![]() |
|
யுூலைகள் வந்தால் ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: யுூலைகள் வந்தால் ..... (/showthread.php?tid=3841) |
யுூலைகள் வந்தால் ..... - shanthy - 07-25-2005 யுூலைகள் வந்தால் யுூலைகள் வந்தால் வார்த்தைகள் கூட விழிகசியும் வரலாறுகள் அவை எங்களது இதயங்களில் ஆணியடிக்கப்பட்ட அகாலப்பொழுதுகள் அரைகுறையுயிரில் அறுத்தெறியப்பட்ட சந்ததியின் சோகம் சொல்லும் யுூலைகள் எங்களுக்குச் சொந்தம். ஒன்றா இரண்டா ஓமென்றிருக்க ? ஓராயிரம் வதை எங்கள் உயிர் தின்றகதை... மறக்க நினைத்தாலும் மனசைப் பிடுங்கி நெஞ்சை மறுபடி மறுபடி நினைக்க வைக்கும் நெருப்பு யுூலைகள். ஆறா ரணங்களவை - எம்மில் அனலை மூட்டுவித்த காட்டு மிராண்டிகளின் கதைமுடித்த 'யுலை5" கரும்புலிகள் கதையுரைக்கும் மெய்சிலிர்க்க மில்லரது மனவுறுதி கேட்டு மேனியுதற ஓடிய பேய்களின் கதையுரைத்த யுூலையும் எங்களதே..... நாமழுத யுூலைகள் நம்முள் ஆறாது - ஆனாலும் நீயழுத யுூலை 5 பகையே .....! தினமிங்கு பிறக்கிறது குறித்துக் கொள்....! இனி தினம் யுூலை 5 உன் நெஞ்சில் நெருப்பு மூட்டும். (இன்னொரு காத்திருப்பு கவிதைத் தொகுதியிலிருந்து.....) (யுூலை 2000) - kuruvikal - 07-25-2005 தமிழர் வாழ்வியலில் கண்ணீரும் வீரமும் தந்த யூலைக் கவிதை சிறப்பு..நன்றி அக்கா..! - வெண்ணிலா - 07-25-2005 நன்றி சாந்தியக்கா - Niththila - 07-25-2005 சாந்தி அக்கா கன நாளைக்கு பிறகு கவிதையுடன் வந்திருக்கிறியள் நன்றி அக்கா கவிதைக்கு - Mathan - 07-25-2005 சாந்தியக்கா முன்பு எழுதிய கவிதையை தொகுப்பிலிருந்து மறு பிரசுரம் செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். - kavithan - 07-27-2005 நன்றாக இருக்கு அக்கா |