Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 615 online users.
» 0 Member(s) | 613 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,644
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  தாக்குதலை நடத்த சிங்கள இராணுவத்துக்கு தயா சந்தகிரி உத்தரவு!
Posted by: தமிழரசன் - 07-20-2005, 03:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

தாக்குதலை நடத்த சிங்கள இராணுவத்துக்கு தயா சந்தகிரி உத்தரவு!
[புதன்கிழமை, 20 யூலை 2005, 01:03 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி] www.puthinam.com
சிங்கள இராணுவ வீரர்கள் தேவைகளைப் பொறுத்து ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று சிறிலங்கா இராணுவத்தின் முப்படைகளின் தளபதியான தயா சந்தகிரி அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

இராணுவத்தினரை சினமூட்டும் நடவடிக்கைகள் நடைபெறும் போதிலும் அரச பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவ வீரர்கள் தொடர்ந்தும் வீணாக உயிரிழக்க இடமளிக்கப் போவதில்லை.

எமது வீரர்களின் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கு இனி இடமளிக்கப் போவதில்லை.

தேவைகளைப் பொறுத்து ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு நாம் அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

சுயபாதுகாப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது. பொலிசிலும் இராணுவத்திலும் உள்ள அனைத்து தர வீரர்களுக்கும் மிக விழிப்புடனும் மிகப் பொறுமையுடனும் கடமையாற்றுமாறு கடந்த வெள்ளிக்கிழமை திருமலைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தான் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Print this item

  என்கவுண்டர் படம்
Posted by: AJeevan - 07-19-2005, 09:41 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://img.indiaglitz.com/tamil/news/Perusu050705_1.jpg' border='0' alt='user posted image'>
<b>என்கவுண்டர்' காட்சியுடன் தாதா வீரமணியின் சினிமா படம்: போலீஸ் அனுமதி கிடைக்குமா?</b>
சென்னையை கலக்கிய தாதா வீரமணி `என் கவுண்டர்' மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது வீரமணியின் வாழ்க்கை `பெருசு' என்ற பெயரில் திரைப்படம் ஆகி இருக்கிறது. இதுவும் காவல்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கருத்து சொன்ன சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ், சென்னை அயோத்தி குப்பத்தில் வீர மணி எப்படி வாழ்ந்தான் என்பது ஊர் அறிந்த செய்தி சமூக விரோதிகளை கதாநாயகர்கள் போல சினிமாவில் சித்தரிப்பது தவறு. வீரமணி போலீசாரை தாக்க முயன்றதால்தான் சுடப்பட்டான்.

போலீசாரின் நடவடிக்கைகளை குறை சொல்வது போல `பெருசு' படம் இருந்தால் அதை வெளியிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் காவல் துறை இறங்கும் நிலை உருவாகும்" என்று கூறி இருந்தார். இதனால் `பெருசு' படம் `ரிலீஸ்' ஆகுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

`பெருசு' படம் குறித்து அதன் டைரக்டர் காமராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சென்னை அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த தாதா வீரமணியின் ஒரு பக்கம் எல்லோருக்கும் தெரியும் மறு பக்கம் பலருக்கு தெரியாது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீரமணியின் முடிவு குறித்து பல கோணங் களில் ஆய்வு செய்தேன். அப்போது., பல சுவையான தகவல் கிடைத்தன. எனவே இதை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தேன்.

2 வருட ஆய்வுக்குப் பிறகே இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் உண்டு. கெட்ட குணமும் உண்டு, வீரமணியிடமும் இருந்த இரண்டு குணங்களையும் என் படத்தில் காட்டி இருக்கிறேன்.

வீரமணி வாழ்ந்த இடத்திலேயே அதை படமாக்கி இருக்கிறேன். அவனுடன் வாழ்ந்தவர்களே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால், உறவினர்கள் யாரும் நடிக்கவில்லை. இந்த குப்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்.

ஒருசிலர் செய்யும் தவறுக்காக இந்த பகுதியில் வாழ்பவர்கள் அனைவரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் நல்லவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடுகிறது.

யதார்த்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். படப்பிடிப்புக்கு அயோத்தி குப்பத்தினர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் சொன்ன பல தகவல்கள் இந்த படத்தை யதார்த்தமாக எடுக்க உதவியாக இருந்தது.

வீரமணி செய்த தவறுகளை தவறு என்றும் நல்லவற்றை நல்லதாகவும் காட்டி இருக்கிறேன். குற்றங்களை நியாயப்படுத்துவது போல கதையை அமைக்கவில்லை. `என் கவுண்டர்' சரியா, தவறா என்ற விவாதமும் வைக்கப்பட வில்லை. சினிமா தன்மையை நூறு சதவீதம் இந்த படத்தில் உடைத்திருக்கிறோம்.

இது முழுக்க முழுக்க புதிய முயற்சி. அதனால்தான் பின்டெக்ஸ் கிரியேஷன் சார்பில் நானே இந்த படத்தை தயாரித்திருக்கிறேன்.

`பெரிசு' படத்தின் கதாநாயகனாக மது நடித்திருக்கி றார். கதாநாயகி பெயர் நீபா. ஜெமினி பாலாஜி வில்லனாக வருகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இசை, பின்னணி சேர்ப்பு போன்ற பணிகள் முடிந்ததும் போலீஸ் கமிஷனர் நடராஜ×க்கு இந்த படத்தை போட்டுக் காட்டு வேன். நிச்சயம் அவரும் பாராட்டுவார். படம் ரிலீஸ் ஆவதில் எந்த பிரச்சினையும் வராது.

சினிமா என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் `பெருசு' படத்தில் குறை சொல்ல எதுவும் இல்லை. ஏற்கனவே உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு `மலைïர் மம்முட்டியான்' `சீவலப்பேரி பாண்டி' போன்ற படங்கள் வந்துள்ளன. அதைவிட இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

இவ்வாறு டைரக்டர் காமராஜ் கூறினார்.
- Viduppu.com

Print this item

  தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
Posted by: yalie - 07-19-2005, 03:40 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (6)

நதியா செய்தது சரியா? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!

எம். குமரன் சன் ஒப் மகாலட்சுமி திரைப்படம் பார்த்தேன். அதில், கணவரான பிரகாஷ்ராஜ் தனது இலட்சியம் நிறையேறத் தடையாக தனது மனையியும், மகனும், பாசமும் தான் இருப்பதாகவும், அதனால் அவர்களைப் பிரிந்து வாழ்ந்தால் மாத்திரமே தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் எனவும் கூற, அவர் மனைவி (நதியா) மகனை அழைத்துக் கொண்டு கணவரைப் பிரிந்து தனியாக வந்து வாழ்கின்றார். நதியா செய்தது சரியா?
வெளிநாட்டில், இதே போன்ற ஒரு
சூழ்நிலையில், வாழும் பெண் ஒருவர், தனது லட்சியத்திற்குத் தடையாக இருப்பது தனது மனையியும் மகனும் தான் என்று கணவர் கூறும் நிலையில், கணவரைப் பிரிந்து தனியே வாழ முற்பட்டால், எமது சமுதாயம் அதனை விளங்கிக் கொண்டு ஏற்றுக் கொள்ளுமா? அவளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!

தலைப்பு சரி செய்யப்பட்டுள்ளது - யாழினி

Print this item

  வாலி கவிதைகள்
Posted by: SUNDHAL - 07-19-2005, 02:39 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

மாண்புமிகு மழையே! உனக்கொரு
மடல்! நீ _
எவ்வளவு பெய்தாலும்
ஏற்க வல்லது _
கடல்கொண்ட
குடல்;
ஏற்க
ஏலாதது _
குடல் கொண்ட
உடல்!

நீ பெய்யலாம்
நூறு அங்குலம்; அன்னணம் _
பெய்தால் என்னணம்
பிழைக்கும் எங்குலம்?

அடை மழையே!
அடை மழையே! உன் _
மடையை உடனே
அடை மழையே!

கொடுப்பதும் மழை;
கெடுப்பதும் மழை;
இது
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் _
தாடி வைத்த தமிழ்
பாடி வைத்த தமிழ்!

அளவோடு பெய்தால்
உன்பேர் மழை;
அளவின்றிப் பெய்தால் _
உன்பேர் பிழை!

தாகம் _
தணிய....
உன்னைக் குடித்தோம் என்றா _
எங்கள்
உயிரை நீ குடிக்கிறாய்?
மழைக்கே தாகமா? _ எமனுக்கு
மற்றொரு பெயர் மேகமா?

சவத்தைக் குளிப்பாட்டினால் _ அது
சடங்கு; நீ
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே _சவக்
கிடங்கு!
நீரின்றி
நிற்காது உலகு; எங்கும் _
நீராகவே இருந்தாலும்
நிற்காது உலகு!

பூகம்பம்;
புகைவண்டி;
புயல் வெள்ளம்;

என
ஏனிப்படி...

குஜராத்தைக்
குறி வைத்து _
இடையறாது தாக்குகிறது
இயற்கை? உன்னொத்த _
இயற்கையைத் தண்டிக்காது
இருப்பதேன் இறைக்கை?

விண்ணிலிருந்து _
வருவது தண்ணீர்;
கண்ணிலிருந்து
வருவது கண்ணீர்;
எனினும்
எஞ்ஞான்றும் _
தண்ணீரைப் பொறுத்தே
கண்ணீர்!

தெய்வம்
தொழாது _
கொழுநன்
தொழுவாளைப் போலே...
மழையே!
மாந்தர் _
பெய் எனும்போது
பெய்; உனது _
பெயரை என்றும்
பெயராமல் வை!

Thanks:Kumudam

Print this item

  எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன
Posted by: தமிழரசன் - 07-19-2005, 04:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன் எச்சரிக்கை</b>
எதிரிகளின் சூழ்ச்சிகளால் எமது போராளிகளை தளபதிகளை இழந்து வரும் இந்தச் சூழலில் எமது தலைவரின் விழிகள் சிவக்கின்றன.. எமது தலைவரின் பொறுமையின் எல்லையைத்தான் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று எதிரிகளுக்கு புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் தமிழன்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பாரிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் - 2005 நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை:

வேர் அறுபடாது தாயகப்பற்றுதலோடு இளையோர் சமூகம் இயங்கி வருகிறது. புலப் பெயர்விலும் இனத்துக்கும் மொழிக்கும் விடுதலைக்கும் பலம் சேர்க்கும் வகையில் பலமான ஒரு இளைய சமுதாயம் சர்வதேசம் எங்கும் உருவாகி விட்டது.

போரும் சமாதானமும் தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது இனத்தை பலப்படுத்துவதற்காகவே எமது எதிரி பல வழிகளிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறான்.

எமது தலைவர் தீர்க்கதரிச சிந்தனையுடன் செயற்பட்டுவருவதால் எமது இனம் எங்கும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

எதிரியின் தாக்குதல் வியூகங்களுக்கெல்லாம் உட்பட்டிருந்தால் நாம் பல தளபதிகளையும், பொறுப்பாளர்களையும் போராளிகளையும் இழந்திருக்க நேரிட்டிருக்கும். இப்பொழுதும் இந்த நிலையில் கூட நாம் போராளிகளை இழந்து வருகிறோம். எதிரியின் சூழ்ச்சிகரமான தாக்குதலின் போது போராளிகள் வீரச்சாவடைகின்றனர்.

தலைவர் அவர்களின் விழி சிவக்கிறது. தலைவரின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைத்தான் தாயக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பை கண்டித்து எமது மக்கள் சிறிலங்கா அரசுக்கு மனுக்களை கொடுத்திருந்தார்கள். பின்னர் கண்காணிப்புக் குழுவிற்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும், மனுக்களை கொடுத்திருந்தார்கள். எதற்கும் தீர்வு எட்டப்படாத நிலையில்தான் போரைத் தொடங்கும் படி தலைவருக்கு மக்கள் மனுக்களை கொடுத்திருக்கிறார்கள்.

உங்களது இதயங்களில் இரண்டறக் கலந்தும் மனங்களில் நிறைந்தும் வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் உயர் மதிப்புக்குரிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழியில் எமது இனம் பலம் பெற்றிருப்பதால் இன்று எமது இயக்கத்தை பற்றியும், எமது விடுதலைப் போராட்டம் பற்றியும், எமது தேசம் பற்றியும்இ உலகப் பந்தில் தலை நிமிர்ந்து நின்று பேசும் வலுவைப் பெற்றிருக்கின்றோம்.

எமது இனம் சர்வதேச ரீதியாக எழுச்சி பெற்று வருகிறது. எமது இனத்தால் மட்டுமே ஒரே நிகழ்வை ஒரே மாதிரி பல நாடுகளில் எல்லாம் நிகழ்த்தக் கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.

puthinam

Print this item

  தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென ................
Posted by: தமிழரசன் - 07-19-2005, 04:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென ஜே.வி.பி. எண்ணுகிறதாம்: சொல்கிறார் சந்திரிகா! </b>
[செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2005, 00:41 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென பேரினவாத ஜே.வி.பி. கருதுவதாக ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.


அனுராதபுரத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜே.வி.பி. அரசாங்கத்திலிருந்து விலகி விட்டது என்பதற்காக ஆட்சி ஒரு போதும் கவிழப் போவதில்லை.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது விட்டாலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்து இருக்கும்.

ஜே.வி.பி.யைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதே அதன் கொள்கையாகும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு பொதுக்கட்டமைப்பு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாகவே அக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது.

நாம் அவர்களை போகச் சொல்லவில்லை. முடிந்த வரை இருங்கள் என்றேன். ஆனால் அவர்கள் பொறுப்பில்லாமல் போனார்கள். பொறுப்பில்லாத இவர்களைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. முடியாது என்று போனவர்களிடம் கும்பிட்டு கும்பிட்டு பின்னால் செல்வதற்கு எனக்கு நேரமில்லை.

ஜே.வி.பி.யுடன் இனைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது எதிர்பார்த்த வகையில் வாக்குகள் கிடைக்கவில்லை.

இந்த கூட்டமைப்பு மூலம் ஒரு லட்சம் வாக்குகளையே மேலதிகமாகப் பெற முடிந்தது.

அண்மைக் காலத்தில் ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நடைபெற வாய்ப்பில்லை. மக்கள் வழங்கிய காலம் முடிந்த பின்பே இந்த தேர்தல்கள் நடைபெறும்.

அதற்கிடையில் உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முடிவடைகின்றது. அந்த தேர்தல்களே முதலில் நடைபெறும் என்றார் அவர்.
puthinam

Print this item

  அட நல்ல காரனமாய் இருக்கே
Posted by: SUNDHAL - 07-19-2005, 02:53 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (17)

கனடா நாட்டு இளைஞர் ஹைதர் முபாரக். இவர் ஒட்டாவா நகரில் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீ. வேகத்தை விட அதிகமாகச் சென்றதால் போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர். கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வதற்காக புறப்பட்டேன். புரோட்டீன் பானத்தை அளவுக்கு அதிகமாக குடித்தேன். அது வயிற்றைக் கலக்கியது. `பாத்ரூம்' போக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தான் வேகமாகப் போனேன் என்று கூறினார். இந்தக் கதையை நம்ப நீதிபதி தயாராக இல்லை. அவர் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 30 நாட்கள் கார் ஓட்டவும் தடை விதித்தார். இந்தத் தகவல் கிடைத்ததும். இன்சூரன்ஸ் கம்பெனி இவர் ஆபத்தானவர் என்று கூறி அடுத்த முறை புதியகார் வாங்கும்போது இவர் காரை இன்சூர் செய்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.

Print this item

  ஆனந்தசங்கரி ஒப்புதல் வாக்குமூலம்
Posted by: MUGATHTHAR - 07-18-2005, 06:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் கூட்டம் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இது நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் 40க்கும் குறைவானோரே கலந்து கொண்டனர். இலங்கையின் இன்றைய அரசியல் நிலை என்ற பெயரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைக்கும்இ தமிழ்மக்களுக்கும் எதிரான கருத்துக்களை ஆனந்தசங்கரி முவைத்தார்.

அவ்வேளைகளில் கூடியிருந்த 40 பேரிலும் பெரும்பானமையானோர் குறுக்கிடுவது அடிக்கடி நிகழ்ந்தது.

தனது உரையை ஆனந்தசங்கரி தொடங்கிய போது உள்நாட்டுஇ வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும்இ வெக்ரோன் தொலைக்காட்சியையும் மிகவும் தரக்குறைவாக சாடினார்.

இந்த ஊடகங்கள் தன்னை மதிப்பதில்லை என்பதற்காகவே அவர் சாடியதை அவரது உரை எடுத்துக்காட்டியது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனை விட தனக்கே அதிக அக்கறை உள்ளது என்று கூறியதுடன்இ புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் சந்திரிகாவுடன் பேசி ஒரு மாதத்துக்குள் சமாதானத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றும் கூறினார்.

இந்தக் கருத்தைக் கேட்ட அரங்கிலிருந்த அனைவரும் விழுந்துஇ விழுந்து சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய ஆனந்தசங்கரிஇ புரிந்துனர்வு ஒப்பந்தத்தையும் நோர்வேத் தரப்பின் பிரதிநிதி எரிக் சொல்கைமையும் குறை கூறினார்.

இதுவரை 5இ000 ற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததெனவும்இ இதில் 2இ500 யுத்த மீறல்கள் பாரதூரமற்றதென்றும் 100 யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவத்தாலும்இ 2இ400 யுத்த நிறுத்த மீறல்கள் விடுதலைப் புலிகளாலும் நடைபெற்றதாகவும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு ரோசமில்லையாஇ உன் தோல் தடித்து விட்டதா என்று தான் எரிக் சொல்கைமை நோர்வேயில் சந்தித்தபோது கேட்டதாகவும் கூறினார்.

தேசியக் கொடியேற்றம்- யுத்த நிறுத்த மீறலாம்

யாழ்ப்பாணம்இ மன்னார்இ வவுனியா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தேசியக் கொடி ஏற்றியது ஏன் என்றும் அது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்றும் தேசியக் கொடியை உருவாக்க புலிகளுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.

இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆவேசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒருவர்இ 17இ000 ற்கும் மேற்பட்ட போராளிகளினது தியாகத்தினால் உருவான தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோஇ தமிழ்த் தேசிய உருவாக்கத்தையோ விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்றும்இ அந்த விடயத்தை விடுத்து உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

தொடர்ந்து ஆனந்தசங்கரி பேசும்போது புலிகளின் தடுப்பு முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்இ மக்களிடம் வரி வசூலிப்பதாகவும் இதற்கான அதிகாரத்தை பிரபாகரனுக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சி மாவட்டம் தன்னால் உருவாக்கப்பட்டதென்றும்இ அதனை அபிவிருத்தி செய்வதானால் தன்னிடம் அறிவுரை கேட்க வேண்டுமென்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் ஆனந்தசங்கரி பேசினார்.

ஆழிப்பேரலை அழிவைப் பற்றிப் பேசும்போது மனிதாபிமானமற்ற முறையில் சிங்களவன் பகுதியென்றும் தமிழன் பகுதியென்றும் இயற்கை அழிவில் அரசியல் லாபம் தேட முற்பட்டார்.

எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாதாம்

பொதுக்கட்டமைப்பை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன் அந்நிய நாடுகளின் பிடியில் தமிழீழத்தை அடகு வைக்கும் கருத்துகளையும் முன்வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா கூறுபடாமல் இருக்கும் வரை தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன்இ எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாது என்று ஒரு துரோகத்தனமான வார்த்தையை மேசையில் கையால் அடித்துச் சொன்னார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்துஇ வட்டுக்கோட்டைத் தீர்மானம் போட்டதும்இ இளைஞரை உணர்ச்சிவசப்பட வைத்து இரத்தப் பொட்டு வைக்கச் செய்ததும்இ வாக்களியுங்கள் நாளை தமிழீழம் அமைப்போம் என்று கூறியபோதெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்பது தெரியாமலா இருந்தீர்கள்.

நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்துத்தனத்தால் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினார்.

வன்னியைக் கைப்பற்ற சிங்களவனுக்கு வரைபடம் கொடுத்ததே நான்தான்!

சந்திரிகாவிற்கு யாழ்ப்பாண வரைபடத்தைக் காட்டி புலிகள் ஆனையிறவு முகாமுக்கு அருகில் வெட்டுக்காடுஇ கௌதாரிமுனை போன்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் தான் எடுத்துக் கூறியதாகக் கூறியபோது ஒருவர் எழுந்து ஐயா ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கு வன்னியைக் கைப்பற்ற பாதை காட்டிக் கொடுத்தது நீங்கள் தானே என்று கேட்டார்.

நான் நில அளவையாளர் இல்லையென்று ஆனந்தசங்கரி குதர்க்கமாக பதிலளித்தார். மக்களின் தொடரான கேள்விகள் மூலமாகவும்இ தடுமாற்றத்தின் காரணமாகவும் முதிர்ந்த அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி மூக்குடைபட்ட அரசியல்வாதியாக தலைதொங்கிப் போனார் ஆனந்தசங்கரி.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் பிரபாகரன் அகற்றமாம்!

எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஓரிரு மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் வேறொருவர் இருப்பார் என்று கூறியபோது அதற்கான வேலையைச் செய்துவிட்டா வந்தீர்கள் என்று மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.

முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஆனந்தசங்கரியைப் பார்த்து ஐயா இதுவரை நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இந்திய- இலங்கை கூட்டுச்சதியால் தமிழீழ தேசியத்தைஇ தமிழீழ உருவாக்கத்திற்கான கருத்தியலை புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உடைத்தெறியும் செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று புரிகின்றது என்றும்இ

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும்இ தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான கருத்துடைய உங்களைப் போன்றவர்கள் என்றாவது ஓர் நாள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

கூட்டத்தின் முடிவில் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி என்று கருதப்பட்ட ஒருவரின் தமிழீழ உருவாக்கத்திற்கெதிரான வரலாற்றுத் துரோகத்தனத்தின் முகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

புதினம்

Print this item

  எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன்
Posted by: வினித் - 07-18-2005, 04:30 PM - Forum: தமிழீழம் - No Replies

எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன் எச்சரிக்கை
ஜதிங்கட்கிழமைஇ 18 யூலை 2005இ 21:19 ஈழம்ஸ ஜசுவிஸ் நிருபர்ஸ
எதிரிகளின் சூழ்ச்சிகளால் எமது போராளிகளை தளபதிகளை இழந்து வரும் இந்தச் சூழலில் எமது தலைவரின் விழிகள் சிவக்கின்றன.. எமது தலைவரின் பொறுமையின் எல்லையைத்தான் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று எதிரிகளுக்கு புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் தமிழன்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பாரிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் - 2005 நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை:

வேர் அறுபடாது தாயகப்பற்றுதலோடு இளையோர் சமூகம் இயங்கி வருகிறது. புலப் பெயர்விலும் இனத்துக்கும் மொழிக்கும் விடுதலைக்கும் பலம் சேர்க்கும் வகையில் பலமான ஒரு இளைய சமுதாயம் சர்வதேசம் எங்கும் உருவாகி விட்டது.

போரும் சமாதானமும் தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது இனத்தை பலப்படுத்துவதற்காகவே எமது எதிரி பல வழிகளிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறான்.

எமது தலைவர் தீர்க்கதரிச சிந்தனையுடன் செயற்பட்டுவருவதால் எமது இனம் எங்கும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

எதிரியின் தாக்குதல் வியூகங்களுக்கெல்லாம் உட்பட்டிருந்தால் நாம் பல தளபதிகளையும்இ பொறுப்பாளர்களையும் போராளிகளையும் இழந்திருக்க நேரிட்டிருக்கும். இப்பொழுதும் இந்த நிலையில் கூட நாம் போராளிகளை இழந்து வருகிறோம். எதிரியின் சூழ்ச்சிகரமான தாக்குதலின் போது போராளிகள் வீரச்சாவடைகின்றனர்.

தலைவர் அவர்களின் விழி சிவக்கிறது. தலைவரின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைத்தான் தாயக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பை கண்டித்து எமது மக்கள் சிறிலங்கா அரசுக்கு மனுக்களை கொடுத்திருந்தார்கள். பின்னர் கண்காணிப்புக் குழுவிற்கும்இ அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும்இ சர்வதேச சமூகத்திற்கும்இ மனுக்களை கொடுத்திருந்தார்கள். எதற்கும் தீர்வு எட்டப்படாத நிலையில்தான் போரைத் தொடங்கும் படி தலைவருக்கு மக்கள் மனுக்களை கொடுத்திருக்கிறார்கள்.

உங்களது இதயங்களில் இரண்டறக் கலந்தும் மனங்களில் நிறைந்தும் வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் உயர் மதிப்புக்குரிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழியில் எமது இனம் பலம் பெற்றிருப்பதால் இன்று எமது இயக்கத்தை பற்றியும்இ எமது விடுதலைப் போராட்டம் பற்றியும்இ எமது தேசம் பற்றியும்இ உலகப் பந்தில் தலை நிமிர்ந்து நின்று பேசும் வலுவைப் பெற்றிருக்கின்றோம்.

எமது இனம் சர்வதேச ரீதியாக எழுச்சி பெற்று வருகிறது. எமது இனத்தால் மட்டுமே ஒரே நிகழ்வை ஒரே மாதிரி பல நாடுகளில் எல்லாம் நிகழ்த்தக் கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.


நன்றி புதினம்

Print this item

  கிழட்டு நரியின் ஊளை...
Posted by: Danklas - 07-18-2005, 03:59 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (69)

தமிழீழத் தேசியத் தலைவருக்கு எதிராக சதி: ஜேர்மனியில் ஆனந்தசங்கரி ஒப்புதல் வாக்குமூலம்!!

ஜேர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து பிரபகாரனை விரைவில் அகற்றப் போவதாகவும், வன்னியை சிங்கள இராணுவம் கைப்பற்ற வரைபடம் கொடுத்து காட்டி கொடுத்ததாகவும் தமிழீழத் தேசியக் கொடியை உருவாக்க பிரபாகரனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் தேசத்துரோக பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.


ஆனந்தசங்கரியின் உண்மை முகத்தை எமது படிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவே எமது ஜேர்மன் செய்தியாளர் அனுப்பியுள்ள விவரத்தை முழுவதுமாக தருகிறோம்.

நிகழ்வு விவரம்:

ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் கூட்டம் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இது நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் 40க்கும் குறைவானோரே கலந்து கொண்டனர். இலங்கையின் இன்றைய அரசியல் நிலை என்ற பெயரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைக்கும், தமிழ்மக்களுக்கும் எதிரான கருத்துக்களை ஆனந்தசங்கரி முவைத்தார்.

அவ்வேளைகளில் கூடியிருந்த 40 பேரிலும் பெரும்பானமையானோர் குறுக்கிடுவது அடிக்கடி நிகழ்ந்தது.
தனது உரையை ஆனந்தசங்கரி தொடங்கிய போது உள்நாட்டு, வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், வெக்ரோன் தொலைக்காட்சியையும் மிகவும் தரக்குறைவாக சாடினார்.

இந்த ஊடகங்கள் தன்னை மதிப்பதில்லை என்பதற்காகவே அவர் சாடியதை அவரது உரை எடுத்துக்காட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனை விட தனக்கே அதிக அக்கறை உள்ளது என்று கூறியதுடன், புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் சந்திரிகாவுடன் பேசி ஒரு மாதத்துக்குள் சமாதானத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றும் கூறினார்.

இந்தக் கருத்தைக் கேட்ட அரங்கிலிருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.தொடர்ந்து பேசிய ஆனந்தசங்கரி, புரிந்துனர்வு ஒப்பந்தத்தையும் நோர்வேத் தரப்பின் பிரதிநிதி எரிக் சொல்கைமையும் குறை கூறினார்.

இதுவரை 5,000 ற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததெனவும், இதில் 2,500 யுத்த மீறல்கள் பாரதூரமற்றதென்றும் 100 யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவத்தாலும், 2,400 யுத்த நிறுத்த மீறல்கள் விடுதலைப் புலிகளாலும் நடைபெற்றதாகவும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு ரோசமில்லையா, உன் தோல் தடித்து விட்டதா என்று தான் எரிக் சொல்கைமை நோர்வேயில் சந்தித்தபோது கேட்டதாகவும் கூறினார்.

தேசியக் கொடியேற்றம்- யுத்த நிறுத்த மீறலாம்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தேசியக் கொடி ஏற்றியது ஏன் என்றும் அது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்றும் தேசியக் கொடியை உருவாக்க புலிகளுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.

இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆவேசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒருவர், 17,000 ற்கும் மேற்பட்ட போராளிகளினது தியாகத்தினால் உருவான தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழ்த் தேசிய உருவாக்கத்தையோ விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்றும், அந்த விடயத்தை விடுத்து உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

தொடர்ந்து ஆனந்தசங்கரி பேசும்போது புலிகளின் தடுப்பு முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் வரி வசூலிப்பதாகவும் இதற்கான அதிகாரத்தை பிரபாகரனுக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சி மாவட்டம் தன்னால் உருவாக்கப்பட்டதென்றும், அதனை அபிவிருத்தி செய்வதானால் தன்னிடம் அறிவுரை கேட்க வேண்டுமென்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் ஆனந்தசங்கரி பேசினார்.

ஆழிப்பேரலை அழிவைப் பற்றிப் பேசும்போது மனிதாபிமானமற்ற முறையில் சிங்களவன் பகுதியென்றும் தமிழன் பகுதியென்றும் இயற்கை அழிவில் அரசியல் லாபம் தேட முற்பட்டார்.

எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாதாம்

பொதுக்கட்டமைப்பை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன் அந்நிய நாடுகளின் பிடியில் தமிழீழத்தை அடகு வைக்கும் கருத்துகளையும் முன்வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா கூறுபடாமல் இருக்கும் வரை தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன், எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாது என்று ஒரு துரோகத்தனமான வார்த்தையை மேசையில் கையால் அடித்துச் சொன்னார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் போட்டதும், இளைஞரை உணர்ச்சிவசப்பட வைத்து இரத்தப் பொட்டு வைக்கச் செய்ததும், வாக்களியுங்கள் நாளை தமிழீழம் அமைப்போம் என்று கூறியபோதெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்பது தெரியாமலா இருந்தீர்கள்.

நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்துத்தனத்தால் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினார்.
வன்னியைக் கைப்பற்ற சிங்களவனுக்கு வரைபடம் கொடுத்ததே நான்தான்!

சந்திரிகாவிற்கு யாழ்ப்பாண வரைபடத்தைக் காட்டி புலிகள் ஆனையிறவு முகாமுக்கு அருகில் வெட்டுக்காடு, கௌதாரிமுனை போன்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் தான் எடுத்துக் கூறியதாகக் கூறியபோது ஒருவர் எழுந்து ஐயா ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கு வன்னியைக் கைப்பற்ற பாதை காட்டிக் கொடுத்தது நீங்கள் தானே என்று கேட்டார்.

நான் நில அளவையாளர் இல்லையென்று ஆனந்தசங்கரி குதர்க்கமாக பதிலளித்தார். மக்களின் தொடரான கேள்விகள் மூலமாகவும், தடுமாற்றத்தின் காரணமாகவும் முதிர்ந்த அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி மூக்குடைபட்ட அரசியல்வாதியாக தலைதொங்கிப் போனார் ஆனந்தசங்கரி.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் பிரபாகரன் அகற்றமாம்!எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஓரிரு மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் வேறொருவர் இருப்பார் என்று கூறியபோது அதற்கான வேலையைச் செய்துவிட்டா வந்தீர்கள் என்று மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.

முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஆனந்தசங்கரியைப் பார்த்து ஐயா இதுவரை நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இந்திய- இலங்கை கூட்டுச்சதியால் தமிழீழ தேசியத்தை, தமிழீழ உருவாக்கத்திற்கான கருத்தியலை புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உடைத்தெறியும் செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று புரிகின்றது என்றும்,

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான கருத்துடைய உங்களைப் போன்றவர்கள் என்றாவது ஓர் நாள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

கூட்டத்தின் முடிவில் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி என்று கருதப்பட்ட ஒருவரின் தமிழீழ உருவாக்கத்திற்கெதிரான வரலாற்றுத் துரோகத்தனத்தின் முகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்..

பி.கு: அனந்தசங்கரியின் இப் பேச்சைப்பார்த்து அவரை வாழ்த்தவிரும்பும் தோழர்கள் தங்கள் மனதுக்குள் பேசிக்கொள்ளவும்..(களத்தை நாறடிக்காதீர்கள்) Idea

Print this item