Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 639 online users.
» 0 Member(s) | 638 Guest(s)
Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,552
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  இந்த இரவில் ஈரநினைவாக.....
Posted by: shanthy - 07-29-2005, 09:05 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (19)

சிறுகதை - இந்த இரவில் ஈரநினைவாக.....
(நன்றி - தமிழழுதம்)
சிறுகதை இணைப்பு - http://www.tamilamutham.net/index.php?opti...d=178&Itemid=33

Print this item

  மீண்டும் Goldentamil.com
Posted by: தமிழரசன் - 07-29-2005, 07:21 AM - Forum: இணையம் - Replies (5)

<img src='http://goldentamilan.com/modules/Gallery/albums/userpics/10002/msn.jpg' border='0' alt='user posted image'>


மீண்டும் www.goldentamil.com

Print this item

  புலிகளின் அலுவலகம் மீது தாக்குதல்!
Posted by: Vaanampaadi - 07-29-2005, 12:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வவுனியா: விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை அலுவலகம் மீது தாக்குதல்!
[வெள்ளிக்கிழமை, 29 யூலை 2005, 05:14 ஈழம்] [வவுனியா நிருபர்]
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை காரியாலயத்தின் மீது இனந் தெரியாதவர்கள் கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாக வவுனியா மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்தவர்களே முதலில் இரண்டு கைக்குண்டுகளை வீசியதாகவும் பின்னர் துப்பாக்கிப் பிரியோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக வவுனியா மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தமேந்திரா தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற சமயம் விடுதலை புலிகளின் நான்கு உறுப்பினர்கள் காரியாலயத்தில் இருந்தபோதும், எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிர்வாக சேவைக காரியாலயத்திற்கு அருகாமையில் 400 மீட்டர் தொலைவில் சிறிலங்கா இராணுவத்தினரின் சோதனைச் சாவடி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


puthinam

Print this item

  ஐ.ஆர்.ஏ ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுகிறது
Posted by: Vaanampaadi - 07-29-2005, 12:18 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஐ.ஆர்.ஏ தனது ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது

வட அயர்லாந்தில் பல தசாப்தங்களாக நடந்து வந்த பிரிவினைவாதப் போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வட அயர்லாந்தில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தி வந்த ஐரிஷ் குடியரசுப் படை தனது வன்முறை இயக்கத்தை இன்று மாலை ஜிம்டி நேரப்படி 1500 மணியிலிருந்து கைவிடுவதாக அறிவித்துவிட்டது.

தனது உறுப்பினர்கள் அனைவரும் ஆயுதங்களை களையுமாறு அது கோரியுள்ளது.

இனி அரசியல் வழிமுறையில் ஈடுபட விரும்புவதாகவும் அது கூறியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை, வட அயர்லாந்தை 1998 ஏப்ரலில் கையெழுத்தான நல்ல வெள்ளி ஒப்பந்தத்துடன் தொடங்கிய ஒரு வழிமுறையின் முடிவுக்கு ஒரு பெரிய அளவில் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

இந்த ஒப்பந்தம், வட அயர்லாந்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட ஒரு நுண்மையான பேரார்வம் மிக்க ஒரு திட்டம்.



இந்த ஒப்பந்த்தின் கீழ், பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசுகள் , அரசியல் கட்சிகள், இரண்டு சமுதாயங்களைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள், என எல்லோருக்கும் கடப்பாடுகள் இருந்தன.

எனவே இந்த ஒப்பந்ததின் இறுதி வெற்றியால் அனைவருக்குமே லாபம்தான்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் தன்மை காரணமாக, ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியைச் சார்ந்தே இருக்க வேண்டியிருந்தது.

ஒரு குழு செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையை செய்ய தாமததித்தால் அது ஒட்டு மொத்த வழிமுறையையே ஸ்தம்பிக்க வைத்துவிடக்கூடும்.
மேலும் கடந்த ஏழு ஆண்டுகளில் இது போல ஒட்டு மொத்த வழிமுறையே ஸ்தம்பித்த பல தருணங்கள் உண்டு.

ஐ ஆர்.ஏ தனது ஆயுதங்களை கீழே போட வைப்பது என்பது தான் மிகவும் சிரமமான கட்டம் ஏனென்றால், ஐ.ஆர்.ஏ ‘தான்’ சரண் அடைவது போல தோற்றம் அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயாராக இல்லை.

ஆனாலும் இந்த அடிப்படையான போர்நிறுத்தம் நீடித்தத்து.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குழுக்கள் காலப்போக்கில் எந்தவிதத்திலும் பொருத்தமற்றவர்களாக, காலாவதியானவர்களாக, அதிலும் குறிப்பாக, ஒரு கத்தோலிக்க ஆண் ஒரு மதுக்கடைக்கு வெளியே சாதாரணமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் போன்ற பல சம்பவங்களுக்குப் பின்னர், தேவையற்ற வகையில் பிரச்ச்னைகளை தோற்றுவிப்பவர்களாக அவர்களது ஆதரவாளர்களுக்கே தெரிய
ஆரம்பித்தனர் என்கிறார் எமது பிபிசி ஆய்வாளர் எலிசபெத் ப்லண்ட்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறுவகையான கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.
ஐ.ஆர்.ஏ வின் இந்த அறிவிப்பை வரவேற்றார் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்



ஆனால் வட அயர்லாந்தில் ப்ரொட்டஸ்டண்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் ஒன்றான அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஸர் ரெக் எம்பி இந்த அறிவிப்பு குறித்து சற்று அவநம்பிக்கையுடனே இருக்கிறார்.

அதேவேளை வட அயர்லாந்தில் ப்ரொக்ரஸிவ் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் டேவிட் இர்வின் இந்த அறிவிப்பில் நம்பிக்கை ஒளியைக் காண்கிறார்.

BBC Tamiloosai

Print this item

  விண்டோஸ் விஸ்டா
Posted by: Mind-Reader - 07-29-2005, 12:01 AM - Forum: கணினி - Replies (66)

<img src='http://www.dinamalar.com/2005july29compumalar/Computer%20Malar%20-%2001A.jpg' border='0' alt='user posted image'>



விண்டோஸ் விஸ்டா

மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும். (விண்டோஸ் 95, 97, 98, 2000) அல்லது சொற்களின் சுருக்கப் பெயர் இருக்கும்.


(விண்டோஸ் எக்ஸ்பியில் எக்ஸ்பி என்பது எக்ஸ்பீரியன்ஸ் என்பதின் சுருக்கமாகும். மி (எம் இ) என்பது மில்லினம் எடிசன் என்பதன் சுருக்கமாகும்.) ஆனால் இந்த வழக்கம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது.

உலகில் இயங்கும் பத்து கம்ப்யூட்டர்களில் ஒன்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்கத் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டருக்கான சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு தான் இதற்கு முன் மைக்ரோசாப்ட் தந்த தொகுப்பாகும். இத்தொகுப்பு வந்தபின் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அளவிலான கால இடைவெளி இதுவரை இயக்கத் தொகுப்பு வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏற்பட்டதில்லை. விண்டோஸ் விஸ்டா தொகுப்பில் பல மாற்றங்களையும் முன்னேறிய வசதிகளையும் தர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களின் வாழ்க்கை இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டரையே மக்கள் சார்ந்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு அதிக நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் இந்த தொகுப்பு இருக்கும். தினசரி வாழ்க்கை தொடர்பான தகவல்களைப் புதிய முறையில் தொகுத்து இயக்கும் பல வசதிகள் இத்தொகுப்பில் தரப்படும். மேலும் தேவைப்படும் தகவல்களுடன் கம்ப்யூட்டரை இயக்குபவரை இணைக்கும் புதிய வழிகள் இத்தொகுப்பின் மூலம் வழங்கப்படும். அத்துடன் வாழ்க்கைய பொருள் உள்ளதாக ஆக்கிடும் சாதனங்களுடன் கம்ப்யூட்டரை இணைக்கும் வழிகளையும் இது கொண்டிடும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிதாய் வர இருக்கும் விண்டோஸ் விஸ்டாவின் முக்கிய இலக்குகளாக மைக்ரோசாப்ட் அறிவித்திருப்பது மிகச் சிறந்த பாதுகாப்பு, தகவல்களை வகைப்படுத்த புதிய வழிகள் மற்றும் அதிகமான தொடர்பு சாதனங்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி. "தெளிவானது, நம்பிக்கைக்குரியது மற்றும் இணைத்துவிட்டால் இது உங்கள் உலகத்திற்கு அதிக தெளிவைக் கொண்டு வரும்" என விண்டோஸ் விஸ்டாவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இவை பற்றிய கூடுதல் தகவல்களும் முதல் சோதனைப் பதிப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் லாங்க் ஹார்ன் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. அப்போது 2004 ஆம் ஆண்டில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்குகள் புதுப்பிக்கப்பட்டதால் வெளியிடப்படும் தேதியும் மீன்டும் மீண்டும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்கென தான் புதிதாய் வடிவமைத்த விண் எப்.எஸ். பைல் (WinFS) சிஸ்டத்தினை முற்றிலுமாக மைக்ரோசாப்ட் கைவிட்டுவிட்டது. இண்டிகோ (Indigo) என்ற பெயரில் இணைய சேவை வழங்கிட தான் உருவாக்கிய கட்டமைப்பிலும், அவலான் (Avalon) எனப் பெயரிடப்பட்ட புதிய கிராபிக்ஸ் தொகுப்பிலும் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

விண்டோஸ் விஸ்டாவின் வசதிகள்

முற்றிலும் புதிய வசதிகள் என்றால் தேடுதல் செயல்பாட்டில் தரப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தினையும் புதிய லேப்டாப் இயக்க தொழில் நுட்பத்தினையும் கூறலாம். "அவலான்' என அழைக்கப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒளிச் சிதறலுடன் கூடிய விண்டோஸ் மற்றும் டாகுமெண்ட்டுகளுக்கேற்ற வகையில் உருவாக்கப்படும் ஐகான்களையும் கூறலாம்.

புதிய தேடும் வசதி:

வேகமாகத் தேடும் பாளம் ("quick search pane,") என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை டைப் செய்து அதனுடன் தொடர்பான பைல்களின் பெயர்களைப் பெறலாம். இது மேக் கம்ப்யூட்டரின் எக்ஸ் டைகர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஸ்பாட்லைட் வசதிக்கு இணையானது. தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை போல்டர்களாகச் சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் கிடைக்கையில் இந்த போல்டர்கள் அப்டேட் செய்யப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி போல்டரை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த போல்டரில் சேர்க்கப்படும்.

ஐகான் : புதிய பொருள்

இனி ஐகான்கள் பைல் வகையைக் குறிக்காது; ஒவ்வொரு பைலின் டெக்ஸ்ட்டைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் டாகுமெண்ட்டின் ஐகான் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த ஐகான் படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை பைலில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும்.

லேப் டாப் கம்ப்யூட்டரில் புதுமை:

விண்டோஸ் விஸ்டா லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத்திலும் மாறுதல்களைக் கொண்டு வர இருக்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்காமல் கூட ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் செட் அப் செய்த தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும்.

நெட்வொர்க்கில் இøணைக்கப்படுகையில் அதனுடன் இணைந்த கம்ப்யூட்டர்களின் அனைத்து பைல்களையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் உள்ள மியூசிக் பைல்களையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும்.

விஸ்டா இயக்குவதற்கு இன்றைய திறன் உள்ள மைக்ரோ பிராசசர் போதும். ஆனால் 512 எம்பி ராம் நினைவகம் தேவைப்படலாம்.

ஒரு மானிட்டரில் பல காட்சிகளையும் ஒரே காட்சியை பல மானிட்டர்களிலும் காட்டக்கூடிய திறனை விஸ்டா கொண்டிருக்கும்.

லேப் டாப் கம்ப்யூட்டரைத் திறக்காமலேயே வெளியே காலண்டர் தகவல், பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் நிலை ஆகியவற்றைக் காட்டும் திறன் கொண்டதாக விஸ்டா லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும்.

மொத்தத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் இன்னும் அதிகத்திறன் கொண்டதாகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு நுகர்வோர் சாதனமாகவும் விஸ்டாவால் மாற்றப்படும்.

விண்டோஸ் விஸ்டாவின் அடிப்படையில் சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று அறிமுகப்படுத்தப் படும். இதன் முழுமையான தொகுப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்படும். ஆனால் இதில் விஸ்டாவின் பெயர் இருக்காது. வெளியிடப்படும் ஆண்டின் எண்ணையே தற்போது விண்டோஸ் சர்வர் தொகுப்புகள் கொண்டுள்ளன. எனவே 2007ல் வெளியிடப்பட்டால் அந்த தொகுப்பு விண்டோஸ் சர்வர் 2007 என்றே அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



1.(அ) விஸ்டா என்பது எதைக் குறிக்கிறது?

"விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர்.

விஸ்டா - ஒரு வேடிக்கைப் பெயர் தான்

வழக்கம்போல மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இந்த பெயர் வைத்து கேலி செய்வோரும் உண்டு. "VISTA"என்பது மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வழக்கமான தடங்கல்களான viruses, Infections, Spyware, Trojans and Adware," ஆகியவற்றின் சுருக்கப் பெயர் என்றும் பலர் இதனைக் கேலி செய்கின்றனர்.

1.(ஆ) விண்டோஸ் தொகுப்பின் வரலாறு

விண்டோஸ் - 1983

விண்டோஸ் 1 - 1985

விண்டோஸ் - 2 1987

விண்டோஸ் 3 - 22 மே 1990

விண்டோஸ் (மல்டி மீடியாவுடன்) - அக்டோபர் 1991

விண்டோஸ் 3.1 - ஏப்ரல் 1992 ( வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது)

விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.1 - அக்டோபர் 1992

விண்டோஸ் என்.டி. 3.1 - ஆகஸ்ட் 1993

இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது.

விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.11 - பிப்ரவரி 1994

விண்டோஸ் என்.டி. 3.51 - ஜூன் 1995

விண்டோஸ் 95 - ஆகஸ்ட் 1995.

மிகப் பெரிய அளவிலான விளம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

விண்டோஸ் என்.டி. 4 - ஆகஸ்ட் 1996

விண்டோஸ் சி.இ. - நவம்பர் 1996

விண்டோஸ் சி.இ. 2 - நவம்பர் 1997

விண்டோஸ் 98 - ஜூன் 1998

விண்டோஸ் சி.இ. 2.1 - ஜூலை 1998

விண்டோஸ் 98 எஸ்.இ. – மே 1999

விண்டோஸ் சி.இ. 3 - 1999

விண்டோஸ் 2000 - பிப்ரவரி 2000

விண்டோஸ் மில்லினம் - ஜூன் 2000

விண்டோஸ் எக்ஸ்பி - அக்டோபர் 2001

விண்டோஸ் சர்வர் 2003 - 2003

விண்டோஸ் விஸ்டா - ஜூன் 2006 ( வர உள்ளது)விண்டோஸ் விஸ்டா - ஜூன் 2006 ( வர உள்ளது)

நன்றி: தினமலர்

Print this item

  மாஞ்சோலை உறவுப் பாலம்..!
Posted by: kuruvikal - 07-28-2005, 11:29 PM - Forum: இணையம் - Replies (4)

யாகூ குழுமம் ஒன்று யாழ் கள உறவுகள் தமக்கிடையே உறவுப்பாலமமைத்து ஆங்கிலத்தில் கலந்துரையாட பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது...! பலமான உறவுப் பாலம் ஒன்று அமைக்க முயன்றுதான் பாருங்களேன்...!

ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு அவசியம்... http://uk.groups.yahoo.com/group/maanjsoolai/

Print this item

  உராய்வு
Posted by: இளைஞன் - 07-28-2005, 10:40 PM - Forum: நூற்றோட்டம் - Replies (298)

<span style='font-size:30pt;line-height:100%'>நூல் வெளியீடு</span>
அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

<b>நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு,
இளைஞனின் அன்பான அழைப்பு இது.</b> வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது.

<b>"உராய்வு"</b> கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ள "உராய்வு இணையத்தளத்தில்" மேலதிக விபரங்களையும், நிகழ்வுகள் (+நிகழ்ச்சி நிரல்கள்) பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உராய்வு பற்றிய அனைத்து ஆவணங்களையும் அங்கு பெறக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. (இத்தளம் இன்னும் முழுமைபெறவில்லை என்பதை அறியத்தருகிறேன்).

<img src='http://www.yarl.com/forum/files/notice_uraayvu1_213.gif' border='0' alt='user posted image'>

* மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Print this item

  தகவல் தெரிந்தால் சொல்லியனுப்பு
Posted by: வன்னியன் - 07-28-2005, 09:25 PM - Forum: நகைச்சுவை - Replies (8)

அன்பான அப்புவை காணவில்லை . எல்லோராலும் மப்பு அப்பு என்று அழைக்கப்படும் சின்னப்புவை சிலநாட்களாக களத்தில் காணவில்லை. அவர் என்னிடம் சொல்லியிருந்தார்
கள்ளிருந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என்று
நானும் தனிமடல் மூலம் (பொய்) அனுப்பியிருந்தேன் அவரை காணவில்லை. உந்த சின்னாச்சி கோவத்திலை மனிசனை போட்டு கீட்டு விட்டாவோ தெரியவில்லை
தகவல் தெரிந்தால் சொல்லியனுப்பு
போதையிலிருந்தால் வருகிறேன்.

Print this item

  சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
Posted by: வன்னியன் - 07-28-2005, 09:17 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (5)

சிறிலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கிறோம்: இந்தியா அறிவிப்பு
[வியாழக்கிழமை, 28 யூலை 2005, 18:39 ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பதில்:

சிறிலங்காவுடன் இந்திய பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்தது.

இது பற்றி இந்தியா ஆராய்ந்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளுக்கான நிறுவனக் கட்டமைப்பு ஏதும் செயல்பாட்டில் இல்லை.

எனினும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு நாடுகள் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இராணுவ பயிற்சி நிறுவனங்களில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரண உதவி, உயர் இராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம், கடற்படை கப்பல்களின் பயணம், கடல் பகுதிகளில் கூட்டுக் கண்காணிப்பு ஆகியவை சிறிலங்காவுடனான பிற ஒத்துழைப்பு நடவடிக்கைகளில்


:twisted: :evil: :evil: :evil: :evil: :evil: சுட்டது புதினத்திலிருந்து

Print this item

  வணக்கம்
Posted by: ப்ரியசகி - 07-28-2005, 08:01 PM - Forum: அறிமுகம் - Replies (24)

வணக்கம்..வணக்கம்..வணக்கம்...
பல முறை சொல்கிறேன்...
தமிழ் அன்பு உறவுகள் முன்னே...

நான் இங்கு புதிதாக இணைந்துள்ளேன்..என்னோட பங்களிப்பை நான் முடிந்த வரை கொடுப்பேன்..உங்கள் அன்பும்,ஆதரவும் எனக்கு கிடைக்குமா?

Print this item