![]() |
|
தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க (/showthread.php?tid=3870) |
தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க - vasisutha - 07-22-2005 <b>தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க!- சீறுகிறார் சீமான் </b> <img src='http://img268.imageshack.us/img268/6126/thampi29lc.jpg' border='0' alt='user posted image'> ''ஏண்டா, அந்நிய நாட்டோட சண்டை போட ஆயுதங்கள் வாங்கின காசுக்கு அரிசி வாங்கி இருந்தா, இந்த நாடு பசிங்கிற வார்த்தையைக் கேட்டிருக்காதேடா!'' அலறல் குரலில் அதிரவைக்கிறார் மாதவன். 'தம்பி' படத்தில் மாதவன் ஒரு போராளி! ''முதல்ல, நாம குடியிருக்கிற நம்ம வீட்டைச் சுத்தம் பண்ணுவோம். அப்புறம், தெருவை! இப்படி ஒவ்வொருத் தரும் நினைச்சா, இந்த தேசமே சுத்தமாயிடும்னு சொல்றான் என் 'தம்பி'!'' என்கிறார் இயக்குநர் சீமான். கோபம் கொப்பளிக்கிறது அவர் பேச்சில்! ''தர்மபுரியில் மூணு கல்லூரி மாணவிகளை உயிரோட எரிச்சாங்க. அந்தச் சம்பவம் அப்போதைக்கு பதைபதைப்புச் செய்தி. அப்புறம் மறந்துட்டோம். ஆனா, அது அந்த மூணு பேரோட முடியலை. அவங்களோட குடும்பங்கள், உறவுகள், கல்லூரி நண்பர்கள், அரசியல் வக்கிரங்கள், ஊமையா வேடிக்கை பார்த்துட்டு விலகிப் போற இந்த சமூகம்னு அதுக்குப் பின்னாடி ஒரு உலகமே இருக்கு... இதைத்தான் பேச வர்றான் என் 'தம்பி'! படம் முழுக்க, என் கோபங்களையும் இந்தச் சமூகத்தின் மீதான என் கடமையையும்தான் பதிவு செய்திருக்கேன்! இதோ இந்தப் பாட்டும் அப்படி ஒரு விஷயம்தான்...'' என்று பாடலைப் போடுகிறார்... 'பசுமாடு ஆத்தாவை 'அம்மா'னு சொல்லுது... பச்சைத் தமிழன் 'மம்மி'னு கூப்பிடுறான்!' என எகிறி அடிக்கிறது பாட்டு. <img src='http://img268.imageshack.us/img268/511/p329ln.jpg' border='0' alt='user posted image'> <span style='color:blue'>சீமான் ''தமிழ் வளர்ப்பு இயக்கம் மாதிரி இருக்கே?'' ''ஆமா, இப்போ, தமிழ் சினிமாவிலே ஆங்கிலக் கலப்பு வார்த்தைகள், ஆபாச உடைகள்னு ஒரு பெரிய கலாசாரச் சீரழிவு நடக்குது. இடுப்பைச் சுற்றியேதான் எல்லாப் பாடல்களும் வருது. வெள்ளைக்காரன் எடுக்கிற படமெல்லாம் 'மிரட்டல் அடி'னு தமிழில் வருது. ஆனால் நம்ம படம், 'இப்ப 'ஏபிசிடி'னு வரப்போகுது. திங்க் பண்ணி, ஃபீல் பண்ணி, ப்ளான் பண்ணி, டிஸ்கஸ் பண்ணி, டிசைட் பண்ணினு... இப்படியே பேசிப் பேசி, நம்ம தமிழ் மொழியைச் சாக்கடை ஆக்கிட்டு இருக்கோம். ஒண்ணு | தமிழ்ல பேசுங்க. இல்லேன்னா ஆங்கிலத்தில் பேசுங்க. <img src='http://img268.imageshack.us/img268/8732/thampi31uk.jpg' border='0' alt='user posted image'> இந்தத் தேசத்தில், ஒரு குடிமகனா வாழ்கிறவன் நரிக் குறவன். ஆனா, அவனை இந்தத் தேசம் அங்கீகரிக்கலை. ஏன்னா, அவனுக்கு மொழி கிடையாது. ஒவ்வொரு இனத்துக்கும் மொழிதான் அடையாளம். அதனால்தான் தமிழை 'தங்கிலீஷா' மாத்தாதீங்கனு வலியுறுத்துகிறோம். இதுபற்றி எல்லாருக்கும் சுயமா, ஒரு உணர்தல் வரணும். தாய்மொழியைக் கட்டாயப்படுத்திப் பேசவைக்கிற பரிதாப நிலை இங்கேதான் இருக்கு. என் நண்பர் வெங்கடேஷின் படங்கள்ல, பாடல்கள் முழுக்கவே ஒருமாதிரியாத்தான் இருக்கு! 'சாப்பிட வாடா... என்னைச் சாப்பிட வாடா'ன்றாங்க, 'துரியோதனா, துரியோதனா... துகில் உரிய வாடா!', 'அர்ஜுனா, அர்ஜுனா... அம்பு விடு அர்ஜுனா'னு கேட்கவே நாராசமா இருக்கு வரிகள். நான் மக்களைச் சந்திக்கும்போது, என்னைத் திரைப்படப் பிரதிநிதியா வெச்சுக்கிட்டு, மக்கள் இதைப் பற்றிக் கேள்வி கேட்கிறாங்க. இப்ப 'வல்லவன்' படத்தின் போஸ்டரில், நயன்தாரா வோட உதட்டை சிம்பு கடிக்கிற மாதிரி போட்டாங்க. மக்களே அந்த சுவரொட்டியைக் கிழிச்சு எறிஞ்சுட்டாங்க. மக்கள் ரசனை சரியாத்தான் இருக்கு. 'இதுதான் ஜனங்க ரசனை'னு சிலர் நினைக்கிறதுதான் தப்பா இருக்கு! <img src='http://img268.imageshack.us/img268/1942/thampi48cq.jpg' border='0' alt='user posted image'> எல்லாப் படமும் தோல்வியடைஞ்சு, பிச்சையெடுக்கிற நிலைமை வந்தாலும் சேரனும் பாலாவும் பொறுப்பில்லா மல் படம் எடுக்க மாட்டாங்க. அவங்க படங்களில் ஆபாசம் இருக்காது. சிம்ரனுடைய தொப்புளைக் காட்டாத தமிழ்ப் படம் 'பிதாமகன்' தான். முழுக்க ஆடை போர்த்தி ஆடவிட்டான் பாலா. அந்தச் சமூக அக்கறை எல்லாருக்கும் வேணும். சமூகம் நம் குடும்பம்னு நினைச்சா, நல்ல படங்களைத் தர முடியும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் அந்தப் பொறுப்பு இருக்குனு சொல்றேன். இந்த 'தம்பி' படத்தில்தான் எனக்குச் சரியான தொடக்கம் கிடைச்சிருக்கு. இந்தப் படத்தை ஜனங்க எப்படி வரவேற்கிறாங்கனு பார்ப்போம்...'' ''சினிமாப் படத்துக்குத் தலைப்பைத் தமிழில் வைத்தால் போதுமா..?'' ''போதாது! ஒட்டுமொத்த சமூகத்திலும் அந்த மாற்றம் வரணும். உதாரணமா, முனியாண்டி கொலை பண்ணிட்டான்னு ஒரு வழக்கு நடந்தால், நீதிமன்றத்தில் அவனுக்கு என்ன தண்டனை தர்றதுன்னு ஆங்கிலத்தில் விவாதிக்கிறாங்க. தன் தரப்பை வக்கீல் சரியாத்தான் சொன்னாரானுகூட முனியாண்டிக்குத் தெரியாது. செத்தவன் குடும்பத்துக்கும் புரியாது. இதுதான் இங்கே நடப்பு! கோர்ட்டு விவகாரத்தை விடுங்க. கோடம்பாக்கம் பற்றியே பேசுவோம். 'தமிழில் பெயர் வைங்க'னு சொன்னால், 'இங்கிலீஷ்காரன்'னு பேர் வெச்சு, கீழே 'தமிழ் வாழ்க!'னு போடறாங்க. யார், யாரை நக்கல் பண்றது? நம்மை நாமே தரக்குறைவாப் பேசிக்கிறதில் ஒரு சந்தோஷமா? <img src='http://img268.imageshack.us/img268/5239/thampi1vn.jpg' border='0' alt='user posted image'> மற்ற மாநிலத்தாரின் மொழிப் பற்றும், மொழி உணர்வும் நமக்கு ஏன் வரமாட்டேங்குது? இந்த என் உணர்வை, வருத்தத்தை, கோபத்தைதான், என் 'தம்பி' மாதவனின் கண்களில் ஏற்றி இருக்கிறேன்!'' |அனல் தெறிக்கப் பேசுகிற சீமானின் கண்களின் இன்னும் ஏறுகிறது சிவப்பு!</span> thanks toooo vikatan.com - kavithan - 07-22-2005 நன்றி வசி - வெண்ணிலா - 07-22-2005 Quote:பசுமாடு ஆத்தாவை 'அம்மா'னு சொல்லுது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி வசியண்ணா - இளைஞன் - 07-22-2005 எத்தனை காலத்துக்குத்தான் "பசுமாடு அம்மா என்று சொல்லுது, தமிழன் மம்மி என்று சொல்கிறான்" என்று கத்துறது? மாட்டுக்கும் மனுசருக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்களாய் இருக்கிறார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இருந்தாலும் சீமானின் முயற்சியை வரவேற்கிறோம். காற்றுக்கென்ன வேலி போன்ற தமிழ் - தமிழர் உணர்வை வெளிப்படுத்துகிற - இன்றைய தமிழகத்திற்குத் தேவையான படம்தான். - Vishnu - 07-22-2005 தகவலுக்கு நன்றி வசி - kuruvikal - 07-22-2005 என்ன மாதவனில அந்நியன் ரெமோ...பாதிப்புத் தெரியுது...! மாடு "அம்மா" என்றுதோ "உம்பா" என்றுதோ...தன்ர பாசை பேசுது...தமிழன் பேசுறான் இல்லையே..மாட்ட விடக் கேவலமா இல்ல...! அதுசரி...தமிழர் கலாசாரம்...பப்ளிக்கில.. ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிப்பதை அனுமதிக்காதே...அதெப்படி மாதவன் மட்டும் பப்பிளிக்குக்கு கட்டிப்பிடிச்சுக் காட்டிறார்...ஓஓஓ...படத்துக்கு பப்பிளிசிற்றியோ...நடக்கட்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mind-Reader - 07-23-2005 தமிழ் மொழியின் வளர்ச்சி தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருப்பதாக பேராசிரியர் சிவத்தம்பி (என்று நினைக்கிறேன்) சொல்லி இருந்தார். தமிழ் மொழி மட்டுமல்ல எல்லா மொழிகளுமே காலத்தின் தேவை கருதி மற்றைய மொழிகளுடன் 'கொடுக்கல்-வாங்கல்' நடாத்திக் கொண்டுதான் இருக்கிறன. தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது. அதனால் மொழி உணர்வு மீண்டும் தலை தூக்கியுள்ளது - தமிழ் சினிமா அதனை நல்ல முறையில் கையாண்டால் பரந்தளவு நல்ல பயனை எதிர் பார்க்கலாம். - அருவி - 07-23-2005 Mind-Reader Wrote:தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது. <b>கொடுக்கல் :?: :?: </b> - Mind-Reader - 07-23-2005 Aruvi Wrote:Mind-Reader Wrote:தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது. தற்போது இல்லை என்றாலும் முன்பு தமிழ் நிறைய கொடுத்துள்ளது. சமஸ்கிரதத்தில் இருந்து ஆங்கில வரை தமிழ் சொற்கள் புலம் பெயர்ந்து போய்யுள்ளது |