| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 441 online users. » 0 Member(s) | 439 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,287
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| பாலியல் வல்லுறவு புரிந்தபிக்குவைத் தேடுகிறது பொலீஸ் |
|
Posted by: தமிழரசன் - 07-26-2005, 01:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பாலியல் வல்லுறவு புரிந்தபிக்குவைத் தேடுகிறது பொலீஸ்
சப்ரகமுவவைச் சேர்ந்த சோதிடரான பௌத்த பிக்கு ஒருவர் வேலைபெற்றுத் தரு வதாகக் கூறி 18 வயதுப் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இவரைப் பொலீஸார் தேடிவருகின்றனர்.
வேலை விடயம் தொடர்பாகப் பேச வேண் டும் எனக் கூறி அவரது ஓய்வு விடுதிக்கு அப் பெண்ணை வரவழைத்துள்ளார் பிக்கு. பின் னர் அப்பெண்ணை பயமுறுத்தி பாலியல் வல் லுறவுக்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவா கியுள்ளார்.
இந்த பிக்கு பிரபல நடிகைகள் பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்றும் பல இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
புளத்கொ{ஹபிட்டிய பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.குணவர்தன இத்தகவலைத் தெரிவித்தார்.
Goodsrilanka
|
|
|
| டெல்லி-தொழிலாளர்- போலீஸ் பயங்கர மோதல்-700 வாகனங்கள் எரிப்பு |
|
Posted by: தமிழரசன் - 07-26-2005, 04:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>டெல்லி அருகே பதற்றம்„ தொழிலாளர்- போலீஸ் பயங்கர மோதல் தடியடியில் காயம் 700 வாகனங்கள் எரிப்பு </b>
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jul/26/others/C1110_1st-page.jpg' border='0' alt='user posted image'>
குர்கவான், ஜூன். 26- டெல்லி அருகே தொழிலாளர்களும், போலீசாரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அது கலவரமாக மாறியது. போலீஸ் தடியடியிலும், கல் வீச்சிலும் 700 பேர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் தீவைத்து எhpக்;கப்பட்டன.
டெல்லியை அடுத்த அhpயானா மாநிலத்தில் மனேசர் என்ற இடத்தில் ஹேhண்டா மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் தயாhpக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு நடந்த வேலைநிறுத்தம் காரணமாக 50 தொழிலாளர்களை சஸ்பெண்டு செய்தும், 4 பேரை பணிநீக்கம் செய்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோhp ஹேhண்டா தொழிற்சாலையின் தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் திரண்டு, நேற்று ஊர்வலமாக சென்று டெல்லி-குர்கவான் சாலையில் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை கலைந்து போகும்படி எச்சாpத்தார்கள்.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க உறுதி அளிக்கும் வரை அந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று தொழிலாளர்கள் கூறி விட்டனர்.
அப்போது போலீசார் தொழிலாளர்களின் கையை பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். அதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. போலீசாரை தொழிலாளர்கள் தாக்க தொடங்கினார்கள். போலீஸ் வாகனங்களையும், மற்ற வாகனங்களையும் தீவைத்து கொளுத்தினார்கள். தொழிலாளர்கள் சரமாhp கல்வீசியதிலும், தடிகளை கொண்டு தாக்கியதிலும் டி.எஸ்.பி. தாகியா உள்பட பல போலீசார் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து பெரும் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசாhpன் கை ஓங்கியது.
தொழிலாளர்களை அவர்கள் விரட்டி விரட்டி லத்தியால் அடித்தனர். போலீசாhpன் தடியடியை தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் சிதறி ஓடினார்கள். ஆனால் போலீசார் விடாமல் துரத்தி துரத்தி அடித்தனர். இதில் பல தொழிலாளர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்கள் ஓட முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தனர். போலீஸ் தடியடியில் பல தொழிலாளர்களின் கை முறிந்தது. அவர்கள் வலியால் துடித்தனர். போலீஸ் தடியடியிலும், தொழிலாளர்கள் தாக்கியதிலும் மொத்தம் 700 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாhpன் எண்ணிக்கை கணிசமாக அதிகாpத்ததால் அவர்கள் தொழிலாளர்களை சுற்றி வளைத்து நு}ற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடம் போர்க்களம் போல காணப்பட்டது. அந்தப்பகுதியில் தொழிலாளர்களின் உடமைகள் சிதறிக் கிடந்தன. பல வாகனங்கள் எhpந்த நிலையில் இருந்தன. ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
இந்த கலவரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம், பீதி நிலவுகிறது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா தடியடியில் 700 பேர் படுகாயம் அடைந்ததாக தொpவித்தார். அhpயானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கூறுகையில், ……தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும்†† என்றhர்.
ஜhர்ஜ;பெர்னாண்டஸ்- கம்யூ. கண்டனம்
தே.ஜ. கூட்டணி அமைப்பாளர் ஜhர்ஜ; பெர்னாண்டஸ் கூறும்போது, ……போலீசாhpன் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. இதை பாராளுமன்றத்தில் எழுப்புவேன்†† என்றhர்.
இச்சம்பவத்துக்கு பாராளுமன்ற மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாசுதேவ் பட்டாச்சாhpயா கடும் கண்டனம் தொpவித்து உள்ளார். ……போலீசார் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. இந்த விவகாரத்தை மார்க்சிய கம்யூனிஸ்டு சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்†† என்றhர்.
சோனியா உத்தரவு
குர்கவானில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தொpவித்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அதுபற்றி விசாரணை நடத்தும்படி அhpயானா முதல்வர் ஹூடாவுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அந்த சம்பவம் பற்றி மாஜpஸ்திரேட் விசாரணைக்கு அhpயானா அரசு உத்தரவிட்டு இருக்கிறது. .dinakaran
|
|
|
| உள்ளே வரலாமா? |
|
Posted by: Maruthankerny - 07-26-2005, 01:45 AM - Forum: அறிமுகம்
- Replies (43)
|
 |
என்னையும் யாழ் வரவேற்கும் எனும் நினைப்புடன் என் முதற்தடத்தை பதிக்கிறேன்!!!!!!
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
|
|
|
| விளையாட்டு கல்வி |
|
Posted by: Maruthankerny - 07-26-2005, 01:18 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (3)
|
 |
எமது தாய்நாட்டில் கல்விமுறையில்.... அறிவு வளர்சி, தேகப்பயிற்சி இவ்விரண்டிற்குமுள்ள ஸ்தானங்களை நிர்ணயிக்கவேண்டும். ஆரோக்கியமான சரீரம்முள்ளவர்குத்தான் ஆரோக்கியமான மனமிருக்கும் என்ற உண்மையை நமது கல்வி முறையானது முற்றிலும் அலட்சியம் செய்வதாயிருக்கிறது. யுத்தத்திற்கு முன் எமது தாய்நாட்டில் எவருமே அவ்விடயமாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை, தேசத்தின் உயர்விற்கு அறிவு வளர்ச்சி மட்டுமே போதும் என்று தேகப்பயிற்சியை அலட்சியம் செய்துவிட்டார்கள். வாழ்கைபோராட்டத்திற்கு அறிவை காட்டிலும் சரீர பலம்தான் முக்கியம். என்பதை அவர்கள் மறந்து விட்டதால்..... அறிவாளிகள் கோளைகளாயினர். தேகப்பயிற்சி இல்லாத ஆண்களின் மனதில் பல கெட்ட எண்ணங்கள் தோன்றும், திடசாவிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் பெண் சம்மந்தமான இச்சையை கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகின்றது.
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
|
|
|
| முரளியின் சிறந்த பந்து வீச்சால் இலங்கை வெற்றி |
|
Posted by: Sriramanan - 07-25-2005, 04:52 PM - Forum: விளையாட்டு
- Replies (6)
|
 |
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிகட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சிறந்த பந்து வீச்சுக் காரணமாக இலங்கை 240 ஓட்;டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி அஸ்கிரிய மைதானத்தி;ல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இன்றைய ஆட்டத்தின் போதே இந்த வெற்றி இலங்கை அணிக்கு கிடைத்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸ்களில் இலங்கை அணி 150 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களையும் பெற்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணிப்பெற்ற 375 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 137 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் போது இலங்கையின் வலது முறை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 46 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அவர் இரண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி: சங்கதி
|
|
|
| அர்ரா சக்கை |
|
Posted by: SUNDHAL - 07-25-2005, 02:28 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (30)
|
 |
கோவையை சேர்ந்த ரஜpனி ரசிகர் ஒருவர் தொடர்ந்து 102 நாட்கள் …சந்திரமுகி† படம் பார்த்துள்ளார்.
கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்தவர் வாலிபர் முத்து. இவர் தீவிர ரஜpனி ரசிகர் ஆவார். கோவையில் உள்ள ஒரு காய்கறிக்கடையில் பணியாற்றும் முத்து, குமரன் திரையரங்கில் ரஜpனி நடித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி படத்தை 102 நாட்கள் தினமும் பார்த்து ரசித்துள்ளார்.
படம் வெளிவந்து ஒரு வாரமே ஆன நிலையில் முத்து, திரையரங்கின் நிர்வாகிகளிடம், இந்தப் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும். உங்கள் திரையரங்கில் தான் தினமும் பார்ப்பேன் என்று கூறி உள்ளார். அதன்படியே அவர் பார்த்தும் உள்ளார். 50 நாட்கள் அவர் தினமும் சந்திரமுகியை பார்த்த நிலையில் திரையரங்கு நிர்வாகம் அவருக்கு மீதி 50 நாட்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி இருக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து 102 நாட்கள் சந்திரமுகி படம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| திருச்சியில் பயங்கரம் |
|
Posted by: தமிழரசன் - 07-25-2005, 12:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
<b>திருச்சியில் பயங்கரம்„பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார், 4 குழந்தை எரித்து கொலை, தந்தையும் தீக்குளித்து சாவு, மனைவி உயிர் ஊசல் நடத்தையில் சந்தேகத்தால் குடும்பம் அழிந்தது </b>
தீயில் கருகி இறந்த சிறுவன் பார்த்திபன் பிணமாக கிடக்கும் காட்சி.
http://www.dinakaran.com/daily/2005/Jul/25...4_parthiban.jpg
திருச்சி.ஜூலை.25- திருச்சியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் 4 குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி ஓட்டல் தொழிலாளி தீ வைத்தார். இதில் 4 குழந்தைகள் கருகி இறந்தனர். மனைவி உயிருக்கு போராடுகிறhர். குடும்பத்தையே எரித்த தொழிலாளி தானும் தீக்குளித்தார்.
இலங்கையைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி யோகராணி (வயது45). இவர்களுக்கு சிந்துஜhன் என்ற மகன் உள்ளான். கணவர் சந்திரசேகர் இறந்ததும் யோகராணி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் தமிழகம் வந்தனர். முதலில் திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகரில் வசித்து வந்தார். பின்னர் திருச்சி திருவானைக்காவல் பர்மா காலனியில் யோகராணி வசித்து வந்தார். அப்போது சுப்பிரமணியன் என்பவருக்கும் யோகராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கட்டிட வேலை
சுப்பிரமணி-யோகராணி தம்பதிகளுக்கு ஐங்கரன். நிசாந்தினி. பார்த்தீபன் என்ற 3 குழந்தைகள் பிறந்தன. யோகராணி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். சுப்பிரமணியன் தனது குடும்பத்தை கவனிக்காமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தார்.
பின்னர் வேலை தேடி கடந்த 2 வருடங்களுக்கு முன் சென்னை சென்றhர். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். நேற்று மாலை சுப்பிரமணியன் திருவானைக்காவல் வந்தார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகள் முதலில் வசித்து வந்த இடத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் இல்லை. திருவானைக்காவல் பர்மா காலனியில் வசிப்பதாக தகவல் கிடைத்து இரவில் அங்கு சென்றhர். அப்போது யோகராணிக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நடத்தை சந்தேகம்
யோகராணி கட்டிட வேலைக்கு சென்று 4 குழந்தைகளையும் கவனித்து வருகிறhர். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறhர். ஆனால் சுப்பிரமணியன் தனது மனைவி யோகராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார்.
தீ வைப்பு
பின்னர் சுப்பிரமணியன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் சுப்பிரமணியன் மீண்டும் யோகராணி வீட்டுக்கு வந்தார். அங்கு யோகராணி உள்பட குழந்தைகள் அனைவரும் நன்றhக தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது சுப்பிரமணியன் ஜன்னல் கதவை திறந்தார். தான் ஏற்கனவே வாங்கி வந்த பெட்ரோலை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ஊற்றி தீ யை பற்ற வைத்தார். பின்னர் வீட்டின் அருகில் தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் அந்த குடிசை வீடு குபீரென்று தீப்பிடித்து எரிந்தது.
6 பேர் கருகினர்
இதில் சுப்பிரமணியன். யோகராணி. குழந்தைகள் சிந்துஜhன்(வயது16). ஐங்கரன்(வயது13). பார்த்தீபன் (வயது15). நிசாந்தினி(வயது12) ஆகிய 6 பேரும் உடல் கருகி துடித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருவரங்கம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீக்காயம் அடைந்த 6 பேரையும் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 7.30 மணிக்கு ஐங்கரனும், நிசாந்தினியும் இறந்தனர். 7.35 மணிக்கு சிந்துஜhன் உயிர் பிரிந்தது. 7.40 மணிக்கு பார்த்தீபன் இறந்தான். 9.30 மணி அளவில் தந்தை சுப்பிரமணியனும் இறந்தார். யோகராணி நிலைமை மிக, மிக மோசமாக உள்ளது. அவரை காப்பாற்றுவது சிரமம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு குடும்பமே அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி திருவானைக்காவல் பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். தீ வைத்தது குறித்து சுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரால் சரியாக பேச முடியவில்லை. எரித்துக்கொல்லப்பட்ட சிந்துஜhன் ஐ.டி.ஐ. படித்து வந்தான். மற்ற 3 குழந்தைகளும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். யோகராணி கூலி வேலை செய்து தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். மாதம் 500 ரூபாய் வாடகை செலுத்தி ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடும் நேற்று தீக்கிரையாகி விட்டது.
அங்கிள் காப்பாத்துங்க காப்பாத்துங்க
குழந்தைகள் எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் வீட்டிற்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தார். அப்போது அந்த குழந்தைகள் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து ……அங்கிள் எங்களை காப்பாத்துங்க, காப்பாத்துங்க†† என்று கதறினர். உடனடியாக போலீசார் அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
dinakaran
|
|
|
| யுூலைகள் வந்தால் ..... |
|
Posted by: shanthy - 07-25-2005, 10:31 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
யுூலைகள் வந்தால்
யுூலைகள் வந்தால்
வார்த்தைகள் கூட
விழிகசியும் வரலாறுகள் அவை
எங்களது இதயங்களில்
ஆணியடிக்கப்பட்ட அகாலப்பொழுதுகள்
அரைகுறையுயிரில் அறுத்தெறியப்பட்ட
சந்ததியின் சோகம் சொல்லும் யுூலைகள்
எங்களுக்குச் சொந்தம்.
ஒன்றா இரண்டா ஓமென்றிருக்க ?
ஓராயிரம் வதை எங்கள்
உயிர் தின்றகதை...
மறக்க நினைத்தாலும்
மனசைப் பிடுங்கி நெஞ்சை
மறுபடி மறுபடி
நினைக்க வைக்கும்
நெருப்பு யுூலைகள்.
ஆறா ரணங்களவை - எம்மில்
அனலை மூட்டுவித்த
காட்டு மிராண்டிகளின்
கதைமுடித்த 'யுலை5"
கரும்புலிகள் கதையுரைக்கும்
மெய்சிலிர்க்க மில்லரது
மனவுறுதி கேட்டு
மேனியுதற ஓடிய பேய்களின்
கதையுரைத்த யுூலையும் எங்களதே.....
நாமழுத யுூலைகள்
நம்முள் ஆறாது - ஆனாலும்
நீயழுத யுூலை 5
பகையே .....!
தினமிங்கு பிறக்கிறது
குறித்துக் கொள்....!
இனி தினம் யுூலை 5
உன் நெஞ்சில்
நெருப்பு மூட்டும்.
(இன்னொரு காத்திருப்பு கவிதைத் தொகுதியிலிருந்து.....)
(யுூலை 2000)
|
|
|
|