Yarl Forum
எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன் (/showthread.php?tid=3891)



எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன் - வினித் - 07-18-2005

எங்கள் தலைவரின் விழிகள் சிவக்கின்றன: எதிரிகளுக்கு தமிழன்பன் எச்சரிக்கை
ஜதிங்கட்கிழமைஇ 18 யூலை 2005இ 21:19 ஈழம்ஸ ஜசுவிஸ் நிருபர்ஸ
எதிரிகளின் சூழ்ச்சிகளால் எமது போராளிகளை தளபதிகளை இழந்து வரும் இந்தச் சூழலில் எமது தலைவரின் விழிகள் சிவக்கின்றன.. எமது தலைவரின் பொறுமையின் எல்லையைத்தான் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று எதிரிகளுக்கு புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் தமிழன்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பாரிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் - 2005 நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை:

வேர் அறுபடாது தாயகப்பற்றுதலோடு இளையோர் சமூகம் இயங்கி வருகிறது. புலப் பெயர்விலும் இனத்துக்கும் மொழிக்கும் விடுதலைக்கும் பலம் சேர்க்கும் வகையில் பலமான ஒரு இளைய சமுதாயம் சர்வதேசம் எங்கும் உருவாகி விட்டது.

போரும் சமாதானமும் தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது இனத்தை பலப்படுத்துவதற்காகவே எமது எதிரி பல வழிகளிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறான்.

எமது தலைவர் தீர்க்கதரிச சிந்தனையுடன் செயற்பட்டுவருவதால் எமது இனம் எங்கும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

எதிரியின் தாக்குதல் வியூகங்களுக்கெல்லாம் உட்பட்டிருந்தால் நாம் பல தளபதிகளையும்இ பொறுப்பாளர்களையும் போராளிகளையும் இழந்திருக்க நேரிட்டிருக்கும். இப்பொழுதும் இந்த நிலையில் கூட நாம் போராளிகளை இழந்து வருகிறோம். எதிரியின் சூழ்ச்சிகரமான தாக்குதலின் போது போராளிகள் வீரச்சாவடைகின்றனர்.

தலைவர் அவர்களின் விழி சிவக்கிறது. தலைவரின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைத்தான் தாயக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பை கண்டித்து எமது மக்கள் சிறிலங்கா அரசுக்கு மனுக்களை கொடுத்திருந்தார்கள். பின்னர் கண்காணிப்புக் குழுவிற்கும்இ அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும்இ சர்வதேச சமூகத்திற்கும்இ மனுக்களை கொடுத்திருந்தார்கள். எதற்கும் தீர்வு எட்டப்படாத நிலையில்தான் போரைத் தொடங்கும் படி தலைவருக்கு மக்கள் மனுக்களை கொடுத்திருக்கிறார்கள்.

உங்களது இதயங்களில் இரண்டறக் கலந்தும் மனங்களில் நிறைந்தும் வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் உயர் மதிப்புக்குரிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழியில் எமது இனம் பலம் பெற்றிருப்பதால் இன்று எமது இயக்கத்தை பற்றியும்இ எமது விடுதலைப் போராட்டம் பற்றியும்இ எமது தேசம் பற்றியும்இ உலகப் பந்தில் தலை நிமிர்ந்து நின்று பேசும் வலுவைப் பெற்றிருக்கின்றோம்.

எமது இனம் சர்வதேச ரீதியாக எழுச்சி பெற்று வருகிறது. எமது இனத்தால் மட்டுமே ஒரே நிகழ்வை ஒரே மாதிரி பல நாடுகளில் எல்லாம் நிகழ்த்தக் கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.


நன்றி புதினம்