்கள் தமிழை கொச்சை படுத்தாமல் இருந்தால் சரி தான் :roll:
- kavithan - 07-30-2005 ம்ம் படத்தை பார்ப்பம் - AJeevan - 07-30-2005 நன்றி, வரட்டும் பார்க்கலாம். - Vishnu - 07-30-2005 காற்றுக்கென்ன வேலி என்ற ஒரு படமம் பார்த்தேன்... அந்த படமும் ஈழத்துடன் சேர்ந்த கதை தான்.... அருமையான படம் எனக்கு பிடித்து இருந்தது. இந்த படமும் வரட்டும்.. பார்க்கலாம். - MEERA - 07-30-2005 ம்ம்ம்ம்;........................ வரட்டும்...... தொல். திருமாவளவனை வம்பிற்கு இழுக்கும் திரை இணய ஊடகம் ஒன்று. - Mathuran - 08-02-2005 தொல். திருமாவளவனை வம்பிற்கு இழுக்கும் திரை இணய ஊடகம் ஒன்று. இந்த இணய ஊடகம் தமிழரையும் தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்குடனே தனது திரைச்செய்திகளை தயாரித்து வெளிவிடுகின்றது. திருமாவள்வன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவலினை வெளியிடும் சாக்கில் திரப்படத்துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வால்டர் தேவாரம் என்பவரை போல திருமாவளவன் தோற்றமளிக்கின்றார் என தேவையற்ற வகையில் செய்தி உருவாக்கப் பட்டுள்ளது. இவ் இணயப் பத்திரிகை தமிழர்களை இளிவுபடுத்தும் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களையும் அவர்களின் கலாச்சாரத்தினையும் இல்லாதொளிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் இயங்கும் இது போன்ற திரை இணயப்பத்திரிகைகளினை, தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும். - vasisutha - 08-02-2005 ஒருவரைப்போல இருக்கிறார் என்று சொல்வதும் தவறா? இதில் என்ன இருக்கிறது. எனக்கு விளங்கவில்லை. :roll: :roll: - AJeevan - 08-02-2005 அந்த் ஊடகத்தின் இணைப்பைத் தந்தால் அது என்ன எழுதியுள்ளது என பார்க்கலாம். - இளைஞன் - 08-02-2005 http://thatstamil.indiainfo.com/specials/c...umavalavan.html இந்த செய்தியுடன் தொடர்புடையதா? - Danklas - 08-02-2005 இளைஞா சந்தோசப்படுங்கய்யா... தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை எவனோடையும் ஒப்பிட ஏலாதளேய்ய்.. சுண்டக்காய் சினிமாவில சித்தரிச்சு காட்டித்தான் அதை தெரியோனுமெண்டில்லை... ஒரு வராலாற்று நாயகனை டூப் போட்டு நடிக்கிற நடிகனோடையோ என்னப்போல அரசியல் வாதியோடையோ ஒப்பிடமுடியுமா இளைஞர்களெ?? நீங்களே மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (சில நேரங்களில் மாற்றுக்கருத்து மாற்றுக்கருத்து எண்டு உளையிடுகின்ற என்னைப்போல ஆட்களும் உண்மைகளை ஒத்துக்கொண்டுதானே ஆகோனும்ம்..அதுதானே ஜதார்த்தம்.. )
- Mathan - 08-02-2005 மதுரன் நீங்கள் எந்த தளத்தை குறிப்பிடுகின்றீர்கள் என்றால் அனைவரும் படித்து பார்க்கலாம் ... முடியுமானால் அந்த செய்தியை இங்கு இணையுங்களேன் - stalin - 08-02-2005 Rasikai Wrote:கொச்சை என்ன தமிழுங்க.... கொச்சிகடை பேமன்ற் தமிழாThala Wrote:ஈழத்தமிழ் அபிமானி நடிக்கும் படம் கதை எதைச்சொன்னாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள், திருமாவளவனுக்கு - Mathuran - 08-03-2005 மிலிட்ரி உடையில் முறுக்கிய மீசையும் இறுகிய தேகமுமாக அசப்பில் வால்டர் தேவாரம் போலிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன். 'மும்பை ஓ பிரஸ்' பேனர்களை கிழித்துக்கொண்டிருந்தவர் எப்போது மிலிட்ரியில் சேர்ந்தார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தால்இ அது 'அன்புத்தோழி' ஷூட்டிங். "நான் பொதுவா சினிமா பார்க்கிறதில்லை. படிக்கிற காலத்தில் மேடை பக்கம் ஒதுங்கினதில்லை. தமிழ் மக்களை ஒன்று திரட்டும் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற கனவு இருந்தது. அரசியல் சூழ்நிலைகளில் அது கைகூடவில்லை. இப்போது நண்பர்களின் அன்பு வேண்டுகோளை தட்டமுடியாமல் இந்தப் படத்தில் அப்படியொரு கொள்கை முழக்க கேரக்டரில் நடிக்கிறேன்" என்றார் இந்த சினிமா எதிர்ப்பாளர். 'அன்புத்தோழி'யில் திருமாவளவனுக்கு மக்களுக்காக போராடும் புரட்சிவாதி கேரக்டர். இதற்காக சென்னையை அடுத்த திரிசூலம் கல்குவாரியில் பெட்ரோல் குண்டுகளுக்கு நடுவே குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்தார். இது தவிர கயிறை பிடித்து மலை ஏறுவது போன்ற சாகஸங்களையும் தேர்ந்த ஸ்டண்ட் நடிகர்போல் அசத்திக்கொண்டிருந்தார் திருமா. படத்தின் இயக்குனர் கிருபாஇ பேசுகையில் பாதி வார்த்தைகளை திருமாவளவன் புராணமே நிறைத்திருந்தது. "ஆலந்தூர் லாட்ஜில் தங்கிக்கொண்டு தினம் வந்து நடித்துக்கொடுக்கிறார். ஒரு அரசியல்வாதி போலவே அவர் இல்லை" என்பது இவர் ஆச்சர்யம். இந்தப்படத்தில் நாயகி அறிமுக நாயகி சவுமியா. இயக்குனர் அகத்தியனின் மகள் இவர். திருமாவளவன் சமீபகாலத்தில் தனித்தமிழ் காதலராக உருவெடுத்திருக்கிறார். இவரது சினிமா வசனம் எப்படியிருக்கும்? யோசித்துப் பார்க்கும்போதே சிரிப்பு பொங்குகிறது. படம் வந்தால் பார்க்கிறவர்கள் வயிறு பணால்தான்! [size=18]<b> தகவல் சினிசௌத் என்னும் இணயத்திரைப் பத்திரிக்கையில் இருந்து பெறப்பட்டது.</b> Re: தொல். திருமாவளவனை வம்பிற்கு இழுக்கும் திரை இணய ஊடகம் ஒன்று. - Mathan - 08-03-2005 Mathuran Wrote:திருமாவள்வன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவலினை வெளியிடும் சாக்கில் திரப்படத்துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வால்டர் தேவாரம் என்பவரை போல திருமாவளவன் தோற்றமளிக்கின்றார் என தேவையற்ற வகையில் செய்தி உருவாக்கப் பட்டுள்ளது. இவ் இணயப் பத்திரிகை தமிழர்களை இளிவுபடுத்தும் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரன் இந்த செய்தியையும் அதில் வால்டர் தேவாரம் போலிருக்கிறார் என்பதை வைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்ல முடியலையே? - Niththila - 08-03-2005 எது எப்படியோ எமது போராட்டத்தை சித்தரிப்பதாக சொல்லி கொச்சைப்படுத்தாமல் படத்தை எடுத்தால் ஈழத்து மற்றம் புலம் பெயர் ஈழத் தமிழர்களது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் Re: தொல். திருமாவளவனை வம்பிற்கு இழுக்கும் திரை இணய ஊடகம் ஒன்று. - Mathuran - 08-03-2005 Mathan Wrote:-------------------------------------------------Mathuran Wrote:திருமாவள்வன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவலினை வெளியிடும் சாக்கில் திரப்படத்துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வால்டர் தேவாரம் என்பவரை போல திருமாவளவன் தோற்றமளிக்கின்றார் என தேவையற்ற வகையில் செய்தி உருவாக்கப் பட்டுள்ளது. இவ் இணயப் பத்திரிகை தமிழர்களை இளிவுபடுத்தும் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர் மதன் அவர்களே மேலோட்டமாக பார்த்தால் இச் செய்தியின் சூட்ச்மத்தினை யாரும் சரிவர புரிந்துகொள்ளமாட்டார்கள். திருமாவளவன் ஏற்று நடிக்கும் பாத்திரமோ மேலாண்மை போக்குடயவர்களால் சிரழித்து ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைசிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமர மக்களின் விடுதலைக்காக போராடும் தலைவன் என்னும் பாத்திரம். அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமையை களைந்து அவர்களின் சுயமரியாதைக்காக போராடும் ஒரு வீரனை. பாமரமக்களை கொன்று குவித்ததாக மனித உரிமை வாதிகளால் கருதப்படும் ஒரு மேலண்மை வாதியை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடும் வீரனோடு ஒப்பிட்டு விசமத்தனமாக இச்செய்தி பின்னப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். இதுபோன்ற பலசெய்திகள் இச்செய்தி ஊடகத்தினால் புகுத்த்தப்படுவதனை தமிழ் மக்கள் ஏனோ கண்டிக்க முன்வருவதில்லை. மேலாண்மை வாதத்தினை ஆதரித்தும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்கும் இதுபோன்ற ஊடகங்களை தமிழர்கள் புறம்தள்ள வேண்டும் என்பதே என்போன்ற இளைஞ்ஞர்களின் அவா. |