| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 395 online users. » 0 Member(s) | 393 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,439
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,643
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கலவை பருப்புப் பொடி |
|
Posted by: siruki - 07-23-2005, 04:44 PM - Forum: சமையல்
- Replies (13)
|
 |
கலவை பருப்புப் பொடி
துவரம் பருப்பு 100 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
உளுத்தம் பருப்பு 100 கிராம்
மிளகாய் வற்றல் 6
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகாயையும் பெருங்காயத் தூளையும் போட்டு வறுக்கவும்.
இரண்டு நிமிடங்கள் நன்கு வறுத்த பிறகு பருப்புகள் அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுக்கவும்.
வறுத்தபின்பு இறக்கி நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
இந்த பொடி இருந்தால் ஆத்துக்காரர் மூன்று தோசை அதிகமாகவே சாப்பிடுவார்.
|
|
|
| தயிர் சாதம் |
|
Posted by: siruki - 07-23-2005, 04:40 PM - Forum: சமையல்
- Replies (8)
|
 |
தயிர் சாதம்
பச்சரிசி ஒரு டம்ளர்
பால் 2 டம்ளர்
தயிர் 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறிய துண்டு
உப்பு 4 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
எண்ணெய் சிறிது
சாதத்தினை சற்று குழைவாக வடித்துக் கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இஞ்சி பச்சைமிளகாய்களைப் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
பிறகு உப்பையும் தயிரையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட சரியான சுவையாக இருக்கும்.
|
|
|
| இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி |
|
Posted by: kavithan - 07-22-2005, 10:42 PM - Forum: சமையல்
- Replies (10)
|
 |
<b>இனிப்பு கட்லட்</b>
தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு - 1கப்
தேங்காய்பால் - 1/4கப்
பாதாம் - 6
முந்திரி - 6
மைதாமாவு - 100 கிராம்
சோளமாவு - 150 கிராம்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 100 கிராம்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொறிக்க
ரஸ்க் தூள் - 50 கிராம்
செய்முறை
பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்து நீர் வடித்து மசித்து வைத்துக்கொள்ளவும். நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் பாலுடன் மசித்த பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யில் பாதாம், முந்திரி துண்டுகளை துண்டுகளாக்கி வறுத்து எடுத்து இத்துடன் சேர்த்து நன்கு கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். மைதாமாவு,சோளமாவு இரண்டினையும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு கரைப்பது போல் கெட்டியாக கரைத்து அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து எள், ரஸ்க்தூள் இரண்டிலும் புரட்டி எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். புதுச்சுவையுடன் குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர ஸ்நாக்ஸ் புதுப்பெயருடன் தயார்.
நன்றி தமிழோவியம்
|
|
|
| ஈழத்தமிழர்களை நோக்கிய இஸ்லாமியப் பயங்கரவாதம்??? |
|
Posted by: cannon - 07-22-2005, 09:36 PM - Forum: புலம்
- Replies (26)
|
 |
1984 - 1985ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் ஜெயவர்த்தனா-அஸ்ரப் கூட்டானது, இஸ்ரவேலின் ஆலோசனைக்கமைய தமிழ்த் தேசியப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கை இல்லாதொளிக்கும் நோக்கில் "ஜிகாத்", "ஊர்காவல் படை" போன்ற பெயர்களில் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் இந்த இஸ்லாமிய பயங்கரவாத நச்சு விதைகள் விதைக்கப்பட்டன. இவற்றின் விளைவுகளை அறியாத அக்காலத்தில் போராட வந்த இயக்கங்கள் என்று கூறப்பட்டவர்களில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்களும், அவர்கள் கைகளிலிருந்த ஆயுதங்களும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் அத்திவாரங்காலாகின.
இந்த இஸ்லாமியப் பயங்கரவாதப் புற்றுநோய் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் குறிப்பாக மூதூர், கின்னியா, காத்தான்குடி, ஏறாவூர்,... என தனது கைங்கரியங்களைக் காட்டத்தொடங்கியது.
*தமிழ்பெண்கள் எண்ணுக்கணக்கில்லாம்ல் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
*பல தமிழ் இளையர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
*பல தமிழ்க் கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன. குறிப்பாக மட்டு-அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 12 கிராமங்கள் இல்லாதொழிக்கப்பட்டன.
*எண்ணூக்கணக்கற்ற தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன.
*தமிழ்த் தேசியத்திற்காதரவான பல முஸ்லீங்கள் கொல்லப்பட்டார்கள்.
இப்படி இந்தப் புற்றுநோய் கிழக்கு முழுக்க வியாபித்து பின் வடக்கே மெதுவாக மன்னார், யாழ்ப்பாணம் என பரவ எத்தனித்தது. இவ் வடக்கேயான பரவலின் ஆரம்பங்களிலேயே விடுதலைப் புலிகளின் திறமையான செயற்பாட்டினால் முளையிலேயே கிள்ளீயெறியப்பட்டது. இக்காலகட்டத்திலேயே யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான இறுதித் தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அதை முறியடிக்கும் நோக்கில் யாழில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, அச்சூழ்நிலையைப் பாவித்து யாழை கட்டுப்பாட்டில் கொண்டுவர இலங்கை இராணுவ-அரசியல் வட்டாரங்கள் தீர்மானித்திருந்தன. இதற்காக லொறி, லொறிகளாக கத்திகள், வாள்கள், துப்பாக்கிகல், வெடி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் முஸ்லீம் வர்த்தகர்களின் பெயர்களில் யாழுக்கு கொண்டுவரப்பட்டன. இவை அணைத்தும் யாழ், சாவகச்சேரிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப் பட்டன. இதன் பின் பல உயிரிளப்புக்களை தவிர்க்கும் பொருட்டு விடுதலைப் புலிகளினால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது யாவருமறிந்ததே.
இன்று பல வருடங்களின் பின்னால் மீண்டும் இந்த யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்களுடன் சேர்ந்து தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வெரியத்தொடங்கும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும் செயல்களில் இலங்கையிலுள்ள முஸ்ஸீம் அரசியல்வாதிகளும் "முஸ்லீங்கள் தேசிய இனம்", "முஸ்லீங்கள் தமிழர்களினால் பாதிக்கப்படுகிறார்கள்", "தமிழர்களுக்கெதிராக முஸ்லீங்கள் போராட வேண்டும்", "வன்முறைகள்தான் இதற்கு தீர்வு" போன்ற சுலோகங்களுடன் இன்று ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கப் போகிறது...
* இன்று லண்டன், மட்றிட்,.. உட்பட நாடுகளை உலுக்கும் அப்பாவி மனிதர்களை குறிவைத்து நடைபெறும் இவ் இஸ்லாமிய பயங்கரவாதம், அப்பாவித் தமிழர்களின் இலக்குகளை குறிவைக்கக்கூடும்?
* இலக்கற்ற இஸ்லாமிய மனித வெடிகுண்டுகளும் அப்பாவி ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பக்கூடும்?
இக்கிழக்கு மாகான பயங்கரவாத அமைப்புகளுக்கு லண்டனிலிருந்து தொடர்ச்சியான முறையில் நிதியுதவி மீள்குடியேற்றம், சுனாமி உதவி எனும் பெயர்களில் செய்யப்படுகிறதாம். இதன் ஒரு கட்டமாக லண்டனிலிருந்தியங்கும் "ரி.பி.சி" இந்திய உளவாளிகளின் கூலிகளின் வானொலி மூலம், இங்கு வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீங்களிடம் நிதி பெறும் மறைமுகமான பிரச்சாரங்களில் ஓரிருவர் தொடர்ச்சியாக ஈடு பட்டிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. இவ்வானொலி மூலம் தமிழ்த் தேசியத்தால் முஸ்லீங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக நச்சுக்கள் விதைக்கப்படுகின்றன. இப்படியான நச்சுக்களினால் ..
* இம்மேற்கத்தேய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள், அவர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு நிறுவனங்கள் இலக்காகக்கூடும்?
* இதே இஸ்லாமிய இலக்கற்ற மனித வெடி குண்டுகள் எம்மை நோக்கி வெறி பிடித்து அலைய ஆரம்பிக்கும்?
பி.கு: இதே போன்றுதான் மேற்குலக நாடுகளால் முஸ்லீங்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற தொடர் பிரச்சாரங்கள்தான், மேற்கில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு வித்திட்டிருப்பது வெளிப்படையான உண்மை.
|
|
|
| இவர்கள் ஏன் இப்படி? |
|
Posted by: SUNDHAL - 07-22-2005, 03:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (14)
|
 |
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று வந்த அன்பர் ஒருவர் அங்கு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய விடயமென இத்தகவலைத் தெரிவித்தார்.
அனேக இளைஞர்கள் வேலை எதுவும் செய்யாமல் ஆங்காங்கு சுற்றித் திரிகிறார்கள். ஆனால், இவர்கள் கையடக்கத் தொலைபேசியைக் காதில் வைத்துப் பேசிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இவர்களில் பலர் மோட்டார் சைக்கிளிலும் ஓடித் திரிகிறார்கள்.
இவர்களிடம் வேலை பற்றிக் கேட்டால், வெளிநாடு செல்லப் போகிறோம் என்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் மேசன், தச்சு வேலையாட்களை வேலைக்கு அழைத்தால் தங்களுக்கு உதவியாட்களைத் தேடிப் பிடிப்பது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் இந்த வேலையைச் செய்யத் தயாரில்லை என்றார் அந்த அன்பர்.
வெளிநாட்டு பயணம் இவர்களுக்கு இலகுவாக வந்து கிடைப்பதால், அதன் அருமை பெருமை தெரியாமல் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களோ!
Thanks:Thinakural
|
|
|
| தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க |
|
Posted by: vasisutha - 07-22-2005, 01:42 PM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
<b>தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க!-
சீறுகிறார் சீமான் </b>
<img src='http://img268.imageshack.us/img268/6126/thampi29lc.jpg' border='0' alt='user posted image'>
''ஏண்டா, அந்நிய நாட்டோட சண்டை போட ஆயுதங்கள் வாங்கின காசுக்கு அரிசி வாங்கி இருந்தா, இந்த நாடு பசிங்கிற வார்த்தையைக் கேட்டிருக்காதேடா!'' அலறல் குரலில் அதிரவைக்கிறார் மாதவன். 'தம்பி' படத்தில் மாதவன் ஒரு போராளி!
''முதல்ல, நாம குடியிருக்கிற நம்ம வீட்டைச் சுத்தம் பண்ணுவோம். அப்புறம், தெருவை!
இப்படி ஒவ்வொருத் தரும் நினைச்சா, இந்த தேசமே சுத்தமாயிடும்னு சொல்றான் என் 'தம்பி'!'' என்கிறார் இயக்குநர் சீமான். கோபம் கொப்பளிக்கிறது அவர் பேச்சில்!
''தர்மபுரியில் மூணு கல்லூரி மாணவிகளை உயிரோட எரிச்சாங்க. அந்தச் சம்பவம் அப்போதைக்கு பதைபதைப்புச் செய்தி. அப்புறம் மறந்துட்டோம். ஆனா, அது அந்த மூணு பேரோட முடியலை. அவங்களோட குடும்பங்கள், உறவுகள், கல்லூரி நண்பர்கள், அரசியல் வக்கிரங்கள், ஊமையா வேடிக்கை பார்த்துட்டு விலகிப் போற இந்த சமூகம்னு அதுக்குப் பின்னாடி ஒரு உலகமே இருக்கு... இதைத்தான் பேச வர்றான் என் 'தம்பி'! படம் முழுக்க, என் கோபங்களையும் இந்தச் சமூகத்தின் மீதான என் கடமையையும்தான் பதிவு செய்திருக்கேன்! இதோ இந்தப் பாட்டும் அப்படி ஒரு விஷயம்தான்...'' என்று பாடலைப் போடுகிறார்...
'பசுமாடு ஆத்தாவை 'அம்மா'னு சொல்லுது...
பச்சைத் தமிழன் 'மம்மி'னு கூப்பிடுறான்!'
என எகிறி அடிக்கிறது பாட்டு.
<img src='http://img268.imageshack.us/img268/511/p329ln.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'>சீமான்
''தமிழ் வளர்ப்பு இயக்கம் மாதிரி இருக்கே?''
''ஆமா, இப்போ, தமிழ் சினிமாவிலே ஆங்கிலக் கலப்பு வார்த்தைகள், ஆபாச உடைகள்னு ஒரு பெரிய கலாசாரச் சீரழிவு நடக்குது. இடுப்பைச் சுற்றியேதான் எல்லாப் பாடல்களும் வருது. வெள்ளைக்காரன் எடுக்கிற படமெல்லாம் 'மிரட்டல் அடி'னு தமிழில் வருது. ஆனால் நம்ம படம், 'இப்ப 'ஏபிசிடி'னு வரப்போகுது.
திங்க் பண்ணி, ஃபீல் பண்ணி, ப்ளான் பண்ணி, டிஸ்கஸ் பண்ணி, டிசைட் பண்ணினு... இப்படியே பேசிப் பேசி, நம்ம தமிழ் மொழியைச் சாக்கடை ஆக்கிட்டு இருக்கோம். ஒண்ணு | தமிழ்ல பேசுங்க. இல்லேன்னா ஆங்கிலத்தில் பேசுங்க.
<img src='http://img268.imageshack.us/img268/8732/thampi31uk.jpg' border='0' alt='user posted image'>
இந்தத் தேசத்தில், ஒரு குடிமகனா வாழ்கிறவன் நரிக் குறவன். ஆனா, அவனை இந்தத் தேசம் அங்கீகரிக்கலை. ஏன்னா, அவனுக்கு மொழி கிடையாது. ஒவ்வொரு இனத்துக்கும் மொழிதான் அடையாளம். அதனால்தான் தமிழை 'தங்கிலீஷா' மாத்தாதீங்கனு வலியுறுத்துகிறோம். இதுபற்றி எல்லாருக்கும் சுயமா, ஒரு உணர்தல் வரணும். தாய்மொழியைக் கட்டாயப்படுத்திப் பேசவைக்கிற பரிதாப நிலை இங்கேதான் இருக்கு.
என் நண்பர் வெங்கடேஷின் படங்கள்ல, பாடல்கள் முழுக்கவே ஒருமாதிரியாத்தான் இருக்கு! 'சாப்பிட வாடா... என்னைச் சாப்பிட வாடா'ன்றாங்க, 'துரியோதனா, துரியோதனா... துகில் உரிய வாடா!', 'அர்ஜுனா, அர்ஜுனா... அம்பு விடு அர்ஜுனா'னு கேட்கவே நாராசமா இருக்கு வரிகள். நான் மக்களைச் சந்திக்கும்போது, என்னைத் திரைப்படப் பிரதிநிதியா வெச்சுக்கிட்டு, மக்கள் இதைப் பற்றிக் கேள்வி கேட்கிறாங்க. இப்ப 'வல்லவன்' படத்தின் போஸ்டரில், நயன்தாரா வோட உதட்டை சிம்பு கடிக்கிற மாதிரி போட்டாங்க. மக்களே அந்த சுவரொட்டியைக் கிழிச்சு எறிஞ்சுட்டாங்க. மக்கள் ரசனை சரியாத்தான் இருக்கு. 'இதுதான் ஜனங்க ரசனை'னு சிலர் நினைக்கிறதுதான் தப்பா இருக்கு!
<img src='http://img268.imageshack.us/img268/1942/thampi48cq.jpg' border='0' alt='user posted image'>
எல்லாப் படமும் தோல்வியடைஞ்சு, பிச்சையெடுக்கிற நிலைமை வந்தாலும் சேரனும் பாலாவும் பொறுப்பில்லா மல் படம் எடுக்க மாட்டாங்க. அவங்க படங்களில் ஆபாசம் இருக்காது. சிம்ரனுடைய தொப்புளைக் காட்டாத தமிழ்ப் படம் 'பிதாமகன்' தான். முழுக்க ஆடை போர்த்தி ஆடவிட்டான் பாலா.
அந்தச் சமூக அக்கறை எல்லாருக்கும் வேணும். சமூகம் நம் குடும்பம்னு நினைச்சா, நல்ல படங்களைத் தர முடியும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் அந்தப் பொறுப்பு இருக்குனு சொல்றேன்.
இந்த 'தம்பி' படத்தில்தான் எனக்குச் சரியான தொடக்கம் கிடைச்சிருக்கு. இந்தப் படத்தை ஜனங்க எப்படி வரவேற்கிறாங்கனு பார்ப்போம்...''
''சினிமாப் படத்துக்குத் தலைப்பைத் தமிழில் வைத்தால் போதுமா..?''
''போதாது! ஒட்டுமொத்த சமூகத்திலும் அந்த மாற்றம் வரணும். உதாரணமா, முனியாண்டி கொலை பண்ணிட்டான்னு ஒரு வழக்கு நடந்தால், நீதிமன்றத்தில் அவனுக்கு என்ன தண்டனை தர்றதுன்னு ஆங்கிலத்தில் விவாதிக்கிறாங்க. தன் தரப்பை வக்கீல் சரியாத்தான் சொன்னாரானுகூட முனியாண்டிக்குத் தெரியாது. செத்தவன் குடும்பத்துக்கும் புரியாது. இதுதான் இங்கே நடப்பு!
கோர்ட்டு விவகாரத்தை விடுங்க. கோடம்பாக்கம் பற்றியே பேசுவோம். 'தமிழில் பெயர் வைங்க'னு சொன்னால், 'இங்கிலீஷ்காரன்'னு பேர் வெச்சு, கீழே 'தமிழ் வாழ்க!'னு போடறாங்க. யார், யாரை நக்கல் பண்றது? நம்மை நாமே தரக்குறைவாப் பேசிக்கிறதில் ஒரு சந்தோஷமா?
<img src='http://img268.imageshack.us/img268/5239/thampi1vn.jpg' border='0' alt='user posted image'>
மற்ற மாநிலத்தாரின் மொழிப் பற்றும், மொழி உணர்வும் நமக்கு ஏன் வரமாட்டேங்குது? இந்த என் உணர்வை, வருத்தத்தை, கோபத்தைதான், என் 'தம்பி' மாதவனின் கண்களில் ஏற்றி இருக்கிறேன்!'' |அனல் தெறிக்கப் பேசுகிற சீமானின் கண்களின் இன்னும் ஏறுகிறது சிவப்பு!</span>
thanks toooo
vikatan.com
|
|
|
| இனிய வணக்கங்கள் |
|
Posted by: siruki - 07-22-2005, 08:10 AM - Forum: அறிமுகம்
- Replies (42)
|
 |
எல்லோருக்கும் இனிய வணக்கங்கள்.
ஆத்துக்காரர் தான் காட்டித் தந்தார் எப்படி தமில்ல எழுதுறது என்டு பிழை இறுநதால் மன்ணிச்சுடுங்கோ..
|
|
|
|