Yarl Forum
தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென ................ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென ................ (/showthread.php?tid=3888)



தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென ................ - தமிழரசன் - 07-19-2005

<b>தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென ஜே.வி.பி. எண்ணுகிறதாம்: சொல்கிறார் சந்திரிகா! </b>
[செவ்வாய்க்கிழமை, 19 யூலை 2005, 00:41 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென பேரினவாத ஜே.வி.பி. கருதுவதாக ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.


அனுராதபுரத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜே.வி.பி. அரசாங்கத்திலிருந்து விலகி விட்டது என்பதற்காக ஆட்சி ஒரு போதும் கவிழப் போவதில்லை.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது விட்டாலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்து இருக்கும்.

ஜே.வி.பி.யைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதே அதன் கொள்கையாகும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு பொதுக்கட்டமைப்பு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாகவே அக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது.

நாம் அவர்களை போகச் சொல்லவில்லை. முடிந்த வரை இருங்கள் என்றேன். ஆனால் அவர்கள் பொறுப்பில்லாமல் போனார்கள். பொறுப்பில்லாத இவர்களைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. முடியாது என்று போனவர்களிடம் கும்பிட்டு கும்பிட்டு பின்னால் செல்வதற்கு எனக்கு நேரமில்லை.

ஜே.வி.பி.யுடன் இனைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது எதிர்பார்த்த வகையில் வாக்குகள் கிடைக்கவில்லை.

இந்த கூட்டமைப்பு மூலம் ஒரு லட்சம் வாக்குகளையே மேலதிகமாகப் பெற முடிந்தது.

அண்மைக் காலத்தில் ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நடைபெற வாய்ப்பில்லை. மக்கள் வழங்கிய காலம் முடிந்த பின்பே இந்த தேர்தல்கள் நடைபெறும்.

அதற்கிடையில் உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முடிவடைகின்றது. அந்த தேர்தல்களே முதலில் நடைபெறும் என்றார் அவர்.
puthinam