07-29-2005, 12:01 AM
<img src='http://www.dinamalar.com/2005july29compumalar/Computer%20Malar%20-%2001A.jpg' border='0' alt='user posted image'>
விண்டோஸ் விஸ்டா
மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்
மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும். (விண்டோஸ் 95, 97, 98, 2000) அல்லது சொற்களின் சுருக்கப் பெயர் இருக்கும்.
(விண்டோஸ் எக்ஸ்பியில் எக்ஸ்பி என்பது எக்ஸ்பீரியன்ஸ் என்பதின் சுருக்கமாகும். மி (எம் இ) என்பது மில்லினம் எடிசன் என்பதன் சுருக்கமாகும்.) ஆனால் இந்த வழக்கம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது.
உலகில் இயங்கும் பத்து கம்ப்யூட்டர்களில் ஒன்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்கத் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டருக்கான சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு தான் இதற்கு முன் மைக்ரோசாப்ட் தந்த தொகுப்பாகும். இத்தொகுப்பு வந்தபின் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அளவிலான கால இடைவெளி இதுவரை இயக்கத் தொகுப்பு வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏற்பட்டதில்லை. விண்டோஸ் விஸ்டா தொகுப்பில் பல மாற்றங்களையும் முன்னேறிய வசதிகளையும் தர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களின் வாழ்க்கை இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டரையே மக்கள் சார்ந்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு அதிக நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் இந்த தொகுப்பு இருக்கும். தினசரி வாழ்க்கை தொடர்பான தகவல்களைப் புதிய முறையில் தொகுத்து இயக்கும் பல வசதிகள் இத்தொகுப்பில் தரப்படும். மேலும் தேவைப்படும் தகவல்களுடன் கம்ப்யூட்டரை இயக்குபவரை இணைக்கும் புதிய வழிகள் இத்தொகுப்பின் மூலம் வழங்கப்படும். அத்துடன் வாழ்க்கைய பொருள் உள்ளதாக ஆக்கிடும் சாதனங்களுடன் கம்ப்யூட்டரை இணைக்கும் வழிகளையும் இது கொண்டிடும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிதாய் வர இருக்கும் விண்டோஸ் விஸ்டாவின் முக்கிய இலக்குகளாக மைக்ரோசாப்ட் அறிவித்திருப்பது மிகச் சிறந்த பாதுகாப்பு, தகவல்களை வகைப்படுத்த புதிய வழிகள் மற்றும் அதிகமான தொடர்பு சாதனங்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி. "தெளிவானது, நம்பிக்கைக்குரியது மற்றும் இணைத்துவிட்டால் இது உங்கள் உலகத்திற்கு அதிக தெளிவைக் கொண்டு வரும்" என விண்டோஸ் விஸ்டாவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இவை பற்றிய கூடுதல் தகவல்களும் முதல் சோதனைப் பதிப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் லாங்க் ஹார்ன் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. அப்போது 2004 ஆம் ஆண்டில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்குகள் புதுப்பிக்கப்பட்டதால் வெளியிடப்படும் தேதியும் மீன்டும் மீண்டும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டது.
இதற்கென தான் புதிதாய் வடிவமைத்த விண் எப்.எஸ். பைல் (WinFS) சிஸ்டத்தினை முற்றிலுமாக மைக்ரோசாப்ட் கைவிட்டுவிட்டது. இண்டிகோ (Indigo) என்ற பெயரில் இணைய சேவை வழங்கிட தான் உருவாக்கிய கட்டமைப்பிலும், அவலான் (Avalon) எனப் பெயரிடப்பட்ட புதிய கிராபிக்ஸ் தொகுப்பிலும் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
விண்டோஸ் விஸ்டாவின் வசதிகள்
முற்றிலும் புதிய வசதிகள் என்றால் தேடுதல் செயல்பாட்டில் தரப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தினையும் புதிய லேப்டாப் இயக்க தொழில் நுட்பத்தினையும் கூறலாம். "அவலான்' என அழைக்கப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒளிச் சிதறலுடன் கூடிய விண்டோஸ் மற்றும் டாகுமெண்ட்டுகளுக்கேற்ற வகையில் உருவாக்கப்படும் ஐகான்களையும் கூறலாம்.
புதிய தேடும் வசதி:
வேகமாகத் தேடும் பாளம் ("quick search pane,") என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை டைப் செய்து அதனுடன் தொடர்பான பைல்களின் பெயர்களைப் பெறலாம். இது மேக் கம்ப்யூட்டரின் எக்ஸ் டைகர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஸ்பாட்லைட் வசதிக்கு இணையானது. தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை போல்டர்களாகச் சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் கிடைக்கையில் இந்த போல்டர்கள் அப்டேட் செய்யப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி போல்டரை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த போல்டரில் சேர்க்கப்படும்.
ஐகான் : புதிய பொருள்
இனி ஐகான்கள் பைல் வகையைக் குறிக்காது; ஒவ்வொரு பைலின் டெக்ஸ்ட்டைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் டாகுமெண்ட்டின் ஐகான் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த ஐகான் படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை பைலில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும்.
லேப் டாப் கம்ப்யூட்டரில் புதுமை:
விண்டோஸ் விஸ்டா லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத்திலும் மாறுதல்களைக் கொண்டு வர இருக்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்காமல் கூட ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் செட் அப் செய்த தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும்.
நெட்வொர்க்கில் இøணைக்கப்படுகையில் அதனுடன் இணைந்த கம்ப்யூட்டர்களின் அனைத்து பைல்களையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் உள்ள மியூசிக் பைல்களையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும்.
விஸ்டா இயக்குவதற்கு இன்றைய திறன் உள்ள மைக்ரோ பிராசசர் போதும். ஆனால் 512 எம்பி ராம் நினைவகம் தேவைப்படலாம்.
ஒரு மானிட்டரில் பல காட்சிகளையும் ஒரே காட்சியை பல மானிட்டர்களிலும் காட்டக்கூடிய திறனை விஸ்டா கொண்டிருக்கும்.
லேப் டாப் கம்ப்யூட்டரைத் திறக்காமலேயே வெளியே காலண்டர் தகவல், பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் நிலை ஆகியவற்றைக் காட்டும் திறன் கொண்டதாக விஸ்டா லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும்.
மொத்தத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் இன்னும் அதிகத்திறன் கொண்டதாகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு நுகர்வோர் சாதனமாகவும் விஸ்டாவால் மாற்றப்படும்.
விண்டோஸ் விஸ்டாவின் அடிப்படையில் சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று அறிமுகப்படுத்தப் படும். இதன் முழுமையான தொகுப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்படும். ஆனால் இதில் விஸ்டாவின் பெயர் இருக்காது. வெளியிடப்படும் ஆண்டின் எண்ணையே தற்போது விண்டோஸ் சர்வர் தொகுப்புகள் கொண்டுள்ளன. எனவே 2007ல் வெளியிடப்பட்டால் அந்த தொகுப்பு விண்டோஸ் சர்வர் 2007 என்றே அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1.(அ) விஸ்டா என்பது எதைக் குறிக்கிறது?
"விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர்.
விஸ்டா - ஒரு வேடிக்கைப் பெயர் தான்
வழக்கம்போல மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இந்த பெயர் வைத்து கேலி செய்வோரும் உண்டு. "VISTA"என்பது மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வழக்கமான தடங்கல்களான viruses, Infections, Spyware, Trojans and Adware," ஆகியவற்றின் சுருக்கப் பெயர் என்றும் பலர் இதனைக் கேலி செய்கின்றனர்.
1.(ஆ) விண்டோஸ் தொகுப்பின் வரலாறு
விண்டோஸ் - 1983
விண்டோஸ் 1 - 1985
விண்டோஸ் - 2 1987
விண்டோஸ் 3 - 22 மே 1990
விண்டோஸ் (மல்டி மீடியாவுடன்) - அக்டோபர் 1991
விண்டோஸ் 3.1 - ஏப்ரல் 1992 ( வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது)
விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.1 - அக்டோபர் 1992
விண்டோஸ் என்.டி. 3.1 - ஆகஸ்ட் 1993
இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது.
விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.11 - பிப்ரவரி 1994
விண்டோஸ் என்.டி. 3.51 - ஜூன் 1995
விண்டோஸ் 95 - ஆகஸ்ட் 1995.
மிகப் பெரிய அளவிலான விளம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
விண்டோஸ் என்.டி. 4 - ஆகஸ்ட் 1996
விண்டோஸ் சி.இ. - நவம்பர் 1996
விண்டோஸ் சி.இ. 2 - நவம்பர் 1997
விண்டோஸ் 98 - ஜூன் 1998
விண்டோஸ் சி.இ. 2.1 - ஜூலை 1998
விண்டோஸ் 98 எஸ்.இ. – மே 1999
விண்டோஸ் சி.இ. 3 - 1999
விண்டோஸ் 2000 - பிப்ரவரி 2000
விண்டோஸ் மில்லினம் - ஜூன் 2000
விண்டோஸ் எக்ஸ்பி - அக்டோபர் 2001
விண்டோஸ் சர்வர் 2003 - 2003
விண்டோஸ் விஸ்டா - ஜூன் 2006 ( வர உள்ளது)விண்டோஸ் விஸ்டா - ஜூன் 2006 ( வர உள்ளது)
நன்றி: தினமலர்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&