Yarl Forum
விளையாட்டு கல்வி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: விளையாட்டு கல்வி (/showthread.php?tid=3837)



விளையாட்டு கல்வி - Maruthankerny - 07-26-2005

எமது தாய்நாட்டில் கல்விமுறையில்.... அறிவு வளர்சி, தேகப்பயிற்சி இவ்விரண்டிற்குமுள்ள ஸ்தானங்களை நிர்ணயிக்கவேண்டும். ஆரோக்கியமான சரீரம்முள்ளவர்குத்தான் ஆரோக்கியமான மனமிருக்கும் என்ற உண்மையை நமது கல்வி முறையானது முற்றிலும் அலட்சியம் செய்வதாயிருக்கிறது. யுத்தத்திற்கு முன் எமது தாய்நாட்டில் எவருமே அவ்விடயமாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை, தேசத்தின் உயர்விற்கு அறிவு வளர்ச்சி மட்டுமே போதும் என்று தேகப்பயிற்சியை அலட்சியம் செய்துவிட்டார்கள். வாழ்கைபோராட்டத்திற்கு அறிவை காட்டிலும் சரீர பலம்தான் முக்கியம். என்பதை அவர்கள் மறந்து விட்டதால்..... அறிவாளிகள் கோளைகளாயினர். தேகப்பயிற்சி இல்லாத ஆண்களின் மனதில் பல கெட்ட எண்ணங்கள் தோன்றும், திடசாவிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் பெண் சம்மந்தமான இச்சையை கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகின்றது.

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்


- hari - 07-26-2005

நன்றி மருதங்கேணி


- sOliyAn - 07-26-2005

PT என்றொரு பாடம் இருந்ததுதானே.. அதைவிட விளையாட்டுப்போட்டிகள்.. விளையாட்டுகள் என்றும் இருந்ததுதானே.. இப்போ இல்லையா?


- kuruvikal - 07-26-2005

மருதங்கேணி சொல்லுறது உண்மைதான்...ஒப்பீட்டளவில் ஈழத்தமிழ் இளைஞர்களும் சரி யுவதிகளும் சரி விளையாட்டுக்கு உடற்பயிற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைவு...குறிப்பா திருமணத்தின் பின்னர் உடற்பயிற்சி என்பது பலரிடம் அறவே இல்லாமல் போய்விடுகிறது அது தப்பு...! ஆயுள் வரைக்கும் இயலும் பொழுதெல்லாம் உடற்பயிற்சி சிறிய அளவிலேனும் செய்தல் உடலுக்கும் உளத்துக்கும் சிறந்தது...!

உடற்பயிற்சி செய்வதால் ஆண் பெண் இருபாலாருக்குமே உடல் உளம் உறுதியாகும் என்பது உண்மை...அதற்காக பெண்கள் தொடர்பான இச்சைகளைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என்றும் இல்லை....மனத்திடம் ஒழுக்கம் காக்கும் உறுதி இருந்தால் போதும் ஆணோ பெண்ணோ தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea