![]() |
|
ரவா பால் கொழுக்கட்டை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: ரவா பால் கொழுக்கட்டை (/showthread.php?tid=3853) |
ரவா பால் கொழுக்கட்டை - Rasikai - 07-24-2005 ரவா பால் கொழுக்கட்டை தேவையான பொருட்கள் : கடலை மாவு அரை கப் ரவை 300 கிராம் பால் 1 லிட்டர் சர்க்கரை 500 கிராம் முந்தரி 50 கிராம் ஏலக்காய் 5 நெய் 100 கிராம் உப்பு 2 சிட்டிகை செய்முறை : வாயகன்ற ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கடலைமாவைப் பச்சைவாசனை போகும் வரை வறுத்துக் கொண்டு கொஞ்சம் பால் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் நீக்கிப் பொடித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். ரவையுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு கரண்டி சர்க்கரையும் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து ஊற வைக்கவும். ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், கொதிக்க ஆரம்பித்தவுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கரைசலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விடவும். கொதிக்கும் பொழுது தீயைக் குறைத்துக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரவையை முறுக்கு குழலில் தேன்குழல் அச்சை போட்டு, ஒவ்வொரு ஈடாக கொதிக்கும் பாலில் பிழிந்து விடவும். ஒரு ஈடு வெந்து மேலே வந்தவுடன், அடித்த ஈடு பிழியவும். எல்லா முறுக்குத் துண்டுகளும் பிழிந்து மேலே மிதந்து வந்த பிறகு ஏலக்காய் வறுத்த முந்திரி, சர்க்கரை நன்கு கரைந்து கொதித்த பிறகு இறக்கி வைத்து ஒரு சிட்டிகை உப்பு, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து ஆறிய பின்பு பரிமாறவும். ரவா பால் கொழுக்கட்டை சாப்பிட புதுவிதமாகவும் சுவையாகவும் இருக்கும். பாலுக்கு பதிலாக தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் பால் சேர்த்தால் வெல்லம் சேர்க்க வேண்டும். அப்போது தான் சுவை கூடுதலாக இருக்கும். - கீதா - 08-27-2005 நன்றி அக்கா ? எனக்கெல்லாம் செய்யப் பஞ்சி கொஞ்சம் செய்து தாறிங்களா சாப்பிட்டு பார்ப்பம் - Rasikai - 08-27-2005 jothika Wrote:நன்றி அக்கா ? எனக்கெல்லாம் செய்யப் பஞ்சி கொஞ்சம் செய்து தாறிங்களா சாப்பிட்டு பார்ப்பம் என்ன ஜோ இப்படி கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு இல்லாததா? :wink: - கீதா - 08-27-2005 quote="Rasikai"] jothika Wrote:நன்றி அக்கா ? எனக்கெல்லாம் செய்யப் பஞ்சி கொஞ்சம் செய்து தாறிங்களா சாப்பிட்டு பார்ப்பம் என்ன ஜோ இப்படி கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு இல்லாததா? :wink:[/quote] புரியல அக்கா - Rasikai - 08-27-2005 jothika Wrote:புரியல அக்கா உங்களுக்கு என்ன புரியவில்லை என்பது எனக்கு புரியவில்லை? :roll: - கீதா - 08-28-2005 (என்ன Nஐh இப்படி கேட்டுவிட்டீர்கள் உங்களுக்கு இல்லாததா) (உங்களுக்கு இல்லாததா) என்ற அர்த்தம் எனக்கு விலங்கள அக்கா அதான் கேட்டன் புரியல அக்கா என்று - Rasikai - 08-28-2005 jothika Wrote:(என்ன Nஐh இப்படி கேட்டுவிட்டீர்கள் உங்களுக்கு இல்லாததா) அதாவது உங்களுக்கு தராமல் சாப்பிடுவனா என்று சொன்னன் :roll: - கீதா - 08-28-2005 Rasikai Wrote:[quote=jothika](என்ன Nஐh இப்படி கேட்டுவிட்டீர்கள் உங்களுக்கு இல்லாததா) அதாவது உங்களுக்கு தராமல் சாப்பிடுவனா என்று சொன்னன் :roll:[/quote ஓஓஓஓஓ அப்படியா நன்றிஅக்கா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |