Yarl Forum
மகாபாரத `காந்தாரி' போல 10 ஆண்டுகளாக கண்ணைக் கட்டி வாழும் நெச - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மகாபாரத `காந்தாரி' போல 10 ஆண்டுகளாக கண்ணைக் கட்டி வாழும் நெச (/showthread.php?tid=3896)



மகாபாரத `காந்தாரி' போல 10 ஆண்டுகளாக கண்ணைக் கட்டி வாழும் நெச - SUNDHAL - 07-17-2005

மகாபாரதத்தில் "திருதராஷ் டிரர்" மன்னர் பிறவியிலேயே பார்வையை இழந்தவர், என் றும் இதனால் அவரது மனைவி `காந்தாரி' "கணவ ரால் பார்க்க முடியாத இந்த உலகத்தை நான் காணவிரும் பவில்லை" என்று கூறி கண் களை கட்டிக் கொண்டு வாழ்ந் ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த மகாபாரத "காந்தாரி" போலவே மனைவியை பார்க் கும் வரை நான் இந்த உல கத்தை பார்க்க விரும்ப வில்லை என்று கூறி கண் களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நெசவுத் தொழிலாளி ஒருவர்.

அவரது பெயர் வெங் கடேஷ்வரலு(வயது38). இவர் வசித்து வருவது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பன்டில பள்ளி கிராமம்.

தீவிர ஆன்மீக வாதியான வெங்கடேஷ்வரலு காந்தாரி யாக மாறியதற்கு இவரது மனைவி பார்வதிதான் கார ணம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி தொடர்ச் சியாக 3 பெண் குழந்தை களைப் பெற்றார். அதன் பிறகு அவர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப் போவ தாக வெங்கடேஷ்வரலுவிடம் தெரிவித்தார்.

இதற்கு அவர் உடன்பட வில்லை. "ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை நீ ஆபரேசன் செய்து கொள் ளக் கூடாது" என்று மிரட்டல் விடுத்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக் கடி மோதல் ஏற்பட்டது. கண வர் `பிடிவாதக்காரர்' என்ப தால் என்ன தான் சொன் னாலும் கேட்க மாட்டார். அத னால் அவரைப் பிரிந்து செல் வது தான் நல்லது என்று பார் வதி திடீரென ஒரு நாள் 3 மகள்களையும் அழைத் துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வெங்கடேஷ் வரலு அதிர்ச்சி அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பல முறை அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை பார்வதி ஏற்றுக் கொள்ள வில்லை.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேராக வீட்டுக்கு சென்றார். மனைவி இல்லாத உலகத்தை பார்ப்ப தற்கு அவருக்கு விருப்பம் இல்லாமல் போனது.

அப்போது தான் அவருக்கு மகாபாரதத்தில் வரும் `காந் தாரி' கேரக்டர் நினைவுக்கு வந்தது. உடனே அவர் வீட்டில் இருந்த துண்டை எடுத்து கண்களில் கட்டிக் கொண் டார். கண்களை கட்டியபடியே தறி வேலையிலும் ஈடுபட்டார்.

இதுபற்றி அக்கம் பக்கத் தினர் அவரிடம் விசாரித்த போது, "என் மனைவி என் வீட்டுக்கு திரும்பி வரும் வரை நான் இந்த உலகத்தையே பார்க்க மாட்டேன். மனைவி இல்லாத உலகம் வெறுப்பாக உள்ளது" என்று கூறினார்.

தொடக்கத்தில் பன்டில பள்ளி கிராம மக்கள் அவ ருக்கு மனநிலை பாதிக்கப் பட்டுள் ளதால் தான் இப்படி நடந்து கொள்கிறார். விரைவில் சரியாகி விடுவார் என்று நம்பினார்கள்.

ஆனால் அவர்களது நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. வெங்க டேஷ்வரலு கடந்த 10 ஆண் டுகளாக கண்களில் கட்டிய துணியை ஒரு நாள் கூட எடுக்கவில்லை.

தற்போது அவர் கண் களைக் கட்டிய படியே நெய்த துணியை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கிறார். மளி கைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகிறார்.

உறவினர் மற்றும் நண்பர்க ளுடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். அவர் கண் கணைக் கட்டியபடி வீதிகளில் உலா வருவதை வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்து ஊர் காரர்களும் பன்டிலபள்ளியில் திரண்ட விடுகிறார்கள்.

கண்ணிருந்தும் குருடராக உலாவரும் வெங்கடேஷ்வரலு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமானால் அவரது மனைவி பார்வதி தான் மனம் திருந்த வேண் டும்.

மனம் திருந்துவாரா? ஆவ லில் வெங்கடேஷ்வரலு மட்டு மல்ல. நாமும் தான்!

Thanks: maalaimalar


- Malalai - 07-18-2005

பத்து வருடமாக உலகத்தைப் பார்க்கவில்லை என்பது மனைவிக்கு தெரியுமோ?


- kavithan - 07-18-2005

Malalai Wrote:பத்து வருடமாக உலகத்தைப் பார்க்கவில்லை என்பது மனைவிக்கு தெரியுமோ?
அது சுண்டலுக்கு தெரியாது


- SUNDHAL - 07-18-2005

ke ke ke correct கவிதன்


- kuruvikal - 07-18-2005

கண்ணைக் கட்டிட்டா சரியா..மனசையெல்லோ கட்டி இருக்கனும்...மனைவியோட சேர்த்து....! அதைவிட்டிட்டு...கண்ணைக்கட்டி காட்டில அலைஞ்சா என்ன றோட்டில அலைஞ்சால் என்ன..! அது மகா பாரதத்திற்கு ஓகே... நவ பாரதத்திற்கு ஆகுமா..??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி சுண்டல் தகவலுக்கு...அப்படியே சுட்ட இடத்தையும் சுடச் சுடவே போட்டிருக்களன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 07-18-2005

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Malalai+--><div class='quotetop'>QUOTE(Malalai)<!--QuoteEBegin-->பத்து வருடமாக உலகத்தைப் பார்க்கவில்லை என்பது மனைவிக்கு தெரியுமோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அது சுண்டலுக்கு தெரியாது<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: மகாபாரத `காந்தாரி' போல 10 ஆண்டுகளாக கண்ணைக் கட்டி வாழும் நெச - Mathan - 07-18-2005

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->கண்ணிருந்தும் குருடராக உலாவரும் வெங்கடேஷ்வரலு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமானால் அவரது மனைவி பார்வதி தான் மனம் திருந்த வேண் டும்.

மனம் திருந்துவாரா? ஆவலில் வெங்கடேஷ்வரலு மட்டு மல்ல. நாமும் தான்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

திருந்தவேண்டியது மனைவி மட்டுமல்ல வெங்கடேசும் தான் :!: