Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 395 online users.
» 0 Member(s) | 393 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  மும்பை சாதம்
Posted by: Rasikai - 07-24-2005, 03:48 PM - Forum: சமையல் - Replies (4)

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1/2 கப்
தோலுடன் உடைத்த பாசிப்பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
கடுகு, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயத்துள் - ஒரு சிட்டிகை.
கறிவேப்பிலை - சிறிதளவு.
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்ச்அள் தூள், உப்பு மற்றும் நாஙு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்,

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.

Print this item

  ரவா பால் கொழுக்கட்டை
Posted by: Rasikai - 07-24-2005, 03:46 PM - Forum: சமையல் - Replies (7)

ரவா பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

கடலை மாவு அரை கப்
ரவை 300 கிராம்
பால் 1 லிட்டர்
சர்க்கரை 500 கிராம்
முந்தரி 50 கிராம்
ஏலக்காய் 5
நெய் 100 கிராம்
உப்பு 2 சிட்டிகை

செய்முறை :

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கடலைமாவைப் பச்சைவாசனை போகும் வரை வறுத்துக் கொண்டு கொஞ்சம் பால் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் நீக்கிப் பொடித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். ரவையுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு கரண்டி சர்க்கரையும் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து ஊற வைக்கவும். ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், கொதிக்க ஆரம்பித்தவுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கரைசலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விடவும். கொதிக்கும் பொழுது தீயைக் குறைத்துக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரவையை முறுக்கு குழலில் தேன்குழல் அச்சை போட்டு, ஒவ்வொரு ஈடாக கொதிக்கும் பாலில் பிழிந்து விடவும். ஒரு ஈடு வெந்து மேலே வந்தவுடன், அடித்த ஈடு பிழியவும். எல்லா முறுக்குத் துண்டுகளும் பிழிந்து மேலே மிதந்து வந்த பிறகு ஏலக்காய் வறுத்த முந்திரி, சர்க்கரை நன்கு கரைந்து கொதித்த பிறகு இறக்கி வைத்து ஒரு சிட்டிகை உப்பு, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து ஆறிய பின்பு பரிமாறவும். ரவா பால் கொழுக்கட்டை சாப்பிட புதுவிதமாகவும் சுவையாகவும் இருக்கும். பாலுக்கு பதிலாக தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் பால் சேர்த்தால் வெல்லம் சேர்க்க வேண்டும். அப்போது தான் சுவை கூடுதலாக இருக்கும்.

Print this item

  விடுதலைப் புலிகளின் விமானப் படை: இந்தியாவிடம் சிங்களப் படை ச
Posted by: adsharan - 07-24-2005, 03:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்த அச்சம் சிங்கள இராணுவத்தை நித்திரையின்றி அலையவிட்டிருக்கிறது.


எந்த நேரத்திலும் போர் வெடிக்கக்கூடும் என்ற கொதிநிலையில் இலங்கை இருக்கிறது.

எங்கிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் நடைபெறும் என்று கிலி பிடித்து கிளிநொச்சியின் வான்பரப்பையே சிங்கள இராணுவம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்தச் சூழலில் சிங்கள இராணுவ வீரர்களின் அச்சத்தை போக்கிக்கொள்ள இந்தியாவிடம் இப்போது சரணாகதி அடைந்துள்ளது சிங்கள இராணுவம்.




தெற்காசிய வல்லரசாக தன்னை நினைத்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்திய அரசும் சிங்களப் படைக்கு வரவேற்புக் கொடுத்து பயிற்சிக் கொட்டடிகளை திறந்துவிட்டிருக்கிறது.

இது குறித்த விவரங்களை இந்த செய்தியில் இறுதியில் கொடுத்துள்ளோம்.

அதற்கு முன்னதாக தமிழீழ விமானப் படை குறித்த இந்திய, சிறிலங்கா அரசுகள் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்ற போது அந்நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுகளில் மிக முக்கியமானதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்தே இருந்துள்ளது.

நீடித்த நிழல் யுத்தத்தை நடத்தி வரும் சிறிலங்கா இராணுவத்தால் எந்தச் சூழலிலும் போர் வெடித்துவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை எப்படி எதிர்கொள்ள முடியும் என்ற அச்சத்திலேயே புதுடில்லியிடம் இந்தக் கொழும்பு பிதாமகள் சரணாகதி அடைந்ததாக புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் நகைச்சுவையாக குறிப்பிடுகின்றனர்.




சர்வதேச அரசியலில் இந்திய அரசிற்கு கிடைக்கும் லாப நட்டங்களைக் கணக்கில் கொண்டு சந்திரிகாவின் சரணாகதிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய பிரதமர்-சிறிலங்கா அரச தலைவி இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையை நேரடியாகக் குறிப்பிடாமல் "சட்டவிரோத வான்தள பயன்பாடு" குறித்து கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்திரிகாவின் இந்த பயணத்துக்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்து உலகின் 4 ஆம் படை வலுகொண்டுள்ள தெற்காசிய வல்லரசு என்ற பெரிய அண்ணணாகிய நாங்கள் அச்சப்படுகிறோம். கவலைப்படுகிறோம் என்று ஒப்பாரி வைத்திருந்தார்.




சென்னையிலிருந்து வெளியாகும் தமிழின விரோத ஆங்கில ஏடான "ஹிந்து" விற்கு அளித்த நேர்காணலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கூடுதலாக விமானங்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டிருந்தார்.

அத்துணை பொருளாதரத் தடைகளையும் மீறி ஒரு வல்லமை பொருந்திய விமானப் படை தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி உருவாக்கினார்கள் என்று பல்வேறு நாடுகள் வினாக்கனை எழுப்பி வியந்தனர். சிங்கள அரசோ யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தைப் பயன்படுத்தி விமானப் படையை உருவாக்கிவிட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று திசை திருப்ப பார்த்தார்.

ஆனால் 1998 ஆம் ஆண்டே எமது விமானப் படையை நாம் உருவாக்கிவிட்டோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக அறிவித்தார்.




அந்த ஆண்டுக்காலங்களில் சிங்கள ஊடகங்கள் இது தொடர்பாக எழுதியான பல செய்திகளும் மீண்டும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் தற்போதைய பயிற்சிப் படலம் தொடங்கியுள்ளது.

இந்தியா சென்று பயிற்சி மேற்கொள்வதற்கான நிலைமைகளை அறிவதற்காக கடந்த மாதம் சிறிலங்கா விமானப் படையின் 5 பேர் கொண்ட குழு கடந்த மாதம் இந்தியா சென்றது.

இக்குழுவில் விமானப் படையின் உயர்நிலை அதிகாரிகளான

ஏயார் மார்சல் சன்ன குணரட்ன (விமானப்படை தலைமையக திட்டமிடல் அதிகாரி)

விமானப்படை கொமடோர் றோசான் குணதிலக்க (நடவடிக்கைக் குழுவின் பணிப்பாளர்)

குறூப் கப்டன் ககன் புளத் சிங்கள (சீனன்குடா விமானப்படைத் தள நிலைய பொறுப்பதிகாரி)

குறூப் கப்டன் றோகான் பத்திரகே (இலத்திரனியல், தொலைத்தொடர்பு அதிகாரி)

குறூப் கப்டன் விஜித குணரட்ன (விமானப்படையின் இரத்மலானை குறூப் கப்டன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி)

ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் இந்திய விமானப் படை தளபதி சசிந்திர பால் தியாகி உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை பலத்தை எதிர்கொள்ள ஆலோசனை நடத்தி உள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் உள்ள இந்திய விமானப் படை தளத்துக்குச் சென்ற சிறிலங்கா குழுவினர் அங்குள்ள பயிற்சிக்குரிய வசதிகளை ஆய்வு செய்துள்ளனர். அங்கு இந்தியப் படையினருக்கு அளிக்கப்படுகிற பயிற்சிகளையும் பார்வையிட்டனர். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உத்ரேலி விமான தளத்துக்கும் சென்று ராடர் உள்ளிட்ட விமானப் படை தளவாடங்களைக் கையாளுதல் குறித்தும் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் தென்னிந்தியாவில் உள்ள பெங்களுரின் ஜலஹலி விமானத் தளத்துக்கு இக்குழு சென்றுள்ளது. 1987 களில் இந்திய அரசின் இராணுவம் இந்த விமான தளத்திலிருந்துதான் யாழ். குடாநாட்டில் உணவு பொருட்களை விநியோகம் செய்தனராம்.

சிங்கள இராணுவத்தின் இந்த சரணாகதியைத் தொடர்ந்து 20 சிறிலங்கா விமானப் படை அதிகாரிகள் தற்போது இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விமானப் படையின் மின்னணு தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட விமானப் படையின் பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

1967 இஸ்ரேல், அரபு உலகத்தின் மீது நடாத்திய யுத்தக் களத்தில் 385 விமானங்களை எகிப்து தேசம் இழந்ததாக வரலாறு. அந்நாளில் சோவியத் யூனியன் அள்ளி அள்ளி கொடுத்த விமானங்கள் அவை. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு இராணுவ ஒத்துழைப்பும் இருந்தன.

ஆனால் தமிழீழத்திற்கு எந்த தேசம் கொட்டிக் கொட்டி கொடுத்தது?

உலகின் 4 ஆம் படைவலுகொண்டு இருப்பதாக சொல்லப்படுகிற இந்திய அரசு அச்சப்படுகிற அளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் விமானப் படை விவரங்கள் எவை என்று சிங்களப் படை சொல்லுகின்றன தெரியுமா?

அமெரிக்க தயாரிப்பான ஹெர்குலஸ் சி-130 ரக சரக்கு போக்குவரத்து விமானம் உள்ளிட்ட 2 அல்லது 3 விமானங்கள். இவற்றில் செக் தயாரிப்பான ஜிலின் இசட்-143 என்ற விமானம் இரவு நேர பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

திருமலையில் கூட இப்போது விமான ஓடுபாதை கட்டுவதற்காகதான் துப்பரவாக்கம் செய்கிறார்களாம்.

இந்திய-சிங்கள அரசுகள் அச்சப்பட்டு ஓலம் எழுப்பும் வகையில் இங்கே தமிழீழத் தேசத்தில் வகை வகையான விமானங்கள் குவிக்கப்பட்டுக் கிடக்கவில்லை.

ஒரு தேசத்தின் ஆளுகையாளர்கள் ஒரு மக்களின் நல்லாட்சியாளர்கள் ஒரு அரசின் கடமை என்கிற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்களது தாயக மக்களைக் காப்பாற்ற விமானப் படையை உருவாக்கிக் கொண்டது எந்த சர்வதேச விதியிலும் எப்போதுமே சரியானதாகத்தான் இருக்கமுடியும்.
puthinam

Print this item

  வயர்லெஸ் இணைப்புகளில் பாதுகாப்பு வழிகள்
Posted by: Vaanampaadi - 07-24-2005, 12:37 PM - Forum: கணினி - Replies (7)

வயர்லெஸ் இணைப்புகளில் பாதுகாப்பு வழிகள்

கம்ப்யூட்டர்களை கேபிள் வழி இணைப்பு கொடுத்து அமைக்கப்படும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் அமைப்பிற்கு இணையாக இப்போது இணைப்பின்றி நெட்வொர்க் கம்ப்யூட்டர்களை இயக்கும் முறை பிரபலமாகி வருகிறது. இது Wi-Fi என்ற Wireless Fidelityதொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் நெட்வொர்க் இணைப்பாகும். இந்த தொழில் நுட்பத்தில் 802.11a, 802.11a, 802.11b, 802.11hஎனப் பல வரையறைகள் வெளியாகியுள்ளன. 802.11g ஐ அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் நெட்வொர்க் கார்டுகளும், அக்சஸ் பாயிண்டுகளும் (Access Point) கட்டுபடியாகிற விலைகளில் கிடைப்பதால் எல்லோரும் வயர்லெஸ் நெட்வொர்க்ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர்.

வயர்லெஸ் நெட்வொர்க்கில் அதன் பாதுகாப்பு அம்சம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் பாதுகாப்பு சரியில்லையெனில், வேண்டாத நபர்கள் அதனுள் நுழைந்து, நாசத்தை ஏற்படுத்த முடியும். உங்கள் நெட்வொர்க்கை பயன்படுத்தி மற்றொரு நெட்வொர்க்கைத் தாக்க முடியும்.

வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துபவர்கள் அவற்றின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். அதற்கான சில ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.

* ஆன்டனாவை சரியான இடத்தில் வையுங்கள். உங்களுடைய நெட்வொர்க்கிற்கு வெளியே சிக்னல் செல்லக் கூடாது என்பதை மனிதில் வையுங்கள். நெட்வொர்க்கிற்கு வெளியே செல்லுகிற சிக்னலை வேண்டாத நபர்கள் கைப்பற்றினால் ஆபத்து நேரிடும் என்பதை மறவாதீர்கள்.

Wireless Encryption Protocol (WEP) என்ற என்கிரிப்ஷன் முறையை உங்கள் நெட்வொர்க்கில் செயல்படுத்துவது நல்லது. அக்சஸ் பாயிண்டுகளைத் தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த புரோடோகாலை செயல் இழக்கச் செய்வது வழக்கம். எனவே அதைச் செயல்பட வையுங்கள். அப்படிச் செயல்படுத்திவிட்டால் உங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுகிற டேட்டாவை ஹேக்கர்களும், கிராக்கர்களும் அவ்வளவு எளிதாகப் படித்துவிட முடியாது.

* அக்சஸ் பாயிண்டுகளில் Service Set Indentifierஎன்ற வசதி உண்டு. ஒரு அக்சஸ் பாயிண்டானது தனது எஸ்எஸ்ஐடி பெயரை அலைபரப்பு செய்வது வழக்கம். எனவே அந்த பெயரை தெரிந்து கொண்ட ஹேக்கர்களும், கிராக்கர்களும் அந்த அக்சஸ் பாயிண்டில் நுழைய முயற்சி செய்வார்கள். எனவே அக்சஸ் பாயிண்டின் SSID broadcast வசதியைத் தடை செய்து விடுங்கள்.

* Dynamic Host Configuration Protocol என்ற DHCP வசதியை செயல் இழக்கச் செய்து விடுங்கள். எனவே ஹேக்கர்களும், கிராக்கர்களும் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முயன்றால் அவர்கள் TCP/IP புரோடோகால்களுக்கு தேவையான ஐக முகவரி, சப்நெட் மாஸ்க் (Subnet Mask) போன்ற விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் நெட்வொர்க் தொடர்பான இந்த விவரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது. (TCP/IP என்றால் Transmission control protocol/Internet Protocol எனப் பொருள்.)

* Simple Network Management Protocol என்ற SNMP செட்டிங்குகளை அக்சஸ் பாயிண்டில் செயல் இழக்கச் செய்யுங்கள்; அல்லது மாற்றி விடுங்கள். இதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்கள் நெட்வொர்க் பற்றிய விவரங்களை ஹேக்கர்களும், கிராக்கர்களும் அறிந்துவிட முடியும்.

* எந்தெந்த கம்ப்யூட்டர்கள் எல்லாம் அக்சஸ் பாயிண்டு வழியாகச் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற வசதி சில அக்சஸ் பாயிண்டுகளில் உண்டு. உங்களுடைய அக்சஸ் பாயிண்டிலும் அந்த வசதி இருந்தால், உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் கார்டு முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள். இந்த முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள். இந்த முகவரிகளைத் தவிர மற்ற முகவரிகள் கொண்ட கம்ப்யூட்டர்களை அனுமதிக்காதே என அக்சஸ் பாயிண்டிடம் கூறினால் நெட்வொர்க்கின் பாதுகாப்பு கூடுமல்லவா?

Print this item

  அணு குண்டுக்கு வயது 60
Posted by: Vaanampaadi - 07-24-2005, 12:15 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (10)

[b]<span style='font-size:25pt;line-height:100%'>அணு குண்டுக்கு இந்த வருடம் வயது 60</span>

60 ஆண்டுகளுக்கு முன்னால். பொழுது இன்னும் புலராத ஒரு காலைப் பொழுது.

அமெரிக்காவின் நியு மெக்சிக்கோ பாலைவனத்தின் நடுவே ஒரு பெரிய பளிச்சிடும் வெளிச்சம் வான் பரப்பை நிறைத்ததது.

150 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கண் பார்வை அற்ற சிறுமி ஒருத்திக்கே தெரியக் கூடிய பளிச்சிடும் வெளிச்சம்.

அந்த வெளிச்சத்துடன் வந்த பெரும் இரைச்சலும் அதிர்வலையும் - அது என்னவென்று தெரிந்த விஞ்ஞானிகளையும் ராணுவத் தலைமை அதிகாரிகளையும் வந்தடைந்தன.

பாலைவனத்தின் நடுவே நிலத்திலிருந்து சுமார் 12,000 மீட்டர் உயரத்துக்கு ஒரு ராட்சத காளான் போல பன்னிற புகை மண்டல முகில் கூட்டம் தோன்றியது.

அந்த வெளிச்சம், புகை மண்டலம், இரைச்சல், அதிர்ச்சி அனைத்தும் கட்டியம் கூறியது அணு யுகம் உதித்து விட்டதை.

பூவுலகில் அணு குண்டு யுகம் பிறந்து இன்றுடன் அறுபது ஆண்டுகளாகின்றன.

மன்ஹட்டன் புரொஜெக்ட் என்று ரகசியப் பேரிடப்பட்ட திட்டத்தின் கீழ் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜேர்மானிய எதிரிக்கு எதிராக நடந்த ஆயுதப் போட்டியில் 28 மாத காலத்துக்குள் உருவானது குண்டு இது.

அன்று நடந்த சோதனை-வெடிப்பு அத்தனை வெற்றிகரமாக அமையுமென்று அதில் சம்பந்தப்பட்டிருந்த 2000 விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்களில் எவருமே எதிர்பாத்திருக்கவில்லை.

அந்தச் சிக்கலான புளுட்டோனிய அணு குண்டு வெடித்ததில் அதைத் தாங்கியிருந்த எஃகு கோபுரமே ஆவியாகிக் கரைந்து விட்டது.

அக் குண்டு 20 ஆயிரம் தொன் எடையான ரி.என்.ரி வெடிகுண்டு வெடித்ததற்கு சமமானது.

அது வெடித்த இடத்தில் ஏற்பட்ட குழியின் அகலம் சுமார் 4000 மீட்டர்.

இதற்கு 3 வாரத்துக்குப் பின்னால் குட்டிப் பையன் "லிட்டில் போய்" எனப் பெயரிடப்பட்ட அணு குண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் போடப்பட்டது.

அதற்கு இன்னும் 3 நாள் கழித்து ஆகஸ்ட் 9 குண்டன் "பட் மான்" என்ற அணு குண்டு நாகசாகி நகரை அழித்தது.

அவ்விரு குண்டுகளிலிலும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் இறந்தனர்.

ஒரு வாரத்தில் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்தது. அந்த உலகப் போரில் உயிரழந்தவர் சுமார் 50,000,000.

Print this item

  புதுமையான தேங்காய்..ங்..கோ
Posted by: Vaanampaadi - 07-24-2005, 12:10 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<img src='http://img314.imageshack.us/img314/1485/tntop0tn.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  தமிழீழ நீதித்துறைக்கு புத்தகங்கள் தேவை
Posted by: Thala - 07-24-2005, 11:59 AM - Forum: நூற்றோட்டம் - Replies (3)

தமிழீழ நீதித்துறைக்கு புத்தகங்கள்


தமிழீழ நீதித்துறைக்கும் அதன் சட்டக் கல்லூரிக்கும் சட்டவியல் சம்பந்தமான புத்தகங்கள் தேவைப்படுகின்றன. (ஐக்கிய இராச்சிய சட்டத்துறை சம்பந்தமான புத்தகங்கள்)

புத்தகங்களை அன்பளிப்புச் செய்ய விரும்புவோர் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்:


றஞ்சன்: 0044 (0) 7883040709
............ 0044 (0) 7930676808

தமிழீழ நீதித்துறை பற்றிய விபரங்களை http://www.eelamjudicial.org/ எனும் இணையத்தளத்தில் பெற்றக் கொள்ளலாம்..

(தமிழ்நாதம்)

Print this item

  காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவருக்கு தர்ம அடி!
Posted by: Vaanampaadi - 07-24-2005, 05:03 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவருக்கு தர்ம அடி!
ஜூலை 23, 2005

சென்னை:

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மகாத்மா காந்தி போல வேடமணிந்து கொண்டு பிச்சை எடுத்தவரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து விரட்டினர்.


திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே ஒரு நபர் மகாத்மா காந்தி போல வேடமணிந்து சாலையோரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். தேசத் தந்தையின் உருவத்தை அப்படியே பிரதிபலித்ததால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தோர் அவரை பிரமிப்புடன் பார்த்து மெய் மறந்து நின்றனர்.

தன்னைச் சுற்றி நிறையப் பேர் சேர்ந்து விட்டதையடுத்து அந்த நபர் அப்படியே மெதுவாக பிச்சை எடுக்க ஆரம்பித்தார். காசு கொடுங்க, காசு கொடுங்க என்று அந்த நபர் கேட்கத் தொடங்கியதும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேசத் தந்தையை இப்படியா அவமானப்படுத்துவது என்று கூறி அந்த நபரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். ஆண், பெண் என அனைவரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததால் அந்த நபர் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினார்.

அடிப்பதற்கு முன்பு 'காந்தி' அணிந்திருந்த கண்ணாடி மற்றும் கம்பு ஆகியவற்றை பொதுமக்கள் பத்திரமாக 'சுட்டுக் கொண்டனர்' என்பது தான் இதில் விஷேசம்.

Thatstamil

Print this item

  Asymmetries in the peace process...
Posted by: kurukaalapoovan - 07-23-2005, 10:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

நல்லவெரு ஆய்வுக் கட்டுரை@ தமிழாக்கம் இல்லையென நினைக்கிறேன்:
http://www.tamilcanadian.com/pageview.php?...?ID=3413&SID=52

Print this item

  யார்? என்ன? எங்கே?
Posted by: இளைஞன் - 07-23-2005, 08:02 PM - Forum: போட்டிகள் - Replies (354)

<b><span style='font-size:25pt;line-height:100%'>யார்? என்ன? எங்கே?</b></span>

இப்பகுதி பொதுஅறிவு சார்ந்த விடயத்திற்காக ஆரம்பிக்கப்படுகிறது.

* இங்கு சில படங்கள் இடப்பட்டு யார்? என்ன? எங்கே? என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும்.

* கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததன் பின்னரே அடுத்த கேள்வி கேட்கப்படவேண்டும்.

* சரியான பதிலா என்பதை கேள்வி கேட்டவர் உறுதிசெய்வதுடன் அதுபற்றிய மேலதிக தகவல்கள் சிலவற்றையும் எழுதலாம்.

* யார் சரியான பதிலை சொல்கிறாரோ அவரே அடுத்த கேள்வியை கேட்க முடியும்.

* கூடியது... ஒரு கிழமையே (கேள்வி கேட்ட நாளிலிருந்து 7 நாட்கள்) பதில்கூறுவதற்கான காலமாக வழங்கப்படும்.

* ஒருகிழமைக்குள் யாரும் சரியான பதிலை சொல்லாவிட்டால், கேள்விகேட்டவரே பதிலைச் சொல்லி அடுத்த கேள்வியையும் கேட்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்.

* ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சரியான பதிலைக்கூற முயற்சிக்கலாம்.

*** வீண் அலட்டல்கள் தவிர்க்கப்படட்டும்.தலைப்போடு சம்பந்தப்பட்டதாக கருத்தாடல்கள் அமையட்டும்.

Print this item