| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 611 online users. » 0 Member(s) | 609 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| உண்மைக் கதை |
|
Posted by: hari - 07-18-2005, 04:26 AM - Forum: தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>ராங்கி ஒன்றினுள் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன்.</b>
ஜயசிக்குறுய் படைகள் தம் நடவடிக்கையைத் தொடங்கி ஓராண்டு அண்மித்து விட்டது. வெற்றி நிச்சயம் என வந்தவர்கள் கேள்விற்குறியோடு நின்றனர். இராணுவம் ஓர் உடனடி வெற்றியைத் தேடியது. அரசு ஒரு வெற்றிச் செய்திக்காக ஏங்கி நின்றது.
அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவிவிட, எம்மிடம் அடிவேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின்வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டு;ம் முயன்றனர்.
20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம்.
எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாகவிருந்தது.
எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின. முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள் மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன்னேறிக்கொணடிருந்தன.
எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற் பட்டுச்சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை.
நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள் மீதான எதிர்ப்பை காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்துவிட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும ஏறிவிட்டன.
எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாக வேண்டும். எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.
எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது., ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கிவிடும். எதிரியின் ஜயசிக்குறு கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற்றவையாகிவிடும். இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப்படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பை கொடுத்தது.
எப்படி விட முடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகிவிட்டன. அவற்றை எப்படி எதிரியிடம் விடமுடியும். விடுவோமாயின் முடிவு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாததாகி விடுமென்பதை எஞ்சி நின்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப் பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன். எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான்.
தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.
காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்த போது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். அவன் தன் தேசத்திற்காகச் செய்ய வேண்டியதை உணர்ந்தேயிருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான் என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.
அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல். தலைவனின் சத்தியத்திற்காகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிரவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.
எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ஜயசிக்குறு சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும். புலிகளின் " ஓயாத அலைகள் " சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.
நன்றி: பதிவுகள்
|
|
|
| SWISSFILM ASSOCIATION Festival |
|
Posted by: AJeevan - 07-17-2005, 09:44 PM - Forum: குறும்படங்கள்
- Replies (3)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>சுவிசில்
நடைபெறும்
</b><img src='http://www.edinet.ch/gallery/Edi_00_15.jpg' border='0' alt='user posted image'>
<b>Edi.05</b>
<b>திரைப்படவிழாவில்
வியாபார-பொழுது போக்கு- பாடல் காட்சிகள் - விளம்பரங்கள்
ஆகிய அங்கங்களைத் தாங்கிய
திரை-வீடியோ படங்களுக்கு
<img src='http://www.edinet.ch/images/edi_pokal.gif' border='0' alt='user posted image'>Gold -Silver - Bronce
பரிசுகள் வழங்கப்பட உள்ளன</b>.</span>
மேலதிக விபரங்களுக்கு:-
http://www.blogomonster.com/jeevan/
or
http://www.edinet.ch/
(குறிப்பு: ஏற்கனவே இருந்த பகுதியை மாற்றியுள்ளேன்.)
|
|
|
| மகாபாரத `காந்தாரி' போல 10 ஆண்டுகளாக கண்ணைக் கட்டி வாழும் நெச |
|
Posted by: SUNDHAL - 07-17-2005, 04:44 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
மகாபாரதத்தில் "திருதராஷ் டிரர்" மன்னர் பிறவியிலேயே பார்வையை இழந்தவர், என் றும் இதனால் அவரது மனைவி `காந்தாரி' "கணவ ரால் பார்க்க முடியாத இந்த உலகத்தை நான் காணவிரும் பவில்லை" என்று கூறி கண் களை கட்டிக் கொண்டு வாழ்ந் ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த மகாபாரத "காந்தாரி" போலவே மனைவியை பார்க் கும் வரை நான் இந்த உல கத்தை பார்க்க விரும்ப வில்லை என்று கூறி கண் களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நெசவுத் தொழிலாளி ஒருவர்.
அவரது பெயர் வெங் கடேஷ்வரலு(வயது38). இவர் வசித்து வருவது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பன்டில பள்ளி கிராமம்.
தீவிர ஆன்மீக வாதியான வெங்கடேஷ்வரலு காந்தாரி யாக மாறியதற்கு இவரது மனைவி பார்வதிதான் கார ணம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி தொடர்ச் சியாக 3 பெண் குழந்தை களைப் பெற்றார். அதன் பிறகு அவர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப் போவ தாக வெங்கடேஷ்வரலுவிடம் தெரிவித்தார்.
இதற்கு அவர் உடன்பட வில்லை. "ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை நீ ஆபரேசன் செய்து கொள் ளக் கூடாது" என்று மிரட்டல் விடுத்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக் கடி மோதல் ஏற்பட்டது. கண வர் `பிடிவாதக்காரர்' என்ப தால் என்ன தான் சொன் னாலும் கேட்க மாட்டார். அத னால் அவரைப் பிரிந்து செல் வது தான் நல்லது என்று பார் வதி திடீரென ஒரு நாள் 3 மகள்களையும் அழைத் துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் வெங்கடேஷ் வரலு அதிர்ச்சி அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பல முறை அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை பார்வதி ஏற்றுக் கொள்ள வில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேராக வீட்டுக்கு சென்றார். மனைவி இல்லாத உலகத்தை பார்ப்ப தற்கு அவருக்கு விருப்பம் இல்லாமல் போனது.
அப்போது தான் அவருக்கு மகாபாரதத்தில் வரும் `காந் தாரி' கேரக்டர் நினைவுக்கு வந்தது. உடனே அவர் வீட்டில் இருந்த துண்டை எடுத்து கண்களில் கட்டிக் கொண் டார். கண்களை கட்டியபடியே தறி வேலையிலும் ஈடுபட்டார்.
இதுபற்றி அக்கம் பக்கத் தினர் அவரிடம் விசாரித்த போது, "என் மனைவி என் வீட்டுக்கு திரும்பி வரும் வரை நான் இந்த உலகத்தையே பார்க்க மாட்டேன். மனைவி இல்லாத உலகம் வெறுப்பாக உள்ளது" என்று கூறினார்.
தொடக்கத்தில் பன்டில பள்ளி கிராம மக்கள் அவ ருக்கு மனநிலை பாதிக்கப் பட்டுள் ளதால் தான் இப்படி நடந்து கொள்கிறார். விரைவில் சரியாகி விடுவார் என்று நம்பினார்கள்.
ஆனால் அவர்களது நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. வெங்க டேஷ்வரலு கடந்த 10 ஆண் டுகளாக கண்களில் கட்டிய துணியை ஒரு நாள் கூட எடுக்கவில்லை.
தற்போது அவர் கண் களைக் கட்டிய படியே நெய்த துணியை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கிறார். மளி கைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகிறார்.
உறவினர் மற்றும் நண்பர்க ளுடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். அவர் கண் கணைக் கட்டியபடி வீதிகளில் உலா வருவதை வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்து ஊர் காரர்களும் பன்டிலபள்ளியில் திரண்ட விடுகிறார்கள்.
கண்ணிருந்தும் குருடராக உலாவரும் வெங்கடேஷ்வரலு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமானால் அவரது மனைவி பார்வதி தான் மனம் திருந்த வேண் டும்.
மனம் திருந்துவாரா? ஆவ லில் வெங்கடேஷ்வரலு மட்டு மல்ல. நாமும் தான்!
Thanks: maalaimalar
|
|
|
| போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது |
|
Posted by: narathar - 07-17-2005, 03:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது - தமிழ்ச்செல்வன்
17/07/2005
போர் நிறுத்த ஒப்பந்தம் ஓர் இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டதாகவே நாம் உணர்கிறோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுதலைப் புலிகளின் பயணங்களிற்கான பாதுகாப்பினை வழங்க சிறிலங்கா அரசு உறுதியான பதில்களை தரவில்லை. அவர்களின் உறுதியான பதில் கிடைக்காவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னதான எமது பயண வழிமுறைகளையே நாம் கையாள்வோம். இராணுவம் அதனைத் தடுக்க முற்பட்டால், எம்மீது தாக்குதல் நடாத்த முற்பட்டால் நாம் எம்மைத் தற்காக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டி வரும் அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விடும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தங்களது பயணங்களை போர் நிறுத்தத்தின் முன்பான காலங்களில் அறிவித்து விட்டு மேற்கொள்வதில்லை. எனவே இனிமேல் மேற்கொள்ளப்படும் பயணங்களும் அவ்வாறே அமையலாம் அச்சந்தர்ப்பத்தில் தான் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியவரும் எனவும் அவர் கூறினார்.
பொதுக்கட்டமைப்பின் முக்கியமான அடிப்படையான நான்கு அம்சங்களுக்கு சிறிலங்காவின் உயர் நீதி மன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தமை துரதிஸ்ட வசமானது. இப்படி நடக்கும் என்பது நாம் முன்னரே எதிர்பார்த்ததுதான். சிங்கள அரசும் சிங்கள அரசின் நீதித்துறையும் தமிழ் மக்களுக்கு எவ்வித நீதியையும் வழங்காது என்பது வரலாறு எமக்கு சொல்லிய பாடம். எனவே பொதுக்கட்டமைப்பு முடக்கப்பட்டதாகவே நாம் உணர்கிறோம.; இனி இவற்றைப் பற்றியெல்லாம் அரசுடன் பேசுவது சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய அரசியல் சூழல் தமிழ் மக்களிற்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பொதுமக்களிற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவு படுத்தும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனி ஈடுபட உள்ளது எனத் தெரிவித்தார்.
திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலம்களில் சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவது காலவிரையமான ஒரு செயல் நாம் எமது சொந்த அரசை நிறுவுவதற்கான பணிகளையே இனிமேல் முன்னெடுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
|
|
|
| அட இத படிங்க முதல்ல |
|
Posted by: SUNDHAL - 07-17-2005, 03:07 PM - Forum: நகைச்சுவை
- Replies (40)
|
 |
கோயிஞ்சாமி, குலசேகரப்பட்டணம்.
அண்டார்டிக்காவில் ஐஸ் வியாபாரம் ஆரம்பிச்சா வொர்க்-அவுட் ஆகுமா?
உங்க வொர்க் "அவுட்' ஆகும்!
ராமராமராமராமன், கோயில்பட்டி.
நீங்கள் சமீபத்தில் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட படம்?
Kaiya vatchikkittu summa irudaa ஒரு டச்சு படம் பார்த்தேன். முதல்ல ஒரு குதிரை லாயத்தைக் காண்பிச்சாங்க! அதுல மூணு ஆட்டுக் குட்டியைக் கட்டிப்போட்டிருந்தாங்க! அப்புறம் ஒரு பையன் பல் தேய்க்கறதைப் பத்து நிமிஷம் காண்பிச்சாங்க! ஒருத்தர் அப்பப்ப வந்து பாட்டுப் பாடிட்டு தம் அடிச்சுட்டுப் போனாரு. இடையில ரெண்டு ப்ரெஞ்ச் கிஸ் வந்துச்சு. டிரெயின் போச்சு. தாத்தா செத்தாரு. ஒயின் குடிச்சாங்க. ஓநாயைச் சுட்டாங்க. என்ன சொல்ல வர்றாங்கன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே படம் முடிஞ்சு போச்சு! ஆனா எம் பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்தவருக்கு என்னமோ புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்.
ஏன்னா 20 தடவை சிரிச்சாரு, 11 தடவை அழுதாரு, 33 தடவை "உச்' கொட்டுனாரு. "பின்னிட்டான் போங்க'ன்னு கடைசியா என்கிட்ட கமெண்ட் வேற! காசில்லாம ஓசிப் பாஸ் கொடுத்தாங்கன்னு லூசு மாதிரி போன எனக்கு கடைசியா டி.சி.கொடுத்து அனுப்பின மாதிரி இருந்துச்சு!
ஸ்டைல் சுந்தர், நியூயார்க்.
திருட்டு தம், திருட்டு சி.டி. -எதில் கிக் அதிகம்?
திருட்டு தம் அடிச்சு மாட்டுனா பொண்டாட்டிகிட்ட... திருட்டு சி.டி.யோட மாட்டினா போலீஸ்கிட்ட... எதுல கிக் (உதை) அதிகம்னு உங்களுக்கே புரிஞ்சிருக்குமே!
கேள்வி நாயகம், தூத்துக்குடி.
"கொஸ்டினோஃபோபியா'ன்னு ஒரு வியாதி இருக்காமே, அது என்ன?
எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கறது. இதை "சாக்ரடீúஸôஃபோபியா'ன்னு கூட சொல்லலாம். எதையும் "ஏன், எதற்கு, எப்படி'ன்னு கேள்வி கேட்டுப் பார்த்து செய்யறதுதான் முறைன்னு யாராவது இவங்ககிட்ட சொன்னாக்கூட "ஏன்'னு எதிர்க் கேள்வி கேட்பாங்க!
ரா.ரா.ரஜினிப்ரியன், ஆண்டிப்பட்டி.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முப்பத்திரெண்டாம் சார்லஸýக்கு முப்பத்து மூணு பல்லாமே! ஓர் ஆங்கிலப் புத்தகத்துல படிச்சேன்!
உண்மைதான். முப்பத்திரெண்டாம் சார்லஸின் தாத்தா அப்பவே பல் மருத்துவப் படிப்புல கோல்ட் மெடலிஸ்டாம். அவரோட தங்கப் பல்லைத் தன்னோட வாயில எக்ஸ்ட்ரா பிட்டிங்கா மாட்டிக்கிட்டு அலைஞ்சாரு 32-ம் சார்லஸ். இன்னொரு விஷயம் தெரியுமா...பத்தாம் நூற்றாண்டுல வாழ்ந்த 143-ம் லாரன்ஸ் ரோமை ஆட்சி புரிஞ்சாராம். அதுக்கு முன்னாடி 142 லாரன்ஸ் இருந்திருக்காருன்னு நீங்க தப்புக்கணக்கு போடக்கூடாது. அந்த லாரன்ஸ் வயசுப் பொண்ணுங்களைப் பார்த்தாலே "1 4 3' ன்னு சொல்லி ரொமாண்டிக் லுக் விடுவாராம். அதான் 143 லாரன்ஸ்! இதை ஒரு ஜெர்மானியப் பொஸ்தகத்துலப் படிச்சேன்.
"பால்' பாண்டி, பண்டாரவிளை.
சானியா மிர்சாவுக்கு ஏற்ற ஜோடி நம்ம கோலிவுட்ல யாரு?
கில்லி அடிக்கிறவங்க, பம்பரம் உடுறவங்க, கோலி விளையாடுறவங்கதான் கோலிவுட்ல இருக்காங்கப்பு! "சானியா கூட சோடி போடுற அளவுக்கு இங்க உன்னைத் தவிர யாருமே இல்லை'ன்னு நான் முன்னாடி நிக்கறப்போ நிலைக்கண்ணாடி சொல்லுது தெரியுமா!
லைலா, புதுடெல்லி.
லல்லு அமெரிக்க அதிபரானால்..?!
மாடர்னாக இருக்கும் அமெரிக்கா, "மாடு'ர்னாக மாறிவிடும். அப்புறம் "வெள்ளை மாளிகை' சாணிக் கலரில் பளபளக்கும்.
எலக்கிய புத்தன், சென்னை.
சில "கவித'களில ஒரு மண்ணும் புரிய மாட்டீங்குதே நைனா?
நீராலான பிம்பங்களின்
பின்புலங்கள் மீட்சியாக...
தீராத தேவைகளின்
தேடல்கள் நீர்த்துப் போக...
மெüனங்களின் அதிர்வில்
நீள்கின்ற சல்லி வேர்கள்...
மீள்வதில்லை மண்ணாலான யுகத்தில்!
-எப்டி கீது நம்ம கவித! எதுனா பிரியுதா? நமக்கே பிரியல நைனா! குல்க்கல் முறையில வார்த்தைய அப்டிக்கா, இப்டிக்கா போட்டு, அங்க இங்க ஷேவிங் பண்ணி, இத "நவீன கவித'ன்னு கூவிக்கின்னு ஒரு குரூப் அலையுது அப்பு!
சீனாதானா, கொட்டாம்பட்டி.
"கொட்டாவி' பற்றி ஏதாவது சுவாரசியமா சொல்ல முடியுமா?
கொட்டாவி -குறைந்த பட்சம் 3 நொடி நீடிக்கும். அதிக பட்சம் 10 நொடி நீடிக்கும். அதுக்கும் மேலே கொட்டாவி விடுற ஆளோட வாய் தொறந்தே இருந்ததுன்னா அது கொட்டாவி இல்ல... அந்த ஆளு "டெட்' ஆவி!
மங்காத்தா, மதுர.
ஒஸôமா பின்லேடனைப் பார்த்தா உடனே என்ன கேட்பீங்க?
கடைசியா எப்ப ஷேவ் பண்ணுனீங்க?
ரிங்டோன் ரீமா, கோவை.
செல்போன் கண்டுபிடிக்காம இருந்தா என்ன ஆயிருக்கும்?
அம்பானி பிரதர்ஸ்க்குச் சொத்துல பங்கு குறைஞ்சிருக்கும்!
"அனிதா' பித்தன், நெல்லை.
நமீதா வரவர குண்டாகிக்கொண்டே போகிறாரே?
யோவ், நமீதா குண்டானா என்ன... பிரிட்னி ஸ்பியர்ஸ் உண்டானா என்ன... திமுக கூட்டணி ரெண்டானா என்ன... முதல்ல அடகுக் கடையில இருக்கிற அண்டாவை மீக்குற வழியைப் பாருவே!
தீவிரவாதி, குளத்தூர்.
சர்தார்ஜி ஜோக் ஒன்று..!
வெள்ளிக்கிழமை சர்தார்ஜியைச் சிரிக்க வைக்கணும்னா என்ன பண்ணனும்?
செவ்வாய்க்கிழமையே ஜோக்கைச் சொல்லிடணும்.
ஐசுவறியா, சென்னை.
நான் ஒருவரைக் காதலிக்கிறேன். என்னை ஒருவர் காதலிக்கிறார். ஆனால் என்னைக் காதலிப்பவரை நான் காதலிக்கவில்லை. நான் காதலிப்பவர் என்னையல்ல, இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண் என்னைக் காதலிப்பவரைக் காதலிக்கிறார். இப்போது என்ன பண்ண? ஒரே குழப்பமாக உள்ளது...
இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பாருங்க!
இச்சையப்பன், அரசரடி.
காதலில் எப்போது முத்தம் கொடுக்கக்கூடாது?
மேலே உள்ள குழப்ப கொஸ்டின் மாதிரி காதலன், காதலி யாருன்னே தெரியாதபோது!
முடியரசு, அருப்புக்கோட்டை.
அந்நியன் ஸ்டைல்ல முடி வளர்க்க என்ன செய்யணும்?
வழுக்கையா இருக்கக்கூடாது.
ஆதிமூலம், காட்டேரிபுரம்.
சிலர் ஆவியோடு பேசுவதாகச் சொல்கிறார்களே, நம்பலாமா?
ஆவியும் அவர்களோடு பேசுவதை ஒப்புக்கொண்டால் நம்பலாம்.
அனாஸின், அம்பத்தூர்.
அஸின் அடிக்கடி என் கனவில் வருகிறார். எனக்கும், அஸினுக்கும் கல்யாணம் நடக்குமா?
கனவுல வர்றதையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சா, முதல்ல நீர் உம்மையே ஆயிரம் தடவை கல்யாணம் பண்ணிக்கனும்வே!
அழகி, சேலம்.
சமீபத்தில் படித்துப் பார்த்து அதிர்ச்சியான புத்தகம்?
பேங்க் பாஸ் புக்!
ஜெ.மு.க. ஜமுனா, அம்மன்புரம்.
மெகா சீரியல் பார்க்கும்போது ஆண்கள் ஏன் அழுவதில்லை?
பக்கத்தில் பெண்கள் அழுதுகொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருப்பதால்!
வஸ்து வாத்தப்பன், டூபாக்கூர்.
வாஸ்து சாஸ்திரத்துல நம்பிக்கையுண்டா?
ஆமா, ஆமா... பின்ன... நான் எங்க ஆபிஸ்ல கூட வாஸ்துப்படி டாய்லெட்ல உட்கார்ந்துதான் "கேள்வி -பதில்' எழுதுவேன் தெரியுமா! சொன்னா நம்ப மாட்டீங்க. உங்க கேள்வி கூட வாஸ்துப்படி வலது மூலையிலதான் பிரிண்ட் ஆயிருக்குன்னா பாத்துக்கோங்களேன்.
Thanks Dinamani
|
|
|
| பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது |
|
Posted by: narathar - 07-17-2005, 09:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
பொதுக்கட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது: உணர்ந்து செயற்படுவது சர்வதேச சமுகத்தின் பொறுப்பு - விடுதலைப் புலிகள்
இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு இனப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் காண முடியாது என்பதே பொதுக்கட்டமைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு காண்பிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் திரு. தயா மாஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொதுக்கட்டமைப்பில் நாம் கைச்சாத்திட்டிருந்தாலும், அது அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து ஆரம்பம் முதலே கேள்வியெழுப்பி வந்தோம். ஏதோ ஒரு வழியில் இதனைத் தடுத்தே ஆவார்கள் என்றும் எமக்கு தெரியும்.
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது ஈழத்தமிழர்களுக்கு எதுவித தீர்வையும் பெற்றுத் தராது. இதனால்தான், சமாதான பேச்சுக்களின்போது நிரந்தரத் தீர்வு குறித்து விடுதலைப் புலிகள் பேசுவதற்கு முன்வரவில்லை. தெற்கில் இதற்கான ஒரு அரசியல் சூழ்நிலை இல்லாததுடன் இந்த அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு நிரந்தர தீர்வு பற்றி ஒருபோதும் பேச முடியாதென்பதை எமது அரசியல் ஆலோசகர் முனைவர் ஆன்ரன் பாலசிங்கம் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தர தீர்வென்பதை விட போரினாலும், கடல்கோள் அனர்த்தத்தினாலும், பாதிக்கப்பட்ட பல இலட்சம் தமிழ் மக்கள் தொடர்ந்து இன்னமும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கக்கு எதுவுமே வழங்கக்கூடாது என்பதில் சிங்கள பேரினவாதம் தனது அனைத்து துறைகளையும், பயன்படுத்தியுள்ளமை இந்த தீர்ப்பின் மூலம்தெளிவாகியுள்ளது.
மனிதாபிமானம் இந்த நாட்டில் செத்துவிட்டதென்றாலும், இன்றைய யதார்த்த நிலையை என்றாவது இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கிளிநொச்சியில் தான் உள்ளது.
புலிகளுடன் எவ்வித உடன்பாட்டை ஏற்படுத்தினாலும் அதில் கிளிநொச்சியும் இன்றி அமையாததென்ற யதார்த்தத்தை சிங்கள பேரினவாதம் புரிந்து கொள்ளவி;லை.
இந்த தீர்ப்பின் மூலம் பொதுக்கட்டமைப்பு முக்கப்பட்டு விட்டது. இனி இது பற்றி கதைப்பதில் அர்த்தமில்லை. இது பற்றி இனி சர்வதேச சமுகம் தான் உணர்ந்து செயற்படவேண்டும். எனவும் குறிப்பிட்டு;ள்ளார்.
http://www.sankathi.net/index.php?option=c...=1619&Itemid=41
|
|
|
|