![]() |
|
இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி (/showthread.php?tid=3865) |
இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி - kavithan - 07-22-2005 <b>இனிப்பு கட்லட்</b> தேவையான பொருட்கள் பயத்தம் பருப்பு - 1கப் தேங்காய்பால் - 1/4கப் பாதாம் - 6 முந்திரி - 6 மைதாமாவு - 100 கிராம் சோளமாவு - 150 கிராம் வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 100 கிராம் நெய் - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - பொறிக்க ரஸ்க் தூள் - 50 கிராம் செய்முறை பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்து நீர் வடித்து மசித்து வைத்துக்கொள்ளவும். நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் பாலுடன் மசித்த பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யில் பாதாம், முந்திரி துண்டுகளை துண்டுகளாக்கி வறுத்து எடுத்து இத்துடன் சேர்த்து நன்கு கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். மைதாமாவு,சோளமாவு இரண்டினையும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு கரைப்பது போல் கெட்டியாக கரைத்து அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து எள், ரஸ்க்தூள் இரண்டிலும் புரட்டி எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். புதுச்சுவையுடன் குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர ஸ்நாக்ஸ் புதுப்பெயருடன் தயார். நன்றி தமிழோவியம் - kavithan - 07-22-2005 <b>இனிப்பு இட்லி</b> தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 200கிராம் தேங்காய்துருவல் - 50கிராம் ஏலக்காய்பொடி - 1/2 டீஸ்பூன் சமையல் சோடா - சிறிது (சிட்டிகையளவு) நெய் - 4 டீஸ்பூன் முந்திரி - 2 டேபிள் ஸ்பூன் பொடித்தது வெல்லம் - 150கிராம் செய்முறை புழுங்கலரிசியை 4மணிநேரம் ஊறவைத்து எடுத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் வெல்லத்தை வடிகட்டி எடுத்து சேர்த்து கரைத்து வைக்கவும். இதை சுமார் 6 முதல் 8 மணிநேரம் வைத்து பிறகு இத்துடன் ஏலப்பொடி,சமையல்சோடா,நெய்,முந்திரிதுண்டுகள்,தேங்காய்துருவல் யாவற்றையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணை தடவிய இட்லி தட்டில் மாவை 1/2 கரண்டி சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்க சத்தாண ஸ்வீட் இட்லியை விரும்பி உண்ணுவார்கள். - vasisutha - 07-23-2005 இனிப்பு வெட்டுகுத்து ஆஹா கட்லட்டுக்கு தமிழ் பெயரா? :roll: அருமையான பெயர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மன்னர் ஏன் உங்களை மந்திரியா வைத்திருக்கிறார் என்று இப்பத்தானே விளங்கியது...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 07-23-2005 vasisutha Wrote:இனிப்பு வெட்டுகுத்து ஆஹா கட்லட்டுக்கு தமிழ்என்ன லொள்ளா இதை எழுதினவங்கள் தமிழிலை போட்டிருந்தால் நான் ஏன் கஸ்டப் படுறன் அவங்கள் ஸ்வீட் கட்லட் என்றால் நானும் யோசித்துப் பார்த்தன் ஒண்டும் சரியா வரேல்லை அது தான் அப்புவின் வெட்டுக் குத்தை இதுக்கை போட்டு ஒரு பெயர் வைத்திருக்கு . வாழ்த்துறதை விட்டிட்டு லொள்ளு என்ன :wink: :wink: :wink: - வெண்ணிலா - 07-23-2005 என்ன மாமா பிசி என்று சொன்னீங்க. இப்பதானே தெரியுது சமையல் பழகிறீங்க போலிருக்கு சரி சரி பழகுங்கோ. மாமிக்கும் ஹெல்ப்புல் ஆக இருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 07-23-2005 எனக்கும் ஒரு வெட்டுக் குத்து (கட்லட்) அனுப்பி விடுங்கோ அண்ணா - Mathan - 07-23-2005 கவிதன் வெட்டு குத்து பெயர் நன்னாருக்கு. இதை சாப்பிட்டா வெட்டு குத்து வருமோ தெரியலை. ஏதோ நான் ஸ்டிக் கடா என்று சொல்றாங்க அதுக்கு ஒரு தமிழ் பெயர் தாங்களேன் :wink: - Rasikai - 07-23-2005 கவிதன் சமையல் குறிப்புக்கு நன்றி நீங்கள் இதை சமைத்து பார்த்தீர்களா? சமைத்து பார்த்து சொல்லவும் நானும் சமைத்து பார்க்கிறேன். அப்புறம் வெட்டு குத்து பெயர் அருமை. - அனிதா - 07-23-2005 நன்றி கவிதன் அண்ணா..super வெட்டுக் குத்து (கட்லட்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 07-23-2005 <b>ஆகா அருமை....செய்முறை இலகுவாய் இருக்கு..</b>பெயர் தான் <b>வன்முறையா</b> இருக்கு :wink: ...செய்து சாப்பிட அதுதான் பயமாக்கிடக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . வெளியில வெட்டுக்குத்து எண்டாப்பறவாயில்லை வயித்துக்கை எண்டா கஸ்ரம் தான் :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 07-23-2005 kavithan Wrote:vasisutha Wrote:இனிப்பு வெட்டுகுத்து ஆஹா கட்லட்டுக்கு தமிழ்என்ன லொள்ளா இதை எழுதினவங்கள் தமிழிலை போட்டிருந்தால் நான் ஏன் கஸ்டப் படுறன் அவங்கள் ஸ்வீட் கட்லட் என்றால் நானும் யோசித்துப் பார்த்தன் ஒண்டும் சரியா வரேல்லை அது தான் அப்புவின் வெட்டுக் குத்தை இதுக்கை போட்டு ஒரு பெயர் வைத்திருக்கு . வாழ்த்துறதை விட்டிட்டு லொள்ளு என்ன :wink: :wink: :wink: கவிதன், பானை வெதும்பி எண்டு தமிழ் படுத்தின மாதிரி, இதை பொரி இனிஉருண்டை எண்டா என்ன? வெட்டுக் குத்து எண்டுறது புது தமிழ் பட பேர் மாதிரி இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |